எண்ணியிருந்தது ஈடேற -163

163 உடைமாற்றிக் கட்டிலில் விழுந்து புரண்ட நந்தினிக்குள் சந்தோசம் சதிராடியது.. அவள் மனதிலிருந்த சந்தோசத்தை வாய்விட்டுக் கூவ வேண்டும் ப...


163

உடைமாற்றிக் கட்டிலில் விழுந்து புரண்ட நந்தினிக்குள் சந்தோசம் சதிராடியது.. அவள் மனதிலிருந்த சந்தோசத்தை வாய்விட்டுக் கூவ வேண்டும் போல இருந்தது.. உத்ராவிடம் சொல்லாமென்றால் அவள் வினித்துடன் உறவாடிக் கொண்டிருக்கும் நேரம் அது.. தாள முடியாத காதல் உணர்வுகளை மனதில் சுமக்க முடியாமல் தடுமாறிய நந்தினி இளைப்பாறும் வகை தெரியாமல் செல்போனை எடுத்து அதிலிருந்த ரவிச்சந்திரனின் படங்களைப் பார்வையிட ஆரம்பித்தாள்..
'இன்னைக்கு உறங்கினாப்புலதான்..'
உறக்கம் வராத அந்த இரவுப் பொழுது நீண்டிருப்பதைப் போல அவளுக்கு அயர்வை ஏற்படுத்தியது.. அவனருகில் இருக்கும்போது நேரம் நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது.. அவனில்லாத அந்தத் தனிமையில் ஒவ்வொரு நொடியும் யுகங்களாக கனத்தது..
செல்போனில் சிரித்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரனின் போட்டோவின் மீது கவிழ்ந்து முத்த மிட்டாள்.. நேரிலே இப்படி முத்தம் கொடுத்திருந்தால் அவன் எப்படி மகிழ்ந்து போயிருப்பான் என்று நினைத்துப் பார்த்தாள்..
'ஆ சுந்தர புருசனை கட்டுக்குள் அடக்கியிருக்க முடியாதல்லோ..'
உணர்வுகள் பொங்கி எழுந்ததில் உதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்க முயன்றாள்... ரவிச்சந்திரனின் மீதான காதல் அட்சய சுரபியைப் போல பொங்கி வழிந்தது..
தலையனையின் மீது செல்போனை நிமிர்த்தி நிற்க வைத்து.. குப்புறப் படுத்துக் கால்களை ஆட்டியபடி போட்டோவைப் பார்த்தாள்.. அவன் நேரிலே இருப்பதைப் போலவே இருந்தது.. இவனை மறக்க முடியுமா என்று மலைத்தாள்..
"உன்னை நினைக்கவே..
              நொடிகள் போதுமே..
     உன்னை மறக்கவே..
              யுகங்கள் ஆகுமே.."
வாய் விட்டுச் சத்தமாக பாடினாள்.. பூட்டியிருந்த ஏஸி அறையின் சுவர்களில் அவளது பாடல் பட்டு எதிரொலித்தது..
ரவிச்சந்திரனின் போட்டோவைப் பார்த்து அவனுடன் பேசுவதைப் போலப் பாடிக் கொண்டிருந்தாள்.. அவன் காதல் சொன்ன நாளை நினைத்து உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள்..
"நீ கேட்கையில்
              சொல்லவே இல்லையே..
     நான் நினைக்கையில்
              ஓரமாய் வலிக்குதே..
     என் மார்பில் காதல் வந்து
              மையமிட்டதே..
     உன்னை நினைக்கவே..
              நொடிகள் போதுமே..
          உன்னை மறக்கவே
              யுகங்கள் ஆகுமே.."
நந்தினி செல்போனை எடுத்து ரவிச்சந்திரனின் போட்டோவின் மீது முகம் புதைத்துக் கட்டிக் கொண்டாள்.. அவளது கண்களில் இருந்து கண்ணீர் துளி வழிந்தோடியது.. மூடிய இமைகளுக்குள் ரவிச்சந்திரன் வந்து நின்றான்.. புருவங்களை உயர்த்தி இறக்கிக் கண் சிமிட்டினான்.. இவள் மயங்கிக் கிளர்ந்தாள்.. இமைகளைத் திறந்து விழித்தபோது இவனைப் பிரிந்து தஞ்சாவூர் செல்ல நினைத்திருந்தேனே.. இவனைப் பிரிய முடியுமா என்று மனது திகைத்தது.. இவனை மறக்க முடியுமா..மறத்தல் சாத்தியமா..?
பெல்ட் மன்னனை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.. திரும்பி வந்து விடு என்று மேகநாதன் மகளை அழைக்கும் நாளுக்காக காத்திருப்பவள்.. மேகநாதன் அழைத்தவுடனே துள்ளிக் குதித்து தந்தையின் பின்னால் ஓடி விடுவாளா என்ன..?
ஓர் அடிகூட நகர முடியாமல் காதல் என்னும் இரும்புத் தளை அவள் கால்களைப் பினைத்திருப்பதில் நந்தினி கண்களை இறுக்கி மூடிப் பெருமூச்சு விட்டாள்..
ரவிச்சந்திரன் இல்லாத வாழ்வை அவளால் வாழ முடியாது.. அவனை அவள் நினைக்கவில்லை என்று நினைத்திருந்தாளே.. அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்..
"நான் உன்னை மறந்த சேதி
              மறந்து விட்டேன்..
     ஏன் இன்று குளிக்கும் போது
              நினைத்துக் கொண்டேன்..?
     கண்மூடி சாயும் பொழுதிலும்
              உன் கண்கள்
     கண் முன்பு தோன்றி மறைவதேன்..?
              ஏன்..ஏன்..ஏன்..?"
ரவிச்சந்திரனின் போட்டோவைப் பார்த்துக் கேள்வி கேட்டாள்.. ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. உன் காதல் நான்தானென்று.. அந்தச் சொல்லில் உயிர் வாழ்வேன் என்று நீலிமலைக்காட்டின் மரக்குடிலில் அவளைப் பார்த்துப் பாடியவன்.. பொய் சொல்ல வேண்டிய அவசியமேயின்றி அவள் மனதில் உண்மையிலேயே காதல் பொங்கி வழிந்து கொண்டிருப்பதை அறியாதவனாக அதே ஹோட்டலில் வேறு ஒரு அறையில் வேலையில் மூழ்கியிருந்தான்.. ஓடிச்சென்று அவன் அறைக் கதவைத் தட்டி நானும் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லி விடலாமா என்று துடித்தாள்.. பெண்மைக்கே உரித்தான தயக்கம் அவளைக் கட்டிப் போட்டது.. அவன் நீலிமலைக் காட்டில் காதல் சொன்னபோதே.. நானும் உன்னைக் காதலிக்கிறேன் என்று பதில் சொல்லியிருந்தால் இத்தனை இம்சையில்லையே என்று நந்தினி தன்னைத்தானே நொந்து கொண்டாள்..
இப்படியா மனதுக்குள் வந்து நிற்கும் காதலை அவனிடம் சொல்ல முடியாமல் தவிப்பாள்..?
கோழிக்கோடில் அவனிடம் வழிந்த ரோஸியின்மீது ஏன் கொலைவெறி வந்தது..அவனுடைய அத்தை மகள் ரத்தினம் அஜந்தாவைப் பார்த்தாலே நந்தினிக்கு ஏன் ஆகாமல் போனது..இப்போது தரங்கிணியின் மீது ஏன் பகைமை உணர்வு வருகிறது என்று அனைத்து கேள்விகளுக்கும் அவளுக்கு விடை கிடைத்து விட்டதைப் போல இருந்தது..
ஏதோ ஒருவகையில் ரவிச்சந்திரன் அவளை ஈர்த்திருக்கிறான்.. கண்டவுடன் காதல் என்பதைப் போல இல்லாவிட்டாலும் அவனைக் கண்டதிலிருந்து அவன்மீது அவளுக்குள் ஓர்விதமான உரிமையுணர்வு ஏற்பட்டிருந்ததை அவளால் மறுக்க முடியவில்லையே.. அவன் மீதான கோபதாபத்திற்கும் அவனிடம்தானே அவள் அடைக்கலத்தை நாடினாள்..?
"நீ என்னைக் கேட்டபோது..
              காதலில்லை..
     நான் காதலுற்ற போது
              நீயுமில்லை..
     ஒற்றைக் கேள்வி
              உன்னைக் கேட்கிறேன்..
     இப்போதும் எந்தன்மீது
              காதல் உள்ளதா..?"
இல்லையென்று அவன் சொல்லி விட்டாள் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் அவளது நெஞ்சம் நடுங்கியது.. இல்லை.. ரவிச்சந்திரன் அப்படிச் சொல்ல மாட்டான்.. அவளை என்றென்றும் காதலிப்பான் என்று மனதுக்குள் சமாதானம் செய்து கொண்டாலும்.. ஓரமாக ஓர்பயம் வந்து எட்டிப் பார்த்தது.. இல்லை.. அப்படி நடக்கக் கூடாது என்று பதறித் தவித்தாள்.. அவனது அணைப்பில் அடங்க வேண்டும் போல ஆவேசம் கிளர்ந்தது..
"ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே..
              உன் காதிலே..
     என்று கேட்கும் இந்தச் சத்தம்..?
              உன்னை நினைக்கவே
                   நொடிகள் போதுமே..
     உன்னை மறக்கவே..
              யுகங்கள் ஆகுமே.."
இந்த அளவுக்கு அவள் மனதை அவன் ஆக்ரமித்திருக்கிறான் என்பதே அன்றுதான் அவளுக்குப் புரிந்தது.. அவளுடைய முறை மாப்பிள்ளைகள் பலர் இருக்கிறார்கள்.. அனைவரும் பணக்காரர்கள்தான்.. படித்தவர்கள்தான.. அழகான தோற்றத்துடன் இருப்பவர்கள்தான்.. உறவினர் வீட்டுத் திருமணங்கள்கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் நந்தினி கலந்து கொள்ளும் போது அவள் இருக்கும் இடத்தைச் சுற்றி வட்டமிடுவார்கள்.. நந்தினி அவர்கள் இருக்கும் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாள்.. நந்தகுமார்கூட.. அவனுடைய முறைப்பெண்கள் அவனை அப்படிச் சுற்றி வளைத்து முற்றுகையிடவில்லையே என்று ஏக்கப் பெருமூச்சு விடுவான்..
கல்லூரியில் உடன் படித்த மாணவர்கள் அவள் மீது காதல் கணைகளை வீசியதுக்கு.. அதை அப்படியே பிடித்து அது என்ன சைஸில் இருக்கிறது என்று அழகு பார்த்து காலடியில் போட்டு மிதித்து விட்டு எதுவுமே நடக்காததைப் போல அவர்களிடம் வாய் வேறு வளர்ப்பாள்.. இவளிடம் அம்பு விடுவது கால விரயம் என்று போதி மரத்தடியில் உட்காராமலே அவர்கள் ஞானம் வரப் பெற்றவர்களாக அம்பு விடவேறு பெண்ணைத் தேடிப் போய் விடுவார்கள்.. டூப்ளிகேட் ரவிச்சந்திரன் கூட அவள்மீது காதல்கணை வீச முயன்று தோற்றுக் கொண்டிருப்பவன்தானே..
"என்சாலை எங்கும் எங்கும்
              ஆண்கள் கூட்டம்..
     என் கண்கள் சாய்ந்ததுண்டு..
              சேர்ந்ததில்லை..
     காட்சி யாவும் புதைந்து போனதே..
              என் நெஞ்சம்
     உன்னை மட்டும் தோண்டிப் பார்ப்பதேன்..?"
நந்தினி கட்டிலில் புரண்டு படுத்து அறையின் கூரையில் மிளிர்ந்த மின்மினி விளக்குகளை வெறித்தாள்.. முதன் முதலாக ரவிச்சந்திரனைக் கண்ட நொடியிலிருந்து அந்தநொடி வரை நடந்த நிகழ்வுகளை அவளது நெஞ்சம் அசை போட்டுப் பார்த்தது.. நீலிமலைக் காட்டின் புல்தரை நினைவுக்கு வந்தது.. அவன் காட்டிய வேகத்தை நினைத்துப் பார்த்தவளுக்குள் நாணம் வந்தது..
அன்று ஏன் அவனை மறுக்கத் தோன்றவில்லை..அவனை விட்டு விலகும் திராணியில்லாதவளாக ஒட்டிக் கிடந்தாளே.. ஓர் எல்லையைத் தொட்டபோது ஏன் மறுத்தாள்..?
"உன்னோடு அன்று கண்ட
              காதல் வேகம்..
     என்னோடு எட்டி நின்ற
              நாகரிகம்..
     கண்ணில் கண்ணில்
              வந்து போகுதே..
     என் நெஞ்சம்
              கட்டில் மீது திட்டுகின்றதே.."
கட்டிலின் மீது கிடந்த நந்தினியின் நெஞ்சம் பெருமூச்சு விட்டது.. ரவிச்சந்திரனின் புகைப்படத்தின் மீது கவிழ்ந்து புரண்டவளின் இதயம் விம்மியது..
எது நடந்தபோதும் அவனை விட்டுப் பிரிய முடியாமல் அவள் தவித்தது எதனால்..பெற்றவர்கள்உடன் பிறந்தவன்.. என்று அனைவரையும் பிரிந்து ஓடி வந்தவள் அவனைப் பிரிய முடியாமல் வயநாட்டில் தேங்கி நின்றது எதற்காக..ரவிச்சந்திரன் என்ற கம்பீர ஆணழகனைப் பிரிந்து அவளால் எங்கும் செல்ல முடியாது என்ற உண்மையை ஏன் அவள் உணராமல் போனாள்..
நந்தினியின் மனம் ரவிச்சந்திரனைத் தேடியது.. அவன் வேண்டும் என்று உடலும் மனமும் தேடும் இந்தத் தேடலின் முடிவுதான் என்ன..எப்போது விடியும்..எப்போது அவள் அவனிடம் அவளுடைய மனதிலிருக்கும் காதலைச் சொல்லப் போகிறாள்..?
"உன் தேடலோ..
              காதல் தேடல்தான்..
     என் தேடலோ..
              கடவுள் தேடும் பக்தன் போல..
     உன்னை நினைக்கவே
              நொடிகள் போதுமே..
     உன்னை மறக்கவே
              யுகங்கள் ஆகுமே.."
விடியாத இரவினுக்கே விடியவைத் தேடி நின்ற அந்தப் பேதை மெல்ல இமை தூடித் தூங்க முயற்ச்சித்தாள்.. தூக்கம் வருவேனா என்று மல்லுக் கட்டியது..
நகரும் மணித்துளிகளை அவள் கணக்கிட்டுக் கொண்டிருக்க.. தொழிலின் வரவு செலவை ரவிச்சந்திரன் கணக்கிட்டுக் கொண்டிருந்தான்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -163
எண்ணியிருந்தது ஈடேற -163
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-163_27.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-163_27.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy