மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-17

17 "ஒரு குட் நியுஸ்..." மதிய உணவு நேரத்தின் போது காவ்யா அறிவித்தாள்.. சுற்றியிருந்தவர்கள் ஆவலுடன் அவள் முகம் பார்த்தார்...


17

"ஒரு குட் நியுஸ்..."
மதிய உணவு நேரத்தின் போது காவ்யா அறிவித்தாள்.. சுற்றியிருந்தவர்கள் ஆவலுடன் அவள் முகம் பார்த்தார்கள்..
"என்ன காவ்யா..?"
"சொல்லுடி.."
"நமக்கு இன்க்ரிமென்ட் வந்திருக்கா..?"
ஆளுக்கொன்றாக கேள்விகள் கிளம்பிக் கொண்டிருந்தன...
"வெயிட்.. வெயிட்.."
கெத்தாக எல்லோரையும் கையமர்த்திய காவ்யா.. மர்மக்குரலில் கண்களை உருட்டிக் கொண்டு...
"டெர்ரரை நாடு கடத்தப் போகிறாங்க..." என்று அறிவித்தாள்...
சாருலதாவிற்கு 'திக்'கென்று இருந்தது.. இவள் ஒருவேளை ஆத்மாவைச் சொல்லுகிறாளோ..?
"அவனேதான்.." என்றாள் காவ்யா...
"வாவ்.. எப்பப் போறானாம்..." ஷீபா குதூகலித்தாள்...
"இந்த மன்த் என்டில்..."
"திரும்பவும் அவனையே கனடா அனுப்பனும்னு கம்பெனி முடிவு பண்ணியிருக்குதுன்னா.. எந்த அளவுக்கு நம்ம துயரத்தை கம்பெனி புரிந்து வைத்திருக்கனும்..?"
"இல்ல ஷீபா.. இந்த டிசிசனை கம்பெனி எடுக்கலை.. இவன்தான் எடுத்திருக்கான்..."
"வாட்..?!.."
இந்தக் கேள்வியை அதிர்ச்சியுடன் கேட்டது ஷீபா இல்லை.. சாருலதாதான் கேட்டாள்..
"அதுக்கு ஏண்டி இவ அப்செட் ஆகிறா..."
"அவன் கீழே வேலை பார்த்தாளில்ல.. அந்தப் பாசமா இருக்கும்.."
"இருக்கக் கூடாதே.."
"விடு காவ்யா.. இவ பாசமா இருந்தாலும் அவன் கடிக்கிறதை நிறுத்தவா போறான்..? பிறவி குணத்தை யாராலயும் மாத்த முடியாதுங்கிறதை சாரு.. போகப் போக புரிஞ்சுக்குவா..."
போகப் போக எதை நான் புரிந்து கொள்ளப் போகிறேன்.. என்ற துக்கம் சாருலதாவிற்குள் எழுந்தது.. அவளுடையவன் அவளை விட்டுப் பிரிந்து போகும் முடிவை எடுத்திருக்கிறான்.. அது அவளுக்கு நல்ல செய்தியாகி விடுமா..?
எல்லோரும் கிளம்பிப் போன பின்னாலும் கிளம்ப மறந்து சிலையாக அமர்ந்திருந்தவளிடம்...
"சாரு.. நீ கிளம்பல..?"
காவ்யா அவள் தோள் தொட்டு அசைத்தாள்.. சாருலதா எழுந்தாள்.. இயந்திரம் போல ஹேண்ட் பேகை எடுத்துக் கொண்டாள்...
"ஆர் யு ஆல்ரைட் சாரு..?"
"ம்ம்ம்..."
"டல்லா தெரியறியே..."
"ஹெட் ஏக் காவ்யா.. வீட்டுக்குப் போய் அம்மா கொடுக்கிற காபியைக் குடிச்சாச் சரியாகிடும்..."
"குட் ஜாப்.. வெரி குட் டிஸிசன்.." காவ்யா சிரித்தாள்...
சாருலதா சிரிக்கவில்லை.. காவ்யாவின் செல்போன் ஒலித்ததால் அவள் அதைக் கவனிக்கவும் இல்லை..
"பை சாரு.." என்று விலகி நடந்தாள்..
என்ன செய்வது..? எப்படி ஆத்மாவைத் தடுத்து நிறுத்துவது என்று சிந்தித்துச் சிந்தித்து சாருலதாவிற்கு தலைவலியே வந்து விட்டது...
நெற்றியைச் சுளித்தபடி ஸ்கூட்டியை உதைத்தால்.. அது ஸ்டார்ட் ஆக மறுத்தது...
அந்த ஸ்கூட்டி அரதப் பழசு ஸ்கூட்டி.. அவளுடைய பள்ளி நாள்களில் சக்திவேல் அன்புடன் வாங்கிக் கொடுத்தது..
முதன்முதலாக.. அவளுக்கே அவளுக்கென்று கிடைத்த வாகனம் என்பதால் அதன் மேல் தனிப்பிரியம்.. கொண்டிருந்தாள் சாருலதா...
"இப்பல்லாம் ஆட்டோ மேடிக் ஸ்டார்டர் வைச்ச வண்டியே வந்திருச்சு.. இன்னும் இதைக் கட்டிக்கிட்டு அழுகிறயே..."
அப்படியொரு வண்டியை சக்திவேலிடம் இருந்து பரிசாகப் பெற்ற சொர்ணலதா கிண்டலடித்திருக்கிறாள்..
"சாரு.. இதை மாத்திட்டு நியு மாடலில வண்டி வாங்கிக்கம்மா.. காலேஜ் போயாச்சில்ல.." சக்திவேல் வற்புறுத்தியிருக்கிறார்..
"நோ டாட்.." சாருலதா அசைந்து கொடுக்கவில்லை..
அந்த அளவிற்கு அந்த வண்டியை அவள் நேசித்தாள்.. வேலை கிடைத்த பின்னாலும் பிடிவாதமாக அதையே ஓட்டிக் கொண்டிருந்தாள்..
"ஏண்டி.. வேற டூவிலர் வாங்கனும்கிற உத்தேசமே இல்லையா..?" என்ற சொர்ணலதாவின் கேள்விக்கு..
"வேற டூவீலரா..? நோ சான்ஸ்.. டைரக்டா ஃபோர் வீலர்தான்.." என்று பொறாமைப் பட வைத்து விட்டு அவளுடைய ஸ்கூட்டியை பரிவுடன் தட்டிக் கொடுப்பாள்..
அந்த ஸ்கூட்டி அது நாள் வரை சாருலதாவிடம் வம்புக்கு வந்ததில்லை.. கிளம்ப மாட்டேன் அன்று அடம் பிடித்ததில்லை.. ஓங்கிய உதைகளை வாங்கியதில்லை.. ஒரே ஒருமுறை மட்டுமே அது அந்த வேலைகளைச் செய்திருக்கிறது..
அந்த ஒரு முறை எது என்று நினைத்துப் பார்த்த சாருலதாவின் கண்கள் ஒளிர்ந்தன...
"யு ஆர் மை ஸ்வீட்டி ஸ்கூட்டி.."
ஸ்கூட்டியை கிளப்பமுடியாமல் அவள் தவிப்பதைக் கண்ட காவ்யா அவளுக்கு உதவி செய்ய அருகில் வந்தாள்.. வந்தவளைக் கவனிக்காமல் ஸ்கூட்டியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து கொஞ்சிக் கொண்டிருந்த சாருலதாவை விசித்திரமாகப் பார்த்தாள்...
"என்னடி.. கிங்காங் படத்தில குரங்கு மேல ஷாப்ட் கார்னர் வைச்ச பெண்ணாட்டம் நீ உன் ஸ்கூட்டி மேல ஷாப்ட் கார்னர் வைக்கிற...?"
"போடி..."
இதற்கு எதற்காக சாருலதா முகம் சிவக்கிறாள் என்று காவ்யா மூளையைக் கசக்கிக் கொண்டிருந்த போது.. அவள் அங்கு நிற்பதையே கவனிக்காதவளாக ஸ்கூட்டியை உதைத்தாள் சாருலதா.. அது ஒரே உதையில் கிளம்பி விட்டது.. சாருலதா ஸ்கூட்டியில் ஏறிக் கிளம்பிப் போய் விட்டாள்..
"ஏம்மா.. இன்னுமா நீங்க கிளம்பலை..? அப்பவே ஆபிஸ் முடிஞ்சு வந்திட்டிங்களே.." யதேச்சையாக அந்தப் பக்கமாக வந்த செக்யூரிட்டி வினவினான்..
     "கடலில் விழுந்த நண்பிக்கு
           கை கொடுத்தேன்.. அவள் கரையேற..
      கரையில் அவள்தான் ஏறிவிட்டாள்..
            கடலில் நான்தான் விழுந்து விட்டேன்.."
அவனுக்கு பாட்டாலேயே பதில் சொல்லிவிட்டு காரில் ஏறினாள் காவ்யா...
சாருலதாவின் மனதில் உற்சாகம் இருந்தது.. அவளுடைய ஆசை ஸ்கூட்டி முதன் முதலாக கிளம்ப மாட்டேன் என்று சண்டித்தனம் செய்த அந்த நாள் ஞாபகம் அவள் நெஞ்சினில் வந்தது..
அந்த ஒரு நாள்..! ஆத்மாவுடைய ஆத்ம நண்பனான சுதாகரனை அவள் சந்தித்த அந்தத் திருநாளை அவளால் மறக்க முடியுமா..?
அப்பேற்பட்ட ஆத்மாவின் அதட்டலையே அலட்சியம் செய்து விட்டு.. அவளருகில் பாந்தமாக வந்து விவரம் சேகரித்த நல்ல உள்ளம் கொண்டவனல்லவோ அவன்..!
அந்தச் சுதாகரனிடம் முறையிட்டால்.. நிச்சயம் தன் காதலுக்கு ஒரு விடிவுக்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை சாருலதாவின் மனதில் துளிர் விட்டது...
ஆனால் சுதாகரனை கண்டறிவது எப்படி...?
அடுத்து வந்த நாள்களில் அதற்கான முயற்சியில் முழு வீச்சுடன் ஈடுபட்டாள் சாருலதா.. அடிக்கடி ஆத்மாவின் அறைக்குள் போய் வந்தாள்.. எப்போது அவள் போனாலும் முதல் வேளையாக செல்போனை கைப்பற்றிக் கொண்டு முசுட்டு மூஞ்சியுடன் அவள் முகம் பார்க்காமல் எரிந்து விழுந்தான் ஆத்மா...
இவன் செல் போனை கீழே வைக்கமாட்டான்.. என்று சாருலதாவிற்கு புரிந்து விட்டது.. அதன் வழியாக சுதாகரனின் போன் நம்பரைக் கண்டு பிடிக்க முடியாவிட்டால் வேறு எந்த வகையில் சுதாகரனை அவள் கண்டு பிடிக்கப் போகிறாள்...?
நாள்கள் வேறு குறைந்து கொண்டே வந்தன.. மாற்றுவழியைத் தேடிக் கொண்டிருந்தாள் சாருலதா.. ஆத்மாவின் அந்த நண்பனைப் பற்றிய விவரம் சாருலதாவின் தோழிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை.. ஆனால் ஒன்றை மட்டும் அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்...
"அவன் ஒருத்தன்தாண்டி இவனுக்கு பிரண்டுன்னு இருக்கிறான்.. மற்றபடி யார்கிட்டயும் இவன் குளோசாப் பழகிக்க மாட்டான்.."
"விக்ரம் கூடப் பேசறானே..."
"அது சும்மா.. ஜஸ்ட் லைக் தட்தான்.."
"தினாகூட காபிசாப்பிடப் போனானே..."
"இவன் போயிருப்பான்.. அவன் யதேச்சையாய் வந்திருப்பான்.. மத்தபடி ஜோடி போட்டுக்கிட்டெல்லாம் இவன் கேண்டின் பக்கம் போகமாட்டான்.. தனியாத்தான் போவான்.. வருவான்..."
'சிங்கம் தனியாத்தான் போய் வரும்...'
அந்த நிலையாலும் அவள் மனதில் சிந்தனை ஓடியது.. அவள் கேட்ட அத்தனை விவரங்களையும் ஒப்பித்த தோழிகள் ஒப்பித்து முடிந்ததும் அவளை வினோதமாகப் பார்த்தார்கள்..
"ஆமாம்.. நீ எதுக்கு அவனைப் பத்தியே தூண்டித் துருவி விசாரிக்கறே..? அவனைப் பத்தின தீஸிஸ் எழுதப் போறியா...?"
"போடி..."
"என்னவோ போ சாரு.. இத்தனை நாளில் நம்ம ஆபிஸில் வொர்க் பண்ற எந்தப் பெண்ணும் உன் அளவிற்கு அவனைப் பத்தி விசாரித்ததில்லை தெரியுமா..?"
இதைத் தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன செய்யப் போகிறேன்.. என்ற நினைவுடன் கம்யூட்டரில் வந்திருந்த ஈமெயில்களைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் மூளையில் மின்னலடித்தது..
'சுதாகரனின் இமெயில் ஜடி கிடைத்தால் கூடப் போதுமே.. அவனுக்கு மெஸேஜ் அனுப்பி வைக்கலாமே...'
அந்த முயற்சிக்கு பலன் இருந்தது.. அடுத்து அவள் ஆத்மாவைத் தேடி அவன் அறைக்குப் போன போது.. அவன் காபி சாப்பிடப் போயிருந்தான்.. போனவன் கம்யூட்டரில் அவனுடைய இமெயில் ஐடியிலிருந்து வெளியே வராமல் போயிருந்தான்.. சாருலதா அவசரமாக கம்யூட்டரின் மவுசை கைபிடித்தாள்.. அவனுடைய மெயிலுக்குள் நுழைந்தாள்.. வரிசையாக இருந்த மெயில்களில் அவள் தேடிய சுதாகரனின் ஐடி கிடைக்கிறதா என்று தேடினாள்...
கிடைத்தது.. அவள் தேடிய சுதாகரனின் இமெயில் ஐடி அவளுக்கு கிடைத்து விட்டது.. 'சுதசுதா' என்ற ஐடியில்.. 'போனை கீழே வைக்க மாட்டியாடா.. இன்றைக்கு நைட் சாப்பிட என் வீட்டுக்கு வா.. அம்மா கைச்சமையல் உனக்குப் பிடிக்குமாமே.. அம்மாதான் சொல்லச் சொன்னாங்க..' என்று இருந்தது..
'ஹீர்ரே...' சாருலதாவின் மனம் கூவியது.. இப்படிப்பட்ட உரிமையான அழைப்பை... ஆத்மாவின் ஒரேயொரு நண்பனைத் தவிர வேறு யார் கொடுத்திருக்க முடியும்...?





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-17
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-17
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-17.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-17.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy