எண்ணியிருந்தது ஈடேற -147

147 மெலிதான மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் இரவு விருந்து நடந்து கொண்டிருந்தது.. குளிர் நிரம்பிய கோழிக்கோடில் மெலிதான மெழுகுவர்த்தி...


147


மெலிதான மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் இரவு விருந்து நடந்து கொண்டிருந்தது.. குளிர் நிரம்பிய கோழிக்கோடில் மெலிதான மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உண்ணும் இரவு விருந்து அற்புதமானதாக இருந்தது.. நந்தினி பாடிக் கொண்டிருந்த போது தோழியையே பார்த்துக் கொண்டிருந்த உத்ராவாக இப்போது உத்ரா இல்லை.. கிளர்ச்சியைக் கிளப்பும் அந்தச் சூழலில் உடல் கதகதப்பைத் தேடியதில் கணவனிடம் ஒன்றிக் கொண்டு ரகசியம் பேசிக் கொண்டிருந்தாள்..
நந்தினி மேடையை விட்டு இறங்கியபோது ரவிச்சந்திரன் அவளுக்கு கைகொடுத்து இறக்கி விட்டு உடனழைத்து வந்து அருகில் உட்கார வைத்துக் கொண்ட போது அடுத்த வரிசையில் அவளுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த உத்ரா எட்டி நந்தினியின் தோளைத் தொட்டுத் திருப்பிக் கை கொடுத்து..
"வாவ்..! உன் பாட்டு நல்லாயிருந்ததுடி.." என்று பாராட்டினாள்..
"நீ கேட்டியா..?" என்றாள் நந்தினி..
"முட்டாள் மாதிரி கேள்வி கேட்கிறா பாரு.. இந்த ஆடிட்டோரியத்தில உட்கார்ந்திருக்கிறவ உன் பாட்டைக் கேட்காம இருப்பேனா..? என்னடி கேள்வியிது..? நீயெல்லாம் காலேஜ் பர்ஸ்ட்.. கோல்ட் மெடலிஸ்ட்ன்னு சொல்லிக்காதே.." வாரினாள் உத்ரா..
"ஹைய்யே..! உனக்குத்தான் உன் ஹஸ்பெண்ட் பக்கத்தில இருந்தா பிரண்டைக் கண்ணுக்குத் தெரியாதே.. இதில என் பாட்டை எப்படிக் கேட்டிருப்பன்னுதான் கேட்டேன்.." நிதானமாக பதில் சொன்னாள் நந்தினி..
அதற்கு 'என்னடி இப்படிச் சொல்லிட்ட..?' என்று கேட்காமல் உத்ரா முகமலர்ச்சியுடன் வினித்தைப் பார்த்து..
"இவ சொல்கிறதைக் கேட்டிங்களா..?" என்று அவன் விலாவில் இவளது முழங்கையால் செல்லமாக ஒரு இடி இடித்து விட்டு வெட்கச் சிரிப்பு சிரித்தாள்..
'இவ கொஞ்சறதுக்கு சான்ஸை கொடுத்துட்டேனா..?'
நந்தினி பல்லைக் கடிக்க.. வினித் உத்ராவைக் காதலுடன் பார்த்து அவள் தோளில் கை போட்டுக் கொண்டான்.. அதற்காகவே காத்திருந்ததைப் போல உத்ரா அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.. வினித் அவள் காதோரம் எதையோ சொல்ல உத்ராவின் இமைகள் தானாக மூடிக் கொண்டன.. நந்தினியின் தோளைத் தொட்டு திருப்பியது உத்ராதான் என்ற நினைவின்றி
அவள் கணவனுடன் சல்லாபிக்க ஆரம்பித்தாள்..
'இதுக்கு ஏண்டி என் தோளைத் தொட்டுத் திருப்பி உன்னைப் பார்க்க வைக்கிற..?'
சங்கடத்துடன் திரும்பிக் கொண்டாள் நந்தினி.. மேடையில் கஜவ் பாட்டு ஆரம்பித்திருந்தது.. அதன் லயத்தில் ஈர்க்கப் பட்டவளாக நந்தினி சரிந்து அமர்ந்து இசையில் லயித்தாள்.. ரவிச்சந்திரனின் கரம் அவளது தோளைச் சுற்றி வளைத்துக் கொண்டபோது மறுப்பேதும் சொல்லாமல் அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.. 'உத்ராவுக்கு மட்டும்தான் சாய்ந்து கொள்ள தோள் கிடைக்குமா..? நந்தினிக்கும் கிடைக்கும்..' என்று அவள் மனம் சமாதானம் அடைந்தது..
மனதின் மெல்லிய உணர்வுகளின் இழைகளால் நெய்யப்பட்டதைப் போன்ற சங்கீதம்.. கஜல் பாடல் மன உணர்வுகளுடன் பேசுவது.. அதன் ஆலாபனையில் ஆழ்கடலில் முத்தெடுக்க மூழ்குவதைப் போல அமிழ்ந்து விடும் மனமானது பல்லவியில் முத்தெடுத்துக் குதூகலத்துடன் கடல் நீரில் நீந்தும்..
இதுபோன்ற இரவும், இசையும், ரவிச்சநதிரனின் அருகாமையும், சாய்ந்து கொள்ளக் கிடைத்திருக்கும் அவனது தோளும் என்றென்றும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் மனதுக்குள் வியாபித்ததில் நந்தினி திகைத்துப் போனாள்..
'நானே நானா..?
              யாரோ தானா..?
     மெல்ல.. மெல்ல..
              மாறினேனா..?
     தன்னைத்தானே மறந்தேனே..
              என்னை நானே கேட்கிறேன்..'
மருட்சியுடன் பாடியது மனது.. அவளது தோளை வளைத்திருந்த ரவிச்சந்திரனின் கரம் இறுக்கமாக அவள் தோளில் பதிந்திருந்ததில் இவன் இப்படித்தான் என்ற மனதிருப்தி கொண்டாள் நந்தினி.. அவள் மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது எவளோ ஒருத்தி அவளுடைய இருக்கையை ஆக்ரமித்திருந்ததில் பதறிய மனது.. ரவிச்சந்திரன் அவளுடைய கையைப் பிடித்து மேடையை விட்டு இறக்கி.. அவளுடைய இருக்கையை ஆக்ரமித் திருந்தவளை அகற்றி.. அவளைத் தன்னருகே அமர்த்திக் கொண்டதில் சமாதானம் அடைந்திருந்தது.. அவன் அவளை விட்டுக் கொடுக்க மாட்டான்.. விட்டு நகர மாட்டான் என்பதில் அவள் மனதில் விரவிய அமைதியை வார்த்தைகளால் வடிக்க இயலாது..
அது ஏன் என்றுதான் நந்தினிக்குப் புரியவில்லை.. ரவிச்சந்திரன் பெண்களுடன் பழகுபவன் என்பதை அவள் அறிவாள்.. அவன் விலகிப் போனாலும் அவன் மீது ஈர்ப்பு கொண்ட பெண்கள் அவன்மீது விழுந்து பழகுவார்கள் என்பதையும் அவள் அறிவாள்.. அதனாலேயே அவன் காதல் சொன்னபோது அவனது காதலை அவள் மறுத்தாள்..
இருந்தும் ஏன் ஏக்கம் கொள்கிறாள்..? பாவம் ராதா என்று பாடினாளே.. அவள் பாவப்பட்டது ராதைக்காகவா.. இல்லை.. நந்தினியென்ற அவளுக்காகவா..?
விழா முடிந்ததும் இரவு விருந்து ஆரம்பமானது.. மெலிதான வெளிச்சத்தில் சன்னமான மேற்கத்திய இசை ஒலித்துக் கொண்டிருக்க ஆங்காங்கே போடப்பட்டிருந்த வட்ட வடிவமான டேபிள்களைச் சுற்றிப் போட்டப் பட்டிருந்த நாற்காலிகளில் விருந்தினர்கள் அமர்ந்தார்கள்.. பேரர்கள் அவர்களுக்கான உணவு வகைகளைக் கேட்டுக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனதில்..
'நல்லவேளை..! பஃபே டைப் விழுந்தாக இது இல்லை..' என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி..
அவளுக்கு 'பஃபே' விருந்து முறை பிடிக்காது.. கையில் தட்டை ஏந்தி அவர்கள் பரிமாறும் உணவுக்காக தட்டை நீட்டி.. ஒன்றின் மீது ஒன்று வந்து விழுந்து நிறைய.. நிரப்பப் பட்ட உணவு வகைகளை ஓரமாக நின்று மொக்குவதை சுத்தமான விரும்ப மாட்டாள்..
அவள் தஞ்சாவூர்க்காரி.. தலை வாழை இலை போட்டு பரிமாறுவதைப் போல உண்டா என்று கேட்டு வைப்பாள்..
வட்டவடிவ டேபிளைச் சுற்றிப் போடப் பட்டிருந்த நான்கு நாற்காலிகளில் உத்ராவும் வினித்தும் அருகருகே அப்பிக் கொள்வதைப் போல அமர்ந்து கொள்ள.. ரவிச்சந்திரனும் நந்தினியும் அவர்களுக்கு எதிரே பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்கள்.. அந்தச் சூழல் நந்தினியின் மனதை மயக்கியது.. ரவிச்சந்திரன் தன் நாற்காலியை இழுத்து நகர்த்தி அவளருகே ஒட்டினார் போலப் போட்டுக் கொண்டு முழுவதுமாக அவள்மீது பட்டதில் கிறக்கம் கொண்டாள்.. ரவிச்சந்திரனின் பாதம் நகர்ந்து அவள் பாதம் மேலே படிந்து நகர்ந்ததில் கிளர்ந்தவள் மனதுக்குள்..
'ஹம்மா..!' என்று அரற்றினாள்..
நந்தினி அவனைத் தொட்டுத் தொட்டுப் பேசுகிறவள்தான்.. புதிதாக அவனைத் தொடவில்லை.. அவனது அணைப்புக்குள் அடங்கி மார்பில் முகம் புதைத்துக் கொள்வதை வெகு இயல்பாக செய்பவள்.. அப்போதெல்லாம் வராத கிளர்ச்சி.. இப்போது அவனது சன்னமான உராய்தலிலும் பாதத்தின் ஸ்பரிசத்திலும் வந்து தொலைத்தது.. கனவில் மிதப்பவளைப் போல அவள் இருந்தாள்..
'யாழ்..' ஹோட்டலுக்குத் திரும்பும் போது யாரும், யாருடனும் பேசிக் கொள்ளவில்லை.. வார்த்தைகள் தேவையற்ற அழகானதொரு மௌனம் அங்கு கவிழ்ந்திருந்தது.. ஹோட்டலை அடைந்ததும் வினித்தும் உத்ராவும் 'குட்நைட்' சொல்லி விட்டுப் பிரிந்து சென்றுவிட.. ரவிச்சந்திரன் மட்டும் நந்தினியுடன் அவளது அறையின் வாசல் வரைக்கும் வந்தான்.. கதவைத் திறந்த நந்தினி.. அவனைத் திரும்பிப் பார்த்தாள்.. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரனின் விழிகளில் நிரம்பியிருந்த தாபம் அவளை அசைத்தது.. ஓர்நொடி அனைத்தையும் மறந்து அவன் கைகளுக்குள் சரண் ஆகி விடலாமா என்று மயங்கிப் போனாள்.. அவள் விழிகளில் தெரிந்த அழைப்பில் அவன் கண்கள் பிரகாசித்தன.. அவளை நோக்கி ஓர்அடி எடுத்து வைத்தான்..
"பாஸ்.." நந்தினி தழதழத்தாள்..
"சொல்லுடி.." அவன் கரகரத்தான்..
என்ன சொல்வாள்..? வா.. வந்து என்னுடன் கலந்துவிடு என்று சொல்வாளா..? அதைச் சொல்ல வேண்டும் போலதானே மனமும் உடலும் துடிக்கின்றன.. அதைச் சொல்லி விட்டால்..?
அதற்கடுத்து என்னவெல்லாம் நடக்கும் என்பதை நினைத்துப் பார்த்த நந்தினியின் பெண்மனம் துவண்டது..
அவள் குழந்தைத்தனமான சுபாவம் கொண்டவள்தான்.. ஆனால் குழந்தையில்லையே..
"குட்நைட்.." அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்..
"குட்நைட்..?" அவனது உறுமல் மீண்டிருந்தது..
உறுத்துப் பார்த்த அவனது விழிகளை நோக்கும் தெம்பு அவளுக்கில்லை.. அதுவரை அவர்களுக்குள் நடந்து கொண்டிருந்த இனம் புரியாத உணர்வுப் போராட்டத்திற்கான மதிப்பை அவள் கொடுக்க வில்லையென்று அவன் சினந்தான்.. அவனுக்கும் அவளுக்கும் இடையில் நிகழ்ந்த கிளர்ச்சிகளும், கிறக்கங்களும் கண்ணாமூச்சி விளையாடியதை அவள் மறந்து விட்டாளா..? அவன் விழிகளுக்குத் திரையிட்டு ஒளிந்து மறைந்து விளையாடும் இந்த விளையாட்டை எப்போது அவள் நிறுத்துவாள்..? ஆயர் பாடியில் கண்ணனில்லையோ.. ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ என்று பாடிய அவளது பாடல்வரிகளில் தொனித்த ஏக்கமெல்லாம் பொய்யா..? அவனுக்காக அவள் ஏங்கித் தவிக்கிறாள் என்று நினைத்தானே.. ஒரு நொடியில் அந்த நினைவுகளுக்கு யாதொரு எதிர்காலமும் இல்லையென்று ஆக்கி விட்டாளே.. அவனுடைய உணர்வுகளுடன் விளையாடுகிறாளா..?
"நீ மாறவே மாட்டியாடி..?"
அவன் குரலில்தான் எத்தனை கோபம்..!
நந்தினியால் தலை நிமிர முடியவில்லை.. அசையாமல் நின்றிருந்தவளை இமைக்காமல் பார்த்தவனிடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சு வெளிப்பட்டது..
"குட் நைட்.."
வேக நடையுடன் அவன் லிப்டை அணுகினான்.. போகிறானே என்ற தவிப்புடன் நந்தினி அவனைப் பார்த்த அதே நொடியில் அவன் அவளைத் திரும்பிப் பார்த்துவிட பார்வையை விலக்கிக் கொள்ளும் நினைவின்றி அப்படியே நின்று விட்டாள்.. அவளைப் பார்த்த அவனது பார்வையில் தெரிந்த கோபம் கலந்த திருப்தியில் இனம் புரியாத வகையில் இவள் மனமும் திருப்தி கொண்டது..
"ஏண்டி..?"
ஆற்றாமையுடன் கேட்டான் ரவிச்சந்திரன்.. ஏனென்ற அந்த கேள்விக்கு என்ன விடையை இவள் சொல்வாள்..? இவளுக்கே விடை தெரியாமல் மருட்டுகிற வினா அல்லவா அது..
உதட்டைக் கடித்தவளின் கண்கள் கலங்கி விட்டன..
"ம்ப்ச்.." அவன் லிப்டில் புகுந்து விட்டான்..
சென்று விட்டான் என்ற நினைவுடன் கதவை அடைத்து விட்டு உடையைக் கூட மாற்றாமல் கட்டிலில் விழுந்த நந்தினிக்கு அடர்ந்த கானகத்தில் தொலைந்து விட்டதைப் போல இருந்தது.. வழி தெரியாத இருள் நிரம்பிய கானகம்.. அவளை மீட்டு அழைத்துச் செல்லும் சூரியனைப் போன்றவன் சென்று விட்டான்.. அவளை விட்டு விலகிச் செல்ல மாட்டான்.. நாளை மீண்டும் வருவான் என்ற நம்பிக்கையுடன் தூங்கிப் போனாள் நந்தினி.. மறுநாள் அவன் வரவில்லை.. அவனுக்குப் பதிலாக அவனது செல்போனின் அழைப்பொலிதான் வந்தது..
"இம்பார்டண்ட் வொர்க் வந்திருச்சு.. ஸோ.. இன்றைக்கு உத்ராவும், வினித்தும் தனியாகத்தான்
ஊர் சுற்றப் போக வேண்டும்.. அவர்களுக்கும் தனிமை தேவைதானே.. கார் அரேன்ஜ் பண்ணியிருக்கேன்..
அவங்க ஊரைச் சுற்றட்டும்.. நீ ரூமில் ரெஸ்ட் எடு.."
என்ன இவன் இப்படிச் சொல்கிறான் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே செல்போன் துண்டிக்கப்பட்டு விட்டது.. நந்தினிக்குச் சோர்வாக இருந்தது.. எதனால் என்றுதான் விளங்கவில்லை.. சென்னையிலிருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் கால் பதித்து அவள் ஏறிய நாள் முதலாய் இன்றுவரை ரவிச்சந்திரன் அவளை விட்டுப் பிரியாமல் அடைகாத்து வருகிறான்.. அவளில்லாமல் தனியாக எங்கும் சென்றதில்லை.. அன்று செல்கிறான் என்பதினால் வரும் சோர்வா அது..?
'ஊரைச் சுத்த முடியலைங்கிறதில வர்ற எரிச்சலாயிருக்கும்..' என்று அனுமானித்தாள்..
அதிலும் ஊரைச் சுற்ற முடியவில்லை என்பதினால் எரிச்சல் வருகிறதா.. இல்லை அவனுடன் சேர்ந்து ஊரைச் சுற்ற முடியவில்லை என்பதினால் அந்த எரிச்சல்
வருகிறதா என்று அவளது மனது வியாக்கினமாக விசாரித்து வைத்தது..
'எதற்கெடுத்தாலும் நீ எக்குத்தப்பாய் கேட்டு வைப்பாய்.. உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. போ..' என்று மனச்சாட்சியிடம் காய் விட்டு விட்டு சுருண்டு படுத்தாள் நந்தினி..
மறுபடியும் செல்போன் ஒலித்தது.. ரவிச்சந்திரன் தான் முடிவை மாற்றிக் கொண்டு ஊர் சுற்றப் போகலாம் என்று அழைக்கிறானோ என்று ஆவலாக போனை
எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்..
"என்னடி.. டைனிங் ஹாலில் வெயிட் பண்ணிக் கிட்டு இருக்கோம்.. நீ இன்னும் வரலை.. சீக்கிரமாகக் கிளம்பி வா.." என்றாள் உத்ரா..
தோழியின் அழைப்பில் உற்சாகமான நந்தினி மனச் சோர்வை விட்டுத் துள்ளிக் குதித்து எழுந்தாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -147
எண்ணியிருந்தது ஈடேற -147
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-147.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-147.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy