மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-14

14 கம்யூட்டரை ஊன்றிப் கவனித்தாள் சாருலதா.. கணக்குப் பிசகியிருப்பதைப் போல அவளுக்குத் தோன்றிது.. வேலையை ஆரம்பிக்கும் போது அவள் இதைக் கவ...


14

கம்யூட்டரை ஊன்றிப் கவனித்தாள் சாருலதா.. கணக்குப் பிசகியிருப்பதைப் போல அவளுக்குத் தோன்றிது.. வேலையை ஆரம்பிக்கும் போது அவள் இதைக் கவனிக்கவில்லை.. எந்த இடத்தில் பிசகு ஏற்பட்டிருக்கிறது என்ற யோசனையுடன் திரும்பியவளின் பார்வை.. யதேச்சையாக அவள் பக்கமாக பார்த்த ஆத்மாராமின் பார்வையைச் சந்தித்தது.. சாருலதாவுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தது...
அவள் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.. முதல் நாளில் அவளைத் தாங்கிப் பிடித்த கைகளின் வலிமையும்.. ஸ்பரிசமும் தேவையில்லாமல் நினைவுக்கு வந்து தொலைத்தது...
சாருலதா மனதை அடக்க முயன்றாள்.. அவன் பக்கம் பார்க்காமல் கம்யூட்டரின் திரையில் கவனமானாள்.. அவனோ யதேச்சையாக பார்த்ததைப் போல இல்லாமல்.. உண்மையாகவே அவளை ஊன்றிப் பார்த்தான்...
அவன் பக்கம் திரும்பாமலிருக்க அவள் முயன்று கொண்டிருப்பது பட்ட வர்த்தனமாக தெரிந்தது.. அவளின் அந்த மனப் போராட்டத்தை அவளின் படபடக்கும் இமைகளும்.. லேசாக நடுங்கிக் கொண்டிருந்த தளிர் விரல்களும் சொல்லியதில் ஆத்மாவின் மனது அலை பாய்ந்தது...
சாருலதா.. பிங்க் வண்ண சல்வாரில் இருந்தாள்.. முடியை தளர்வாகப் பின்னலிட்டிருந்தாள்.. இடுப்பு வரை நீண்டிருந்த பின்னல் அவள் கூந்தலின் அடர்த்தியைச் சொன்னது.. தந்தத்தினால் ஆன கைகள் என்று அவன் நினைத்துக் கொண்டான்.. அந்தக் கைகளால் அவனை இறுகப் பற்றியிருந்தாளே என்று நினைத்தவனின் காது மடல்கள் சூடாகின...
அன்றைய நாளுக்குப் பின்னால் ஆத்மா அவளிடம் வம்பு வளர்க்கவில்லை.. அவளும் அவனிடம் முறைத்துக் கொண்டிருக்கவில்லை.. எதுவும் நடக்காததைப் போல அவளும்.. உணர்வுகள் துடைத்த முகத்துடன் அவனும்.. ஒருவரையொருவர் எதிர் கொண்டனர்..
பார்த்துக் கொண்டிருந்த வேலை சம்பந்தமாக மட்டுமே அவன் பேசினான்.. அவள் கேட்டுக் கொண்டாள்.. அதிகப்படியாய் ஒரு வார்த்தைகூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை..
ஆனால்.. இருவரும்.. சொல்லில் அடங்காத ஏதோ ஒர் உணர்வை.. உணர்ந்தார்கள்.. பெண்களிடம் மோதும் ஆத்மா... சாருலதாவிடம் மௌனம் சாதித்தான்.. அதை மற்ற பெண்கள் வியந்தபோது.. சாருலதாவின் மனதில் ஒர் சொந்தம் தோன்றியது...
வேலையின் இடையே இயல்பாக சந்தித்து மீளும் பார்வைகள் விலக முடியாமல் துடிப்பதை அவர்கள் இருவருமே அறிந்திருந்தார்கள்.. இதைப் பற்றி ஆத்மா சுதாகரனிடம் சொன்னபோது அவன் கண்சிமிட்டி...
"என்னடா கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிருச்சா.." என்று கேட்டு வைத்தான்..
"உளராதே..." என்று சொல்லி விட்டான் ஆத்மா...
"அந்தப் பெண்ணை லவ்..கிவ் பண்ணுறயா..?"
"ஒரு மண்ணும் இல்லை..."
இப்படிச் சொல்கிறவன் எதற்காக அவளைப் பார்வையிலேயே சாப்பிட்டு வைக்கிறான் என்பது மட்டும் அவனுக்கே புரியவில்லை...
சாருலதாவிடம் தெறித்து வரும் மென்மை.. அவளின் பயந்த சுபாவம்.. யாருக்கும் இடையூறு விளைவிக்காத குணம்.. அதீத அழகு என்று ஒவ்வொன்றும் அவனை ஆகர்ஷித்து அவள் பக்கமாக அவனை இழுத்தது...
இருந்தும் அவன் அதை மறைத்தான்.. அவளைப் பார்ப்பதில் உள்ள தனி சுகத்தை உணர்ந்தவனுக்கு அதை ஒப்புக் கொள்வதில் என்ன தடையென்று அவனாலேயே சொல்ல முடியவில்லை..
"சார்.." சாருலதா தலை நிமிராமல் அவனை அழைத்தாள்...
"யெஸ்.." அவன் சுழல் நாற்காலியில் சுழன்று அவள் பக்கமாக திரும்பினான்...
"சம்திங் ராங்.. புரெஜெக்ட்டில் எங்கேயோ இடிக்குது.. சம் டேலி ஆக மாட்டேங்குது..."
சாருலதா நெற்றிப் பொட்டை ஒரு விரலால் அழுத்தியபடி சொல்ல.. ஆத்மா அவன் இடத்தை விட்டு எழுந்தான்.. அவளருகே வந்தான்.. அவள் கழுத்தருகே குனிந்து கம்பூட்டரின் திரையைப் பார்த்தான்..
அவன் புரொஜெக்டில் கவனமாக இருக்க.. சாருலதா அவனின் மூச்சுக்காற்று.. அவள் கழுத்தில் படிவதை உணர்ந்தாள்.. அவளுக்குள் அலையடித்தது.. அவனின் பிரத்யேக வாசனையை நுகர்ந்தவளின் மனம் படபடத்தது..
"இந்த ஃபிகரைக் கொண்டு வா..."
ஆத்மா அவளின் தோள் வளைவில் கையைச் செழுத்தி கம்யூட்டரின் மவுசைப் பிடிக்க முயன்ற போது அவளும் அதைக் கைப்பற்றியிருந்தாள்.. அவளின் கைமீது அவன் கை படிய.. சாருலதாவின் விரல்கள் நடுங்கி விலகின... ஆத்மா ராமின் மனம் புரொஜெக்டிலிருந்து வெளியே வந்து அவளின் அருகாமையை உணர்ந்தது...
வேலையின் நினைவில் அவளுக்கு நெருக்கமாக நின்று அவள் முகத்தருகே முகம் வைத்து அவன் குனிந்திருந்தான் அவளின் கூந்தலின் வாசனையை முகர்ந்தவனின் மனம் கிளர்ந்தது...
அவளின் வழவழப்பான கன்னத்தில் அவன் மீசை லேசாக உராய்ந்து விட.. தாள முடியாத தவிப்போடு அவள் எழுந்து விட்டாள்...
ஏதோ குற்றம் புரிந்தவனைப் போல ஆத்மா அவசரமாக விலகி வழி விட்டான்...
"ஸாரி.." என்று வாய்க்குள் முணுமுணுத்தான்..
'எதுக்கு ஸாரி கேட்கிறான்..?'
அவன்மீது யாதொரு தவறும் இல்லையே என்ற நினைவில் சாருலதா உதட்டைக் கடித்தாள்.. இப்போது என்ன செய்வது என்று ஆத்மா யோசித்தான்... அவள் இருக்கையில் உட்காருவதா.. இல்லை.. அவளே பிழையைக் கண்டுபிடித்துத் திருத்திக் கொள்ளட்டும் என்று போய் விடுவதா என்ற கேள்வி அவனுக்குள் முளைத்தது...
அப்படிப்போய் விட்டால் அவள் என்ன நினைப்பாள்..? அவன் பக்கத்தில் நின்று உராய்வதை அனுமதிக்காததினால்தான் அவன் போய்விட்டான் என்று நினைத்துக் கொள்ள மாட்டாளா...?
ஆத்மா அவளின் இருக்கையில் உட்கார்ந்து கம்யூட்டரின் மவுசைக் கைப்பற்றினான்.. அவன்
முகத்தில் தெரிந்த தீவிரத்தையும்.. பார்வையில் தெரிந்த கூர்மையையும் கவனித்தபடி சாருலதா நின்றிருந்தாள்..
"கேட்ச் இட்.." என்றான் ஆத்மா..
"வாட் சார்..?" சாருலதா திரையைப் பார்த்தாள்..
ஆத்மா தவறைக் கண்டு பிடித்திருந்தான்..
'எப்படி..?' அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது...
அவளும்தான் மூளையைக் கசக்கிப் பிழியாத குறையாக கம்யூட்டருடன் மல்லுக் கட்டினாள்.. அது மசியவில்லை.. அவன் உட்கார்ந்து ஒரு நிமிடம் ஆவதற்குள் தவறைக் கண்டுபிடித்து விட்டானென்றால்.. அதை என்னவென்று சொல்லுவது..?
"நத்திங் டு வொர்ரி.. நீங்க இந்த ஃபிகரை இந்த காலத்தில போஸ்ட் பண்ணியிருக்கக் கூடாது.. இதுக்கான காலமே வேற..."
ஆத்மா பிழையை சரி செய்துவிட்டு பொறுமையாக அவளுக்கு அந்தப் பிழையைத் தவிர்க்கும் முறையைச் சொல்லிக் கொடுத்தான்.. சாருலதா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டாள்.. அவனின் கம்யூட்டர் துறையின் திறமை அவளை வசீகரித்தது....
"இனி இதை ஃபாலோ பண்ணு.." ஆத்மா எழுந்து கொண்டான்...
சாருலதா.. அவனை மறந்து போனவளாக அவசரமாக நாற்காலியில் உட்கார்ந்தாள்.. எந்த இடத்தில் ஓட்டை விழுந்தது என்பதைக் கண்டு பிடித்து விட்ட உற்சாகம் அவளுக்கு.. முகத்தில் மலர்ச்சியுடன் கம்யூட்டரின் திரையைக் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போல ஆத்மாவிற்குத் தோன்றியது...
அவன் சுழல் நாற்காலிக்கு திரும்பி வந்தான்.. இப்போது வேலை செய்ய வேண்டும் போல அவனுக்கு இருக்கவில்லை.. அவளை நோட்டமிட்டபடி ஊடும் பாடும் கம்யூட்டரின் திரையைக் கவனித்துக் கொண்டிருந்தான்..
"சார்.. ஐ பினிஷ் திஸ்.." சாருலதா உற்சாகமாக கூவினாள்..
"ரியலி.." ஆத்மா எழுந்து வந்து பார்த்தான்...
தேர்வு எழுதிய மாணவி முடிவை எதிர்பார்த்து தவிப்புடன் காத்திருப்பதைப் போல.. அவனின் முடிவைத் தெரிந்து கொள்வதற்காக இதயம் படபடக்க.. அவன் முகத்தையே பார்த்தபடி காத்திருந்தாள் சாருலதா...
ஆத்மா புரொஜெக்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அக்கு வேறு.. ஆணி வேறாக.. அலசி ஆராய்ந்து பார்த்தான்.. எந்த இடத்திலும் குண்டூசி அளவுகூட குறை காண முடியாத அளவில் புரொஜெக்ட் மிகத் தெளிவாக முடிக்கப் பட்டிருந்தது...
"யு டிட் இட்.. வெரிகுட்.." மனதாரப் பாராட்டினான்..
"சார்.." சாருலதா திணறி விட்டாள்..
கண்கள் பனிக்கப் பேச்சு வராமல் தடுமாறியவளைப் பார்க்க புதிதாக இருந்தது ஆத்மாவிற்கு..
'ஏன் இப்படி எமோசனல் ஆகிறா..'
அவனுக்கென்ன தெரியும்..? அவன் சொன்ன வார்த்தைகள் விசுமாத்திரரைப் பார்த்து பிரம்மரிஷி என்று வசிஷ்டர் சொன்ன வார்த்தைகள் என்று..
"உனக்கு இது பர்ஸ்ட் புரொஜெக்ட் இல்லையா..?"
"ஆமாம் சார்.."
"கன்கிராஜீலேசன்ஸ்..."
அவன் அவளுக்கு வாழ்த்துச் சொன்னதை அவளால் நம்பவே முடியவில்லை.. அவனா அவளுக்கு வாழ்த்துச் சொல்வது..?
"உன் பர்ஸ்ட் புரொஜெக்டைப் போலவே தோணலை.. எவிஷியன்டா வொர்க் பண்ணின.. ஐ அப்ரிஷியேட் இட்.."
இறக்கையில்லாமல் வானத்தில் பறந்தாள் சாருலதா.. மதிய உணவின் போது இந்த விவரத்தை முகம் விகசிக்க தோழிகளுடன் அவள் பகிர்ந்து கொண்டபோது...
"பொய் சொல்லாதே.." என்றுதான் அவர்கள் சொன்னார்கள்..
"பிராமிஸ் காவ்யா... அவன்தான் சொன்னான்..."
"இருக்காதே.. அவன் அப்படியெல்லாம் வாய்விட்டு லேடிஸை பாராட்ட மாட்டானே..."
"நம்புடி.. அவன் பாராட்டினான்..."
சாருலதாவிற்கு அவளுடைய முதல் புரொஜெக்ட் வெற்றிகரமாக முடிந்து விட்டது என்பதைவிட.. அவனிடமிருந்து அதற்கான பாராட்டுக் கிடைத்தது என்பதுதான் பெரிதாக இருந்தது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-14
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-14
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-14.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-14.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy