எண்ணியிருந்தது ஈடேற -161

161 "வாட் யு வாண்ட் தரங்கிணி.. ?" ரவிச்சந்திரனின் குரலில் அப்பட்டமான எரிச்சல் வழிந்தோடியது.. அது நந்தினிக்குத் திருப்தி...


161


"வாட் யு வாண்ட் தரங்கிணி..?"
ரவிச்சந்திரனின் குரலில் அப்பட்டமான எரிச்சல் வழிந்தோடியது.. அது நந்தினிக்குத் திருப்தியாக இருந்தது.. இதைவிட முகத்தில் அடித்ததைப் போல ஒருத்தியை புறக்கணிக்க முடியாது..
நந்தினி கண்டு கொண்ட அந்த எரிச்சலை தரங்கிணி கண்டு கொள்ளவே இல்லை.. மாறாக தேனினும் இனிய குரலில்..
"வெயிட் பண்ணுன்னு சொல்லிட்டு வந்தவர் என்னை மறந்துட்டு இங்கேயே நின்றுட்டீங்களே.. எங்கே நீங்கன்னு தேடி வந்தால் வாட் டு யு வாண்ட்ன்னு கொஸ்டின் பண்றீங்க.. ஐ வான்ட் ஒன்லி யு ரவி.. டு யு நோ இட்..?" என்று குழைந்தாள்..
கைப்பொருளை யாரோ பிடுங்க முனைவதைப் போல விதிர்த்துப் போனாள் நந்தினி.. அவளது உடலும் மனமும் அதிர்ந்தன.. அஜந்தாவின் வழிதலையே அவளால் சமாளிக்க முடியவில்லை.. இதில் இன்னும் ஒருத்தி.. தெரிந்து இரண்டு பேர்.. தெரியாமல் எத்தனை பேரோ..?
நந்தினிக்குள் விசனம் உண்டானது... ரவிச்சந்திரனின் மீது ஏன் காதல் வந்து தொலைத்தது என்று மருகினாள்.. அவளது விசனத்தை அவன் உணர்ந்து கொண்டானோ என்னவோ..
"ஸ்டாப் திஸ் நான்ஸென்ஸ்.." என்று உறுமினான்..
"வொய் திஸ் ஆங்க்ரி..?" 
அறியாப் பெண்ணைப் போல தரங்கிணி இமை கொட்டியதைப் பார்க்கச் சகிக்காமல் பல்லைக் கடித்தாள் நந்தினி..
இப்படிப் பச்சைக் குழந்தையைப் போல இமை கொட்டி ராவடி செய்வியா என்று தரங்கிணியை கன்னம் கன்னமாக அப்பு அப்ப வேண்டும் போல ஆவேசம் உண்டானது..
'என்கிட்ட இப்படி பசப்ப மாட்டேங்கிறாளே.. ஆம்பளையைப் பார்த்தாத்தான் இந்தப் பசப்பு வரும் போல..'
"உன்னிடம் பல தடவை சொல்லி விட்டேன் தரங்கிணி.. இந்த டைப் ஆஃப் பேச்சை அவாய்டு பண்ணனும்னு வார்ன் பண்ணிட்டேன்.. நீ மாறுகிறதைப் போல இல்லை.. ஐ டோன்ட் லைக் திஸ் பிஹேவியர்.. யு ஸீ.."
"ரவி.."
"குளோஸ் யுவர் மவுத்.. ஹீ ஆர் யு..? ஆப்டர் ஆல் யு ஆர் மை பிரண்ட்'ஸ் சிஸ்டர்.. அந்த ஒரு ரீசனுக்காக உன் முகத்தைப் பார்த்துப் பேசினா நீ லிமிட்டைக் கிராஸ் பண்ற.. வாட் ஆர் யு திங்கிங்....?"
இப்போதாவது தரங்கிணி வாயை மூடிக் கொள்வாள்.. நந்தினியின் முன்னால் பேச்சுக் கேட்க வேண்டியிருக்கிறதே என்று விலகிப் போய் விடுவாள் என்றுதான் நந்தினி நினைத்தாள்..
அவளது கணிப்பை தவிடு பொடியாக்கினாள் தரங்கிணி..
"ஐ திங்க் .. எபௌட் யு டார்லிங்.." என்று மறுபடி இமை கொட்டினாள்..
நந்தினியால் தாள முடியவில்லை.. முகம் இறுக கையிரண்டையும் முன்புறமாக மடித்துக் கட்டிக் கொண்டு கடலோரமாக போய் நின்று விட்டாள்.. அலைகடல் அவளைப் பார்த்துச் சிரிப்பதைப் போல இருந்தது.. அவன் காதல் சொன்னபோது நீ காதில் வாங்கிக் கொள்ளவில்லை.. இன்று நீ காதல் சொல்ல நினைக்கும் போது அவன் காதில் போட முடியவில்லை.. இதுதான் வாழ்க்கை.. தேடும் போது எதுவும் கிடைக்காது.. நீ தேடாதபோது உன்னைத் தேடி வரும்.. இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டால் எது வந்தாலும் எதிர் கொள்கிற பக்குவம் உனக்கு வந்து விடும் என்று கடலலை அவள் காதோடு சொன்னதைப் போல இருந்தது..
'பேசாம நீலிமலைக் காட்டில அவன் ஐ லவ் யு சொன்னபோதே ஓகே டார்லிங் ஓகேன்னு சொல்லியிருக்கனும்..' நந்தினி மனதுக்குள் புலம்ப..
'அப்போதுதான் அவன்மீது உனக்குக் காதல் வரலையே..' என்று நினைவுறுத்தியது அவள் மனம்..
ரவிச்சந்திரனின் மீதான அவளது ஈர்ப்பிற்கு இனக்கவர்ச்சிதான் காரணம் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாளே.. அது காதலின் வெளிப்பாடாக இருக்கக் கூடும் என்று நினைத்தும் பார்க்கவில்லையே..
"ம்ப்ச்.. கடலோரமா போய் நிற்காதே.. நைட் டைம்.. வா, போகலாம்.."
ரவிச்சந்திரன் தரங்கிணி அங்கே நின்று கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் நந்தினியின் அருகே விரைந்து அவளது தோள் பற்றி இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டான்..
உன்னுடன் இவ்வளவு பேசியதே அதிகம் என்று அவன் செய்கையில் உணர்த்தி விட்டதில் தரங்கிணி கொதித்துப் போனாள்..
வேக எட்டுக்களுடன் ரவிச்சந்திரனின் முன்னால் போய் நின்று வழி மறிப்பதைப் போல ஒற்றைக் கையை குறுக்கே நீட்டி..
"வெயிட் ரவி.. நாம் பேச வேண்டியிருக்கு.. இந்தப் பெண்ணை அனுப்பி விடுங்கள்.." என்றாள்..
"கையை மடக்கு.." கண்டிப்புடன் சொன்னான் ரவிச்சந்திரன்..
"மடக்கலைன்னா..?"
"ஒடித்து விடுவேன்.. மைண்ட் இட்.. என்னை யாருன்னு நினைத்த..? போ.. போய் உன் அண்ணனிடம் கேட்டுப் பார்.. ரவிச்சந்திரன் நல்லவர்களுக்குத்தான் நல்லவன்ங்கிறதை அவன் கதை, கதையாய் சொல்வான்.. என்ன தைரியமிருந்தா வழியை மறிக்க வருவ..? உன் அண்ணனுக்கே நான் தயவு, தாட்சண்யம் பார்க்க மாட்டேன்.. உனக்குப் பார்த்து விடுவேனா..?"
"ஓ நோ.. லேடிஸிடம் ஸாப்ட் நேச்சராப் பேசனும்ங்கிற கர்ட்டஸி கூட உங்களிடம் இல்லையா ரவி..? யூசுவலா நீங்க இப்படி பிஹேவ் பண்ண மாட்டிங்களே.."
"நான் இப்படி பிஹேவ் பண்றதைப் போல நீயும் நடந்துக்கிட்டது இல்லை.. கர்ட்டஸியைப் பத்தி நீ பேசாதே.. நீ என்ன கர்ட்டஸியை ஃபாலோ பண்ற..?"
"நீங்க தேர்ட் பெர்சனில்லயே ரவி.. நான் உங்களை அப்படி நினைக்கலையே.."
"பட்.. நான் உன்னை அப்படித்தான் நினைக்கிறேன்.. நீ எனக்குத் தேர்ட் பெர்சன்தான்.."
தரங்கிணியும் என்னென்னவோ பேசிப் பார்த்து விட்டாள்.. அவளுக்கும் ரவிச்சந்திரனுக்கும் ஆழ்ந்த பிணைப்பு உண்டு என்று நந்தினியின் மனதில் படிய வைத்து விட ஆனமட்டும் முயற்சி செய்து பார்த்து விட்டாள்.. எந்தப் பலனும் ஏற்படவில்லை.. ரவிச்சந்திரன் சற்றுக்கூட அசைந்து கொடுக்கவில்லை..
'கல் கோட்டையைக் கூட ஞான் தகர்த்து எறிஞ்சுருவேன்.. ஈ ரவிச்சந்திரன் இரும்புக் கோட்டையாய் இருந்து தொலைக்கிறானே..' தரங்கிணிக்கு ஆயாசமாக இருந்தது..
கடைசி அஸ்திரமாக ரம்ய மாலினியின் பெயரை பிரயோகித்தாள்..
"இவ்வளவுதான் உங்க தங்கை பாசம் போல.. ரம்யாவுக்கு ரிலேட்டிவ்ன்னா உங்களுக்கும் ரிலேட்டிவ் தானேன்னு நான் தப்பாக் கால்குலேசன் போட்டுட்டேன் போல.. நீங்க வேற.. ரம்யா வேறதானே..?"
"நோ.."
ஒற்றை விரலை உயர்த்தி.. ஒற்றை எழுத்தில் எச்சரித்தான் ரவிச்சந்திரன்.. அவனுடைய அந்த ஆவேசத்தில் நந்தினி பயந்து போனாள்.. உக்கிரமென்றால் உக்கிரம்.. அப்படியொரு உக்கிரம்..
"இதுவரைக்கும் எப்படியோ தெரியாது.. நீ இந்த அளவுக்கு என்னை டிஸ்டர்ப் பண்ணினதுக்குப் பின்னாடி ரம்யமாலினியைப் பத்திப் பேசக்கூட உனக்கும், உன் குடும்பத்துக்கும் ரைட் கிடையாது.."
"வாட் ஆர் யு ஸேயிங் ரவி..?"
தரங்கிணி பதறிப் போய் விட்டாள்.. அவளுடைய மிகப் பெரிய துடுப்புச் சீட்டே ரம்ய மாலினிதான்.. அவளை தனபாலனுக்கு திருமணம் செய்து கொடுக்கலாமா என்று ரவிச்சந்திரன் சற்று யோசித்ததினால்தான் தனபாலனின் தங்கையான தரங்கிணியிடம் நின்று பேசினான்.. இல்லாவிட்டால் 'யார் நீ' என்ற துச்சப் பார்வையோடு மற்ற பெண்களைக் கடந்து போகிறதைப் போல இவளிடமும் முகம் கொடுத்துப் பேசாமல் கடந்து போயிருப்பான்..
"ரவி.. இந்த மேரேஜ் புரோபசலை இரண்டு குடும்பத்திலும் விரும்புகிறாங்க.."
"இந்த செகண்டில நான் அதை விரும்பலை.. ஸோ.. என் குடும்பத்திலும் இனி விரும்ப மாட்டாங்க.. போ.. போய் உன் குடும்பத்திடம் சொல்லி விடு.. ரவிச்சந்திரன் அவனுடைய தங்கைக்கு தனபாலனைப் போன்ற ஒரு மாப்பிள்ளையை ஓர்நாளும் பார்க்க மாட்டான்னு சொல்லிப் புரியலை.."
இருளிள் தரங்கிணி தனித்து நிற்கிறாளே என்ற கவலை சிறிதளவும் இல்லாமல் அவளை விட்டு விலகி நந்தினியை கை வளைவுக்குள் பத்திரப் படுத்தி
இழுத்தபடி நடந்து விட்டான் ரவிச்சந்திரன்.. சற்று முன் நந்தினி கடலோரமாக நடந்து சென்றதற்கே அவன் அவளைக் கடிந்து கொண்டதை நினைத்துப் பார்த்த தரங்கிணிக்கு ரவிச்சந்திரனின் மனதில் தரங்கிணிக்கான இடம் எதுவென்று புரிந்து விட்டது..
தனபாலனின் திருமணத்தை வைத்து ரவிச்சந்திரனை அடைந்து விடலாமென்று அவள் திட்டம் தீட்டியிருக்க.. அவளாலே தனபாலனின் திருமணம் நின்றே போய் விட்டதே..
இதை தனபாலன், தரங்கிணியின் குடும்பத்தில் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதில் தரங்கிணிக்குத் துயரமாக இருந்தது...
இந்தத் திருமண ஏற்பாட்டை அவர்கள் ஆவலாக எதிர் பார்த்திருந்தார்கள்... கேரளாவின் முண்ணனி பணக்காரனாக... முதன்மையான தொழிலதிபனாக ரவிச்சந்திரன் மட்டுமே இருந்தான்.. அவனுடைய பெயரும் புகழும் உலகம் முழுவதும் பரவிக் கிடந்தது... அவனுக்கு அடுத்த நிலையில் இருந்து தனபாலன் மட்டுமல்ல.. இன்னும் சில கோடிஸ்வர ராஜபாரம்பர்ய இளம் தொழிலதிபர்கள் இருந்தார்கள்.. அவர்களில் திருமணமாகாத வாலிபர்கள் ரம்ய மாலினியைத் திருமணம் செய்து கொள்ளும் கனவோடு பெண் கேட்டிருந்தார்கள்.. அவர்களில் தனபாலனை மட்டும் தேர்ந்தெடுத்து அவனுக்குப் பெண் கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசிக்கும் அளவுக்கு ரவிச்சந்திரன் முக்கியத்துவம் கொடுத்திருந்ததிற்கான ஒரே காரணம் அவன் ரவிச்சந்திரனுடன் படித்த நண்பன் என்பதினால் தான்.. அந்த முக்கியத்துவத்தையும் தரங்கிணி இன்று உடைத்து விட்டாள்..
இதை அவளின் குடும்பத்தார் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்களோ என்று தரங்கிணிக்குக் கவலையாக இருந்தது.. ரவிச்சந்திரனின் தங்கையை தனபாலனுக்கு திருமணம் செய்து கொள்வதால் அவளுடைய குடும்பத்தின் மதிப்பு உச்சத்தில் ஏறி விடும்.. ரவிச்சந்திரனின் மைத்துனன் என்ற உறவு தனபாலனை உயரத்துக்கு கொண்டு போய் அவனுடன் இரண்டாம் நிலையில் இருக்கும் மற்ற தொழிலதிபர்களை மூன்றாம் நிலைக்குத் தள்ளி விட்டிருக்கும்..
இவையிரண்டும் இல்லாமல் போய் விட்டதை தனபாலன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்று தரங்கிணி கலங்கிப் போனால்.. அதற்கு தரங்கிணிதான் காரணம் என்று தெரிய வந்தால் அவளைச் சும்மா விடமாட்டான்..
ரம்யமாலினியின் மீது தனபாலனுக்கு என்றும் அதீத பிரேமம் கிடையாது.. இப்போதும் அவன் சில பெண்களிடம் காதல் சொல்லி விளையாடிக் கொண்டுதான் இருந்தான்.. அடக்கி வாசி என்று தரங்கிணிதான் எச்சரித்து வைத்திருந்தாள்.. ரம்யமாலினி ரவிச்சந்திரனின் தங்கை.. அவளைத் திருமணம் செய்து கொண்டால் தனபாலன் உச்சத்திற்கு போய் விடுவான்.. இந்த ஒன்றிற்காக மட்டும்தான் தனபாலன் அடக்கி வாசித்தான்.. அவன் இதற்காகத்தான் ரம்ய மாலினியைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான் என்று ரவிச்சந்திரன் கணித்து வைத்திருந்ததினால்தான் தனபாலன் பெண் கேட்டதும் உடனே சம்மதம் தெரிவிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தான்..
எக்கேடோ கெட்டுத் தொலையென்று தரங்கிணியை அம்போ என விட்டு விட்டு ரவிச்சந்திரன் வந்து விட்டதில் நந்தினிக்கு உறுத்தியது.. கோபமாக இருந்தவனிடம் பேசவும் பயமாக இருந்தது..
அவள் காதல் சொல்வதற்கு அந்த நேரம் உகந்ததல்ல..
"அவங்க தனியா நிற்கிறாங்களே.."
"தனியாத்தானே வந்தா..? ஸோ.. தனியாய் நிற்கிறா.. இது அவளோட பிராப்ளம்.. நம்முடையதில்லை.. கீப் கொயட்.."
"பாவம் பாஸ்.."
"அவளா பாவம்..? நீ வேற.. இவ அஜந்தாவை விட டேன்ஜரஸ்..! ஓ காட்..! ரம்யமாலினியை இவளோட அண்ணனுக்கு மேரேஜ் பண்ணிக் குடுக்கறதுக்கு எனக்கு மனதே வரலை.. தனபாலனோட கேரக்டர் ஒருபக்கம்.. இன்னொரு பக்கம் ஏதோ சரியில்லைன்னு தலைக்குள் ஒரு அலாரம் அடிச்சுக்கிட்டே இருந்தது.. வாட் ஃபார்ன்னு இப்போத்தான் புரியுது.. என்ன ஒரு சாகசம்..! இவ இருக்கிற வீட்டில என் தங்கை எப்படி நிம்மதியா இருக்க முடியும்..? யு நோ.. ரம்யா வெரி சாஃட்..! அவளுக்கான குடும்பம் இதுவல்ல.."
இதில் நந்தினிக்கு மாற்றுக் கருத்தே இல்லை.. ரம்ய மாலினியைப் போன்ற மென்மையான குணம் கொண்ட தேவதைக்கு எப்பேற்பட்ட குடும்பம் அமைய வேண்டும்.. இந்தத் தரங்கிணியைப் போன்ற நாத்தனார் இருக்கும் குடும்பத்தில் அவள் வாழ்க்கைப் படக் கூடாது..
அவர்களுக்காக காத்திருந்த உத்ராவும், வினித்தும் அவர்கள் தனிமையில் மனம் விட்டுப் பேசியிருப்பார்கள் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்..
அருகில் வந்த ரவிச்சந்திரனின் கோப முகத்தில் திகைத்துப் போன உத்ரா நந்தினியிடம்..
"என்னடி..?" என்றாள்..
"ஒன்றுமேயில்லை.." நந்தினி ஆயாசத்துடன் சொன்னாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -161
எண்ணியிருந்தது ஈடேற -161
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-161.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-161.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy