எண்ணியிருந்தது ஈடேற -152

152 தூண்டிலைப் போட்டு விலாங்கு மீனைப் பிடிப்பது என்பது இதுதான்.. உத்ரா அதில் கை தேர்ந்தவள்.. மனதிலிருப்பதை மறைக்கத் தெரியாமல் உளறிக...


152


தூண்டிலைப் போட்டு விலாங்கு மீனைப் பிடிப்பது என்பது இதுதான்.. உத்ரா அதில் கை தேர்ந்தவள்.. மனதிலிருப்பதை மறைக்கத் தெரியாமல் உளறிக் கொட்டி விடும் நந்தினி இதுபோல பல தருணங்களில் உத்ராவிடம் சிக்கி உண்மையைக் கொட்டிக் கவிழ்த்திருக்கிறாள்..
"நந்தினி.."
"ம்ம்ம்.."
"கண்ணெல்லாம் சிவந்திருக்கே.. புத்தகத்திலே ஒத்தை எழுத்தைக் கூட விடாம கரைச்சுக் குடிச்சிட்டயோ.."
"இல்லையே.."
"ஓஹோ... ஏன் நந்தினி.. நைட் நான் கண்விழிச்சுப் பார்த்தப்ப டேபிள் லேம்ப் பக்கத்தில உன்னைப் போல ஓர் உருவம் உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருந்ததே.. அது நீயில்லையாடி..?"
"ஹி..ஹி.. பார்த்துட்டியா.. அது நான்தான்.."
"விடியற்காலையிலும் பார்த்தேனே.. ஸோ.. நைட் முழுக்கத் தூங்கலை.. படிச்சுக்கிட்டே இருந்திருக்க.."
"தூக்கம் வரலைடி உத்ரா.. சரி.. எக்ஸாமை எழுதி முடிச்சுட்டு வந்து மொத்தமாத் தூங்கிக்கலாமேன்னு படிப்பை கன்டினியூ பண்ணிட்டேன்.."
"அப்புறம் ஏண்டி.. நான் கேட்டப்ப இல்லைன்னு சொன்ன..?"
நந்தினி மாட்டிக் கொள்வாள்.. உண்மையில் உத்ரா இரவில் கண் விழித்துப் பார்த்திருக்க மாட்டாள்... காலையில் என்று சொன்னதும் அப்படித்தான்.. நந்தினியின் குணம் தெரிந்து அவள் தூண்டிலை வீசினால் நந்தினி விலாங்கு மீனாய் அகப்பட்டுக் கொள்வாள்..
அன்று போல இன்றும் முகத்தில் அசடு வழிய..
"இல்லையே.. ஒன்னுமில்லையே.. ஒன்னுமே இல்லைடி உத்ரா.." என்று கைகளை விரித்து எங்கப்பா பரணில் இல்லையென்றாள் நந்தினி..
"நீ இல்லைன்னு சொல்கிற லட்சணமே எதுவோ இருக்குன்னு சொல்கிறதைப் போலதான் இருக்கு.. உன்னை அப்புறமாக் கவனிச்சுக்கிறேன்.. உட்காரு.."
உத்ரா.. 'அப்புறமாய்' என்று செக் வைத்ததில் கலங்கிப் போனாள் நந்தினி.. இனி எப்போது அவள் எதைக் கேட்டு வைப்பாளோ என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும்..
'அந்தக் கழுதைக்கு இப்போதே எல்லாத்தையும் ஒப்பிச்சிரலாமே..' என்ற முடிவுக்கு வந்தவளாய்..
"இல்லைடி உத்ரா.." என்று ஆரம்பித்தாள் நந்தினி..
"என்ன இல்லை..? என் பாஸ் ஆர்டர் பண்ணினா ஒபே பண்ணித்தான் ஆகனும்ன்னு சொல்கிறதுக்கு இத்தனை ஆக்சனா..? உத்ராவும் வினித்தும் வந்திருக்கிற நினைவு இல்லாம வொர்க்கை கொடுத்திட்டேன்.. அதுக்கப்புறம் தான் இவங்களோடு டைம் ஸ்பெண்ட் பண்றதுன்னா உனக்குப் பிடிக்குமேன்னு தோன்றியது. ஸோ.. உத்ரா பர்ஸ்ட்.. வொர்க் நெக்ஸ்ட்ங்கிற டிசிசனுக்கு வந்திட்டேன்.. உன்னையும் கிளம்பச் சொன்னேன்.. நீயும் கிளம்பி வந்திட்ட... இதைச் சொல்கிறதுக்கு குட் டைம் பார்ப்பியா..?" வெகு இலகுவாக அவளை அவளாக உருவாக்கிக் கொண்டிருந்த இடியாப்பச் சிக்கலில் இருந்து மீட்டெடுத்தான் அந்த கேரளத்து ராஜாதி ராஜன்..
'உஸ்ஸ்.. அப்பாடா..' ஆசுவாசமான நந்தினியை நம்பாத பார்வை பார்த்தாள் உத்ரா..
'போடி..' காலை உணவில் கவனமானாள் நந்தினி..
'இவங்களோடு டைம் ஸ்பெண்ட் பண்றதுன்னா உனக்குப் பிடிக்குமேன்னு பொடி வைச்சுப் பேசறான்.. ராஸ்கல்.. இவன் உத்ராவைச் சொன்னானா இல்லை வினித் அண்ணாவை மென்சன் பண்ணினான்னு எனக்குத்தானே தெரியும்..' பொருமியது அவள் மனம்..
அன்றைய ஊர் சுற்றலில் நந்தினி தப்பித்தவறி உத்ராவிடம், வினித்திடமும் ஒரு வார்த்தை கூடப் பேசி விடாமல் அடை காத்தான் ரவிச்சந்திரன்.. அவளை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திரும்ப விடவில்லை.. கணவனே கண் கண்ட உலகம் என்றிருக்கும் உத்ரா போனால் போகிறது என்று சில மணித் துளிகளில்தான் தோழியின் நினைவு வந்து அவளிடம் பேச முனைவாள்.. மிகச் சரியாக அந்த நொடியில் ஊடே புகுந்து ஆட்டத்தைக் கலைத்து விடுவான் ரவிச்சந்திரன்..
"நந்தினி.. ரப்பர் பேக்டரியோட ஆன்னுவல் இன்கம் ரிப்போர்ட்ட பிரிபேர் பண்ணச் சொன்னேனே.. அதில் நான் சொன்ன பர்டிக்குலரை இன்குளூட் பண்ணிட்டியா..?" என்று வேலை சம்பந்தமாக பேசுவதைப் போல பேச ஆரம்பிப்பான்..
உத்ராவினால் தோழியிடம் பேச முடியாமல் போய் விடும்..
"இதுக்கு இவ அவுட்டிங்கே வராமல் இருந்திருக்கலாம் சார்.." உத்ரா அலுத்துக் கொண்ட போது.
"இருந்திருக்கலாம்தான்.. எங்கே..? அவுட்டிங் வராம வொர்க்கைக் கவனிக்கச் சொல்லியிருந்தா நந்தினியின் மனம் வொர்க்கில் இருந்திருக்காதே.. உங்களிடமில்ல இருந்திருக்கும்..?" என்று அவளை விட அலுத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்..
அந்த 'உங்களிடமில்ல..' என்ற வார்த்தையைச் சொல்லும்போது அவன் வினித்தைப் பார்த்தபடி சொன்னதுதான் இம்சையாக இருந்தது..
'இவ ஒருத்தி.. இந்தக் கேரளத்து இம்சை அரசனைப் பத்தித் தெரியாம வாய் கொடுக்கிறா..' உத்ராவைப் பேசாமல் இருக்கும்படி கண்ஜாடை காட்டினாள் நந்தினி..
உத்ராவின் நெற்றி சுருங்கியது.. இதுபோன்ற பரிபாஷைகளை நந்தினி எங்கு கற்றாள் என்று வியந்து போனாள்..
நந்தினி இது போன்ற ஜாடைகளைச் செய்ய மாட்டாள்.. தேங்காய் உடைத்ததைப் போல எதையும் நேருக்கு நேர் பேசி விடுவாள்.. பரிபாஷைகளுக்கும் அவளுக்கும் ரொம்பத்தூரம்..
'நந்தினியா இது..?'
தோழியின் விழிகளில் தெரிந்த சஞ்சலத்தில் யோசனையாகிப் போனாள் உத்ரா.. அதைப் பற்றி அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றால் ரவிச்சந்திரன் நந்தினியை விட்டு நகரவில்லை.. அவளைத் தனது நிழல் போல கூட இருத்திக் கொண்டான்.. உத்ராவின் யோசனை அதிகமானது.. வினித்தை மறந்து விட்டு நந்தினியைக் கண்காணிக்க ஆரம்பித்தாள்.. வினித் கோபம் கொண்டான்..
"உன் புருசன் நான்தாண்டி.. அங்கே என்ன பார்வை வேண்டிக் கிடக்கு..?"
நகைச்சுவையைப் போலச் சொன்னாலும் அது நகைச்சுவையல்ல அவனுடைய அடி மனதில் அமிழ்ந்திருக்கும் பொறாமையின் வெளிப்பாடு என்பதில் கோபம் கொண்டாள் உத்ரா..
"அங்கே நிற்கிறது ரவிசார் மட்டுமில்லை வினித்.. நந்தினியும் தான்.." நறுக்கென்று பதில் சொன்னாள்..
"நான் நந்தினியைத்தான் சொன்னேன்.. நீ யாருன்னு நினைத்த..?" உற்றுப் பார்த்தபடி கேட்டான் வினித்..
"நீங்க யாரை நினைத்துச் சொன்னீங்களோ.. அவங்களைத்தான் நினைத்துப் பதில் சொன்னேன்.. போதுமா..?" உறுத்துப் பார்த்தபடி கேட்டாள் உத்ரா.
கணவன் மனைவிக்குள் பிணக்கு வந்தது.. வினித் சிடுசிடுவென்று இருந்தான்.. வாழ்க்கையில் ஓர் முறை வரும் தேநிலவு.. அதை மனைவியுடன் தனிமையில்
கழிக்க வேண்டுமென்றுதான் எல்லாப் புதுக் கணவன்மார்களும் ஆசைப்படுவார்கள்.. அவனும் அப்படித்தான் ஆசைப்பட்டான்.. வயநாட்டுக்கு வர வேண்டாம் என்று சொன்னான்.. சிம்லாவிற்குப் போகலாம் என்றான்.. அவனும் அவளுமாக இருக்க வேண்டும்
என்று அவன் விரும்புவதை உணர்த்தினான்..
உத்ரா அதை மறுத்து விட்டாள்.. இதைச் சாக்கிட்டுத்தான் வயநாட்டுக்குப் போக முடியும் என்பதைச் சுட்டிக் காட்டினாள்..
"என்மேல நம்பிக்கை வைச்சுக் கிளம்பிப் போயிருக்காங்க.. அங்கே எப்படியிருக்கிறாளோ என்னவோ.. தினமும் பேச முடியலை.. மேரேஜ் நெருங்க நெருங்க அவளிடம் பேசுவது குறைந்து விட்டது.. மேரேஜீக்கப்புறம் நீங்க நெருங்கிட்டிங்க.." என்று சரசம் பேசிக் கணவனை சம்மதிக்க வைத்தாள்..
அந்த நினைவில் இன்று அவள் முகம் சிவந்ததில் வினித்தின் மனச் சுணக்கம் மறைந்து விட்டது.. மனைவியை வேட்கையுடன் பார்த்தான்.. ரவிச்சந்திரன் நந்தினியுடன் விலகி நடந்திருந்ததில் அவனும் உத்ராவும் மட்டும் கடலோர தென்னை மரங்களின் மத்தியில் தனித்து நின்றிருந்தார்கள்..
"நெருங்கறதுக்குத்தானேடி மேரேஜ் பண்ணிக்கிறது..?"
வளைந்திருந்த தென்னை மரத்தில் வாகாக சாய்ந்து நின்றிருந்த உத்ராவின் மீது அவன் சாய.. அவள் விழிகளை மூடிக் கொண்டாள்.. வினித்தின் உஷ்ண மூச்சுக் காற்று குளிர் பாடிந்திருந்த அவள் முகத்திற்கு கதகதப்பை ஊட்டியது..
"உத்ரா.." தாபத்துடன் அழைத்தான்..
"ம்ம்ம்.." போதையுடன் அவள் முணுமுணுத்தாள்..
"ஐ லவ் யு டி.. ஐ நீட் யு.."
"ம்ம்ம்.."
"உன் உலகத்தில நான் மட்டும்தாண்டி இருக்கனும்.. உன் பிரண்டுக்குக் கூட அங்கே இடமில்லை.."
ஆவேசத்துடன் அவளைக் கட்டியனைத்து அவளது கழுத்தில் முகம் புதைத்தான் வினித்.. வெப்ப உதடுகளின் ஸ்பரிசத்தில் உத்ராவின் உடல் உஷ்ணமேற்றது.. நீ நந்தினியைத்தான் சொன்னாயா என்று கேட்க நினைத்து அந்தக் கேள்வியை மனதுக்குள் புதைத்தாள்.. அந்த நொடிகளில் இனிமையை கசப்பான கேள்விகளைக் கேட்டுக் குலைப்பதற்கு அவள் மனம் இடமளிக்கவில்லை..
உத்ராவின் பார்வை வினித்தின் மீது மட்டும் இருக்க வேண்டும் என்ற உரிமையுணர்வில் அவள் போதை கொண்டாள்.. அனைத்துக் காதலிகளுக்கும், மனைவிகளுக்கும் ஏற்படும் போதைதான் அது.. கள்ளூரும் போதை.. அவள் விரும்பும் அவளுடைய ஆடவன்.. அவனை மட்டும் அவள் விரும்ப வேண்டும் என்று உரிமை பாராட்டுவதில் உண்டாகும் போதை..
உத்ராவையும் அந்தப் போதை ஆட்கொண்டிருந்தது.. கணவனுக்கு இசைந்து கொடுத்தபடி அவனது முரட்டு முடியைக் கலைத்துக் காதோரமாக முணுமுணுத்தாள்..
"ஐ லவ் யு வினித்.."
"உன் மனசில நான் மட்டும்தான் இருக்கனும்.."
"ம்ம்ம்.."
"உன் பேரண்ட்ஸ்.. ரிலேடிவ்ஸ்ன்னு யாரும் இருக்கக் கூடாது.."
"ம்ம்ம்.."
"நந்தினி கூட.."
"அவருடன் சேர்ந்து ரவிசாரும் இருக்க மாட்டார்.. போதுமா..? அவர் நம்ம நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்திருக்கார்.. பாதுகாவலா இருக்கார்.. அதுக்காக அவர்மீது நன்றியுணர்வுதான் வருது.. ஃபேவரிசம் வரலை.. புரிஞ்சுக்கங்க.. அவர் எத்தனை பெரிய ஸ்டாரா இருந்தாலும் எனக்கு என் புருசன்தான் உயர்வு.."
"உத்ரா.."
வினித்தின் அணைப்பு இறுகியது.. பெண் மனம் மட்டுமில்லை.. ஆண் மனமும் அலை பாய்வது.. அவனைவிட சில விதங்களில் உயர்ந்த வேறொரு ஆண் அருகிலிருந்தால் அவன் மனது அலை பாயும்.. தன் துணையைச் சந்தேகப்படும்.. அவளைப் பத்திரப் படுத்திக் கொள்வதில் முனைப்புக் காட்டும்..
அலைபாயும் ஆண் மனதை அமைதிப் படுத்தும் வித்தையைக் கற்றவள் பெண்.. ஒர் சிறு பார்வை.. சரசமான பேச்சு.. தழுவல்.. உனக்கு மட்டும் நான்.. என்ற உத்திரவாதம்.. இது போதும்.. அலைபாயும் ஆண்மனதை அவள் வசப்படுத்த..
உத்ரா அந்த வித்தையைக் கற்றிருந்தாள்.. அவளுடைய ஆண்மகனை வசியம் செய்யப் பயின்றிருந்தாள்.. எப்போது எதிர்க்க வேண்டும்.. எப்போது அணைக்க வேண்டும் என்ற வாழ்க்கைப் பாடத்தின் அரிச்சுடியை அறிந்து வைத்திருப்பவள் அவள்..
இவை சொல்லிக் கொடுத்து வருவதில்லை.. சொல்லிக் கொடுக்கவும் இயலாது.. ஒவ்வொரு பெண்ணும் தனக்கான ஆடவனை கண்டு கொண்டு அவனிடம் சரணடையும் போது அவனைச் சரணடைய வைத்து விடுவாள்.. விட்டுக் கொடுத்துக் கெட்டியாக இழுத்துப் பிடித்து அமுக்கிக் கொள்ளும் கெட்டிக்காரத்தனத்தைக் கற்று வைத்திருப்பவள்தான் பெண்..
வினித்தின் மனது சமனப்பட்டிருந்தது.. அவனுடைய விரலோடு விரல் கோர்த்தபடி காதல் பேசிய வண்ணம் மெல்ல மெல்ல நந்தினியைப் பற்றிய பேச்சை எடுத்தாள்..
"அப்பா, அம்மா, தம்பி, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மான்னு தஞ்சாவூரைச் சுத்தியிருக்கிற அத்தனை கிராமங்களிலும் அவளுக்குச் சொந்தக்காரங்க இருக்காங்க வினித்.. அத்தனை சொந்த பந்தங்கள் மத்தியிலே இளவரசியைப் போல வளர்ந்தவங்க நந்தினி.. அவளுடைய அப்பா தங்சாவூரிலே பெயர் சொல்கிறதைப் போல இருக்கிற பிரபலமான பணக்காரர்களிலே ஒருத்தர்.. அவரோட பெண், நான் சொன்ன வார்த்தைக்காக வயநாட்டுக்கு வந்து ரவி சாரிடம் வேலை செய்கிறா.."
"பட்.. இதில் அவங்களோட நண்மையும் இருக்கில்ல உத்ரா... நீ என்னவோ அவங்களைக் கஷ்டப்படுத்திட்டதைப் போலக் கில்ட்டியா.. ஃபீல் பண்றியே.. செஞ்சியிலே சூசைட் அட்டெம்பட் பண்ணப் போனவங்க அவங்க.. அவங்களைக் காப்பாற்றி உன் வீட்டினரிடம் எதையும் சொல்லாம மறைத்து வயநாட்டுக்கு அனுப்பி வைத்திருக்க.. யு டிட் எ குட் ஜாப்.. அப்படிப்பட்ட கிரிட்டிகல் சிச்சுவேசனை இண்டலிஜெண்டா ஹேண்டில் பண்ணின பாரு.. உன்னை அப்ரிசியேட் பண்ணியே ஆகனும்.. யு ஆர் ஸோ ஸ்வீட்.."
வினித் உத்ராவின் கன்னத்தில் முத்தமிட்டான்..
'இதுதான் அப்ரிசியேட் பண்ணுகிற லட்சணமா..?'
உத்ராவுக்கு சிரிப்பு வந்தது.. யு ஆர் ஸோ கிரேட் என்றுதான் அப்ரிசியேட் பண்ணுவார்கள்.. யு ஆர் ஸோ ஸ்வீட் என்று கொஞ்சத்தான் செய்வார்கள்..
காதலனுக்கு பாராட்டுவது கூட ஓர் வகையான கொஞ்சல்தான்..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -152
எண்ணியிருந்தது ஈடேற -152
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera152.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera152.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy