எண்ணியிருந்தது ஈடேற -157

157 தலையணையில் முகம் புதைத்து விழிந்திருந்தாள் நந்தினி.. அவளது இமையோரமாக கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.. அவளை உள்ளிழுத்த நுரை மெத...


157


தலையணையில் முகம் புதைத்து விழிந்திருந்தாள் நந்தினி.. அவளது இமையோரமாக கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.. அவளை உள்ளிழுத்த நுரை மெத்தையில் அவளுக்கு உறக்கம் வரவில்லை.. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தாள்.. முகத்தை நனைத்த கண்ணீரை துடைக்கும் எண்ணமில்லாமல் விட்டத்தைப் பார்த்தாள்.. மேற் கூரையில் ஒளிர்ந்த சிறு சிறு விளக்குகள் கண்சிமிட்டி நீ ரவிச்சந்திரனைக் காதலிக்கிறாய் என்று கூவின..
"அந்த பங்சனில அந்தப் பெண்ணால் நீ டிஸ்டர்ப் ஆன சோகத்தினாலேதானே ரவி சாரையே பார்த்துக்கிட்டு யமுனை ஆற்றிலே, ஈரக்காற்றிலேன்னு தாபமா ஒரு பாட்டை செலக்ட் பண்ணிப் பாடின..? கேட்டியே.. அந்தப் பாட்டிலே கேட்டியே.. ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ.. ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ.. பாவம் ராதான்னு பாடினயே.. நீ பாவப்பட்டது ராதையைப் பார்த்தா.. இல்லை.. உன்னை நினைத்தா..?"
"உத்ரா.."
"இதையெல்லாம் நான் நோட் பண்ணலைன்னா நினைக்கிற..? அன்னைக்குத்தான் அப்படின்னா இன்னைக்கு அவ ரவிசாரைப் பார்த்துப் பேச ஆரம்பிச்சதும் உனக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்திருச்சு.. தெரியாமல் தான் கேட்கிறேன்.. எவளோ ஒருத்தி.. ரவிசாருக்குத் தெரிந்த பெண்.. அவரிடம் பழகினவங்கிற உரிமையில் பேசினா உனக்கென்ன வந்தது..? நீயேண்டி கோவிச்சுக்கிட்டு சாரிடம் சொல்லிக்காம எங்களைத்
தேடி வந்த..?"
"நான் சும்மா.. வந்து.."
நந்தினி தடுமாறினாள்.. தன் மனதை புரிந்து கொள்ளாத பேதையாக அவள் தவிப்பதைக் கண்ட உத்ரா கனிவுடன் தோழியின் கையைப் பிடித்துத் தட்டிக் கொடுத்தாள்..
"உனக்கு உன் மனது புரியலை நந்தினி.. அதுதான் விசயம்.. ரவிசார் இந்த விசயத்தில் தெளிவா இருக்கிறதைப் போல எனக்குத் தோணுது.. உன்னிடம் அந்தத் தெளிவில்லை.. அவள் மேல உனக்குக் காதலிருப்பதை நீ புரிஞ்சுக்கலை.."
"போடி.. அவரோட ஆக்டிவிட்டிஸில நான் இம்ப்ரெஸ் ஆகியிருக்கலாம்.. பார்க்க அழகாயிருக்கார்.. படு ஹேண்ட்சம் மேன்.. அதில் மனசு தடுமாறியிருக்கலா.. அழகான பெண்ணைக் கண்டா ஆண் தடுமாற மாட்டானா..? இந்த நியதி பெண்ணுக்கும் பொருந்தாதா..? ஆணுக்குத்தான் ரசிக்கத் தெரியும்.. பெண்ணுக்கு ரசிக்கத் தெரியாதா..? நான் கம்மாண்டரோட அழகில் சொக்கிப் போயிருக்கலாம்.. ஹி இஸ் எ கிரேட் சூப்பர் மேன் உத்ரா.. பிஸினெஸ் வெர்ல்டில ஸ்டார்.. நான் பணக்கார குடும்பத்தில் பிறந்தவள்தான்.. எங்கப்பா கோடிஸ்வரர் தான்.. இவன் அளவுக்கு நாங்க பணக்காரங்க
இல்லை உத்ரா.. இவன் லெவலே வேற.. எட்டாத உயரத்திலிருப்பவன்.. உலகம் சுற்றும் வாலிபன்.. போதாக்குறைக்கு ராஜ குடும்பத்தில் கேரளத்து சூப்பர்
கிங் ராஜா ரவிவர்மனோட வம்சாவழியில பிறந்திருக்கான்.. வயநாட்டு அரண்மனை, யாழ் ஸ்டார் ஹோட்டல்.. கணக்கு வழக்கில்லாத பிஸினெஸ்ன்னு மிரட்டறான்.. இந்த ஸ்டார் இமேஜில இவன் மேல எனக்கு ஒரு பேவரிசம் வந்திருக்கலாம்.. இதெல்லாம் காதலாகி விடுமா..? சொல்லு.."
நந்தினியின் நீண்ட விளக்கத்தில் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் உத்ரா.. நந்தினி பேசி முடித்ததும்.. தண்ணீர் தம்ளரை அவள் பக்கமாக நகர்த்தி வைத்து..
"குடி.." என்றாள்..
"கிண்டலா..?" என்று கேட்டபோதும் நீண்ட சொற்பொலிவை ஆற்றியிருந்ததால் தொண்டை வறண்டு போயிருந்த நந்தினி தண்ணீர் தம்ளரைக் கைப்பற்றித் தொண்டையில் சரித்து, மடக், மடக்கென்று குடித்து முடித்தாள்..
"இந்த லாங் ஸ்டேட்மெண்டே உன்னோட காதலை புரூவ் பண்ணுது நந்தினி.." நிதானமாகச் சொன்னாள் உத்ரா..
"ச்சும்மா பயமுறுத்தாதேடி.. எனக்கொன்னும் அவன் மேலே காதல் இல்லை.." வீம்பாக சொன்னாள் நந்தினி..
"ஆர் யு ஷ்யூர்..?" ஊடுருவும் பார்வையுடன் கேட்டாள் உத்ரா..
"ஷ்யூர்.." அவள் முகம் பார்க்காமல் சொன்னாள் நந்தினி..
"இதை என் முகத்தைப் பார்த்துச் சொல்லுடி.." சவால் விட்டாள் உத்ரா..
"ஏனாம்..? நீ யென்ன பூச்சாண்டியா..? உன் முகத்தைப் பார்த்துப் பேச நான் ஏன் பயப்படப் போகிறேனாம்..?"
தோள் தட்டியபடி பார்வையை உயர்த்தி உத்ராவை நேருக்கு நேராகப் பார்த்த நந்தினியால் ஓரிரு வினாடிகளுக்கு மேல் உத்ராவின் பார்வையை சந்திக்க முடியவில்லை.. பார்வையை தழைத்துக் கொண்டாள்..
"நான் சொல்லலை..? உன்னால் என்னை நேருக்கு நேர் பார்த்து பொய் சொல்ல முடியாது நந்தினி.." வெற்றிப் புண்ணகையுடன் சொன்னாள் உத்ரா..
"போடி.. நீயாய் எதையாவது இமாஜின் பண்ணிக்காதே.. இப்படி குறுகுறுன்னு பார்த்தா உன் முகத்தை எப்படிப் பார்க்கிறதாம்..?" நந்தினி விட்டுக் கொடுக்காமல் மல்லுக்கட்டினாள்..
"உன் மனசில கள்ளம் வந்திருச்சுடி.. அதனாலதான் உன்னால் என் முகத்தைப் பார்த்துப் பேச முடியலை.." ஆணித்தரமாகச் சொன்னாள் உத்ரா..
'அப்படியா..?' நந்தினியின் மனம் கலங்கியது..
அவள் மனதில் கள்ளம் புகுந்து விட்டதா..? ரவிச்சந்திரனின் மீது காதல் வந்து விட்டதா..? அதை உத்ராவிடம் ஒப்புக் கொள்ளாமல் அவள் மறைக்கிறாளா..?
'உள்ளம் நிறைவிலோர்
              கள்ளம் புகுந்திடில்
     உள்ளம் நிறைவாமோ..?'
அவளது மனம் கேட்டது.. தெளிந்த பளிங்கு நீர் போல ஸ்படிகமாய் இருந்த அவளது மனது கலங்கிப் போயிருந்தது.. கடலோரமாக ரவிச்சந்திரனும் வினித்தும் பேசியபடி நடந்து வருவதைப் பார்த்த உத்ரா..
"அவங்க வந்திட்டாங்க நந்தினி.." என்றபடி அவசரமாக கைகழுவ எழுந்து சென்றாள்..
"உன் ஆள் வந்துட்டா ஒரு செகண்டில என்னை மறந்திருவ.." நந்தினி குறைபட்டபடி உத்ராவின் பின்னால் போனாள்..
"கூட உன் ஆளும்தான் வருகிறார்.." கை கழுவியபடி சொன்னாள் உத்ரா..
"என் பாஸ் வருகிறார்ன்னு சொல்லு.. என் ஆளுன்னு சொல்லாதே.." கோபம் போலச் சொன்னவளின் மனதில் தென்றலடித்தது.. இனம் புரியாத ஒரு சுகம் நிரம்பியது..
'என் ஆள்..'
மனதில் சொல்லும் போதே இனித்தது.. எதற்காக இந்த இனிமை என்று புரியாமல் அவள் திகைத்தாள்..
"அப்படியா..? அவர் உன் ஆளில்லையா..? ம்ம்ம்.. யாரோட ஆளா இருப்பார்..? அதோ.. அங்கே வருகிறாளே.. அவளோட ஆளா இருப்பாரோ..?"
உத்ரா சுட்டிக் காட்டிய திசையில் நின்றிருந்த பெண்ணைக் கண்டதும் நந்தினிக்கு எரிச்சல் வந்தது..
"இவ இன்னுமா போகலை..?" என்று சிடுசிடுத்தாள்.
"யாருக்குத் தெரியும்..? இவதானே அவ..? அதாண்டி.. அன்னைக்குப் பங்சனில பார்த்த பெண்.."
"இந்தக் குரங்குதான்.."
"அநியாயமாய் பேசாதே.. அவளைப் பார்த்தாக் குரங்கு மாதிரியா இருக்கு..? கேரளத்துப் பெண்களுக்கு மட்டும் எப்படிடீ நந்தினி இப்படியொரு அரைத்த மஞ்சளின் நிறம் வருது.."
"தெரியலை.."
நந்தினிக்குப் பற்றிக் கொண்டு வந்தது.. உத்ரா வர்ணித்ததைப் போலவே அந்தப் பெண் அரைத்த மஞ்சளின் நிறத்தில் இருந்தாள்.. செதுக்கி வைத்த சிற்பம் போன்ற உடல்வாகு.. அழகான முகம்.. அவளின் அழகில் நந்தினி பொறாமை கொண்டாள்..
"அவ பேர் என்னவாம்..? உனக்குத் தெரியுமா..?"
"என்னவோ தரங்கிணி அப்படின்னு கம்மாண்டர் கூப்பிட்டதைப் போல என் காதில் விழுந்தது.. சரியாக் கேட்கலை.."
"தரங்கிணி..! அழகான பெயர்.. ஆளைப் போல பெயரும் அழகாய் இருக்குள்ல.."
"சகிக்கலை.."
"போடி.. இவ்வளவு அழகாய் இருக்கிறா.. ரவிசார் ஆசையாசையாய் பேசிப் பழகறார்.. இவளைப் போய் சகிக்கலைன்னு சொல்கிறயே.."
"கம்மாண்டர் ஆசையாசையாய் பேசிப் பழகறானா..? நீ கண்டியா..?"
"காணாமலா சொல்கிறேன்..? அக்கட சூடு.."
நந்தினி பார்த்த போது ரவிச்சந்திரனிடம் தரங்கிணி நெருங்கிப் பேச ஆரம்பித்தாள்.. ரவிச்சந்திரன் நின்று விட.. வினித் நாகரிகம் கருதி நகர்ந்து வந்து விட்டான்.. உத்ரா வினித்திடம் போய்விட.. என்னவோ வெகுகாலம் பிரிந்திருந்தவர்களைப் போல அவர்கள் இருவரும் கண்ணோடு கண் பார்த்து.. கையோடு கை கோர்த்து ரகசியம் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்..
நந்தினி தனியாக நிற்பதைப் போல உணர்ந்தாள்.. உத்ராவிடம் போகலாமென்றால் அது வினித்திற்கும் உத்ராவிற்குமான தனிமையைக் குலைத்து விடும்.. ரவிச்சந்திரனிடம் போக அவளுக்கு விருப்பமில்லை.. அது என்ன.. நந்தினி நிற்பதைக் கூடக் கவனிக்காமல்
அவன் தரங்கிணியிடம் கடலை போட்டுக் கொண்டிருக்கிறான்..?
அந்தக் காட்சியைக் காண சகிக்காமல் நந்தினி அவனுக்கு முதுகு காட்டித் திரும்பி நின்றாள்.. தரங்கிணியிடம் பேசியபடி நந்தினியை பார்வையால் துழாவிய ரவிச்சந்திரன் அவளைப் பார்த்து விட்டான்.. பேசியபடியே அவன் நந்தினியை நோக்கி நடக்க.. தரங்கிணியும் கூட நடந்தாள்.. நந்தினியின் தோள் தொட்டு அழைத்தான்.. அவன் விரல் பட்ட ஸ்பரிசத்தில் துள்ளிக் குதித்து தள்ளி நின்று திரும்பிப் பார்த்த நந்தினி அவனைக் கண்டதும்..
"நீங்க தானா..? நான் யாரோன்னு நினைச்சிட்டேன்.." என்று நிம்மதியானாள்..
ரவிச்சந்திரனின் கண்கள் மின்னின.. நந்தினி அதைக் கவனிக்கவில்லை.. அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த தரங்கிணியைத்தான் கவனித்தாள்.. அவள் கண்களில் நெருப்பின் ஜ்வாலை தெரிந்தது..
'இவ எதுக்கு என்னை எரிக்கிறதைப் போலப் பார்க்கிறா..?'
நந்தினி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்... அவள் என்னவோ தரங்கிணியின் சொத்தை கொள்ளையடித்து விட்டதைப் போல தரங்கிணி பார்த்த பார்வையை அவள் விரும்பவில்லை..
'யார் சொத்தை யார் கொள்ளை அடிக்கிறதாம்..?'
"இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற..?"
தரங்கிணியை கண்டு கொள்ளாமல் நந்தினியிடம் கேட்டான் ரவிச்சந்திரன்.. 'பார்..' நந்தினியின் பார்வை கர்வத்துடன் தரங்கிணியைப் பார்த்தது... அதில் தரங்கிணியின் முகம் சுருங்கியது.. நந்தினிக்கு ரவிச்சந்திரன் கொடுத்த முக்கியத்துவத்தை அவள் விரும்பவில்லை..
தரங்கிணி ரவிச்சந்திரனின் உறவுக்காரப் பெண்..
அவனைப் போலவே ராஜ பாரம்பர்ய பின்புலம் கொண்டவள்.. கோடிஸ்வரி.. கேரளத்தின் கதாநாயகனான ரவிச்சந்திரனைக் கரம் பிடிக்க வேண்டுமென்று அவர்களுடைய உறவு வட்டாரத்திலிருந்த மற்ற இளம் பெண்கள் கனவு கண்டதைப் போலதான் அவளும் கனவு கண்டு கொண்டிருந்தாள்.. மற்ற பெண்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு அவளுக்குக் கிடைத்திருந்தது.. தரங்கிணியின் அண்ணனும் ரவிச்சந்திரனும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்.. அந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி அண்ணன் மூலமாக ரவிச்சந்திரனுடன் பழக ஆரம்பித்தாள் தரங்கிணி.. நண்பனின் தங்கை என்ற முறையில் ரவிச்சந்திரனும் அவளிடம் முகம் கொடுத்துப் பேசுவான்..
தரங்கிணியின் அண்ணன் தனபாலன் அப்படியொன்றும் ரவிச்சந்திரனுக்கு நெருங்கிய சிநேகிதனல்ல.. ஒன்றாகப் படித்ததினால் சிநேகிதன்.. அவ்வளவுதான்.. தனது பிறந்தநாள்.. குடும்ப விழாக்கள் என்று ரவிச்சந்திரனுக்கு அழைப்பு விடுப்பான் தனபாலன்.. அந்த நாள்களில் ரவிச்சந்திரன் ஊரில் இருந்தால்.. அதி முக்கியமான வேலைகள் இல்லாமலிருந்தால்.. தனபாலனின் இல்ல விழாக்களுக்கு போய் வருவான்..
அந்த தினங்களில் ரவிச்சந்திரனை ஒட்டிக் கொண்டு கூடவே அலைவாள் தரங்கிணி.. அவனுடன் சேர்ந்து நிற்பதைப் போல செல்போனில் படம் பிடித்து பேஸ்-புக்கில் போட்டு விளம்பரம் தேடிக் கொள்வாள்..
தரங்கிணியை ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற யூகம் வயநாட்டு ராஜ குடும்பத்தினர் மத்தியில் விரவியிருந்தது.. அதைக் கேள்விப்பட்ட அஜந்தா தரங்கிணியைத் தேடிப் போய் சண்டையிட்ட கதையும்.. அதற்கு உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் ரவிச்சந்திரன் எனக்குத்தான் என்று தரங்கிணி பதிலுக்குச் சண்டையிட்ட கதையும் உண்டு..
இந்தக் கதைகளைக் கேள்விப் பட்டிராத நந்தினி தரங்கிணியின் பின்புலம் அறியாமல் யாரோ எவரோ என்று நினைத்தாள்.. ஆனானப்பட்ட அஜந்தாவையே 'வந்து பார்.. வட்டப் பாறைக்கு..' என்று சொடக்குப் போட்டு சவால் விடும் தரங்கிணி நந்தினியிடம் தழைந்து போவாளா.. என்ன..?





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -157
எண்ணியிருந்தது ஈடேற -157
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-157.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-157.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy