எண்ணியிருந்தது ஈடேற -153

153 வினித்தும் உத்ராவும் ஒருவருடன் ஒருவர் பிணைந்து நடந்தபடி கடலோர இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.. "ஆக்சுவலா...


153


வினித்தும் உத்ராவும் ஒருவருடன் ஒருவர் பிணைந்து நடந்தபடி கடலோர இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்கள்..
"ஆக்சுவலா உத்ரா.. கேரளத்து இயற்கையழகு என்னை இம்ப்ரெஸ் பண்ணுது.. என்ன ஒரு கூல் கிளைமேட்..! நாம ஹனிமூன் கொண்டாடறதுக்கு
ஏத்த இடம்தான்.. இதைவிட பெட்டரா எந்த இடமும் இருக்க முடியாதுதான்.. பட்.. நாம மட்டும் தனியா இருந்திருக்கனும்டி.. இப்பப் பாரேன்.. ஹனிமூன் கொண்டாடற ஃபீலே வரலை.. என்னவோ டூர் வந்திருக்கிற மாதிரியே இருக்கு.." வினித் ஆதங்கப் பட்டான்..
உத்ராவுக்கு சங்கடமாகத்தான் இருந்தது.. அவளுடைய தோழமைக்காக கணவனின் ஆசையை பின் தள்ளுகிறாளே என்று வருத்தம் கொண்டாள்..
"ஐ ஆம் ஸாரி.."
"ஏய்ய்.."
உத்ராவின் வருத்தத்தைப் பொறுக்க முடியாமல் அவள் தோளை அணைத்து இறுக்கிக் கொண்டான் வினித்..
"என் ஃபீலிங்கைச் சொன்னேன்டி.. இதுவும் கூட ஒரு வகையில் நல்லாத்தான் இருக்கு.. அப்பப்பக் கிடைக்கிற தனிமையிலே அப்பிக்கலாம் பாரு.."
"அப்பிக்கிறதோட இவர் நிறுத்திக் கொள்கிறவர்தான்.."
"ஏன் நிறுத்திக்கனும்..? நான் உன் புருசன்.. லைசன்ஸ் உன் கழுத்தில் இருக்கு.. தொட்டுப் பார்த்துக்க.."
"உங்களைத் தொட்டுப் பார்த்துக்கவா..?"
"வேணாம்ன்னா சொல்லுவேன்..? வா.. தொடு.."
ஆசையுடன் வினித் தன் மார்பைக் காண்பிக்க அதில் முகம் புதைத்தாள் உத்ரா.. புதிதாக திருமணம் ஆனவர்களுக்குப் பின்னிப் பிணைய காரணம் வேண்டும்.. கிடைக்கவில்லையென்றாலும் அவர்கள் அதை உற்பத்தி செய்து கொள்வார்கள்..
"உத்ரா.."
நந்தினியின் குரலில் அவசரமாய் விலகினாள் உத்ரா.. வினித்தின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தில் குற்ற உணர்வு ஏற்பட..
"ஸாரி எகெய்ன்.." என்றாள்..
"இட்ஸ் ஆல்ரைட்டுன்னு சொல்ல மாட்டேன்.. என்னன்னு கேட்டு அனுப்பிட்டு வா.."
நந்தினியை எங்கே அனுப்பி விட்டு உத்ராவை எங்கே வரச் சொல்கிறான்..? என்ற நினைவில் எரிப்பு வந்தது உத்ராவுக்கு.. வந்திருப்பது வயநாட்டக்கு.. ரவிச்சந்திரனின் விருந்தாளிகள் அவர்கள்.. நந்தினி உத்ராவின் தோழி.. ரவிச்சந்திரனின் பாதுகாவலில் இருப்பவள்.. அவளைத் தவிர்க்க முடியுமா..? அவளைத் தவிர்ப்பதற்காக உத்ரா வயநாட்டுக்கு வந்திருக்கிறாள்..? நந்தினியைப் பார்த்து விட்டுப் போகத்தானே வந்திருக்கிறாள்..?
'காதலும், தாபமும் அனைத்தையும் மறக்கடித்து விடும் போல..'
"உத்ரா.." மறுபடியும் நந்தினி குரல் கொடுத்தாள்..
"இங்கே இருக்கேண்டி.." கணவனின் முறைப்பை ரசித்தவண்ணம் உத்ராவும் பதிலுக்கு குரலைக் கொடுத்தாள்..
"ரூமுக்கு வா.. போசிக்கறேன்.. அங்கே இருக்குடி உனக்கு.." வினித் தாழ்ந்த குரலில் எச்சரித்தான்..
அங்கே என்ன கிடைக்கும் என்ற அறிதலில் கிளர்ச்சியடைந்த உத்ரா..
"ச்சீய்.." என்று கணவனின் கையைக் கிள்ளினாள்..
"இங்கே இருக்கியா..?" என்றபடி வந்த நந்தினியின் கண்கள் கலங்கியிருந்தன..
"என்னடி ஆச்சு..?" உத்ரா பதட்டத்துடன் வினித்தை மறந்தவளாக தோழியின் கையைப் பிடித்து முகவாயை நிமிர்த்தி முகம் பார்த்தாள்..
"நத்திங்டி.." என்ற நந்தினியின் விழிகள் கண்ணீரில் மிதந்தன..
"ஒன்னுமில்லாததுக்கா அழுவ..? என்னன்னு சொல்லு.."
உத்ராவின் வற்புஹத்தலில் எதையோ சொல்ல வாய் திறந்த நந்தினி..
"வினித்.." என்ற ரவிச்சந்திரனின் குரலைக் கேட்டதும் திறந்த வாயை இறுக மூடிக் கொண்டாள்..
முக உணர்வுகளை அவன் அறியா வண்ணம் அவள் மறைத்துக் கொண்டதில் இமைகள் சுருங்க தோழியைப் பார்த்தாள் உத்ரா..
'ஏன் இப்படி இருக்கிறா..?'
வாய் என்னவோ வினத்தை அழைத்தது.. பார்வை நந்தினியை மட்டுமே துழாவியது.. உத்ராவின் அருகில் நந்தினியைக் கண்டதும்..
"இங்கேதான் வருகிறன்னு சொல்லாம ஓடி வருவியா..?" என்று சப்தம் போட்டான் ரவிச்சந்திரன்..
நந்தினி உத்ராவின் முதுகிற்குப் பின்னால் மறைந்து கொள்ள..
"ஏன் சார்..? அவ இங்கே வராம வேற எங்கே போகப் போகிறா..?" என்று தோழிக்கு பரிந்து கொண்டு வந்தாள் உத்ரா..
"அதைச் சொல்லிட்டு வரனுமா.. வேண்டாமா..? இது கேரளா உத்ரா.. இவ பாட்டுக்கு வழி தப்பிப் போயிட்டா என்னை நம்பி இவளை அனுப்பி வைத்திருக்கிற உங்களுக்கு யார் பதிலைச் சொல்வது..?" படபடத்தான் ரவிச்சந்திரன்..
கோழிக்கோடின் கடற்கரையில் அங்கே இருக்கும் ரவிச்சந்திரனிடமிருந்து இங்கே இருக்கும் உத்ராவிடம் நந்தினி வந்து விட்டதற்காக இத்தனை பேச்சு..?
உத்ராவிற்கே அது ஓவர் என்று தோன்றியது.. இருந்தாலும் ரவிச்சந்திரனின் வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக..
"நீயும்தான் சொல்லாம வரலாமாடி..? சாரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு வருவதற்கென்ன..?" என்று தோழியைக் கடிந்து கொண்டாள்..
"சொல்லத்தான் நினைத்தேன்.."
நந்தினி சொன்னது பழைய பாடலைப் போல இருந்ததில் வினித் ரசித்துச் சிரித்தான்.. அவன் சிரிப்பை ரசிக்காத ரவிச்சந்திரன் நந்தினியை முறைத்தான்..
"கேட்டுக்கங்க உத்ரா.. இங்கே வருகிறேன்னு சொல்கிறதுக்குக் கூட உங்க பிரண்ட் நினைத்தாளாம்.. ஹௌவ் இஸ் இட்..?"
"ஏண்டி காமெடி பண்ற..? சார் கேட்கிறதுக்குப் பதிலைச் சொல்லு.."
"எதைச் சொல்கிறதா இருந்தாலும் கேட்கிற நிலைமையில இவர் இருக்கனுமே.."
"என்னடி சொல்கிற..?"
ரவிச்சந்திரன் குடித்திருக்கிறானோ.. அதனால்தான் அவள் சொல்வதை கேட்கக் கூடிய நிலைமையில் அவன் இல்லையோ என்ற சம்சயத்துடன் ரவிச்சந்திரனை சந்தேகத்துடன் பார்த்து வைத்தாள் உத்ரா..
'ஸ்டடியாத்தான நிக்கிறாரு..? அப்புறம் ஏன் இவ இப்படிச் சொல்கிறா..?'
"குட்.. நான் டிரிங்க் பண்ணியிருக்கிறேனான்னு டவுட் படுகிறதைப் போல இருக்கு.. உங்க பிரண்டுக்கு வேலை கொடுத்திருக்கேனில்ல..? இவ இதைப் போலதான் பெயர் வாங்கிக் கொடுப்பா..? உளருகிறது நானில்ல... இவதான்.. நான் ஸ்டடியாத்தான் இருக்கேன்.." உக்கிரத்துடன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் ரவிச்சந்திரன்..
"திஸ் இஸ் டூ மச் நந்தினி.. உனக்கு வேலை கொடுத்ததே தப்புங்கிற லெவலில சாரைத் திங் பண்ண வைக்கிற..? ஏண்டி இப்படிப் பினாத்தற..?"
"உனக்கு நான் பேசுகிறது பினாத்தலாத்தான் இருக்கும் உத்ரா.. அங்கே என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியாது.."
"என்னடி நடந்தது..? கடலிலே இருந்த சுறா மீன் ஏதாச்சும் கரையில ஒதுங்கி நடந்துச்சா..?"
மனைவியின் நகைச்சுவையை ரசித்த வினித்..
"வாவ்..!" என்றான்..
ரவிச்சந்திரன் அவனை எரிப்பதைப் போல பார்த்து வைத்தான்..
'ஜோக்கு..?' என்றது அவனது பார்வை..
"நிஜமாவே ஜோக்தான் சார்.. உங்களுக்குச் சிரிப்பு வரலையா..?" வினித் விசாரித்தான்..
"வரலை.." ரத்தின சுருக்கமாக சொன்னான் ரவிச்சந்திரன்..
"அவளுக்கு வரலைன்னா விட்டு விடுங்களேன்.." என்றாள் உத்ரா..
"என்னவோ போ உத்ரா.. நீயும் உன் பிரண்டும் பேசிக்கிறதைக் கேட்டா செம காமெடியா இருக்கு.. ஹா.. ஹா.." சிரித்து மகிழ்ந்து போனான் வினித்..
"எல்லாம் உன்னாலேதாண்டி.. எதைச் சொன்னாலும் தெளிவாச் சொல்கிறயா..? இப்போப் பார்.. உன்னாலே சார் டென்சன் ஆகிறார்.. வினித் ரிலாக்ஸ் ஆகிறார்.."
"நீ சும்மா இரு உத்ரா.. எதுக்கெடுத்தாலும் என்னையே குறை சொல்லாதே.. நானும் பாஸீம் கடலோரமா நடந்துக்கிட்டு இருந்தோம்.. அங்கே பாஸோட கேர்ள் பிரண்ட் வந்துட்டாங்க.."
'ஓ..! கதை இப்படிப் போகுதா..?'
நந்தினியின் மனக் குமுறலுக்கான காரணத்தை கண்டு கொண்டாள் உத்ரா.. தோழியின் மனதில் சலனம் வந்திருப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..
"அவள் என் கேர்ள் பிரண்டில்லை.." முகம் சுளித்தான் ரவிச்சந்திரன்..
"ஓ.. அப்ப லவ்வரோ..?" வேண்டுமென்றே கேட்டாள் நந்தினி..
பக்கத்தில் வினித், உத்ரா இருப்பதைப் பொருட் படுத்தாமல் அவளை ஆழ்ந்து இமைக்காமல் ஓர் பார்வை பார்த்தான் ரவிச்சந்திரன்.. மனம் படபடக்க நந்தினிதான் தலையைக் குனிந்து கொள்ள வேண்டியதாக இருந்தது..
வினித்தும் உத்ராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.. அவர்களின் பார்வைகள் ரகசியம் பேசிக் கொண்டன..
இனம் இமைறியும் பார்வைப் பரிமாற்றம் அது..
"லுக்..! வாய் இருப்பதற்காக எதை வேண்டு மானாலும் பேசி விடக் கூடாது.. அவள் எனக்குப் பிரண்டே இல்லை என்கிறேன்.. நீ லவ்வரான்னு கேட்கிற..? இது ஸ்டுப்பிட் கொஸ்டின்னு மத்தவங்களுக்குத்தான் தெரியாது.. உனக்குமா தெரியாது..?"
ரவிச்சந்திரன் 'உனக்குமா' என்ற வார்த்தையில் கொடுத்த அழுத்தத்தில் உதட்டைக் கடித்தாள் நந்தினி..
"ஐ டோன்ட் நோ பாஸ்.. நேற்று கல்ச்சுரல் பங்சனில அவங்க உங்க மடி மேல உட்கார்ந்து உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்களா..? நான் உங்க லவ்வரோன்னு நினைத்துட்டேன் பாஸ்.."
"நினைப்ப.. நினைப்ப.. ஏன் நினைக்க மாட்ட..? அவ என் மடியிலா உட்கார்ந்திருந்தா..? என் சீட் கைபிடியில உட்கார்ந்திருந்தா.."
"இரண்டுக்கும் நடுவில ஒரு இன்ச் கூட இடைவெளியில்ல பாஸ்.."
"பக்கத்து சீட்டில் நீ உட்கார்ந்திருந்த.. அதனால அப்படி உட்கார்ந்து விட்டா.."
"ஓ.. அது வேறு குறையா உங்களுக்கு..? சொல்லியிருந்தா நான் என் சீட்டை விட்டுக் கொடுத்துட்டு லாஸ்ட் 'ரோ'க்குப் போயிருப்பேனே பாஸ்.. அப்போதும் ஒன்றும் கெட்டுப் போகலையே.. நான் பாட்டுப் பாட மேடையேறினப்ப அவங்க என் சீட்டை ஆக்குப்பை பண்ணியிருந்தாங்கள்ல.. அப்படியே உட்கார விட்டிருக் கலாமில்ல..? எதுக்காக அவங்களை எழுப்பி விட்டு என்னை உட்கார வைத்தீங்க..? உங்க மடிமேல அவ மறுபடியும் உட்கார்ந்து பேசனும்ங்கிற ஆசையினாலே தானே..?"
நந்தினிக்கு வாய் அதிகம் என்று உத்ரா சொல்லக் கேட்டிருக்கிறான் வினித்.. அதற்கு மேல் அவளது வாய் பற்றித் தெரிந்து கொள்ள அவன் விரும்பயதில்லை.. புது மனைவியிடம் அவன் தெரிந்த கொள்ள ஏகப்பட்டவைகள் இருந்ததினால் அவன் நந்தினியின் பேச்சாற்றலைப் பற்றிக் கேள்வி கேட்க விரும்பியதில்லை..
அன்று அவள் போட்டுத் தாக்கிய தாக்கலில் தேநிலவை மறந்து அவள் பேச்சை படு சுவராஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான் வினித்..
நந்தினியின் தாக்குதலை விரும்பி ஏற்றுக் கொண்டிருந்தான் ரவிச்சந்திரன்.. அவள் நடத்திக் கொண்டிருந்த யுத்தத்தை ரசித்தான்.. அவன் எப்படிப் பந்து வீசினாலும் எதிர்கொண்டு பதிலுக்கு பந்தை வீசும் அவளது விதண்டாவாதம் அவனுக்குப் பிடித்திருந்தது..
இந்தக் கோபத்திற்கு மூல காரணம் என்ன..? நந்தினியின் மனதில் எழுந்திருக்கும் பொறாமைதானே..
காதல் துளிர்க்கும் போது பொறாமையும் சேர்ந்தே துளிர்க்கும்.. தன் உரிமை என்று நினைக்கும் இடத்தில்தான் பொறாமை வரும்..
நந்தினி ரவிச்சந்திரனை அவளுடையவன் என்று நினைத்து விட்டாளா என்ன..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -153
எண்ணியிருந்தது ஈடேற -153
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-153.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-153.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy