எண்ணியிருந்தது ஈடேற -143

143 "எப்புடி பாஸ்.." அழமாட்டாத குறையாக வினவினாள்.. "இதுக்கு ஷெர்லெக் ஹோம்ஸா வரனும்.. ?" "அவரையே ஏன் சார...

143


"எப்புடி பாஸ்.." அழமாட்டாத குறையாக வினவினாள்..
"இதுக்கு ஷெர்லெக் ஹோம்ஸா வரனும்..?"
"அவரையே ஏன் சார் இழுக்கறிங்க..?"
"வேண்டும்ன்னா உன்னை இழுக்கவா..?"
"சான்ஸ் கிடைச்சிருச்சா..?"
"நீதான் அடிக்கடி உன் கையை இழுக்கச் சொல்லிச் சான்ஸை அள்ளியள்ளிக் கொடுக்கிற.. பாரி வள்ளல் பரம்பரைடி நீ.."
"என்னடா.. இம்புட்டு நேரமா 'டீ' போடலையேன்னு பார்த்தேன்.. வந்துருச்சா..?"
"பதிலுக்கு நீ என்னடான்னு 'டா' போடறியா..?"
"ஹைய்யய்யோ.. அப்படியெல்லாம் இல்லை பாஸ்.. ஞான் அப்பாவியாக்கும்.."
"யார்..? நீ..? அப்பாவி..?"
"பின்னே.. உங்க அத்தைமக ரத்தினமா அப்பாவி..?"
"அவ பேரு அஜந்தாவாச்சே.."
"அதை என்ன்ன்..னமா ரசிச்சுச் சொல்றீங்க பாஸ்.."
"பொறாமை..?"
"என்னத்துக்காம்..?"
"எதுக்கோ.. எனக்கு எப்படித் தெரியும்..?"
"உங்களுக்கா தெரியாது..? யாரு நீங்க..?"
"அதை நீதான் சொல்லேன்.."
"கம்மாண்டர்.."
அவனைச் சொல்லி விட்டு இவள் அவனுக்கான பட்டப் பெயரை ரசித்துச் சொன்னாள்..
"ஹஹீம்..?" உல்லாசமாக ஒலித்தது அவன் குரல்..
அவன் அவளுடைய காதலனல்ல.. காதல் சொல்லியவன் மட்டும்தான் என்ற விவரமே அவளுக்கு மறந்து விட்டது.. அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் அந்த உரையாடல் முற்றுப் பெறாமல் நீடிக்க வேண்டும் என்று விரும்பினாள்.. நேரில் முகம் சிவக்கத் தடுமாறி நிற்பதை விடப் போனில் பேசுவது வசதியானதாகவும் எளிதானதாகவும் இருந்தது..
"எதுக்கு என்னைத் தத்தின்னு சொன்னீங்களாம்..?"
"பின்னே..? ஹனிமூன் கொண்டாட வந்தவங்க என்ன ரூமுக்குள்ளே உட்கார்ந்து நியுஸ் சேனலையா வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பாங்க..? அவங்க வாட்ச் பண்ண நினைக்கிற விசயங்களே வேற.."
முதலில் அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல்தான் ஊம் கொட்டினாள் நந்தினி.. புரிந்ததும் முகம் செக்கச் சிவக்க..
"ச்ச்சீய்.." என்றாள்..
"இப்போப் போய் நீ கதவைத் தட்டினா எப்படியிருக்கும்..? உன்னை உள்ளே வான்னு சந்தோசமா அழைத்துக்குவாங்களா..? பூஜை வேளைக் கரடின்னு மனதுக்குள்ளே அர்ச்சனை பண்ணுவாங்க.."
"ஆமாமில்ல.."
"இப்போப் சொல்லு.. அவங்க ரூமுக்கு போகப் போறியா..?"
"மாட்டவே மாட்டேன்.. பட்.. வேற என்னதான் செய்கிறது..?"
"டைனிங் ஹாலுக்கு வா.. நான் போன் பண்ணி அவங்களை பிரேக் பாஸ்ட்டுக்கு இன்வைட் பண்றேன்.."
இவன்தான் எப்படியெல்லாம் யோசித்துச் செயல் படுகிறான் என்ற வியப்பு தோன்றியது நந்தினிக்கு.. அதனால்தான் இந்த இளம் வயதில் பிஸினஸ் உலகின் நட்சத்திரக் கதாநாயகனாக இவனால் ஜொலிக்க முடிகிறது.. அழிந்து கொண்டிருந்த குடும்பச் சொத்துக்களை இறுக்கிப் பிடித்துப் பாதுகாக்க முடிகிறது..
அவனை நினைக்க நினைக்க நந்தினிக்கு பிரமிப்பாக இருந்தது.. அப்பேற்பட்டவன் எப்படி அவளிடம் காதல் சொல்கிறான்..?
'யானைக்கும் அடி சறுக்கும் என்பது இதுதான் போல..' நந்தினிக்குச் சிரிப்பு வந்தது..
துள்ளலுடன் டைனிங் ஹாலுக்குக் கிளம்பியவள் ஏதோ நினைவுக்கு வந்தவளாக தேங்கி நின்று அவசரமாக கண்ணாடி பார்த்துத் தலையைக் கோதி விட்டுக் கொண்டாள்..
'அழகா இருக்கேனா..?'
அவள் இதுபோல கண்ணாடி பார்ப்பவளல்ல.. தன் தோற்றத்தைக் குறித்த பிரக்ஞை சிறிதும் இல்லாதவள்.. அப்போது மட்டும் ஏன் கண்ணாடி பார்க்கிறாள்..? தன் அழகைக் குறித்து கவலை கொள்கிறாள்..?
'நானே நானா..? யாரோதானா..?'
தனக்குத்தானே ஒரு குட்டை வைத்துக் கொண்டு ஹேண்ட் பேகை தோளில் மாட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியேறி லிப்டில் புகுந்தாள் நந்தினி.. தரைத் தளத்தில் வெளிப்பட்டு ரவிச்சந்திரனின் பிரத்யேக டைனிங் ஹாலை நோக்கி நடந்தபோது அவளுக்குள் மலரும் நினைவுகள் தோன்றின..
அதிக காலமானால்தான் மலரும் நினைவுகள் என்று சொல்ல வேண்டுமா என்ன..? சில நாள்களே ஆகியிருந்தாலும் கடந்து போன நாட்களின் நினைவுகள் மலரும் நினைவுகள்தான்..
'அதிலும் ஆ சுந்தரனோடு கழித்த நாள்கள் நறுமணம் கமமும் நாள்கள் அல்லவோ..'
ஆ வல்லிய சுந்தரன் அவளுக்காக அவனுடைய பிரத்யேக டைனிங் ஹாலில் காத்திருந்தவன்.. அங்கிருந்த பணியாள்கள் மரியாதையுடன் அவளை வரவேற்றுப் பூங்கொத்தை பரிசளித்தார்கள்.. தன்னை ஓர் மகாராணி போல உணர்ந்த நந்தினிக்கு குதூகலமாக இருந்தது.. ரவிச்சந்திரன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நினைவுடன் சன்னமாக சிரித்தபடி..
"தேங்க்ஸ்.." என்றாள்..
"வெல்கம் மேம்.." என்றார்கள் பணியாள்கள்..
பூங்கொத்துடன் வந்தவளை சுவராஸ்யமாகப் பார்த்த ரவிச்சந்திரன்..
"வரவேற்பெல்லாம் பலமாய் இருக்கே.." என்றான்..
"கண் வைக்காதீங்க பாஸ்.." சிணுங்கினாள் நந்தினி..
"அதுதானே முடியாது.."
அவன் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவளையே பார்த்தான்.. அவளை அங்குலம் அங்குலமாக ரசித்த அவன் பார்வையில் அவள் குழம்பிப் போனாள்..
'இப்போத்தானே கண்ணாடி பார்த்துட்டு வந்தேன்..? அப்படியொன்னும் அழகாய் இருக்கிறதைப் போலத் தெரியலையே.. இவன் கண்ணுக்கு மட்டும் நான் அழகாய் தெரியறேனா..? எப்படி..?'
அவன் பார்வையில் முகம் சிவந்தவள்..
"இப்படிப் பார்க்காதீங்க பாஸ்.." என்றாள்..
"வேறு எப்படிப் பார்க்க..? இப்படிப் பார்க்கவா..?"
இந்தப் பார்வை முந்தைய ரசிப்புப் பார்வையைப் போல இல்லாமல் மேய்ச்சல் பார்வையாக இருந்ததில் பதறிப் போனாள் நந்தினி..
"இப்படியும் பார்க்காதீங்க பாஸ்.."
"லுக் நந்தினி.. உன்னை சைட்டடிக்காம இருக்க என்னால் முடியாது.. ஸோ.. நான் எப்படி சைட் அடிக்கனும்னு நீயே டிசைட் பண்ணிச் சொல்லு.. அப்படி சைட்டடிக்கிறேன்.. இந்த அளவுக்கு நான் கன்ஜெசன் கொடுக்கிறதே பெரிய விசயம்.. எப்படி டீல் ஓகேவா..?"
அவன் 'டீலா, நோ டீலா..?' என்று டீல் பேசியதில் நந்தினியின் தலை கிறுகிறுத்தது.. நல்ல வேளையாக அவளைக் காப்பாற்ற உத்ரா வினித்துடன் வந்து சேர்ந்து விட்டாள்.. புத்தம் புது மலரைப் போல இருந்தாள்.. வினித் அவளுடைய தோளைச் சுற்றிக் கையோடு கை போட்டு இறுக்கியிருக்க.. இவள் அவன் இடுப்பில் கை போட்டு வளைத்திருந்தாள்.. ஜங்சனில் இருந்ததைப் போல சுற்றுச் சூழலை மறந்து ரகசியக் குரலில் எதையோ பேசியபடி வந்து கொண்டிருந்தார்கள்..
"உத்ரா வந்துட்டா.." சந்தோசமான நந்தினி..
"ஹாய்.." என்று குரல் கொடுத்தாள்..
ஊஹீம்.. இவள் குரல் உத்ராவின் காதுகளில் விழுந்ததைப் போலவே தெரியவில்லை.. அவள் பருகு பருகு என வினித்தின் முகத்தையே இமைக்காமல் காதலுடன் பார்த்துக் கொண்டு கனவுலகில் மிதக்கிறவளைப் போல மிதந்து வந்து கொண்டிருந்தாள்..
நந்தினிக்கு ஏமாற்றமாகி விட்டது.. உத்ராவைப் பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் நாள்களை எண்ணிக் காத்திருந்தவளுக்கு தோழியின் பாரா முகத்தைக் கண்டு அழுகையழுகையாக வந்தது..
'காலையிலும் இப்படித்தான்.. ஏர்லி மார்னிங்குன்னு கூடப் பார்க்காம நான் விடிகாலைத் தூக்கத்தைத் தியாகம் பண்ணிட்டு இவளை ரிஸீவ் பண்ண ஜங்கனுக்கே போய் நின்னா.. இவ என்கூடப் பேசாம வினித் அண்ணா கூடக் கொஞ்சிக் குழாவிக்கிட்டு இருந்தா.. ஹோட்டலுக்கு வந்ததும் நின்று ஒரு வார்த்தை பேசாம ரூமுக்குள்ள ஓடிட்டா.. இப்பவாவது என் நினைப்பு வந்து பேசறதுக்கு ஓடோடி வருவான்னு பார்த்தா.. பொன்னே பூவேன்னு அன்னடைபோட்டு வினித்தண்ணாவைக் கட்டிப் பிடிச்சு கண்ணோடு கண் பார்த்து கிசுகிசுன்னு கொஞ்சிக்கிட்டு வர்றா.. என் நினைப்பே இவளுக்கில்லையா..?'
ரவிச்சந்திரனிடம் அங்கலாய்த்தால் அவன்..
"உன் நினைவு எதுக்கு வரனும்..?" என்று புருவங்களை உயர்த்தி இறக்கி இம்சித்தான்..
"ஹலோ பாஸ்.. நானும் அவளும் பெஸ்ட் பிரண்ட்ஸ்.."
"ஸோ வாட்..?"
"என்னை விட அவளுக்கு வினித் அண்ணா உசத்தியாப் போயிட்டாரில்ல..?"
நந்தினிக்குக் கண்கள் கலங்கி விட்டன.. அவளையே உற்றுப் பார்த்த ரவிச்சந்திரனின் முகத்தில் ஏதோ வந்து போனது.. வழக்கம் போல அது என்ன வென்றுதான் தெரியவில்லை..
'இவன் தேங்காயை உடைக்கிறதைப் போலத் தெள்ளத் தெளிவா எடுத்துச் சொன்னாலே என் மண்டையில் ஏறாது... இதில் மர்மமா பார்த்து வைக்கிறதையா கண்டு பிடிக்கப் போறேன்..?'
நந்தினி நீ அறிவுத் திருக்கடல்டி என்று அவளது மனம் எள்ளி நகையாடியதில்..
'ம்ஹீம்.. இப்படியிருந்தா இவன் எனக்குத் 'தத்தி' பட்டம்தானே கொடுப்பான்..' என்று நொந்து போனாள் நந்தினி..
பேசாமல் என்ன பார்வை உந்தன் பார்வை என்று கேட்டு விடலாம் என்று அவனிடமே கேட்டாள்..
"எல்லோரும் உன்னைப் போலவே இருப்பாங்களா..?"
அதே கண்கள் என்பதைப் போல அதே மர்மப் பார்வையுடன பூடகமாக கேள்வி கேட்டான் ரவிச்சந்திரன்.
"நான் எப்படி இருக்கிறேனாம்..?"
"அழகாய் அப்சரஸ் மாதிரி இருக்கிற.."
கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் அவன் ஜொள்ளினான்.. ஆனாலும் இது அதிகப்படிதான் என்று தோன்றியது நந்தினிக்கு.. இவன் அப்சரஸ்களைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை போல.. இவனுடைய யாழினிப் பாட்டியே அப்சரஸ்களை மிஞ்சிய பேரழகுடன் இருக்கிறாள்.. அவந்திகா ஜொலிக்கிறாள்.. அஜந்தாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்... அவள் மட்டும் வில்லித்தனமான வேலைகளைப் பார்க்காதவளாக இருந்திருந்தால் நந்தினி அவளுக்குப் பூப்போட்டு பூஜை செய்திருப்பாள்..
இப்பேற்பட்ட பேரழகிகளை உறவினர்களாக வைத்துக் கொண்டு அழகிகள் புடைசூழ வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மன்மதனாகப் பட்டவன் நந்தினியைப் போய் அப்சரஸ் என்கிறான்..
"நீங்க வயநாட்டில பிறந்து உலகம் சுத்தற வாலிபர்ன்னு நினைச்சேன் பாஸ்.."
"அந்த நினைவுக்கு என்ன குறை வந்திருக்கு..?"
"ஊஹீம்.. நீங்க.. பொய்யிலே பிறந்து பொய்யில வளர்ந்தவரா இருக்கீங்க.."
"எதை வைத்து அப்படிச் சொல்கிற..?"
"என்னைப் போய் அப்சரஸ்ன்னு சொல்கிறீங்களே.. இதை மட்டும் அப்சரஸ்கள் கேள்விப்பட்டாங்கன்னு வையுங்க.. கூட்டம் கூட்டமாக் கிளம்பி உங்களை அடிக்க வந்திருவாங்க.."
"ஹா.. ஹா.."
ரவிச்சந்திரன் சிரித்துக் கொண்டிருக்க அங்கே வந்த உத்ராவும் வினித்தும் நந்தினியை விட்டு விட்டு ரவிச்சந்திரனிடம் சிரித்து வைத்தார்கள்.. அவர்களுக்கு வெல்கம் சொல்லி பூங்கொத்துகளை பணியாளர்கள் கொடுத்து வரவேற்றதில் நந்தினியின் தனக்கு மட்டும்தான் அந்த வரவேற்பு என்ற இறுமாப்பு இடிந்து தரை மட்டமானது.. காற்றுப் போன பலூனைப் போல உற்சாகம் வடிந்து போனதில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.. போதாக் குறைக்கு உத்ராவும் வினித்தும் ரவிச்சந்திரனுக்கு..
"தேங்க் யு சார்.." என்று ஒருமித்த குரலில் நன்றி.. சொல்லி நந்தினியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள்.. கோபத்தில் கொதிகலனான நந்தினி..
"இங்கே நானும் இருக்கேன்.." என்று குரல் கொடுத்தாள்..
"இதென்னடி புதுசா இருக்கு..?" உத்ரா கோபித்துக் கொள்ள அது புரியாமல் நந்தினி தன் உடையைப் பார்த்து விட்டு.
"இங்கே.. கோழிக்கோடில்தாண்டி பர்ச்சேஸ் பண்ணினேன்.. நல்லா இருக்கா..?" என்று கேட்டு வைத்தாள்..
"இவ இருக்காளே.."
இமைகளைச் சுருக்கிக் கழுத்தைச் சாய்த்துக் கணவனிடம் செல்லமாக கூறினாள் உத்ரா.. வினித் அதை ரசித்துத் தலையை ஆட்டிச் சிரித்தான்.
"நான் பேசினா என்கிட்டப் பேசனும்.. அது என்ன எதுக்கெடுத்தாலும் உன் ஹஸ்பெண்ட்கிட்டயே பேசி ஷேர் பண்ணிக்கறது..? என்னைப் பார்க்கத்தானே வயநாட்டுக்கு வந்திருக்கிற.." நந்தினி சிடுசிடுக்க..
"அவங்க ஹனிமூன் கொண்டாட வயநாட்டுக்கு வந்திருக்கிறாங்க.." என்று ஷொட்டுக் கொடுத்தான் ரவிச்சந்திரன்..
"இவ இப்படித்தான் சார்.."
இப்போது ரவிச்சந்திரனிடம் அபிப்ராயம் தெரிவித்தாள் உத்ரா.. வினித்தை விட இவன் அதிகமாக அதை ரசித்துத் தலையாட்டி விட்டு உரக்கச் சிரிக்க
வேறு செய்தான்..
"ஹா.. ஹா.."
'அப்படியே வில்லன் சிரிப்பு..'
அழகிய வில்லன் என்று பல்லைக் கடித்தவளுக்கு அவள் எப்படித்தான் என்று புரியவில்லை.. பொத்தாம் பொதுவில் இவள் இப்படித்தான் என்று உத்ரா
சொல்லி வைக்கிறாளே.. அவள் எப்படித்தான் என்பதை விலாவாரியாக விளக்கித் தொலைத்தால் ஆகாதா..?
"நீயென்னடி யாரோ போல போட்டுக் கொடுக்கிற..?" உத்ராவை பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள்..
"ச்ச்சும்மாடி.."
உத்ரா நந்தினியின் தோளைக் கட்டிச் சமாதானப் படுத்தியதில் நந்தினி குளிர்ந்து போனாள்.. ரவிச்சந்திரனும் அவளும் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருந்ததில் உத்ரா அவளுக்குப் பக்கத்தில்தான் உட்காருவாள் என்று எதிர்பார்த்தாள்.. பக்கத்தில் உட்காரும் தோழியிடம் பேச அவளுக்கு ஆயிரம் விவரங்கள் இருந்தன.. தொண்டைக் குழியில் தேக்கி வைத்திருந்த வார்த்தைகளைக் கொட்டிக் கவிழ்க்க இவள் தயாராகிக் கொண்டிருக்க உத்ரா தயங்கி நின்று வினித்தைப் பார்த்தாள்.. இருவரின் விழிகளும் கலந்து பேசிக் கொண்ட செய்தி என்னவாக இருக்கக் கூடும் என்று நந்தினிக்குப் புரியவில்லை..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -143
எண்ணியிருந்தது ஈடேற -143
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-143.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-143.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy