மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-5

5 வெகு நாள் வரை சாருலதா கட்டி விட்ட ராக்கி விக்ரமின் கனவில் வந்து பயமுறுத்தியது.. அவன் இந்தி சினிமாக்களிலும்.. சீரியல்களிலும் பார்த்த...


5

வெகு நாள் வரை சாருலதா கட்டி விட்ட ராக்கி விக்ரமின் கனவில் வந்து பயமுறுத்தியது.. அவன் இந்தி சினிமாக்களிலும்.. சீரியல்களிலும் பார்த்திருந்த ராக்கியை.. நேரில் ஒர் நாளும் பார்த்ததில்லை.. அந்த அறியாமையினால்தான் சாருலதா முகம் பூரா புன்னகை பரவ.. வந்து அவன் கைபிடித்தபோது.. மெய் சிலிர்த்துப் போனவனாக கை நீட்டி விட்டான்...
"தெரிஞ்சிருந்தா நீட்டியிருப்பேனாடா...?"
நண்பர்களுடன் தாகசாந்தி செய்த பொழுதுகளில் அவன் புலம்பித் தீர்த்தான்...
"தெரியலையே... அது ராக்கின்னு எனக்குத் தெரியலையே.." நடிகர் திலகமாகி.. கை விரித்து நியாயம் கேட்டான்...
பயலை எப்படிச் சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் விழித்த அவனின் நண்பர் பட்டாளம்.. அடுத்து அவன் தாகசாந்தி செய்ய அழைத்த போது தலைதெரிக்க ஓடி விட்டது...
இப்படியெல்லாம் சாருலதாவின் ராக்கியினால் நொந்து நூடுல்ஸாகியிருந்த விக்ரம்.. ஆத்மாராமின் வருகையில் அகமகிழ்ந்து போயிருந்தான்..
அவனுடைய ஜொள் மழையைப் பற்றிய சங்கதிகளை அந்த அலுவலகத்தின் பெண் குழாம்தான் சாருலதாவின் காதுகளில் போட்டு வைத்திருக்கிறது என்பது அவனின் கணிப்பு...
அப்பேற்பட்ட பெண் குலத்தை அலற வைக்கத் திராணியில்லாமல் தவித்தவனுக்கு ஆத்மாராமின் வருகை வயிற்றில் பாலை வார்ப்பதைப் போல இருந்தது..
ஆத்மாராமும் அவனுடைய அவிலாஷையை புரிந்து கொள்ளாமலே முதல் வின்னிங்ஸில் காவ்யாவை அலறியடித்து ஓட வைத்து விக்கெட்டை வீழ்த்தினான்..
அடுத்ததாக நின்ற சாருலதாவை 'மகளே..! யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்ன...? என்னைப் பார்த்தா உனக்கு அண்ணனாத்தான் தோணுதா..? இருக்குடி உனக்கு...' என்ற வன்மத்துடன் விக்ரம் அறிமுகப்படுத்தி வைத்தபோது.. நீயெல்லாம் ஒரு கணக்கா என்ற ஒர் பார்வையை சாருலதாவின் மீது வீசி.. விக்ரமின் மனதில் மகிழ்ச்சி அலைகளை பரவ விட்டான் ஆத்மாராம்..
அடுத்து அவளிடம் பேசுவது கூட ஆகாது என்ற திணுசில் முகத்தைத் திருப்பிக் கொண்டவன் விக்ரமிடம் கேட்ட இடக்குக் கேள்வியில் விக்ரமின் மனம் ரெக்கை கட்டி வானத்தில் பறக்க ஆரம்பித்தது...
சாருலதா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அவள் ஏற்கனெவே ஆத்மாராமுக்கு அறிமுகமாகி விட்டிருந்த விவரத்தை விக்ரம் அறிந்திருக்கவில்லை.. காவ்யா ஆத்மாராமைப் பார்த்த சில நொடிகளிலேயே ஆத்மாராம் 'டெர்ரர்' என்ற விவரத்தை சாருலதாவிடம் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டாள் என்பதும் விக்ரமுக்குத் தெரியாது..
அதனால் அவன் நமட்டுச் சிரிப்புடன் சாருலதாவைப் பார்க்க.. அவள் 'ஹலோ'வைத் தவிர்த்து என்ன சொல்லி ஆத்மாராமிடம் எப்படி அறிமுகம் ஆவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்...
'ஹாய்' என்றாலும் வேலைக்கு ஆகப் போவதில்லை.. நிச்சயம் அதற்கும் அவன் ஏதாவது ஒரு கதையை வைத்திருப்பான் எனும் போது.. அவள் என்னதான் சொல்வது...?
அவள் தடாலடியாக ஆத்மாராமை விட்டுவிட்டு விக்ரமைப் பார்த்துச் சிரித்தாள்...
'இவ என்னைப் பார்த்துச் சிரிக்கிறாளே..' விக்ரம் இமை கொட்டி விழித்தாலும்.. அனுபவப் பட்ட அவன் அறிவு..
'வேண்டாம்டா விக்ரம்..' என்ற எச்சரித்தது..
'மத்தவளுகளையாவது ஒரு கணக்கில் சேர்த்து விடலாம்.. இவ அந்தக் கணக்கிலயெல்லாம் சேராம உனக்குத் தண்ணி காட்டற தில்லாலங்கடி வேலைகளைப் பண்றவ.. முழிச்சுக்கடா முருகேசு... இவ சிரிப்பைப் பாத்து ஏமாந்து போயிடாதே.. இவ சிரிச்சான்னா உன்னைக் கவுக்கப் போறான்னு அர்த்தம்டா விக்ரமு.. சுதாரிப்பா இருந்துக்கடா.. இவ சிரிப்புக்குப் பின்னாலே
எந்த ஐந்தாண்டுத் திட்டம் ஒளிஞ்சிருக்குன்னு யாரு கண்டது...? இவ உனக்கே ராக்கி கட்டி அண்ணான்னு கூப்பிட்டு வைச்சவடா.. மறந்துராதே..'
விக்ரமின் மனது அள்ளி வீசிய புத்திமதிகளால் அவன் தெளிந்து சாருலதாவின் சிரிப்பில் வீழ்ந்து விடாமல் காலூன்றி நின்று கொண்டான்..
"இவங்களைப் பார்த்ததில எனக்கு ரொம்ப சந்தோசம் சார்..."
"எவங்களைப் பார்த்துடா விக்ரம்.."
"காவ்யா இவங்களைப் பத்தி நிறையச் சொன்னா.."
"என்னைப் பத்திச் சொல்ல அவ யாருடா மச்சான்...?"
"சார்கூட வேலைபார்க்கப் போறதில் எனக்கு ரொம்ப சந்தோசம் சார்..."
"எனக்குக் கொஞ்சம் கூட சந்தோசமில்லைடா விக்ரம்.. ஆபிஸா இது...? எங்கே பார்த்தாலும் லேடிஸ் கூட்டம்.. மனுசக் கழுதை நிம்மதியா வேலை பார்க்க முடியுமா...? சேச்சே.."
"இப்பத்தான் சார் கனடாவில இருந்து வந்திருக்கிறார் போல..."
"இந்த புள்ளி விவரத்தை நான் கேட்டேனா விக்ரம்...?"
"வரும்போதே கழுதையையும் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறாரே.. கனடாவில் கழுதைகள் அதிகமா சார்..?"
இமை கொட்டி அறியாப் பெண்ணைப் போல சாருலதா பேசிய விதத்தில் ஆத்மாராம் அயர்ந்து போனானோ இல்லையோ.. விக்ரம் அயர்ந்து போய் விட்டான்..
ஆத்மாராமிடம் நேரில் பேசினால்தானே வம்பு என்று விக்ரமை ஊடே வைத்து சாருலதா பேச முனைவாள் என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை..
அப்படிப் பேச ஆரம்பித்தவளிடம்.. அவள் பாணியிலேயே ஆத்மாராம் பதில் கொடுப்பான் என்பதை மட்டும் அவன் நினைத்துப் பார்த்திருந்தான்..
'சபாஷ்.. சரியான போட்டி...' என்ற மகிழ்வுடன் அந்த வார்த்தை விளையாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தவனின் மகிழ்வில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டாள் சாருலதா...
அப்படியொரு.. உடனடிக் கேள்வியை ஆத்மாராமே எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவன் முகமே சொல்லியபோது.. விக்ரமின் நிலையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்...?
சாருலதா அறியாப் பெண்ணைப் போல இமை கொட்டினால்.. எல்லாம் அறிந்து வைத்திருந்த விக்ரமோ இவளா இப்படிப் பேசுவது என்ற அதிசயத்தில் இமை கொட்டினான்..
பல்லை கடித்தபடி சாருலதாவை வெட்டவா.. இல்லை குத்தவா என்று முறைத்துக் கொண்டிருந்த ஆத்மாராமை அமைதியாகப் பார்த்து விட்டு.. விக்ரமின் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே நடந்து விட்டாள் சாருலதா..
ஆத்மாராம் தோல்வியைத் தழுவியதைப் போல உணர்ந்தான்.. பொதுவாக பெண்களுக்கும் அவனுக்கும் வாக்குவாதம் ஏற்படும் போது வெற்றி அவன் பக்கம்தான் இருந்திருக்கிறது.. இன்று அந்த நிலை மாறியதில் அவன் மனதில் எரிச்சல் ஏற்பட்டது..
"யாருடா இவ...?" விக்ரமிடம் கேட்டான்...
"சாருலதா..." விக்ரம் ரசித்துக் சொன்னான்...
"சாருலதான்னா.. பெரிய இவளா...?" ஆத்மாராமுக்கு கோபம் வந்தது..
"அதுதாண்டா அவ பெயர்..."
"சரியான திமிர் பிடிச்சவ போல இருக்கே..."
"அது என்னவோ எனக்குத் தெரியாது... பட்.. விவரமானவன்னு மட்டும் தெரியும்..."
"இவள்ளாம் விவரமாய் இருந்து கிழிச்சா.."
"இல்லடா.. மச்சான்.. நிஜத்தைத்தான் சொல்றேன்.. இவ எனக்கே ராக்கி கட்டி விட்டுட்டான்னா பார்த்துக்கயேன்.."
"உனக்கு...? ராக்கி...? இவ காட்டினாளா...? ஹா.. ஹா.."
ஆத்மாராம் உரக்கச் சிரித்தான்.. உள்ளே சென்று விட்ட சாருலதா அந்தச் சிரிப்புச் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள்.. முகம் முழுவதும் சிரிப்பாக வரிசைப் பற்கள் தெரியச் சிரித்துக் கொண்டிருந்தவனின் பல்வரிசை அவளை ஈர்த்தது..
'இவனுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா...?' என்று தோன்றியபோதும் அவனின் அந்தச் சிரிப்பில் தெறித்து விழுந்த வசீகரத்தை அவள் ரசித்தாள்..
சிரித்துக் கொண்டேத் திரும்பிப் பார்த்த ஆத்மாராமின் பார்வையில் அவனையே பார்த்துக் கொண்டிருந்த
சாருலதா தெரிந்தாள்.. அவன் புருவங்கள் உயர்ந்து நெரித்தன.. நொடிப் பொழுதில் அவன் சிரிப்பு மறைய சாருலதா அவசரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. அதற்குப் பின்னால் அவனிருக்கும் திசைப்பக்கம் திரும்பிப் பார்க்க அவள் முனையவில்லை...
மதிய உணவின்போது.. பெண்கள் ஆத்மாராமின் வருகையைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.. காவ்யா சொன்னதையே அவர்களும் சொல்ல.. அவர்கள் அதீதமாக அவனைக் குறித்த புகார்களை அடுக்குகிறார்கள் என்றே அவளுக்குத் தோன்றியது... உணவு முடிந்து வந்தவளிடம் விக்ரம் அவளை அழைப்பதாக ஷீபா சொன்னாள்.. என்னவாக இருக்கும் என்று யோசித்தவளிடம்..
"அதிகமாக யோசிக்காதே..." என்றாள் ஷீபா..
"இல்ல.. திடிர்ன்னு கூப்பிட்டிருக்காரே.." தயங்கினாள் சாருலதா..
"உன்னைக் கூப்பிட்டுப் பேச அவன்தான் பயப்படனும்.. நீதான் அவனை ராக்கியைக் கட்டி பயமுறுத்தி வைச்சிருக்கயே.." ஷீபா தைரியம் சொன்னாள்..
வருவது வரட்டும் என்று சாருலதாவும் போனாள்.. அறைக்கதவை ஒற்றை விரலால் தட்டினாள்..
"யெஸ் கமின்.." என்றான் விக்ரம்..
சாருலதா உள்ளே நுழைந்தாள்... அறைக்குள் ஆத்மாராமும் இருப்பான் என்பதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.. அவனின் தீர்க்கமான பார்வையில் அவள் படபடப்பாக உணர்ந்தாள்..
ஏஸி குளிரையும் மீறி அவளுக்கு வியர்த்தது..
அவளின் படபடப்பை உணர்ந்தவனைப் போல.. துளைக்கும் பார்வையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆத்மாராம்.. அந்த அறையை விட்டு ஓடிப் போய் விடலாமா என்று சாரு நினைத்தாள்.. மற்றவர்களைப் பார்க்கும் நேர் கொண்ட பார்வையினை அவனை நோக்கி வீச.. அவளால் ஏனோ முடியவில்லை..
'இவன் இப்படிப் பார்க்கமாலிருந்தா தேவலாம்..'
சாருலதாவின் மனதில் தோன்றிய இந்த நினைவை அவனிடம் யார் போய் சொல்லுவது..? அவனோ மந்திரித்து விட்ட கோழியைப் போல ஒரு மார்க்கமாக அவளையே பார்த்த வண்ணம் இருந்தான்...
திரும்பிப் போய் விடலாமா என்று மனதில் உதித்த எண்ணத்தை அழித்தாள் சாருலதா...
திரும்பிப் போக முடியுமா...? அவளை அவளுடைய டீமின் லீடர் அழைத்திருக்கிறான்.. என்னவென்று கேட்காமல் எப்படி அவளால் திரும்பிப் போக முடியும்..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,23,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,9,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,40,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,3,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-5
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-5
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy