அம்மம்மா.. கேளடி தோழி...! -30

30 காற்றோடு நான் தூதுவிட்ட கவிதைகளை நீ கேட்டாயோ... ? மதிய உணவுக்குப் பின்னான வகுப்புகளில் ஏன் மனம் இறங்க மறுக்கிறது என்று.. சொக்க...


30
காற்றோடு நான் தூதுவிட்ட
கவிதைகளை நீ கேட்டாயோ...?

மதிய உணவுக்குப் பின்னான வகுப்புகளில் ஏன் மனம் இறங்க மறுக்கிறது என்று.. சொக்கும் இமைகளை கட்டுப்படுத்தியபடியே நினைத்துக் கொண்டாள் ராதிகா...
யார் கேட்டாலும்... கேட்காவிட்டாலும்... வாங்குகிற ஊதியத்திற்கு.. நான் பாடம் நடத்தியே தீருவேன் என்று சூளுரைத்ததைப் போல... விரிவுரையாளர் வகுப்பெடுத்துக் கொண்டிருக்க.. அதைக் கொஞ்சம் கூடக் கவனிக்காமல் வகுப்பறையே தூக்கத்தில் மூழ்கியிருந்தது...
பாடத்தை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ராதிகாவிற்கு அதில் சந்தேகம் வந்துவிட... அதை நிவர்த்தி செய்வதற்காக அவள் எழுந்து கொள்ள முயன்றாள்...
"ஏய்ய்.. அடங்கி உட்காருடி..."
கொட்டாவியுடன் அவள் கரம் பிடித்துத் தடுத்தாள் ஹேமா...
"எதுக்குடி குரங்கே... என் கையைப் பிடிச்சு இழுக்கறே..." ராதிகா அவள் மீது பாய்ந்தாள்...
"அடச்சீ... அடங்குன்னு சொல்றேனில்ல.. அவரே.. யாரும் கேட்காத கிளாஸ் ரூமில... கடமையுணர்ச்சிக்கு அளவேயில்லாம ரம்பம் போட்டுத் தள்ளிக்கிட்டு இருக்கிறாரு... போதாக்குறைக்கு நீ வேற அவரை சந்தேகம் கேட்டு கிளப்பி விடப் பார்க்கறியா..." ஹேமா பல்லைக் கடித்தாள்...
"அதில உனக்கு எதுக்குடி இவ்வளவு வருத்தம்...?"
"இருக்காதா பின்னே.. அவர் உன் சந்தேகத்துக்கு விளக்கம் சொல்கிறபோத உன்னை மட்டுமா பார்த்து வைப்பாரு...? உன் பக்கத்திலே இருக்கிற என்னையுமில்ல சேர்த்துப் பார்ப்பாரு...?"
"பார்த்தா என்ன..?"
"உனக்கு ஒன்னுமில்ல... எனக்கு ஆயிரம் இருக்கும்மா..."
"ஏண்டி... தூக்கக் கலக்கத்தில உளறித் தள்ளறயா..?"
"நீயே தூக்கம் கலக்கம்ன்னு சொல்லிட்டேல்ல.. நான் தூங்கி வழிகிறதை அவர் பார்த்தா என்ன ஆகும்..?"
"என்ன ஆகும்..?"
"என் இன்டர்னெல் மார்க்கில் அவர் கைவைக்க மாட்டாரா..?"
"அதுக்கு..?"
"நீ அடங்கி உட்காரு... நான் நிம்மதியாய் ஒரு தூக்கம் போடனும்..."
சந்தேகத்தை கேட்கவிடாத தோழியை கொலை வெறியோடு ராதிகா முறைக்க ஆரம்பிக்க... உன் முறைப்பிற்கெல்லாம் நான் பயந்த ஆளா..? என்பதைப் போல.. உதட்டைச் சுழித்து விட்டு.. ஹேமா தன் தூக்கத்தை தொடர்ந்தாள்...
அவளுடைய தூக்கம்... ராதிகாவையும் தொற்றிக் கொள்ளும்போல தோன்றி வைக்க.. அவசரமாக ஹேமாவிடமிருந்து தன் பார்வையை விலக்கிக் கொண்டு.. பாடத்தை குறிப்பெடுக்க ஆரம்பித்தாள் ராதிகா...
வகுப்பு முடிந்து விரிவுரையாளர் வெளியேற...
"ஹாவ்..." என்று ஒரு கொட்டாவியை வெளியேற்றினாள் ஹேமா...
ராதிகாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது... அதை கவனிக்காமல்...
"பேசாம இந்த லெக்சரருக்கு நீலாம்பரன்னு பெயர் வைத்து விடலாம் ராது..." என்றாள் ஹேமா...
ராதிகா அதற்கு பதில் சொல்லவில்லை.. அவள் பக்கத்திலிருந்த ஷீலா..
"ஏண்டி அப்படிச் சொல்ற..? இன்ஜினியரிங் பாடம் எடுக்கிறவருக்கு ஹிஸ்டரிக்கலா.. பெயர் வைக்கனும்னு சொல்றியே.. என்ன விசயம்..?" என்று சந்தேகம் கேட்டாள்...
"ஆமாண்டி.. இவ்வளவு நேரமும் கிளாஸ் ரூமில யாரும் லெக்சரர் கிட்ட சந்தேகம் கேட்க எழுந்திருக்கல.. இவகிட்ட மட்டும் சந்தேகம் கேட்க முத ஆளா வந்திருங்க... இப்படி இருந்தா இந்தியா எப்படிடீ முன்னேறும்..?" ராதிகா காட்டமாக கேட்டாள்...
"இதுக்கும்... இந்தியாவோட முன்னேற்றத்துக்கும் என்னடி சம்பந்தம்..? லெக்சரர் கிட்ட சந்தேகம் கேட்டா.. அவர் இன்னும் கொஞ்சம் மொட்டை ரம்பத்தை போடுவாரு... நம்ம ஹேமா என்ன அப்படியா செய்யப் போறா..? இன்ட்ரெஸ்டிங்கா எதையாவது சொல்லுவா.. நீ சொல்லுடி ஹேமா..." ஷீலா தூண்டினாள்...
"ம்ஹீம்.. உருப்பட்டாப்புலதான்..." ராதிகா தலையில் அடித்துக் கொண்டாள்...
"இவ என்னடி ஓளவையாரோட மறுபிறவியைப் போல ஆகிட்டா..." ஷீலாவுக்கு தாங்கவேயில்லை...
"இவளாவது.. ஔவையாருக்கு இணையாய் ஆவதாவது... அதெல்லாம் ஒன்னுமில்ல... அம்மணிக்கு கொஞ்ச நாளா மூடுஅவுட்... அதனால பிலிம் காட்டிக்கிட்டு இருக்கா.." ஹேமா விளக்கம் சொன்னாள்...
"இவ பிலிம் யாருக்கு வேணும்..? நீ சொல்லுடி... ஏன் அவருக்கு நீலாம்பரன்னு பெயர் வைக்கனும்..?" ஷீலா ஆவலாக கேட்டாள்...
"அது வேற ஒன்னுமில்லடி ஷீல்... நீலாம்பரிராகத்தைக் கேட்டா என்ன வரும்..?" ஹேமா கண்சிமிட்ட...
"தூக்கம் வரும்.." புரிந்து கொண்டவளாக ஷீலா பொங்கிச்சிரித்தாள்...
"அப்ப அவருக்கு நீலாம்பரன்னு பெயர் வைக்கிறது தான் சரி..."
அருகிலிருந்த மற்றவர்கள் என்னவென்று கேட்க.. ஹேமா சொன்னதை ஷீலா ஒளிபரப்பிக் கொண்டிருக்க.. அதில் மனம் லயிக்காதவளாக... ராதிகா அசுவரஸ்யத்துடன் சூள் கொட்டியபடி.. ஜன்னல் வழி வெளியே பார்த்தாள்..
அந்திவெயிலின் கீற்றுக்கள் கல்லூரியின் சாலையின் மீத படிந்திருந்தன...
கல்லூரிவிட்டுக் கிளம்பியபோது...
"கொஞ்சம் பொறுடி..." என்று ஹேமாவும் ராதிகாவின் ஸ்கூட்டியில் ஏறிக் கொண்டாள்...
அவளை அவளது வீட்டில் விட்டுவிட்டு.. தன் வீட்டைநோக்கிச் சென்றாள் ராதிகா.. தெரு முனையைக் கடக்கும் போத.. வழக்கம் போல அவளது பார்வை அவனைத் தேடித் துழாவியது.. அவன் இல்லை.. மனதில் ஏமாற்றமாக உணர்ந்தாள்...
வீட்டை அணுகும் போது.. தூரத்திலேயே.. அவள் வீட்டு வாசலில் கார் நிற்பது தெரிந்து விட்டது..
'யாராய் இருக்கும்..'
புருவம் சுருங்கியவளுக்கு அருகில் நெருங்கும் போதே.. அது யாருடைய கார் என்று அடையாளம் தெரிந்து விட்டது...
'சங்கர் வந்திருக்கிறான்...'
அவன் எதற்காக அவளுடைய வீட்டிற்கு வரவேண்டும்..? என்ற கேள்வி மனதில் எழுந்தபோதே.. ஒரு பயபந்து அவள் வயிற்றில் சுருண்டு இங்கும்.. அங்குமாக ஓடியது...
ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு வீட்டுப்படி ஏறும்போதே..
"சொல்லவே இல்லை பார்த்தியா..?" என்ற குற்றச் சாட்டுடன் அவளை எதிர் கொண்டாள் கீதா...
"எதைடி சொல்லச் சொல்ற..?"
ஏற்கனெவே தலைவலியில் இருந்த ராதிகா சுள்ளென்று எரிந்து விழுந்தாள்... அதை கீதா பொருட்படுத்தவே இல்லை....
"அ...அ... இந்த உடான்ஸையெல்லாம் வேற எங்கேயாவது போய் விடு.. உள்ளே உன்னைப் பெண் கேட்டு வந்திருக்காங்க..."
கீதாவின் பேச்சில் ராதிகாவிற்கு தூக்கிவாரிப் போட்டது...
கடைசியில் சங்கர் சொன்னதைப் போலவே செய்து விட்டானா..? அவன் தனியாக வரவில்லையா..?
இல்லை என்றாள் கீதா...
"யாரோ சங்கராம்... பெரிய கோடிஸ்வரனாம்.. உன் பிரண்டோட பர்த்டே பார்ட்டிக்கு போகிறேன்னு போயிட்டு.. ஒரு வெரி ஹேண்ட்சம் மேனோட காரில வீடு வந்து சேர்ந்தியே.. அந்த பர்த்டே பார்ட்டியில உன்னைப் பார்த்தாராம்.. பிடிச்சுப் போயிருச்சாம்.. முறைப்படி பெத்தவங்களோட பொண்ணு கேட்டு வந்திருக்காராம்..."
"கடவுளே..."
"அவர்தான் உனக்கு நல்ல நல்ல சான்ஸா ஏற்படுத்திக் கொடுக்கிறாரே.. எனக்கும் வந்து வாய்க்குதுகளே.. எதிர் வீட்டு தடியன்கிட்ட ஓட்டை ஹீரோ ஹோண்டாதான் இருக்கு..."
"நீ அடி வாங்கத்தான் போறடி.."
"இதை மட்டும் மறக்காம சொல்லிரு... நீ உண்மையிலேயே என்மேல பாசமிருக்கிற அக்காவா இருந்திருந்தா.. அந்த பர்த்டே பார்ட்டிக்கு என்னையும் கூப்பிட்டுக்கிட்டு போயிருக்கலாமில்ல..?"
"அடச்சீ... வாயைக் கழுவு.. அவளெல்லாம் ஒரு மனுஷின்னு அவளோட பர்த்டே பார்ட்டிக்கு தெரியாத்தனமா போயிட்டு வந்ததினாலதான் நானே இத்தனை இம்சைப் பட்டுக்கிட்டு இருக்கேன்.. இதில நீ வேற கடுப்படிக்காதே..."
"இது உனக்கு இம்சையா..? ஒன்னுக்கு ரெண்டாய் பணக்காரங்க உன்னைச் சுற்றி வர்றாங்க.. நானும் உன்கூட வந்து.. அவங்களுக்கு முன்னாலேயே இன்ட்ரொடுயூஸ் ஆகியிருந்தேன்னு வைய்யி.. ரெண்டில ஒருத்தனாவது என்னைக் கன்ஸிடர் பண்ணுவானில்ல.."
கீதா பொருமித்தவிக்க.. ஓங்கி அவள் கன்னத்தில் நாலு அப்பு... அப்பினால் என்ன என்று ஆவேசப் பட்டாள் ராதிகா...
'இவளைச் சொல்லிக் குற்றமென்ன..? இவளை இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிற இவனைச் சொல்லனும்... இவனை யாரு என்னைப் பெண் கேட்டு... என் வீட்டுக்கு வரச் சொன்னது...?'
ராதிகாவின் கோபம் சங்கரின் மீது திரும்பியது... அவள் கோபாவேசத்துடன் உள்ளே சென்றபோது...
"இதோ.. எங்க ராதுவே வந்திட்டாளே..." என்று முகமலர்ச்சியாய் திரும்பிப் பார்த்தாள் ராஜேஸ்வரி...
ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களின் கவனம் ராதிகாவின் பக்கம் திரும்ப... முள்ளின் மேல் நிற்பதைப் போல உணர்ந்தாள் ராதிகா... சங்கரின் உரிமை கலந்த பார்வை... அவளுக்கு நெருப்பாக தகித்தது...
கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த ராமாமிர்தத்தின் அலட்சியமான பார்வை அவள் முகத்தை இறுகச் செய்தது... அவரது மனைவி வனஜாவின் பார்வையோ அதற்கு மேல் இருந்தது...
அந்தவீட்டில் வந்து அமர்ந்திருப்பதை அவர்கள் அசௌகரியமாக நினைப்பதை அவர்களது முகபாவமே ராதிகாவிற்கு உணர்த்தியது...
'இப்படி இஷ்டமில்லாம.. எதிரி வீட்டுக்கு வருகிறதைப் போல முகத்தை வைச்சுக்கிட்டு..
யாரு இவங்களை வரச்சொன்னதாம்...' மனதிற்குள் வெகுண்டாள் அவள்...
"ராதிகா.. டிரஸ் சேன்ஜ் பண்ணிக்கிட்டுவா..."
ராஜேஸ்வரி உத்தரவிடும் போதே.. அது எதற்கு என்ற நினைவுடன் மனதிற்குள் முரண்டினாள் ராதிகா...
அதை வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள் வனஜா... ஆனால்.. அவள் அதை வெளிப்படுத்திய விதம்தான் ராதிகாவின் தன்மானத்தை பதம் பார்ப்பதாக இருந்தது...
"நோ.. நோ.. அதெல்லாம் வேண்டாம்.. சங்கர் சொன்னானேன்னு அவனுக்காக.. நானும்.. அவனோட டாடியும் இந்த வீட்டில் காலடி எடுத்து வைச்சோம்.. மத்தபடி.. எங்களுக்கு எந்த பார்மாலிட்டிஸீம் தேவையில்லை..."
அப்படியா..? என்பதைப் போல பார்த்தபடி ராதிகா வீட்டுக்குள் போகப் போனபோது.. ராஜேஸ்வரி அதற்கும் அவளை அதட்டினாள்...
"ராதிகா.. இங்கேயே உட்காரு..."
தாயின் சொல்லை தட்ட முடியாமல்... பல்லைக் கடித்தபடி.. அவர்களுக்கு எதிரே அமர்ந்தாள் ராதிகா...
அவனைப் பார்க்காமல் ராமாமிர்தம் கைக்கடிகாரத்தைப் பார்க்க... வனஜாவோ..
செல்போனை நோண்டிக் கொண்டிருந்தாள்...
சங்கர் மட்டும்.. அவள் முகத்தையே பருகுவதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தான்...
ராதிகாவிற்கு அவன் பார்வை பிடிக்கவில்லை... அந்தப் பார்வை அவள்மேல் படர்வதை அவள் விரும்பவில்லை...
நிமிர்ந்து கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தாள்... சில விசயங்களில் அவர் அவளுடன் இசைந்து போகக் கூடியவர்.. சங்கரின் பெற்றோரின் போக்கை அவர் கவனிக்காமல் இருக்கமாட்டார் என்பது ராதிகாவின் அனுமானமாக இருந்தது..
அதற்கேற்றாற் போல.. கிருஷ்ணமூர்த்தியின் முகத்தில் ஒரு சளிப்பு ஏற்பட்டிருந்தது.. நடந்து கொண்டிருக்கும் நிகழ்வை... மூன்றாம் மனிதரைப் போல அவர் விலகியிருந்து கவனித்துக் கொண்டிருந்தது ராதிகாவிற்கு மிகத் தெளிவாக புரிந்தது...
ராஜேஸ்வரி மட்டுமே.. எதையும் கவனிக்காதவளாக உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தாள்.. மகளுக்கு அமைய இருக்கும் வளமான வாழ்க்கை குறித்தான அவளது சந்தோசம் அப்பட்டமாகத் தெரிந்தது...
"அப்புறம்.. சொல்லுங்க..." அவள் குரலில் எதிர்பார்ப்பு இருந்தது....
"எதைச் சொல்லச் சொல்கிறீங்க மிஸஸ் ராஜேஸ்வரி..." புரியாதவளைப் போல புருவங்களை உயர்த்தினாள்... வனஜா...
ராதிகாவின் பார்வையும்.. கிருஷ்ணமூர்த்தியின் பார்வையும் சந்தித்து மீண்டன.. கிருஷ்ணமூர்த்தி மனைவி பேசியதை ஆட்சேபித்தார்....
"அவங்க கேட்கிறதுக்கு பதிலைச்சொல்லு ராஜி.. எதைச் சொல்லச் சொல்லி... அவங்ககிட்டக் கேட்கிற..?" அவர் குரலில் கோபம் இருந்தது...
"இது என்னங்க... புரியாதவங்களைப் போல பேசறிங்க... அவங்கதானே நம்ம வீடு தேடிவந்து பெண்ணைக் கேட்கிறாங்க..? இப்ப பெண்ணையும் பார்த்துட்டாங்க... மேற்கொண்டு பேச வேண்டியதைப் பேச வேணாமா..?" கணவரின் கோபத்துக்கு குறையாத கோபக் குரலில் பதில் சொன்னாள் ராஜேஸ்வரி...
"ஒன் வெர்ட் மிஸஸ் ராஜேஸ்வரி... உங்க வீட்டைத் தேடி நாங்களா வரலை.. எங்க மகன் வரவைத்தான்..." வனஜா விளக்கம் கொடுத்தாள்...
அதை ஆமோதிப்பவரைப் போல ராமாமிர்தம் அமைதிகாக்க...
"மம்மி..!" என்று கண்டிப்பான குரலில் வனஜாவை அடக்கினான் சங்கர்...
"பாருங்க ஆண்ட்டி.. எனக்கு உங்க மகளைப் பிடித்திருக்கு.. முறைப்படி என் பேரண்ட்ஸோட வந்து பெண் கேட்டுட்டேன்.. உங்களுக்கும் இதில விருப்பமிருந்தா.. அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாண நாளைக் குறிச்சிடலாம்..."
சங்கர் மிகத் தெளிவாக ராஜேஸ்வரி கேட்டதைச் சொல்லி விட்டான்.. ராஜேஸ்வரியின் முகம்.. பூவாக மலர்ந்து விட்டது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -30
அம்மம்மா.. கேளடி தோழி...! -30
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammakeladitholi-30.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammakeladitholi-30.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy