எண்ணியிருந்தது ஈடேற -156

156 "ச்சீ.. பைத்தியம் போல உளராதே.. இப்ப என்ன நடந்திருச்சுன்னு இப்படிப் பேசற.. ? உன் பாஸ் கண்டிப்பானவரா இருக்கார்.. அவள் மெச்சூ...


156


"ச்சீ.. பைத்தியம் போல உளராதே.. இப்ப என்ன நடந்திருச்சுன்னு இப்படிப் பேசற..? உன் பாஸ் கண்டிப்பானவரா இருக்கார்.. அவள் மெச்சூர்டு மேன்.. உனக்கு விவரம் பத்தாதுன்னு எடுத்துச் சொலியிருப்பார்.. இதுக்குப் போய் என்னென்னவோ பேசறியே..."
கடிந்து கொள்வதைப் போலத் தோழியை சமாதானப் படுத்தினாள் உத்ரா..
"எனக்கு விவரம் பத்தாதுன்னு நீயும் சொல்லிட்ட.. வெரிகுட்.. உனக்கும் உன் ஹஸ்பெண்டுக்கும் நடுவே நான் இண்டர்பியர் ஆகி டிஸ்டர்ப் பண்ணினது தப்புத்தாண்டி.. மன்னிச்சுக்க.. இந்தக் கம்மாண்டர் சொல்கிறதைப் போல இந்த விசயத்தில் நான் 'தத்தி'தாண்டி.."
"தத்தியா..? நீயா..? அடிச்சேன்னா பாரு.. தத்திதான் காலேஜ் பர்ஸ்ட் வந்து கோல்ட் மெடல் வாங்கியிருக் காளாக்கும்..? வயநாட்டுக்கு வந்து டோட்டலா சேன்ஜ் ஆகிட்டடி.. உன் கான்பிடன்ஸ் எங்கே போச்சு..?"
"ஊம்..? வயநாட்டு அரண்மனையிலே காணாமல் போயிருச்சு.. நீயும் ஏண்டி வயித்தெரிச்சலைக் கிளப்பற..?"
"விடு நந்தினி.. இதையெல்லாம் பெரிசு பண்ணிக்காதே.. அவரோட பாயிண்ட் ஆஃப் வியுவில நியு மேரிட் கப்புள்ஸீக்கு தனிமை கொடுக்கனும்னு சொல்லியிருப்பார்.. நீ உடனே அதைப் பிடித்துக்கிட்டு தொங்க ஆரம்பிச்சுராதே.. எப்போதும் போல இரு.. எனக்கும் வினித்துக்கும் நீ டிஸ்டர்ப் இல்ல.."
"இதை நீ சொன்ன போதாது உத்ரா.."
"வேற யாருடி சொல்லனும்..? வினித்தா..?"
"ஊஹீம்.. அவன் சொல்லனும்.."
"ரவி சாரா..?"
"அந்தக் கம்மாண்டர் தான்.."
வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற வேண்டும் என்று விசுவாமித்திரர் துடித்ததிற்கு காரணம் இருந்தது.. ரவிச்சந்திரனின் வாயால் நந்தினி உத்ராவைத் தொந்தரவு செய்யவில்லை என்று சொல்ல வேண்டும் என்று நந்தினி மருகுவதற்கு என்ன காரணம் இருக்கிறது..?
"ரவி சார் சொல்லனும்னு நீ ஏன் எதிர்பார்க்கிற..? அவர் சொல்கிறார்.. சொல்லாம இருக்கிறார்.. அது உன்னையேண்டி இந்த அளவுக்கு டிஸ்டர்ப் பண்ணுது..?"
உத்ராவின் கூர்மையான கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போனாள் நந்தினி..
அதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.. அவளைப் பற்றி ரவிச்சந்திரன் எப்படியோ நினைத்து விட்டுப் போகிறான்.. அது அவளை எதற்காக பாதிக்க வேண்டும்..? அவள் வயநாட்டில் விருந்தாளியாக வந்திருக்கிறாள்.. எந்த நொடியிலும் தஞ்சையிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்து விடும்.. வயநாட்டை விட்டுப் போய் விடுவாள்.. அப்படியிருக்கும் போது ரவிச்சந்திரனின் அதட்டல்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறாள்..?
நந்தினி உத்ராவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்தாள்.. அதை அப்படியே கடந்து அன்றைய பேச்சிற்குத் தாவினாள்..
"நேத்து அப்படிச் சொன்னவன் இன்னைக்கு நீ வந்துதான் தீரனும்னு ஆர்டர் போட்டு இழுத்துக்கிட்டு வந்திருக்காண்டி.. என் மனசே ஆறலை உத்ரா..
நேற்று நான் உங்ககூட வந்தது தப்பாம்.. அதே தப்பை இன்றைக்குச் செய்யலாமா..? இவனே அதைச் செய்ய வைக்கலாமா..? இது சரியா..?"
"சரியில்லைதான் நந்தினி.. பட்.."
உத்ரா பேச்சை ஓர் நொடி நிறுத்தி விட்டு புன்னகைத்தாள்.. புதிர் போட்ட அந்தப் புன்னகையில் குழம்பிப் போனாள் நந்தினி..
'எதுக்காக இப்படி பொடி வைச்சு புன்னகை பூக்கிறா..? புன்னகை அரசி பட்டத்துக்கு அப்ளை பண்ணலாமான்னு டிரை பண்றாளா..? ஆல்ரெடி
அந்தப் பட்டத்துக்கு இரண்டு நடிகைகள் செலக்ட் ஆகியிருக்காங்களே.. அடுத்ததா இவள் பெயரைச் சொல்லனும்னு பிளான் போடறாளா..?'
"சில உணர்வுகள் சரி, தப்புன்னு பிரிச்சுப் பார்த்து ஜஸ்டிஃபை பண்ணாது நந்தினி... நியாய அநியாயமெல்லாம் அதற்குத் தெரியாது.."
"என்னடி.. புதிர் போட்டுப் பேசற..?"
"புரியாத வரைக்கும் இது புதிர்தாண்டி.. புரிந்து விட்டா இதுதான் எல்லாம்ன்னு ஆகிரும்.."
"விளங்கலை உத்ரா.."
"விளங்கலை..?"
உத்ரா நந்தினியை ஆழ்ந்து பார்த்தாள்.. அவள் எதையோ ஆழமாகச் சொல்லப் போவதை யூகித்து விட்ட நந்தினியை மனம் படபடத்தது.. உத்ரா என்ன சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன் தோழியையே பயபக்தியுடன் பார்த்து வைத்தாள்.. அவள் விழிகளில் சஞ்சலம் மிதந்தது..
"உனக்குப் புரியலையா நந்தினி..?" அதே ஆழ்ந்த குரலுடன் கேட்டாள் உத்ரா.
புரியவில்லை எனும் விதமாக.. இடம் வலமாக தலையை அசைத்தாள் நந்தினி..
"நேற்று ரவிசார் நம்மகூட வரலை.. அவர் வராம நீ மட்டும் எங்க கூட வந்ததை.. ஊர் சுற்றியதை அவரால் தாங்கிக்க முடியலை.. நம்ம கூட ஆண் துணையா வினித் இருக்கிறப்ப ஆட்டோமேடிக்கா உனக்கான செலவை வினித் செய்கிறதை ரவிசாரால் ஏத்துக்க முடியலை.. நீ வேறு ஒரு ஹோட்டலில் லன்ச் சாப்பிட்டு அப்ரிசியேட் பண்ணினதையே அவரால் தாங்கிக்க முடியலைங்கிறப்ப.. என் கெஸ்ஸிங் சரியாக இருந்ததுன்னா வினித் உனக்கான லன்ச்சுக்கும், நான் எடுத்துக் கொடுத்த புடவைக்கும் 'பே' பண்ணினதை நிச்சயமா அப்ஜெக்ட் பண்ணியிருப்பார்.. அதுக்காக உன்னை திட்டியிருப்பார்.. ஆம் ஜ கரெக்ட்..?"
புத்திசாலிடி நீ என்ற ரீதியில் தோழியை பிரமிப்பாக பார்த்து வைத்தாள் நந்தினி..
"எப்படிடீ..?" வியப்பு அடங்காமல் கேட்டாள்..
"இதைத் தெரிஞ்சுக்க படு இண்டலெக்சுவலா இருக்கனும்ங்கிற அவசியமில்லை.. யங்கர்ஸ் எல்லாத்துக்கும் இது புரியும்.."
"எனக்குப் புரியலையே.."
குழந்தையாய் கேட்டவளின் கன்னம் தட்டிச் சிரித்தாள் உத்ரா.. தோழியின் குழந்தைத்தனத்தை மனதுக்குள் சீராட்டினாள்..
"போகப் போக நீயும் புரிஞ்சுக்குவ.."
"நேத்து அப்படி பேசிட்டு இன்னைக்கு 'வா, வா'ன்னு என்னை இழுத்துக்கிட்டு வந்திருக்கிறது சரியாடி.."
"அவருக்கு இது சரிதான்.. இன்னைக்கு அவருக்கு வொர்க் இருந்திருக்காது.. அதனால உன்னை ரூமில இருக்க விடாம கிளப்பிக்கிட்டு வந்திருக்கிறார்.. நீ ஊர் சுற்றிப் பார்க்கிறதிலே அவருக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லைடி.. அந்த ஊர் சுற்றலை அவரோடு சேர்ந்து சுற்றனும்.. எங்களுடன் சுற்றக் கூடாதுன்னு நினைக்கிறார்.. தட்ஸ் ஆல்.."
"அதுதான் ஏன்..?"
"தட் இஸ் பொஸஸிவ்னெஸ்.. எல்லோருக்கும் இது இருக்கும்.. ஏன் வினித்திற்கும் என் விசயத்தில் பொசசிவ்னெஸ் உண்டு.. உன்னிடம் சொக்கிறதுக்கு என்ன.. நான் அவரை மட்டும்தான் பார்க்கனும்.. பேசனும்னு நினைப்பார்.. உன்னிடம் பேசறதுக்குக் கூட பெர்மிசன் வாங்கிட்டுத்தான் பேசனும்.. இல்லைன்னா மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்குவார்.. சுள்ளு சுள்ளுன்னு பேசுவார்.."
"வினித் அண்ணாவும் இப்படிச் செய்வாரா..?"
நந்தினிக்கு ஆச்சரியமாகி விட்டது... அதுவரை ரவிச்சந்திரனை அடக்குமுறை செய்பவன்... ஆனாதிக்கவாதி.. முதலாளித்துவ பாஸிஸ்ட்.. அவளுடைய சுதந்திரத்தைப் பறிப்பவன்.. என்றெல்லாம் பலவாறாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு உத்ரா சொல்வது புதிதாக இருந்தது..
"நான்தான் சொல்கிறேனே.. எல்லோரும் பொசசிவானவங்கதான்.. ஜெண்ட்ஸ் மட்டுமில்லை.. லேடிஸீம் அப்படித்தான் இருப்பாங்க.. எனக்கு இன்னொன்னையும் சொல்லு.. ரவிசார் நீ மத்த ஜெண்ட்ஸ்கிட்டப் பேசினாக் கோவித்துக்கிறாரா..?"
"வெறி பிடிச்சதைப் போலக் கத்தறாண்டி.."
சில தருணங்களில் அடி கை வைத்து விடகிறான் என்பதை உத்ராவிடம் சொல்லாமல் மறைத்தாள் நந்தினி.. சொன்னால் நீ ஏன் அதைத் தாங்கிக் கொள்கிறாய்
என்று கேட்பாள்.. நந்தினிக்குத்தான் அதற்கான விடை தெரியவில்லையே.. ரவிச்சந்திரனுடன் உத்ரா சண்டையிடக் கிளம்பினாலும் ஆச்சரியப் படுவதிற் கில்லை.. உத்ரா இதை அனுமதிக்க மாட்டாள்..
ஏனோ தெரியவில்லை.. ரவிச்சந்திரனை உத்ராவிடம் காட்டிக் கொடுக்க நந்தினிக்கு மனம் வரவில்லை.. அவன் சொன்ன 'ஐ லவ் யு..' வையும்.. அதைத் தொடர்ந்து அவன் எடுத்துக் கொள்ளும் அதீத உரிமைகளையும் பற்றி அவள் வாய் திறக்கவில்லை.. உத்ரா ரவிச்சந்திரனைக் கேள்வி கேட்பதை நந்தினியால் பொறுத்துக் கொள்ள முடியாது.. அதை ஏனென்று கேட்டால் பதில் சொல்ல முடியாமல் மலங்க.. மலங்க விழிப்பாள்..
நந்தினி சொல்லாமலே ரவிச்சந்திரன் சொன்ன 'ஐ லவ் யு' வைக் கண்டு பிடித்து விட்டாள் உத்ரா..
"ஐ திங்க்.. ரவி லவ்ஸ் யு.." என்று அவள் சொன்னபோது நந்தினிக்கு தூக்கிவாரிப் போட்டது..
'எப்படிக் கண்டு பிடித்தா..?' பரக்கப் பரக்க இவள் விழித்துக் கொண்டிருக்க உத்ரா அந்த குண்டைத் தூக்கிப் போட்டாள்..
"தட் ஸேம் டைம்.. யு லவ் ரவிச்சந்திரன்.."
"வாட்..?"
அடுத்த தூக்கிவாரிப் போடலில் தலை கிறுகிறுக்க கிர்ரென்று தலை சுழல்வதைப் போல இருந்தது நந்தினிக்கு.. தலையைப் பிடித்துக் கொண்டாள்.. உத்ராவின் அனுமானம் உண்மையானதுதானா என்று அவள் மனம் பதறியது..
ரவிச்சந்திரன் நந்தினியிடம் 'ஐ லவ் யு' சொன்னதை நந்தினி உத்ராவிடம் சொல்லவில்லை.. ஆனாலும் உத்ரா மிக எளிதாக ரவிச்சந்திரன் நந்தினியைக் காதலிக்கிறான் என்பதை கண்டு பிடித்துச் சொல்லி விட்டாள்..
அது உண்மையாக இருக்கும் போது நந்தினியும் ரவிச்சந்திரனைக் காதலிக்கிறாள் என்ற உத்ராவின் இரண்டாவது அனுமானமும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும்..?
'நான் அவனைக் காதலிக்கிறேனா..?'
நந்தினிக்குள் எதுவோ நிகழ்ந்தது.. இன்பமா, துன்பமா என்று உணர முடியாத உணர்வு ஒன்று அவளுக்குள் கிளர்ந்து எழுந்தது.. தன்னைத்தானே புரிந்து கொள்ள முடியாமல் அவள் தடுமாறினாள்..
"எதுக்கு இந்த வாட்..? ஆயிரம் வாட்ஸ் கரெண்ட் உடம்பில பாய்ஞ்சுட்டதைப் போல அலருகிறயே.. ஏன்..?"
"என்னடி நீ.. என்னென்னவோ சொல்கிற..?"
"சிம்டம்ஸெல்லாம் அப்படித்தான் சொல்லுது.. நீ கண்ட்ரோல் பண்ண முடியாத அருவிடி.. ரவிசார் ஈஸியா உன்னைக் கண்ட்ரோல் பண்றார்.. அதைவிட நீயும் அவரிடம் கண்ட்ரோல் ஆகிற.. நோட் திஸ் பாயிண்ட்.."
"போடி.. நீயும்.. உன் பாயிண்ட்டும்.. சம்பளம் கொடுக்கிற முதலாளி கண்ட்ரோல் பண்ணினா கண்ட்ரோல் ஆகித்தானே தீரனும்.. ஆர்டரை ஒபே பண்ணாம இருக்க முடியுமா..?"
"கடனேன்னு ஒபே பண்றதுக்கும்.. காதலாய் ஒபே பண்றதுக்கும் வித்தியாசமில்லையா..?"
"அவனை நான் காதலிச்சிட்டாலும்.. போடி.."
"அவரை நீ காதலிக்கலேன்னா ஏண்டி அவரிடம் எவளோ ஒருத்தி நெருங்கிப் பழகிறதில டிஸ்டர்ப் ஆகிற..?"
பொட்டில் அறைந்ததைப் போலக் கேள்வி கேட்டாள் உத்ரா.. பொறி கலங்கிப் போனாள் நந்தினி..
"உத்ரா.."
"அந்தக் கல்ச்சுரல் பங்சனிலேயே கவனிச்சேன்.. அந்தப் பெண் ரவிசாரிடம் சொஞ்சிக் கொஞ்சிப் பேசறா.. நீ பல்லைப் பல்லைக் கடிக்கிற.. சரியாத்தான் கவனிச்சிருக்கிற.. அவ சாரோட மடியில உட்காராத குறையாகத்தான் பேசினாள்.. நீ சாரிடம் வேலை பார்ப்பவள்ங்கிற பொசிசன்ல்ல மட்டும் இருக்கிறவளா இருந்திருந்தா முதலாளியோட பெர்சனல் விவகாரங்கள் நமக்கெதுக்குன்னு அதைக் கண்டுக்காம இருந்திருப்ப.. இன்னும் சொல்லப் போனா உன் இடத்தை அவருக்கு விட்டுக் கொடுத்துட்டு தள்ளிப் போய் உட்கார்ந்திருப்ப.. ஏண்டி அப்படிச் செய்யலை..?"
"என்ன கழுதைக்குச் செய்யனும்..?"
ரவிச்சந்திரனிடம் அப்பயி அந்தப் பெண்ணின் நினைவில் முகம் சுளித்தாள் நந்தினி.. அவள் ரவிச்சந்திரனின் மடியில் உட்காருவாளாம்.. அவர்களுக்கு தனிமையைக் கொடுத்து நந்தினி விலகிச் சென்று காவல் இருக்க வேண்டுமாம்..
"கொன்று விடுவேன்.. கொன்று.."
அவளையுமறியாமல் நந்தினி சீறி விட்டாள்.. புத்திசாலி உத்ரா அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.. நந்தினியின் மனதை இனம் கண்டு கொள்வாள் என்ற எச்சரிக்கை உணர்வு சிறிதளவும் இல்லாமல் சீற்றம் கொண்டவளைப் பிரியத்துடன் பார்த்தாள் உத்ரா..
"இந்தக் கோபம் எனக்கும் வரும்.. எப்போத் தெரியுமா..? என் வினித்திடம் எவளாவது உரிமையெடுத்துப் பேசி நெருக்கமா நின்னா நானும் இதைத்தான் சொல்வேன்.. இப்பச் சொல்லு.. எனக்கு வினித்தின் மீது வரும் உரிமையுணர்வு உனக்கு ரவிசாரின் மீது வருகிறதா.. இல்லையா..?"
'ஆமாம்தானே..'
நந்தினி தவித்துப் போனாள்.. அவள் மனதை புரிந்து கொண்டதில் விதிர்த்துப் போனாள்.. ரவிச்சந்திரனைப் பற்றி அவளுக்குத் தெரிந்த உண்மைகளை உத்ரா அறிய மாட்டாள்.. நந்தினி அறிவாளே.. அப்படிப்பட்டவன் மீது எப்படி அவளுக்கு காதல் வந்தது..? நந்தினியின் சுயமரியாதை எங்கே போனது..? உடல், மனம், ஆன்மா பரிசுத்தம் என்று இருப்பவள் அவள்.. ரவிச்சந்திரன் அப்படியா இருக்கிறான்..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -156
எண்ணியிருந்தது ஈடேற -156
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-156.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-156.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy