எண்ணியிருந்தது ஈடேற -149

149 பூட்டுக்குப் பூட்டு வலிக்குது என்பாள் நந்தினியின் பாட்டி.. அதை அனுபவபூர்வமாக நீலிமலைக் காட்டின் மலையேற்றத்தின் போது உணர்ந்திருந்...

149


பூட்டுக்குப் பூட்டு வலிக்குது என்பாள் நந்தினியின் பாட்டி.. அதை அனுபவபூர்வமாக நீலிமலைக் காட்டின் மலையேற்றத்தின் போது உணர்ந்திருந்தாள் நந்தினி.. அதே வலியை அன்று மறுபடியும் உணர்ந்தாள்.. கெக்கே, பிக்கே என்று பேசிச் சிரித்தபடி ஊரைச் சுற்றிய போது ஒன்றும் தெரியவில்லை.. கட்டிலில் விழுந்ததும் சர்வாங்கமும் வலித்ததில் கண்களை மூடிக் கை கால்களைத் தளர்வாக விட்டு ஓய்வெடுக்க முயன்றாள்.. மெல்ல வலி குறைவதைப் போல இருந்ததில் இமைகள் மூடித் தூக்கம் சொக்க ஆரம்பித்தது.. தூக்கத்தில் அமிழ்ந்து கொண்டிருத்தவளை...
"கிர்ர்ர்.." என்ற அழைப்பு மணி உடலை உலுக்கி விட்டு விழிக்க வைத்தது..
'ரூம் பாயா இருக்கும்.. சாய் கொண்டு வரட்டேன்னு வந்து நிற்பான்.. ம்ப்ச்..'
இவனுடைய உபசரனையை நான் கேட்டேனா என்ற கோபத்துடன் கதவைத் திறந்தவள்..
"எனிக்கு சாய் வேண்டாம்.. கேட்டோ.." என்று மூடியிருந்த இமைகளைத் திறக்காமலே எரிந்து விழுந்து விட்டுக் கதவை மூட முயன்றவள்..
"உனக்கு நான் வேண்டாம்.. என் ஹோட்டலின் டீயும் வேண்டாம்ன்னு எனக்குத் தெரியும்.." என்ற கம்பீரமான கனத்த குரலில் தூக்கி வாரிப் போட்டவளாக..
"பாஸ்.." என்று இமைகளைத் திறந்தாள்..
"பூனைக் கண்களை மூடிக்கிட்டு பூலோகமே இருண்டு போய் விட்டதுன்னு நினைத்ததாம்.. நீ கண்களை மூடிக்கிறது அப்படித்தான் இருக்கு.. டோரை ஓபன் பண்ணு.." அதிகாரக் குரலில் உத்ராவிட்டான் ரவிச்சந்திரன்..
மூடிய கதவை நந்தினி திறக்க உள்ளே வந்தான்.. எதற்காக அறைக்குள் வருகிறான் என்று பதறிப்போன நந்தினி..
"என்.. என்.. என்ன..?" என்று தடுமாறினாள்..
நிதானமாக உள்ளே நுழைந்தவன்.. அதைவிட நிதானத்துடன் அறைக்கதவை மூடித் தாழிட்டதில் அரண்டு போனாள்..
"பாஸ்.. என்ன இது..?"
"எதைக் கேட்கிற..?" அவன் புருவங்களை உயர்த்தினான்..
"எதுக்காக டோரைக் குளோஸ் பண்றீங்க..?" நந்தினியின் குரல் நடுங்கியது..
"ஊம்..? உன்னுடன் பர்ஸ்ட் நைட் செலபரேட் பண்ணலாம்ன்னு பிளான் பண்ணியிருக்கேன்..." ரவிச்சந்திரனின் கோபப் பார்வையில் அவள் குலை நடுங்கினாள்..
ஏன் கோபப்படுகிறான்..? எதற்காக கோபப் படுகிறான்...? அவன் கேபப்படும்படி எதுவும் நிகழவில்லையே... முதல்நாள் இரவில் அவனைப் பார்த்தவள் இப்போதுதானே மறுபடி பார்க்கிறாள்.. காலையிலிருந்து அவள் ஹோட்டலிலேயே இல்லையே..
கண்கள் இடுங்க அவன் பார்த்தான்.. நந்தினியின் முதுகுத் தண்டு ஜில்லிட்டது.. இது போன்ற பார்வை பார்த்தால் அவன் அவளைக் குத்திக் குதறப் போகிறான் என்று அர்த்தம்... அனுபவப் பட்டவளின் மனம் அஞ்சியது..
"உன்னை ரூமில்தானே இருக்கச் சொன்னேன்..? எங்கே போன..?"
'இவ்வளவுதானா..?' நந்தினியின் முகம் தெளிந்தது.
அறியாத ஊரில் தனியாக ஊர் சுற்றி விட்டு வந்திருக்கிறாள் என்று கோபப் படுகிறான் போல.. அப்படியில்லை என்பதைச் சொல்லி விட்டால் அமைதியாகி விடுவான்.. இதற்குப் போய் இப்படிப் பயப்படுகிறாளே..
"டோன்ட் வொர்ரி பாஸ்.. நான் தனியா எங்கேயும் போகலை.. உத்ரா கூடத்தான் வெளியே போனேன்.." விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள்..
"உன்கூட உத்ரா மட்டும்தான் வந்தாங்களா..?" ரவிச்சந்திரனின் ஆழ்ந்த குரல் புயலை உள்ளடக்கி யிருந்தது..
நந்தினிக்குள் குளிர் பரவியது.. அவன் ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறான் என்று அவளுக்குத் தோன்றியது.. அவளைக் குறித்த அதிருப்தி அவன் மனதில் இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் இந்தப் புலன் விசாரணையை ஆரம்பித்திருக்க மாட்டான்.. ஆனால் அது என்ன அதிருப்தி..?
"உத்ரா மட்டும் தனியா எப்படி வருவா பாஸ்.. வினித் அண்ணாவும்தான் கூட வந்தார்.."
"அவர் என்ன உன் கூடப் பிறந்த அண்ணனா..?"
"பாஸ்.." நந்தினி அதிர்ந்து போனாள்..
அங்கே தொட்டு, இங்கே தொட்டு இப்போது வினித்திடம் வந்து நிற்கிறானா..? மோகனைச் சொன்னால் கூட ஓர் அர்த்தம் இருக்கிறது.. நந்தினிதான் அவனைத் தம்பியாக நினைத்தாள்.. அவனோ மலர் டீச்சர் என்று படுத்தி எடுக்கிறான்.. வினித்தை எப்படிச் சொல்லலாம்..? உத்ராவின் கணவன் நந்தினிக்கு அண்ணனில்லையா..?
"உனக்கு வெட்கமாக இல்லை..?"
"யோசித்துப் பேசுங்க சார்.. வாயிருந்தா என்ன வேண்டுமானாலும் பேசி விடக் கூடாது.."
"எப்படி..? உனக்கு வாயிருக்கிறது என்கிறதுக்காக பாஸை சாராக்குகிறாயே.. அது போலவா..?"
"உங்களிடம் வேலைக்கு வந்தது தப்புன்னு பலமுறை நினைக்க வைச்சுட்டிங்க.."
"இப்பவும் நினைச்சாச்சு.. ஆம் ஐ கரெக்ட்..?"
"நீங்கதான் கரெக்ட் பர்சனாச்சே.. தப்பாப் பேசுவீங்க.. தப்புத்தப்பா யோசிப்பீங்க.. இதில் மட்டும் கரெக்டா கால்குலேட் பண்ணுவீங்க.."
"தப்பைப் பற்றி நீ பேசாதே.. செய்யறதெல்லாம் ராங்கான வேலை.. இதில் நியாயம் பேச வந்துட்ட..?"
"அப்படி என்ன ராங்கான வேலையைச் செய்துட்டேன்..?"
"ஏய்ய்.. பேசாதேடி.. அவங்க ஹனிமூன் கப்புள்.. தனியா ஊரைச் சுற்றிப் பார்க்கட்டும்ன்னுதான் அவங்களுக்கு இன்றைக்கு தனிமையைக் கொடுத்தேன்.. அவங்களுக்காக கார் அரேன்ஜ் பண்ணினேன்.. நீ ஊடே புகுந்து ஒட்டிக்கொண்டு கிளம்பிட்ட.. உன்னையெல்லாம்.."
ரவிச்சந்திரன் பல்லைக் கடித்ததில் தான் செய்தது தவறோ என்று நந்தினி தலை கிறுகிறுத்துப் போனாள்..
அவன் சொல்வதும் உண்மைதானே.. புதிதாக திருமணாமாகி தேநிலவு கொண்டாட வந்திருப்பவர் களுடன் அவள் ஒட்டிக் கொண்டது சரியில்லைதானே..
"உத்ராதான் கூப்பிட்டா.."
காற்று இறங்கிப் போன பலூன் போல கோபம் குறைந்து கிணற்றுக்குள் இருந்து பேசுபவளைப் போலப் பேசினாள் நந்தினி..
அவள்மீது தவறு இருக்கிறது என்பதில் அவளால் குரல் உயர்த்திப் பேச முடியவில்லை..
"ஒரு காட்டஸிக்குக் கூப்பிட்டிருப்பாங்க.. நீதான் ஏதாவது வேலையிருக்குன்னு சொல்லி மறுத்திருக்கனும்.."
"பொய் சொல்லச் சொல்கிறீங்களா..? நீங்கதானே உனக்கு வேலையேதும் இல்லை.. ரூமிலேயே ரெஸ்ட் எடுத்துக்கன்னு சொன்னீங்க..?"
"ஓ..! மேடம் உண்மை விளம்பியோ.. பொய் சொல்ல மாட்டிங்களோ.. பொய் சொல்ல விருப்பமில்லையா..? இல்லை அவங்களோட ஊர் சுற்றப் போகாமல் இருப்பதில் விருப்பம் இல்லையா..?"
அவன் உதடுகளைக் குவித்து ஏளனமாக கேட்டு வைத்ததில் அவள் வெறுத்துப் போய் விட்டாள்.. தெரியாமல் தவறு செய்து விட்டாள்.. அதற்காக இந்தக் காய்ச்சு காய்ச்சுவானா..?
'இவனுக்குப் பதிலடி கொடுத்தே ஆகனும்..' வன்மம் வைத்தவள்..
"இரண்டும்தான்னு வைத்துக்கங்களேன்.." என்று சொல்லி விட்டு அவன்..
"வாட்..!" என்று கண் சிவந்து கர்ஜித்ததில் நடுநடுங்கி விட்டாள்..
"வெட்கமாக இல்லையான்னு கேட்டால் மட்டும் ரோசம் பொத்துக்கிட்டு வருதே.. இப்ப நீயாக உன் வாயால் உண்மையை ஒப்புக் கொள்கிறயே.. இதுக்கு என்ன சொல்கிற..?"
அவனது குறுக்கு விசாரணையைத் தாங்க முடியாமல் தலை நொம்பரம் (வலி) கொண்டு நொந்தது.. சற்றுக் கண்மூடி அயர்ந்து தூங்கி எழுந்தால் தேவலாம்.. எங்கே..? இவன் அதற்கு வழி விடாமல் தேள் கொடுக்கு போல வார்த்தைகளால் கொட்டிக் கொண்டிருக்கிறானே..
'ம்ஹீம்.. உத்ராவும் வினித்தும் கொடுத்து வைத்தவங்க.. இந்நேரம் அசந்து தூங்கிக்கிட்டு இருப்பாங்க.. நான்தான் தூங்க முடியாம இவனிடம் மாட்டிக்கிட்டு முழிக்கறேன்..' அவளுக்கு ஏக்கமாக இருந்தது..
"ஏய்ய்.. நியு மேரிட் கப்புள் ஒட்டி உரசிக்கிட்டு இருப்பாங்க.. மூன்று நாள்களா அப்படித்தானே இருந்தாங்க..? இந்த நாலாவது நாளில் மட்டும் மாறி இருந்துருவாங்களா..? அவங்ககூடச் சேர்ந்து போயிருக்கிறயே.. உன்னை என்னன்னு சொல்கிறது..? அவங்களை வேடிக்கை பார்க்க ஆசைப்பட்டாயா..?"
நந்தினியின் முகத்தில் ரத்தம் பாய்ந்தது.. ரவிச்சந்திரனின் கேள்வியை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.. இப்படியெல்லாம் கேட்டு வைப்பான் என்று தெரிந்திருந்தால் காய்ச்சல், தலைவலி என்று ஏதேனும் ஒரு காரணத்தைக் கண்டு பிடித்து உத்ராவுடன் போகாமல் தேங்கியிருப்பாள்..
'மாட்டிக்கிட்டுப் பாட்டு வாங்கனும்னு விதியிருக்கிறப்ப நான் என்ன செய்து தொலைக்கிறது..? இவன் எதில் குற்றம் கண்டுபிடிப்பான்னு தெரிந்து தொலைத்தால்தானே தப்பிக்க முடியும்..? உத்ராவுடன் அவுட்டிங் போனதுக்கும் குற்றம் கண்டு பிடிப்பான்னு தெரியாமப் போச்சே..' தவியாய் தவித்தாள் நந்தினி..
"உன் பேரண்ட்ஸ் அரேன்ஜ் பண்ணியிருந்த மேரேஜை கன்சிடர் பண்ணாம வேண்டாம்ன்னு சொல்லி ஓடி வந்தவதானே நீ..? உன் மீது உயிரை வைத்திருக்கேண்டின்னு சொல்கிற என் காதலையும் வேண்டாம்ன்னு சொல்கிற ரோபோதானேடி நீ..? ரோபோவுக்குக் கூட காதல் வந்திரும்.. நீ அதுக்கும்
கீழே.. ஜடம்..! உனக்கு எப்படிடீ ரொமான்ஸைப் பற்றித் தெரியும்..?"
அவன் எய்த அம்புகள் மனதில் தைக்க வலி தாளாமல் கண்ணீர் மல்க நின்றாள் நந்தினி.. பேச்சு என்று வந்து விட்டால் அவன் கருணை காட்ட மாட்டான்.. விட்டு விளாசி விடுவான் என்று அறிந்து வைத்திருந்தும் அறியாமல் மாட்டிக் கொண்டதில் அவளுக்கு வாழ்க்கையே வெறுத்தது..
"நியு மேரிட் கப்புள்.. ஹனிமூன் செலிபரேட் பண்ண வந்திருக்காங்க.. அவங்களுக்குத் தனிமையைக் கொடுத்து ஒதுங்கி நிற்கனும்னு நினைக்காம அவங்களோட ஊர் சுற்றக் கிளம்பியிருக்கயே.. அந்த அளவுக்கு நீ தத்தியா..?"
நந்தினி பதில் சொல்லவில்லை.. கற்சிலை போல நின்றாள்.. எதிர்பாராமல் எதிர் கொள்ள நேர்ந்த தாக்குதலில் அவள் பக்கமும் தவறு இருந்ததில் அவளுக்குப் பேச வாய் வரவில்லை..
"உன்னிடம் போய் புரிந்து கொள்வதைப் பற்றிப் பேசுகிறேனே.. யார் நீ..? உன்னைப் பற்றி மட்டும் தானே நீ யோசிப்ப..? உன் பிரண்டோட தனிமையை பறிக்கறோமேனனு ஏன் யோசிக்கப் போகிற..?"
"நான் நினைத்துப் பார்க்கலை பாஸ்.. இதையெல்லாம் யோசிக்கலை.." குற்றஉணர்வுடன் சொன்னாள் நந்தினி..
"லன்ச்சுக்கு சீ ரெஸ்ட்டாரெண்டுக்குப் போனப்ப.. 'வாவ்'ன்னு சொல்ல நீ யோசிக்கலையே.. டபுள் பெண்டாஸ்டிக்..! டிரிபிள் தேங்க்ஸ்..! எதற்கு..? நான் காட்டாத இடத்தை வினித் காட்டிட்டானே.. அதற்கு.. அப்போதே பிடித்த மீனைப் பொறித்துத் தின்பதில் அத்தனை ஆசை..? ஊம்..?"
இவன் அவர்களைத் தொடர்ந்திருக்கிறான்... நந்தினி பேசியதைக் கேட்டிருக்கிறான்.. தன் சுதந்திரம் கேள்விக்குறியாகி விட்டதை உணர்ந்தாள் நந்தினி.. எந்த சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவள் வயநாட்டுக்கு ஓடி வந்தாளோ அந்த சுதந்திரம் பறி போய்க் கொண்டிருக்கிறது.. அவள் அதைக் காப்பற்றும் வழி தெரியாமல் கட்டுண்டு நிற்கிறாள்..
ரவிச்சந்திரன் அருகிலிருந்த டீப்பாயின் மீதிருந்த புடவைப் பெட்டியை எடுத்துத் திறந்தான்..
"புது ஸாரி..!" என்றான்..
'இதையும் நோட் பண்ணியிருப்பான்..' அவள் பேசாமல் நின்றாள்..
"என்னிடம் கேட்க வேண்டியதுதானே..? நீ கேட்டதை வாங்கிக் கொடுக்க வேண்டும்ன்னு நான் காத்துக் கொண்டிருக்கிறேனே.. வினித் வாங்கிக் கொடுத்த புடவையை வாங்கிக்கிட்டு வந்திருக்கிறயே.. எப்படிடீ..?"
நந்தினிக்கு அழுகையே வந்து விட்டது..
"ப்ளீஸ் பாஸ்.. இது உத்ரா வாங்கிக் கொடுத்த புடவை.." என்று மன்றாடினாள்..
"பணம் கொடுத்தது யார்..? வினித்தானே..?"
ரவிச்சந்திரனின் கேள்வியில் இருந்த உண்மை அவளைச் சுட்டது.. இந்தக் கோணத்தில் அவள் நினைத்துப் பார்க்கவில்லையே.. அப்படியே இருந்தாலும் வினித் யார்..? உத்ராவின் கணவன்.. நந்தினிக்கு உடன் பிறந்த அண்ணனைப் போன்றவன்.. அவன் புடவைக்குப் பணம் கொடுத்தது தவறா..?
"தவறுதான்.." அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் ரவிச்சந்திரன்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -149
எண்ணியிருந்தது ஈடேற -149
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-149.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-149.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy