எண்ணியிருந்தது ஈடேற -141

141 அவனுடைய பிரியம் கலந்த பார்வை நந்தினியை ஈர்த்தது.. அதற்கு முன்பும் அவன் அப்படிப் பார்த்திருக் கிறான்தான்.. அப்போதெல்லாம் ஈர்க்...


141


அவனுடைய பிரியம் கலந்த பார்வை நந்தினியை ஈர்த்தது.. அதற்கு முன்பும் அவன் அப்படிப் பார்த்திருக் கிறான்தான்.. அப்போதெல்லாம் ஈர்க்கப் பட்டதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தவள் இப்போது விழிகள் பளபளக்க அவனைப் பார்த்தாள்.. அவன் விழிகள் மின்னின..
"என்ன்ன்...ன..?" அவன் புருவங்கள் உயர்ந்து இறங்கின..
"பாஸ்.." நந்தினி கிறங்கித் தடுமாறினாள்..
ரவிச்சந்திரனை அந்தக் கிறக்கம் உற்சாகப் படுத்தியது.. மயக்கத்தை மறைக்கத் தெரியாத
அந்தப்பேதைப் பெண்ணின் மீதான காதல் அவனை அலைக்கழித்தது.. வா.. என்னிடம் வந்து விடு.. என்று இழுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் போல கைகள் பரபரத்தன..
நந்தினியிடம் நெருங்கி நின்றான்.. அவள் தள்ளிப் பின் வாங்கவில்லை.. அவளது முகத்தை உராயும் அவனது சட்டையிலிருந்து வந்த இனிமையான நறுமணத்தை முகர்ந்து மயங்கி விழிகளை மூடினாள்.. அப்படியே அவன் மார்பில் சாய்ந்து விட வேண்டும் போல மனம் அலைபாய்ந்தது.. அதன் மீதான ஆசை அதிகரித்ததில் அவள் தடுமாறினாள்.. இந்தத் தடுமாற்றம் புதிதல்ல என்றாலும் கட்டுப்படுத்த முடியாமல் அவன் கைகளில் புகுந்து கொள்ளச் சொல்லும் இந்தத் தடுமாற்றம் அவளுக்குப் புதிதுதான்..
அவனைக் கட்டிக் கொள் என்றது மனது.. விட்டு விலகு என்று எப்போதும் அறிவுறுத்தும் அவளது அறிவு எதுவும் சொல்லாமல் மௌனம் சாதித்தது.. அது ஏனென்றும் அவளுக்குப் புரியவில்லை.. அது குறித்த ஆராய்ச்சியிலும் அவள் இறங்கவில்லை..
'நானா இப்படி நினைக்கிறேன்..?'
அவள் பதறிப் போனாள்.. அவன் கைகளில் புதிதாக அவள் புகுந்து விடப் போவதில்லை.. அவன் மார்பில்
முகம் புதைப்பதும் அவளுக்குப் புதிதல்ல.. அவன் மீதான அவளுடைய மயக்கமும் புதிதல்ல.. ஆனால் இன்று வந்திருக்கும் இந்த மயக்கம் புதிது..
'இன்று வந்த இந்த மயக்கம்..
              என்னை எங்கெங்கோ
     கொண்டு செல்லுதம்மா..'
புதிதாக வந்திருக்கும் தளர்ச்சியுடன் கண்மூடினாள் நந்தினி.. அவள் தோள்களைத் தொட்டிருக்கும் ரவிச்சந்திரனின் கரங்கள் எந்த நொடியிலும் அவள் முதுகின் மீது பரவி இறங்கி அவளைத் தன்னோடு அணைத்துக் கொள்ளக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் அவள் மனம் படபடத்தது..
அவள் எண்ணியது ஈடேறியிருக்கும்தான்.. அவள் தோளில் பதிந்திருந்த அவனது கரங்கள் இறுக்கமாக பதிந்து அவள் முதுகில் இறங்க ஆரம்பித்தனதான்.. வினித்தும் உத்ராவும் இவர்கள் இருவரையும் கவனிக்காத மோன நிலையில் இருந்தார்கள்தான்.. ரவிச்சந்திரன் நந்தினியைக் கட்டியணைத்திருந்தால் அவர்கள் இருவரும் இவர்களைக் கவனித்திருக்க மாட்டார்கள்தான்.. ரயில் நிலையத்தில் யாருமில்லைதான்.. இறுக்கமான அணைப்பும் ஆழ்ந்த முத்தமும் சாத்தியப் பட்டிருக்கக் கூடும்தான்..
ஆனால்.. வில்லாதி வில்லனாக..
"கூ.." என்ற கூவலுடன் ரயில் ஒன்று வந்து நின்று சந்தடியில்லாத ரயில் நிலையத்தில் சளசளப்பையும் பரபரப்பையும் உற்பத்தி செய்தது..
எங்கிருந்துதான் வந்தார்களோ.. வந்து நின்ற ரயிலில் ஏறவும், இறங்குபவர்களை வரவேற்கவுமான கூட்டம் குவிந்து விட்டது.. அந்தக் கூட்டத்துடன் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளின் கூட்டமும் சேர்ந்து கொண்டதில் அணைத்து நின்ற இரண்டு ஜோடிகளும் பிரிந்து விலகி ரயில் நிலையத்தை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தார்கள்..
அப்போதுதான் நந்தினியின் நினைவு வந்ததைப் போல..
"நந்தினி.." என்று வந்து ஒட்டிக் கொண்டாள் உத்ரா..
தோழியின் மீது கொண்டிருந்த மனத்தாங்கல் வெயில் கண்ட பனித்துளி போல மறைந்து விட..
"இப்போதுதான் என் நினைவு வந்ததா..?" என்று கோபித்துக் கொண்டாள் நந்தினி..
"மறந்தால்தானே நினைக்கிறதுக்கு..?" செண்டி மென்டாய் கவிழ்த்தாள் உத்ரா..
"ஹ..! யாரிடம் லவ் டயலாக்கை விடற..? இதுக்கெல்லாம் மயங்கற ஆள் நானில்லை.."
"வேற எதுக்கு மயங்குவ..? ரவி சாரோட புருவம் உயர்த்துகிற மேனரிசத்துக்குத்தான் மயங்குவியா..?"
ஆழ்ந்த குரலில் கேட்டாள் உத்ரா.. மருண்டு போய் தோழியைப் பார்த்தாள் நந்தினி..
'இதை எப்படி இவள் கண்டு பிடித்தாள்..?' என்ற மருட்சி அவள் விழிகளில் நிரம்பியிருந்தது..
"இதுக்கெல்லாம் வெற்றிலையில் மை தடவி ஜோசியமா பார்க்கனும்..? அவரை நேருக்கு நேராப் பார்க்கவே நீ பயப்படற.. அவரோட இமைகள் அசைஞ்சாலே அலருகிற.. அவர் புருவங்களை உயர்த்திட்டா அவ்வளவுதான்.. எபௌட்டொன் போட்டு புறமுதுகு காட்டி திரும்பி நின்னுக்கிற.. என்னதாண்டி நடக்குது..?"
"அது என்னென்னவோ நடக்குதுடி உத்ரா.."
மைண்ட் வாய்ஸில் பேசுவதாக நினைத்துக் கொண்டு நந்தினி சவுண்டு வாய்ஸில பேசிவிட 'ஜெர்க்'கானாள் உத்ரா..
"என்னது..?"
தூக்கிவாரிப் போட அவள் கேட்டதில் தன்னுணர்விற்கு வந்த நந்தினி சவுண்டு வாஸ்ஸில் பேசி விட்டதில்..
'சவுண்டு வாய்ஸில பேசிட்டேன் போல இருக்கே..' என்று உத்ராவை விட 'ஜெர்க்' ஆனாள்..
"ஏய்ய்.. கள்ளி.. இங்கே என்னதான் நடக்குது..?" உத்ரா குடைந்தாள்..
"நீயும், நானும் நடக்கிறோம்.. வினித்தும் பாஸீம் நடக்கிறாங்க.. மற்றும் இந்த ஜங்சனில் இருக்கிறவங்க எல்லோரும் நடக்கிறாங்க.. நீ வாம்மா.. மின்னல்..!"
நந்தினியின் லூட்டியில் சிரித்து விட்டாள் உத்ரா..
"நீ இருக்கியே.."
தோழியை செல்லமாக அடித்து விட்டு அணைத்துக் கொண்டாள்.. வினித்துடன் நடந்து கொண்டிருந்த ரவிச்சந்திரன் திரும்பிப் பார்த்தான்.. உத்ராவின் அணைப்பில் இருந்த நந்தினியை அவன் உறுத்துப் பார்த்ததில்..
"நான் உன்னை ஹக் பண்ணிக்கிறதில உன் பாஸீக்கு என்னடி அப்ஜெக்சன்.." என்றாள் உத்ரா..
'இவன் என்ன கழுதைக்கு இப்படிப் பார்த்து என்னை மாட்டி விடறான்...' மனதுக்குள் ரவிச்சந்திரனைத் திட்டியபடியே..
"ஹி.. ஹி.. அப்ஜெக்சனாவது ஒன்னாவது.. நீயா எதையாவது இமாஜின் பண்ணிக்காதே.." என்றாள் நந்தினி..
"அதுக்கு நீயேண்டி ஒரு மார்க்கமா சிரித்து வைக்கிற..?"
ரவிச்சந்திரனை விடத் தீர்க்கமாக பார்த்து வைத்தாள் உத்ரா.. நந்தினி திருதிருத்து வைத்ததில்..
"ஏதோ இருக்கு.. அது என்னன்னுதான் தெரிய மாட்டேங்குது.." என்றாள்..
"செஞ்சிக்குப் போனதும் வெத்தலையில் மைதடவி ஜோசியம் பாரு.." என்று அலட்சியமாக சொல்வதைப் போலக் காட்டிக் கொண்டு.. அப்போதைக்கு எஸ்கேப் ஆனாள் நந்தினி..
'கிரேட் எஸ்கேப்..' அவள் மனம் தன்னைத்தானே சிலாகித்துக் கொண்டது..
பிரிட்டிஷ்காரர்களுக்கு கடுக்காய் கொடுத்துத் தப்பிய நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ்கூட இப்படித் தன்னைத் தானே சிலாகித்துக் கொண்டிருக்க மாட்டார்..
ரவிச்சந்திரனின் காரில் எப்போதும் போல முன் பக்கத்து சீட்டில் இயல்பாக ஏறி உட்கார்ந்து விட்டாள் நந்தினி.. உத்ராவும் கூட இருக்கிறாள் என்ற உணர்வில் அவசரமாய் அவள் கீழே இறங்குவதற்குள் காரில் ஏறி விட்ட ரவிச்சந்திரன்..
"ஏன் இறங்கற..?" என்று கடிந்து கொண்டான்..
"உத்ரா.." இழுத்தாள் நந்தினி..
"அவங்களுக்கென்ன..?"
"இல்லை.. அவளும் நானும் பின் சீட்டில் உட்கார்ந்துக்கலாம்ன்னு.."
ரவிச்சந்திரன் பார்த்த பார்வையில் நெருப்புப் பொறி பறந்தது.. இப்போதைய அக்கினி பார்வை எதற்கானது என்று தெரியாமல் நடுங்கிப் போனாள் நந்தினி..
"உத்ராவும் வினித்தும் ஹனிமூன் கப்புள்.. நியு மேரிட்.. அவங்களை முன் சீட்டிலும் பின்சீட்டிலுமாக பிரித்து உட்கார வைத்துட்டு நீ உன் பிரண்ட் பக்கத்தில் உட்கார்ந்துக்குவியா..? எப்படி இப்படியெல்லாம் திங் பண்ணற..? உன்னை நம்பி ஹனிமூன் கொண்டாட இவங்க கிளம்பி வந்திருக்காங்க பாரு.. இவங்களோட மனோ தைரியத்தை பராட்டித்தான் ஆகனும்.. அசத்தற போ.. ஏங்க உத்ரா.. நிஜமாவே உங்க பிரண்ட் காலேஜ் பர்ஸ்ட்டா..? கோல்டு மெடலிஸ்டா..?" மட்டம் தட்டினான் ரவிச்சந்திரன்..
"ஹலோ பாஸ்.. அவதான் எவிடென்ஸீக்கு செல் போனில் படம் பிடிச்சுட்டு வந்து காண்பிச்சாள்ல.." ரோசத்துடன் மூக்கை விடைத்தாள் நந்தினி..
"உன் விசயத்தில என்னாலே எந்த எவிடென்ஸையும் நம்ப முடியாது நந்தினி.. நீ அப்பேற்பட்ட கேட்டகிரி.."
ரவிச்சந்திரன் காரைக் கிளப்பினான்.. நந்தினி உத்ராவும் வினித்தும் காருக்குள் இருக்கிறார்கள் என்பதையே மறந்து போனவளாக ரவிச்சந்திரனுடன் அனல் பறக்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.. அவனுடைய அத்தை மகள் அஜந்தா எந்த கேட்டகிரி
என்ற கேள்வியை அவன் முன் வைத்தாள்.. அவளை விட நந்தினி ஒன்றும் குறைந்து போய்விடவில்லையென்று வழக்கு வைத்தாள்.. அஜந்தாவை ரவிச்சந்திரன் ஒன்றும் இழுக்கவில்லையே என்று அவன் சொன்னான்.. அப்படியென்றால் அவளை இழுக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் நினைக்கிறானா என்ற கேள்வியை நந்தினி எழுப்பினாள்.. இதுவரை அப்படியொரு நினைவு ரவிச்சந்திரனுக்கு வந்ததில்லை எனவும் நந்தினி ஆசைப்படுவதால் அதை நினைத்துப் பார்ப்பதாகவும் ரவிச்சந்திரன் உறுதியளித்தான்.. இதற்காகத்தானே இந்த பாலகுமாரன் ஆசைப்படுகிறான் என்று நந்தினி எகிறினாள்.. ஆசைப்படுவது நந்தினி.. ரவிச்சந்திரனல்ல என்று அவன் அறிவுறுத்தினான்..
"ஆமாமாம்.. நீங்களும் உங்க அத்தைமகளும் கொஞ்சிக் குழாவனும்னுதான் நான் ஆசைப்பட்டுக்கிட்டு இருக்கேன்.."
நந்தினி கழுத்தை ஒரு வெட்டு வெட்டித் திரும்பினால் எதிரே 'யாழ்' ஹோட்டல் தெரிந்தது..
"அதுக்குள்ளே ஹோட்டல் வந்திருச்சா..?"
'ஙே..' என்று விழித்தாள்..
"நம்மிடம் வர ஹோட்டலுக்கு என்ன காலா இருக்கு..? நாமதான் காரில ஹோட்டலுக்கு வந்திருக்கோம்.." அதற்கும் ஒரு ஷொட்டு வைத்தான் ரவிச்சந்திரன்..
"சான்ஸ் கிடைச்சாப் போதுமே.. மட்டம் தட்டி உட்கார வைச்சிருவீங்களே.. எப்போ, எப்போன்னு காத்திருப்பீங்களே..?" உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள் நந்தினி..
"நீதான் சான்ஸை அள்ளியள்ளிக் கொடுக்கிற அட்சய சுரபியாய் இருக்கியே.." புருவங்களை உயர்த்தி இறக்கி அவளை கிளீன் போல்டாக்கினான் ரவிச்சந்திரன்..
"ஆனாலும் இது அநியாயம் பாஸ்.."
"எது..?"
"சண்டை போட்டுக்கிட்டே ஹோட்டலுக்கு வந்து நிற்கிறது.."
"நீ சண்டை போட்டுக்கிட்டு இருந்த.. நான் காரை ஓட்டிக்கிட்டு இருந்தேன்.. கார் ஹோட்டலுக்கு வந்தாச்சு.. தட்'ஸ் ஆல்.."
"ஆனாலும் பாஸ்.. நீங்க அநியாயத்துக்கு சூப்பர் மேனா இருக்கீங்க.."
குறைபடுவதைப் போல பிரமித்த நந்தினியின் பேச்சில் கவரப்பட்டவனாக சில்லென்ற ஓர் பார்வையைச் செழுத்தினான் ரவிச்சந்திரன்..
'ஹப்பா.. அக்கினி குளிர்ந்திருச்சு..'
அடுத்த பாட்டுக் கிளம்பச் சற்றுத் தாமதமாகும் என்ற கனிப்பில் இடையில் கிடைத்த இளைப்பாறுதலில் நிம்மதியானாள் நந்தினி..
காரை விட்டு இறங்கியவள் பின்சீட்டிலிருந்து இறங்கிய உத்ராவையும் வினித்தையும் பார்த்து விட்டு..
"அச்சச்சோ.." என்று கையை உதறினாள்..
"இப்ப என்ன ஆச்சு..?" விசாரித்தான் ரவிச்சந்திரன்..
'நல்லவேளை.. புருவங்களை உயர்த்தலை.. இல்லைன்னா வினித் அண்ணா முன்னாடி இவன்கிட்ட மயங்கிப் போய் நின்னு மாட்டியிருப்பேன்..' தற்காலிகமாக நிம்மதியானாள் நந்தினி..
அந்த நிம்மதிக்கு எத்தனை மணித்துளிகள் உத்தரவாதமிருக்குமென்றுதான் அவளுக்குத் தெரியாதே.. ரவிச்சந்திரன் எந்த நொடியில் புருவங்களை உயர்த்தி வசீகரித்து வைப்பான் என்பதை யாரறிவார்..?
'இவனே அறிய மாட்டான்..'
என்னதான் அவன் புருவங்களை உயர்த்தும் போது மயங்கி விடக் கூடாது என்று மனப்பாடம் பண்ணி மனதுக்குள் நெட்டுரு போட்டுக் கொண்டாலும் அந்த மன்மதன் மலரம்பைத் தொடுக்க கரும்பு வில்லில் நாணேற்றுவதைப் போல அவன் புருவங்களை உயர்த்தி இறக்கி விட்டால் அவள் அனைத்தையும் மறந்து ஆவென்று மயங்கி நின்று விடுகிறாளே..
'ஆல்ரெடி உத்ரா கண்டு பிடிச்சுத் தொலைச்சுட்டா.. வினித் அண்ணாதான் பாக்கி.. இந்த ஓட்டைவாய் உத்ரா அண்ணாவிடம் போட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும்..'
நந்தினி மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்... இதை மட்டும் அவள் வாய் விட்டுச் சொல்லியிருக்க வேண்டும்.. வினித்தும் ரவிச்சந்திரனும் அங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் என்கூட நினைத்துப் பார்க்காமல்..
'யாருடி ஓட்டை வாய்..? நீயா இல்லை நானா..? ஒரு ஓட்டை வாயே ஓட்டை வாயைப் பற்றிப் பேசுகிறதே.. அடடே.. மூணு புள்ளி.. அண்ட் ஆச்சரியக்குறி கவிதையெல்லாம் உனக்குத்தாண்டி பொருந்தும்.. நீ எனக்குப் பட்டம் கட்டறயா..?' என்று கச்சை கட்டிக் கொண்டு கிளம்பியிருப்பாள் உத்ரா..
அவள் வினித்தின் முன்னால் கச்சை கட்டுவதைப் பற்றி நந்தினிக்கு யாதொரு கவலையும் இல்லை.. அங்கே ரவிச்சந்திரனும் இருக்கிறானே..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -141
எண்ணியிருந்தது ஈடேற -141
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-141.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-141.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy