மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...-11

11 சுதாகரன் ரொட்டியை மறந்தான்.. புருவங்கள் முடிச்சிட.. "என்னடா.. ?" என்று வினவினான்... "அவதாண்டா.." என்று அ...


11

சுதாகரன் ரொட்டியை மறந்தான்.. புருவங்கள் முடிச்சிட..
"என்னடா..?" என்று வினவினான்...
"அவதாண்டா.." என்று அலட்சியமாக சொன்னான் ஆத்மாராம்..
"என்ன பண்ணிட்டு வந்திருக்க..?"
"ரூமைப் பூட்டிட்டு வந்தேன்..."
"எப்படா..? எதுக்குப் பூட்டின..? அந்தப் பெண்ணும் உன் ரூமில்தானே வொர்க் பண்ணிக்கிட்டு இருந்துச்சு..?"
கேட்டுக் கொண்டே வந்த சுதாகரனின்.. மனதில் மின்னலடிக்க.. அவன் பதட்டத்துடன்...
"ஏண்டா.. அந்தப் பெண்ணை ரூமுக்குள் வைச்சா பூட்டிட்டு வந்த..?" என்று கேட்டான்...
ஆத்மாராம் நண்பனைப் பார்த்த பார்வையில் எரிச்சல் நர்த்தனமிட்டது...
"ஆனாலும் உனக்கு என்மேல் ரொம்பவும் உசத்தியான அபிப்ராயம்டா சுதா.." என்றான்..
'அப்பாடி..! இவன் அந்தப் பெண்ணை ரூமுக்குள் வைத்துப் பூட்டலை...' ஆசுவாசமடைந்த சுதாகரன்..
"உன்னைப் பத்தித்தான் ஒரு முடிவுக்கும் வர முடியலையேடா ஆத்மா.." என்று அங்கலாய்த்தான்...
"அவளைத்தான் உள்ளே வைச்சுப் பூட்டல.. அவ திங்ஸை உள்ளே வைச்சுப் பூட்டிட்டேன்..."
"அடப்பாவி ஆத்மா.. ஏண்டா அப்படிச் செஞ்ச..?"
"பின்னே..? என்னவோ நான் அவ கையைப் பிடிச்சு இழுத்திட்டதைப் போல முகத்தை உம்முன்னு வைச்சுக்கிறா.. தலையைப் பிடிச்சுக்கிட்டே உட்கார்ந்-திருந்தவ.. எழுந்திருச்சு வெளியே போகப் போனா.. நான் எங்கே போறன்னு கேட்டா.. பதிலே சொல்லாமப் போயிட்டாடா.. எனக்கு எப்படியிருந்திருக்கும்..?"
"ரூமை இழுத்துப் பூட்டனும் போல இருந்துச்சாக்கும்..? ஏண்டா அவளே தலையைப் பிடித்துக்கிட்டு உட்கார்ந்திருக்கிறா.. தலைவலிக்கு சூடா காபியைக் குடிக்கலாமுன்னு கேண்டின் பக்கம் போயிருக்கலாமில்ல...?"
"அந்தக் கழுதைக்குத்தான் போயிருக்கா..."
அலட்சியமாக சொல்லியபடி.. ரொட்டியை வெட்டிக் கொண்டிருந்தவனை ஏக்கத்துடன் பார்த்தான் சுதாகரன்..
அங்கே ஒரு பெண் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் செல்ல முடியாமல் உட்கார்ந்திருக்கிறாள்.. அதற்குக் காரணமான இவனோ.. ஹோட்டலில் ரொட்டியையும் சிக்கனையும் வெட்டோ வெட்டென்று வெட்டிக் கொண்டிருக்கிhறன்.. இவனால் எப்படி இதைச் செய்ய முடிகிறது.. சுதாகரனால் பிய்த்த ஒரு துண்டு ரொட்டியை வாய்க்குள் போட முடியவில்லையே...
'இதைத்தான் ரோம் மன்னன் பிடில் வாசித்த கதைன்னு சொல்லி வைச்சிருக்காங்க போல...'
சாப்பிட முடியாத ரொட்டியை ஏக்கத்துடன் பார்த்தபடி பெருமூச்சு விட்டான் சுதாகரன்...
அவன் பாவம்.. மெல்லிசையைப் போல மெல்லிய மனம் கொண்டவன்.. தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவன்.. தாய்க்குப் பின் தாரமாக வந்த மனைவியின் அன்பிலும்.. காதலிலும் கட்டுண்டு நிற்பவன்.. போதாக்குறைக்கு அவன் பெற்றதும் பெண்குழந்தை...
இப்படிப்பட்ட சுதாகரனுக்கு.. பெண்களின் மீது என்றுமே இயல்பாக பரிவும்.. பாசமும் பொங்கும்.. அவர்களின் மனம் நோக அவன் பேச மாட்டான்.. அவன் முன்னால் நின்று ஒரு பெண் ஒரு சொட்டுக் கண்ணீரை உகுத்து விட்டால்.. பதறிப் போய்.. அவள் என்ன குற்றம் செய்திருந்தாலும் மன்னித்து.. மறந்து விடுவான்...
பெரிய நிறுவனத்தில் மேனேஜராகப் பணி புரிபவனின் இந்த இரக்க சுபாவத்தை பயன்
படுத்திக் கொள்ளும் பெண் குலம்.. அரக்கப் பறக்க அலுவலகத்திற்கு ஓடிவர வேண்டிய அவசியமில்லாமல் விச்ராந்தியாக கிளம்பி வருவார்கள்...
"நம்ம சுதா சார்டி.. ஒன்னும் சொல்ல மாட்டார்..."
இப்படி.. பெண்களைக் காக்கும் ஆபத்பாந்தவன்.. அனாதைரட்சகனுக்கு வாய்த்திருந்த நண்பனான ஆத்மாராமுக்கு பெண்களைக் கண்டால் அறவே பிடித்துத் தொலைக்காது என்பதுதான் விசித்திரத்திலும் விசித்திரம்.. வாழ்க்கை இது போன்ற விசித்திரங்களை அள்ளி வழங்கக் கூடியதுதான் என்றாலும் அதை சுதாகரனுக்கு ஏன் வழங்கியது என்றுதான் அவனுக்குப் பிடிபட வில்லை...
"உனக்கே தெரியுதில்ல.. அப்புறமும் எதுக்காக அந்தக் கேள்வியைக் கேட்ட..? இது உனக்கே ஓவராத் தோணலையா..? ஏண்டா.. நீ ஒரு என்ஜினியர்.. அதிலும் டீம்லீடர்... கனடா அது.. இதுன்னு வெளிநாடுகளுக்குப் பறக்கிறவன்.. உனக்குக் கீழே வொர்க் பண்ணுகிற
ஒரே காரணத்துக்காக அந்தப் பெண்ணை எல்.கே.ஜி பாப்பாவைப் போல ட்ரீட் பண்ணியிருக்கயே.. இது நல்லாவாடா இருக்கு..?"
"எனக்கு நல்லாத்தான் இருக்கு..."
"உனக்குத்தானே..? இருக்கும்.. இருக்கும்..."
"நான் எதுக்காகடா அவளை கேள்வி கேட்டேன்..?"
"எதுக்குன்னு எனக்கு எப்படித் தெரியும்..? நீ சொன்னாத்தான் தெரியும்.. நீ சொல்லுவியா..?"
"சொல்லுவேண்டா.. நீ யாரு..."
"சுதாகரன்..."
"ஊஹீம்.. என் நண்பேன்டா.."
"இதைச் சொல்லியே என் வாயை அடைச்சிரு..."
"போன் பண்ணினா அவ டேபிளுக்கு காபி வரும்.. இதுக்குப் போய் அவ எழுந்திருச்சுப் போவானேன்னு தான் கேள்வி கேட்டேன்..."
"ஏண்டா இப்படி இருக்க..? காபி குடிக்கப் போகிறவ.. கேண்டினுக்கு மட்டும்தான் போவாளா..? பாத்ரூம் போகக்கூட உன்னிடம் பெர்மிசன் கேட்கனுமா...?"
சுதாகரன் தலையில் அடித்துக் கொள்ள.. ஆத்மாராம் யோசித்தான்...
"அப்படி ஒன்னு இருக்கோ..."
"பின்னே..? இருக்காதா..? இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவையாவது நீ பாத்ரூம் போவியா இல்லியா..? அதுக்கு நீ யார்கிட்டப் பெர்மிசன் கேட்கிற..?"
"எனஃப்.. எனஃப்.. நான் இந்த ஆங்கிளில் யோசிச்சுப் பார்க்கலை.. என்னவோ நான் வேணும்னே அவளைக் கட்டிப் பிடிச்சதைப் போல சீன் கிரியேட் பண்ணினாளா.. எனக்கு அந்தக் கோவம்.."
'அடிப்படையில் இவன் நல்லவன்..' சுதாகரனின் மனம் நெகிழ்ந்தது...
ஆத்மாராமின் மனதைப் பற்றி யாருக்குத் தெரியும்..? அது சுதாகரனுக்கு மட்டும்தான் தெரியும்..
"உனக்கே பெண் வாசனை ஆகாதில்ல.. நீ என்ன அலுவலுக்கு உன் கண் முன்னாலே அந்தப் பெண்ணை வொர்க் பண்ண வைச்ச..?"
"ஏய்ய்.. அவ டிரெய்னிடா..."
"அதுக்கு..? நீ அவ கையைப் பிடிச்சு.. கம்யூட்டரின் மவுசைப் பிடிக்கச் சொல்லிக் கொடுத்தயா..?"
"அதெல்லாம் அவ வேலையில எக்ஸ்பர்ட்டாத்தான் இருக்கா.."
"தெரியுதில்ல.. பேசாம அவளை உன் ரூமை விட்டு மாத்தித் தொலைடா ஆத்மா.. நீ தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொல்கிற ஆளு.. வீணா ஒரு பொண்ணோட மனசை புண் படுத்தாதே..."
"பாக்கலாம்.."
"என்னத்தைப் பாக்கப் போற..? கிளம்பு..."
"எங்கே..?"
"உன் ஆபிஸீக்குத்தான்.. அந்தப் பெண் வீட்டுக்குப் போகலியாமே...
"போக வேண்டியதுதானே.. அவஹேண்ட் பேகையும்.. செல்போனையும் நான் விற்றா தின்றுட்டேன்..?"
"அதுக்கும் அந்தப் பெண்ணின் பக்கம் ஏதாச்சும் காரணமிருக்கும்டா..."
சுதாகரனின் வற்புறுத்தலில் ஒருவழியாக கிளம்பச் சம்மதித்தான் ஆத்மா ராம்...
"பட் ஒன் கண்டிசன்..."
"இன்னும் என்னடா..?"
"உன் பிளேட்டில் உள்ளதை நீ காலி பண்ணின பின்னால்தான் நான் எழுந்திருப்பேன்.."
"ஆஹா.. என்ன பாசம்டா மச்சான்.. இத்தனை நேரமா ஒத்தத் துண்டைப் பிய்ச்சு வாயில போட முடியாம நான் அல்லாடினது உனக்குத் தெரியாதா..? இப்ப மட்டும் பாசம் பொங்கி வழியுதோ..."
"ஆமாம்ன்னுதான் வச்சுக்கயேன்.. இப்ப நீ நான் சொன்னதைச் செய்வியா.. மாட்டியா..?"
ஆத்மாராமின் பாஷைப் பிரகாரம் சொல்வதென்றால் சுதாகரன் என்ன கழுதைக்காக மாட்டேன் என்று சொல்லப் போகிறான்..? வயிற்றுப் பசியை தணிக்க ரொட்டிகளைப் பிட்டு அசுரவேகத்தில் உள்ளே தள்ளியவன்...
"வாடா.. போகலாம்.." என்று எழுந்து கொண்டான்..
"காபி..?"
"அதை உன் ஆபிஸ் கேண்டினில் வாங்கிக் கொடுக்க மாட்டியா..?"
"கட்டாயம் போகனுமா..?"
"ஆமாம்டா மச்சான்.. என் கண்ணில்ல..."
ஒருவழியாக ஆத்மாராமைக் கொஞ்சிக் கெஞ்சி.. அவனுடைய அலுவலகத்திற்கு தள்ளிக் கொண்டு போனான்.. சுதாகரன்.. வாசலிலேயே காத்திருந்த செக்யூரிட்டி...
"சாருலதாமேடம் உங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க சார்..." என்று அறிவித்தான்...
"எனக்காக எதுக்கு வெயிட் பண்ணனும்.. பேசாம வீடு போய் சேர வேண்டியதுதானே..." கடுப்பானான் ஆத்மாராம்..
"அதத்தான் காவ்யா மேடம் சொன்னாங்க சார்..."
"என்னது..? காவ்யாவா..? அவளுமா கூட நிற்கிறா.."
"அவங்க மட்டுமில்ல சார்.. ஷீபா மேடம்.. நீரஜா மேடம்ன்னு நிறைய பேர் நிற்கிறாங்க..."
செக்யூரிட்டி கொடுத்த தகவலில் கலவரமானான் சுதாகரன்... இந்த ஆத்மாராம் பண்ணி வைத்த வேலையினால் பெண்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் பண்ண வந்து விட்டார்களா என்ன...?
"என்னடா ஆத்மா இது...?"
"ஹ.. இதுகள்ளாம் சித்தெறும்புகடா..."
"சித்தெறும்புக காதுக்குள்ள போனா கலங்கடிச்சிரும்க.. உனக்கு அது தெரியுமாடா..?"
"பேசாம வா சுதா.. என்னதான் சொல்லுதுகன்னு நானும் பார்த்துடறேன்.. கனடா பக்கமா ஒரு வருசமா ஒதுங்கியிருந்துட்டு வந்தா.. இதுகளுக்கு குளிர் விட்டுப் போயிருமா..? ஆத்மான்னா டெர்ரர்டா.."
'என்னத்தையோ செய்து தொலை..' மானசீகமாக தலையில் கை வைத்த சுதாகரன் நண்பனைப் பின் பற்றினான்...
ஆத்மாராமின் அறை வாசலில் பெண்கள் நின்றிருந்தார்கள்...
'இவர்களில் யார் அந்த சாருலதா..?'
தெரிந்து கொள்ள வேண்டும் போல சுதாகரனுக்கு ஆவல் மேலிட்டது...
ஆனானப்பட்ட ஆத்மாராமையே புலம்ப வைத்து விட்ட.. அவள் யாராக இருக்கும் என்று பெண்களின் மத்தியில் அவளைப் பார்வையால் தேடினான் சுதாகரன்...
"இப்படிச் செய்யலாமா ஆத்மா..?" அதிரடியாக ஆரம்பித்த காவ்யாவை இவளா அவள்..? என்று ஊன்றிப் பார்த்தான் சுதாகரன்..
"ஷட் அப் காவ்யா.. என்னைக் கேள்வி கேட்க நீ யார்..." என்று ஆத்மாராம் முறைக்கவும்.. இவள் அவளில்லை என்று மனம் தெளிந்தான்...





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...-11
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...-11
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy