எண்ணியிருந்தது ஈடேற -158

158 "உத்ராவுடன் பேசி முடித்தாச்சுன்னு ஒரு போன் கால் பண்ண மாட்டியா.. ? நானும் நீ இப்போது கூப்பிடுவ.. பிறகு கூப்பிடுவன்னு காத்தி...


158


"உத்ராவுடன் பேசி முடித்தாச்சுன்னு ஒரு போன் கால் பண்ண மாட்டியா..? நானும் நீ இப்போது கூப்பிடுவ.. பிறகு கூப்பிடுவன்னு காத்திருக்கேன்.. உன் போன்
வந்தபாடாக இல்லை.. சரி பேசினது போதும்ன்னு உங்க இரண்டு பேருடைய பேச்சு வார்த்தையை ஸ்டாப் பண்ணிடலாம்ன்னு நானும் வினித்தும் தீர்மானம் போட்டுக் கிளம்பி வந்தோம்.."
தரங்கிணி என்ற ஒருத்தி அங்கே இல்லாததைப் போல நந்தினியின் கண்ணோடு கண் கலந்து பேசிக் கொண்டிருந்தான் ரவிச்சந்திரன்.. இருவரின் விழிகளும் கலந்ததில் நந்தினி தடுமாறினாள்.. வெகு நுட்பமான தடுமாற்றம் அது.. பெண்ணுக்கு பெண் மட்டுமே உணரக் கூடிய தடுமாற்றம்.. தரங்கிணி உஷ்ணமானாள்..
'கதை இப்படிப் போகுதா..? யார் இவள்..?'
தரங்கிணி கேரளத்து அரச குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பரம்பரையைச் சேர்ந்தவளாக இருந்தாலும் மூணாறில்தான் வளர்ந்தாள்.. அங்கே அவளுடைய தந்தைக்குச் சொந்தமாக எஸ்டேட் இருந்தது.. கோழிக் கோடிற்கும், வயநாட்டுக்கும் அவ்வபோது வந்து போவாள்.. தெளிவாக தமிழ் பேசுவாள்.. உலகம் சுற்றிக் கொண்டிருக்கும் ரவிச்சந்திரன் எப்போதாவது ஒர்தரம் வயநாட்டுக்கு வந்து போகும் போது இவளுக்கு எப்படியாவது தகவல் கிடைத்து விடும்.. வயநாட்டுக்கு பறந்து வந்து விடுவாள்.. இப்போது அதிக நாள்களாக ரவிச்சந்திரன் வயநாட்டில் தேங்கி நிற்கும் தகவல் வந்திருந்ததில் கோழிக்கோடில் தங்கி ரவிச்சந்திரனிடம் காதல்பயிர் வளர்க்க முடியுமா என்று ஆழம் பார்க்க வந்திருந்தாள்..
'அஜந்தா மட்டும்தான் வில்லின்னு நினைத்தேன்.. இங்கே இன்னொருத்தியும் போட்டிக்கு வந்திருக்கிறாளே..'
அந்த இன்னொருத்திக்கு ரவிச்சந்திரன் அளித்த முக்கியத்துவத்தில் தரங்கிணியின் அடிவயிறு கலங்கியது.. அஜந்தாவைப் பற்றி அவளுக்கு யாதொரு கவலையும் இல்லை.. ரவிச்சந்திரனுக்கும் அவனுடைய தாய், தங்கைக்கும் அஜந்தாவையும், அவளது குடும்பத்தையும் பிடிக்கவே பிடிக்காது.. அது தரங்கிணிக்கு சாதகமான ஒன்று.. அஜந்தாவின் அப்பா யோகானந்தன் எப்பேற்பட்ட ஊதாரியென்று வயநாட்டுக்கே தெரியும்.. தரங்கிணியின் அப்பா அப்படியில்லை.. தன் பரம்பரைப் பெருமையையும் செல்வத்தையும் காப்பாற்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்.. இன்னொன்றும் இருந்தது.. தரங்கிணியின் அண்ணன் தனபாலன் ரவிச்சந்திரனைப் போலவே உலகம் முழுவதும் சுற்றும் இளம் தொழிலதிபன்.. ஏற்றுமதி வணிகத்தில் பிரசித்தி பெற்றவன்.. ரவிச்சந்திரனின் அளவு பேசப்பட வில்லையென்றாலும் ரவிச்சந்திரனுக்கு அடுத்தபடி கேரளத்து வியாபார உலகம் கொண்டாடும் இடத்தில் இருப்பவன்..
அவனுக்கு ரம்யமாலினியைப் பெண் கேட்டிருந்தார்கள்.. அது தொடர்பான திருமணப் பேச்சு வார்த்தைகளை ரகசியமாக வைத்திருந்தார்கள்.. அருள்மொழிவர்மனுக்கும் யாழினிக்கும் கூட இது தெரியாது.. முடிவு செய்த பின்பு பெரியவர்களிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று ரவிச்சந்திரன் சொல்லி விட்டான்.. தாய், தகப்பனுக்குத் தெரியாமல் ஒரு துரும்பபைக் கூடக் கிள்ளிப் போடாத ரவிவர்மன் மகளின் திருமண விசயத்தில் மட்டும் மூச்சுக்கூட விடாமல் அமைதி காத்தார்..
ரம்யமாலினியை தனபாலன் பார்த்திருக்கிறான்.. அது போல ரம்யமாலினியும் தனபாலனை பார்த்திருக்கிறாள்.. உறவினர் வீட்டு விழாக்களில் தள்ளி நின்று கூட்டத்தின் மத்தியில் பார்த்துக் கொண்ட பார்வை அது.. முறையான பெண் பார்த்தல் இன்னும் நடைபெறவில்லை.. அதுபற்றிப் பேச தனபாலனின் குடும்பத்தில் முயன்றாலும் ரவிச்சந்திரன் பிடி கொடுக்கவில்லை.. தனபாலன் அவனுக்கு நண்பன்தான்.. இருந்தாலும் ஏதோ ஒன்று ரவிச்சந்திரனின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.. அது தனபாலனின் கல்லூரிக் காலக் காதல் லீலைகளாகக் கூட இருக்கலாம்..
ரவிச்சந்திரன் பெண்கள் விசயத்தில் நேர்மையானவன் அல்ல என்றாலும் இதுவரை எந்தப் பெண்ணையும் அவன் காதலித்ததில்லை.. இதை நந்தினியிடம் சொன்னால் இது ஒரு பெருமையா என்று கேட்பாள்.. ஒரு பெண்ணைக் காதலிப்பதற்கான நேர்மை அவனிடம் இருக்கிறதா என்று கேட்டவள்தானே அவள்..!
தனபாலன் காதல் என்ற பெயரில் பல பெண்களை ஏமாற்றியவன்.. இதை ரவிச்சந்திரன் நன்கு அறிவான்.. ஆசைகாட்டி மோசம் செய்வதும் குற்றமே என்ற கோபம் அவனிடம் இருந்தது.. தனபாலனின் குடும்பத்தாரிடம் இதைப்பற்றி அவன் குறிப்பிடவில்லை.. தூது வந்த தரங்கிணியிடம் சொன்ன போது..
"யங் ஏஜில ஜெண்ட்ஸ் எல்லாம் முன்னே பின்னே இருக்கிறது சகஜம்தானே ரவி.. நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி..?" என்று கேட்டாள்..
அவள் அழுத்தம் கொடுத்த 'நீங்களே..' என்ற வார்த்தைக்கான அர்த்தம் எதுவென்பதை ரவி நன்கு அறிவான்.. நீயும் பெண்பழக்கம் உள்ளவன்தானே.. என் அண்ணனைச் சொல்ல உனக்கென்ன தகுதியிருக்கிறது என்ற மறைமுகக் கேள்விதான் அது..!
ரவிச்சந்திரன் இந்தக் கேள்வியை விரும்பவில்லை.. ரம்யமாலினியின் வாழ்க்கைக்காக அவன் குரல் கொடுத்தால் தனபாலனும் அவனது குடும்பத்தாரும் இந்தக் கேள்வியைத்தான் முன்னிருத்துவார்கள் என்பதில் அவன் யோசனையானான்.. ரவிச்சந்திரன் எந்தப் பெண்ணையும் காதல் என்ற பெயரில் ஏமாற்றவில்லை என்பதை அவர்கள் மறந்து விடுவார்கள்..
அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.. அது அவனுடைய தங்கையின் வாழ்வைப் பாதித்து விடக் கூடாது.. தனபாலன் ரம்யமாலினியின் மீது உண்மையான காதலைக் காண்பிப்பான் என்று எப்படி அவன் நம்புவது..? நந்தினியிடம் ரவிச்சந்திரன் காட்டும் காதலை தனபாலன் பல பெண்களிடம் காட்டியிருக்கிறானே..
ரவிச்சந்திரனுக்கு ரம்யமாலினியின் சந்தோசம் முக்கியம் தனபாலன் ரம்யமாலினியை சந்தோசமாக வைத்துக் கொள்வானா என்ற சந்தேகம் ரவிச்சந்திரனுக்கு இருந்தது.. அதை தெளிவு படுத்திக் கொள்ளாமல் திருமண பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கக் கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான்..
தரங்கிணி அந்த உறுதியை உடைக்க முடியன்றாள்.. ரவிச்சந்திரனின் தங்கையை தரங்கிணியின் அண்ணன் திருமணம் செய்து கொள்வது என்பது அவர்களது உறவினர் வட்டாரத்தில் எவருக்கும் கிட்டாத வரம்.. தனபாலனுக்கு மட்டும் அந்த வரம் கிட்டி விட்டால் அதையே இறுக்கிப் பிடித்து ஏணியாக்கி ரவிச்சந்திரனை அவள் தொட்டு விடுவாள்..
ரவிச்சந்திரனை காதல் என்ற வார்த்தை சொல்லி அணுக முடியாது.. நண்பனின் தங்கை என்பதற்காக ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக் கொண்டிருப்பவன் இவள் காதல் சொல்லி விட்டால் பேசுவதையே நிறுத்தி விடுவான்.. அதனால் அந்த விசப்பரிட்சையை தரங்கிணி மேற்கொள்ளவில்லை..
தனபாலன் ரம்யமாலினிக்காக உருகுகிறான்.. அதற்காக தரங்கிணி ரவிச்சந்திரனிடம் பேச வந்திருக்கிறாள் என்று கதை பிணைந்து அந்தப் போர்வையில் ரவிச்சந்திரனுடன் பேச்சை வளர்த்துக் குளிர் காய்வாள்..
"இதையெல்லாம் நீ பேச வேண்டாமே.. உன் பேரண்ட்ஸை பேசச் சொல்லலாமே.." ரவிச்சந்திரன் நாசுக்காக கழன்று கொள்ளப் பார்ப்பான்..
"எங்கே..? அவங்க உங்க பேரண்ட்ஸிடம் பேச நினைத்தா நீங்கதான் முடிவெடுக்கனும்னு அவங்க எஸ்கேப் ஆகிடறாங்களாமே.. உங்களிடமே பேசலாம்ன்னு லைனில் வந்தா ஆல்வேஸ் உங்க போன் எங்கேஜ்டாவே இருக்காமே.. நேரில் பேச வருவதை நீங்க லைக் பண்ணுவீங்களோ.. மாட்டிங்களோ.. நோ அதர் வே.. என்னைத் துளைத்து எடுத்து அனுப்பி வைத்திடறாங்க.. நீங்க என்னை.. ஐ மீன்.. என் வார்த்தையை.. மறுக்க மாட்டிங்கன்னு அவங்க நம்பறாங்க.. வாட் கேன் ஐ டூ..?" செல்லமாக சிணுங்குவாள் தரங்கிணி..
"தேவையில்லாத நம்பிக்கையை அவங்க வளர்த்துக்க வேண்டாமே.. உன்னை.. ஐ மீன்.. உன் வார்த்தையை.. நான் மறுக்க மாட்டேன்னு தவறாய் நம்பிக்கிட்டு இருக்காங்களே.. அதைச் சொன்னேன்.." ரவிச்சந்திரன் பிடி கொடுக்க மாட்டான்..
தரங்கிணி அதற்கெல்லாம் அயர்ந்து பின்வாங்குகிற ஆள் அல்ல.. முகத்தில் அடித்தாற்போல் ரவிச்சந்திரன் பேசுவதைக் காதல் மொழியை அவன் பேசி விட்டதைப் போல வெட்கச் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருப்பாள்.. ரவிச்சந்திரனின் கடுகடுத்த முகத்தையும் தரங்கிணியின் செல்லச் சிரிப்பு முகத்தையும் தொலைவிலிருந்து பார்ப்பவர்கள் ஊடல் கொண்டு கோபிக்கும் காதலனை கொஞ்சல் மொரி பேசி காதலி சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறாள் என்றுதான் தோன்றும்..
அந்த அளவுக்கு சாகசம் பயின்றவள் தரங்கிணி.. என்ன ஒன்று.. அவளுடைய அத்தனை சாகசங்களில் ஒன்றுகூட ரவிச்சந்திரனிடம் எடுபடவில்லை..
இருந்தும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தியாக தரங்கிணி தன் முயற்சியைச் செவ்வனே தொடர்ந்து கொண்டிருந்தாள்..
ரவிச்சந்திரன் நந்தினியுடன் வயநாட்டுக்கு வந்தபோது தரங்கிணி ஆஸ்திரேலியாவில் இருந்தாள்.. ரவிச்சந்திரன் அங்கே இருக்கிறான் என்று இவள் போனால் அவன் இந்தியாவிற்கு திரும்பி விட்டிருந்தான்.. உடனே திரும்ப முடியாமல் ஓரிரு மாதங்கள் கழித்துத் திரும்பியவள் மூணாறுக்குக் கூடப் போகாமல் நேராக கோழிக்கோடிற்கு வந்து விட்டாள்.. யாழ் ஹோட்டலுக்கே வந்திருப்பாள்.. ஓர்முறை அப்படி அவள் வந்த போது அவளுக்கான அறை வாடகையை ரவிச்சந்திரன் வசூலிக்கச் சொல்லி விட்டதாக ஹோட்டலின் மேனேஜர் சொல்லி விட்டார்..
"ஞான் எவரெண்டு அறியுமோ..?" என்று அவள் சீறியபோது..
"நிங்க எவராக இருந்தா எனிக்கெந்து மேம்..? எங்க எம்.டி பறஞ்ஞதை ஞான் பறஞ்ஞு.." என்று கண்டிப்பு காட்டி விட்ட மேனேஜர்..
தரங்கிணிக்கு அது மரியாதை குறைவாக தோன்றி விட்டது.. யாழ் ஹோட்டலில் இலவசமாக தங்கும் அளவுக்கு அவளென்ன பண வசதி இல்லாதவளா..? அவளுடைய அப்பா நினைத்தால் யாழ் ஹோட்டலைப் போல இன்னொரு ஹோட்டலை விலைக்கு வாங்குவார்.. அல்லது உருவாக்குவார்.. அவள் யாழ் ஹோட்டலில் இலவசமாக தங்க நினைத்தது ரவிச்சந்திரனிடம் அவளுக்கு உரிமையிருக்கிறது என்று மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காக.. நண்பனின் தங்கை, உறவினர் என்றும் பாராமல் அவளிடம் அறை வாடகையை ரவிச்சந்திரன் வசூலிக்கச் சொன்னது அவனிடம் அவளுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லையென்று அவளுக்கு உணர்த்துவதற்காக..
தரங்கிணிக்கா அது புரியாது..? அது புரியாததைப் போல அவள் காட்டிக் கொண்டாள்.. இன்முகமாக அறை வாடகையை கொடுத்து விட்டு அறையைக் காலி செய்து கோழிக்கோடில் இருந்த அவர்கள் குடும்பத்தின் கெஸ்ட் ஹவுஸிற்குப் போய் விட்டவள் மறந்தும் அதைப் பற்றி ரவிச்சந்திரனிடம் ஒர்வார்த்தை கூடக் கேட்கவில்லை.. அந்தச் சம்பவத்திற்குப் பின்னால் யாழ் ஹோட்டல் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்கவில்லை..
கல்ச்சுரல் பங்சனுக்கு சிறப்பு விருந்தாளியாக ரவிச்சந்திரன் வரப் போகும் செய்தியை அறிந்து அவளும் அந்த விழாவில் கலந்து கொண்டாள்.. அப்போதுதான் நந்தினியை அவனுடன் பார்த்தாள்.. ரவிச்சந்திரனின் பக்கத்தில் உரிமையுடன் நந்தினி உட்கார்ந்ததில் தரங்கிணிக்குள் பூகம்பம் உண்டானது..
'யார் இவள்..?'
இடைவேளையில் யதேச்சையாக ரவிச்சந்திரனைப் பார்த்ததைப் போன்ற பாவனையுடன் அவனருகில் சென்று குசலம் விசாரித்தவள் நந்தினியிடம் தனக்கும் ரவிச்சந்திரனுக்கும் உள்ள நெருக்கத்தை உணர்த்துவதற் காகவே அவன் மடியில் உட்காருவதைப் போல சோபாவின் கை பிடியில் உட்கார்ந்து பேசினாள்.. நந்தினி மேடையில் பாடப் போன போது இவள் கிடைத்தது வாய்ப்பென்று நந்தினியின் இடத்தில் உட்கார்ந்து விட்டாள்..
'இப்போத் தெரியும் அவளுக்கு.. இந்த தரங்கிணி யாருன்னு..'
ஆனால் தரங்கிணிக்குத்தான் நந்தினி யாரென்று தெரியாமல் போய் விட்டது.. கொஞ்சம் கூட முகத் தாட்சண்யம் பார்க்காமல்
நந்தினியின் இருக்கையை விட்டுத் தரங்கிணியை எழுந்து கொள்ளச் சொல்லி விட்டான் ரவிச்சந்திரன்..
"நீ உன் சீட்டுக்குப் போகலாமே.. இது நந்தினிக்கான சீட்.."
முகத்தில் அடித்ததைப் போலச் சொல்லியதோடு நிற்காமல் மேடையை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்த நந்தினிக்கு கை கொடுக்கப் போய் விட்டான்..








Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -158
எண்ணியிருந்தது ஈடேற -158
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-158.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-158.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy