எண்ணியிருந்தது ஈடேற -159

159 தரங்கிணி யாரென்று அறியாமலே தான் யாரென்று தரங்கிணிக்குக் காட்டி விட்டாள் நந்தனி.. தரங்கிணியின் முகம் சுருங்கினாலும் அதை வெளிக்கா...


159


தரங்கிணி யாரென்று அறியாமலே தான் யாரென்று தரங்கிணிக்குக் காட்டி விட்டாள் நந்தனி.. தரங்கிணியின் முகம் சுருங்கினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் போய் விட்டாள்.. மறுநாள் ரவிச்சந்திரனைச் சந்திக்க முயன்றாள்..
"இம்பார்ட்டண்ட் வொர்க் இருக்கு.." என்று ரவிச்சந்திரன் மறுத்து விட்டான்..
தரங்கிணி விசாரித்தபோது அது உண்மையாகவும் இருந்ததில் அவள் பல்லைக்கடித்துக் கொண்டு அன்று பொறுமை காத்து விட்டு மறுநாள் ரவிச்சந்திரனைப் பின் தொடர்ந்து கடற்கரையில் தற்செயலாக சந்திப்பதைப் போல சந்தித்து ஒட்டிக் கொண்டாள்..
"அண்ணன் உங்களிடம் ஒரு விசயம் சொல்லச் சொன்னான்.." என்று சன்னக்குரலில் அவள் சொன்னதும் என்னவென்று கேட்பதற்காக நந்தினியை விட்டு இரண்டடி தள்ளி நடந்து விட்டான் ரவிச்சந்திரன்..
அவ்வளவுதான்.. நந்தினிக்கு கோபம் வந்து விட்டது.. ரவிச்சந்திரனிடம் சொல்லிக் கொள்ளாமல் நடந்து உத்ராவிடம் வந்து விட்டாள்.. பேச்சின் ஊடே நந்தினி எங்கேயிருக்கிறாள் என்று திரும்பிப் பார்த்த ரவிச்சந்திரன்.. நந்தினி தொலைவில் நடந்து கொண்டிருந்ததில் தரங்கிணியை அம்போ என விட்டுவிட்டு நந்தினியைப் பின் தொடர்ந்து விட்டான்..
தரங்கினிக்கு என்னவோ போல்தான் இருந்தது.. அதற்கெல்லாம் கௌரவம் பார்த்து அவள் கிளம்பி விட்டால் ரவிச்சந்திரனின் கரம் பற்ற அவள் போட்டிருக்கும் நீண்ட காலத் திட்டம் என்ன ஆவது..? அதனால் அவள் மரியாதையைப் பார்த்தால் வேலைக்கு ஆகாது
என்று ரவிச்சந்திரனைத் துரத்திச் சென்றாள்.. அவன் வினித்துடன் நடக்க ஆரம்பித்ததும் விலகி நின்றிருந்தவள், அவர்கள் திரும்பி வந்ததும் ரவிச்சந்திரனிடம் நெருங்கி நின்றாள்..
வினித் நாகரிகம் கருதி நடந்து விட.. ரவிச்சந்திரன் தரங்கிணியிடம் என்ன விவரம் என்று கேட்டுக் கொண்டிருந்தான்.. உத்ராவும் வினித்தும் தனித்துப் பிரிந்து விட.. நந்தினி மட்டும் தனிமையில் நின்று கொண்டிருந்ததைக் கண்டவன் அவளை நெருங்கித் தோளைத் தொட்டு அழைத்தான்.. திரும்பியவளின் கண்ணோடு அவன் கண் கலக்க.. தரங்கிணி உஷ்ணமானாள்..
அவனுடைய விரல் பட்ட இடம் வெப்பம் பட்டதைப் போல அந்தக் குளிருக்கு இதமாக இருந்ததில் நந்தினியின் மனம் மயங்கியது.. அவளது மனதில் ரவிச்சந்திரன் இருக்கிறான் என்று உத்ரா சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அவனை நேருக்கு நேர் பார்க்கும் துணிவு வரவில்லை..
"ஹேய்.. உனக்கு என்ன ஆச்சு..?"
அருகில் தரங்கிணி இருப்பதை மறந்து உல்லாசமாக வினவினான் ரவிச்சந்திரன்..
"ஒன்.. ஒன்.. ஒன்னுமில்லையே.." நந்தினி தடுமாறினாள்..
அவளது தடுமாற்றத்தைக் கூர்மையாக இனம் கண்டு கொண்டாள் தரங்கிணி.. இனம் இனமறியும்..
நந்தினி கவலைக்குரியவள் என்று அவளுக்கு விளங்கி விட்டது.. அஜந்தாவைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.. ரவிச்சந்திரன் அவளை ஒரு மனுஷியாகவே நினைக்க மாட்டான்.. ஆனால் நந்தினி..? அவளுக்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவத்தை தரங்கிணி கண்கூடாக ஒருமுறைக்கு இருமுறை பார்த்து விட்டாளே..
'இவ எங்கேயிருந்து வந்து தொலைந்தா..?'
நந்தினி முகம் சிவக்கத் திரும்பி நின்றாள்.. ரவிச்சந்திரன் மறுபடியும் அவள் தோள் தொட்டு அழைத்தான்.. அவன் தொட வேண்டும் என்பதற்காகவே அவள் புறமுதுகு காட்டினாளோ என்று எரிச்சல் பட்டாள் தரங்கிணி.. மயக்கத்துடன் நந்தினி திரும்பியதில்
அந்த மயக்கத்தை உடைக்க வேண்டுமென்ற வெறி தரங்கிணிக்குள் பொங்கியது..
"வெரி இம்பார்டண்ட் மேட்டரை உங்களுக்கு கன்வே பண்ணனும்னு நான் டூ டேஸா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் ரவி.. உங்களைப் பிடிக்க முடியலை.." சிணுங்கினாள்..
அதில் நந்தினியின் முகம் சுருங்கி விட்டது.. மயக்கத்திலிருந்து அவளை வெற்றிகரமாக வெளியே கொண்டு வந்துவிட்ட தரங்கிணி ரவிச்சந்திரனின்
கையைப் பற்றி இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டாள்..
"டூ டேஸா வெயிட் பண்றியா..? வாட் ஃபார்..? கல்ச்சுரல் பங்சனில அவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தியே.. அப்போதே சொல்லியிருக்கலாமே.." என்று தரங்கிணியிடம் கேட்டபடி நந்தினியை பின் தொடரச் சொல்லி சைகை செய்தபடி தரங்கிணியுடன் நடந்தான் ரவிச்சந்திரன்..
ஒரு இனிய கனவு கலைந்ததைப் போன்ற துயம் நந்தினியின் மனதைக் கவ்வியது.. ரவிச்சந்திரனின் மீதான ஆதர்சத்தையும் தாண்டி ஏதோ ஒரு பிரியம் மனதுக்குள் முகிழ்வதை உணர்ந்தவளுக்கு அவனுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் போல இருந்தது.. குளிர்ச்சி நிரம்பிய அவனுடைய பிரத்யேக பார்வைக்காக அவள் ஏங்கினாள்.. அதை உணராதவனாக அவன் நகர்ந்து விட்டதில் அவளுக்குள் சினம் துளிர்த்தது.. எப்படி அவன் அவளை விட்டுவிட்டு தரங்கிணியுடன் சேர்ந்து நடக்கலாம் என்று பொருமினாள்.. அவனுடைய அந்தச் செயல் நந்தினியை பெரிய அளவில் பாதித்தது.. மற்ற நேரங்களில் அவளைத் தொட்டுத் தொட்டுப் பேசுகிறவன்.. அவள் தொட்டுப் பேச ஆசை கொள்ளும் போது விலகிச் செல்வது எதை உணர்த்துகிறது..? இது எதற்கான அறிகுறி..?
"நந்தினி.." உத்ராவின் அழைப்பொலி கேட்டது..
'வினித் அண்ணாவுடன் கொஞ்சி முடிச்சிட்டாளா..?'
நந்தினிக்கு கோபம் கோபமாக வந்தது.. எதனால் அந்த கோபம் என்று அவளுக்கே விளங்கவில்லை.. அவளுக்கு ரவிச்சந்திரனிடம் அண்மை கிட்டவில்லை.. உத்ராவுக்கு வினித்தின் அண்மை வேண்டிய மட்டும் கிட்டுகிறது என்ற பொறாமையில் வரும் கோபமா இது..?
நீலிமலைக் காட்டின் மரக்குடிலில் அவனும் அவளுமாக இரண்டு நாள்கள் தங்கியிருந்தார்களே.. அப்போதெல்லாம் இந்தக் காதல் ஏன் அவள் மனதில் நுழைந்து தொலைக்கவில்லை..? அவன் கெஞ்சினானே.. ஒரு பொய்யாவது சொல் கண்ணே என்று பாடினானே.. அப்போதெல்லாம் மாறாத அவள் மனதில் எப்போது காதல் புகுந்தது..?
"என்னடி தனியா நிற்கிற..?"
"விதி.."
"அடேங்கப்பா.. பிலாசபி..? நீயெல்லாம் பிலாசபி பேசினா உலகம் தாங்காதுடி.. விட்டிரு.. ஆமாம்.. உன்னை பிலாசபி பேச வைத்துட்டு ரவிசார் எங்கே போனார்..?"
"அந்தத் தரங்கிணியோட போயாச்சு..?"
நந்தினி சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தாள் உத்ரா..
தரங்கிணியுடன் நடந்து கொண்டிருந்தவன் திரும்பிப் பார்த்து நந்தினியை 'வா'வென கையாட்டி அழைத்தான்..
"பார்த்தியா உத்ரா.."
"பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.."
"என்னை இங்கே நிற்க வைச்சுட்டு இவன் அந்த மேனா மிணுக்கியோட ஊர்கோலம் போவானாம்.."
"மேனா மிணுக்கியா..? யாரைடி சொல்கிற..?"
"எல்லாம் அந்தத் தரங்கிணிக் குரங்கைத்தான் சொல்கிறேன்.."
"அவளுக்கும் பட்டப் பெயரா..? ஐயோ பாவம்.."
"அவளா பாவம்..?"
"பின்னை இல்லையா..?"
"இல்லை.."
"ஓகே.. ஐ ஹேவ் நோ அப்ஜெக்சன்.. புரொசீட்.."
"ஐயா அவகூட ஜோடி போட்டு நடந்துக்கிட்டே என்னைப் பார்த்து கையாட்டுவானாம்.. நான் ஆட்டுக்குட்டி போல இவன் பின்னால ஓடனுமாம்.. இவன்
அந்த கேரளத்து பேரழகியிடம் கொஞ்சிக்கிட்டுப் போவானாம்.. பொங்குதுடி.."
"எதுக்காக பொங்கற..? உன்னை 'வா'ன்னு கூப்பிட்டாரு அது ஒரு குத்தமா..?"
"அது குத்தமில்லைடி.. அவ கூட ஜோடி போட்டு நடந்துக்கிட்டு என்னை 'வா'ன்னு கூப்பிடறான் பாரு.. அதுதான் குத்தம்.."
"இங்கே நீ மட்டும் தனியா இல்ல நந்தினி.. நானும் வினித்தும் இங்கேதான் இருக்கிறோம்.. எங்ககூட நீயிருக்கிறன்னு நினைக்காம உன்னை அவருடன் கூப்பிட்டுக்கனும்னு நினைக்கிறார் பாரு.. அந்த ஆங்கிளில நீ யோகிக்கனும் நந்தினி.."
"போடி.. நீ எப்போப் பார்த்தாலும் அவன் பக்கமாத்தான் பேசுவ.. நீ எனக்கு பிரண்டா..? இல்லை அவனுக்கு பிரண்டா..?"
"உனக்குத்தாண்டி பிரண்ட்.. அதனாலதான் உன்னை அவர் பாதுகாக்கிறதில எனக்கு சந்தோசமா இருக்கு.."
"என்னை அடிமையாய் நடத்தறான் உத்ரா.."
"ஊஹீம்.. உன்னை உரிமையா நினைக்கிறார்.. நீ முட்டாளைப் போல அதை உணர்ந்துக்காம பேசற.."
நந்தினி எதை உணர்ந்தாளோ இல்லையோ.. ரவிச்சந்திரனின் மீது அவள் மனதில் ஆசையாசையாய் காதல் பொங்குவதை உணர்ந்தாள்.. அவனும் அவளுமாக தனித்திருந்த தருணங்களில் காதல் வந்து தொலைக்காமல் இப்படி மற்றவர்கள் பக்கத்தில் இருக்கும் போது காதல் வந்து அவளை இம்சைப் படுத்தியது.. ரவிச்சந்திரனின் மீதான ஆசை அதிகரித்ததில் அவள் சலனம் கொண்டாள்.. அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்ததில் தவித்துப் போனாள்.. அவனைக் கட்டி அணைத்து மார்பில் முகம் புதைத்தவள்தான் அவள்.. மனதில் கள்ளமில்லாமல் பாதுகாவலனிடம் சரண் புகுவதைப் போல அவன் மார்பில் முகம் புதைவது வேறு.. இது வேறு..
இப்போதுதான் அவள் உள்ளத்தில் கள்ளம் புகுந்து விட்டதே..
'எப்படி இது நிகழ்ந்தது..?'
ஆற்றாற்றுப் போனாள்.. எவராலும் அவள் மனதை அடிமை கொள்ள இயலாது என்று இறுமாப்புடன் இருந்தாளே.. இதோ ஓர் நொடியில் அவள் மனதை அவன் அடிமை கொண்டு விட்டானே..
இப்போது என்ன செய்யப் போகிறாள்..?
'இவன்தான் வசியம் பண்ற வசியக்காரனாச்சே.. வசிய மருந்து ஒரு பார்சலோய்ன்னு தள்ளி விட்டிருப்பான்.. அலர்ட்டி இருக்காம வசியமாகித் தொலைச்சிட்டேனே..'
நந்தினியின் பார்வை அவனைத் தேடியலைந்தது.. அவன் தரங்கிணியிடம் பேசியபடி மறுபடியும் கையாட்டி அவளை அழைத்தான்.. தரங்கிணி இருக்கிறாளே என்று அவள் தயங்கினாள்.. மற்ற சமயம் என்றால் எவள் நின்றால் எனக்கென்ன என்று அருகில் போய் விடுவாள்..
இப்போது அப்படியில்லையே.. நந்தினி அவனிடம் மயங்கிப் போவது வழக்கம்தான் என்றாலும் இன்று வந்திருக்கும் புதுவிதமான மயக்கம் அவளை எங்கெங்கோ கொண்டு தள்ளுகிறதே.. அலைபாயும் அவள் மனதை சமனப் படுத்த அவளால் முடியவில்லையே.. அவன் அருகில் நிற்கும் போது அலை மோதும் அவள் மனது கரையுடைந்த வெள்ளமாக அவன்மீது தாவி விட்டால் என்ன ஆவது..? தரங்கிணி என்ற ஒரு குரங்கு அருகில் நின்று தொலைக்கிறதே..
"ரவிசார் கூப்பிடுகிறார் பார்.. போ, போ.." உத்ரா முடுக்கி விட்டாள்..
"என்னைத் துரத்தியடித்திட்டு நீ வினித் அண்ணாகிட்டக் கொஞ்சப் போகனுமா..?" நந்தினி நகர மறுத்தாள்..
"உன்னைத் துரத்தியடித்துட்டுத்தான் நான் என் ஹஸ்பெண்டைக் கொஞ்சப் போகனுமா என்ன..? உன்னை இங்கே நிறுத்தி வைத்துட்டுப் போனா வேணாம்ன்னு இருக்கா..?" உத்ரா நிதானமாக கேட்டாள்..
"நீதானே.. எதை வேண்டும்னாலும் செய்வடி.. கல்யாணம் பண்ணிட்டு ஹஸ்பெண்ட் வந்தவுடனே பிரண்டை த்ராட்டில விடற கேட்டகிரிதானேடி நீ.. போ.. போ.. அங்கே உன் வுட்பி உனக்காக காத்துக்கிட்டு இருக்கார்.. போய் கொஞ்சு.."
"அதில் உன்கேண்டி இத்தனை காண்டு..? நீயும் கொஞ்சப் போக வேண்டியதுதானே..? யார் வேண்டாம்ன்னு தடுத்தது..?"
"யாரைக் கொஞ்சச் சொல்கிற..? உன்னையா..?"
"என்னைக் கொஞ்ச என் ஆள் இருக்கிறார்.. நீ போய் உன் ஆளைக் கொஞ்சு.."
நந்தினிக்கு கிளுகிளுப்பாக இருந்தது.. உத்ரா அடையாளம் காட்டிய அவளுடைய ஆளாகப்பட்ட ரவிச்சந்திரனைப் பார்த்தாள்.. தரங்கிணியுடன் பேசிக் கொண்டிருந்தாலும் நந்தினியைத்தான் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளின் மனம் படபடத்தது.. அவனிடம் மயங்கிப் போனாள்..
அலையடிக்கும் அலைகடலை விட அதிகமாக அலை பாய்ந்தது அவள் மனது.. அவனைப் பார்த்தாள்.. தரங்கிணியுடன் பேசியபடி அவன் நகர்ந்து விட்டதில் அவளது பார்வை பதறி எங்கே அவனென்று தேடியலைந்தது.. அருகில்தான் அவன் நின்று கொண்டிருந்தான்.. அவளுடைய பார்வை அவனைத் தேடுவதை பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.. தரங்கிணியை மறந்து நந்தினியே குறியானான்.. அவளது பார்வை அவனைக் கண்டுபிடித்து அவன் மீது படியப் போகும் அந்த அற்புத நொடிக்காக காத்திருந்தான்..
அவள் பார்வையும் அவனைக் கண்டு பிடித்து அவன் மீது படிந்து விட்டது..
அந்தப் பார்வை..! அதில் தெரிந்த வேகம், காதல், தாபம்..! ரவிச்சந்திரன் அவனாக இல்லை.. வேறொரு உலகத்தில் இருந்தான்.. அது கோடிஸ்வர ரவிச்சந்திரனைத் தேடும் பார்வையாக இல்லை.. அவளது மனதைக் கொய்த மாயவனைத் தேடும் பார்வை..
நந்தினியின் மனதை வென்று விட்டதை புரிந்து கொண்ட ரவிச்சந்திரன் தரங்கிணியை மறந்தான்.. அவள் பேசிக் கொண்டிருந்ததையும் மறந்தான்.. விலகி வேகமாக நந்தினியை நோக்கி நடந்து விட்டான்..
தரங்கிணியால் அவனது வெளிப்படையான புறக்கணிப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -159
எண்ணியிருந்தது ஈடேற -159
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-159.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-159.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy