மழைச்சாரலாய் மனம் நனைத்தாய். -7

7 "சந்தித்த வேளையில்...              சிந்திக்கவே இல்லை..." டிவியில் பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.. அலுவலகம் போகத் ...


7

"சந்தித்த வேளையில்...
             சிந்திக்கவே இல்லை..."
டிவியில் பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.. அலுவலகம் போகத் தயாரானவளாக மாடிப் படியில் இறங்கிக் கொண்டிருந்த சாருலதாவின் கனத்த இமைகள் ஓய்வுக்காக கெஞ்சின..
பாடல்வரிகள் சாருலதாவின் காதுகளில் நுழைந்தன.. அவனைச் சந்தித்த போது அவள் சிந்திக்கத்தான் இல்லை.. இந்த அளவுக்கு இரவுத் தூக்கத்தை அவன் பறிப்பான் என்று..
அவன் பேசிய பேச்சுக்களுக்கு எதற்காக இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவள் தனக்குள் கேட்டுப் பார்த்து விட்டாள்.. விடைதான் கிடைக்கவில்லை...
ஒன்று மட்டும் அவளுக்கு உள்ளங்கை நெல்லிக் கனியைப் போலத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது...
அது.. பார்த்த முதல்நாளிலேயே அந்த ஆத்மாராம் சாருலதாவின் மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டான் என்பது..
"என்ன சாரு.. முகமெல்லாம் வீங்கியிருக்கு...?" புஷ்பவள்ளி கவலையுடன் விசாரித்தாள்...
"அவ முகமே அப்படித்தான்ம்மா.." இட்லியை வாய்க்குள் தள்ளியபடியே சொர்ணலதா சொன்னாள்...
"ஆமாமாம்.. இவ முகம்தான் அழகு முகம்.." சாருலதா தங்கைக்கு அழகு காட்டினாள்...
"இல்லையா பின்னே...? உன்னைப் பெண் பார்க்க வருகிறப்போ.. நான் வெளியே எஸ்கேப் ஆகிடறதுதான் பெட்டர் சாரு.."
"அது எதுக்குடி..?"
"இல்லைன்னா.. உன்னைப் பார்க்க வர்ற மாப்பிள்ளை.. உன்னை விட்டுட்டு என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிருவானே..."
"நினைப்புத்தாண்டி உனக்கு.. கான்பிடென்ஸா இருக்கனும்தான்... ஆனா.. இதைப் போல ஓவர் கான்பிடென்ஸா இருக்கக் கூடாது.. உன் முகத்தை கண்ணாடியில நீ பார்த்துக்கிறதே இல்லையா...?"
"அதை நீ முதலில் செய்... பை மம்மி.."
சொர்ணலதா என்ஜினியரிங் படிக்க ஓடிவிட்டாள்.. கொடுத்து வைத்தவள் என்ற பொறாமையோடு சாருலதாவும் கிளம்பினாள்..
கல்லூரி காலத்தை நினைத்து அவள் மனம் ஏங்கியது..
அவள் அலுவலகத்திற்குள் நுழைந்த கொஞ்ச நேரத்திலேயே ஆத்மாராம் அவளை அழைத்து விட்டான்..
என்ன பேசப் போகிறானோ என்று தோன்றிய போதும் அவனைப் பார்க்கப்  போவதை பிடித்தமானதாக உணர்ந்தாள் சாருலதா.. ஏனென்று புரியாத இது போன்ற விசித்திரங்களை வாழ்க்கை அப்போதுதான் அவளுக்கு அறிமுகப் படுத்த ஆரம்பித்திருந்தது..
"மே ஐ கமின் சார்.." ஒற்றை விரலால் கதவைத் தட்டினாள்..
"நேரத்தை வீணடிக்காம உள்ளே வா.." கடுமையான அவனது குரல் காற்றில் மிதந்து வந்தது..
சாருலதாவைக் கண்டதும் அவன் படபடவென்று பொரிந்தான்..
"அதான் வரச் சொல்லியாச்சில்ல...? அப்புறமும் எதுக்காக கதவைப் போட்டு லொட்டு.. லொட்டுன்னு தட்டற...?"
"கர்ட்டஸி சார்..."
"மண்ணாங்கட்டி.. எனக்கு இதிலெல்லாம் பிடித்தமில்லை.. தீயாய் வேலை செஞ்சு பழகு..."
"ஓகே சார்..."
"என் தலைவிதியோ.. இல்லை உன் தலைவிதியோ.. நீயும்.. நானும் ஒரே டீமில் குப்பை கொட்டித்தான் ஆகனும்.."
"வேலை செய்தாகனும் சார்..."
"அதைத்தான் நானும் சொன்னேன்.. இன்னையில இருந்து நம்ம டீமோட புராஜெக்ட் வொர்க் ஸ்டார்ட் ஆகுது.."
"ஓகே சார்..."
"உன் சீட் இடம் மாறுது.. என் ரூமிலேயே உனக்கு கம்யூட்டர் அலாட் பண்ணச் சொல்லியிருக்கேன்..."
"சார்....?"
"வேற வழியில்ல.. டிரெயினியைக் கொண்டு வந்து என் டீமில் போட்டுட்டாங்க.. நீ எப்படி வேலை செய்து தொலைப்பியோன்னு நான் இங்கே உட்கார்ந்து டென்சனாக முடியாது.. அதுக்கு என் கண் பார்வையில் நீ வேலை செய்கிறது பெட்டர்..."
சாருலதா இதை எதிர்பார்க்கவே இல்லை.. அவன் முன்னால் நிற்கும் சில நிமிடங்களே அவளுக்கு முள்ளின் மேல் நிற்பதைப் போல இருக்கும் போது.. அவனுடன் ஒரே அறையில் உட்கார்ந்து அவள் வேலை பார்ப்பதா..? அவளால் அது முடியுமா...?
தன் சுதந்திரம் பறி போவதைப் போல உணர்ந்தாள் சாருலதா..
அவளுடைய தோழிகளுடன் பேசியபடி.. ஹாலில் தடுக்கப் பட்டிருக்கும் தடுப்புக்களில் ஒன்றில் அமர்ந்து வேலை செய்தவள்.. புலிக் கூண்டுக்குள்.. புலியுடன் அடைபட்டதைப் போல.. அவன் அறையில் அவன் கண்பார்வையில் வேலை செய்வதா..? இரண்டும் இணையாகுமா..?
இதற்கு பேசாமல் வேலையை விட்டேப் போய் விடலாம் என்று அவளுக்கு தோன்றியது...
"சார்.. நான் சின்ஸியர் வொர்க்கர்..." அவள் எடுத்துச் சொல்ல முயன்றாள்..
"அதை நான் சொல்லனும்..." அவன் பட்டுக் கத்தரித்தான்...
"மத்தவங்களைப் போல வொர்க் பண்ணுவதுதான் எனக்கு வசதியாய் இருக்கும் சார்..."
"எனக்கு வசதியாய் இருக்காதே..."
"சார்.. ப்ளீஸ்..."
"அவாய்டு திஸ் ப்ளீஸ்... எனக்கு எதையும் மறுத்துப் பேசினாப் பிடிக்காது.. கோ அஹெட்.."
'என்னத்தைப் போவது...?'
சாருலதா தலையைப் பிடித்தபடி வெளியே வந்தாள்.. அவளுக்கான டேபிளும்.. கம்யூட்டரும் ஆத்மாராமின் அறையில் தயாராகும் வரை அவளுக்கு தற்காலிக விடுதலை கிடைத்திருந்தது...
"என்னடி..?" காவ்யா விசாரித்தாள்...
சாருலதாவிற்கு துக்கம் பொங்கியது.. பழகிய இடத்தை விட்டு வேறு இடத்தில் இடம் பெயர்ந்து உட்கார அவளுக்குப் பிடிக்கவில்லை.. இதை ஆத்மாவிடம் அவளால் சொல்ல முடியுமா..? சொன்னால்தான் அவன்  கேட்பானா..?
ஆதலால் அவள் சொன்னால் காது கொடுத்துக் கேட்கக் கூடிய ஜீவனான காவ்யாவிடம் அவள் துக்கத்தைச் சொன்னாள்..
"அவன் ரூமில் உன்னை உட்காரச் சொல்றானா..?" காவ்யா அரண்டாள்...
"ஏண்டி.. அவன் குட் கேரக்டர்தானே..?" சாருலதா கவலையுடன் கேட்டாள்...
ஏனோ.. அவன் அப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று அவள் மனது தவித்தது..
"அதிலெல்லாம் ஒரு குறையுமில்லை...." என்று சாருலதா விரும்பிய பதிலைச் சொன்னாள் காவ்யா...
"அப்பாடி..." சாருலதா நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது...
"அதுக்காக அவனை ஒரேயடியாய் நல்லவன்னும் சொல்லிவிட முடியாது..." என்று ஒரு இக்கன்னாவையும் சேர்த்து வைத்தாள்...
"என்னடி..?"
"அவன் ஒரு மார்க்கமானவண்டி..."
"அப்படின்னா..?"
"பொண்ணுகளை அழ வைப்பான்.. ஸாடிஸ்ட்..."
"சேச்சே.. அதிகமாய் சொல்லாதே.. பட்டு.. பட்டுன்னு பேசறான்.. மத்தபடி ஸாடிஸ்ட்ன்னு சொல்கிற தெல்லாம் ஓவர் காவ்யா..."
"உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்.. இந்த விக்ரம் சதி பண்ணி வேணும்னே உன்னை அவன் டீமில இருந்து கழட்டி விட்டு.. ஆத்மா டீமில போட வைச்சிருக்கான்..
நீ அவன் கையில் ராக்கி கட்டி அவனை பகைச்சுக்காம இருந்திருக்கலாம் சாரு..."
"இல்லைன்னா அவன் ஜொள்ளை விட்டுத் தொலைப்பானே.." அலுப்புடன் கூறினாள் சாருலதா...
"விட்டா விட்டுட்டுப் போறான்.. அதனால உனக்கென்ன கஷ்டம்..? ஆபிஸைக் கழுவற அஞ்சலைக்குத்தான் கஷ்டம்..." காவ்யா இலகுவாகச் சொன்னாள்...
"அஞ்சலைக்கு கஷ்டமா..?" புரியாமல் பார்த்தாள் சாருலதா...
"விக்ரம் ஜொள்ளுவிட்டா ஆபிஸே நனையும்.. அதைத் தினமும் கூட்டிக் கழுவனும்னா அஞ்சலைக்கு கஷ்டமாயிருக்காதா..?"
காவ்யா சொன்ன விளக்கத்தில் சாருலதாவிற்கு சிரிப்பு வந்தது.. அவள் லேசாகச் சிரித்தாள்..
"சிரிப்பு வந்தா இப்பவே நல்லாச் சிரிச்சு வைச்சுக்க சாரு.." அக்கறையுடன் சொன்னாள் காவ்யா..
"எதுக்குடி..."
"அந்த ஆத்மா முன்னாலே நீ சிரிக்க முடியுமா..?"
"ஆமாமில்ல..."
சாருலதாவிற்கு வந்த சிரிப்பும் ஓடோடிப் போய் விட்டது... அவளை அனுதாபத்துடன் பார்த்தாள் காவ்யா...
"பாவம்டி நீ..."
இவள் பாவம் பார்க்கும் அளவிற்கா தன்நிலை ஆகிவிட்டது..? என்று நொந்து போனாள் சாருலதா...
"குட்மார்னிங் சாரு..." ஷீபா அங்கே வந்தாள்..
"இவளுக்கு இது பேட் மார்னிங்.." என்றாள் காவ்யா..
"ஏன்..? என்னாச்சு.."
"சாருவ ஆத்மாவோட ரூமிலேயே வொர்க் பண்ணச் சொல்லிட்டானாம்..."
"அடப்பாவமே.. இந்தக் கொடுமையை யார் செஞ்சது..?"
"ஆத்மாதானாம்..."
"நினைச்சேன்.. அவன்தான் இந்த ஆபிஸிலிருக்கிற லேடிஸை ஒரு வழிபண்ணனும்னு வந்து தொலைச்சிருக் கானே..."
"ஆமாண்டி.. மத்த லேடிஸீக்கெல்லாம் பூப் போட்டு வணங்கறான்.. அவன் குணமே அப்படித்தான்.."
"இவன் ஏண்டி கனடாவை விட்டு வந்து தொலைச்சான்..?"
"உனக்குத் தெரியும்னில்ல நினைச்சுக் கிட்டிருந்தேன்..? உனக்குத் தெரியாதா..?"
"என்னடி.. விளையாடறியா..? எனக்கு எப்படித் தெரியுமாம்..?"
"அதுவா ஷீபாக்கண்ணு...  உனக்கே இது தெரியாதப்ப எனக்கு மட்டும் எப்படித் தெரியும் ஷீபாக் கண்ணு...?"
"ஆனாலும் காவ்யா.. உனக்கு இந்த அளவுக்கு வாய் இருக்கக் கூடாது..."
"என்னடி ஆச்சு..? ஆத்மா பக்கம் சாயற.. அவன் காத்து உன் பக்கம் அடிச்சிருச்சா...?"
"வாயைக் கழுவுடி.. இருந்திருந்து அவன் காத்துத் தான் என் பக்கமா அடிக்கனுமா..? உனக்கேண்டி என்மேல இந்த அளவுக்கு காண்டு...?"
"பின்னே..? அவனே என்னை அடக்கனும்னுனே கனடாவில இருந்து வந்ததைப் போல.. முதல்நாளே கடுப்படிச்சு வைக்கிறான்.. நீயும் அவனைப் போலவே பேசி வைச்சா நான் கேட்க மாட்டேனா..?"
"கேளு காவ்யா கேளு.. ஆனா ஆத்மாவோட சம்பந்தப் படுத்தி மட்டுட்ம கேட்காதே.. ஏன் காவ்யா.. இப்படி இருக்குமோ..."
"எப்படி ஷீபா..?"
"கனடாவில் இருக்கிற பொண்ணுக.. இவனை முறமில்லாமலே அடிச்சு விரட்டியிருப்பாங்களோ..."
சந்தேகம் கேட்ட ஷீபாவை.. சந்தேகத்துடன் ஏற இறங்கப் பார்த்து வைத்தாள் காவ்யா...
"ஏண்டி அப்படிப் பார்க்கிற..?"
"முறம்ன்னா என்னடி..?"
"யாருக்குத் தெரியும்.. அது என்னவோ வில்லேஜ் பக்கமா இருக்கிற சல்லடைன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க..."




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய். -7
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய். -7
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy