மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-19

19 சாருலதாவின் தாக்குதல் வேறு வகையானதாக இருந்தது.. மன்மதனின் மலர் அம்புகள் தாக்கினால் அது வலிக்குமா.. ? சாருலதா விடுத்த தாக்குதல் க...


19

சாருலதாவின் தாக்குதல் வேறு வகையானதாக இருந்தது.. மன்மதனின் மலர் அம்புகள் தாக்கினால் அது வலிக்குமா..?
சாருலதா விடுத்த தாக்குதல் குறிபார்த்து அவன் மனதில் பாய்ந்தன.. அவள் ஒரு முடிவோடு செயல்பட்டாள்.. ஆத்மாவோ அதைவிட தெளிவாக முடிவெடுத்திருந்ததைப் போல சதா முறைத்த வண்ணம் இருந்தான்.. அதைப் பற்றி அலுவலகப் பெண்கள் பேசிக் கொண்டார்கள்..
"அனல் பறக்குதுடி..."
"ஆமாம்டி.. எப்பவும் அவன் குளுகுளுன்னு இருந்தான்.. இப்பமட்டும் அனலா பொசுக்கிறான்.. போவியா..."
"அவன் போயிருவானா...?"
அலுவலகமே அவன் எப்போது கிளம்புவான் என்று ஆவலுடன் காத்திருக்க.. சாருலதாவோ அவனை இழுத்துப் பிடித்து இந்தியாவில் நிறுத்தும் ஆயத்தங்களில் இருந்தாள்..
அதை மட்டும் அலுவலகப் பெண்களின் மத்தியில் சொல்லியிருந்தால் அவள் கதி அதோ கதிதான்....
சாருலதா கண்ணாலே ரகசியம் பேசினாள்.. அவன் அதைக் கண்டு கொண்டாலும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டான்...
அவள் சுதாகரனிடம் பேசிய விவரத்தை அவன் இவனிடம் சொல்லாமல் இருந்திருக்க மாட்டான்.. சொல்லாதே என்று சாருலதா சொல்லவில்லையே..  சொல் என்றுதானே சொன்னாள்.. இருந்தும் அதைப் பற்றி தெரியாதவனைப் போல அவன் எந்தப் கேள்வியும் கேட்காமல் இருந்ததுதான் அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது...
'கல்லுளி மங்கன்...'
சாருலதாவிற்கு மணிக்கொருதரம் வேலையில் சந்தேகம் வந்தது.. அதை நிவர்த்தி செய்ய அவனைத் தேடிப் போனாள்.. அதையும் அவனருகில் ஒட்டி நின்றுதான் கேட்டாள்..
"இப்பத்தான் வேலை கத்துக்கறியா.." என்று அவன் கேட்டு விட்டான்...
அவளா அசருவாள்...?
"ஆமாம் சார்.." என்று முகம் மாறாமல் பதில் சொன்னாள் 
அந்த வார இறுதியில் அவர்கள் அலுவலகத்தில் சிறிய விழா ஒன்று நடந்தது.. விக்ரம் முன்னே நின்று அதை நடத்தினான்..
"கல்ச்சுரல் டே பங்சனாம்டி.." என்று சொன்னாள் ஷீபா..
சாருலதா பாட்டுப்பாட முன் வந்தாள்.. காவ்யாவும் மற்ற பெண்களும் இயல்பான குதூகலத்துடன் நின்றிருந்தார்கள்... ஆத்மா எப்போதும் போல கடுகடுவென்று இருந்தான்...
"இன்னைக்காவது சிரி ஆத்மா..." என்று சொல்லிவிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டாள் காவ்யா..
"உன்னைப் பார்த்தா எந்த மனுசனுக்காவது சிரிப்பு வருமா...?" என்று அவன் கேட்டு வைக்க...
"தேவையாடி உனக்கு...?" என்ற மற்ற பெண்கள் அவளைப் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்கள்..
"இவன் முன்னாலே பாடப் போற.. பார்த்துப்பாடு.." ஷீபா சாருலதாவை உஷார் படுத்தினாள்...
சாருலதா பார்த்துத்தான் பாடினாள்.. அந்தப்பக்கம்.. இந்தப்பக்கம் நகராமல் ஆத்மாவின் முகத்தின் மீதே நிலைத்து நின்றது அவள் பார்வை...
"புதுப் பெண்ணின் மனதைத்
             தொட்டுப் போறவரே...
    உங்க எண்ணத்தைச்
             சொல்லி விட்டுப் போங்க..
    இளம் மனசைத்
             தூண்டிவிட்டுப் போறவரே...
    அந்த மர்மத்தைச்
             சொல்லி விட்டுப் போங்க..."
என்னடி இவ.. அரதப் பழசான பாட்டைப் பாடறாளே.. என்று அவளுடைய தோழிப்பெண்கள் பேசிக் கொண்டார்கள்.. ஆத்மாவிற்கு மட்டும் எதற்காக அவள் அந்தப் பாடலைத் தேர்வு செய்திருக்கிறாள் என்ற காரண காரியம் புரிந்தது...
அந்தப் பாடல் சொல்லிய செய்தியில் மனம் நனைய அவன் அசையாமல் நின்றான்...
"உனை எண்ணி ஏங்குகிற
             என்னிடத்தில் சொல்லாமல்...
    இருட்டு வேளையிலே...
             யாரும் காணாமலே...
    திருட்டுத்தனமாய்
             சத்தம் செய்யாமலே...
    சந்தித்திருந்த தெல்லாம்...
             சிந்தித்துப் பாராமலே..."
ஆத்மாவின் மனம்.. கடற்கரையில் கால் நனைய அவளுடன் நடந்த அந்த இருட்டு வேளையை நினைத்துக் கொண்டது..
அவனா அவளைச் சந்தித்த பொழுதுகளை சிந்தித்துப் பார்க்காமல் இருக்கிறான்...? சிந்தித்து பார்த்தினால் தானே இந்த முடிவை எடுத்திருக்கிறான்..?
"எனைச் சுற்றிப்
             பறந்த வண்டே...!
    சும்மா நீ
             போகாதே...
    புத்தம்புது மலரின்
             தேனைச் சுவைத்துப் போவாயே..."
சாருலதாவா இதைப் பாடுகிறாள்..? அவனால் நம்ப முடியவில்லை.. அவனறிந்த சாருலதா மனதிலுள்ள உணர்வுகளை வெளிக்காட்டத் தயங்குபவள்...
அவள் மனதை இந்த அளவுக்கு அவன் பாதித்திருக்கிறானா...?
"இன்பக் கனவை
             ஏனோ நீ கலைக்கிறாய்..
    அன்புக் கயிறிதுதான்...
             அறுக்க யாராலும் ஆகாதய்யா..."
அவள் குரலில் தொனித்த உறுதியை அவன் மட்டுமே அறிந்தான் அன்று இரவில் அவன் தூங்க வெகுநேரமானது..
அலுவலகத்திற்கு அவன் போன சிறிது நேரத்திலேயே சாருலதா அவனைத் தேடி வந்து விட்டாள்.. அவளையே கூர்மையாகப் பார்த்தான் அவன்...
"உனக்கு அடிக்கடி சந்தேகம் வர ஆரம்பிக்குது..."
"புதுசா ஆரம்பிக்கலை.. எப்பவோ ஆரம்பிச்சிருச்சு..."
"இதை வளர விடாதே.."
"வேர் விட்டு மரமா நிக்குதே..."
"வெட்டி விடு..."
"அது என்ன தேவைக்கு..? என்னைச் சொல்லியாகிறதே... அங்கே மட்டும் என்ன வாழுதாம்..என் படத்தை செல்போனில் ஸ்கிரின் பிக்சரா போட்டு வைச்சாச்சே.."
ஆத்மாராம் பேசவில்லை.. சாருலதாவின் கண்கள் கலங்கி விட்டன.. அவனின் மௌனத்தில் அவள் உடைந்தாள்..
"என்ன பாவம் பண்ணினேன்னு தெரியலை.. நான் காதலிக்கிறவர் என்னைக் காதலிக்கலைன்னாலும் பரவாயில்லை.. காதலித்துத் தொலைக்கிறார்.. அதை ஒப்புக்குவேனான்னு சண்டித்தனம் செய்யறார்..."
"சாரு.. நான் முள்.. உனக்குத் தோதானவனில்ல.."
"அதை நானில்ல சொல்லனும்...?"
"என்னைப் பத்தி உனக்கென்ன தெரியும்..?"
"கொஞ்சமாய் தெரியும்.. சுதாகரன் அண்ணா சொன்னார்..."
ஆத்மா எதையோ சொல்ல வாயெடுத்தான்.. சொல்ல முடியாமல் உதட்டை மடித்துக் கடித்தபடி அவளையே பார்த்தான்.. அவள் கண்களில் தெரிந்த துக்கத்தில் அவன் மனம் கரைந்தது..
"அவன் சொல்லியது கொஞ்சம் சாரு..."
"எனக்கு அது போதும்..."
"பிடிவாதம் பிடிக்காதே சாரு.. வேண்டாம்.. விட்டு விடு..."
"எதை விடச் சொல்றிங்க..? உங்களையா...? அதுக்கு உயிரை விட்டறலாம்ன்னு தோணுது..."
அவள் விசும்பினாள்.. மனம் தாளாமல் அவன் எழுந்து விட்டான் இரண்டே எட்டில் அவளை அடைந்தவன் அவள் தோள் தொட்டு இழுத்து அணைத்தான்...
"ஆத்மா..."
முதன் முதலாக அவன் அணைப்பை உணர்ந்த சாருலதா அணையுடைத்த வெள்ளமாக அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
"ஏண்டி.. என்னைக் கொல்லுற.. என் மேல இந்த அளவுக்கு மனசை வைக்காதேடி.. நான் அதுக்கு அருகதையானவனில்ல..."
சொன்னவன் விலகி நிற்கவில்லை.. அவள் கூந்தலில் முகம் புதைத்தான்.. அவன் கைகள் அவளை இறுக்கிக் கொண்டன.. எழும்புகள் நொறுங்கும் அளவிற்கு இறுக்கமாக அணைத்தான்...
"உங்க பிரண்டோட காதலியையும்.. உங்க அண்ணியையும் வைத்து எல்லாப் பெண்களும் அப்படித்தான் இருப்பாங்கன்னு நினைச்சிரக் கூடாது ஆத்மா..."
"என்னடி சொன்ன..? என் பிரண்டோட காதலியா..?"
"ம்ம்ம்.. உங்க பிரண்டை ஏமாத்திட்டுப் போயிட்டாளாமே.."
ஆத்மா அவளை விலக்கி நிறுத்தி கண்களுக்குள் உற்றுப் பார்த்தான்.. அவன் மனதின் துடிப்பு அவன் விழிகளில் தெரிந்தது...
"இதை உனக்குச் சொன்னது யார்..?"
"சுதாகரன் அண்ணா..."
"சாரு.."
அவன் விலக யத்தனிக்க.. சாருலதா அவன் கரம் பிடித்துத் தடுத்து நிறுத்தினாள்.. அவள் பார்வையில் உறுதி இருந்தது.. அவன் கையை தன் தலைமீது வைத்தவள்...
"சொல்லுங்க ஆத்மா..." என்றாள்..
"எதைச் சொல்லச் சொல்ற..?" அவன் கையை உறுவிக் கொள்ள முடியாதவனாக கேட்டான்...
"என்னைக் காதலிக்கலைன்னு சொல்லுங்க..."
சாருலதா சாவல் விட்டாள்.. அவனால் அந்த சவாலை சமாளிக்க முடியவில்லை.. எப்படி அவன் சொல்லுவான்..? அவளைக் காதலித்தது.. காதலிப்பது உண்மையல்லவா..?
"வேண்டாம் சாரு..."
"எனக்கு நீங்க வேண்டும்..."
"சொன்னாக் கேளு..."
"கேட்கிறேன்.. உங்க மனசில நானில்லைன்னு சொல்லுங்க.. நீங்க சொன்னதை நான் கேட்கிறேன்..."
அவன் தோற்றுப் போனவனாக அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.. அவன் மனதை ஜெயித்து விட்ட சந்தோசத்துடன் அவன் கைகளுக்குள் அடங்கிப் போனாள் சாருலதா...
ஆத்மா கனடா போகவில்லை.. அவனுக்குப் பதிலாக விக்ரம் கனடா போனான்...
விக்ரம் நாடு கடப்பதில் அந்த அலுவலகப் பெண்களுக்கு யாதொரு ஆட்சேபனையும் இருக்க வில்லை.. ஆனால் ஆத்மாவிற்கு பதிலாக அவன் நாடு கடந்ததைத்தான் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
"என்னடி இப்படி ஆகிருச்சு.." என்று ஒருவரையொருவர் துக்கம் விசாரித்துக் கொண்டார்கள்...
ஆத்மாவின் சிடுமூஞ்சித்தனம் காணாமல் போயிருந்தது... அவன் சாருலதாவுடன் சென்னையைச் சுற்றி வலம் வந்தான்.. அதை ஒருநாள் காவ்யா கண்டு விட்டாள்..
"ஏய்ய்.. இவ ஆத்மாகூட ஊரைச் சுத்தறாடி.." என்று அலுவலகத்தில் போட்டு உடைத்து விட்டாள்...
"நிஜமாவா சாரு..?"
"என்னடி ஆச்சு..? ஆர் யு ஆல்ரைட்..?"
"உனக்கு தலைவிதியா..? அந்த முசுட்டு மூஞ்சிக்கு வாழ்க்கைப் பட்டா உனக்கு சிரிப்பே மறந்து போயிடும் சாரு.. யோசிச்சு எதையும் செய்.."
"எப்படி அவன் இவளை மடக்கினான்...?"
"சாரு மாதிரிப் பொண்ணுக்கு ஆத்மா மாதிரி புருசனா..? நினைச்சுப் பார்க்கவே முடியல..."
ஆளாளுக்கு ஒன்றைச் சொன்னார்கள்.. சாருலதா எதையும் காதுகளில் போட்டுக் கொள்ளவில்லை..
ஒரு இளவேனிற்காலத்து மாலை நேரத்தில் ஆத்மாவை அவள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவள் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்தாள்...
என்கவுண்டர் ஏகாம்பரம் என்ன சொல்வாரோ என்ற பதைப்புடன் அவரின் முகம் பார்த்தாள்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-19
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-19
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy