எண்ணியிருந்தது ஈடேற -166

166 பேச முடியாமல் திருதிருத்தவளை விசித்திரமாய் பார்த்தான் ரவிச்சந்திரன்.. நந்தினியா இது என்று ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.. வாய் வ...


166


பேச முடியாமல் திருதிருத்தவளை விசித்திரமாய் பார்த்தான் ரவிச்சந்திரன்.. நந்தினியா இது என்று ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.. வாய் வலிக்குமே என்று கவலைப்படாமல் மடைதிறந்த வெள்ளம் போலப் பேசித் தள்ளும் நந்தினியாவது.. பேச முடியாமல் தடுமாறி நிற்பதாவது..
"ஹேய்.. உனக்கு என்னாச்சு..?"
அவளது முகத்திற்கு நேராகக் குனிந்து விரல் சொடுக்கினான்.. அவள் இமை கொட்டி மலங்க மலங்க விழித்தாள்.. பேசத்தான் முயற்சி செய்தாள்.. பேச்சுத்தான் வந்து தொலைக்கவில்லை.. அதைச் சொன்னால் அவன் மட்டுமல்ல.. அகில உலகத்தில் எவருமே நம்ப மாட்டார்கள்..
'இஞ்சி இடுப்பழகா..!
              மஞ்சச் சிகப்பழகா..!
     கள்ளச் சிரிப்பழகா..!
              மறக்க மனம் கூடுதில்லையே.. ஏய்ய்..'
மனதுக்குள் அருமையருமையாய் பாடல் வந்து தொலைத்தது.. எதிரில் நின்ற இஞ்சி இடுப்பழகன்.. மஞ்சள் சிவப்பு நிறத்துடன்.. கள்ளச் சிரிப்பழகனாகத்தான் அவளது கருத்தைக் கவர்ந்தான்.. அதை வாய் விட்டுச் சொன்னால் இஞ்சி இடுப்பழகன் இஞ்சி தின்ற சிங்கமாக வயநாடு முழுவதும் குதித்தாடி விடுவான்..
அவளால்தான் சொல்ல நினைத்ததை சொல்ல முடியவில்லையே..
அவள் படும் பாட்டைப் பார்க்க அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.. இமைகள் சுருங்க சிரித்தபடி அவளை கேலி செய்ய வாய் திறந்தான்.. மிகச் சரியாக
அந்த நேரத்தில் செல்போன் ஒலித்து அவனை அழைத்தது.. அதைக் காதுக்கு கொடுத்தபடி..
"எனி இம்பார்ட்டண்ட் நியுஸ்..?" என்று அவளிடம் கேட்டான்..
செல்போனில் பேசாமல் அவளிடம் அவன் பேசியதில் அவள் இதமாக உணர்ந்தாள்.. அவளுக்கான முக்கியத்துவத்தை என்றுமே அவன் குறைத்ததில்லை என்பதில் கர்வமானவள் இல்லையெனும் விதமாக தலையசைத்தாள்..
"ரூமுக்குப் போ.. பிரேக் பாஸ்டப்ப மீட் பண்ணலாம்.."
அவன் நடந்து விட்டான்.. நந்தினி அறைக்குள் போகாமல் தனக்குப் பேச்சு வருகிறதா என்று சோதிக்க பாட்டுப் பாடிப் பார்த்தாள்..
"நான் பேச வந்தேன்..
                 சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை.."
கனிரென்று பாடல் வெளிப்பட்டதில்..
"இப்ப மட்டும் உணக்கையா சத்தம் போடு.." என்று தன்னைத்தானே திட்டியபடி தலையில் கை வைத்தாள்..
"என்னடி.. உனக்கு நீயா பேசிக்கிட்டு இருக்க..? நம்ம ஊரா இருந்தா வெயில் தாங்காம பினாத்தறன்னு சொல்லலாம்.. இது குளிரான கோழிக்கோடு.. இங்கே
மூளை உருக சான்ஸ் இல்லையே.." என்றபடி அங்கே பிரசன்னமானாள் உத்ரா..
"ஒரு மனுஷி நிம்மதியா ஸ்விம்மிங் பூல் பக்கம் வாக் வந்துரக் கூடாதே.. வரிசை கட்டி வார வந்துருவீங்களே.. நீயென்ன இந்தப் பக்கம்..? வினித் அண்ணா எப்படி உன்னைத் தனியா வாக் வர விட்டார்..?" உத்ராவை விசாரித்தாள் நந்தினி..
உத்ராவும் மெரூன் வண்ணப் புடவையில்தான் இருந்தாள்.. "வினித் குளிச்சுக்கிட்டு இருந்தாரா.. நான் டிரஸ் பண்ணிட்டு ஸ்விம்மிங் பூல் வியுவைப் பார்க்க ஜன்னல் பக்கமா வந்தேனா.. நீ வந்துக்கிட்டு இருந்த.. என்னைப் போலவே மெருன் கலர் புடவையில்
இருந்தியா.. ஸேம் ஸேம் ஸ்வீட் கேட்கலாம்ன்னு வினித் குளித்துட்டு வர்றதுக்குள்ள நைஸா நழுவி வந்தேன்.. இங்கே வந்தா நீ உனக்கு நீயே பேசிக்கிட்டு இருக்கிற.."  நந்தினியிடம் விவரித்தாள் உத்ரா..
'ஆக.. இவள் நானும் அவனும் பேசிக்கிட்டு இருந்ததைப் பார்க்கலை..' சுதாரித்துக் கொண்ட நந்தினி..
"ஆக.. அண்ணாவுக்குத் தெரியாம எஸ்கேப் ஆகி வந்திருக்கேன்னு சொல்லு.. அதுதானே பார்த்தேன்.. அண்ணாவாவது.. உன்னைத் தனியே அனுப்பறதாவது.. மேட் ஃபார் ஈச் அதர்ன்னு ஒட்டிக்கிட்டு இல்ல உலா வருவீங்க.." நந்தினி பதிலுக்கு தோழியை வாரினாள்..
"நாளைக்கு உனக்கும் மேரேஜ் ஆகுமில்ல.. அப்ப நீயும் உன் ஹஸ்பெண்டும் ஒட்டிக்கிட்டு வர்றீங்களா.. இல்லை.. கட்டிக்கிட்டு வர்றீங்களான்னு நானும் பார்க்கத்தானே போறேன்.. அன்னைக்கு இருக்குடி உனக்கு.." தோழியின் கையைக் கிள்ளினிhள் உத்ரா..
"இதை ஒன்னைக் கண்டுபிடிச்சு வைச்சிருக்கடி.. ஆன்னா, ஊன்னா அரைக்கிலோ சதையைக் கிள்ளியெடுத்துடறது.. குரங்கே..!" கிள்ளுப் பட்டக் கையைத் தடவிக் கொண்டே திட்டினாள் நந்தினி..
"அது ஏண்டி எதுக்கெடுத்தாலும் குரங்கையே கூப்பிடற..? போன பிறவியில குரங்காய் பிறந்திருப் பாயோ..?" உத்ரா சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்த போது..
"போன பிறவிக்கு ஏன் போறிங்க..? இந்தப் பிறவியிலும் உங்க பிரண்ட் அப்படித்தான்.." என்றபடி அங்கே வந்தான் ரவிச்சந்திரன்..
'இவன் போகலையா..?' நந்தினிக்குள் புது ரத்தம் பாய்வதைப் போல உற்சாக ஊற்று பாய்ந்தது..
அன்றுதான் புதிதாய் பார்ப்பதைப் போல அவனை ஆசையாசையாய் பார்த்து வைத்தாள்.. உத்ராவுடன் பேசிக் கொண்டிருந்தவன் அவளைக் கவனிக்கவில்லை.. அது அவளுக்கு வசதியாகப் போய் விட்டது.. உச்சி முதல் உள்ளங்கால்வரை பார்வையிடப் பார்வையிட..
'இவன்தான் எத்தனை மேன்லியா ஹேண்ட்சம்மா இருந்து தொலைக்கிறான்..' என்று அவளுக்கு ஏக்கமாக இருந்தது..
அவனுடைய வசதி வாய்ப்பைப் பற்றி அவள் யோசிக்கவில்லை.. அவனளவு இல்லாவிடினும் அவளும் பணக்கார வீட்டில் கோடிஸ்வரப் பரம்பரையில் பிறந்தவள்தான்.. என்ன ஒன்று.. அவன் வீடு அரண்மனை என்று அழைக்கப்படுகிறது.. அவள் வீடு பங்களா
என்று அழைக்கப்படுகிறது.. அவ்வளவுதான்.. மற்றபடி அவன் உலகம் சுற்றும் வாலிபனாக 'யாழ்..' நட்சத்திர ஹோட்டல் தொடரின் அதிபராக இருக்கிறான்.. அவள் தஞ்சாவூர் தவக்களையாக... பூர்வீக கிராமத்தின் தோப்புகளும், துரவுகளும், காவேரிக் கரையுமாக இருக்கிறாள்.. அவன் நுனி நாக்கு ஆங்கிலமென்றால் இவள் செந்தமிழ் நாட்டின் தமிழச்சி..! அவன் மடிப்புக் கலையாத நேர்த்தியான உடைகளுடன் கோட்டும் சூட்டுமாக விளம்பர மாடலைப் போல படு ராயலாக தோற்றமளித்தால், இவள் உடுத்திய வேகத்தில் உடைகளைக் கசக்கி, தலை கலைந்து.. அப்போதுதான் பத்துப் பேருடன் சண்டை போட்டு விட்டு வந்ததைப் போல கந்தலகோலமாக காட்சியளிப்பாள்.. நேர்த்தியின் மறுபெயர் ரவிச்சந்திரன்.. சோம்பேறித்தனத்தின் திருவுருவம் நந்தினி..!
'ரெண்டும் செட் ஆகுமா..?'
காலம் கடந்த கவலை ஏற்பட்டது நந்தினிக்கு.. அவன் ராஜ பரம்பரையில் பிறந்தவன்.. கேரளாவின் கோடிஸ்வரன்.. உலகத்தில் உள்ள பிஸினெஸ் மேகசின்கள் எல்லாம் கொண்டாடும் ஸ்டார்..! லொட்டு, லொசுக்கு பற்றிக்கூட அவள் கவலைப்படவில்லை..
அவனுடைய ஆண்மை ததும்பும் கம்பீர கவர்ச்சிகரமான அழகிற்கு முன்னால் அவளால் நிற்கக்கூட முடியுமா என்றுதான் கவலைப்பட்டுக் கரைந்து போனாள்..
கரிய நிறத்தில் எண்ணைப் பசையின்றி அலைபாய்ந்த அவனது முன்னுச்சி முடி நெற்றியில் படிந்தது.. அதை அவன் புறங்கையால் தள்ளி விட்டபடி பேசிய விதம் அலாதியானதொரு அழகாக இருந்தது.. பேச்சின் ஊடே அவன் சிரித்தபோது அவனது கவர்ச்சி கூடுவதாக நந்தினியின் மனம் ஜொள்ளியது..
'இருக்கிற அட்ராக்சன் போதாதுன்னு இது வேறயா..? சும்மாவே ஆளை மயக்குவான்.. இதில சிரிச்சு வேற வைச்சான்னா.. ஹம்மாடியோவ்.. தொலைஞ்சேன்.. ஆனாலும் நந்தினி.. ஒரு ஆம்பளைக்கு இத்தனை அழகு கூடாதுடி.. ஸ்விம்மிங் பூலில ஸ்விம் பண்றவ கூட இவனைப் பார்த்துக்கிட்டே டைவ் அடிக்கிறாளே.. இவனைக் காதலிச்சுத் தொலைச்சிருக்கியே.. இவனை எப்படிக் கட்டிக் காப்பாத்தப் போற..?'
இருக்கும் கவலைகளில் இந்தக் கவலைதான் பெருங்கவலையாக இருந்தது நந்தினிக்கு.. வரிசைப்பற்கள் தெரிய அவன் சிரித்த அழகைச் சற்றுத் தொலைவில் சாய்வு நாற்காலியில் நீச்சலுடையுடன் சாய்ந்து படுத்திருந்த நீலக்கண் வெள்ளை அழகி ரசித்ததில் இவளுக்கு 'பகீர்' என்றிருந்தது..
அவன் சொன்ன காதலை அவள் ஏற்றுக் கொள்ள வில்லை.. அவள் மனதில் காதல் வந்து விட்டதை அவன் இன்னும் அறியவில்லை.. இப்படியாகப்பட்ட நிலையில் எவளாவது அழகு தேவதை, சொப்பன சுந்தரி வந்து 'ஐ லவ் யு' சொல்லித் தொலைச்சு கரெக்ட் பண்ணிட்டா என்ன செய்கிறது..? வெள்ளைத் தோலும்.. நீலக் கண்ணுமா.. வந்து நின்னா இவன் மயங்கி 'ஆஹா'ன்னு அவ பின்னாடி போயிர மாட்டானா..? நந்தினி, நந்தினி.. நான் உன்கிட்ட சொன்ன ஐ லவ் யு வுக்கு நீ எந்த ரெஸ்பான்ஸீம் கொடுக்கலை.. ஸோ.. அவ சொன்ன ஐ லவ் யுவை நான் கன்சிடர் பண்ண வேண்டியதாப் போயிருச்சு.. நீ பேசாம பெல்ட் மன்னனுக்கு வாழ்க்கைப்பட்டு பெல்ட் அடியை வாங்கிக்க.. நான் நீலக்கண் வெள்ளைக்காரியோட ஸ்விட்சர்லாந்துக்கு ஹனிமூன் போகப் போறேன்னு டாட்டா, பைபை சொல்லிருவானோ..
நினைக்கும் போதே நெஞ்சுவலி வந்துவிடும் போல இருந்ததில் நீலக்கண் அழகிக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள் நந்தினி..
'ஒரு டவலை எடுத்துப் போர்த்திக்கிட்டுப் படேண்டி..' என்று மனதுக்குள் அர்ச்சனை வேறு..
அகன்ற நெற்றி.. செதுக்கி வைத்ததைப் போன்ற நாசி என்று கிரேக்க சிற்பத்தைப் போல படு அழகாக இருந்த அவன் முகத்தை ஆசையுடன் பார்த்தாள்..
'இவன் எனக்குக் கிடைப்பானா..?' ஏங்கித் தவித்தது அவள் மனம்..
இந்தப் பெண் மனம் இருக்கிறதே.. அது அனைவரும் சொல்வதைப் போல ஆழமானதுதான்.. யாராலும் அளவிட முடியாத நுண்ணிய உணர்வுகளைக் கொண்டது.. விசித்திரமானது.. பாசம் வைக்காத போது பற்றற்ற துறவியைப் போல இருக்கும்.. பாசம் வைத்து விட்டால் அனைத்தும் நீயே என்று சரணடைந்து விடும்..
நந்தினியும் அது போல்தான் இருந்தாள்.. அவளுக்கு யாதுமாகி நின்ற ரவிச்சந்திரனின் மீது கரை காண முடியாத காதலுடன் பைத்தியமாகி நின்றாள்..
தேக்குமரத் தோள்களும்.. அகன்று பரந்த மார்பும்.. நீண்டிருந்த கை, கால்களுமாக அவன் அவளைப் படுத்தி எடுத்தான்.. அவனது காதலை ஏற்காமல் நிராகரித்த
தன் முட்டாள்தனத்தை நினைத்து நினைத்து நொந்து போனாள் நந்தினி.. இதோ அவள் மனதில் காதல் ததும்பிக் கொண்டிருக்கிறது.. அவன் கேட்ட காதலுடன் அவள் அவனிடம் சரண் புகத் தயாராக நின்று கொண்டிருக்கிறாள்.. கைக்கு எட்டும் தொலைவில்தான் அவனும் இருக்கிறான்..
ஆனால் அவளால் அவனிடம் காதல் சொல்ல முடிய வில்லையே.. அதற்கான அவளுக்கும் அவனுக்குமான பிரத்யேகத் தனிமை அவளுக்குக் கிட்டவில்லையே.. ஏன்..?
அவனும் அவளுமாக நீலிமலைக்காட்டில், மரக்குடிலில் கழித்த இரண்டு தினங்களை நினைத்துப் பார்த்தாள் நந்தினி.. அவளது கைக்குக் கிடைத்தும் முட்டாள்தனமாக அவள் நழுவ விட்ட அரிய நொடிகள் அவை..
பொங்கியது அவள் மனம்.. அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து மார்பில் சாய வேண்டும் போல மனது பரபரத்தது.. எதுவும் செய்ய இயலாத சூழல் அவளைக் கட்டிப் போட்டு சோதித்தது..
"உத்ரா.."
வினித்தின் குரல் கேட்டதில் நந்தினி நிம்மதியாக உணர்ந்தாள்.. உத்ராவைக் கவர்ந்து தன்னிடம் இழுத்துக் கொள்ளும் வினித்தின் மீது அவள் கொண்டிருந்த கோபமெல்லாம் காற்றாக பறந்து விட்டிருந்தது..
'கட்டின புருசனை ரூமில் விட்டுவிட்டு.. பழகின பிரண்டை எட்டத்தில் நிறுத்தி விட்டு.. கம்மாண்டர் கூட அரட்டையடிச்சுக்கிட்டு இருக்காளே.. இவள் கழுத்தைப் பிடித்துக் குரல்வளையைத் திருகினால்தான் என்ன..?' என்ற வன்முறை எண்ணங்களை நந்தினியின் மனதில் விதைத்துக் கொண்டிருந்தாள் உத்ரா..
ரவிச்சந்திரனுடன் உத்ரா வெகு சகஜமாக பேசிச் சிரித்துக் கொண்டிருந்ததை அவள் விரும்பவில்லை..
அது என்ன கம்மாண்டருடன் இந்தக் குழாவு குழாவுகிறாள் என்று காண்டாகியிருந்தாள்.. கையிலிருந்த ஹேண்ட் பேக்கின் வாரைப் பிடித்து அதை ஒரு சுழற்று சுழற்றி உத்ராவின் பின் மண்டையில் தாக்கி.. போடி.. போய் ரூமிலிருக்கும் உன் புருசனைக் கவனி என்று சப்தம் போடும் கொதிநிலையில் இருந்தவளின் மீது வினித் வந்து பனிநீரை ஊற்றிக் குளிர வைத்து விட்டான்..
மனைவி விசயத்தில் வினித் பொசசிவ் ஆனவன்.. நந்தினியுடன் உத்ரா பேசுவதையே சகித்துக் கொள்ள மாட்டான்.. உத்ரா என்னடாவென்றால் ரவிச்சந்திரனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறாள்..
'வந்துட்டாருடி உன்னோட கம்மாண்டர்..' நந்தினி மகிழ்ந்து போனாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -166
எண்ணியிருந்தது ஈடேற -166
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-166.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-166.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy