எண்ணியிருந்தது ஈடேற -142

142 "எதுக்குடி இந்த அச்சச்சோ.. ?" ஓட்டைவாய் என்று தோழியின் மனதுக்குள் நாமகரணம் சூட்டப் பட்டிருப்பதை அறியாதவளாக கேட்டா...


142


"எதுக்குடி இந்த அச்சச்சோ..?"
ஓட்டைவாய் என்று தோழியின் மனதுக்குள் நாமகரணம் சூட்டப் பட்டிருப்பதை அறியாதவளாக கேட்டாள் உத்ரா..
"அண்ணாவும் நீயும் பின்சீட்டில் உட்கார்ந்திருக் கிறதை மறந்தே போயிட்டேண்டி உத்ரா.."
உத்ரா தோழியைப் பார்த்த பார்வை 'அடிப்பாவி..!' என்றது..
"உன்னை நம்பி என் ஹஸ்பெண்டோடு ஹனிமூனுக்கு வந்திருக்கேன் பாரு... என்னைச் சொல்லனும்.. எப்படிங்க இவளை நம்பி ஹனிமூனுக்கு கிளம்பி வந்தீங்கன்னு உன் பாஸ் கேட்டதுதான் கரெக்ட்.. அவர் வாய்க்கு சர்க்கரை போடனும்.."
"என் வாய்க்கு..?"
"பாகற்காய் ஜீஸை ஊத்தனும்.."
"எதுக்குடி இந்த கொலைவெறி..?"
"இன்னும் உன் குரல்வளையில் கை வைக்காமலிருக் கிறேன்னு சந்தோசப்படு.. பக்கத்தில் என் ஹஸ்பெண்ட் இருக்கிறதினால நீ இன்னைக்குத் தப்பிச்சிட்ட... இன்னொரு நாள் மாட்டாமலா போவ..?"
"இன்னைக்கு மட்டும் ஏன் விட்டு வைச்சிருக்க உத்ரா.. அண்ணா முன்னாலே அமைதியின் சிகரம் போல வேசம் போடற உன் இமேஜ் டேமேஜாகிரும்ன்னுதானே..?"
"உன் விசயத்தில இமேஜையெல்லாம் யோசிக்கக் கூடாதுடி.. உன்னை.."
உத்ரா நந்தினியின் குரல்வளையை நெறிக்கப் போவதைப் போல பாவனை செய்தாள்.. அவள் கைகளை மாலையாக்கிக் கொண்டு கலகலவென சிரித்தாள் நந்தினி..
"ஸாரிடி உத்ரா.. உனக்கும் அண்ணாவுக்கும் கோழிக்கோடின் அழகைக் காட்டிப் பேசிக்கிட்டே வரனும்னு நினைத்தேன்.."
"அதை மறந்துட்டு உன் பாஸ்கூட சண்டை போட ஆரம்பிச்சிட்ட.. போகுது போ.. நீ காட்டலைன்னா என்ன.. நாங்க ரசிச்சுப் பார்த்துக்கிட்டுத்தான் வந்தோம்.. கேரளத்துப் பசுமையைப் பத்திச் சொல்லனுமா என்ன..? கண்களுக்கு செமத்தியான விருந்து.. தொட்டுக் கொள்ள சைட்-டிஷ்ஷா உங்க சண்டை.." என்ற உத்ரா.. குரலைத் தாழ்த்தி நந்தினியின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி சன்னக் குரலில்..
"அப்படியே டாம் அண்ட் ஜெர்ரி சண்டையைப் பார்க்கிறதைப் போலவே இருந்ததுடி.. இப்படியாடி உன்பாஸ் கூட சண்டை போடுவ.. அவர் உனக்குச் சம்பளம் கொடுக்கிற முதாளிங்கிற பயம் இருக்க வேண்டாமா..?" என்று கடிந்து கொண்டாள்..
"அவர் மட்டும் என்னைத் திட்டலாமா..?"
"உளராம வர்றியா..?"
நந்தினி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.. உத்ரா தோழியை அணைத்துச் சமாதானம் சொன்னாள்.. அவர்கள் ரிசப்சனுக்குப் போனார்கள்.. பழக்கமான பணியாள்களின் புன்னகையில் முகம் மலர்ந்த நந்தினி அவர்களிடம் குசலம் விசாரிக்க ஆரம்பித்தாள்.. ரவிச்சந்திரனின் ஆட்சேபப் பார்வையில்..
"பாருடி.." என்று உத்ராவிடம் தஞ்சம் புகுந்தாள்..
அவர்கள் லிப்டில் ஏறி அவர்களுக்கான அறைகள் ஒதுக்கப் பட்டிருந்த தளத்தில் வெளிப்பட்டார்கள்.. ரவிச்சந்திரன் கூடவே வந்ததில் வியப்பான நந்தினி..
"நீங்க உங்க ரூமுக்குப் போகலையா பாஸ்..?" என்று கண்களை மலர்த்தினாள்..
"வினித்தும் உத்ராவும் நம்ம கெஸ்டாச்சே.. ரூம் வாசல் வரைக்கும் வந்துட்டுப் போகலாம்ன்னு நினைத்தேன்.." என்ற ரவிச்சந்திரனின் பதிலில் மலைத்தாள்..
தி கிரேட் பிஸினெஸ் ஸ்டார் ரவிச்சந்திரன்.. கேரளத்து ராஜாதிராஜன்.. அவனிடம் வேலை பார்க்க வந்திருக்கும் அபலை (?) நந்தினியின் தோழிக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறானா..?
இந்த முக்கியத்துவத்தை அவளும் அவனுமாக முதன் முதலாக இதே 'யாழ்' ஹோட்டலுக்கு வந்த போது நந்தினிக்குக் கொடுக்கவில்லையென்ற நினைவில் அவள் மனதில் பொறாமை வந்தது..
"ஹோட்டல் எப்படியிருக்கு..?" என்று ரவிச்சந்திரன் உத்ராவின் அபிப்ராயத்தைக் கேட்டதில் அந்தப் பொறாமை அதிகரித்தது..
'என்னிடம் இப்படிக் கேட்கலையே..' என்று மனம் குமைந்தாள்..
"ஸோ பியூட்டிஃபுல் சார்.." உத்ரா மெந்நகை புரிந்ததில்..
'போதும்டி.. உனக்குக் கல்யாணமாகிருச்சு.. உன் ஆள் உன் பக்கத்தில் நிற்கிறார்..' என்று பொருமித் தவித்தாள்..
'அப்போ கம்மாண்டர் என்ன உன்னோட ஆளா..?' என்று நந்தினியின் மனம் கேட்டதில் திணறிப் போனாள்..
"யு நோ உத்ரா.. எங்க பாஸீக்கு இந்த ஹோட்டலில் ஸ்பெசலா ரூம் இருக்கு.. இவரோட பேமிலிக்குன்னு ஸ்பெசல் காட்டேஜ்.. இங்கேன்னு மட்டுமில்லை.. பாஸோட யாழ் ஹோட்டல்ஸ் எல்லாத்திலயும் அப்படித்தான்.. பாஸோட ஸ்பெசல் ரூமையும் காட்டேஜையும் யாரும் ஆக்குப்பை பண்ண மாட்டாங்க.."
ரவிச்சந்திரனைப் பற்றி உத்ராவுக்குத் தெரியாத விவரங்கள் தனக்குத் தெரியும் என்ற ரீதியில் பெருமைப் பட்டுக் கொண்டாள் நந்தினி..
"ஈஸிட்..?"
நந்தினி சொன்னதிற்கு தலையாட்டி இளநகை பூத்த உத்ரா வினித்துடன் அறைக்குள் போக முயன்றாள்..
"ஓகே பாஸ்.. ஸீ யு.." என்றபடி அவர்களைத் தொடரப் போன நந்தினியைப் பிடித்து இழுத்து நிறுத்திய ரவிச்சந்திரன்..
"நீ எங்கே போகிற..?" என்று அதட்டினான்..
"ரூமுக்கு.. உத்ராகிட்டப் பேச நிறைய மேட்டரிக்கு பாஸ்.. அவகூடப் பேசனும்.. குளித்து டிரஸ் மாத்தி ரெஸ்ட்  எடுக்கனும்.. அப்புறமா ஊர் சுற்றப் போகனும்.." அடுக்கினாள் நந்தினி..
"அறைஞ்சேன்னா பாரு.. இப்படித்தான் எதையாவது ஏடா கூடமா பண்ணி வைப்பேன்னு கெஸ் பண்ணி நானும் கூடவே வந்து தொலைத்தேன்.. நான் நினைத்தது சரியாத்தான் இருக்கு.. நீ என்ன பண்ணி வைப்பேன்னு நான் நினைத்தேனோ அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கிற.. இப்படி வா.." என்றவன்..
அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று புரியாமல் தள்ளி நின்றிருந்த உத்ராவிடம்..
"ஓகே.. நீங்க குளித்து பிரஷ்ஷாகி ரெஸ்ட் எடுத்ததும் போன் பண்ணுங்க.. நாம் பிரேக் பாஸ்டை முடித்துட்டு கோழிக்கோடை சுற்றிப் பார்க்கப் போகலாம்.." என்று கையாட்டி விடை கொடுத்தான்..
"தேங்க் யு சார்.." உத்ராவும் வினித்தும் தலையாட்ட திரும்பிப் பார்க்காமல் நந்தினியை இழுத்தபடி நகர்ந்தான் ரவிச்சந்திரன்.. திரும்பிப் பார்த்த நந்தினி..
"டோர் குளோஸாகிருச்சு சார்.." என்று புலம்பினாள்..
ரவிச்சந்திரன் அவளைப் பார்த்த பார்வையில் அடித்துத் துவம்சம் பண்ணிவிடும் கொலைவெறி தெரிந்தது..
"ஏன் உனக்குக் காதல் வர மாட்டேங்குதுன்னு இப்பத்தான் தெரியுது.."
தலையில் அடித்துக் கொண்டு அவளைத் தள்ளிக் கொண்டு போனவன் அவளுக்காக புக் செய்யப்பட்டிருந்த அறையின் முன்னால் அவளை கதவைச் சுட்டிக் காட்டினான்..
"இந்த டோரைத் திறந்து உள்ளே போ.. இதுதான் உனக்காக அலாட் பண்ணியிருக்கிற ரூம்.."
"நான் தனியா இருக்கனுமா..?"
"வேணும்ன்னாச் சொல்லு.. நான் உன்னுடன் தங்கிக்கறேன்.."
அவன் கண்களைச் சிமிட்டியதில் அவளுக்கு ஜிவ்வென்று ஆகிப் போனது.. அவளை மயக்கும் மன்மதனைப் பார்த்த அவளது பார்வையில் அவன் மயங்கிப் போனான்.. அவனுடைய அனைத்து அடையாளங்களையும் மறந்து ஒரு பெண்ணின் மனதை ஜெயிக்கத் துடிக்கும் ஆண்மகனாக அவள் முன் நின்றான்..
அவள் காணக்கிடைக்காத கற்பகத்தருவைப் போன்றவள்.. உலகம் வியக்கும் இளம் கோடிஸ்வரத் தொழிலதிபனிடம் வாயாடும் உணர்வில்லாமல் ஆணழகன் ரவிச்சந்திரனிடம் வாயாடும் உணர்வோடு மயங்கித் தவிப்பவள்.. அவளுக்கு அவனுடைய உயரமும் பணமும் ஒரு பொருட்டல்ல.. அவளைக் கவர்வது அவன் மட்டுமே.. அவனுடைய அதீத கம்பீரமான ஆண்மை நிரம்பிய அழகு மட்டுமே..
"நினைப்புத்தான் உங்களுக்கு.." வெட்கச் சிகப்புடன் முகம் மிளிர நாணத்துடன் நந்தினி சொன்ன அந்த வார்த்தைகள் நிரம்பிய அந்த இனிய மணித்துளிகள் அரிதானவை என்று நினைத்துக் கொண்டான் ரவிச்சந்திரன்..
பொக்கிசமாய் பத்திரப் படுத்த வேண்டியவை.. இதுபோன்ற தருணங்கள் அரிதாகத்தான் வாய்க்கும்.. அவை அரிதானவையாக இருப்பதினால்தான் அழகு நிரம்பியவையாக இருக்கின்றன..
அரிதான எதுவுமே அழகுதான்..
"உன் நினைவுதான் எனக்கு.. இது உனக்குத் தெரியாதா..?" அவன் குழைந்தான்..
"ப்ளீஸ் பாஸ்.. நான் உத்ரா ரூமிலே அவகூட ஸ்டே பண்ணிக்கிறேனே.." நந்தினி கெஞ்சினாள்..
"நீயெல்லாம் இன்ஜினியரிங் முடித்திருக்கேன்னு வெளியில் சொல்லிக்காதே.." தலையில் அடித்துக் கொண்டான் ரவிச்சந்திரன்..
"இதென்ன பாஸ் அநியாயமா இருக்கு.. ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணியிருக்கிற பிரண்ட் கூட தங்கியிருக்கனும்னு சொன்னா அது ஒரு குத்தமா..?" சண்டைக்கு கிளம்பினாள் நந்தினி..
"முதலில் நீ உள்ளே போ சொல்றேன்.. நான் இந்த ஹோட்டலோட ஓனர்.. காரிடாரில் நின்று உனக்கு விளக்கம் சொல்லிக்கிட்டிருக்க முடியாது.."
அறைக் கதவைத் திறந்து அவளை உள்ளே தள்ளிக் கொண்டு போனான் ரவிச்சந்திரன்.. மறக்காமல் அறைக் கதவையும் தாழிட்டான்..
"ஏன் டோரை லாக் பண்றீங்க..?" சந்தேகமாக அவனைப் பார்த்தாள் நந்தினி..
"ஊம்..? உன்னை ஸ்வாஹா பண்ணப் போகிறேன்.. ஆரம்பிக்கவா..?" அவளை மேலும் கீழுமாக மேய்ச்சல் பார்வை பார்த்தான் ரவிச்சந்திரன்..
"பாஸ்.." கலவரத்துடன் பின்னால் நகர்ந்தாள் நந்தினி..
"இதெல்லாம் தெரியுது.. புதிதாய் கல்யாணமாகி ஹனிமூன் கொண்டாட வந்திருக்கிற கப்புள் ஸ்டே பண்ணியிருக்கிற ரூமிலே கூட ஸ்டே பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறது எவ்வளவு பெரிய மடத்தனம்ன்னு மட்டும் தெரிய மாட்டேங்குது.. இம்சை.."
"இம்சையா..? யாருக்கு..?"
"உன் பிரண்டுக்குத்தான்.. வேற யாருக்கு.. உன்னுடன் ஸ்டே பண்றதுக்கா அவங்க வய நாட்டுக்கு வந்திருக்காங்க..?"
'இதில இப்படியொன்னு இருக்கா..?'
பலத்த சிந்தனையுடன் உட்கார்ந்து விட்ட நந்தினியைப் பார்க்கப் பார்க்கச் சிரிப்பாக வந்தது ரவிச்சந்திரனுக்கு.. ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்த நந்தினி முறைத்தாள்..
'என் பிழைப்பைப் பார்த்தா இவனுக்குச் சிரிப்பா இருக்கா..?'
"ஹேய்.. ஏன் இப்படி முறைக்கிற..?"
"நீங்க ஏன் இப்படி சிரிக்கறீங்க..?"
"நீ அடிக்கிற லூட்டியைப் பார்த்தா சிரிப்பு வராம என்ன செய்யும்..? ஹனிமூன் கப்புள் கூட ஸ்டே பண்ணப் போறாளாம்.. வெளியில் சொல்லிராதே.. நான் சந்தேகப் பட்டுக் கேட்டதை மத்தவங்களும் கேட்டு வைச்சிறப் போறாங்க.. ஹா.. ஹா.."
"சிரித்தது போதும் பாஸ்.."
முகச் சிணுக்கத்துடன் சிணுங்கினாள் நந்தினி.. அவளைக் கட்டிப் பிடித்து நெற்றியில் முத்தம் பதிக்க வேண்டும் போலத் தோன்றியதை கட்டுப் படுத்திக் கொண்டு அறைக் கதவைத் திறந்து டாட்டா சொன்னான் ரவிச்சந்திரன்..
"டோரை குளோஸ் பண்ணிக்க.."
அவனுடைய அக்கறையில் மனம் நெகிழ்ந்தவளாக அறைக் கதவைப் பூட்டித் தாழிட்டு விட்டுத் தன் பேக்கிலிருந்த மாற்றுடைகளை சுவர் அலமாரியில் அடுக்க ஆரம்பித்தாள் நந்தினி.. இதற்கு முன்னால் 'யாழ்' ஹோட்டலில் அவளும் ரவிச்சந்திரனும் தங்கியிருந்த போது நடந்த நிகழ்வுகளை மனம் அசைபோட்டது.. புத்தாண்டு தொடங்கும் இரவுக் கொண்டாட்டத்தில் அவளும் ரவிச்சந்திரனும் நடனமாடிய நொடிகள் நினைவுக்கு வந்ததில் அவளுக்குத் தனிமை பிடித்துப் போனது.. கட்டிலில் கண்மூடி விழுந்து கோழிக்கோடில் அவனும் அவளும் சுற்றிய அந்த நாள்களை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள்..
நினைவுகள் சுகமாக இருந்ததில் அப்படியே தூங்கிப் போனாள்.. காதருகில் கிணிகிணியென்ற இனிய ஓசையுடன் அவளை அழைத்த செல்போன்..
"ஏய்ய்.. சோம்பேறி.." என்று அவளை எழுப்பி விட்டது..
'சோம்பேறியா..? நானா..?' என்று கோபம் கொள்ள வாய் திறந்தால்..
"ஹாவ்.." என்ற கொட்டாவி முன்னால் வந்து காரியத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியது..
"சோம்பேறிங்கிறதை அப்படியே புரூவ் பண்ற..? உன்னை நம்பி வந்த உன் பிரண்ட்கூட ஊர் சுற்றப் போற உத்தேசமில்லையா..?"
ரவிச்சந்திரனின் கேலியில் அரக்கப் பறக்க எழுந்து குளித்து.. தலையை ஏனோ தானோ என்று சீவிக் கொண்டு உத்ராவை அழைக்க ஓடப் போனவளை தடுத்து நிறுத்தியது செல்போன்..
"என்ன பண்ணிக்கிட்டு இருக்க..?"
"உத்ராவைக் கூப்பிடப் போய்க்கிட்டு இருக்கேன் பாஸ்.."
அதற்குள் தயாராகி உன் தோழியைக் கூப்பிடப் போய் கொண்டு இருக்கிறாயா என்ற பாராட்டுதலை அவள் எதிர்பார்த்தால்.. அவனோ..
"தத்தி.." என்ற பட்டத்தைக் கொடுத்தான்..
"தத்தையா..?"
"அது கிளி..! மலையாளத்தில கிளியை தத்தைன்னு சொல்லுவாங்க.. இது தத்தி.. தமிழில் இதை என்னன்னு சொல்லுவாங்க.. சொல்லு.."
அவன் பாடம் எடுத்ததில் கடுப்புக் கிளம்பியதில் அவள் நகத்தைக் கடித்துத் துப்ப ஆரம்பித்தாள்.. மறுமுனை நகத்தைக் கடிக்காதே என்று அதட்டியது..
'டெர்ரர்..! எல்லாத்தையும் கண்டு பிடிச்சுருவான்..'






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -142
எண்ணியிருந்தது ஈடேற -142
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-142.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-142.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy