எண்ணியிருந்தது ஈடேற -160

160 ' இது நந்தினிதானா.. ?' ரவிச்சந்திரனின் கண்கள் மின்னின.. அவனுடைய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவித்துத் தடுமாறிய அவள்...


160


'இது நந்தினிதானா..?'
ரவிச்சந்திரனின் கண்கள் மின்னின.. அவனுடைய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவித்துத் தடுமாறிய அவள் பார்வையில் அவன் கள் உண்ட சிங்கமாக போதை கொண்டான்..
ஆழ்ந்த அவனது பார்வையின் போதையில் அவளது கன்னங்களில் ரோஜாக்கள் பூத்தன.. வெட்கச் சிகப்புடன் அவனைப் பார்க்காமல் கடலில் மறைந்து கொண்டிருந்த அந்தி வானத்தின் சூரியனைப் பார்த்தாள்..
அவளது வெட்கத்தை பார்த்தவனின் இதழ்களில் இளநகை படர்ந்தது.. வார்த்தைக்கு வார்த்தை எதிலும் அந்த வாயாடி பேச்சிழந்து தவித்ததை அணுவணுவாக அவன் ரசித்தான்..
லேசாக விழியுயர்த்தி அவனைப் பார்ப்பதும் அவனது பார்வையைச் சந்தித்து விட்டால் தடுமாறி கடல்லைகளைப் பார்ப்பதுமாக அவள் அடித்த கூத்தைப் பார்க்க முடியாமல் உத்ரா அவள் கையைக் கிள்ளி விட்டாள்..
"ஸ்ஆ.. வலிக்குதுடி குரங்கே..!"
ரவிச்சந்திரனை மறந்து கையை உதறினாள் நந்தினி..
"குரங்கா..?" வினித் தன் மனைவியை சற்றுப் பார்த்து விட்டு..
"அப்சரஸ் போல இல்ல இருக்க.." என்று சொக்கினான்..
உத்ராவின் முகத்தில் மத்தாப்பூ ஒளிர.. நந்தினி தோழியை ஏற இறங்க பார்த்து விட்டு..
"ஆனாலும் இது அநியாயம் அண்ண.. அப்சரஸை நீங்க நேரில பார்த்திருக்கீங்களா..?" என்று ஆட்சேபித்தாள்..
"இதோ.. என் கண்ணெதிரே நிற்கிறாளே.."
கிடைத்த வாய்ப்பைத் தவற விடாமல் இறுகப் பற்றிப் கொண்ட வினித் அடுத்த ஐஸ்கட்டியை உத்ராவின் தலைமீது ஏற்றினான்..
"இது மட்டும் அப்சரஸீக்குத் தெரியனும்.. அப்சரஸ் போஸ்ட்டே வேண்டாம்ன்னு ரிசைன் பண்ணிட்டுப் போயிருவாங்க.." என்றாள் நந்தினி..
அவளது துடுக்குத்தனத்தில் லயித்தான் ரவிச்சந்திரன்.. தோழியை கிண்டலடித்து வாய் வளர்த்துக் கொண்டிருந்த அந்த வாயாடி ரவிச்சந்திரனைப் பார்த்து விட்டால் பேச்சை மறந்து திக்கித் திணறினாள்..
"இதென்ன புதுசா இருக்கு..?" உத்ரா கேலி செய்தாள்..
அது புதிதாகத்தான் இருந்தது.. அதற்கு முன்னாலும் ரவிச்சந்திரன் பார்க்காதபோது அவனைப் பார்ப்பதும்.. அவன் பார்த்து விட்டால் அகப்பட்டுக் கொண்டவனாக தடுமாறுவதுமாக நந்தினி கூத்தடித்திருக்கிறாள்தான்.. அந்தத் தடுமாற்றம் வேறு.. இந்தத் தடுமாற்றம் வேறு.. ரவிச்சந்திரனைப் பார்த்த பார்வையில் மறைக்க முடியாத மயக்கம் இருந்தது.. அந்த மயக்கம் இரும்பை இழுக்கும் காந்தமாக அவனை ஈர்த்தது..
"ஏய்ய்.. முடியலைடி.." நந்தினியின் முதுகைத் தட்டிச் சிரித்தாள் உத்ரா..
"போடி.. குரங்கு.." நந்தினி முறைத்தாள்..
"மறுபடியும் குரங்கா..?" வினித் கண்டனம் தெரிவித்தான்..
"இவளுக்கு கோபம் வந்தா எல்லோரையும் குரங்காக்கிருவாங்க.. இப்பத்தான் அந்தத் தரங்கிணிக்கு குரங்குப் பட்டம் கொடுத்தா.." கணவனை சமாதானம் செய்தாள் உத்ரா..
"யாரைச் சொன்னாங்க..? அதோ.. அந்தப் பெண்ணையா..?"
ஆச்சரியத்துடன் கேட்டான் வினித்.. மஞ்சள் கலந்த மைதா மாவின் நிறத்திலிருந்த தரங்கிணிக்கு குரங்கு என்று நந்தினி பெயர் வைத்ததை அவன் மனது ஒப்பவில்லை..
"அழகா இருக்காங்க.. அவங்களைப் போய் குரங்குங்கறிங்களே.." ஆற்றாற்றுப் போனான்..
"என்னடி உத்ரா.. இப்பத்தான் உன்னை அப்சரசஸ்ன்னு ஆராதனை பண்ணினாரு.. ஒன் செகண்டில அந்தத் தரங்கிணி சைடில கோல் அடிக்கிறாரு.. ஸேம் சைடு கோல் போடறாருடி.. எதுக்கும் நீ சுரிதாரை அவாய்டு பண்ணிட்டு சேலையிலேயே இரு.." நந்தினி தீவிரமான முகபாவனையுடன் சொன்னாள்..
"எதுக்குடி..?" புரியாமல் கேட்டாள் நந்தினி..
"அப்பத்தான் உன் சேலை முந்தானையிலே முடிச்சுப் போட்டு அண்ணாவை ஸேவ் பண்ணிக்கத் தோதாயிருக்கும்.." சிரிக்காமல் சொன்னாள் நந்தினி..
"செம வாலு இல்ல.." வினித் உத்ராவிடம் சிரிக்க அவளும் சேர்ந்து சிரித்தாள்..
"உன் முன்னாடியே அந்தத் தரங்கிணிக் குரங்கை அழகுன்னு சொல்கிறார்.. நீ என்ன ஏதுன்னு கேட்காம சிரித்து மகிழ்ந்து போகிறயே.. ஏமாளியா இருக்காதே உத்ரா.." நந்தினி தூண்டிவிட்டாள்..
"நீ சொல்கிறதிலயும் பாயிண்ட் இருக்குடி நந்தினி.. அவ அழகா இருக்காளா..? ரூமுக்கு வாங்க.. வைச்சுக்கறேன்.." உத்ரா எச்சரிக்க..
"என்னடி நீ.. கட்டிக்கிட்டவரைப் போய் வைச்சுக்கிறேங்கிற..?" என்று சந்தேகம் கேட்டு விட்டு உத்ராவிடம் குட்டு வாங்கினாள் நந்தினி..
"ஆனாலும் உனக்கு இம்புட்டு வாய் ஆகாதுடி.. என்ன பேச்சுப் பேசற.." உத்ராவுக்கு வெட்கமாகி விட்டது..
"சாப்ட் லேடியா இருக்கிற என் வொய்பை கேடியா மாத்தப் பார்க்கறிங்களே.. அழகை ரசிச்சா அது ஒரு குத்தமா..?" ஆதங்கப்பட்டான் வினித்..
"இதே கொஸ்டினை நான் கேட்டால் நீங்க தாங்கிக்குவீங்களா..?" 'சுருக்' எனக் கேட்டு விட்டாள் உத்ரா..
வினித்தின் முகம் விழுந்து விட்டது.. ரவிச்சந்திரன் நந்தினியின் காதைப் பிடித்துத் திருகி..
"ஹனிமூனுக்கு வந்தவங்களை டைவர்ஸ் வரைக்கும் போக வைத்து விடுவ போல இருக்கே.. உன்னை நம்பி ஹனிமூன் கொண்டாட வந்திருக்காங்க பாரு.. இவங்களைச் சொல்லனும்.." என்று கடிந்து கொண்டான்..
"ஸ்ஆ.. வலிக்குது.. விடுங்க பாஸ்.."
விலக்குவதற்காக அவன் கையைப் பிடித்த நந்தினியின் உடலில் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற உணர்வு.. வலிமையான அவனது கரத்தின் மீது அழுந்திய அவளது மென்மையான கையை உத்ராவும் வினித்தும் அறியாத வண்ணம் அவன் அழுந்தப்
பிடித்து விட்டான்.. அவனது விரல்களின் இறுக்கத்தில் அடங்கிய அவள் விரல்கள் நடுக்கத்துடன் விலகிக் கொள்ள முயன்றன.. அவன் விடவில்லை.. அவளுக்கும் அவனுக்குமான அந்த ரகசியப் போராட்டத்தில் அவளது உடல் சூடேறியது..
நந்தினியின் தலை கவிழ்ந்தது.. அவளது பெண்மையின் வெட்கத்தை உணர்ந்தவனின் முகத்தில் வெற்றிப்புன்னகை வந்தது.. அவன் விரல்களைத் தள்ளி விடும் திராணியற்றுப் போனவளாக அவள் தவித்துப் போனதில் அவன் இன்பம் கொண்டான்..
ஒரு வழியாக தன் விரல்களை விடுவித்துக் கொண்ட நந்தினி ஒதுங்கி நின்றாள்.. அவளது தளிருடல் நடுங்கிக் கொண்டிருந்தது.. உதடுகள் துடித்தன.. ரவிச்சந்திரனுக்கு அவளை அள்ள அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது..
'இப்ப மட்டும் இவ தனியா என்னிடம் மாட்டியிருக்கனும்..'
தனிமை கிடைக்காத தாபத்துடன் பெருமூச்சு விட்டவன் உத்ரா, வினித்தின் மனத்தாங்கலின் நினைவில் அவர்கள் பக்கமாக திரும்பினான்..
"பொசசிவ்னெஸ் என்கிறது காதலர்களின் அடையாளம் வினித்.."
ரவிச்சந்திரன் சொல்லிக் கொண்டிருக்க நந்தினி ஆச்சரியத்துடன் உத்ராவைப் பார்த்தாள்..
'நீ சொன்ன ஸ்டேட்மெண்டை இவனும் சொல்கிறாண்டி..' என்றன அவளது விழிகள்..
அதை கண்டு கொள்ளாமல் 'உம்' மென்று இருந்தாள் உத்ரா..
"ஹேய்.. நிஜமாகவே நீ அண்ணா மேல கோபமா இருக்கியா..? போடி முட்டாள்.. அந்தக் குரங்கைப் பார்த்து அழகுன்னுதானே அண்ணா சொன்னார்.. அப்சரஸ்ன்னு சொல்லலையே.. அதை இந்தக் குரங்கைப் பார்த்துத்தானே சொன்னார்..?"
நந்தினி கேட்டதும் 'பக்' கென்று சிரித்து விட்டாள் உத்ரா.. வினித்தின் முகத்தில் தெளிவு வந்தது.. இனி உலக அழகியே எதிரில் வந்தாலும்.
'ப்பா.. யாரு இந்தக் குரங்கு..?' என்று உத்ராவிடம் கேட்க வேண்டும் என்று மனதுக்குள் சங்கல்பம் செய்து கொண்டான்..
"குரங்குதாண்டி பார்க்கிற எல்லோரையும் குரங்காக்கும்.. அந்த வகையில நீதாண்டி முதல் குரங்கு.." நாக்கைத் துருத்தி அழகு காட்டினாள் உத்ரா..
"விடுடி.. விடுடி.. குரங்கில இருந்துதானடி மனித குலமே தோன்றியிருக்கு..? நீயும் குரங்கு, நானும் குரங்கு.. நினைத்துப் பார்த்தால் எல்லாருமே குரங்குதான்.." பொன்மொழியை உதிர்த்துத் தப்பித்தாள் நந்தினி..
'எப்படி பால் வீசினாலும் எஸ்கேப் ஆகிடறா..' ரவிச்சந்திரன் உதட்டை மடித்துக் கடித்தபடி ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்தான்..
அவனுடைய ரகசிய பார்வையில் முகம் சிவந்து போனாள் நந்தினி.. ஓர் ஆறு நிமிடங்கள் அவளுக்கும், அவனுக்குமாக தனிமை கிடைத்து விட்டால் போதும்..
'ஐ லவ் யு..' என்று அவனிடம் சொல்லி விடுவாள்..
'நான் இவனை லவ் பண்றேன்..' மனது உணர்ந்து கொண்ட அந்த உண்மையை உடனடியாக அவனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது..
'யெஸ்.. ஐ லவ் ஹிம்.. ஐ லவ் திஸ் கம்மாண்டர்..' அவள் மனம் கூவியது.. அதில் அவளது மனம் தித்தித்தது..
மனம் கூவிய கூவலை அவனிடம் சொல்ல வேண்டுமானால் அவனுக்கும் அவளுக்குமான தனிமை தேவை.. அது இல்லாததில் அவள் தவித்துப் போனாள்..
அவன் கேட்ட போதெல்லாம் சொல்லாமல் இருந்து விட்டு இப்போது திடிரென காதல் ஞானோதயம் வரப் பெற்றவளாக அவனிடம் அவள் காதல் சொல்ல துடித்த போது தனிமை எங்கோ தொலைவில் நின்று கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது..
'மத்த நேரங்களில எல்லாம் உத்ராவும், வினித் அண்ணாவும் ஜோடி போட்டு.. ஹஸ்கி வாஸ்சில் கொஞ்சிக்கிட்டே தலை மறைவாய் ஆகிருவாங்க..
இவன் தனியாய் என்னை இழுத்துக்கிட்டு நடப்பான்.. ரொமான்டிக்காப் பார்ப்பான்... நான்தான் இவன் விடுகிற மலரம்புகளுக்கு பயந்துக்கிட்டு எஸ்ஸாவேன்.. இப்ப என்னடான்னா எனக்கு இவன்கூடத் தனியே பேசனும்னு தோணுது.. உத்ராவும் வினித் அண்ணாவும் நகராம இங்கேயே நங்கூரம் போட்டு நின்றுக்கிட்டு இருக்காங்களே..'
மாலை மயங்கி இருள் பரவ ஆரம்பித்திருந்த அந்த  நேரத்தில் உத்ராவும் வினித்தும் தனித்துப் பேச நகர முடியாது என்பதைக்கூட யோசிக்க முடியாமல் மனதுக்குள் பரபரத்தாள் நந்தினி.. பறவைகள் கூடுகளுக்குத் திரும்பும் நேரம் போல அது அவர்கள் அறைகளுக்குத் திரும்பும் நேரம்.. அதனால்தான் அவர்கள் இருவரும் சன்னக்குரலில் பேசியபடி.. ஒட்டி உராய்ந்தபடி அங்கேயே நின்றிருந்தார்கள்..
செல்போனில் யாருடனோ பேசியபடி நந்தினியைப் பார்த்த ரவிச்சந்திரனின் புருவங்கள் சுருங்கின.. அவனிடம் அவள் எதையோ சொல்லத் துடிப்பதை உணர்ந்து கொண்டவனின் புருவங்கள் என்ன என்று வினவும் விதமாக உயர்ந்து இறங்கின..
நந்தினி கிறங்கிப் போனாள்.. அதுவரை அவள் உணர்ந்த மயக்கம் போல இல்லாமல் கிளர்ச்சியூட்டி அவளைக் கிறங்கடித்தது இந்த மயக்கம்..
மூன்று வார்த்தைகள்..! மூன்றே மூன்று வார்த்தைகள்..
'ஐ லவ் யு..'
இவற்றை அவனிடம் அவள் சொல்லி விட்டால் போதும்.. அவள் மனதில் குடிகொண்டிருக்கும் பரபரப்பு அகன்று விடும்.. அகல்விளக்கின் அமைதி அவள் மனதில் நிலைகொண்டு விடும்..
அந்த மூன்று வார்த்தைகளை எப்போது அவனிடம் சொல்லுவாள்..?
அவளது விழிகளில் தெரிந்த இறைஞ்சுதலில் ரவிச்சந்திரன் செல்போனை அணைத்து விட்டான்.. இருள் பரவியிருந்த அந்தக் கடற்கரையில் கடலலைகளின் ஓசை காதில் விழுந்து கொண்டிருக்க.. ஊசிக் குளிர் காற்று உடலைத் துளைக்க.. அவனது மனமும் உடலும் அவளைத் தேடி ஒட்டிக் கொள்ளத் துடித்தன..
அவளது விழிகளும் தேடலை உணர்த்தியதில் அவன் உடல் சூடேறியது.. உத்ராவும் வினித்தும் அவனைப் பார்த்ததில் தன்னை அடக்கிக் கொண்டவனாக..
"போகலாமா..?" என்றான்..
"ஷ்யூர்.." வினித்தும் உத்ராவும் முன்னால் நடக்க ஆரம்பிக்க பின் தங்கிய ரவிச்சந்திரன் நந்தினியின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி..
"என்ன..?" என்றான்..
கவிந்திருந்த இருளும்.. பனிக்காற்றும்.. கடலலையும் நந்தினிக்கு உறுதுணையாக இருக்க.. அவள் தன் மனதைத் தெரியப்படுத்திவிட வேண்டும் என்ற வேகத்துடன்..
"நான்.. நான்.. நான்.." என்று தடுமாறினாள்..
"நீ.. வந்து..?"
"அது.. அது.."
"எது..? எது..?"
ரவிச்சந்திரன் விளையாட்டாகப் பேசியபடி நந்தினியை நெருங்கினான்.. நடுங்கும் அவள் தோள்களில் கையை வைத்துத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.. அவளது உச்சந்தலையில் சிறு முத்தம் பதித்தவன் மென்மையாக..
"என்னிடம் எதற்கு இந்த தயக்கம் நந்தினி..? சொல்ல நினைப்பதை தயங்காமல் சொல்.." என்றான்..
அவனது இறுக்கமான அணைப்பில் தைரியம் வரப்பெற்றவளாக நந்தினி வாயசைக்க முயன்றபோது..
"ரவி.." என்றபடி அங்கு வந்து விட்டாள் தரங்கிணி..
'இன்னுமா இந்த மோகினிப்பிசாசு இந்த இடத்தை விட்டுப் போகவில்லை..?' நந்தினி அவசரமாக ரவிச்சந்திரனை விட்டு விலகினாள்..
அவளும் ரவிச்சந்திரனும் நெருக்கமாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்து விட்ட தரங்கிணியின் கண்கள் வேட்டை நாயின் கண்களைப் போல அந்த இருளில் ஜொலித்தன..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -160
எண்ணியிருந்தது ஈடேற -160
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-160.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-160.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy