எண்ணியிருந்தது ஈடேற -154

154 உத்ராவுக்கும் அதே எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்.. "வாடி.. இப்படி.." என்று தோழியைத் தள்ளிக் கொண்டு கிளம்பி விட்டாள்....


154


உத்ராவுக்கும் அதே எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்..
"வாடி.. இப்படி.." என்று தோழியைத் தள்ளிக் கொண்டு கிளம்பி விட்டாள்..
போகும் போது மறக்காமல் வினித்திடம் கெஞ்சுதலான சரசப் புன்னகையைச் சிந்தி..
"ஜஸ்ட் ஃபியு மினிட்ஸ் ப்ளீஸ்.." என்று ஒப்புதல் வாங்கிக் கொள்ளத் தவறவில்லை..
அவனிடம் அனுமதி வாங்காமல் உத்ரா தோழியுடன் தனித்துப் பேச செல்ல மாட்டாள் என்ற கர்வத்தினால் மிதப்பாக ரவிச்சந்திரனை ஓர் பார்வை பார்த்து விட்டு..
"டேய் யுவர் ஓன் டைம்.." என்று கொடை வள்ளலைப் போல அனுமதியை அள்ளி வழங்கினான் வினித்..
"வினித்துக்கு நான் கம்பெனி கொடுக்கறேங்க.. உங்க பிரண்ட் எதுக்காக சொல்லாம வந்தாங்க என்கிறதைப் பொறுமையாக் கேட்டுத் தெரிந்த பின்னால் நீங்க வந்தால் போதும்.." என்று வினித்தை தான் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தான் ரவிச்சந்திரன்..
அவ்வளவு பெரிய கோடிஸ்வரன் வினித்துக்கு கம்பெனி கொடுக்கிறேன் என்று சொன்னதில் வினித்தின் மனதிலிருந்த கொஞ்ச நஞ்ச மனத்தாங்கலும் ஓடோடிப் போய் விட்டது..
"என்ன சார்.. நீங்க எனக்குக் கம்பெனி கொடுக்கிறதா..? நான் உங்களுக்குக் கம்பெனி கொடுக்கறேன்.. வாங்க சார்.. அப்படி கடலோரமா காலாற நடந்துட்டு வரலாம்.." என்று ரவிச்சந்திரனை அழைத்தான்.
"நீங்களும் உத்ராவும் என்னுடைய கெஸ்ட்.. ஸோ.. நான்தான் உங்களுக்குக் கம்பெனி கொடுக்கனும்.." கர்வமில்லாமல் சொன்ன ரவிச்சந்திரன் உத்ராவைப் பார்த்து..
"அதோ.. அங்கே இருக்கிற ரெஸ்ட்டாரெண்டில உட்கார்ந்து உங்க பிரண்ட் மொக்கறதுக்கு எதையாவது வாங்கிக் கொடுத்துட்டு பேச்சை ஆரம்பிங்க.. அந்தப் பெண் முன்னாடியே என்னுடன் சண்டை போட்டாள்.. நான் திரும்பிப் பார்க்கிறதுக்குள்ள அங்கிருந்து எஸ்ஸாகிட்டா.. ஏன்னு கேளுங்க.. வயிற்றில எதையாவது போட்டுக்கிட்டு இருந்தாத்தான் இவ ஒழுங்காப் பேசுவா.. அங்கிருந்து பார்க்கிறதுக்கு கடல் வியு பிரமாதமா இருக்கும்.. உங்களுக்குப் பிடித்த சீனரிஸை நீங்களும் பார்க்கலாம்.. உங்க பிரண்டுக்குப் பிடித்த ஃபுட் வெரைட்டிஸை அவளும் மொக்கலாம்.. ஓகேதானே..?" என்று அபிப்ராயம் கேட்பதைப் போல ஆலோசனை வழங்கினான்..
நந்தினியை அவன் கணித்து வைத்திருந்த விதத்தில் உத்ராவுக்கும் வினித்துக்கும் சிரிப்பு வந்து விட்டது.. ஒன்று போல அவர்கள் சிரித்து வைத்ததில் வெறியாகிப் போன நந்தினி உத்ராவை மொத்தினாள்..
"இப்படி விட்டுக் குடுக்கிற பிரண்ட் கிடைக்கிறதுக்கு நான் போன ஜென்மத்தில புண்ணியம் செய்திருக்கனும்டி.. காட்டிக் கொடுக்கிற எட்டப்பியே.. வினித் அண்ணா நீங்களுமா..?"
"யு டூ வினித் அண்ணா..? இப்படியில்ல நீ கேட்டிருக்கனும்.. ஹா.. ஹா.."
"ஏய்ய்.. அடங்குடி.. அண்ணா நல்லவர்தான்.. உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்காரில்ல.. அதான்.. உன்காத்து அடிச்சிருச்சு.."
"அதைவிடு.. இப்ப உன்னை எந்த காத்து, கருப்பு அடிச்சிருச்சுன்னு கண்டு பிடிக்கலாம்.. வினித்.. பர்ஸைக் கொடுங்க.. பில் பே பண்ண பணம் வேணும்.."
வினித் பேண்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுப்பதற்குள் ரவிச்சந்திரன் பணத்தை எடுத்து நந்தினியிடம் நீட்டினான்.. உத்ராவிடம் கொடுக்காமல் நந்தனியிடம் அவன் நீட்டியதில் வெளிப்பட்ட அவனது புரிந்து கொள்ளலை மனதுக்குள் மெச்சிக் கொண்டான் வினித்..
'சும்மாவா.. பிஸினெஸ் வெர்ல்டில சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கியிருக்காரு..?'
வினித்தின் மனைவியிடம் ரவிச்சந்திரன் செலவு செய்ய பணத்தைக் கொடுக்கக் கூடாது.. நந்தினியிடம் கொடுக்கலாம்.. நந்தினி ரவிச்சந்திரனிடம் வேலை பார்ப்பவள்.. வித்தியாசமாக நினைக்க ஏதுமில்லை..
"வினித்தும் அவரோட வொய்பும் நம்ம கெஸ்ட்.. இங்கே அவங்க ஸ்பெண்ட் பண்ற டேஸில அவங்களுக்கான அத்தனை செலவையும் நாமதான் பார்த்துக்கனும்.. அண்டர்ஸ்டாண்ட்.." என்று வினித்தை முக்கிய விருந்தாளியாக்கி உத்ராவை அவனது மனைவி யென்று அடையாளப் படுத்தி அதனால் அவர்களுக்கு அவளும் விருந்தாளியென்று சொல்லியதில் வினித்தின் கணவன் என்ற ஈகோ படு திருப்தியானது..
ரவிச்சந்திரன் நீட்டிய பணத்தை முறைப்புடன் வாங்கிக் கொண்டாள் நந்தினி.. இல்லையென்றால் அதற்கும் பாட்டு வாங்க வேண்டி வருமே..
இரு ஜோடிகளும் ஆண்கள் ஒருபுறம் என்று பிரிந்து நடந்தார்கள்.. உத்ராவுடன் சென்ற நந்தினி திரும்பிப் பார்த்த அதே நொடியில் வினித்துடன் நடந்து கொண்டிருந்த ரவிச்சந்திரனும் திரும்பிப் பார்த்து வைத்ததில் இருவர் பார்வைகளும் சந்தித்துக் கொண்டன..
ரவிச்சந்திரனின் கண்கள் மின்னியதில் வினித் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலில் திரும்பிப் பார்த்தான்.. நந்தினியின் உடலில் ஓடிய சில்ர்ப்பை அவளது முகம் பிரதிபலித்ததில்..
"என்னடி.. மந்திரிச்சு விட்ட கோழி போல ஒரு மார்க்கமா முழிக்கிற..?" என்று சந்தேகத்துடன் கேட்டபடி உத்ராவும் திரும்பிப் பார்த்தாள்..
ரவிச்சந்திரனும் நந்தினியும் கள்ளப் பார்வை பார்ப்பதை இவர்கள் பார்த்து விட்டு.. தலையை ஆட்டிச் சிரித்தார்கள்..
"ஏய்ய்..! சைட்டா அடிக்கிற..?" உத்ரா மிரட்டினாள்.
"யாரை..? இந்த கம்மாண்டரையா சைட் அடிக்கிறேன்னு சொல்கிற..? இவனை சைட் அடிச்சிட்டாலும்.. கழுதையில.." நந்தினி சூள் கொட்டினாள்..
"உன் வாய்தான் அப்படிச் சொல்லுது.. ஆக்சனெல்லாம் வேற மாதிரி இருக்குது.."
"ஒரு ஆக்சனும் இல்ல..? உனக்குத் தெரியாதுடி உத்ரா.. ஈ கம்மாண்டர் ஆயிரம் பெல்ட் மன்னர்களுக்கு ஈக்குவல்.. ஒத்தை பெல்ட் மன்னனைச் சமாளிக்க முடியாமலே ஓடி வந்திருக்கேன்.. இதில ஆயிரம் பெல்ட் மன்னன்களுக்குச் சவால் விடற கம்மாண்டரையா கன்சிடர் பண்ணுவேன்..?"
"அப்படிங்கற..?"
"ஆமாங்கிறேன்.."
"நம்ப முடியலையே.."
உத்ரா வாயால் சொன்னதை வினித் பார்வையால் உணர்த்தினான்.. நந்தினியைப் பார்ப்பதை வினித் கண்டு கொண்டதில் சன்னமாக சிரித்த ரவிச்சந்திரன்..
"நத்திங்.." என்றான்..
'ஒன்றுமேயில்லையா..?' வினித் நம்பாத பார்வை பார்த்தான்..
"யு ஸீ வினித்.." ரவிச்சந்திரன் பேச்சை மாற்றி கேரளத்தின் அரசியல் சூழலைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டான்..
பதிலுக்கு வினித் தமிழகத்தின் அரசியல் சூழலை விமரிசித்து இரு மாநில அரசியலையும் ஒப்பிட்டுப் பேச ஆரம்பிக்க பேச்சு அப்படியே மத்திய அரசின் அரசியல் சூழலுக்குத் தாவியது.
வினித் உத்ராவையும் நந்தினியையும் மறந்து காரசாரமாக அரசியல் விவாதத்தில் இறங்கி விட்டான்.. ரவிச்சந்திரனுக்கு அதுதானே வேண்டும்.. கடலோரமாக போடப்பட்டிருந்த மர பெஞ்சுகளில் நிழல் குடைக்குக் கீழ் உட்கார்ந்தவன் அருகிலிருந்த குளிர்பான விற்பனை வண்டியிலிருந்து வினித்துக்கும் அவனுக்கும் குளிர் பான பாட்டில்களை தருவித்து வினித்திடம் ஒன்றை நீட்டினான்..
"பேசிப் பேசித் தொண்டை வறண்டிருக்கும்.. கூல்டிரிங்க் சாப்பிட்டுத் தொண்டையை நனைத்துக்கங்க.."
ரவிச்சந்திரனின் உபசரிப்பில் கவரப் பட்டவனாக வினித் சிரித்தான்.. கடலோர மர பெஞ்சும்.. காலைத் தொட்ட கடலலையும்.. கையில் குளிர்பான பாட்டிலும்.. உடலில் படியும் குளிர் காற்றும்.. பார்ப்பதற்கு பச்சைப் பசேலென்று கண்ணுக்குக் குளிர்ச்சியைக் குடுத்த தென்னை மரங்களுமாக அந்தச் சூழலே குளிர் நிரம்பிய இனிமையானதாக இருந்தது.. வினித்துக்கு கேரளாவைப் பிடித்துப் போனது.
'இதை விடவா சிம்லா அழகு..?'
அவன் இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி பேச்சைத் தொடர்ந்தான்.. காதலர்கள் காதல் மொழிகளைப் பேசிக் கொள்வது மட்டும் சுகமில்லை.. நண்பர்கள் உட்கார்ந்து அரசியலைப் பற்றி ஆய்வு செய்வது கூட சுகம்தான்.. என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தது அவன் மனது..
அங்கே உத்ரா நந்தினியை இழுத்துக் கொண்டு ரெஸ்ட்டாரெண்டுக்குள் நுழைந்தாள்.. கடலோரமாக இருந்த ரெஸ்ட்டாரெண்டின் ஜன்னலோரமாக இருந்த இருக்கைகளில் அவர்கள் எதிரும் புதிருமாக அமர்ந்தார்கள்.. கடலின் அழகை ரசித்த உத்ரா..
"அழகா இருக்கில்ல..?" என்றாள்..
"இங்கே எல்லாமே அழகாத்தான் இருக்கும்.." அசட்டையாக பதில் சொன்னாள் நந்தினி..
"என்னடி இப்படி விட்டேற்றியாப் பேசற..? இயற்கையை ரசிக்கிறதுன்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமே.."
"இப்பவும் பிடிக்கும்தான் உத்ரா.. பட்.. மனசு ஒரு நிலையில் இல்லாம அலைபாயுதுடி.. எதிலும் மனசு ஒட்ட மாட்டேங்குது.. எரிச்சல் எரிச்சலா வருது.. சம் டைம்ஸ் ''ன்னு அழனும் போல இருக்கு.. எதனாலன்னு தெரியல.. வயநாட்டை விட்டு ஓடிடனும் போல இருக்கு.. ஆனாப் போக முடியல.. ஏன்னும் தெரியலை.." நந்தினியின் கண்கள் கலங்கின..
உத்ராவுக்குத் தெரிந்தது.. ஏன், எதனால் என்பது அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.. ஆனால் அதை அவள் உறுதிபடுத்திக் கொள்ள முயன்றாள்..
நந்தினியின் குணத்தை அறிந்தவள் உத்ரா.. அனைவரிடமும் இயல்பாக பழகுபவள்.. கலகலப்பாக பேசிச் சிரிப்பாள்.. ஆனால் காதல் என்று விழுந்ததில்லை.. கள்ளப் பார்வை பார்த்ததில்லை.. நேர் கொண்ட பார்வையுடன் பேசுவாள்.. எதிர் கொள்ள நேரிடும் காதல் விண்ணப்பங்களைத் தவிர்த்து விடுவாள்.. ஏண்டி என்றால்..
"எனக்குக் காதல் வரலையேடி.." என்று கையை விரிப்பாள்..
வராத காதலை வா, வா, என்று வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டிய அவசியம்தான் என்ன என்ற கோட்பாடை உடையவள் நந்தினி.. காதல் சொல்பவர்களைக் காமெடி பீஸாக்கி சிரித்து விட்டுப் போய் விடுவாள்..
"இந்தப் பெண் என்னடா எதைச் சொன்னாலும் சீரியஸா எடுத்துக்காம சிரித்துட்டுப் போயிடுது..?"
தலையைப் பிய்த்துக் கொள்ளும் காதல் மன்னன்கள் நந்தினியிடம் காதல் சொல்வது கற்பாறையில் தலையை மோதிக் கொள்வதற்கு சமம் என்ற முடிவிற்கு வந்து விலகிப் போய் விடுவார்கள்..
'இவளிடம் ஏதோ விடற நேரத்தில வேற யாருக்காவது ஏரோ விட்டாலாவது யூஸ் ஆகும்..'
இப்படிக் காதல் மன்னன்களையும்.. "ஹாய்.." சொல்ல வைத்து நண்பர்களாக்கி விடும் வல்லமை படைத்த நந்தினியா இப்படித் தடுமாறுகிறாள்..
கண் முன்னால் பரத்தி வைக்கப் பட்டிருந்த உணவு வகைகளை வெறித்துப் பார்த்தபடி இருந்த நந்தினியைப் பார்த்த உத்ராவிற்கு இவள் என் தோழி நந்தினிதானா என்ற சந்தேகம் எழுந்தது..
'நந்தினியா இப்படி ஃபுட் வெரைட்டிஸைத் தொட்டுப் பார்க்காம விரதமிருக்கிறவளைப் போல வெறிச்சுப் பார்க்கிறா..?'
பித்துப் பிடித்தவளைப் போல இருந்த நந்தினியைப் பார்க்கப் பார்க்க உத்ராவுக்குக் கவலையாக இருந்தது..
'தூண்டிற் புழுவினைப் போல் - சிறு
              சுடர் விளக்கினைப் போல்..
     நீண்ட பொழுதாக என் நெஞ்சம் துடிக்குதடி..'
எட்டயபுரத்தின் முண்டாசுக் கவிஞன் சொன்னது இதைத்தானோ..? வேண்டும் பொருள்களையெல்லாம் மனது வெறுத்து விட்டதடி என்று சொன்னானே..
'பாலிருக்கும்.. பழமிருக்கும்..
              பசியிருக்காது..
     பஞ்சணையில் காற்று வரும்
              தூக்கம் வராது..
     நாலுவகை உணவிருக்கும்..
              ஆசை வராது..
     நடக்க வரும் கால்களுக்கும்
              துணிவிருக்காது..'
கண்ணதாசன் பாடி வைத்தது இதைத்தானா..?





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -154
எண்ணியிருந்தது ஈடேற -154
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-154.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-154.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy