எண்ணியிருந்தது ஈடேற -148

148 நந்தினிக்கு உற்சாகமாக இருந்தது.. அவளுடைய தோழி திருமணத்திற்குப் பின் மாறி விட்டாள் என்று மருகிக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு நெருக...


148


நந்தினிக்கு உற்சாகமாக இருந்தது.. அவளுடைய தோழி திருமணத்திற்குப் பின் மாறி விட்டாள் என்று மருகிக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு நெருக்கமான உத்ராவை உத்ராவின் திருமணம் பிரித்து நிறுத்தி விட்டதாக கோபம் கொண்டிருந்தாள் அவ்வாறு இல்லை.. உத்ராவுக்கு நந்தினியின் நினைவு இருக்கிறது என்பதில் குதூகலமாக இருந்தது.
"உத்ரா.."
அதி விரைவில் குளித்து முடித்துத் தயாராகி உத்ராவின் முன்னால் "டொய்ங்..." என்று பிரசன்னமானவளைக் கண்டு நெஞ்சில் கை வைத்து பயப்படுவதைப் போல பாவனை செய்த உத்ரா..
"நல்லாத்தான் கிளம்பி வர்றேடி.. இப்படியா பயமுறுத்துவ..?" என்று செல்லமாக கடிந்து கொண்டாள்..
"நீ பயப்படற ஆளாக்கும்.. போடி.. போ.." என்றபடி கலகலத்துச் சிரித்த நந்தினி..
"அண்ணாவுக்கும் உனக்கும் கார் காத்திருக்குமே.. பாஸ் சொன்னார்.. எனக்காக காத்திருக்காம நீங்க கிளம்பியிருக்கலாமே.." என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தாள்..
"உன்னைத் தனியே விட்டுட்டு எப்படிடீ போகிறது..?" நந்தினி எதிர்பார்த்த பதிலைச் சொன்னாள் உத்ரா..
நந்தினியின் மனம் நிறைந்தது.. அவளருகில் ரவிச்சந்திரன் இருந்தால்தான் உத்ரா நந்தினியை மறந்து வினித்திடம் ஒட்டிக் கொள்கிறாள்.. நந்தினி தனித்திருந்தால் பழைய தோழமையுடன் அரவணைத்துக் கொள்கிறாள் என்பதில் மீண்ட சொர்க்கத்தை அவள் உணர்ந்தாள்..
நட்புக் கூட ஒரு வகையில் காதல் போன்றதுதான்.. உயிர்த் தோழமை பொறாமை நிறைந்தது... என் தோழமைதான் எனக்கு மட்டும்தான் என்ற உரிமையுணர்வைக் கொண்டது.. தோழமையிடம் மற்றவர்கள் உரிமை பாராட்டுவதை விரும்பாதது.. தோழமையின் குடும்பத்தினரிடம் கூட விட்டுக் கொடுக்காதது..
ஆழ்ந்த தோழமை என்பது வரம்.. அது கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.. அந்த வகையில் நந்தினி பாக்கியசாலி..
காலை டிபனை முடித்து விட்டு ஊர் சுற்றிக் கிளம்பினார்கள்.. வினித் டிரைவரின் அருகில் உட்கார்ந்து கொண்டு தன் இடத்தை நந்தினிக்கு விட்டுக் கொடுத்தான்.. தோழியின் பக்கத்தில் உட்கார முடிந்ததில் சந்தோசப்பட்டுப் போனாள் நந்தினி..
"நாங்க கோழிக்கோடுக்கு வந்து இறங்கினப்ப இருட்டா இருந்துச்சுடி.. குளிர் வேற.. நம்ம ஊர் ஞாபகத்தில இறங்கிட்டேனா.. ஸ்வெட்டர் போடலை.. பேக்கில இருந்து எடுக்கலாம்ன்னா ஸ்வெட்டர் துணிகளுக்கு அடியில் இருக்கு.. உனக்குத்தான் என்னைப் பற்றித் தெரியுமே.. ஜங்சனில இருந்த பெஞ்சில பேக்கை வைத்து துணிகளைப் பரத்த ஆரம்பிச்சுட்டேன்.. பாஸ்தான் அதட்டி அவரோட கோட்டை எனக்குக் கொடுத்துப் போர்த்திக்கச் சொன்னார்.."
"ஊஹீம்..?"
"நீலிமலைக் காட்டில மீன்முட்டி அருவிகளைப் பார்க்கலாம் வான்னு கூப்பிட்டார்.. நானும் பக்கத்தில இருக்கிற அருவியா இருக்கும்ன்னு நம்பிக் கிளம்பிட்டேண்டி.. அங்கே போனா நீலிமலை அடிவாரத்தில வடுவாஞ்சலில ஜீப்பை ஓரம் கட்டி நிறுத்திட்டு மலையேறலாம் வான்னு கூப்பிடறார்.. முட்டி பெயர்ந்திருச்சுடி உத்ரா.."
"நீ மலையேறினயா..? இண்ட்ரெஸ்டிங்.. என்கிட்டச் சொல்லவே இல்லை பார்த்தியா..?"
"நீ கேட்கலைன்னு சொல்லு... மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில ஏற்றி விட்டுப் போனவள்தான்... செல்போனில் உனைப் பிடிக்கவே ஒரு மாதமாகிருச்சு... அப்பவும் ஒழுங்காப் பேசினயாடி.. புதுப் பெண்ணுன்னு பீற்றிக்கிட்டு ஒன் ஆர் டூ செகண்ட்ஸ் பேசின... அதுவும் என்னடி நந்தினி.. அப்புறமாப் பேசறேங்கிற வார்த்தைகள்தான்.. கீறல் விழுந்த ரிகார்ட்டைப் போல எப்படித்தான் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொன்னியோ.. சொன்னதைச் சொல்லும் தத்தைங்கிறது நீதாண்டி.."
"என்னது..? அத்தையா..? வினித்தோட தங்கை மகன் இப்படித்தான் கூப்பிடுவான்.. எல்.கே.ஜி தான் படிக்கிறான்.. குழந்தைடி அவன்.. என்னமாய் பேசறான் தெரியுமா..? ஏங்க.. நாம உங்க தங்கை வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தப்ப அவன் பண்ணின சுட்டித்தனம் நினைவில் இருக்கா.. ஐஸ்கிரிமை முகத்தில அப்பிக்கிட்டு.. அத்தை நான் 'கூல் பாய்'ன்னு சொன்னானே.. நாம கூட நீ 'ஐஸ் பாஸ்'டான்னு கொஞ்சினோமே.."
எங்கே சுற்றினாலும் உத்ராவின் பேச்சு வினித்தும் வினித் சார்ந்த உறவினர்களும் என்று மையம் கொள்வதில் பல்லைக் கடித்தாள் நந்தினி.. இருந்திருந்து அன்றைக்குத்தான் நந்தினியின் பக்கத்தில் உட்கார்ந்து இரன்டொரு வார்த்தைகள் பேசுகிறாள்.. அதற்குள் வினித்தின் தங்கை மீது பாசமழையை பொழிய ஆரம்பித்து விட்டாளே..
"நான் சொன்னது தத்தை..! அத்தையில்லை.. தத்தைன்னா மலையாளத்தில் கிளின்னு அர்த்தம்.. நம்ம ஊரில் கூடத் தத்தையொன்றுன்னு பாட்டு இருக்கு.."
"அப்படியா..?"
உத்ரா சுவராஸ்யமில்லாமல் சொன்னதைப் போல இருந்தது நந்தினிக்கு.. அதற்குள் அவர்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய பூங்கா வந்து விட நந்தினி குதித்துக் கொண்டு இறங்கினாள்.. உத்ராவை நடுவில் விட்டு வினித்தும் நந்தினியும் நடந்தார்கள்.. வினித்தும் பேச்சில் இணைந்து கொள்ள நந்தினி அவனிடம் அவள் வயநாட்டில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கம் கதையை விவரித்தாள்.. மதிய உணவுக்கு ஹோட்டலுக்குத் திரும்பாமல் அருகிலிருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றான் வினித்..
"ஏன் அண்ணா..? ஹோட்டலுக்கப் போயிருக் கலாமே.." புரியாமல் கேட்டாள் நந்தினி..
ரவிச்சந்திரன் இருக்கும் போது மதிய உணவுக்காக ஹோட்டலுக்குச் சென்று வருவது என்பது வேறு.. அவன் இல்லாதபோது சென்று வருவது என்பது வேறு..
வினித் நல்ல வேலையில் இருந்தான்.. கை நிறையச் சம்பாதித்தான்.. நந்தினியைப் பார்க்க வேண்டும் என்று உத்ரா விரும்பியதால்தான் தேநிலவு கொண்டாட என்ற பெயரில் வயநாட்டுக்கு வந்து செல்ல ஒப்புக் கொண்டான்.. இல்லையென்றால் ரவிச்சநதிரனின் விருந்தாளியாக வயநாட்டில் தங்கியிருந்து தேநிலவு கொண்டாடுவதைத் தவிர்த்திருப்பான்.. அவனுக்கு அவனுடைய பணத்தில் மனைவியுடன் தேநிலவு கொண்டாட வேண்டும்..
இதை நந்தினியிடம் சொல்ல முடியுமா..? அவள் திருமணம் ஆகாதவள்.. சின்னப் பெண்.. அவளிடம் போய் கணவனாகப்பட்ட ஆணின் உணர்வுகள் இத்தகையவை என்று விளக்கம் சொல்லலாமா..?
ரவிச்சந்திரன் கூட வராத அந்தத் தினத்தில் சொந்த பணத்தில் ஊரைச் சுற்றி வர ஆசை கொண்டிருந்தான் வினித்.. அதை உத்ராவிடம் சொல்லியிருந்ததால் அவள்..
"ஹோட்டலுக்குப் போய் வர நேரமாகும் நந்தினி.. அத்தோட ஹோட்டல்ன்னா மதியச் சாப்பாட்டுக்குப் பின்னால் தூங்கி எழுந்திருக்கத் தோணும்.. இங்கேயே லன்ச்சை முடித்துக்கிட்டா.. ஊர் சுத்தறதைக் கண்டினியூ பண்ணலாம்.. தூக்கம் எங்கே ஓடிப் போகப் போகுது..? சென்னை திரும்பியதும் வேண்டிய மட்டும் தூங்கி எழுந்திருக்கலாம்.. இங்கே கோழிக்கோடில் கிடைத்திருக்கும் நேரத்தை வீணாக்காம சுத்திப் பார்க்க வேணாமா..?" என்று சொல்லிச் சமாளித்து விட்டாள்..
"யு ஆர் கரெக்ட் உத்ரா.." நந்தினியும் ஆமோதித்து தலையாட்டி விட்டாள்..
மனைவியின் புத்திசாலித்தனத்தை மெச்சி ஓர் ரகசிய பார்வையை செழுத்தினான் வினித்.. பக்கத்தில் நந்தினியிருப்பதை ஜாடை காட்டி இமைகளை மூடி கணவனின் பாராட்டை ஏற்றுக் கொண்டாள் உத்ரா.. அதை லேசாக பார்த்து விட்ட நந்தினி..
"நடத்துங்க.. நடத்துங்க.." என்று தலையை ஆட்டினாள்..
"ஒன்றுமில்லைடி.. ச்சும்மா.." உத்ரா புருவங்களைச் சுருக்கிச் சிரித்தாள்..
"ச்சும்மாக்காச்சுக்கும் ஜாடை காட்டிக்கிட்டிங்களா..? யார் காதில பூச் சுத்தற..?" நந்தினி ஆர்ப்பரித்தாள்..
"ஏய்ய்.." உத்ராவின் முகம் சிவந்து விட்டது..
சிரிப்பும் விளையாட்டுமாக தோழிகள் இருவரும் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள உத்ரா வினித்தின் முதுகிற்குப் பின்னால் மறைந்து தப்பிக்க முனைந்தாள்.. நந்தினி வினித்தின் தோளைத் தொட்டு அவனுடைய முதுகிற்குப் பின்னால் ஒளிந்திருந்த உத்ராவை இழுத்தாள்.. தோழிகளின் சண்டையை விலக்கி விடாமல் சிரித்துக் கொண்டிருந்தான் வினித்..
அது கடலோரமாக இருந்த உணவகம்.. தண்ணீருக்குள் தூண்களை அமைத்துப் படகில் அமர்ந்தபடி சாப்பிடுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.. சுற்றிலும் தண்ணீர் இருக்க.. விளிம்போரமாக இருந்த டேபிளை அவர்கள் தேர்வு செய்து உட்கார்ந்தார்கள்..
"பெண்டாஸ்டிக்.."
தண்ணீருக்கு மத்தியில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தந்த அந்த சூழலை ரசித்தபடி சொன்னாள் நந்தினி..
"கோழிக்கோடில் ஒன்வீக் இருந்தோம்டி உத்ரா.. இந்த ஊரைச் சுற்றிப் பார்த்தோம்.. பட்.. இந்த இடத்துக்கு வந்ததில்லை.. எவ்வளவு அழகான இடம் பாரு.."
"இது ரெஸ்ட்டாரெண்ட்ங்கிறதினால ரவிசார் இங்கே அழைத்துக்கிட்டு வந்திருக்க மாட்டாரு.. அவரோட ஹோட்டலில இல்லாத ஃபுட் அயிட்டமா..?"
"இருக்கலாம்.. அதனாலேயே இந்த இடத்தைப் பார்க்காம மிஸ் பண்ணிட்டேன் போல.. நல்ல வேளை.. வினித் அண்ணா இங்கே லன்ச் சாப்பிடக் கூப்பிட்டுக்கிட்டு வந்தார்.. இல்லேண்ணா கோழிக்கோடில இப்படியொரு அழகான ரெஸ்ட்டாரெண்ட் இருக்குங்கிறதே எனக்குத் தெரியாம போயிருக்கும்.. தேங்க்ஸ் வினித் அண்ணா.."
"இதைவிட பெண்டாஸ்ட்டிக்கான இன்னொரு விசயமும் இருக்கு நந்தினி.. அதைக் கேட்டதும் வினித்துக்கு டிரிபிள்ஸ் தேங்க்ஸே சொல்லுவ.."
"என்னடி அது..?"
"இங்கே ஸீ புட்ஸ் ஃபேமஸாம்.. கடலில் இருந்து உடனுக்குடன் மீன் பிடிச்சு பொரிச்சுத் தருவாங்களாம்.."
"வாவ்..! டபுள் பெண்டாஸ்டிக்.. டிரிபிள் தேங்க்ஸ் அண்ணா.."
"நான் சொல்லலை..?"
சிரிப்பும் அரட்டையுமாக மதிய உணவை முடித்து விட்டு அவர்கள் கடலோர பூங்காவில் ஓய்வாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.. உத்ரா ஷாப்பிங் மாலுக்குப் போக வேண்டுமென்றாள்...
"இங்கேயிருக்கிற ஃபேமஸ் ஷாப்பிங் மாலுக்குப் போகலாம் வா.." என்று நந்தினி குதித்து எழுந்தாள்..
அது, இது என்று ஏகப்பட்டதை வாங்கிக் குவித்தாள் உத்ரா.. மாமனார், மாமியாருக்கு குளிர் காலத்தில் தேவைப்படும் என்று ஸ்வெட்டர், சால்வை.. மாமனார்க்கு வேலைப்பாடுகள் மிகுந்த பேனா.. மாமியாருக்கு ஜரிகை புடவை.. நாத்தனாருக்கு மலையாள ஜரிகை புடவை.. நாத்தனார் கணவனுக்கு லெதர் பேக்.. நாத்தனார்
மகனுக்கு ஸ்வெட்டர், உடைகள்.. விளையாட்டு சாமான்கள் என்று புகுந்த வீட்டினருக்காக பார்த்துப் பார்த்து வாங்கினாள்..
'என்னடா இது..' என்று விழி விரித்த நந்தினி..
"உனக்கும் உன் அப்பாம்மாவுக்கும் பர்ச்சேஸ் பண்ணலையா..?" என்று ஞாபகப் படுத்தினாள்..
'கல்யாணமானா கணவனே கண்கண்ட உலகம்ன்னு மாறிப்போயிருவாங்களா என்ன..?' விசித்திரமாக இருந்தது நந்தினிக்கு..
"இந்தச் சேலை அழகா இருக்குல்ல.."
உத்ரா கையில் வைத்திருந்த புடவையின் அழகில் மயங்கினாள் நந்தினி.. ஒன்று போல இரண்டு சேலைகளை எடுத்தாள் உத்ரா..
"இது உனக்கு.." என்று நந்தினிக்கு ஒரு புடவையை பரிசளித்தாள்..
"கிரேட்.." சந்தோசத்துடன் வாங்கிக் கொண்டாள் நந்தினி..
ஷாப்பிங் மாலில் டீயுடன் டிபனை மொக்கினார்கள்.. 'யாழ்' ஹோட்டலுக்கு அவர்கள் திரும்பும்போது இருட்ட ஆரம்பித்திருந்தது.. நாள் முழுவதும் ஊர் சுற்றிய
அயர்வு அவர்கள் மூவரின் முகங்களிலும் அப்பியிருக்க.. அறைக்குப் போனதும் அயர்ந்து ஒரு உறக்கம் போட்டு விட்டு இரவு உணவு நேரத்தின் போது எழுந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்கள்..
"பை.. உத்ரா.. பை அண்ணா.. டின்னர் டயத்தில டைனிங் ஹாலில மீட் பண்ணலாம்.." என்று கையாட்டி விட்டுக் அறைக்குச் சென்று கட்டிலில் விழுந்த நந்தினியால் அயர்ந்து உறங்க முடியாமல் போய் விட்டது..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -148
எண்ணியிருந்தது ஈடேற -148
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-148.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-148.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy