எண்ணியிருந்தது ஈடேற -145

145               அன்று இரவு தூக்கம் பிடிக்காமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் நந்தினி.. மனதுக்குள் இருந்த இ...


145             


அன்று இரவு தூக்கம் பிடிக்காமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் நந்தினி.. மனதுக்குள் இருந்த இனம் புரியாத பரபரப்பிற்குக் காரணம் தெரியாமல் திகைத்தாள்.. அதை இதை நினைத்து அசை போட்டபடி மெல்லத் துயிலில் ஆழ்ந்தவளை செல்போனில் குட்மார்னிங் சொல்லி எழுப்பி விட்டான் ரவிச்சந்திரன்..
"நல்லாத் தூங்கினியா..?"
என்றைக்கும் இல்லாத திருநாளாக அன்றைக்கு அவன் கேட்ட கேள்வியில் திகைத்துப் போனாள் நந்தினி..
'நான் தூங்காம இருந்தது இவனுக்கு எப்படித் தெரியும்..?'
"ஹலோ.. தூங்கு மூஞ்சி.. போனை காதில் வைத்துக்கிட்டே தூங்கறியா..?"
அவனது கிண்டலுக்கு சண்டையிட வேண்டுமென்று ஏன் தோன்றவில்லையென்று ஆச்சரியப்பட்டுப் போனாள் நந்தினி..
"நான் ஒன்னும் தூங்கால பாஸ்.." சிணுங்கினாள்..
"அதுதான் தெரியுதே.." என்றவன்..
"ஏன் துங்கலை..?" என்று மென்மையாக வினவினான்..
"என்னன்னு தெரியலை பாஸ்.. நைட் முழுக்கத் தூக்கமே வரலை.. விடியற்காலையிலதான் கண் சொக்குச்சு.." குழந்தையாகச் சொன்னாள் நந்தினி..
மறுமுனையில பேச்சில்லை.. மௌனமாக இருந்ததில்..
"ஹலோ பாஸ்.. லைனில் இருக்கீங்களா..?" என்று குரல் கொடுத்தாள்..
"நான் எப்பவுமே உன் லைனில்தான் இருப்பேன் நந்தினி.. விட்டு விலகவே மாட்டேன்.." கரகரத்த குரலில் சொல்லி விட்டு போனை வைத்து விட்டான் ரவிச்சந்திரன்..
அன்றைக்கு ஓர் கலைவிழாவுக்கு போவதாக இருந்தது.. நந்தினி உத்ராவிடம் ஒரே நிறத்தில் சேலை கட்டிக் கொள்ளலாம் என்று குதித்தாள்..
"சந்தன நிறத்தில் ஜரிகை புள்ளிகளும் சன்னமான ஜரிகை பார்டருமான சேலையைக் கட்டலாம்.. நாம ரெண்டு பேரும் ஒன்னு போல எடுத்தோமே.. அந்தச் சேலையைக் கொண்டுட்டு வந்திருக்கியா உத்ரா..?"
"ம்ம்ம்..?"
"நானும் கொண்டு வந்திருக்கேன்.. நாங்க கோழிக் கோடில சுத்திப் பார்த்தப்ப பாஸ் இதே போல பங்சன் ஒன்னுக்கு அழைத்துக்கிட்டுப் போனார்.. அந்த நினைவில எதற்கும் இருக்கட்டும்ன்னு அந்த ஸாரியைத் தூக்கி உள்ளே திணிச்சுக்கிட்டேன்.. அது எப்படி யூஸாகுதுன்னு பார்.."
உத்ரா அந்தச் சேலையைக் கட்டிக் கொண்டிருப்பாள் என்ற நினைவுகள் தலையை நனைத்துக் குளித்த நந்தினி முடியை உலர விட்டுத் தளர்வாக பின்னலிட்டு சந்தன நிறத்தில் ஜரிகை புள்ளிகள் அள்ளித் தெளித்ததைப் போன்ற சேலையை வெகு நேர்த்தியாக உடுத்திக் கொண்டாள்.. கண்களில் மை தீட்டல்.. நெற்றியில்
மெரூன் வண்ணத்தின் மையத்தில் சிறு வெள்ளைக்கல் பதித்த ஸ்டிக்கர் பொட்டு.. காதுகளில் தங்க சிமிக்கி.. கழுத்தில் அட்டிகை என்று தயாராகி கண்ணாடியில் பார்த்துக் கொண்டவளுக்கு தன்னையே அடையாளம் தெரியவில்லை.. அந்த அளவுக்கு அழகாக இருந்தாள்..
'ஈ வல்லிய சுந்தரியை நோக்கறப்போ.. ஆ வல்லிய சுந்தரன் சொக்கிப் போயி..' திருப்தியாக உணர்ந்தாள்..
அவளை டைனிங் ஹாலில் பார்த்தவுடன் ரவிச்சந்திரனின் கண்களில் தெரிந்த மின்னல் அவளை வீழ்த்தியது..
அவள் 'பங்கரை'யாக வந்து நின்றாலே பருகு பருகு எனப் பார்த்து வைப்பான்.. இதுபோல நேர்த்தியான அலங்காரத்துடன் வந்து நின்றால் விட்டு வைப்பானா..?
ரவிச்சந்திரனின் பார்வை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் எனக் கணப்பொழுதுகூட நகரவில்லை.. பிய்த்துத் தின்று விடுவதைப் போன்ற ஆவலுடன் அவள்மீதே நிலைத்து நின்றது..
நந்தினிக்கு வெட்கமாக இருந்தது.. உத்ராவும் வினித்தும் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற சங்கடத்துடன் அவர்களைப் பார்த்தவளுக்கு ஏமாற்றமாகி விட்டது.. அவர்கள் எப்பொழுதும் போல கட்டியணைத்துக் கண்ணோடு கண் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.. நந்தினியின் ஏமாற்றத்திற்குக் காரணம் அதுவல்ல..
நீயும் நானும் ஒன்று போல எடுத்த சேலையை இன்றைக்குக் கட்டிக் கொள்ளலாம் என்று உத்ராவிடம் நினைவுறுத்தி விட்டு அந்தச் சேலையைக் கட்டிக் கொண்டு வந்திருந்தாள் நந்தினி.. உத்ராவோ அடர் நீல நிறத்தில் பட்டு ரோஜா வண்ண ஜரிகை பார்டர் கொண்ட புடவையைக் கட்டியிருந்தாள்.. புடவை முழுவதும் ஜரிகைப் பொட்டுக்கள்.. பட்டு ரோஜா வண்ணத்தில் கைகளுக்கு ஜரிகை பார்டர் வேலை செய்த ரவிக்கை..
புடவை அழகாகத்தான் இருந்தது.. உத்ராவுக்குப் பாந்தமாக பொருந்தியிருந்தது.. அவளது அழகும் கூடித் தெரிந்தது..
ஆனால் தோழியும் தானும் ஒரே வேலைப்பாடுகள் கொண்ட சந்தன நிற ஜரிகைச் சேலையை அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாசையாக அந்தப் புடவையை கட்டிக் கொண்டிருந்த நந்தினியின் ஆசையில் மண் விழுந்தது..
"என்னடி இப்படிச் செஞ்சிட்ட..? இந்தப் புடவையைக் கட்டியிருக்க..?"
கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்த சதி-பதிகளின் மத்தியில் புகுந்து உத்ராவை மட்டும் தனியாக பிய்தெடுத்துப் பொருமினாள்..
"அதுவாடி.." உத்ராவின் கண்களிரண்டும் வினித்திடமே இருந்தன.. அதிலிருந்த மையலில் கடுப்பானாள் நந்தினி..
"ஏய்ய்.. முதலில் என் கேள்விக்குப் பதிலைச் சொல்லு.. அப்புறமா ரொமான்ஸ் பண்ணு.. அண்ணா உன்னோட ஹஸ்பெண்ட்தான்.. காலம் முழுக்க உன்னோடுதான் லைஃப்ல ஜர்ன் பண்ணப் போகிறார்.. அவரோட தலைவிதி அப்படியிருக்கு.. என்னவோ லவ்வரைப் போல கோந்து போட்டு ஒட்டிக்காதே.. கடுப்பாய் இருக்கு.."
"உனக்கேண்டி கடுப்பா இருக்கு..? அவர் என் புருசன்.."
'என் புருசன்..' என்ற வார்த்தையை ரசித்துக் சொன்னாள் உத்ரா.. அவளது விழிகள் செருகிய செருகலில் மயக்கம், கியக்கம் போட்டுத் தொலைத்து விடப் போகிறாளோ என்று கவலையாகி விட்டாள் நந்தினி.. புதிதாய் திருமணமான பெண்கள் ஏன் 'என் புருசன்..' என்ற வார்த்தையில் இனிப்பபைத் தடவி வைத்திருக் கிறார்களா என்ன..? சொல்லச் சொல்ல இனிக்குதடா.. புருசா.. உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்லச்
சொல்ல இனிக்குதடா என்று நாக்கைச் சப்புக் கொட்டுவதன் மர்மம் என்னவாக இருக்கக் கூடும் என்று திருதிருத்தாள் நந்தினி..
"அவர் உன் புருசன்தான்.. உனக்கு மட்டும்தான்.. இல்லைன்னு யார் சொன்னது..? எனக்கு அவர் அண்ணன்.. காதல் கண்ணன் இல்லை.. மனசிலாயி.."
"ஹை.. கேரளாவுக்கு வந்ததில மலையாளத்தில யெல்லாம் பேசித் தள்ளர.. எப்புடிடீ.."
"ஆமாண்டி.. மனசிலாயிங்கிறது கஷ்டமான மலையாள வார்த்தை பாரு.. அதை நான் பேசிப் புட்டேன்.. நீ சந்தோசப்படற.. மகளே.. பேச்சையா மாத்தப் பார்க்கிற.. மலையாள தேசத்தில தடுக்கி விழுந்தாக் கூட 'மனசிலாயி'ன்னுதான் கேட்டு வைப்பாங்க.. இதை அப்ரிசியேட் பண்ணி எஸ்கேப் ஆகப் பார்க்கிறா.. யாருகிட்ட..? முதலில் ஏன் வேற கலர் சேலையைக் கட்டியிருக்கேங்கிறதுக்கான பதிலைச் சொல்லு.."
என் கேள்விக்கென்ன பதில் என்று விடாக்கண்டியாக நந்தினி நச்சரித்ததில் விழிகள் சொக்க மயக்கத்துடன் உத்ரா சொன்னாள்..
"இது முதன் முதலா அவள் எனக்கு வாங்கிக் கொடுத்த சேலைடி நந்தினி.. எனக்கு இது ரொம்ப ஸ்பெசல்.."
"அதுக்கு..?"
நந்தினியும் உத்ராவும் ஒன்று போல வாங்கிய அந்தச் சேலை உத்ராவுக்கு ஸ்பெசலானதில்லையா..? நந்தினிக்கு அது ஸ்பெசலாக இருக்கிறதே.. உத்ராவுக்கு ஏன் அது ஸ்பெசலாக இல்லாமல் போய் விட்டது..? வேறு ஒரு சேலை ஸ்பெசல் லிஸ்டில் முதன்மை பெற்று விட்டது எதனால்..?
தன் நெருக்கமான தோழி அந்நியப் பட்டு விட்டதைப் போல உணர்ந்தாள் நந்தினி.. உத்ராவின் திருமணம் அவளையும் நந்தினியையும் பிரித்து நிறுத்தி விட்டதாக நந்தினிக்குத் தோன்றியது... மனதுக்குள் தனிமை சூழ்ந்தது..
"இந்த ஹனிமூன்டேஸ் எங்களுக்கு ஸ்பெசல் டேஸ் நந்தினி.. அவரும் நானும் சேர்ந்து அட்டெண்ட் பண்ணப் போகிற பர்ஸ்ட் பங்சன் இது.. இந்த ஸ்பெசல் டேயில
அவள் பர்ஸ்ட் பர்ஸ்ட் வாங்கிக் கொடுத்த ஸ்பெசல் சாரியைக் கட்டிக்கனும்னு அவர் ஆர்டர் போட்டார்.. நான் ஒபே பண்ணினேன்.. தட்ஸ் ஆல.."
"அண்ணா ஆர்டர் பண்ணினாரா..? நானும் நீயும் ஒன்று போல எடுத்த சேலையை இன்றைக்கு உடுத்திக்கலாம்ன்னு நாம பிளான் பண்ணியிருந்தது அண்ணாவுக்குத் தெரியாதா..?"
"தெரியும் நந்தினி.."
"தெரிந்துமா இப்படிச் சொன்னார்..?"
"ம்ம்ம்.. யு நோ.. அவர் எனக்காக நிறைய சாரிஸ் வாங்கிக் கொடுத்திருக்கார்.. விதவிதமாக ஜ்வல்ஸ்.. அத்தனையும் அழகு.. நீயே பார்க்கிறயே.. இந்தச் சேலை எவ்வளவு அழகா லவ்லியா இருக்கு..? அவரோட செலக்சன் எல்லாமே சூப்பர்தான்.."
"உன்னையும் சேர்த்துன்னு நான் சொல்லனு மாக்கும்..?"
"கோவிச்சுக்காதேடி நந்தினி.. நீயே சொல்லு.. அழகழகா அவள் வாங்கிக் கொடுத்திருக்கிற சேலைகளைக் கட்டிக்கிட்டு அவர்கூட நான் ஊர் சுத்தனும்னு அவர் ஆசைப்படறார்.. அவர் கேட்கிறதைச் செய்யனும்னு நான் ஆசைப்படுறேண்டி.."
கடைசி வார்த்தைகளைச் சொல்லும் போது எதற்காக உத்ரா அந்த அளவுக்குக் கன்னம் சிவந்தாள் என்று நந்தினிக்குப் புரியவே இல்லை.. உத்ராவின் பரவசமும், கள்ளச் சிரிப்பும், காதல் பார்வையும் அவள் வேறு உலகத்தில் சஞ்சரிப்பதை நந்தினிக்கு தெரியப்படுத்தின.. அந்த உலகில் வினித்திற்கு மட்டும்தான் அவள் இடமளிப்பாள், நந்தினிக்கு அங்கு இடமில்லையென்பதில் நந்தினி விக்கித்துப் போனாள்..
"ஸோ.. நீ இதையெல்லாம் பெரிது படுத்திக்காதே.. என்ன..? இன்றைக்கு என்னோட ஃபீலிங்ஸ் பத்தி உனக்குப் புரியாமலிருக்கலாம்.. நாளைக்கு உனக்கும் மேரேஜ் ஆகும்.. அப்போ இது புரியும்.. மனசிலாயி..! எப்படி நானும் கேரளாவுக்கு வந்ததில் மலையாளம் பேச ஆரம்பிச்சுட்டேனில்ல.. ஹா.. ஹா.."
சிரித்து மகிழ்ந்து போன உத்ரா அதைப் பகிர்ந்து கொள்ளும் சாக்கில் நந்தினியை விட்டு விலகி வினித்திடம் ஓடி விட்டாள்.. தனித்து நின்ற நந்தினியின் அருகில் வந்த ரவிச்சந்திரனின் விழிகளில் அனுதாபம் தெரிந்தது..
"வாட்'ஸ் தி பிராப்ளம்..?" கனிவான வினவினான்..
"இந்தச் சேலை பிடிக்கலை.. அதுதான் பிராப்ளம்.." கண்ணீருடன் பொருமினாள் நந்தினி..
"வொய்..? இந்தச் சேலையில் நீ எப்படியிருக்கிற தெரியுமா..? அப்சரஸ் போலவே இருக்கிற.."
அவனது விழிகளில் தெரிந்த மயக்கமும் அவனது ஆசைப்பார்வையும் அவள் பேரழகியென்ற வர்ணனையும் அடி வாங்கியிருந்த அவளது மன ரணத்திற்கு மருந்தாக மாறின.. இதமாக உணர்ந்தாள் நந்தினி..
"இதைப் போய் மாத்தனும்ங்கறியே.. ஆர் யு மேட்..? பங்சன் ஹாலின் ஸ்டாரா.. நீதான் அசத்தப் போகிற.. பாரேன்.."
நந்தினிக்கு வெட்கமாகி விட்டது.. உத்ரா வேறு நிறத்தில் சேலை அணிந்திருந்தாள் என்பதே மறந்து போய் விட..
"கேலி பண்ணாதீங்க பாஸ்.." என்று சிணுங்கினாள்..
"கேலியா..? நானா..? நோ.. நோ.. நீ கண்ணாடி பார்க்கலையா..? இல்லைன்னா என் கண்களைப் பார்.. உன்னிடம் நான் மயங்கும் மயக்கம் தெரியும்.."
கண்களைச் சிமிட்டினான் ரவிச்சந்திரன்.. உத்ராவை மறந்து போனாள் நந்தினி.. தன்னை மகாராணி போல உணர்ந்தாள்.. ரவிச்சந்திரன் ரசிக்கும் சேலையை அணிந்திருப்பதை விரும்பினாள்..
உத்ரா எந்தச் சேலையை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளட்டும்.. அதைப்பற்றி நந்தினிக்கென்ன..?
வினித் விரும்பும் சேலையை உத்ரா அணிந்திருந்தால் ரவிச்சந்திரன் விரும்பும் சேலையை நந்தினி அணிந்திருக்கிறாள்..
அவள் ஒன்றும் உத்ராவுக்குக் குறைந்தவளல்ல..
கலாச்சார விழா நடக்கும் ஹாலுக்குள் அவர்கள் நுழைந்ததும் அனைவரின் பார்வையும், வரவேற்பும் ரவிச்சந்திரனின் பக்கமாக திரும்பின.. உத்ரா வினித்துடன் ஒட்டிக் கொண்டிருக்க.. ரவிச்சந்திரனுடன் நின்றிருந்த நந்தினி முக்கியத்துவம் பெற்றாள்.. ரவிச்சந்திரனுக்குக் கிடைத்த வரவேற்பும் மரியாதையும் நந்தினிக்கும் கிடைத்தன..
"வெல்கம் சார்.. வெல்கம் மேம்.."
சிகப்புக் கம்பள விரிப்பு வரவேற்பு கிடைத்ததில் நந்தினி சிறகில்லாமல் வானில் பறந்தாள்.. உத்ராவும் வினித்தும் அவர்களுக்குப் பின்னால் வர நேர்ந்ததில் அவளது மகிழ்ச்சி இரட்டிப்பானது..
'பார்.. என்னுடன் வந்திருந்தால் உனக்கும் இந்த வரவேற்பு கிடைத்திருக்கும்.. உன் ஹஸ்பெண்ட் கூட ஒட்டிக் கொண்டால் இப்படி ஒட்டுப் புல்லைப்புல் எங்க பின்னாலே ஒட்டிக்கிட்டு வர வேண்டியதுதான்..'
கித்தாய்ப்பாக உத்ராவை பார்த்து வைத்தாள்.. ரவிச்சந்திரனின் பக்கத்தில் நந்தினி உட்கார... அவர்கள் இருவருக்கும் பின்னால் வினித்தும் உத்ராவும் உட்கார்ந்தார்கள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -145
எண்ணியிருந்தது ஈடேற -145
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-145.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-145.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy