எண்ணியிருந்தது ஈடேற -146

146 ரவிச்சந்திரன்தான் அப்படியொரு ஏற்பாட்டைப் பண்ணியிருந்தான்.. அவனுடன் மூன்று விருந்தாளிகள் வருவார்கள் என்று அறிந்தவுடன் விழாக் கமி...


146


ரவிச்சந்திரன்தான் அப்படியொரு ஏற்பாட்டைப் பண்ணியிருந்தான்.. அவனுடன் மூன்று விருந்தாளிகள் வருவார்கள் என்று அறிந்தவுடன் விழாக் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் முன் வரிசையில் நான்கு இருக்கைகளை ரவிச்சந்திரனுக்காக ஒதுக்கியிருந்தார்கள்.. அதைப் பற்றி அவர்கள் ரவிச்சந்திரனிடம் சொன்ன போது அவன்
முன் வரிசையில் இரண்டு இருக்கைகளும் இரண்டாவது வரிசையில் இரண்டு இருக்கைகளுமாக மாற்றியமைக்கச் சொன்னான்.. அப்போது உத்ராவும்
வினித்தும் ரவிச்சந்திரனின் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் நின்று கொண்டிருந்த இடம் கடற்கரையாக இருந்ததில் நந்தினி கடலோரமாக சென்று கடலலைகளில் நனைந்து விளையாடிக் கொண்டிருந்தாள்..
"நியு மேரிட் கப்புள்.. ஹனி மூனுக்காக வந்திருக்கீங்க.. முன்வரிசையில் எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதில் உங்களின் பிரைவசி அபெக்ட் ஆகலாம்.. அதனால்தான் செகண்ட் ரோவில் உங்களுக்கான சீட்களை அலாட் பண்ணச் சொன்னேன்.." என்று ரவிச்சந்திரன் விளக்கம் சொன்னது அவர்கள் இருவருக்கும் பிடித்திருந்தது..
"எங்க மனசறிஞ்சு திங்க் பண்றீங்க சார்.." வினித் முகம் மலர்ந்ததில் உத்ரா முகம் சிவக்க அவன் கையில் செல்லமாக கிள்ளி வைத்தாள்..
இவை எதையும் அறியாத நந்தினி.. ஏதோ ஒருவகையில் உத்ராவை ஜெயித்து விட்டதைப் போலச் சந்தோசப் பட்டுப் போனாள்..
'துரோகி.. கல்யாணம் ஆனதும் பிரண்ட் ஷிப்பைத் தூக்கிக் கடாசிட்டா.. புருசனாம் புருசன்.. வயநாட்டுக்கு என்னைப் பார்க்க வரலையாம்.. ஹனிமூனை என்ஜாய் பண்ண வந்தாளாம்.. என்னடா.. இப்படிப் பேசினா நம்ம பிரண்டோட மனசு கஷ்டப் படுமேன்னு ஒரு செகண்ட் நினைச்சுப் பார்த்திருப்பாளா..?'
நந்தினியால் தாங்கவே முடியவில்லை.. அவளுடைய மனப் புழுக்கத்தை விரட்டுவதைப் போல மேடையில் மோகினியாட்டம் ஆரம்பமானது.. நந்தினி ஒரு கலாரசிகை.. இசை, நடனம் இவற்றில் ஈர்க்கப்படுபவள்.. வெகு விரைவில் உத்ராவை மறந்து நடனத்தில் லயித்து விட்டாள்..
கண்கள் விரிய நடனத்தில் ஆழ்ந்திருந்தவளின் பக்கம் நகர்ந்து அமர்ந்தான் ரவிச்சந்திரன்.. இயல்பாக வைப்பதைப் போல அவள் கைமீது கை வைத்தான்.. அவனது ஸ்பரிசத்தில் நந்தினியின் கவனம் கலைந்தது.. ரோமங்கள் அடர்ந்த அவனது முலங்கையின் சிவந்த நிறத்தில் மனம் சிக்கி ஊசலாட..
"ஸ்ஸ்ஸ்.. பின்னாடி உத்ராவும் வினித் அண்ணாவும் உட்கார்ந்திருக்கிறாங்க.." என்று எச்சரித்தாள்..
அந்த அளவது எச்சரிக்கையை விரும்பி ரசித்தான் ரவிச்சந்திரன்... இதுபோன்ற எச்சரிக்கையை உத்ரா வினித்திடம் சொல்வதைக் கேட்டிருக்கிறான்... வினித் உத்ராவிடம் நெருங்கி நிற்கும் சமயங்களில் ரவிச்சந்திரனைக் கண்டு விட்டால்..
"ரவி சார் இருக்கிறார்.." என்று சன்னக் குரலில் கணவரை எச்சரிப்பாள்..
அதே எச்சரிக்கையை நந்தினியிடம் செவியுற்றவனுக்கு கிளர்ச்சி ஏற்பட்டது... உடந்தைப் பட்டவனிடம் பேசும் உரிமையான எச்சரிக்கை வார்த்தைகளை நந்தினி பேசுவதை அவள் அறிவாளா என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.. அருகில் இருந்தவளைப் பார்த்தான்.. நடனத்தை ரசிக்கும் ஆர்வத்தில் அவன் பக்கமாக சரிந்து அவனுடைய தோளில் தலை சாய்த்திருந்தாள்.. ரவிச்சந்திரனின் மனதில் தென்றலடித்தது..
மோகினியாட்டம் முடிந்ததும் சிறிய இடைவேளை விட்டார்கள்.. அவர்களைத் தேடிப் பழச்சாறு வந்தது.. மிதப்பாக எடுத்துக் கொண்ட நந்தினி.. பார்த்தாயா என்பதைப் போல உத்ராவைப் பார்த்தாள்.. அவளோ பழச்சாறு நிரம்பிய கண்ணாடி கிளாஸை சுவைத்தபடி கன்னம் சிவக்க வினித்திடம் கதை பேசிக் கொண்டிருந்தாள்..
'அப்படி என்னத்தைப் பேசுவாளோ..? இருபத்தி நான்கு மணிநேரமும் பேச்சு.. பேச்ச.. பேச்சுத்தான்..'
பல்லைக் கடித்தபடி திரும்பியவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.. ரவிச்சந்திரனின் மீது சாய்ந்து ஏறக்குறைய அவனுடைய மடியில் அமர்ந்து விடுபவளைப் போல அவன்மீது அப்பிக் கொண்டிருந்தாள் ஒருத்தி.. கேரளத்துப் பெண்களுக்கேயுரிய சந்தனம் கலந்த மஞ்சள் நிறம்.. அழகான முகம்.. வடிவான உடல்.. அழகி என்பதையும் தாண்டி பேரழகியிலும் பேரழகி என்று சொல்லலாம்.. அப்படியொரு தேஜஸ்..
'இவன் வீட்டுப் பெண்கள்தான் அழகிகள்ன்னா.. இவன்கூடப் பழகற பெண்களும் இப்பத்தான் தேவலோகத்தில இருந்து டிராவல் பண்ணி பூமியில வந்து குதிச்சிருக்கிறதைப் போல ஜொலித்துத் தொலைகிறாளுக.. இந்த ஊர்தான் அழகு தேசம்ன்னு பார்த்தா இங்கிருக்கிற பெண்கள் தேவலோக ரம்பைகளா இருக்கிறாங்களே..' பொறாமையில் காய்ந்தாள் நந்தினி..
அந்த அழகி ரவிச்சந்திரனின் தோளைத் தொட்டுத் தொட்டுப் பேசினாள்.. அவன்மீது சரிந்து சிரித்தாள்.. செல்லமாக அவன் மார்பில் தலையை மோதினாள்.. அவனுடைய கைவிரல்களுடன் விரல் பிணைந்தாள்..
'பேசாம எழுந்து போயிடலாமா..?' என்று யோசித்தாள் நந்தினி.. அவள் செய்த ஜல்ராக்களை தாங்க முடிய வில்லை.. அவள் செய்த அட்டூழியங்களைக் கூட நந்தினியால் பொறுத்துக் கொள்ள முடிந்தது.. ரவிச்சந்திரன் அதற்கு இடம் கொடுத்துக் கொண்டிருந்ததைத்தான் பொறுக்க முடியவில்லை..
'என்னைப் பக்கத்தில் வைத்துக்கிட்டே இவகிட்ட இத்தனை ஜல்சாப் பண்றானே.. நான் இல்லாமலிருந்தா எந்த ரேன்ஜீக்கு ஜல்சாப் பண்ணுவான்..' கற்பனை செய்து பார்க்க முடியவில்லை..
'இப்படியிருக்கிறவன் என்ன அலுவலுக்காக என்னிடம் ஐ லவ் யு சொன்னானாம்.. இவனோட பொங்களுக்கும் பித்தலாட்டங்களுக்கும் நான்தான் கிடைத்தேனா..?'
அவளுக்கு அழுகையழுகையாய் வந்தது.. சற்று முன் வானத்தில் சிறகடித்துப் பறந்து கொண்டிருப்பதைப் போல உணர்ந்தவள் ஆழ்குழியில் அமிழ்வதைப் போல உணர்ந்தாள்..
பின்னாடியிருந்து யாரோ தோளில் தட்டியதை உணர்ந்தவள் திரும்பிப் பார்த்தாள்.. உத்ராதான் அவள் தோளில் தட்டிக் கொண்டிருந்தாள்..
'அட..! இவளுக்கு நான் இருக்கிறது கூட நினைவில் இருக்கா..? புருசன் பக்கத்திலிருந்தா பிரண்டை கண்ணுக்குத் தெரியாதே..'
'என்ன..?' என்பதைப் போல புருவங்களை உயர்த்தினாள் உத்ரா அந்தப் பெண்ணின் பக்கமாக நாசுக்காக விரல் நீட்டி அவள் யார் என்பதைப் போல அபிநயித்தாள்.. 'எனக்குத் தெரியாது..' என்று கை விரித்தாள் நந்தினி..
தோழியின் முகச் சுருக்கத்திற்கான காரணம் புரியாமல் தோள்களைக் குலுக்கி விட்டு அந்தப் பெண்ணைப் பார்த்தாள்.. ரவிச்சந்திரன் அமர்ந்திருந்த சோபாவின் கைப்பகுதியில் உட்கார்ந்து அவன் மீது சாய்ந்து கதை பேசிக் கொண்டிருந்தாள் அவள்.. அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாமல்..
"பேசாம அவளை மடியில் உட்கார வைத்துக்கங்களேன்.." என்று ரகசியக் குரலில் சிடுசிடுத்து விட்டாள்..
"ஓ.." அவன் கண்களில் பல்ப் எரிந்தது..
அவளுடைய பொறாமையை கண்டு கொண்டவன் அதை விசிறி விட்டுக் குளிர் காய யத்தனித்தான்..
"இதுகூட நல்ல ஐடியாவா இருக்கே.." நந்தினியைப் போலவே ரகசியக் குரலில் சீண்டினான்..
இடைவேளை முடிந்து மேடையில் வேறு நிகழ்ச்சி ஆரம்பித்ததில் அந்தப் பெண் நகர மனமில்லாமல் நகர்ந்து விட்டாள்.. நந்தினிக்கு அங்கே இருக்கவே பிடிக்கவில்லை.. எந்த நொடியிலும் அந்தப் பெண் திரும்பவும் வந்து விடுவாள் என்ற அச்சம் அவள் உள்ளத்தை வியாபித்திருந்தது.. பதக், பதக் என்ற மனதுடன் எதை ரசிப்பது..? நிகழ்ச்சியில் மனம் லயிக்க முடியாமல் அவதிப் பட்டவள்..
"போகலாம் பாஸ்.." என்று அனத்தினாள்..
"போகனுமா..?" விசித்திரமாக அவளைப் பார்த்து வைத்த ரவிச்சந்திரன்..
"புரோக்ராம் இன்னும் முடியலை.." என்று அறிவுறுத்தினான்..
"தெரியும் பாஸ்.. இருந்தாலும் போகலாம்.."
"அப்படியெல்லாம் பாதியிலே எழுந்து போகக் கூடாது.. மத்தவங்க போகலாம்.. நான் அப்படிச் செய்துவிட முடியாது.. இந்த பங்சனில் நான் சீஃப் கெஸ்ட்.. பங்சன் முடிகிற வரைக்கும் இருந்தாகனும்.. பாதியிலே போனா பஞ்சனை ஆர்கனைஸ் பண்ணி என்னை இன்வைட் பண்ணியிருக்கிறவங்களை இன்சல்ட் பண்ணியதாகி விடும்.."
"அப்ப நான் போகிறேனே.. நீங்க இருந்து பங்சனை நிறுத்தி நிதானமா ரசிச்சு முடிச்சுட்டு வாங்களேன்.."
"வாட்..?" அவளை முறைத்த ரவிச்சந்திரன்..
"உனக்கு என்ன தான் பிராப்ளம்..?" என்றான்..
"தலைவலி பாஸ்.." புளுகினாள் நந்தினி..
"சூடா ஒரு கப் டீ கொண்டு வரச் சொல்கிறேன்.. குடிச்சிட்டுத் தெம்பா உட்காரு.. புரோக்ராம் முடிந்துதான் நாம போக முடியும்.."
ரவிச்சந்திரனின் விரலசைவில் ஒருவர் ஓடிவந்து பவ்யமாக குனிந்து நின்றார்.. அவள் காதருகே டீ கொண்டு வரும்படி முணுமுணுத்தான் ரவிச்சந்திரன்.. அடுத்த சில நொடிகளில் நந்தினிக்கு டீ வந்து சேர்ந்தது.. கடனேயென்று வாங்கிக் குடித்து வைத்தாள்.. அவள் குடித்து முடிப்பதற்கும்.. இப்போது நந்தினி அவர்கள் வீணையை மீட்டியபடி பாடுவார்கள் என்ற அறிவிப்பு சுத்தமான மலையாளத்தில் ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது..
'ஆரானு ஆ நந்தினி..?'
அவளுடைய பெயருடையவய் யாராக இருப்பாள் என்று நந்தினி கூட்டத்தைப் பார்க்க.. கூட்டம் நந்தினியைப் பார்த்துக் கொண்டிருந்தது.. அவளுடைய தோளில் தட்டிய உத்ரா..
"உன் பெயரைத்தான் அளொன்ஸ் பண்ணியிருக் காங்கடி.." என்றாள்..
"நானா..? பாடப் போகிறது நானா..?" பயந்து போனாள் நந்தினி..
"நீயேதான்.. கோ.. கோ.." ரவிச்சநதிரன் அவளது கைபிடித்து எழுப்பி விட்டான்..
கேளரத்துப் பட்டு உடுத்திய பெண்கள் இருவர் நந்தினியை அழைத்துக் கொண்டு மேடையில் உட்கார வைத்தார்கள்..
"நீ வீணை வாசித்தா சரஸ்வதியே வீணை வாசிக்கிறதைப் போல இருக்குன்னு சொல்வாங்கன்னு பீற்றிக்கிட்டயே.. அதை உண்மையான்னு டெஸ்ட் பண்ணத்தான் உன்னை இந்த மேடையில பாட வைக்கும்படி பங்சன் ஆர்கனைசர்களிடம் சொல்லி யிருந்தேன்.." என்று அவளது காதருகே கிசுகிசுத்து அனுப்பி வைத்திருந்தான் ரவிச்சந்திரன்..
'எப்படி மாட்டி விட்டுட்டான்னு பாரு..' மனதுக்குள் புலம்பியபடி வீணையை மடியில் சாய்த்துக் கொண்டு நிமிர்ந்தவளுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது..
நந்தினி உட்கார்ந்திருந்த சோபாவில் 'அந்தப் பெண்' உட்கார்ந்திருந்தாள்.. ரவிச்சந்திரனின் கைமீது கை வைத்து தோள் சாய்ந்து அவள் பேசிக் கொண்டிருந்ததில் மடியிலிருந்த வீணையைக் கையிலெடுத்து அவள் தலையில் மொத்து மொத்து என மொத்தி விடும் ஆவேசம் கொண்டாள் நந்தினி..
'என்னை மேடைக்கு அனுப்பிட்டு என் சீட்டை அவளுக்குக் கொடுத்திருக்கிறயாடா..?' நந்தினியின் வயிறு எரிந்தது..
ரவிச்சந்திரனோ அந்தப் பெண் பேசுவதைக் கவனிக்காமல் மேடையிலிருந்த நந்தினியையே பார்த்துக் கொண்டிருந்தான்..
'பக்கத்தில் அவளை உட்கார வைத்துக்கிட்டு என்னைப் பார்வையிடறான்..' நந்தினிக்குள் ஆற்றாமை பெருகியது..
அவளது சொத்து கொள்ளை போய் கொண்டிருப்பதைப் போல அவள் உணர்ந்தாள்.. மெலிதாக வீணையை மீட்டி ஸ்வரம் ஏற்றியவளின் இமைகள்
தானாக மூடிக் கொண்டன.. மூடிய இமைகளுக்குள் ரவிச்சந்திரன் வந்து நின்றான்..
"யமுனை ஆற்றிலே..
              ஈரக் காற்றிலே..
     கண்ணனோடுதான் ஆட..
              பார்வை பூத்திட..
     பாதை பார்த்திட..
              பாவை ராதையோ வாட.."
ஏக்கத்துடன் அவள் குரல் கண்ணனைத் தேடியது.. அவளது முகத்தில் பிரதிபலித்த காதலின் தேடலில் தன்னைத் தொலைத்தான் ரவிச்சந்திரன்.. மேடையில் பாடிக் கொண்டிருந்தவள் வேறு ஒரு நந்தினியாக இருந்தாள்.. அவனறிந்த நந்தினி விளையாட்டுத் தனமானவள்.. குழந்தையைப் போன்றவள்.. இது போன்ற  தீவிர முகபாவம் அவளிடம் இருந்ததில்லை..
"இரவும் போனது..
              பகலும் போனது..
     மன்னன் இல்லையே கூட..
              இளைய கன்னியின்
     இமைத்திடாத கண்
              இங்கும் அங்குமே தேட.."
நந்தினியின் குரல் தேம்பியது.. மனதளவில் அவள் கண்ணனைத் தேடிக் கொண்டிருந்த தேடல் அவளது குரலில் ஒலித்தது.. இமைகளைத் திறந்து ரவிச்சந்திரனைப் பார்த்த அவளது பார்வை கண்ணனைப் பார்க்கும் பார்வையாக இருந்தது..
"ஆயர்பாடியில் கண்ணன்
              இல்லையோ..?
     ஆசை வைப்பதே அன்புத்
              தொல்லையோ..?
     பாவம்.. ராதா..!"
அவளது விழிகள் நான் பாவமில்லையா என்று ரவிச்சந்திரனிடம் கேட்டதில் அவன் நெக்குருகிப் போனான்.. பலத்த கைதட்டல் அரங்கத்தை நிறைத்திருந்தது.. மேடையை விட்டுக் கீழே இறங்கிவந்த நந்தினியை எதிர்கொண்டு கை கொடுத்து இறக்கி விட்டவன் அவளை இருக்கைக்கு அழைத்து வந்து அந்தப் பெண்ணை எழுந்து கொள்ளச் சொல்லி விட்டு அவனருகில் அமர்த்திக் கொண்டான்..
அந்தப் பெண்ணின் முகம் சிறுத்துப் போனது... வலிய வரவழைத்துக் கொண்ட முறுவலுடன் வேகமாக அங்கிருந்து வெளியேறி விட்டாள்..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -146
எண்ணியிருந்தது ஈடேற -146
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-146.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-146.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy