மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...-13

13 ஆத்மா... வீட்டுப் போர்டிகோவில் காரை நிறுத்தி விட்டு வீட்டுப்படியேறினான்.. காலிங் பெல்லை அடித்தான்.. கதவைத் திறந்து விட்ட பார்வதியி...


13

ஆத்மா... வீட்டுப் போர்டிகோவில் காரை நிறுத்தி விட்டு வீட்டுப்படியேறினான்.. காலிங் பெல்லை அடித்தான்.. கதவைத் திறந்து விட்ட பார்வதியின் கண்கள் கலங்கியிருந்தன.. உள்ளேயிருந்து வந்த சப்தம் அவள் எதற்காக அழுகிறாள் என்பதைக் கூறியது...
"வரவர இந்த வீட்டில இருக்க முடியாம ஆகிக்கிட்டு வருது.. வாயைத் திறக்கவே முடியல.. நின்னாக் குத்தம்.. உட்கார்ந்தா குத்தம்.. போதும்டா சாமி.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் கல்யாணம் பண்ணிக்காம கன்னியாவே என் பிறந்த வீட்டில காலத்தைக் கடத்தியிருப்பேன்..."
ஆத்மாராம் பல்லைக் கடித்தான்.. இந்தச் சப்தத்திலிருந்து தப்பித்து ஒரு வருட காலம் நிம்மதியாக இருந்த நினைவு அவனுக்கு வந்தது.. திரும்பி வந்திருக்கக் கூடாதுதான்.. ஆனால் அவனைப் பெற்றவர்கள் இங்கேயிருந்து அசைய மறுக்கிறார்களே.. அவர்களின் முகத்துக்காக அவன் வந்துதானே ஆக வேண்டியிருக்கிறது..
"அவங்க சொல்றதிலயும் ஒரு நியாயமிருக்கில்ல.." பார்வதியிடம் கேட்டான்...
"நீயும் ஏண்டா இப்படி சோதிக்கற..?" பார்வதி பரிதாபமாக சொன்னாள்..
"பின்னே என்னம்மா..? கன்னியாவே இருக்கிறது மேல்ன்னு நினைக்கிறவங்களைப் பிடிச்சு அண்ணன் தலையில கட்டி வைச்சா அவங்களும்தான் என்ன பண்ணுவாங்க.. அவங்க ஆசைப்படி விட்டிருந்தா அண்ணனும் நிம்மதியா இருந்திருப்பான்.. நீங்களும் நிம்மதியா இருந்திருப்பீங்க..."
"மகராசி வாயைத் திறந்தா மூட மாட்டேன்கிறா.. உன் அண்ணனுக்கு அவளை அடக்க முடியல..."
"துப்பு இல்லன்னு சொல்லுங்க..."
"நீ வேற ஏண்டா இப்படிப் பேசி என் உயிரைக் குறைக்கிற...?"
"அந்த வேலையை நான் செய்யல.. உங்க மருமகதான் செய்யுறாங்க..."
ஆத்மா கோபத்துடன் மாடியேறினான்.. ஹாலில் அமர்ந்திருந்த சங்கரன் காதுகளுக்கு பஞ்சைக் கொடுத்திருந்தார்..
'ம்ஹீம்.. நெருப்புக் கோழி மணலில் தலையைப் புதைத்துக்கிறதைப் போல இவர் காதுல பஞ்சை வைச்சு அடைச்சுக்கிறாரு...'
மாடியில் சீத்தாராமின் அறையைக் கடக்கும் போது உள்ளே எதுவோ உடை படும் சப்தம் கேட்டது...
'இது வேறா...' என்று நினைத்துக் கொண்டான்..
நிச்சயமாக எதையும் சீத்தாராம் உடைத்திருக்க மாட்டான்.. என்பது ஆத்மாவிற்குத் தெரியும்...
அந்த வீட்டில் கத்துவதும்.. உடைப்பதும் சீத்தாராமின் மனைவியான நித்யாவின் கைங்கர்யம்தான்.. சீத்தாராம் பாவம் அதிர்ந்து கூடப் பேச மாட்டான்.. அவன் ஒரு வாயில்லாப்பூச்சி...
இப்படிப்பட்ட ஜீவனுக்கு திருமணம் என்ற ஒன்றைப் பண்ணி வைத்திருக்கக் கூடாது என்பது ஆத்மாராமின் கூற்று.. அதை யார் கேட்கிறார்கள்..? அமைதியாக இருக்குமிடம் தெரியாமல் இருந்த சீத்தாராமுக்கு நித்யாவைத் தேடிப் பிடித்துத் திருமணம் செய்து வைத்தார்கள்...
சும்மா சொல்லக்கூடாது.. பெண் பார்க்கப் போன போது.. குனிந்த தலை நிமிராமல் அப்படியொரு சாதுப் பெண்ணாக அவள் இருந்தாள்.. மணமேடையில் மணமகனின் முகம் பார்த்து மாலை மாற்றக் கூட வெட்கப் பட்டாள்..
"உன் அண்ணனுக்கு ஏத்த பொண்ணுடா.." பார்வதி பூரித்துப் போனாள்..
"வாயை திறக்க மாட்டேங்குது.. மகாசாது.." சங்கரன் சான்றிதழ் வழங்கினார்...
திருமணம் முடிந்து வலது காலை எடுத்து வைத்து நித்யா அந்த வீட்டிற்குள் நுழைந்தாள்.. மறு வீட்டு விருந்துக்கு சென்றவள் சீர்வரிசையுடன் திரும்பி வந்தாள்.. மருமகள் கொண்டு வந்த சீர்வரிசைப் பொருள்களில் ஒன்றை எடுத்துப் பார்த்த பார்வதியிடம்..
"என்ன பார்க்கறிங்க..?" என்று கேட்டாள்...
"சும்மாதான் பார்க்கறேன்ம்மா..."
"சும்மா பார்க்க இதையென்ன மியுஸியத்திலயா வைச்சிருக்கு.. இதோட எடை எவ்வளவு..? விலை எவ்வளவுன்னு கணக்குப் போட்டுப் பார்க்கத்தானே கையில எடுத்திங்க..?"
"சத்தியமா இல்லைம்மா..."
"சத்தியம்ன்னா உங்களுக்கு சக்கரைப் பொங்கலா..? பொய் சத்தியம் பண்ணத் துணிஞ்ச நீங்க எதுக்குத்தான் துணிய மாட்டிங்க..?"
நித்யா வாய்க்கு வந்தபடி கத்த ஆரம்பித்தாள்.. மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கப் போயிருந்த சங்கரன் தெரு முனையில் திரும்பும் போதே நித்யாவின் சப்தத்தைக் கேட்டு விட்டார்...
"என்ன சங்கரா.. உன் மருமக வாயே பேசாதுன்னு பெருமை பேசின.. ஒரு மணி நேரமா பேசித் தள்ளுது.. வாயை மூட மாட்டேங்குது.." எதிர் வீட்டு கனகராஜ் கேலியாக கேட்டார்...
அந்த கோபத்துடன் உள்ளே வந்த சங்கரன் விவரத்தை மனைவியிடம் கேட்டறிந்து விட்டு...
"நீயேண்டி அதைத் தொட்டுப் பார்த்த..?" என்று மனைவியைக் கேட்டு விட்டார்...
அதுவரை பார்வதியின் பக்கம் பாய்ந்து கொண்டிருந்த பாட்டு சங்கரனின் பக்கம் திரும்பி விட்டது...
"அடேங்கப்பா.. இதைக் கையில் தொடக் கூடாதோ..? நான் கொண்டு வந்த சீரைப் பார்த்தா அவ்வளவு இளக்காரமா இருக்கா..? இதைவிட உசத்தியாத்தான் உங்க பெண்டாட்டி சீர் கொண்டு வந்தாங்களா..?" என்று பொரிந்து தள்ளிவிட்டாள்... நித்யா...
அதைப் பார்த்துக் கொண்டும்.. கேட்டுக் கொண்டும் சீத்தாராமினால் பேசாமல் இருக்க முடியவில்லை...
"அப்பா.. அம்மாகிட்ட மரியாதையில்லாம பேசலாமா நித்யா..?" என்றுதான் அவன் கேட்டான்...
அந்த ஒரு கேள்விக்கு ஊரைக் கூட்டி நியாயம் கேட்டு விட்டாள் அவன் மனைவி...
"அப்ப அவங்க பேசறதுதான் நியாயம்.. நான் பேசறது அநியாயமா..? அவங்க பேசறதை ஏன்னு நான் கேட்கக்கூடாது..? அவங்க என்ன வேணும்னாலும் பேசுவாங்க.. அதை நான் கேட்டுக்கிட்டு இருக்கனும்.. அப்படித்தானே.. என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது.. நான் போறேன் எங்க வீட்டுக்கு..."
பிறந்த வீட்டுக்குப் போனவள் என்ன சொன்னாளோ.. ஏது சொன்னாளோ.. அவளைப் பெற்றவர்கள் சொந்த பந்தங்களைத் திரட்டிக் கொண்டு ஒரு படை போல வந்து இறங்கிவிட்டார்கள்...
ஆளாளுக்கு ஒரு நியாயத்தைப் பேசி காச்.. மூச்சென்று கத்தியதில் சீத்தாராம் இனி வாயே திறக்க மாட்டேன் என்ற உத்திரவாதத்தை அவர்களுக்கு கொடுத்தான்...
"நீ ஏம்மா ஓடி வர்ற..? இது உன் வீடு.. எதுனாச்சும் பிரச்னைன்னா ஒரு போனைப் போடு.. நாங்க வந்து இறங்கறோம்..." என்று நித்யாவிற்கு தைரியம் கொடுத்து விட்டு அவளின் பிறந்த வீடு சென்றது...
அதற்குப் பின்னால் அந்த வீட்டில் நித்யா வைத்தது தான் சட்டம் என்று ஆகிவிட்டது.. அதிர்ந்து பேசாத சீத்தாராம் மனைவி வாயைத் திறந்தாலே அரள ஆரம்பித்தான்...
மகனுக்கு தைரியம் கொடுத்து ஆகப் போவது ஏதுமில்லை என்ற நிராசையில் சங்கரனும்.. பார்வதியும் வாயை மூடிக் கொண்டு வாழப் பழகி விட்டார்கள்...
ஆத்மாராமினால் இந்தக் கண்றாவிகளைக் கண் கொண்டு பார்ப்பதற்கும்.. காது கொடுத்துக் கேட்பதற்கும் சகிக்கவில்லை.. அதனால் அவன் பெரும்பான்மையான பொழுதை வீட்டுக்கு வெளியே கழித்து விட்டு.. தூங்க மட்டும் வீட்டுக்கு வருவது என்று பழக்கிக் கொண்டான்...
இதில் ஆத்மாராம் ஆச்சரியப்பட்டுப் போன ஒன்று எதுவென்றால்.. இந்த லட்சணத்தில் குடும்ப வாழ்வை நடத்தியும்.. சீத்தாராம் ஒரு குழந்தைக்கு தகப்பனாகி விட்டதுதான்...
பேத்தி பிறந்த ஒரு வருடத்தில் ஆத்மாராமைப் பெற்றவர்கள் அவனுக்குப் பெண் தேட ஆரம்பித்தார்கள்...
"பட்டது போதாதா..?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டான் ஆத்மா...
"அதுக்காக கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்றதும் சரியில்லைடா.." சங்கரன் புரிய வைக்க முயன்றார்...
"இந்தப் பேச்சைப் பேசுனீங்கன்னா.. தூங்கக்கூட வீட்டுப்பக்கம் வரமாட்டேன்..."
ஆத்மாராம் பயமுறுத்தியதில் சங்கரனும்.. பார்வதியும் மௌனமாகிப் போனாலும்.. பார்வதியின் புலம்பலைக் கேட்க முடியாத சங்கரன்.. அடிக்கடி ஆத்மாராமிடம் திருமணப் பேச்சை எடுத்து விட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளுவார்...
"உங்களையெல்லாம் ஏழுகடல் ஏழுமலை தாண்டிக் கொண்டு போய் போட்டு விட்டு வரனும்.." ஆத்மா சீறுவான்..
அவனின் கோபத்துக்கு பயந்து அப்போதைக்கு அவர் வாயை மூடிக் கொள்வார்...
சீத்தாராமின் அறைக் கதவு திறந்தது... கோபாவேசத்துடன் வெளியே வந்த நித்யாவை முறைத்தபடி ஆத்மா அவனுடைய அறைக்குள் நுழைந்தான்...
அவன் நித்யாவுடன் பேசமாட்டான்.. எப்போது அவள் அந்த வீட்டையும்.. வீட்டிலிருந்த மனிதர்களையும் மரியாதைக் குறைவாய் பேச ஆரம்பித்தாளோ.. அப்போதிருந்து அவன் அவளுடன் பேசுவதை நிறுத்தி விட்டான்...
அவனைக் கண்டதும் அதிகமாக கத்திய நித்யாவின் சப்தம் காதுகளுக்கு கேட்காதபடி கதவை இறுக அடைத்தவன்... குளியலறைக்குள் புகுந்தான்... உடை மாற்றி படுக்கையில் விழுந்தவனுக்கு பெண்ணென்றால் மாயப் பிசாசு என்று தோன்றியது...
அவன் கண்மூடி உறங்க முயன்ற போது.. சாருலதாவின் மென்மையான அமைதி தவழும் முகம் வந்து கண்களுக்குள் நின்றது.. நானும் பெண்தானே.. நான் மாயப்பிசாசா..? என்று கேட்டது...
ஆத்மா உறக்கம் வராமல் புரண்டு படுத்தான்...
"எஸ்.பி.யோட பொண்ணுடா.. அவ அப்பா என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்.. அவ கொண்டு வந்த ஹேண்ட் பேகிலதான் ஸ்கூட்டியோட சாவியை வைச்சிருந்திருக்கிறா.. பணமும் அதில்தான் இருந்திருக்கு.. பையும் இல்லாம.. ஸ்கூட்டியும் இல்லாம ஒரு ஆட்டோவைப் பிடிச்சு வீட்டில போய் இறங்கி நின்னு.. அவங்ககிட்ட ஆட்டோவுக்கான பணத்தை வாங்கிக் கொடுத்தா.. அவங்க என்ன ஏதுன்னு கேட்க மாட்டாங்களா..?"
சுதாகரன் சொன்னது மனதில் ஒலித்தது.. ஆத்மா தூக்கம் பிடிக்காமல் கட்டிலில் எழுந்து அமர்ந்தான்...
'ஏன் அவ.. நான் செஞ்சதை அவ வீட்டுக்கும்.. பிரண்ட்ஸீக்கும் சொல்லாம மறைச்சா..?'
அவனுக்குள் கேள்வி எழுந்தது.. தேவையில்லாமல் அவன் கைவளைவில் சாய்ந்திருந்த அவளின் தோற்றமும் நினைவுக்கு வந்து தொலைத்தது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...-13
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...-13
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy