மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-16

16 "என்ன வொர்க் பண்ணியிருக்க.. ? ஒரு புரொஜெக்டை ஒழுங்கா முடிச்சா.. எல்லாமும் முடிஞ்சிருச்சுன்னு அர்த்தமா.. ? சொல்லிக் கொடுத்ததை ...


16

"என்ன வொர்க் பண்ணியிருக்க..? ஒரு புரொஜெக்டை ஒழுங்கா முடிச்சா.. எல்லாமும் முடிஞ்சிருச்சுன்னு அர்த்தமா..? சொல்லிக் கொடுத்ததை மண்டையில் ஸ்டோர் பண்ணி வைச்சுக்கனும்கிற அறிவு இருக்கா.. இல்லையா..?"
ஆத்மா கத்திக் கொண்டிருந்தான்.. சாருலதா.. இமைகளைக் கொட்டிக் கண்ணீரை அடக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.. இந்த ஆத்மாவா அவளுடன் கடற்கரையில் காலார நடந்தவன் என்றிருந்தது அவளுக்கு..
"உன் மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்க..? உன் கையைப் பிடிச்சு எல்லாத்தையும் நானே சொல்லிக் கொடுக்கனும்னு நினைக்கறியா..? நான் உன் டீம் லீடர்தான்.. டீச்சரில்லை.. மைன்ட் இட்..."
அவளால் பதில் பேச முடியவில்லை.. சிறிய பிழைதான் அது.. அவன் நினைத்திருந்தால் அதைப் பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாம்.. அதை விடப் பெரிய பிழையைக் கண்டு பிடித்து சரி பண்ணியவன்தானே.. இப்போது மட்டும் என்ன வந்தது...?
"முதலில் நீ இடத்தை மாத்து.. என் முன்னால உட்கார்ந்திருத்தாத்தான் உனக்கு வேலை செய்யத் தோணாது.. எந்தத் தப்பை பண்ணினாலும் நான் வந்து சரி பண்ணிக் கொடுத்திருவேன்னு அலர்ட்டில்லாம இருப்ப.. நீ பழையபடி உன் கேபினுக்கே போ..."
ஆத்மா முடிவாகச் சொல்லிவிட்டான்.. அவன் முடிவைக் கேட்ட மற்ற பெண்கள் 'ஹீர்ரே..' என்று ஆரவாரித்தார்கள்...
"வெல்டன் சாரு.. நீ புலிக்குகையிலிருந்து வெளியே வந்திட்ட.." என்று ஆசுவாசப் படுத்தினார்கள்..
'அது புலிக் குகையில்லை.. சிங்கத்தின் குகை...' என்று நினைத்துக் கொண்டாள் சாருலதா...
அந்தச் சிங்கத்தை அவளுக்குப் பிடித்திருந்தது.. அதன் குகையில் அதனருகில் இருக்கத்தான் அவள் பிரியப் பட்டாள்.. ஆனால்.. இதை எப்படி அவள் வெளியில் சொல்வாள்..?
அவன்தான் அவள் முகம் பார்த்து பேச மறுக்கிறானே இப்படிச் செய்பவன் எதற்காக அவளை டின்னருக்கு அழைத்துச் சென்றான்.. என்று அவளுக்கு கோபம்.. கோபமாக வந்தது...
அவள் கேட்டாளா.. எனக்கு டின்னர் வாங்கிக்குடு என்று... உணக்கையாக அவளை டின்னருக்கு அழைத்து.. அங்கே ரகசியப் பார்வை பார்த்து.. கடலோரமாக காற்றாட நடக்க வா என்று கூப்பிட்டு.. நடந்து.. பேசித் திரும்பியது எதற்காக...?
இப்படி உனக்கும்.. எனக்கும் ஒன்றுமில்லையென்று அறுத்துக் கொள்வதற்காகவா..?
"இப்பத்தான் ஆபீஸ்.. ஆபீஸ் மாதிரி இருக்கு.." என்றாள் காவ்யா..
"ஏண்டி..?"
"நீதான் எங்ககூட வந்து சேர்ந்துக்கிட்டயே..."
'ஆனா.. எனக்கு இப்படித் தோணலியே..'
சாருலதா மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்.. அவனும் அவளும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தாலும்.. முன் போல அவனை அருகிலிருந்து பார்த்துக் கொள்ள அவளால் முடியவில்லை.. வழியில் எதிர் படும் போது அவள் கண்கள் மின்ன வணக்கம் சொல்லுவாள்.. அவன் தலையைக் கூட அசைக்காமல் முறைத்துக் கொண்டே போய் விடுவான்..
'இவனை எதிலதான் சேர்ப்பது..' சாருலதா தவித்துப் போனாள்...
அவள் பாட்டுக்கு அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. வா.. வா.. பக்கம் வா.. என்று அவன் அறையில் அவளுக்கென்று ஒரு டேபிளைப் போட்டு அவளை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தது அவன் தானே...?
அழைத்தவன் எதற்காக மறுபடியும் உன் இடத்துக்கே போ என்று அவளை வெளியில் துரத்த வேண்டும்..? இதற்கு பேசாமல் அவள் எங்கே இருக்கிறாளோ அங்கேயே இருக்கட்டும் என்று விட்டிருக்கலாமே...
சாருலதா கண்ணீரை அடக்கிக் கொண்டு அவன் சுட்டிக்காட்டிய பிழையை சரி செய்தாள்.. அதை அவள் சொல்ல முனைந்தபோது அவன் அதைக் காதில் கூடப் போட்டுக் கொள்ளவில்லை..
"இனி இதுபோல மிஸ்டேக் வரக் கூடாது.." என்பதோடு முடித்துக் கொண்டான்...
சாருலதாவிற்கு பைத்தியம் பிடித்ததைப் போல ஆகிவிட்டது.. இதை யாரிடம் சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.. காவ்யாவிடம் பகிர்ந்து கொள்ளலாமா என்றால்.. அவள் ஆத்மாவைப் போல ஒருவனைக் காதலித்தால் அந்தப் பெண்ணுக்கு பைத்தியம் பிடிக்காமல் என்ன செய்யும் என்று கேட்டு வைப்பாள்..
சாருலதா தன் காதல் உணர்வுகளை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.. வெளியில் சொல்லாமல் மனதுக்குள்ளேயே மறுகினாள்..
இந்தச் சூழ்நிலையில்தான் ஒர் நாள் அவனது செல் போனில் அவளுடைய படம் இருப்பதை அவள் கண்டு பிடித்தாள்..
அன்றைய மெயிலில் வந்த ஒரு முக்கியமான பதிவை அவனிடம் சொல்வதற்காகச் சென்றிருந்தாள்.. அவன் அறையில் இல்லை.. அவனது செல்போன் மட்டும் இருந்தது.. திரும்பி விடலாமா என்ற யோசனையுடன் திரும்பியவளை செல் போனில் ஒலி அழைத்தது...
அவனது செல்போனை எடுத்து யாரென்று கேட்கவும் அவளால் முடியாது.. அது நாகரிகமாகாது..
என்ன செய்வதென்று தெரியாமல் அவள் திகைத்து நின்றபோதுதான் அதைப் பார்த்தாள்..
ஆத்மாவின் செல் போனில் ஒளித்திரையில் சாருலதா அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள்..
'என் படமா..?' சாருலதாவினால் அதை நம்பவே முடியவில்லை..
அதற்குள் செல்போன் அமைதியாகி விட்டது.. சாருலதா மனம் படபடக்க செல்போனை கையில் எடுத்து உயிர்ப்பித்தாள்.. திரையில் அவளின் படம் வந்தது...
'செல்போனில் ஸ்கிரின் பிக்சரா என் படத்தை வைச்சிருக்கான்.. இதை எப்ப எடுத்தான்..?'
ஆராய்ச்சியுடன் பார்த்தாள்.. சாருலதாவின் பின்னால் அலுவலக கம்யூட்டர் தெரிந்தது.. யாருடனோ அவள் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தபோது அவளறியாமல் அவன் மறைந்திருந்து படத்தை எடுத்திருக்கக்கூடும் என்று அவள் யூகித்தாள்..
"நானில்லாதப்ப என் ரூமில் உனக்கென்ன வேலை..?"
சீற்றத்துடன் அவன் குரல் அவள் முதுகுப் பக்கமாகக் கேட்டது.. பதட்டத்துடன் திரும்பினாள் சாருலதா...
அவள் கையிலிருந்த செல்போனை பார்த்தவனின் கண்களில் தீப்பொறி பறந்தது.. அவன் கோபத்தில் அவள் நடுங்கி விட்டாள்..
"யாரைக் கேட்டு என் செல் போனை கையில் எடுத்த..?"
இவன் யாரைக் கேட்டு அவள் படத்தை அவன் போனில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறான்..?
அவளுக்குள் கோபம் எழுந்தாலும்.. அதையும் மீறி அவள் மனதில் சாரல் அடித்தது...
அவன்.. அவள் போட்டோவை அவன் செல்போனில் ஒளித்திரையில் பதிந்து வைத்திருக்கிறான்...
"இதில் என் படமிருக்கு.." அவள் மெல்லிய குரலில் சொன்னாள்..
அவன் கண்கள் சிவந்தன.. ரௌத்ரமாக அவள் கையிலிருந்த செல்போனை அவன் பறித்தான்..
"கெட் அவுட்..." அவன் கத்திய கத்தலில் அலுவலகமே அவன் அறையைத் திரும்பிப் பார்த்தது...
சாருலதா மௌனமாக வெளியேறி விட்டாள்.. அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்ற நினைவில் இரக்கப் பார்வை பார்த்தவர்கள் அவள் முகத்தில் தெரிந்த ஒளிர்வில் குழம்பிப் போனார்கள்..
"என்னடி..?" ஷீபா கேட்டாள்..
"நத்திங்.. எப்பவும் போலத்தான் டோஸ் கொடுத்தான்.."
"அதுக்கா இப்படி முகத்தை வைச்சுக்கிட்டு இருக்க..?"
"எப்படி முகமிருக்கு..?"
"என்னவோ மெடலை வாங்கிக்கிட்டு வெளியே வந்ததைப் போல ஜொலிக்குதே.."
'மெடல்தான்..' சாருலதா நினைத்துக் கொண்டாள்..
'அவன் மனசில் நானிருக்கேன்.. இதைவிட பெரிய மெடல் எனக்கு வேணுமா என்ன..?'
அன்று வீடு திரும்பியவளின் கால்கள் தரையில் பாடவில்லை என்பதை சொர்ணலதா கண்டு பிடித்துச் சொன்னாள்.. என்ன விசேசம் என்று புஷ்பவள்ளி கேட்டாள்..
"என் டீம் லீடர் என்னை அப்ரிஸியேட் பண்ணினாரும்மா..."
என்றோ நடந்ததை இன்று சொன்னாள் சாருலதா...
"என் பெண்ணுக்கு பாராட்டுக் கிடைக்காமல் வேறு யாருக்குக் கிடைக்கும்..?" என்று மீசையை முறுக்கினார் சக்திவேல்...
விட்டால் 'லா.. லா..' பாடி விடுபவளைப் போல உற்சாகமாக இருந்தாள் சாருலதா..
"கண்ணைத் தொட்டு
             விண்னைத் தொட்டு
    பெண்ணைத் தொட்டது ஆசை..
             ஆசைக் கனவில் யாரோபாட..
    காற்றில் வந்தது ஓசை..."
சரோஜாதேவி.. மலர் வடிவத்திலான படுக்கையில் மலரைப் போலப் படுத்து அண்ணாந்து அறையின் மேற் கூரையைப் பார்த்து டிவியில் பாடிக் கொண்டிருக்க சாருலதாவும் சேர்ந்து பாடினாள்...
"என்னடி ஆச்சு..?" சொர்ணலதா நம்பமுடியாமல் இமை கொட்டினாள்...
பதிலுக்கு அவளை நோக்கி கண்சிமிட்டிய சாருலதா.. பாடலுடன் தொடர்ந்தாள்...
"என்றும் இல்லாமல்..
             என்னோடு ஒன்றும் சொல்லாமல்
    ஓராயிரம் ஆசைகள் தோன்றியதேன்..."
"அம்மா.. இவளுக்கு என்னவோ ஆகிருச்சு.. பாட்டி காலத்துப் பாட்டைப் பாடி பயமுறுத்தறா.." சொர்ணலதா உள் நோக்கிக் குரல் கொடுத்தாள்..
அதைக் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் பாடிக் கொண்டிருந்தாள் சாருலதா...
"லவ் பேர்ட்ஸ்.. லவ் பேர்ட்ஸ்..
             தக்கத் திமித் தா...."





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-16
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-16
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-16.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-16.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy