மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-15

15 மெலிதான மஞ்சள் நிற வெளிச்சம் அந்த அறையை நிறைத்திருந்தது.. இருளுமில்லாத வெளிச்சமுமில்லாத அரையிருட்டை உணர்த்திய அந்தச் சூழலை ரசித்தா...


15

மெலிதான மஞ்சள் நிற வெளிச்சம் அந்த அறையை நிறைத்திருந்தது.. இருளுமில்லாத வெளிச்சமுமில்லாத அரையிருட்டை உணர்த்திய அந்தச் சூழலை ரசித்தான் ஆத்மா.. ஒவ்வொரு டேபிளிலும் இருந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்டில் மெழுகுவர்த்திகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.. சன்னமான சப்தத்துடன் ஆங்கில இசை ஒலித்துக் கொண்டிருந்தது...
அவனுக்கு எதிரே சாருலதா அமர்ந்திருந்தாள்.. இளம் மஞ்சள் நிற ஷிபானில் தேவதையைப் போலத் தெரிந்தாள்.. விரித்து விடப்பட்டிருந்த கூந்தல்.. அலையலையாய் அவள் முதுகில் பரவியிருந்தது.. லேசாக முகம் உயர்த்தி அவள் பார்த்த பார்வைக்கு சொத்தையே எழுதிக் கொடுத்து விடலாமா என்று ஆத்மா யோசித்தான்...
அந்த நிமிடங்கள் சாத்தியப்படக் கூடும் என்று அவனும் நினைத்துப் பார்க்கவில்லை.. அவளும் நினைத்துப் பார்க்கவில்லை.. அவர்களுடைய புரொஜெக்ட் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு முன்னதாகவே முடிந்து விட்டதில் சில சலுகைகள் அவர்களுக்குக் கிடைத்திருந்தன..
ஆத்மாவின் சம்பளம் அதிகரித்திருந்தது.. சாருலதாவின் வேலை நிரந்தரமானது.. அதைக் கொண்டாடலாமா என்று இயல்பாகத்தான் ஆத்மா கேட்டான்... அதைக்கூட யோசித்து அவன் கேட்க வில்லை.. சட்டென்று மனதில் தோன்றியதை.. அதைவிட சட்டென்று அவன் கேட்டு விட்டான்..
சாருலதா மறுப்பாள் என்றுதான் நினைத்தான்.. அவள் மறுக்காமல் ஒப்புக் கொண்டதில் அவனுக்குள் சந்தோச ஊற்று கிளம்பியது...
"பட்.. எப்படி..?" என்று அவள் கேட்டபோது தான் குழம்பினான்...
"சினிமா..?" என்ற அவனின் கேள்விக்கு...
"நோ.." என்ற உடனடியான மறுப்புக் கிடைத்தது...
"பிக்னிக்..?"
"சான்ஸே இல்லை.. எங்க வீட்டில் அலோவ் பண்ண மாட்டாங்க... எனக்கும் விருப்பமில்லை..."
"வேற என்னதான் செய்வது..?"
"தெரியலையே..."
"டின்னர்..?"
அதை மறுக்க முடியாது என்று சாருலதாவிற்குத் தோன்றியது... கொண்டாடலாமா என்று கேட்டவனிடம் அவள் ஒப்புதலைச் சொல்லி விட்டாள்.. அவனும் ஒவ்வொன்றைச் சொல்லி அவள் மறுத்ததும்.. அதை வேண்டாமென்று விலக்கி வைத்து விட்டான்.. கடைசியாக வந்து நிற்பதிலும் அவள் மறுப்பைச் சொன்னால் அது முறையாக இருக்குமா..?
"காபியோட முடித்துக்கலாமே.." அப்போதும் அவள் தயங்கினாள்தான்...
"அதுக்குப் பெயர் செலபரேசனில்ல... காபி வித் சாருலதா.." என்றான் ஆத்மா..
"ஓகே.. வரேன்.." என்று சொன்னவள் வந்து விட்டாள்...
அவள் வருகையால் அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு இன்னுமொரு நட்சத்திர அந்தஸ்து கூடிவிட்டதைப் போல அவனுக்கு இருந்தது.. இதைப் போல அவன் உணர்ந்ததில்லை.. பெண்களுடன் நின்று பேசாதவன் இன்று ஒரு பெண்ணுடன் இரவு உணவு உண்ண நட்சத்திர ஹோட்டலுக்கு வந்திருக்கிறான்...
இதைத்தான் மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்று சுதாகரன் அடிக்கடி சொல்வானோ...
"என்ன சாப்பிடற..?" ஆத்மா அவளைப் பார்த்தபடியே கேட்டான்...
"நீங்களே சொல்லுங்க.." அவன் பார்வையில் முகம் சிவந்தாள் சாருலதா..
"ஊஹீம்.. இந்த டின்னரில் எல்லாமே உன் சாய்ஸ்தான்.."
ஆத்மா மெனுகார்டை அவள் பக்கமாக தள்ளி விட்டான்.. சாருலதா அதைப் புரட்டும் அழகைப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் தெவிட்டவில்லை.. லேசாக விழியுயர்த்தி அவனைப் பார்த்தவளின் முகச்சிகப்பில் அவளின் வசீகரம் கூடி விட்டதைப் போல அவன் உணர்ந்தான்...
'ஏண்டா இப்படிப் பார்க்கிற..?' சாருலதா தவித்துப் போனாள்...
ஏதோ ஒருவகையில் அவளை வசீகரிக்கும் வசீகரனின் எதிரே அமர்ந்தும் யாரோ போல பேச நேர்வது கொடுமை.. பாசாங்குகளின் பின்னே அவர்களின் காதல் உணர்வுகள் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி விளையாடின...
சாருலதாவின் நா வறண்டது.. தண்ணீர் தம்ளரைப் பற்றினாள்.. ஏற்கனெவே அதைப் பற்றியிருந்த அவன் கைவிரல்களின் மீது அவள் விரல்கள் படிந்து அவசரத்துடன் மீண்டன...
"ஸாரி.." பதட்டத்துடன் சொன்னாள்...
"ரிலாக்ஸ்.." மெலிதாக அவன் கோபப்பட்டான்..
இயல்பான ஒரு செய்கைக்கு அவள் எதற்காக இந்த அளவுக்கு பதட்டப்பட வேண்டும் என்று அவன் மனம் கேட்டது...
அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. ஊடுறுவும் அவன் பார்வையை நேர் கொண்டு பார்க்க அவளால் முடியவில்லை.. அலுவலகத்தில் முழுக்கை சட்டை.. டை.. என்று இருப்பவன் இங்கே கட்டம் போட்ட கார்கோ சட்டை.. ஜீன்ஸ் என்று இளமையாக.. கவர்ச்சியாக இருந்தான்.. இப்படி அவனை அவள் பார்ப்பது இதுவே முதல்முறை என்பதால் அவள் லேசான தடுமாற்றத்திற்கு ஆளாகியிருந்தாள்...
அவனின் ஆண்மையின் வசீகரத்தில் அவளின் பெண்மை ஆகர்ஷிக்கப் பட்டுக் கொண்டிருந்தது...
உணவு வகைகள் வந்து விட்டன.. சாருலதாவின் பக்கமாக அவன் ஒரு தட்டை நகர்த்தி வைத்தான்.. நன்றி சொல்லி விட்டு அவள் நாசுக்காக சாப்பிட ஆரம்பித்தாள்.. பேச்சு வளர்ந்தது...
பேச வேண்டும் என்பதற்காக அவர்கள் பேசவில்லை.. அந்த நொடிகளில் ஒருவர் மனதை ஒருவர் அறிய முற்பட்டவர்களாகப் பேசினார்கள்.. அவர்களின் ரசனைகள் எதிர்மறையாக இருந்தன.. அவளுக்கு கோவிலுக்குப் போக பிடிக்கும் என்றாள்.. அவனோ இரவு நேர டிஸ்கொதேக்களைச் சொன்னான்.. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் காற்றினிலே வரும் கீதத்தை அவள் சிலாகித்தால்.. அவன் ராக் மியுசிக்கை சிலாகித்தான்..
மழை நேரக் காற்றை அவள் ரசித்தால்.. அவன் முகம் சுளித்து.. உடம்புக்கு அந்தக் காற்று சரிப்பட்டு வருமா என்று கேட்டு வைத்தான்...
பௌர்ணமியின் முழுநிலவில் நிலாச்சோறு சாப்பிட்டிருக்கிறீர்களா என்ற அவளின் கேள்விக்கு.. அப்படியென்றால் என்ன என்று அவன் கேட்டான்.. அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்தச் சமயங்களில் அவன் சாப்பிடும் தாகசாந்தி விவரங்களையும் எடுத்துச் சொன்னான்...
சாருலதாவினால் அவன் ரசனைகளை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை.. அதே சமயத்தில் எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசும் அவன் குணத்தில் அவள் ஈர்க்கப் பட்டாள்...
இரவு உணவு முடிந்து அவர்கள் கிளம்பியபோது... அவன் சற்று நேரம் காற்றாட கடற்கரையில் நடந்து விட்டுப் போகலாமா என்று கேட்டான்...
"இந்த நேரத்திலா.." சாருலதா கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள்..
"ஜஸ்ட் சிக்ஸ் மினிட்ஸ்" அவன் குரலில் லேசான வற்புறுத்துதல் இருந்தது..
அது பிடிக்காமலிருந்த போதும் சாருலதா அவனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டாள்.. ஆத்மாவின் கார் கடலோரச் சாலையில் சென்று நின்றது.. அவர்கள் இறங்கி மணலில் கால் புதைய நடந்தார்கள்...
சாருலதாவின் சேலை முந்தானை காற்றில் பறந்து ஆத்மாவின் முகத்தில் படிந்து விலகிய அந்த ஓர்நொடியில் அவன் உயிர்த்தான்...
அவன் மனம் உல்லாச வானில் சிறகடித்தது.. இதைப் போன்ற பொழுதுகளை அவன் வாழ்ந்து பார்த்ததில்லை.. அவர்கள் கடலோரமாக நின்றார்கள்..
"கடலோரம் வீசிய காத்து...
             குளிராக இருந்தது நேத்து..
    கதகதப்பா ஆகியதோ..
             காதலிச்சா.. மாறியதோ.."
எங்கிருந்தோ தவழ்ந்து வந்த பாடலை ரசித்துக் கேட்டான் ஆத்மாராம்.. இந்தப் பாடலை அவன் தனித்து வந்திருந்தால் ரசித்திருப்பானா என்ற கேள்வி அவனுக்குள் வந்தது.. அதன் தலையைத் தட்டி அவன் உட்கார வைத்தான்..
வேகமாக வீசிய கடல் காற்றில் சாருலதாவின் சேலை முந்தானை மீண்டும் பறந்து வந்து அவன் முகம் மூடி விலக ஆத்மாவின் உடலில் ஒர்விதமான ரசாயன மாற்றம் ஏற்பட்டது... சாருலதா சேலையின் முனையை இழுத்துப் பிடித்து இடுப்பில் செறுகினாள்.. அந்த வழவழப்பான இடுப்புப் பகுதியில் அவன் பார்வை படிந்ததில் அவள் லஜ்ஜையுற்றாள்..
"வண்ணப் பூச்சேலை..
             மலர்மேனி அணிகின்றது..
    அதைப் பூங்காற்று..
             மெதுவாக இழுக்கின்றது.."
பாடல் தொடர்ந்து கொண்டிருக்க மெல்லிய சீழ்க்கையொலியுடன் அதை ரசித்தவன்..
"பாட்டு நல்லாயிருக்கில்ல..?" என்று கேட்டான்..
"ம்ம்ம்.." அவள் முணுமுணுத்தாள்..
"ஆக்சுவலா நான் இதைப் போல வெளியில் வந்ததில்ல.. ஐ மீன்.. ஒரு பெண்ணோடு வெளியில் வந்ததில்ல..."
"நானும்தான்..."
அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியாமல் சாருலதா நிறுத்தி விட்டாள்.. அவன் மேலே பேச வேண்டுமே என்று அவள் மனம் தவித்தது....
"போகலாமா.." சட்டென்று அவன் கிளம்பியதும் அவள் ஏமாற்றமாக உணர்ந்தாள்...
அவன் என்ன சொல்ல வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கிறாள்..?
"ஒரு பொய்யாவது..
             சொல் கண்ணா..
    உன் காதல் நான்தானென்று..
             அந்தச் சொல்லில் உயிர்வாழ்வேன்.."
அவள் மனதை அறிந்ததைப் போல அடுத்த பாடல் காற்றில் வர.. அவள் அதிர்ந்து போனாள்...
இதைத்தான் அவள் அவனிடமிருந்து எதிர் பார்க்கிறாளா..?
அவளின் மனப் போராட்டத்தை அறியாதவனாக ஆத்மா அவளுக்காக கார்கதவைத் திறந்து விட்டான்...
'அவ்வளவுதானா..?'
விம்மும் மனதுடன் காரில் ஏறினாள் சாருலதா...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,27,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-15
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-15
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-15.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-15.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy