எண்ணியிருந்தது ஈடேற -165

165 "உங்களைச் சொல்லிட்டாலும்.." உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள் நந்தினி.. அவள் அதைச் செய்வாள் என்று அவனுக்குத் தெரியு...


165


"உங்களைச் சொல்லிட்டாலும்.."
உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள் நந்தினி.. அவள் அதைச் செய்வாள் என்று அவனுக்குத் தெரியுமே.. அந்த உதட்டுச் சுழிப்பைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால்தானே அவளிடம் அவன் வம்பிழுத்தான்..
நந்தினியின் சுழித்த உதடுகளில் முத்தமிட வேண்டும் போல வேட்கை கொண்டான் ரவிச்சந்திரன்.. அவனது விழிகளில் தெரிந்த வேட்கையில் மிரண்டாலும் அந்த வேட்கையின் மீது தீராத ஆசை கொண்டாள் நந்தினி.. அவள் மீதான அவனது வேட்கையை விரும்பவும் செய்தாள்..
"வெள்ளைக்காரன் பேசினா பதில் பேசிக்கிட்டு நிற்பியா..? நானும் வெள்ளையாக அழகாகத்தானே இருக்கேன்.. என் கூட பேசேண்டி.."
''டீ'ன்னு சொல்லிட்டான்..' காற்றில் மிதந்தாள் நந்தினி..
அவளை வாடி, போடி என்று அவன் அழைப்பதை அவள் ஆட்சேபித்தவள் என்ற விவரமே சுத்தமாக அவளுக்கு மறந்து விட்டது.. அவனுடைய உரிமையான அந்த அழைப்பிற்காக மழையை வேண்டும் சாதகப் பட்ஷியைப் போல மனதுக்குள் அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள்..
"அபாண்டமா பேசாதீங்க பாஸ்.. இன்னைக்குன்னு சீக்ரம் எழுந்திருச்சுட்டேன்.."
"அதுக்கே மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது பாரு.."
"இல்லேன்னாலும் வயநாட்டில மழை கொட்டாது பாருங்க.. வருசம் பூராவும் மழை கொட்டற சிரபுஞ்சியில்ல வயநாடு..!"
"இது கோழிக்கோடுடி.."
"கோழிக்கோடும் வயநாடும் பூமிக்கு இந்தப் பக்கமாவும் அந்தப் பக்கமாவும் இருக்குது பாருங்க.. இதோ கூப்பிடு தொலைவில இருக்குது வயநாடு.."
"எங்கே கூப்பிடு பார்க்கலாம்.."
"எதை..?"
"வயநாட்டை.."
"என்ன அலுவலுக்காம்..?"
"நீ கூப்பிட்டா வயநாடு வருகிறதான்னு பார்க்க வேண்டாமா..?"
"அதிலெல்லாம் வித்தாரம் தெரிஞ்ச ஆளுதான்.."
"வித்தாரமா..? வாட்'ஸ் தி மீனிங் 'வித்தாரம்..?'"
"இது வேறயா..? வித்தாரம் மீன்ஸ் தி கிரேட் ரவிச்சந்திரன்..! போதுமா..? போவிங்களா.. வித்தாரத்துக்கு மீனிங் கேட்டு வந்திட்டாரு.."
"அவன் என்ன கேட்டான்..?"
"எவன்..?"
"வெள்ளைக்காரன்.."
"மறக்க மாட்டிங்களே.."
"உன்னைத்தானே..? மறக்கவே மாட்டேண்டி.."
ரவிச்சந்திரன் ஆழ்ந்த குரலில் சொன்னான்.. நந்தினிக்குள் எதுவோ நிகழ்ந்தது.. மனதுக்குள் மத்தாப்பூ சொரிவதைப் போல இருந்தது.. ரவிச்சந்திரனின் அந்த வார்த்தைகள் உண்மையாக இருக்க வேண்டும், நிலைக்க வேண்டும் என்று மனது பிரார்த்தனை செய்தது.. உண்மையில்லாத வார்த்தைகளை அவன் சொல்ல மாட்டான்தான்.. அவன் சொல்லும் வார்த்தைகள் என்றென்றும் நிலைத்து நிற்பவைதான்.. இருந்தாலும் அலை மோதும் பெண் மனம் சஞ்சலம் கொள்ளாமல் இருக்க வேண்டுமே..
நந்தினிக்கு அவன் மார்பில் முகம் புதைக்க வேண்டும் போல இருந்தது.. அவனைக் கட்டித் தழுவிக் கதறியழ வேண்டும் போல தவித்துப் போனாள்.. காதலின் வேகம் அவளைப் பாடாய் படுத்தியது.. நீ என்னுடையவன், நான் உன்னுடையவள் என்று சொல்லத் துடித்தாள்..
அவளது தவிப்பையும் துடிப்பையும் அவதானிப்பதைப் போலக் கூர்மையாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ரவிச்சந்திரன்.. தீட்சண்யம் மிகுந்த அந்தப் பார்வையில் அவளது தடுமாற்றம் அதிகமானது..
"நான் பேசினா ஊமையாகிடற.. வெள்ளைக்காரன் பேசினா மட்டும் கேசுவலாப் பேசுவியா..?"
அவளை அவளுடைய தடுமாற்றத்திலிருந்து வெளியே இழுக்க வேண்டும் என்பதற்காகவே அநியாயமாய் பேசி வைத்தான் ரவிச்சந்திரன்.. அவனது முயற்சிக்குப் பலன் இருந்தது..
"யார் கேசுவலாய் பேசினதாம்..?" மூக்கை விடைத்துக் கொண்டு சண்டைக்கு கிளம்பி விட்டாள் நந்தினி..
'இஃது..'
ரோசக்கார நந்தினியை உசுப்பி விட்டு அவளது ரோசத்தில் குளிர் காய்ந்தான் ரவிச்சந்திரன்..
"வேறு யார் பேசினதாம்..? நீதான்.."
"சும்மா பேசினேன்.. பேசினேன்னு சொல்லாதீங்க பாஸ்.. சீக்கிரமா எழுந்திருச்சுட்டதில சீக்கிரமாக் குளிச்சு ரெடியாகிட்டேன்.."
"பார்த்தாலே தெரிகிறதே.."
துளைக்கும் அவனது லேசர் பார்வைக்கு என்னென்ன தெரிந்தது என்று மனதுக்குள் எழுந்த கேள்வியில் லஜ்ஜை கொண்டாள் நந்தினி..
'இவன் இருக்கானே.. இப்படித்தான் இடக்கு மடக்கா பேசி வைப்பான்..'
"இது கோழிக்கோடில் பார்ச்சேஸ் பண்ணின ஸாரிதானே..?"
அவன் கண்டுபிடித்து விட்டான் என்பதில் நந்தினிக்குள் சந்தோச மழை பெய்தது.. அவன் வாங்கிக் கொடுத்த சேலைதான் அது என்று சொல்லாமல் நாசுக்காக அவன் அடையாளம் கண்டு கொண்டதை அடையாளம் காட்டியதில்..
'ஈ ரவிச்சந்திரன் வல்லிய மனுசனல்லோ..' என்று உவகை கொண்டாள் நந்தினி..
"ம்ம்ம்..."
"பெண்டாஸ்ட்டிக்கா இருக்கு.."
'சேலை மட்டும்தானா..?' அவள் மனதில் ஏமாற்றம் கவிந்தது..
"நீயும்தான்.." அவள் முகத்தை உற்றுப் பார்த்தபடி சொன்னான் அவன்..
நந்தினி உதட்டைக் கடித்தாள்.. உணர்வுகளின் ஆளுமைக்கும் உதடுகளுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை.. அதிகமாக உணர்வுகளின் தாக்குதலுக்கு ஆளாகிறபோது உதடுகளை மடித்துக் கடிக்கத் தோன்றுவதன் சூட்சுமம் யாதென்று புரியவில்லை..
உணர்வுகளின் ஆக்ரமிப்பிலிருந்து ஓடி ஒளிய முடியாததால் வெள்ளைக்காரனைப் பற்றிய கேள்விக்குப் பதில் சொல்வதைப் போல தப்பிக்க முனைந்தாள் நந்தினி..
"வெள்ளைக்காரனிடம் பேசனும்னு யார் நினைத்தா..?"
"நீ நினைக்கலையா..?"
"இல்லை.."
"வேற யாரிடம் பேச நினைத்த..?"
"ஏன் உங்களிடம் பேச நினைத்தேன்னுதான் வைத்துக்கங்களேன்.."
நந்தினி மறைமுகமாக தன் மனதை உணர்த்த முயன்றாள்.. அவன் விழிகள் மின்னின... அவள் மனதிலிருப்பதை முழுமையாக உணர்ந்து கொண்டானா என்று புரியாமல் அவள் தவித்தாள்.. எப்போதும் போல அப்போதும் அவள் இயல்பாக எதையோ சொல்கிறாள் என்று அவன் நினைத்துக் கொள்வானோ..
அப்படித்தான் என்பதைப் போல அவன் மேழும் கீழுமாக அவளை ஓர் பார்வை பார்த்து விட்டு..
"பேச நினைத்தவள் பேசியிருக்க வேண்டியது தானே..?" என்று கேட்டான்..
"பேசினேனே.."
"எப்போது..?"
"இப்போதுதான்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே போன் பண்ணினேனே.. நீங்கதான் டோன்ட் டிஸ்டர்ப் மீன்னு கடிச்சுட்டுப் போனை கட் பண்ணிட்டிங்க.."
நந்தினி குற்றம் சாட்டும் பாவனையுடன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொன்னாள்..
'வாட் எ சைல்டிஷ் கேர்ள்..!' அவன் அதையும் எப்போதும் போல விளையாட்டுத்தனமாய் எடுத்துக் கொண்டு ரசித்தான்..
"அது நீதானா..? ஹா.. ஹா.. ஸாரிடி.. நான் யார் கால் பண்றாங்கன்னு பார்க்கக் கூட இல்லை.. அமெரிக்காக்காரன் வேற ஒரு லைனில இருந்தான்.. அந்த டென்சன்.."
நந்தினியின் மனது மேலும் இனிப்பானது.. அவளுடைய போன் காலை அவன் தவிர்க்கவில்லை.. என்னைத் தொந்தரவு செய்யாதே என்று அவளிடம் சொல்லவில்லை.. வேறு யாரோ என்ற நினைவில் அவன் சொல்லியிருக்கிறான்.. பேசுவது அவள் என்பதைக் கவனித்திருந்தால் எத்தனை கோடி வருமானம் வருவதாக இருந்தாலும் அமெரிக்காக்காரனை அம்போ என விட்டு விட்டு நந்தினியிடம்தான் அவன் பேசியிருப்பான்..
அவனும் அதைத்தான் சொன்னான்..
"பேசறது நீதான் என்பதைக் கவனித்திருந்தா அமெரிக்காரனை அப்புறமாப் பேசுன்னு சொல்லியிருப்பேன்.. நீதாண்டி எனக்கு முக்கியம்.."
காதலாகி கசிந்துருகிப் போனாள் நந்தினி.. அவனை அவள் பார்த்த பார்வையில் புருவங்களை உயர்த்தியவன்..
"என்னடி..?" என்றான் கண்கள் மின்ன..
"ஒன்றுமில்லை.." அவளுக்கு வெட்கம், வெட்கமாக இருந்தது..
"ஹைய்யோ.. இது நீதானா..? அசத்தறடி.. புதுசாப் பார்க்கிற.. புதுசாப் பேசற.. புதுசாய் சிரிக்கிற.. எல்லாமே வித்தியாசமாய் இருக்கே.. என்ன..? என்மீது காதல் வந்திருச்சா..?"
இதை எதற்காக வேடிக்கை போல கேட்டு வைக்கிறான் என்று மனதுக்குள் பொருமினாள் நந்தினி..
அவன்மீது அவளுக்கு காதல் வரவே வராதா..?
"ஓகே..! மேடத்துக்கு என்மீது காதல் வந்த வீட்டதுன்னே வைத்துக்கலாம்.."
'அடப்பாவி..! அதையேண்டா சந்தேகக் கேஸில வைக்கிற..?'
"அதை என்கிட்டத்தானே சொல்லனும்..?"
'அதுக்குத்தானே போன் பண்ணினேன்..? நீதானே என் நம்பர்ன்னு கவனிக்காம கடி, கடின்னு கடிச்சுட்டு கட் பண்ணின..'
"வெள்ளைக்காரனிடம் ஏன் சொன்ன..?"
'டேய்.. டேய்.. அவன்கிட்ட என்னத்தைடா சொன்னேன்..? பக்கத்தில இருந்து கேட்டவனைப் போல பழி போடறியேடா..'
நந்தினிக்குப் பற்றிக் கொண்டு வந்தது..
"நீங்க கண்டிங்க.." என்று வெடித்தாள்..
"கண்டதைத்தானே சொல்கிறேன்.." சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் சொன்னான்..
"நேரத்தைப் பார்க்காம சீக்கிரமா ரெடியாகித் தொலைச்சுட்டேன்.. பிரேக் பாஸ்ட்டுக்கு டயமிருந்தது.."
"அதைச் சொல்லு.. நம்ம நந்தினி எப்படி பிரேக் பாஸ்ட்டை மறந்தான்னு நினைத்தேன்.. நீ சொல்லிட்ட.."
"ஹலோ பாஸ்.. உங்களுக்கெல்லாம் வயிறில்லையா.."
"இதோ இருக்கே.."
அவன் வயிற்றைக் காட்டினான்.. தொப்பையில்லாத கட்டு மஸ்தான உடல் கட்டு அவளைக் கவர்ந்து இழுத்தது.. அவனை ஆசையுடன் பார்த்தாள்..
"ஆக்சுவலா நீ ஃபுட் அயிட்டத்தைத்தான் இத்தனை இண்ட்ரெஸ்ட்டா பார்த்து வைப்ப.. இன்றைக்கு என்ன ஆச்சுடி..? என்னை இத்தனை இண்ட்ரெஸ்ட்டாப் பார்த்து வைக்கிற.. இப்படி நீ பார்த்து நான் பார்த்ததே இல்லை நந்தினி.. இது எவ்வளவு நல்லாயிருக்கு தெரியுமா..?"
நந்தினிக்கு அழுகையே வந்து விட்டது.. அவளால் ரவிச்சந்திரனிடம் காதலைச் சொல்லவே முடியாதா..? அவள் எதைச் சொன்னாலும் எப்படிப் பார்த்தாலும் அவன் விளையாட்டுத்தனமாகவே எடுத்துக் கொள்கிறானே..
"முடியலை.." என்றாள்..
"பசி தாங்க முடியலையா..?" அவன் கரிசனத்துடன் கேட்டான்..
"உங்களிடம் பேசுகிறதுக்கு அந்த வெள்ளைக் காரனிடமே பேசியிருக்கலாம்.." கடுப்பாகி விட்டாள் நந்தினி..
"என்னடி சொன்ன..?" நரசிம்ம அவதாரம் எடுத்தான் ரவிச்சந்திரன்..
"வாய்க்கு வாய் என்னை தத்தின்னு சொல்லுவீங்களே.. இப்பத் தத்தியாய் நிற்கிறது யாராம்..?"
"யார்..?"
"நீங்கதான்.. வேறு யாராம்..? டைம் பாஸ் பண்ண ஸ்மிம்மிங் பூல் பக்கம் வாக் வந்தேன்.. அவன் எதிரே வந்தான்.. ஏதோ அட்ரஸ் கேட்டான்.. எனக்குத் தெரியாது.. கூகுளில சர்ச் பண்ணு.. இல்லேன்ன ரிசப்சனில விசாரின்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்.. நீங்க வந்திட்டிங்க.."
"அதுக்காகவா எனக்கு 'தத்தி'ன்னு நேம் கொடுக்கிற..?" அவன் சந்தேகமாக முகவாயைத் தடவியபடி அவளை ஆராய்ச்சியாய் பார்த்து விட்டு..
"இல்லைன்னு தோன்றுதே.. வேறு ஏதோ இருக்கிறது போல இருக்கிறதே.." என்று சொன்னவன் அவளருகே குனிந்து..
"என்னடி..?" என்றான்..
நந்தினி சொல்லத்தான் நினைத்தாள்.. வாயைத் திறந்தால் வார்த்தை வந்து தொலைக்காமல் காற்று வந்து தொலைத்தது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -165
எண்ணியிருந்தது ஈடேற -165
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-165.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-165.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy