எண்ணியிருந்தது ஈடேற -151

151 மறுமுனையில் நிசப்தம் நிலவியது.. உத்ரா என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்ற நினைவில் கண்ணீர் அரும்பியது நந்தினிக்கு.. வயநாட்டுக்க...


151


மறுமுனையில் நிசப்தம் நிலவியது.. உத்ரா என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்ற நினைவில் கண்ணீர் அரும்பியது நந்தினிக்கு.. வயநாட்டுக்கு வந்தபின் நந்தினி மாறி விட்டாள் என்று நினைப்பாள்.. பெரிய இடத்தில் செல்வாக்குடன் வேலை பார்க்கும் திமிரை தோழியிடம் காட்டுகிறாள் என்று நினைப்பாள்.. வயநாட்டுக்கு தேநிலவு கொண்டாட வா என்று அழைத்துவிட்டு புறக்கணிக்கிறாள் என்று நினைப்பாள்.. பழி ஓரிடம்.. பாவம் ஓரிடம்..
'என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும்.. என்னால் ஊர் சுற்றப் போக முடியாது..' நந்தினி தீர்மானமாக இருந்தாள்..
அவளால் ரவிச்சந்திரன் பேசும் பேச்சுக்களை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை.. அதிலும் வினித்..! நந்தினிக்கு அண்ணன் போன்றவன்.. அவனை ரவிச்சந்திரன் பேசுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது..
இது ஒன்று மட்டுமே நந்தினியின் நினைவில் சுழன்றது..
"வரலையா..?" மறுமுனையில் உத்ரா கேட்டாள்..
"ம்ம்ம்.. வரலை.."
"ஏண்டி..?"
"பாஸ் சம் இம்பார்ட்ண்ட் வெர்க்ஸ் கொடுத்திருக்கார் உத்ரா.. அதைப் பார்க்கனும்.. ஸோ.. நீயும் அண்ணாவும் சைட் ஸீஸிங்க்கு போயிட்டு வாங்க.. இன்றைக்கு என்னால் டைனிங் ஹாலுக்கும் வரமுடியாது.. ரூமுக்கே ஃபுட்டை கொண்டு வரச் சொல்லிச் சாப்பிட்டுக்கலாம்ன்னு இருக்கிறேன்.. ஹேவ் எ நைட் டே.."
மறுமுனையில் இப்போது கிசுகிசுப்பான பேச்சுச் சப்தம் கேட்டது.. உத்ரா போனை உள்ளங்கையில் பொத்திக் கொண்டு பேசுகிறாள் என்று யூகித்தாள் நந்தினி.. கொச கொச என்ற பேச்சுச் சப்தம் ஓய்ந்து உத்ரா போனை கட்பண்ணி விட்டாள்..
'கோபமாயிருக்கும்..'
தலையணையில் முகம் புதைத்து தூக்கத்தை தொடர முயன்றாள் நந்தினி.. அதற்கு இடையூறு செய்வதைப் போல காலிங் பெல் கத்தியது..
'யார்..?'
அழைக்காமல் எதற்காக ரூம் பாய் வர வேண்டும் என்ற கோபத்துடன் கதவைத் திறந்தவள் வெளியில் நிற்பது யார், எவர் என்று கூடப் பார்க்காமல்..
"நான் கூப்பிட்டேனா..?" என்று கத்தினாள்..
"நீ கூப்பிட்டால்தான் நான் வரனுமா..?" என்ற அமர்த்தலான கேள்வியில் அரண்டு போனவள்..
'இவனா..?' என்று கண்களைக் கொட்டி விழித்துப் பார்த்தாள்..
எதிரே ரவிச்சந்திரன் நின்று கொண்டிருந்தான்..
தூக்கத்தில் கலைந்திருந்த முடிக் கற்றையும்.. கசங்கியிருந்த நைட்டியும்.. வீங்கியிருந்த முகமுமாக கந்தல கோலமாக அவன் முன்னால் நிற்க வேண்டியிருக்கும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்த்திராததால் வெறுத்துப் போய் விட்டாள்..
'வர்றேன்னு ஒரு போனைப் பண்ணிட்டு வந்த தொலைத்தால்தான் என்ன..? இப்படி திடுதிப்புன்னு சொல்லாமல் கொள்ளாம வந்து நின்னா என்னதான் செஞ்சு தொலைக்கிறது.. சும்மாவே பிசாசைப் போல இருப்பேன்.. இதில தூங்கின கண்ணும் வீங்கின முகமுமா வந்து நின்னா விளங்கிரும்..'
இந்த முகத்தைப் பார்த்தால் நிச்சயமாக அவன் காதல் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடும் என்ற நிச்சயத்துடன் அவனைப் பார்த்தால்.. அவன் அந்த முகத்தையும் காதலோ காதலுடன் கடித்துத் தின்னுவதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தான்..
'ஆனாலும் இவனுக்கு அசாத்திய தைரியம்தான்..'
நந்தினிக்கு ஆச்சரியம் ஆச்சரியமாக இருந்தது.. முகத்தைக் கூடக் கழுவாமல் முன்னே வந்து நிற்கிறாள்.. அவளது முகவடிவை முழுநிலவை ரசிப்பதைப் போல அவன் ரசித்துப் பார்க்கிறான் என்றால் என்னத்தைச் சொல்லுவது..?
'வயநாட்டிலேயே அலைகிறானில்ல.. யாரோ மந்திரிச்சு விட்டுட்டாங்க போல.. சுயபுத்தியோட இருந்தா என்னைக் காதலிக்கிறேன்னு பினாத்த மாட்டான்..'
அவளுக்கு வேலை கொடுத்து ஆதரிக்கும் நன்றிக் கடனிற்காகவாவது அவன் கையில் ஒரு தாயத்தைக் கட்டிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி.. அது மந்திரிக்கப்பட்ட தாயத்தாக இருக்க வேண்டும்.. அப்போதுதான் அவனைப் பீடித்திருக்கும் காதல் பிசாசு விலகி ஓடும்..
"ஹேய் தூங்கு மூஞ்சி..! நான் உனக்கு இம்பார்டண்ட் வொர்க் கொடுத்திருக்கேன்னு என் முன்னால் உட்கார்ந்திருக்கிற உத்ராவிடம் புரூடா விடறியே..
அவங்க என்னிடம் கேட்பாங்கன்னு யோசிக்க வேண்டாமா..?" என்று உல்லாசமாகச் சிரித்தான் ரவிச்சந்திரன்..
'சிரித்து மயக்க கிளம்பி வந்திருக்கிறானா..?' சினந்தாள் நந்தினி..
முந்தின நாள் இரவுதான் தேள் கொடுக்கு கொட்டியதைப் போன்ற வார்த்தைகளைக் கொட்டி விட்டுப் போயிருக்கிறான்.. விடிந்ததும் அதைத் துப்புறவாக மறந்து விட்டுச் சிரித்துக் கொண்டு நிற்கிறான்..
'என்னை என்னன்னு நினைச்சிருக்கான்..?'
"உத்ரா என்னிடம் சண்டைக்கு வர்றாங்க.. அவங்களோட பிரண்டுக்கு நான் வொர்க் கொடுத்து டிஸ்டர்ப் பண்றேனாம்.. அட்லீஸ்ட் அவங்க சென்னைக்கு ரிட்டர்ன் ஆகிற வரைக்குமாவது அர்ஜன்ட் வொர்க்ஸை கொடுக்காம இருக்கனுமாம்.. ரெக்வஸ்ட் பண்ணிக் கேட்டுக்கறாங்க.. நான் எங்கேங்க வொர்க் கொடுத்தேன்னு கேட்டா நந்தினி பொய் சொல்ல மாட்டாளேங்கிறாங்க.. நான் மட்டும் பொய் சொல்கிறவனா..?"
நீ என்னவோ சொல்லிக் கொண்டிரு.. எனக்கென்ன என்று எங்கோ பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் நந்தினி..
"ஏய்ய்..!" செல்லமாக அவன் அவளுடைய கன்னத்திதைத் தட்டியதில் ஜிலீர் என்ற உணர்வு ஏற்பட ஒரடி பின்னால் நகர்ந்து மருண்டாள்..
"கன்னத்திலேதானேடி தட்டினேன்..? வேற என்ன செய்தேன்..?" கனிவாக நியாயம் கேட்டான் ரவிச்சந்திரன்.
"வாடி, போடின்னு பேசாதீங்கன்னு சொல்லியிருக்கேன்.."
தன் எதிர்ப்பை பலத்த கண்டனக் குரலில் சொல்லத்தான் முயன்றாள்.. அது கழுதை.. வெறும் முணுமுணுப்பாக வந்து தொலைத்தது..
"ஊஹீம்..? நான் உன்னை வாடி, போடின்னு சொல்லக் கூடாதா..? ஹா.. ஹா.."
அவள் என்னவோ பெருத்த நகைச்சுவையைச் சொல்லி விட்டதைப் போலச் சிரித்து மகிழ்ந்து போனான் ரவிச்சந்திரன்..
'ஏண்டா இப்படிப் படுத்தி எடுக்கிற..? இம்சை அரசா..!'
அவன் எப்போது அங்கிருந்து நகர்வான் என்றிருந்தது நந்தினிக்கு.. அவளுக்கு கண்ணாடி பார்த்தாக வேண்டும்..
அது எப்படி தூங்கிய திருக்கோலத்தில் மட்டக் கண்றாவியாக நிற்பவளிடம் அவன் காதல் பேசி சிரித்து மகிழ்கிறான்..?
குளித்து.. நேர்த்தியாக உடையணிந்து.. ஒழுங்காக தலைவாரிப் பின்னியிருந்தாலே தான் பார்க்கச் சகிக்கும்படி இருக்கிறோம் என்று நந்தினி நம்ப மாட்டாள்..
இவன் என்னடாவென்றால் இந்தக் கோலத்தில் இருப்பவளிடம் மயங்கும் பார்வையை பார்த்து வைக்கிறானே..
"உனக்கு ஃபிப்டீன் மினிட்ஸ்தான் டயம்.. அதுக்குள்ள ரெடியாகி டைனிங் ஹாலுக்கு வந்து நிற்கிற.."
"எதுக்கு..?"
"ஊர் சுற்றத்தான்.."
"நான் வரலை.."
"ஏன்..? உன் பாஸ் சம் அர்ஜன்ட் வொர்க் கொடுத்திருக்கார்ன்னு உத்ராவிடம் சொன்ன கதையை என்னிடம் ஒப்பிக்காதே.. உன்னுடைய பாஸே நான்தான்.."
"எனக்கு வர இஷ்டமில்லை.."
"அதுதான் ஏன் என்கிறேன்.."
"தலை வலிக்குது.."
"பொய் சொல்லாதே.. உனக்கு அது வராது.. நீ வருகிற.."
"நான் வரலை.."
"வருகிற.."
"நானென்ன உங்க அடிமையா..?"
"என்னிடம் வொர்க் பண்றவ.. இன்றைக்கான உன் வொர்க் இதுதான்.. மைண்ட் இட்.."
முகத்தின் கனிவு மறைந்து கடுமை விரவியதில் இவன் நிமிடத்திற்கு நிமிடம் வேறு முகம் காட்டுகிறவன் என்று சலிப்பு வந்தது நந்தினிக்கு..
"டைம் பாஸ் ஆகிக்கிட்டே இருக்கு.. டைனிங் ஹாலில் வெயிட் பண்றேன்.. வந்து சேரு.."
அதிகாரத் தோரணையுடன் உத்தரவிட்டவன் டக் டக் என பூட்ஸ் சப்தம் எதிரொலிக்க கம்பீரமாக நடந்தான்.
கோபத்துடன் நாக்கைத் துருத்தி அழகு காட்டினாள் நந்தினி.. சட்டென அவன் திரும்பி விட மாட்டிக் கொண்டவளாக திருதிருத்தாள்..
"புதிதாய் மாட்டிக்கிட்டதைப் போல போஸ் கொடுக்காதே.. யூசுவலா இந்தக் கிறுக்குத்தனத்தைத் தானே நீ செய்து வைப்ப..?"
ஒரு ஷொட்டுக் கொடுத்து விட்டு அவன் போய் விட்டான்.. அறைக் கதவை அசைத்து விட்டு உள்ளே வந்த நந்தினி அவசரமாக கண்ணாடி பார்த்தாள்.. அவளைப் பார்க்க அவளுக்கே சகிக்கவில்லை..
'இந்த முகத்தை உத்து உத்துப் பாக்கறான்.. அடியே நந்தினி.. இதுக்காகவே நீ அவனோட காதலை கன்சிடர் பண்ணலாம்டி..'
நந்திதின குளியலறைக்குள் புகுந்து சடுதியில் குளித்து உடை மாற்றி ஹேண்ட் பேகை தோளில் மாட்டியபடி லிப்டிற்கு ஓடினாள்.. லிப்டில் இருந்தவர்கள் அவளை விசித்திரமாக பார்ப்பதை சட்டை செய்யாமல் கைக்கடிகாரத்தில் மணி பார்த்து விட்டு சுடு தண்ணீருக்குள் கையை விட்டு விட்டதைப் போல கைவிரல்களை உதறினாள்..
தரை தளத்தை லிப்ட் அசைந்ததும் மற்றவர்களை முந்திக் கொண்டு முதல் ஆளாக வெளிப்பட்டு டைனிங் ஹாலுக்கு ஓடி மூச்சிரைக்க நின்றாள்.. அவளை ஏற
இறங்க அமர்த்தலாக ஓர் பார்வை பார்த்து விட்டுக் கைக்கடிகாரத்தில் மணி பார்த்த ரவிச்சந்திரன்.. "ஃபிப்டீன் மினிட்ஸில வரச் சொன்னேன்.. இப்போ ஸிக்ஸ்டீன் மினிட்ஸ் ஆகிடுச்சு.." என்று விழிகளை உருட்டினான்..
"ஆனாலும் இது அநியாயம் சார்.." உத்ரா சிரித்தாள்..
வினித் மெல்லிய புன்முறுவலுடன் அவளைப் பார்த்து..
"உட்காருங்க.." என்றான்..
'இவன் பக்கத்திலேயில்ல உட்காரனும்..'
நந்தினி சேரைத் தள்ளிப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள்..
"விட்டால் மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்காமலே சென்னைக்கு போய் சேர்ந்துருவ போல.." கடினமான முகத்துடன் சொன்னான் ரவிச்சந்திரன்..
அவள் சேரைத் தள்ளிப் போட முயல்வதைச் சொல்லிக் காட்டுகிறானாம்.. உத்ராவும், வினித்தும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் நகர்த்திப் போட்ட சேரை இழுத்து ஒட்டிப் போட்டு உட்கார்ந்தாள் நந்தினி..
'உரசியாச்சு.. வாயை மூடுடா..'
ரவிச்சந்திரனின் முகத்திலிருந்த கடினம் விலகி விட்டது..
'அதெல்லாம் ஈஷிக்கிட்டா ஈன்னு ஆகிருவான்.. தேவனே..! ஈ சுந்தரமில்லாத சுந்தரியை பிரேமிப்பதாக பிராந்தை கொள்ளும் ஈ வல்லிய சுந்தரனை.. கேரளத்து ராஜாதி ராஜனைக் காத்து ரட்சிப்பீராக..'
தேவன் அவனைக் காத்து ரட்சிக்க வரவில்லை போல.. அவன் காதலாகி கசிந்துருகும் கண்களுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..
'டேய்.. அந்தப் பக்கமாகத் திரும்பித் தொலைடா.. என் பிரண்டும் அவளோட ஹஸ்பெண்டும் என்னைத் தப்பா நினைச்சுத் தொலைச்சிறப் போறாங்க..'
நந்தினி அவன் பக்கமே திரும்பவில்லை.. உத்ராவை பார்த்தாள்..
"நான் கூப்பிட்டா வேலையிருக்கு.. வர மாட்டேன்னு அடம் பிடிப்ப.. உன் பாஸ் நேரே வந்து ஆர்டர் போட்டா ஃபிப்டீன் மினிட்ஸில கிளம்பி ஓடி வருவ.. என்னடி நடக்குது இங்கே..?"
ரவிச்சந்திரனை எதிரில் வைத்துக் கொண்டு கிடுக்கிப் பிடி கேள்விகளைப் போட்டாள் உத்ரா..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -151
எண்ணியிருந்தது ஈடேற -151
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-151.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-151.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy