எண்ணியிருந்தது ஈடேற -162

162 அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்த நந்தினிக்குள் இன்பமான அயர்வு இருந்தது.. எனக்குள் தேடித்தேடி உன்னை நான் கண்டு கொண்டேன் என்று ஒரு ...


162


அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்த நந்தினிக்குள் இன்பமான அயர்வு இருந்தது.. எனக்குள் தேடித்தேடி உன்னை நான் கண்டு கொண்டேன் என்று ஒரு கவிதையை ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்த ஞாபகம்.. அதைப் போல அவளுக்குள் தேடித்தேடி ரவிச்சந்திரனின் மீதான காதல் இருப்பதைக் கண்டு
பிடித்து விட்ட குதூகலம் அவளது உடலெங்கும் வியாபித்திருந்தது..
'இனம் விளங்கவில்லை - எவனோ
              என்னகம் தொட்டு விட்டான்..'
பாரதியென்ன பெண்ணுடலுக்குள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து அவளது மன உணர்வுகளை இனம் கண்டு கொண்டாரா என்ன..?
தரங்கிணியுடன் வாக்குவாதம் செய்து நேரம் கடந்திருந்ததில் ரவிச்சந்திரன் எரிச்சலோடு இருந்தான்.. போதாத குறைக்கு வெளிநாட்டுக் கம்பெனியிலிருந்து அவனுக்கு முக்கியமான போன் ஒன்று வந்து விட்டது.. இரண்டு மணி நேரம் கழித்து மறுபடியும் தொடர்பு கொள்வதாகச் சொல்லிப் போனைத் துண்டித்து விட்டான்..
"கடுப்படிக்கிறாங்க.. நமக்கு நைட் டைம்ன்னா அவங்களுக்கு டே-டைம்.. அதனால தூங்க விடாம டிஸ்டர்ப் பண்ணுவாங்க.. அவங்க ஆபிஸில் வந்து உட்கார்ந்துட்டா நாமும் அவங்களைப் போல வேலை செய்து கொடுக்கனும்னு நினைப்பாங்க.. நம்ம தூக்கத்தைப் பற்றி நினைக்க மாட்டாங்க.." வினித்திடம் சொன்னான்..
"உங்க அஸிஸ்டெண்ட் யாராவது இந்த வெர்க்கை முடித்துக் கொடுக்கலாமே.." வினித் தயக்கத்துடன்தான் கேட்டான்..
ரவிச்சந்திரனின் உயரத்துக்கு அவன் வினித்தை நண்பனாக ஏற்றுக்கொண்டு சமதையாக பழகுவதே பெரிது.. இதில் அவனுடைய தொழில் சம்பந்தமான விவகாரங்களில் அபிப்ராயம் சொல்லப் போய்.. நீயெல்லாம் எனக்கு அறிவுரை சொல்கிற அளவுக்கு வந்து விட்டாயா என்ற ரீதியில் அவன் கோபப்பட்டு விட்டால் என்ன செய்வது..? இல்லை.. என்தொழில்களைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று முறைத்து விட்டாலும் என்ன ஆவது..?
வேலையின் நெருக்கடியைப் பற்றி ரவிச்சந்திரன் வினித்திடம் பகிர்ந்து கொள்ளும் போது வினித் தலையை மட்டும் ஆட்டிவிட்டு சும்மா இருக்கவும் முடியாது..
இருதலைக்கொல்லி எறும்பின் நிலைமையில் தான் வினித் தர்மசங்கடத்துடன் அந்தக் கேள்வியைக் கேட்டான்..
ரவிச்சந்திரன் இயல்பாக வினித்தைப் பார்த்துப் புன்னகைத்ததில் வினித்துக்குள் 'அப்பாடி' என்ற நிம்மதி பரவியது..
"இது எனக்கு மட்டும் தெரிந்த கான்பிடென்சியல் டீடெயில்ஸ்... நான்தான் பார்த்துக் கொல்லனும்.. லேப்டாப்பில் உட்கார்ந்தால் ஒன்-அவரில் வேலை முடிஞ்சிரும்... டோன்ட் வொர்ரி.."
களைத்திருந்த அவன் முகத்தைப் பார்த்த நந்தினிக்கு அவனுடைய களைப்பை வாங்கிக் கொள்ள முடிந்தால் நன்றாக இருக்குமன்று தோன்றியது.. அவனை மடியில் சாய்த்து நெற்றியை வருடிக் கொடுக்க வேண்டும்.. முடி கோதி தாலாட்டுப் பாடவேண்டும்..
   'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே..
          அமைதி உன் நெஞ்சினில் நிறையட்டுமே..
    அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
     தொடர்ந்திருப்பேன் நெஞ்சில் தவழ்ந்திருப்பேன்..'
அவளது மனது பாடிய பாடலை விழிகளில் கண்டாளோ என்னவோ.. உத்ரா நந்தினியைக் கோர்த்து விட்டாள்..
"இவதான் உங்க பெர்சனல் செக்கரட்டியாச்சே சார்.. பேசாம இவளைத் தூக்கத்தை தியாகம் செய்து வொர்க் பண்ணச் சொல்லுங்க.. என்னடி..? வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்க..? வாயில் என்ன கமர்கட்டையா வைத்திருக்க..? நான் வொர்க் பண்ணித் தரேன்னு சொல்ல வேண்டியதுதானே.. உனக்கு சார் கொடுக்கிற சம்பளம் வேஸ்ட்டுடி.."
"விட்டா நானே வேஸ்ட்டுன்னு போட்டுக் கொடுப்படிநீ.. இப்படியாப்பட்ட பிரண்ட் கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கனும் போ.. பாருங்க பாஸ்..
நீங்க கொடுக்கிற வேலையைக் குறையில்லாமத்தானே நான் செய்துக்கிட்டு இருக்கேன்..? அப்புறம் எதுக்காக இவளிடம் பாட்டு வாங்க வைக்கறீங்க... என்ன வொர்க்குன்னு என்னிடம் சொல்லிட்டு நீங்க தூங்கப் போங்க பாஸ்.. எனக்கும் லேப்-டாப்பை ஆபரேட் பண்ணத் தெரியும்.. மனசிலாயி.."
நந்தினி ரோசப்படுவதைப் போல அவனது வேலையின் சுமையை வாங்கிக் கொள்ள முயன்றாள்..
"நீதானே.." என்றவனின் முகத்தில் களைப்பு நீங்கி சிரிப்பு வந்தது..
அதைக் கவனித்த உத்ராவுக்கு நந்தினி இவனுடைய ஊக்கசக்தி என்று தோன்றியது.. அவளுடன் வாயாடுவதை அவன் விரும்புவதை உத்ரா உணர்ந்திருந்தாள்.. அவனுடைய மனதை லேசாக்கும் மாய வித்தை நந்தினியிடம் இருப்பதில் உத்ராவுக்குள் வியப்பு வந்தது.. இதை நந்தினி அறிவாளா என்று தனக்குள் போட்டுக் கொண்டாள்..
இருபத்தி நான்கு மணி நேரமும் கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டிருப்பதைப் போல ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் ஓர் மனிதன்.. இரண்டு மாதங்களாக ஓரிடத்தில் தேங்கி நிற்கிறான் என்றால் நந்தினியின் சக்தியை என்னவென்று சொல்வது..?
"நீ நிஜமாவே எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைத்தா என் வேலையில் தலையைக் குடுக்காம உன் ரூமுக்கு ஓடியே போயிரு.. தட்'ஸ் தி கிரேட் ஜாப் யு நோ.. ஹா.. ஹா.."
ரவிச்சந்திரனின் சிரிப்பில் நந்தினிக்கு ரோசம், ரோசமாக வந்தது.. ரோசப்படுவதைப் போல நடித்தால் இவன் உண்மையாகவே ரோசப்பட வைக்கிறானே..
"வொய்.. வொய்..?" வலது உள்ளங்கையைக் குவித்து நியாயம் கேட்டாள்..
"எதுக்கு இப்படி வொய், வொய்ன்னு காதோரமா 'ஙொய்..'ன்னு சப்தம் போடற..? ஹா.. ஹா.."
"உங்களோட வொர்க் டென்சனைக் குறைக்கலாம்ன்னு நினைத்தா நீங்க நோஸ் கட் கொடுப்பீங்களா..?"
"என் வொர்க்கில நீ தலையைக் கொடுத்தாத்தான் டென்சன்.. எதையாவது எக்குத்தப்பாய் நோண்டி வைத்தேன்னு வை.. அத்தனை ஃபிகரும் கொலாப்ரேசன் ஆகி சொதப்பித் தொலைத்து சோதித்து வைத்திரும்.. அதுக்கு நீ ஹெல்ப் பண்றேன்னு இண்டர்பியர் ஆகாம இருக்கிறதுதான் பெட்டர்.."
"அது என்ன பாஸ் ஃபிகர்கள் எல்லாம் உங்களுக்கு மட்டும்தான் மடியும்ன்னு அப்படியொரு கான்பிடென்ஸ்..? அத்தனை ஃபிகரும் லேடி ஃபிகரா என்ன..?"
நந்தினியின் கேள்வியில் உத்ரா,  வினித்துக்கும் சிரிப்பு வந்துவிட அவர்கள் ரவிச்சந்திரனுடன் சேர்ந்து சிரித்தார்கள்..
"இப்படித்தாங்க உத்ரா.. உங்க பிரண்ட் அப்பப்ப அவளோட இண்டலிஜென்சியோட லெவலை புரூவ் பண்ணுவா.. இவளை பெர்சனல் செக்கரட்டரியா அப்பாயிண்ட் பண்ணியிருக்கோமேன்னு மனது பதக், பதக்குன்னு அடித்துக்கும்.."
"அதுவாவது உங்களை அடிக்குதே.. பெர்சனல் மேனேஜர் வேலைன்னு தானேடி உத்ரா.. நீ சொன்ன.. இவர் என்னடான்னா வார்த்தைக்கு வார்த்தை இவரோட பெர்சனல் செக்கரட்டரி நான்னு சொல்கிறார்.. இதுக்காகவாடி பி.டெக் படிச்சேன்..?"
"ஆஹா.. உலகத்திலேயே பி.டெக் படித்தவ இவ ஒருத்திதான் என்கிற நினைப்பிலேயே பேசுகிறா பாருங்க உத்ரா.. அங்கே நிற்கிறா இவ.."
"நோ பாஸ்.. நான் காரில உங்க பக்கத்தில் உட்கார்ந்திருக்கேன்.."
"என்ன ஒரு கண்டுபிடிப்பு..! கொலம்பஸெல்லாம் உன் கண்டுபிடிப்புக்கு முன்னால் நிற்கக்கூட முடியாது நந்தினி.. அடிக்கடி இப்படி உன் கண்டு பிடிப்பைச் சொல்லி அரள வைக்கிற பார்த்தியா.."
"உங்களுக்குப் போய் நான் ஹெல்ப் பண்ண நினைத்தேன் பாருங்க.. என்னைச் சொல்லனும்.."
"ஆக.. நீ வேலை பார்க்க நினைக்கலை... இதை ஹெல்ப்பா நினைத்திருக்கிற.. உனக்கு சேலரி எதுக்காக கொடுத்துக்கிட்டு இருக்கிறேன்னு நினைக்கிற.."
ரவிச்சந்திரனும் நந்தினியும் மிக்கி-மௌஸைப் போல அடித்துக் கொள்வதைப் பார்க்க உத்ராவுக்கும் வினித்துக்கும் வேடிக்கையாக இருந்தது.. ரவிச்சந்திரன் வெகு இயல்பாக நந்தினியை 'அவள், இவள்..' என்று பேசுவதைக் கவனித்தாள் உத்ரா.. நந்தினி அதை ஆட்சேபிக்காததும் அவள் மனதில் பதிந்தது..
வினித்தின் முழங்கை அவளது விலாவில் இடித்தது.. அவள் கவனித்த அதே விவரங்களை அவனும் கவனித்து விட்டானாம்.. அதை அவளுக்கு அறிவுறுத்துகிறானாம்..
'இவருக்கு என் இடுப்பில் இடிக்க இது ஒரு சாக்கு..'
உத்ராவுக்கு கிளுகிளுப்பாக இருந்தது... இதுபோன்ற கணவன் மனைவியின் அன்யோன்ய பரிபாஷை அவளுக்கு பிடித்தமானதாக இருந்தது.. கும்பலில் இருந்தாலும் தனித்து நிறுத்தும் பரிபாஷை இது.. வினித்திற்கும் அவளுக்கும் இடையே ஓடும் ரகசிய ஜாடைகளை உள்ளடக்கிய பரிபாஷை..
'நானும் கவனித்தேன்..' என்று கூறும் விதத்தில் அவனது புறங்கையைத் தட்டினாள் உத்ரா.. அதற்காகவே காத்திருந்ததைப் போல வினித்தின் விரல்கள் அவள் விரல்களோடு பினைந்து கொண்டன.. பின்சீட்டில் அமர்ந்திருந்ததால் சந்தடி செய்யாமல் அவன் நகர்ந்து உட்கார்ந்து நெருக்கத்தை அதிகப் படுத்தியதில் உத்ராவுக்கு ஏதேதோ நிகழ்ந்தது..
புதிதாக திருமணமான தம்பதிகள் எங்கே இருந்தாலும் தங்களுக்கென ஓர் உலகை சிருஷ்டித்து விடுவார்கள்.. நொடிப் பொழுதில் சிருஷ்டித்த உலகில் உத்ராவும் வினித்தும் மூழ்கியிருக்க நந்தினியும் ரவிச்சந்திரனும் வெற்றிகரமாக தங்களின் சண்டையை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்..
"இப்ப என்னதான் சொல்கிறீங்க பாஸ்..? நான் உங்களுக்குத் தேவையா.. தேவையில்லையா..?"
ரவிச்சந்திரனின் கண்களில் எதற்காக அப்படியொரு பிரகாசம் வந்து நிற்கிறது என்று நந்தினிக்குத் துளியளவும் புரியவில்லை.. அவள் என்னவோ என் உதவி உங்களுக்கு வேண்டுமா, வேண்டாமா என்று தான் கேட்டாள்... கேட்ட விதம்தான் அந்த லட்சணமாக அமைந்து விட்டது..
'எதுக்கு இப்படி கண்ணில பல்பை எரிய விடறான்..' நந்தினி அவனை விசித்திரமாக அவனைப் பார்த்து வைத்தாள்..
'என்ன பேசினோம்ன்னு தெரியாம விழிக்கிறா..' ரவிச்சந்திரனின் சிரிப்பு அதிகரித்தது..
"சிரித்தது போதும்.. என் கேள்விக்கென்ன பதில்..?" நந்தினி கோபத்துடன் கேட்டாள்..
"பாட்டுப் பாடறியா..?"
"உங்கிட்டப் பாடிட்டாலும்.."
"ஏனாம்..? நான் கலா ரசிகனில்லையா..?"
"யார் அந்தக் கலா..?"
"நீ அதிலேயே இரு.. என்னை நம்பவே கூடாதுங்கிற முடிவோட இருக்கறவளை எப்படித் திருத்தறது..?"
"யாரும் இங்கே திருத்துகிற மாதிரி இல்லை.. நீங்க திருந்தினால் சரி.."
"நீதான் என்னைத் திருத்தேன்.."
ரவிச்சந்திரனின் பார்வை.. வா.. வந்து என்னைத் திருமணம் செய்து கொண்டு என்னவளாகி என்னைத் திருத்து என்று அறை கூவி அவளை அழைத்தது..
'வருகிறேன்..' அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்..
'உன்னைத் திருத்துவதற்காக வரவில்லை.. உன்னுடன் சேர்ந்து வாழ்வதற்காக வருகிறேன்.. எப்படி எனது நிறை குறைகளுடன் என்னை நேசித்து நீ காதலிக்க ஆரம்பித்தாயோ.. அதைப் போல உனது நிறைகுறைகளுடன் உன்னை ஏற்றுக்கொண்டு என் மனதில் இருத்தி நான் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன்.. உனக்காக நான் எதையும் செய்வேன்.. இதை நீ அறிவாயா..?'
அவன் தேடிய காதலுடன் அவள் அவனுக்காக உருகிக் கொண்டிருக்கிறாள்.. இதை அவனிடம் சொல்ல முடியாமல் தரங்கிணி குறுக்கே வந்து விட்டாள்.. கடற்கரையில்தான் அப்படியென்றால் ஹோட்டலிலும் சொல்ல முடியாமல் ரவிச்சந்திரனுக்கு எதிர்பாராத வேலை வந்து சேர்ந்து விட்டதே..
முக்கியமான வேலையின் நினைவோடு இருப்பவனிடம் எப்படிக் காதலைச் சொல்வது...? ஓடுகிற ஓட்டத்தில் கேட்டுக் கொள்ளக் கூடியதா காதல் எனும் உணர்வு..?
அது அற்புதமானது... அதைச் சொல்லும் நொடிகளில் எவ்விதமான மனக்கிலேசமும், தடைகளும், இடையூறுகளும் அவர்களுக்கு இடையே இருக்கக் கூடாது..
காதலைச் சொல்லப் போகும் அவளும்.. கேட்கப் போகும் அவனும் பாரமற்ற லேசான மனதுடன் இறக்கை விரித்து வானத்தில் பறக்கும் உற்சாக மனநிலையுடன் இருக்க வேண்டும்..
நீலிமலைக்காட்டிலே.. மீன்முட்டி அருவிகளைப் பார்த்து முடித்த அற்புதமான அந்த நொடியிலே புல்தரையில் அவள் மீது சரிந்து அவன் அவளிடம் காதல் சொன்னானே.. அதைப் போன்றதொரு நொடி அவளுக்கு வேண்டும்..
வேலையிருப்பதால் டின்னரை முடித்து விட்டு அவரவர் அறைகளுக்கு சென்று விடலாம் என்று ரவிச்சந்திரன் சொன்னதை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டு டைனிங் ஹாலுக்குப் போனார்கள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -162
எண்ணியிருந்தது ஈடேற -162
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-162.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-162.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy