எண்ணியிருந்தது ஈடேற -140

140 வினித்தும் , உத்ராவும் ரயிலை விட்டு இறங்குவதற்கு நந்தினி ரயிலுக்குள் பாய்ந்து உத்ராவைக் கட்டிக் கொண்டாள்.. பதிலுக்கு அவளும் நந்...


140


வினித்தும், உத்ராவும் ரயிலை விட்டு இறங்குவதற்கு நந்தினி ரயிலுக்குள் பாய்ந்து உத்ராவைக் கட்டிக் கொண்டாள்.. பதிலுக்கு அவளும் நந்தினியைக் கட்டிக் கொள்ள தோழிகளின் அளவளாவுதலைக் கலைக்காமல் தனியொரு மனிதனாக வினித் மட்டும் பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தான்..
"நீதான் வேலை செய்ய மாட்டேன்னா உன் பிரண்டையும் வேலை செய்ய விடாமல் டிஸ்டர்ப் பண்ணுவியா..?"
ரவிச்சந்திரனின் அதட்டலில் தன்னிச்சையாக விலகி நின்ற நந்தினி அவனைப் பார்த்தாள்.. கடுகடுவென முகத்தில் கடுமையை படற விட்டிருந்தான்..
'எதுக்காக கோவிச்சுக்கிறான்..?' நந்தினிக்கு விளங்கவில்லை..
அதற்குள் உத்ரா மீதமிருந்த பைகளைக் கைப்பற்றி ரயிலை விட்டு இறங்கியிருந்த வினித்திடம் நீட்டினாள்.. மனைவியின் கடமையுணர்வை மெச்சியவனாக இணக்கமாக சிரித்தான் வினித்... புரிதலுடன் கூடிய பார்வையை அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டார்கள்.
"எல்லா பேக்ஸையும் எடுத்தாச்சா..?"
"எடுத்தாச்சுன்னுதான் நினைக்கிறேன்.. ஒன் மினிட் ப்ளீஸ்.. சீட்டை ஓர்தரம் செக் பண்ணிட்டு வந்துடறேன்.."
"அதை நான் செய்துக்குவேன்.. நீயும் நந்தினியும் ரயிலை விட்டு இறங்குங்க.."
பொறுப்புள்ள கணவனாக வினித் மறுபடியும் ரயிலில் ஏறி அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளின் பக்கத்தில் ஏதேனும் பைகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்து விட்டுத் திரும்பி வந்தான்..
"தேங்க்ஸ்.." நன்றி கலந்த பெருமிதத்துடன் சொன்னாள் உத்ரா..
"போதும்டி.. நான் ஒருத்தி இங்கேயிருக்கேங்கிறதை மறந்துட்டு நீ உன் ஹஸ்பெண்ட்கிட்ட மட்டும் உருகி வழியாதே.." பொறாமையுடன் உத்ராவின் தோளில் கை வைத்து தன் பக்கமாக திருப்பிக் கொண்டாள் நந்தினி..
"ஹேய்.. லக்கேஜை தனியா இறக்கிக்கிட்டு இருக்காருடி... அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்ல வேணாமா..?" தோழியை சமாதானம் செய்தாள் உத்ரா..
"அதெல்லாம் தெரிந்திருந்தா உங்க பிரண்ட் எங்கேயோ போயிருப்பாளே.. இப்படி ஏன் இருக்கப் போகிறா..?"
ரவிச்சந்திரன் ஷொட்டு வைக்க.. வினித்தின் முன்னால் இப்படிப் பேசுகிறானே என்று முகம் வாடினாள் நந்தினி.. அதை கண்டு கொண்ட உத்ரா தோழியின் உள்ளங்கையைப் பிடித்து ஆதரவாக அழுத்திக் கொடுத்து விட்டு..
"என் பிரண்டு கெட்டிக்காரி சார்.." என்று பரிந்துரைத்தாள்..
"நீங்கதான் அப்ரிசியேட் பண்ணிக்கனும்.. பிரண்டாச்சே.. விட்டுக் கொடுக்காமல்தான் பேசுவீங்க.." அசட்டையாகத் தோள்களைக் குலுக்கினான் ரவிச்சந்திரன்..
"விட்டுக் கொடுக்கனும்ங்கிற அவசியமே இல்லை சார்.. இவதான் காலேஜ் பர்ஸ்ட்.. கோல்டு மெடல் வாங்கிப் பாஸ் பண்ணியிருக்கா.. தெரியுமா உங்களுக்கு.."
உத்ரா சொன்ன செய்தியில் நந்தினி அப்படியே நின்று விட்டாள்.. அவளின் இன்ப அதிர்ச்சியைக் கேலியாக பார்த்த ரவிச்சந்திரன் கிண்டல் புன்னகையுடன்..
"பாருங்க.. நீங்க சொன்ன நியுஸை உங்க பிரண்டாலேயே நம்ப முடியலை.. ஆர் யு ஷ்யூர்..? கன்பர்மா தெரியுமா.. இல்லை.. பிரண்ட் மேல இருக்கிற ஓவர் பிரியத்தினால நீங்களா எதையாச்சும் சொல்கிறீங்களா..?" என்று உத்ராவிடம் கேட்டான்..
"எப்படி நீங்க இப்படிச் சொல்லலாம்..?" ரவிச்சந்திரனிடம் சண்டைக்குக் கிளம்பினாள் நந்தினி..
"நீ பாஸ் பண்ணியிருப்பேங்கிறதே டவுட்.. இதில காலேஜ் பர்ஸ்ட், கோல்டு மெடல்ன்னு சொன்னா சிரிப்புச் சிரிப்பா வராதா..? ஹா.. ஹா.." ரவிச்சந்திரன் உரக்கச் சிரித்து கடுப்பைக் கிளப்பினான்..
"வரும்.. வரும்.." கடுப்பாகிப் போனாள் நந்தினி..
"பொறு நந்தினி பொறு.. ஆதாரத்தோடுதான் வந்திருக்கிறேன்.. சார் போட்டுத் தாக்கறதைப் பத்தித்தான் தினம்தினம் கதைகதையாய் என்னிடம் செல்போனில் கொட்டிக்கிட்டு இருக்கியே.. ஆதாரம் இல்லாம் வாய் திறப்பேனா..?" நந்தினியை உத்ரா ஆற்றுப் படுத்திக் கொண்டிருக்க..
"டிவெண்டி ஃபோர் அவர்ஸீம் செல்போனை காதை விட்டு எடுக்காம கம் போட்டு ஒட்ட வைச்சு.. வாய் வலிக்காம பேசிக்கிட்டு இருந்ததெல்லாம் என்னைப் பற்றியும், என் கொடுமைகளையும் பற்றித்தானா..?" என்று பிடித்துக் கொண்டான் ரவிச்சந்திரன்..
"ஏண்டி.. நீயெல்லாம் ஒரு பிரண்டா..? வேலை பாருடின்னு என்னை இவர்கிட்ட மாட்டி விட்டிருக்கிறது போதாதுன்னு போட்டுக் கொடுக்கிறதுக்காகவே மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸை பிடித்து வந்திருக்கிறயா..? பிசாசே..! பாருங்கண்ணா.. உங்க வொய்ப் போட்டுக் கொடுக்கிறா.." வினித்திடம் புகார் செய்தாள் நந்தினி..
"உன் பிரண்ட் ஒன்னும் போட்டுக் கொடுக்கலை.. இப்ப நீதான் அவங்களைப் பத்தி வினித்திடம் போட்டுக் கொடுக்கிற.." எரிச்சலுடன் சொன்னான் ரவிச்சந்திரன்..
எதற்காக இப்படி எரிச்சல்படுகிறான் என்று புரியாமல் திருதிருத்தாள் நந்தினி.. நீண்ட நாள்கள் கழித்து சந்தித்துக் கொள்ளும் தோழிகள் எப்படிப் பேசிக் கொள்வார்களோ அப்படித்தானே அவளும் உத்ராவும் பேசிக் கொள்கிறார்கள்..? உயிர்த்தோழியிடம் சலுகை எடுத்துக் கொண்டால் அது தவறாகி விடுமா..?
"இப்படித்தான் எதற்கெடுத்தாலும் எதையாவது சிடுசிடுன்னு சொல்லி என்ன தவறு செய்தேன், அதுதான் எனக்கும் விளங்கவில்லைன்னு என்னை புலம்ப வைக்கிறாண்டி உத்ரா.. போன ஜென்மத்தில எனக்கு மாமியாரா பொறந்திருப்பானோ என்னவோ.. வேண்டாத மருமகள் கைபட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்ன்னு எதுக்கெடுத்தாலும் குற்றம் கண்டு பிடித்து என்னை ஒரு வழியாக்கறாண்டி.." தோழியிடம் முணுமுணுப்பாக புலம்பித் தள்ளினாள் நந்தினி..
அவள் முணுமுணுப்பதைக் கவனித்து விட்ட ரவிச்சந்திரன்..
"என்னைப்பத்தி உங்க பிரண்ட் கம்ப்ளெயிண்ட் பண்றதைப் போல இருக்கே.. என்னங்க சொல்கிறா..?" என்று விசாரித்தான்..
"சொல்லிராதேடி.." முணுமுணுப்பாய் அலறினாள் நந்தினி..
"சொல்லிட்டுத்தான் வேலையைப் பார்ப்பேன்.. போவியா.." தோழிக்கு ஆறுதல் சொன்ன உத்ரா..
"எங்க முதலாளி தங்க முதலாளின்னு சொன்னா சார்.." என்று ரவிச்சந்திரனிடம் சிரிக்காமல் படு தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு உண்மை போலச் சொன்னாள்..
வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப் போல நம்பாத பார்வைபார்த்த ரவிச்சந்திரன்..
"நம்பிட்டேன்.." என்று துளிக்கூட நம்பாத குரலில் சொன்னான்..
"இதையாவது நம்புவீங்களா..?"
உத்ரா நீட்டிய செல்போனில் காலேஜின் நோட்டிஸ் போர்டில் ஒட்டப்பட்டிருந்த லிஸ்ட் இருந்தது.. அதில் முதலாவதாக நந்தினியின் பெயரும் இருந்தது.. அவள்தான் கல்லூரியின் முதல் மாணவி.. பல்கலைக் கழகத்தின் தங்கப் பதக்கத்தைப் பெறுகிறாள் என்ற விவரத்தில் புருவங்களை உயர்த்திய ரவிச்சந்திரன்..
"மெடிக்கல் மிராக்கிள்.." என்றான்..
"எஜீகேசனல் மிராக்கிள் சார்.." எடுத்துக் கொடுத்தான் வினித்..
"யெஸ்.. யெஸ்.. ஷ்யூர்.. ஷ்யூர்.. உலகத்தின் அதிசயங்களில இதுவும் ஒன்று.."
"நான் நினைத்தேன்.. நீங்க சொல்லிட்டிங்க.."
"இஸ் இட்..?"
நான் பேச நினைத்ததையெல்லாம் நீ பேசுகிறாயே தோழா என்ற பரவசப் பார்வையை பார்த்து வைத்தான் ரவிச்சந்திரன்.. அதில் புளகாங்கிதப் பட்டுப் போன வினித்..
"கூட்டணி போடறிங்களா..? இருக்கு உங்களுக்கு.." என்று தோளில் அடி வாங்கினான்..
"ஹி.. ஹி.. சும்மா ஒரு இதுக்குப் பேசிக்கிட்டோம் உத்ரா.. நாம சொன்ன வார்த்தைக்காக சார் இத்தனை நாளா நந்தினியைப் பொறுத்துக்கிட்டு இருக்கார்..
இதைக் கூடப் பேசிக் கூட்டணி போடலைன்னா எப்படி..?" சமரசம் பேச முனைந்தான் வினித்..
"என்னைப் பொறுத்துக்கிட்டு இருக்காரா..?"
நந்தினி இடுப்பில் கை வைத்து முறைத்ததில் வினித் கன்னத்தில் போட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டான்..
"வாய் தவறி வந்திருச்சுங்க.."
"அஃது.."
ஒற்றை விரலை உயர்த்தி வினித்தை எச்சரித்து விட்டுத் திரும்பிய நந்தினி ரவிச்சந்திரனின் அக்கினி பார்வையில் திகைத்துப் போனாள்..
'இப்ப என்ன தப்புச் செய்துட்டேன்னு பொசுக்கிற பார்வையைப் பார்க்கிறான்..? சுட்டெரிக்கிற அக்கினி வெயிலில தமிழ்நாட்டில வறுபடாம தப்பிச்சு கேரளாப் பக்கம் எஸ்கேப் ஆகிட்டோம்ன்னு மகிழ்ந்து போயிருந்தேன்.. அக்கினி நட்சத்திரம் முடிந்து கோடை கால வெயிலும் குறைந்து காற்றடிக்கிற ஆடி மாதத்தில ஆடிப் போயிருக்கிற அப்பா எனக்கு அழைப்புக் கொடுத்து அழைச்சுக்கிற வரைக்கும் அக்கினி நட்சத்திரத்துக் கத்தரி வெயிலில இருந்து தப்பிச்சு குளுகுளுன்னு வயநாட்டில வாழ்ந்துட்டுப் போகலாம்ன்னு நினைச்சா.. இவன் விட மாட்டான் போல இருக்கே.. கேரளத்துக் குளிரிலும் நான் பயந்து நடுங்கி வேர்த்து விருவிருத்துப் போகனும்ங்கிற பிளானோடு இருக்கான்..' மனதுக்குள் புலம்பித் தள்ளியவள்..
"பார்த்தியாடி.." என்று உத்ராவிடம் முறையிட்டாள்..
"பார்த்துக்கிட்டுத்தாண்டி இருக்கேன்..." யோசனையுடன் சொன்னாள் உத்ரா..
'என்ன கழுதைக்கு இம்புட்டு யோசனை யோசிக்கிறா..?' ஒரு மண்ணும் புரியவில்லை நந்தினிக்கு..
'இப்படி எதிர்மறைத் துருவங்களாய் அடித்துக் கொண்டிருப்பவர்களின் மத்தியில் என்னத்தை தேநிலவு கொண்டாடிக் கிழிக்கப் போகிறோம்ன்னு யோசிக்கிறாளே..'
உத்ரா வினித்தை நெருங்கினாள்.. அவளது விழிகளில் தெரிந்த சமிக்ஞையில் அவன் அவசரமாகக் குனிந்து உத்ராவுக்கு காதைக் கொடுத்தான்.. அவள் சன்னக்குரலில் கிசுகிசுப்பாய் எதையோ சொன்னாள்.. இவன் ரவிச்சந்திரனையும், நந்தினியையும் ஒர்முறை பார்த்துவிட்டு தலையை மேலும் கீழுமாக ஆட்டி வைத்தான்..
'என்னத்தை ஓதறா.. இப்பவே மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில ரிடர்ன் டிக்கெட்டை வாங்கிருங்க.. இதுககிட்டேயிருந்து எஸ்கேப் ஆகி சென்னைப் பக்கம் ஓடிப் போயிரலாம்ன்னு சொல்கிறாளோ.. வினித் அண்ணாவும் பெண்டாட்டி சொல்லைத் தட்டாத தாசனாய் ஆகட்டும்ன்னு பூம்பூம் மாடு போல தலையைத் தலையை ஆட்டறாரோ..' சம்சயம் கொண்டாள் நந்தினி..
தோழிக்கும் அவளது கணவனுக்கும் இடையில் உள்ள நெருக்கம் நந்தினிக்குள் ஏக்கத்தை உண்டு பண்ணியது.. அவளறியாத ஓர் ரகசியத்தை உத்ரா தன் கணவனிடம் பகிர்ந்து கொள்கிறாள் என்பதில் வினித்தின் மீது பொறாமை கொண்டாள் நந்தினி.. உத்ராவும் வினித்தும் சிரித்துக் கொண்ட ரகசியச் சிரிப்பில் இவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.. அவர்களுக்குள் நிலவிய இணக்கம் நந்தினிக்குப் பிடித்தமில்லாததாக இருந்தது.. உத்ரா அவளிடமிருந்து விலகிப் போய் விட்டதைப் போல உணர்ந்தாள்..
உத்ராவும் வினித்தும் ரகசியப் பேச்சை நிறுத்திய பாடாய் இல்லை.. போதும்.. பேச்சை நிறுத்துங்கள் என்று எப்படிச் சொல்வது..? பல்லைக் கடித்தபடி ரவிச்சந்திரனைப் பார்த்த நந்தினி மறுபடியும் திகைத்தாள்..
ஊடுறுவும் ஆழ்ந்த பார்வையுடன் நின்றிருந்தான் அவன்.. துளைக்கும் அவனது பார்வையில் இருந்த ஏதோ ஒன்றில் தடுமாறினாள் நந்தினி.. காதல் பார்வையில்லை அது.. காதல் பார்வையைத்தான் எப்போதும் பார்த்து வைப்பானே.. காதலையும் தாண்டிய ஏதோ ஒன்று.. அவளுக்கே அவளுக்கான செய்தி.. அவனது பார்வையில் பொதிந்திருப்பதைப் போல அவளுக்கு தோன்றி வைத்தது.. அவனது அந்தப் பார்வை சொல்லும் சேதி என்ன என்று யோசித்தாள் நந்தினி..
வினித்தும் உத்ராவும் அவர்களின் உலகத்திலிருந்து வெளியேற மனமில்லாதவர்களாக கிசுகிசுப்பான பேச்சும்.. ரகசிய சிரிப்புகளுமாக இருந்தார்கள்.. அது ரயில் நிலையம் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள் என்று நந்தினிக்குத் தோன்றியது..
ரவிச்சந்திரன் அவள் பக்கத்தில் வந்தான்.. மர்மப் பார்வையுடன் வினித் உத்ராவின் முகத்தருகே குனிந்ததைப் போல நந்தினியின் முகத்தருகே குனிந்தான்.. ஏனோ தெரியவில்லை.. அந்த நொடியில் அவன் காட்டிய அந்த நெருக்கத்தை நந்தினி விரும்பினாள்.. அவளுக்கு அது பிடித்திருந்தது..
"என்ன்ன்..?" இமைகள் படபடக்க உத்ரா வினித்திடம் பேசிய ரகசியத் தொனியில் அதட்டலாக கேட்டாள்..
"அவங்களை ஏன் அப்படி முறைச்சுப் பார்க்கிற..?" வினித் உத்ராவிடம் கிசுகிசுக்கும் அதே ரகசியத் தொனியில் கிசுகிசுத்து அவளை அசத்தினான் அந்த அசத்தல் மன்னன்..
'வாவ்..!' நந்தினியின் மனம் குதூகலித்தது..
தோழியுடன் நடந்த மறைமுக போட்டியில் அவள் வென்று விட்டதைப் போல ஒரு சந்தோசம் உண்டானது..
'நீ மட்டும்தான் உன் ஆள்கிட்ட ரகசியம் பேசி என்னைக் கடுப்படிப்பியா..? என்னிடம் ரகசியம் பேசவும் ஆள் இருக்கான்..' கெக்கலி கொட்ட வேண்டும் போல இருந்தது..
"முறைக்காம என்ன செய்வாங்களாம்...? பாருங்களேன்.. இவ என்னோட பெஸ்ட் அண்ட் பர்ஸ்ட் பிரண்ட்.. எப்பவும் எனக்கு மட்டும்தான் பர்ஸ்ட் பிரிபரன்ஸ் கொடுப்பா.. இன்றைக்கு என்னடான்னா என்னை விட்டுட்டு வினித் அண்ணாகிட்ட ரகசியம் பேசிக்கிட்டு இருக்கா.." ரகசியக் குரலில் காய்ந்தாள் நந்தினி..
"நீயென்ன அவங்களோட ஹஸ்பெண்டா..?" நிதானமாக கேட்டான் ரவிச்சந்திரன்..
"ஹஸ்பெண்டுன்னா பிரண்ட்ஸை பிரிக்கனுமா..?" நந்தினி ஆத்திரம் கொண்டாள்..
"வினித்தா உத்ராவை உன்னிடமிருந்து பிரிக்கிறார்..? உத்ராதானே உன்னை மறந்து வினித்திடம் கொஞ்சிக்கிட்டு இருக்காங்க..?"
ரவிச்சந்திரனின் அறிவுறுத்தலில் சிந்தனையான நந்தினி..
"ஆமாமில்ல.." என்றாள் குழந்தையாக..
இவள் குழந்தைதானே என்ற நினைவில் பிரியத்துடன் சிரித்தான் ரவிச்சந்திரன்..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -140
எண்ணியிருந்தது ஈடேற -140
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-140.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-140.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy