எண்ணியிருந்தது ஈடேற -144

144 ' கண்ணும் கண்ணும் கலந்து               சொந்தம் கொண்டாடுதே ' என்றென்றும் பசுமையான இனிய கானம் நந்தினியின் மனதில் வலம்...


144


'கண்ணும் கண்ணும் கலந்து
              சொந்தம் கொண்டாடுதே'
என்றென்றும் பசுமையான இனிய கானம் நந்தினியின் மனதில் வலம் வந்து போனது.. அன்றுதான் சந்தித்துக் கொண்ட காதலர்களைப் போல வினித்தும் உத்ராவும் ஒருவரையொருவர் பார்வையில் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. உத்ரா தன் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடத் தோதாக நந்தினி தன் சேரை நகர்த்திக் கொண்டிருந்தாள்.
"என்ன்ன்.. ன..?" புருவங்களை உயர்த்தினான் ரவிச்சந்திரன்.. அதில் மயங்கி விடாமலிருக்க பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு தப்பித்தாள் நந்தினி..
'இதை இதை ஒன்னைக் கண்டு வைச்சிருக்கான்..'
அவளது தடுமாற்றத்தை வினித்தும் உத்ராவும் கண்டு கொண்டிருப்பார்களோ என்ற பயத்துடன் இதயம் படபடக்க அவர்களைப் பார்த்தாள்.. ஊஹீம்.. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர்தான் கண்டு கொள்வதில்தான் கவனமாக இருந்தார்கள்.. நந்தினியின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை..
உத்ரா என்று அழைக்கப் போனாள்..
"உஷ்ஷ்.." வாயில் ஆள்காட்டி விரலை வைத்துத் தடுத்த ரவிச்சந்திரன் அவளிடம்..
"என்ன செய்கிற..?" என்று அதட்டினான்..
"உத்ராவைக் கூப்பிடப் போறேன்.."
"இப்ப எதுக்காக சேரை நகர்த்தின..?"
'அதுக்குத்தான் என்ன்ன்..னன்னு புருவங்களைத் தூக்கி மயக்கினானா..? ஆள் மயக்கி..'
"கேட்டதுக்குப் பதில் சொல்லு.."
"உத்ரா என் பக்கத்தில் உட்காரனுமில்ல..? அவ கம்பர்டபிளா உட்கார்ந்துக்க இடம் கொடுக்கிறேன்.."
"ஒரு மண்ணும் கொடுக்க வேண்டாம்.. இங்கே வா.."
"எதுக்காக கூப்பிடறிங்க..?"
"ஊம்..? என் மடியில் உட்கார்ந்துக்கிறதுக்காக, கூப்பிடறேன்.. வந்து உட்கார்ந்துக்கறியா..?"
"என்னது.."
"மூச்.. சத்தம் போடக் கூடாது.. இந்தப் பக்கம் வந்து என் பக்கத்தில் உட்கார்.."
"உத்ரா..?"
"உன் பக்கத்தில் உட்காரத்தான் அவங்க ஹனிமூன் வந்திருக்காங்களா..? அவங்களோட ஹஸ்பெண்ட் பக்கத்தில உட்கார விடு.. கம்.."
ரவிச்சந்திரனை அதட்டலை மறுத்துப் பேச முடியாமல் உதடுகளை கம்போட்டு ஓட்டிக் கொண்டவளாக வாயைத் திறக்காமல் எழுந்து ரவிச்சந்திரனின் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்..
"டேக் யுவர் சீட்.." என்றான் ரவிச்சந்திரன்..
'இது என்ன டைனிங்ஹாலா.. இல்லை இண்டர்வியு ரூமா..?' நந்தினி உதட்டைச் சுழித்தாள்..
"தேங்க்ஸ்.."
இப்போதும் ஒருமித்த குரலில் கூறியபடி ஒருவர் மடியில் ஒருவர் உட்காராத குறையாக இடித்துக் கொண்டு அவர்கள் உட்கார்ந்தார்கள்..
'இதுக ரெண்டும் தனித்தனியாப் பேசாதுகளா..? நான் பேச நினைப்பதையெல்லாம் நீ பேச வேண்டும்ங்கிற மாதரி ஸேம் மைண்ட் வாய்ஸ சவுண்ட் வாஸ்ஸாக்கி பின்னிப் பெடலெடுக்குதுகளே..' நந்தினிக்கு அதிசயமாக இருந்தது..
"உங்களுக்கு எந்தெந்த வெரைட்டீஸ் பிடிக்குமோ அதை எடுத்துக்கங்க.." ரவிச்சந்திரன் டைனிங் டோபிளில் பரத்தப் பட்டிருந்த தட்டுக்களைக் காட்டிச் சொன்னான்..
உத்து கை நீட்டுவதற்குள் வினித் அவள்மீது சாய்ந்து உணவு வகைகளை அவள் முன்பு இழுத்து வைத்தான்.. அவன்மீது அப்பாத குறையாக அவள் படிந்து
பரவி... பரிமாறினாள்... ஊட்டத்தான் இல்லை.. ரவிச்சந்திரனும் நந்தினியும் இல்லாமலிருந்திருந்தால் அதையும் செய்திருப்பாள்..
கண்களை விரித்து விரித்து அவர்களை வேடிக்கை பார்த்த நந்தினிக்கு மனதே தாங்கவில்லை..
'என்னடா கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்ணொருத்தி எதிரில் உட்கார்ந்திருக்கிறாளேங்கிற நினைவு இருக்கா இதுகளுக்கு..?'
"இப்ப எதுக்காக முட்டைக் கண்ணை முழிச்சு முழிச்சு அவங்களைப் பார்த்துக்கிட்டு இருக்க...?" முழங்கையால் அவள் விலாவில் இடித்தான் ரவிச்சந்திரன்..
"ரொம்ப ரொம்ப ஓவரா ரொமான்ஸ் பண்ணுக பாஸ்.." அழமாட்டாத குறையாகச் சொன்னாள் நந்தினி..
"இப்பத்தானே கல்யாணம் ஆகியிருக்கு..? மேரேஜ் ஆன நியுமேரிட்கப்புள் இப்படித்தான் பிஹேவ் பண்ணுவாங்க..?"
"இந்தச் சினிமாப் பாட்டில பாடுவாங்களே.. நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோன்னு.. அது போலவா..?"
"அப்படித்தான் வைத்துக்கயேன்.."
'யாரை..?' என்று கேட்கத் தோன்றியதை ஓர் திடுக்கிடலுடன் மனதுக்குள் அழித்தாள் நந்தினி..
அவளா இப்படிக் கேட்க நினைத்தாள்..? கடவுளே..!
'இந்த உத்ராக் குரங்கு பண்ற அலப்பறையில என்னென்னவோ பேசத் தோணுது..'
நந்தினியின் முகம் போன போக்கை கவனித்த ரவிச்சந்திரன் அவளருகே தலையை சரித்து..
"அவங்க ரொமான்ஸ் பண்ணினா நீயேன் மூட்-அவுட் ஆகிற..?" என்று விசாரித்தான்..
"என்னவோ போங்க பாஸ்.. புதிதாக் கல்யாணமான ஜோடிகள் எல்லாம் இப்படி ரொமான்ஸ் பண்ணித்தான் ஆகனும்னு கட்டாயம் ஏதும் இருக்கா என்ன..?"
"இதெல்லாம் கட்டாயத்தில வர்றதில்லை.. ஹார் மோன்களினால வர்றது.. உனக்குச் சொன்னப் புரியாது.."
"ஆமாமாம்.. நான் பப்பா.."
"பின்னே.. இல்லையா..?"
இவர்கள் பாட்டுக்கு இந்தப் பக்கம் பேசிக் கொண்டிருக்க வினித்தும் உத்ராவும் அந்தப் பக்கம் தாழ்ந்த  குரலில் பேசியபடி மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்..
பேச்சுவாக்கில் சிலபல தட்டுக்களைக் காலி செய்து முடித்த நந்தினி கை கழுவலாமா என்று உத்ராவைப் பார்த்தாள் அவள் முதலில் விண்ட ஓர் விள்ளலை..
கையில் வைத்த வண்ணம் வினித்திடம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்..
பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த நந்தினி..
"அடிப்பாவி..! நானே சாப்பிட்டு முடிச்சுக் கை கழுவக் கிளம்பிக்கிட்டு இருக்கேன்.. நீ ஒரு விள்ளலைக் கூட உள்ளே தள்ளாம அசையாம உட்கார்ந்திருக்கிறயேடி.. இப்படியே உட்கார்ந்திருந்தேன்னு வைய்யி.. லன்ச் டைம் வந்து டின்னர் டைமும் வந்து சேர்ந்திரும்.. ஊரைச் சுத்திப் பார்க்காம டைனிங் ஹாலிலேயே குடியிருந்திரலாம்ன்னு பிளான் பண்ணியிருக்கயா..?" என்று ஒரு சவுண்டு விட்டாள்..
இனிய கனவு கலைந்ததில் கடுப்பான உத்ரா..
"உனக்கு நந்தினின்னு பெயர் வைத்திருக்கக் கூடாதுடி... சவுண்டு சரோஜான்னு பெயர் வைத்திருக்கனும்.. உன் சத்தத்திலே கோழிக்கோடே ஆடிப் போயிருச்சு.." என்று கடுப்படித்தாள்..
"ஆமாண்டி.. கோழிக்கோடு ஆடுது.. நீ வந்து நட்டுவாங்கம் வாசி.. ஹனிமூனுக்கு வந்தவ இப்படியா ஸ்லோ மோசனில சாப்பிடுவ..? கிளம்பு.. கிளம்பு.."
நந்தினி உலுக்கிய உலுக்களில் அவசரமாக தட்டை காலி செய்து விட்டு எழுந்தாள் உத்ரா.. கோழிக்கோடில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைக் குறித்த தனது மேதாவிலாசத்தைப் பிட்டுப்பிட்டு வைத்துக்கொண்டே கை கழுவப் போனாள் நந்தினி..
"ம்.. ம்.. ம்.. ம்.."
உத்ராவின் கவனம் நந்தினியின் பேச்சில் இல்லவே இல்லையென்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது... கடனும்கு ஊம் கொட்டியபடி அவள் வினித்தைப் பார்வையில் துழாவிக் கொண்டிருந்தாள்..
சற்றுத் தள்ளி ரவிச்சந்திரனுடன் நின்று கொண்டிருந்த வினித்தும் அப்படித்தான் இருந்தான்.. மனைவியின் பக்கமாக நொடிக்கொரு முறை பார்வையைச் செழுத்தியபடி ரவிச்சந்திரனிடம் பேசிக் கொண்டிருந்தான்..
"அப்படியே ஸ்டன் ஆகிப் போயிட்டேன்னா பார்த்துக்கயேன்.."
நந்தினி சொல்லிக் கொண்டிருக்க வினித்தை பார்த்துவிட்ட உத்ரா கை கழுவிக் கொண்டிருந்த நந்தினியை அம்போ என விட்டுவிட்டு முகமலர்ச்சியுடன் வினித்தை நோக்கி விரைந்து விட்டாள்.
"கம்மாண்டர் அங்கே முறைத்த முறைப்பில.. ஹா.. ஹா.."
பொங்கிச் சிரித்தபடி திரும்பிய நந்தினி அங்கே உத்ராவுக்குப் பதில் ரவிச்சந்திரன் நின்று கொண்டிருந்தில் பேஸ்தடித்தவளாக பேந்தப் பேந்த விழித்தாள்..
"கம்மாண்டர் முறைத்தா உனக்குச் சிரிப்பு வருமா..? ம்ம்ம்.." அவன் புருவங்களை உயர்த்தினான்..
"இங்கே உத்ரா நின்றுக்கிட்டிருந்தாளே.."
உத்ராவைத் தேடும் முனைப்பில் அவனது புருவம் உயர்த்துதலைக் கண்டு கொள்ளாமல் அவள் தப்பித்தாள்.
"உத்ரா உன்கம்மாண்டரா மாறிடலை.. பட்ஷி ஹஸ்பெண்டைத் கண்டதும் பறந்து அங்கே போயாச்சு.. அங்ஙன நோக்கு.."
ரவிச்சந்திரன் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்த நந்தினி பற்களை நறநறத்தாள்.. உத்ரா வினித்தின் மார்பில் ஏறக்குறைய சாய்ந்து அவனுடைய சட்டையில் பொத்தான்களைப் பிய்த்து விடுபவளைப் போலத் திருகியபடி பேசிக் கொண்டிருந்தாள்..
"இப்பத்தான் இங்கே நின்றுக்கிட்டு இருந்தா பாஸ்.. நம்பிக் கை கழுவ அந்தப் பக்கமா திரும்பினேன்.. இந்தப் பக்கமா எஸ்ஸாகிட்டா பார்த்தீங்களா.." அங்கலாய்த்தாள் நந்தினி..
"ஹனிமூனுக்கு வந்தவங்ககிட்ட இப்படி மொட்டை ரம்பம் போட்டா எஸ்ஸாகாம என்ன செய்வாங்க..?"
"நான் மொட்டை ரம்பம் போடறேனா..?"
"யெஸ் மை டியர்.."
ஏனோ அவன் சொன்ன மை டியர் காதில் தேனாக பாய்ந்து அவளை மயக்கியது.. உத்ரா வினித்தின் சட்டை பொத்தான்களைப் பிய்க்க முயன்று கொண்டிருந்ததைப் போல அவளும் ரவிச்சந்திரனின் மார்பில் சாய்ந்து அவனுடைய சட்டை பொத்தான்களைப் பிய்த்து வீச ஆசை கொண்டாள்..
'இவன் தான் எத்தனை அழகு..!'
மயக்கத்துடன் அவள் பார்த்ததில் ரவிச்சந்திரனின் கண்கள் மின்னின..
"நந்தினி.." தாபத்துடன் அழைத்தான்..
"ம்ம்ம்.." போதையுடன் முணுமுணுத்தாள் அவள்..
ரவிச்சந்திரன் அவளது கை விரல்களுடன் விரல் கோர்த்துக் கொண்டதை அவள் ஆட்சேபிக்கவில்லை.. கையை உறுவிக் கொள்ளவும் முயலவில்லை.. அவன் கையோடு கை பிணைய உத்ராவை நோக்கிப் போனவளுக்கு கர்வமாக இருந்தது..
'நீ என்னை அம்மோன்னு விட்டுட்டு உன் ஆளிடம் ஓடி வந்திட்டா நான் தனியா நின்னிருவேனா..? பார்.. கம்மாண்டரே எனக்குக் கம்பெனி கொடுத்துக்கிட்டு இருக்கான்..'
"போகலாமா..?"
ரவிச்சந்திரன் கேட்டதும் மரியாதைக்காக கால் இன்ச் விலகி நின்ற அந்த இருவரும் நந்தினியின் கர்வப் பார்வையைக் கவனிக்காமல்..
"ஓ.." என்று ஒருமித்த குரலைக் கொடுத்தார்கள்..
கோழிக்கோடில் ரவிச்சந்திரனும் நந்தினியும் சுற்றிப் பார்த்த அதே இடங்களை மறுபடியும் சுற்றிப் பார்த்த போது நந்தினியின் மனதில் மலரும் நினைவுகளாக
அந்தக் காட்சிகள் விரிந்தன.. அவற்றைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள உத்ராவை நாடினாள்.. அவளோ கேரளத்தின் இயற்கையழகில் ஆழ்ந்து போனவளாக வினித்துடன் ஓட்டிக் கொண்டிருந்தாள்..
"இப்படியா பசை போட்டதைப் போல ஒட்டிக்கு வாங்க..?" பொருமினாள் நந்தினி..
"குளிருதே.. பாவம்.. அவங்க என்ன செய்வாங்க..?" பரிந்துரைத்தான் ரவிச்சந்திரன்..
"குளிருக்கும் குளோஸ்பிரண்டைக் கண்டுக்காம திராட்டில் விடறதுக்கும் என்ன கனெக்சன் பாஸ்..?"
"ஹஸ்பெண்டைக் கட்டிக்கிட்டா குளிர் குறையும்.. அந்தக் கனெக்சன்தான்.." விளக்கம் சொன்னான் ரவிச்சந்திரன்..
"எப்படி..?"
"இப்படி..?"
கடலோரத் தீவின் மத்தியில் ஈரம் படர்ந்த பாறைகளின் மறைவில் வினித்தும் உத்ராவும் காணாமல் போயிருக்க.. அருகில் யாருமற்ற தனிமையில் நந்தினியைத் தழுவி இறுக்கிக் கொண்டான் ரவிச்சந்திரன்..
அவன் மார்பில் கை வைத்துத் தள்ளி விடத்தான் நினைத்தாள் நந்தினி.. அவனைத் தொட்ட கையைப் பிடித்து விரித்து உள்ளங்கையில் அவன் முத்தம் கொடுத்ததில் அவளுக்கு உலகமே மறந்து விட்டது..
தன்னையும் அறியாமல் அவன் கைகளுக்குள் அடைக்கலமானாள் நந்தினி.. உச்சியில் உணர்ந்த அவனது முத்தத்தின் ஸ்பரிசத்தில் மூழ்கிப் போனவளாக இமைகளை மூடிக் கொண்டாள்..
எதிர்ப்பேயில்லாத தழுவல் ஒரு சொர்க்கம்.. ரவிச்சந்திரன் அந்தச் சொர்க்கத்தில் திளைத்திருந்தான்.. மறுப்பில்லாமல் அவன் அணைப்பில் அடங்கியிருந்த நந்தினியை விடுவிக்காமல் இறுக்கிக் கொண்டிருந்தான்..
தீவிலிருந்து போட்டில் திரும்பும் போது உத்ரா நந்தினியைத் தவிர்த்து வினித்திடம் பேசிக் கொண்டிருந்ததில் நந்தினி பாதிப்படையவில்லை.. அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரவிச்சந்திரனின் ரகசிய தொடுகைகளில் குளிர் காய்ந்து கொண்டிருந்தாள்..
மாலையில் பூங்காவில் சுற்றி வரும் போது உத்ராவுக்கும் வினித்துக்கும் தனிமையைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி ரவிச்சந்திரன் நந்தினியுடன் எதிர்திசையில் பிரிந்து நடந்தபோது நந்தினியின் மனம் எதிர்பார்ப்பில் குறுகுறுத்தது..
அவள் நினைத்ததுதான் நடந்தது.. வெகு இயல்பாக அவளுடைய தோளின் மீது கை போட்டுத் தன் பக்கமாக இழுத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்.. அவனுடைய கை அவளுடைய தோள்களை வளைத்திருக்க நந்தினியின் கை அவனுடைய இடுப்பில் படிந்தது..
'நேத்து இப்படித்தானே வினித் அண்ணாவும் உத்ராவும் வந்தாங்க..'
நந்தினி ரவிச்சந்திரனின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.. கடந்து போனவர்களில் ஒருவர் தமிழர் போல.. தன் மனைவியிடம் சொன்னார்..
"புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி போல இருக்குடி.."





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -144
எண்ணியிருந்தது ஈடேற -144
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-144.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-144.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy