மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-10

10 ஆத்மாராம் கோபமாக இருந்தான்... விட்டால் கையிலிருக்கும் சுடுகாபியை சர்வ் பண்ணிக் கொண்டிருக்கும் பேரரின் மீது ஊற்றி விடுவான் போலத் தெ...


10

ஆத்மாராம் கோபமாக இருந்தான்... விட்டால் கையிலிருக்கும் சுடுகாபியை சர்வ் பண்ணிக் கொண்டிருக்கும் பேரரின் மீது ஊற்றி விடுவான் போலத் தெரிந்ததால் சுதாகரன் பேரரை ஆத்மாராமின் பக்கமே நெருங்க விடவில்லை...
"என்ன சார் வேணும்..?" என்று கேட்டவனை...
"இங்கே வாப்பா..." என்று முன்ஜாக்கிரதையாக அழைத்து அவன் பக்கமே நிறுத்திக் கொண்டான்...
மெனுகார்டைப் புரட்டி.. அவன் உணவு வகைகளைச் சொல்லிக் கொண்டிருந்த போது ஆத்மாராம்.. வாய்க்குள் திட்டிக் கொண்டேயிருந்தான்.. பேரரை அனுப்பி விட்டு...
"யாரைடா திட்டறே.." என்று கேட்ட சுதாகரனிடம்..
"அவ என்ன பெரிய இவளா..?" என்று கேட்டான்...
அந்த அவள்... எவள்..? என்று சுதாகரனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை என்றபோதும் அவன் ஒன்றைக் கவனித்தான்..
அதுவரை அதுபோல எந்தப் பெண்ணையும் பற்றி ஆத்மாராம் பேசியதில்லை என்பதுதான் அது..
அந்த அளவிற்குத்தான் ஆத்மாராமிடம் பெண்களுக்கான முக்கியத்துவம் இருந்தது.. திட்டுவதற்காகக் கூட அவன் பெண்களைப் பற்றிப் பேச மாட்டான்.. அவன் உலகத்தில் பெண்களுக்கு என்றுமே இடமிருந்ததில்லை..
அப்பேற்பட்ட ஆத்மாராமா.. அவ.. பெரிய இவளா என்று கேட்கிறான்..?
ஆத்மாராமுக்கும் பெண்களுக்கும் என்றுமே ஆகாதுதான்.. கண்ணில் படும் பெண்களையெல்லாம் ஆத்மாராம் கரித்துக் கொட்டுகிறவன்தான்.. அவன் கூட வேலை பார்க்கும் பெண்களுக்கும் அவனுக்கும் இடையே நடக்கும் நிழல் யுத்தங்களும்.. சொல் யுத்தங்களும் கணக்கில் அடங்காதவைதான்.. பேய் கூட இரக்கப் படுகின்ற பெண் குலத்தைப் பார்த்து அவன் இரக்கப்பட மாட்டான்தான்...
ஆனாலும்.. ஆத்மாராம்.. பெண்களைப் பற்றிப் பேச மாட்டான்...
'இவனுக்கு என்ன ஆச்சு..?'
சுதாகரன் கவலைக்கு உள்ளானான்.. ஆத்மாராம் டேபிளில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து தொண்டையில் சரித்துக் கொண்டான்.. இருந்தும் அவன் கோபம் குறைந்த பாடாக இல்லை..
"செக்கச் செவேல்ன்னு இருந்தா பேரழகின்னு மனசுக்குள் நினைப்பா..?" என்று சுதாகரனிடம் கேட்டான்..
"ஓ.. அந்தப் பொண்ணு செவத்த பொண்ணா..? அட்ரா சக்கை..! அப்புறம்..?" சுதாகரன் ஆர்வமாக கதை கேட்டான்..
"ஒன்னுந்தெரியாத பச்சைப் புள்ள மாதிரி கண்ணை.. இப்படிக் கொட்டறாடா..." ஆத்மாராம் இமைகளைக் கொட்டிக் காண்பித்தான்...
இது போன்ற செய்கைகளையெல்லாம் நண்பனிடம் பார்த்திராத சுதாகரன் உற்சாகமாகி சுவராஸ்யமாய் அதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான்...
"பாருடா..." 
அவன் தூண்ட.. ஆத்மாராம் அவன் மனதில் ஆற்றாமையைக் கொட்ட ஆரம்பித்தான்..
"இந்தப் பூனை இருக்கில்ல.. பூனை..."
"ஆமாம்டா.. மியாவ்ன்னு கத்துமே..."
"அந்தப் பூனை போல இருப்பாடா.. இந்தப் பூனையும்  பால் குடிக்குமான்னு நான் ஏமாந்துட்டேண்டா சுதாகரா.."
"த்ச்சு.. த்ச்சு.."
"ஏண்டா சுதா.. நாயைக் கூப்பிடற..?"
"இது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்டா மச்சான்.. இங்கே நாயெல்லாம் வராது.. நான் கூப்பிட்டாலும் அது வேஸ்டுதான்... உன் புலம்பலைக் கேட்டுத் தெரியாத்தனமா பரிதாபப் பட்டுட்டேன்..."
"இதுக்கே பரிதாபப் படறியே.. முழுசாக் கேட்டா என்ன சொல்லுவியோ..."
"நீ சொல்லுடா.. நான் என்னத்தைச் சொல்றதுன்னு யோசிச்சுச் சொல்றேன்..."
"சுஸ்மிதாசென்னே சும்மாயிருக்குடா.."
"அட.."
"ஐஸ்வர்யாராயே.. மிஸஸ் அபிஷேக் பச்சனாகி.. அடக்க ஒடுக்கமா குடும்பம் நடத்த ஆரம்பிச்சிருச்சு.."
"பாருடா..."
"காஜோல் அகர்வாலே.. கப்சிப்புன்னு இருக்கு..."
"சொல்லு.. சொல்லு..."
"சமந்தாப் பொண்ணுகூட.. சமத்தா இருக்கு..."
"உன் மனசில இத்தனை இருக்காடா ஆத்மா...?"
"இன்னும் இருக்குடா மச்சான்..."
"இன்னுமா..? நம்பவே முடியலைடா.. ஆத்மா.. நீயா இத்தனை தூரத்துக்கு லிஸ்ட் போடற...?"
"இத்தனை பேரும் அடக்கி வாசிக்கிறாங்க.. இவ பெரிய உலக அழகியைப் போல சிலுப்பிக்கிறா..."
"யாருடா அது..?"
அதுவரை புலம்பிக் கொண்டிருந்த ஆத்மாராம் இந்தக் கேள்வியைக் கேட்டதும் கனல் கண்ணனாகி சுதாகரனை முறைத்தான்..
"உனக்குத் தேவையா..?"
"தேவையில்லதான்.. எனக்குத் தேவையில்லதான்.. தெரியாத்தனமாய் கேட்டுட்டேன்.. நீ ஆளை விடுடா சாமி..."
ஆத்மாராம் வேறு திக்கில் பார்த்தபடி.. மீண்டும் வாய்க்குள் திட்ட ஆரம்பித்தான்.. சுதாகரன் பேரர் வருகின்றானா என்று பார்த்தான்.. அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் பேரரும் வந்து சேர்ந்தான்...
"இதை எதுக்கு கொண்டு வந்த..?"
ஆத்மாராம் பேரரின் மீது பாய.. அவன் மிரண்டு விழித்து...
"சார்தான் ஆர்டர் பண்ணினார்.." என்று சுதாகரனை கைகாட்டி விட்டான்...
"நீ போப்பா.." பேரரை அனுப்பி விட்டான் சுதாகரன்..
"உன்னை யாருடா இதைப் போயி ஆர்டர் பண்ணச் சொன்னது..?" ஆத்மாராம் வெடுவெடுத்தான்..
"ஆத்மா.. ஆர் யு ஆல்ரைட்..?" சுதாகரன் ஆத்மாராமை கண்ணுக்குள் பார்த்துக் கேட்டான்...
"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..."
"நான் ஆர்டர் கொடுக்கும் போது.. நீ இங்கேதானே இருந்த..? நான் சொன்னது உன் காதில் விழுகலையா..?"
சுதாகரன் மடக்கி விட்டான்... ஆத்மாராம் அவனை முறைத்தபடி.. தட்டில் இருந்ததை காலி பண்ண ஆரம்பித்தான்.. ஊடே நிமிர்ந்தவன்..
"அவதாண்டா என் மேல மோதினா..." என்றான்...
சுதாகரன் வெகு கவனமாக எவள் அந்த அவள்..? என்ற கேள்வியினைத் தவிர்த்தான்...
"மோதின வேகத்தில விழுகப் போனாடா.. விழுந்து பல் உடையட்டும்ன்னு விட்டிருக்கனும்.. அதை விட்டுட்டு தாங்கிப் பிடிச்சேன்பாரு.. என் புத்தியை நாலு மொத்து மொத்தனும்..."
'அட..! மச்சான் இத்தனை ரொமான்ஸையும் நடத்தியிருக்கானா..' சுதாகரனின் கண்கள் விரிந்தன...
"ஓய்யாரமா என் கையில சாய்ஞ்சு நின்னவ.. பல் உடையாம தப்பிச்சதும் என்னையே கேள்வி கேட்கிறாடா.."
'ஓ..! இதுதான் மேட்டரா..?'
"அதுக்காகத்தான் அந்த அம்மணியை என் ரூமிலேயே வேலை பாருன்னு நான் சொன்னேனாம்..."
'இது தப்பாச்சே...'
சுதாகரனுக்கு நண்பனின் கோபம் புரிந்தது... ஆத்மாராமைப் போன்ற ரிஷ்ய சிருங்கனுக்கு... அந்தக் கேள்வி எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று அவனால் உணர முடிந்தது...
"விடு ஆத்மா.. அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.."
"விடுகிறதா..? அப்படி விட்டு விட்டால் நான் ஆத்மாராம் இல்லையே சுதா.. அதனால அவளை நாக்கைப் பிடுங்கிக்கறதைப் போலப் பதிலுக்கு சொல்லிட்டேனில்ல.."
"என்னத்தடா சொன்ன..?"
"நீ பெரிய ஸ்மார்ட் மேன்.. உன்னைப் பார்த்து நான் மயங்கிட்டேன்னு சொன்னா.. இது தான் விசயமா..? உண்மையை ஒப்புக்கிட்டதுக்கு தேங்க்ஸ்.. இனிமே இதைக் கன்டினியூ பண்ணாதேன்னு சொன்னேன்டா.."
"அடப்பாவி.. ஏண்டா அப்படிச் சொன்ன..?"
"அவ மட்டும் அப்படிச் சொல்லலாமா..?"
"அவ பொண்ணுடா.. சட்டுன்னு நீ தொட்டதும் பயந்து போய் ஏதோ பேசியிருப்பா.. அதுக்காக நீயும் அதைப் போலவே பேசி வைக்கனுமா..? பெண்பாவம் பொல்லாததுடா ஆத்மா..."
"ஆண்பாவம் மட்டும் நல்லதா..?"
இப்படி விதண்டாவாதம் பண்ணுகிறவனிடம் சுதாகரன் எதைப் பேச முடியும்..? சும்மாவே ஆத்மாராம் முயலுக்கு ஒற்றைக்கால்தான் என்று சாதிக்கிற ரகம்.. இன்றோ மலையேறி வந்திருக்கிறான்.. உச்சி மலையில் இருப்பவனிடம் போய் நியாயம் கேட்டால் அவன்
அந்த முயலுக்கு காலே இல்லையென்று சாதித்தாலும் சாதிப்பான்...
'எதுக்கு வம்பு...'
எப்போது ஆத்மா மலையேறினாலும் சுதாகரன் எடுக்கும் முடிவை அன்றும் எடுத்து விட்டு.. அக்கடாவென்று முன்னாலிருந்த தட்டைத் தொட முனைந்தான்.. தட்டிலிருந்த நாண் ரொட்டியைப் பிட்டு வாயருகேதான் கொண்டு போயிருப்பான்.. ஆத்மாராமின் செல்போன் அலறியது....
'இவன் செல்போன் சத்தம்கூட மத்தவங்கள அலற வைக்கனும்னே அலறுது...'
சுதாகரனின் செல்போன் அலறாது.. இனிமையான இசையை ரிங்டோனாக பதிந்து வைத்திருந்தான்.. அதைப் போன்ற ஒர் பதிவை ஆத்மாராமுக்கு சிபாரிசு செய்தபோது.. அவன்...
"செல்போனுன்னா அலறனும்டா.. சிணுங்கக் கூடாது.." என்று சொல்லி விட்டான்...
'ம்ஹீம்.. இவனுக்குத் தெரியுமா.. மெல்லிசையின் வாசனை...' என்று சுதாகரனும் மேலே பேசாமல் விட்டு விட்டான்...
அநேக நேரங்களில் இதே தலையிடாக் கொள்கையைத்தான் சுதாகரன் கடைபிடித்து வந்தான்...
தலையிட்டாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை.. சுதாகரன் என்னதான் சொன்னாலும்.. அது காது கேளாதவனின் காதினில் வாசிக்கும் நாயனமாக ஆகிப் போகும் என்பதெல்லாம் வேறு விவரம்..
அன்றும் ஆத்மாராமின் செல்போன் அலறலை காதுக்கு கொடுக்காமல் ரொட்டியை வாய்க்குள் கொடுக்கத்தான் அவன் நினைத்தான்.. ஆனாலும் ஆத்மாராமின் பேச்சு அதற்கு அனுமதி வழங்கவில்லையே..
"என்னது..? வாசலிலேயே நிற்கிறாங்களா..? வீட்டுக்குப் போகலையா..? என் ரூமுக்குள் அவங்க திங்ஸ் இருக்கா..? நான் ரூமை பூட்டிட்டு வந்துட்டேனா..? ஸோ.. வாட்..? அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..? என் ரூம்.. நான் பூட்டிட்டு வந்தேன்.. யார் வீட்டுக்குப் போகலைன்னாலும் ஐ டோன்ட்.. கேர்..."





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-10
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்..-10
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaichaaralaaimanamnanaiththaai-10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaichaaralaaimanamnanaiththaai-10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy