அம்மம்மா.. கேளடி தோழி...! -34

34 உன்கண் பார்க்கும் ஒர்நொடிக்காக.. கால் கடுக்க நான் நின்றேன்... யார் தன்னை காருக்கு உள்ளே இழுத்தது என்று விழி விரிய பார்த்த ராதி...


34
உன்கண் பார்க்கும் ஒர்நொடிக்காக..
கால் கடுக்க நான் நின்றேன்...

யார் தன்னை காருக்கு உள்ளே இழுத்தது என்று விழி விரிய பார்த்த ராதிகா.. அதை உணருமுன்னே.. மயக்க மருந்தை உணர்ந்தவளாக விழி செருகி காரில் சரிந்தாள்... கார் கிளம்பியது... காற்றை விட வேகமாகப் பறந்து... சென்னைக்கு வெளியே இருந்த ஒரு பண்ணை வீட்டுக்குள் நுழைந்தது...
சில நிமிடங்கள் கழித்து கண் திறந்த ராதிகா.. ஒரு பூட்டிய அறைக்குள் படுக்க வைக்கப் பட்டிருப்பதை உணர்ந்தாள்...
'நான் எங்கேயிருக்கேன்...'
வழக்கமாய் மயக்கத்திலிருந்து விழிப்பவர்கள் கேட்கும் கேள்வியை அவள் மனம் கேட்க.. அறையைச் சுற்றி அவள் பார்வை சுழன்றது..
'இது எந்த இடம்..? நான் எப்படி இங்கே வந்தேன்..?'
துணைக் கேள்விகள் மனதில் முளைக்க.. அவளுக்கு சற்று முன் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன...
தான் கடத்தப் பட்டிருப்பதை உணர்ந்தவள் அவசரமாக எழுந்து அமர்ந்தாள்... அவளுக்குள் பதட்ட அலைகள் உற்பத்தி ஆகின...
'எப்படி தப்பிப்பது...?'
யார் கடத்தியது என்ற ஆராய்ச்சியை விட.. இதுதான் அவளது முக்கியமான நோக்கமாக இருந்தது...
மூடிய ஜன்னல்களை மறைத்து திரைச் சீலைகள் தொங்கிக் கொண்டிருந்தன.. ஏஸியின் இதமான குளிர் அறை முழுவதும் பரவியிருந்தது.. மூடிய கதவொன்று தெரிய.. அது பால்கனியாக இருக்கக் கூடும் என்ற நினைவில் அவள் ஆவலுடன் எழுந்தாள்.. அதே நேரத்தில் அறைக்கதவும் திறக்கப்பட.. சட்டென்று அருகிலிருந்த பெரிய பாவை விளக்கின் சிலையை கையில் தூக்கிக் கொண்டாள்...
வருகிற ஆளின் தலையில் ஒரே போடாய் போட்டு விட்டு... ஓடிப் போய் விட வேண்டும் என்ற துடிப்புடன் அவள் போராடத் தயாராகி நின்று கொண்டிருக்க.. அறைக்குள் பாலமுரளி வந்தான்...
'இவனா...??..!..!'
ராதிகா பிரமித்து விட்டாள்... அவள் கையிலிருந்த வெண்கலச் சிலை நழுவி.. கணீர் என்ற சப்தத்துடன் தரையில் விழுந்தது..
எவனைப் பார்க்கும் வழி தெரியாமல்.. அல்லும்.. பகலும் அவள் துடித்துக் கொண்டிருந்தாளோ.. அவன் அவளையே உறுத்துப் பார்த்த வண்ணம்.. அவள் கண்முன்னால் வந்து நின்றான்...
எவன் இருக்கும் இடம் தெரியாமல்.. அவனைத் தேடும் வகையறியாமல் அவள் மலைத்து நின்றாளோ.. அந்த அவன்... அவள் தேடாத அந்தப் பொழுதில்... தானாக வந்து நின்றான்...
ராதிகா பேச நினைத்து வாயசைத்தாள்... அவளுக்கு  பேச்சு வரவில்லை... மாறாக காற்றுத்தான் வந்தது.. ஓடி அவன் நெஞ்சில் முகம் புதைத்து கண்ணீர் உகுக்க நினைத்தாள்... அவனது சிவந்த விழிகளும்.. கடுமையான முகமும் அதைச் செய்ய விடாமல் தடுத்தன...
அவளது அந்தரங்கத்தில் உறைந்திருந்தவனை... அருகில் அவள் பார்த்தும்.. அந்த அந்தரங்கத்தைச் சொல்ல முடியாமல் வாயடைத்து அவள் பின்னடைந்தாள்...
"என்னடி... அப்படிப் பார்க்கிற...? என்னை நீ எதிர்பார்க்கலையில்ல..?" கண்கள் இடுங்க அவன் கேட்டான்...
அவனை அந்த இடத்தில்.. அது போன்றதொரு சூழ்நிலையில் அவள் எதிர்பார்க்கவில்லைதான்...
அவளைக் காதலித்ததாகச் சொல்லியவனிடம்... அந்தக் காதலைக் காப்பாற்றி அவளுக்கு பிடிக்காத திருமணத்திலிருந்து அவளை விடுவிக்க அவள் சொல்லியிருக்க வேண்டும்...
அதைச் சொல்ல முடியாததொரு சூழ்நிலையில் அவளை நிற்க வைத்தது யார்...?
அவளை முத்தமிட்டுச் சென்றவனிடம்... காதலுக்கான கடமையை ஆற்று என்று அவள் கேட்டிருக்க வேண்டும்...
அதைக் கேட்க முடியாமல் அவளை அவனது பார்வையில் குற்றவாளியாக்கி... ஊமையாக்கியது யார்..?
"எப்படி எதிர்பார்த்திருப்ப.. நீ எதிர்பார்த்ததே வேறயாச்சே..." அவன் எகத்தாளமாகப் பேசினான்...
மௌனப் பார்வையில்.. அவளது அந்தரங்க மனதை அவனுக்கு உணர்த்திவிடும் துடிப்புடன் அவள் நின்றாள்..
"அவன் கூட ஜோடி போட்டுக்கிட்டு கோவிலுக்கு வந்தயே... சாமிகிட்ட என்ன கேட்ட..?"
சங்கருடனான திருமணம் நிற்க வேண்டும் என்று கேட்டாள் என்று சொன்னால் அவன் நம்பவா போகிறான்..?
"இனி சேர்ந்து கோவிலுக்கு வந்து.. சேர்ந்து திரும்பிப் போவோம்ன்னு அவன் சொன்னானே.. உன் எண்ணமும் அதுதானே..."
இல்லையே என்றிருந்தது ராதிகாவிற்கு.. சங்கர் போனால் போதுமென்ற எண்ணம்தான் அவள் மனதிலிருந்தது என்று இவன் எப்போது அறிவான்..?
"அது எப்படிடீ... அன்னைக்கு பார்க்கில உன்னைத் தொட்டு முத்தம் கொடுத்தப்போ... விலகாம நின்னவ... இப்ப.. அவன் கட்டிக்கிறேன்னு சொன்னவுடனே ஈன்னு பல்லைக் காட்டிக்கிட்டு... என்னவோ புருசன் பெண்டாட்டியைப் போல ஜோடி போட்டுக்கிட்டு அவன்கூட கோவிலுக்கு வந்து நிற்கிற..? உனக்கு மனச்சாட்சியே இல்லியா...?"
அடப் போடா.. என்றிருந்தது ராதிகாவிற்கு...
அந்த முத்தத்தைப்பற்றி இப்போது வந்து இவ்வளவு உணக்கையாகப் பேசுகிறவன்.. இத்தனை நாளாய் எங்கேயிருந்தான் என்று கேட்கத் தோன்றியது அவளுக்கு...
அதைக் கேட்டு வைத்தால்... ஏற்கனெவே மலையேறி இருப்பவன்.. இன்னும் அதிகமாக சாமியாட ஆரம்பித்து விடுவான் என்ற பயம் இருந்ததால்... அதைக் கேட்காமல் வாயை மூடிக் கொண்டாள்...
"உன்னைத் தொட்டேனேடி.. நீயும் பேசாம என் கைக்குள்ள வந்தியே.. ஒரு நிமிசம்.. உனக்கும் என்மேல் இஷ்டம்தானோன்னு நினைச்சுட்டேண்டி... அப்படியில்லை... என்கிட்டேயிருந்து தப்பிக்க முடியாம நீ நின்னவன்னு எனக்குத் தெரியாம போயிருச்சேடி..." அவன் குரலின் கோபம் அதிகரித்தது...
'தப்பிப்பதா...? உன்னிடமிருந்தா...?'
துரத்திய அவனது நினைவுகளிடமிருந்து தப்பிக்க விரும்பாமல் அதிலேயே புதையுண்டு போன அவளது அந்தரங்க மனம் அதிர்ந்தது...
"கல்யாணம்ன்னா என்னடி...? நான் தொட்ட உன்னை அவனும் தொடுவான்.. நான் கொடுத்த முத்தத்தை அவனும் கொடுப்பான்.. என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டதைப் போல... நீ அவனையும்..."
அவன் பேசிக் கொண்டே போக... அதற்கு மேலும் அதைக் கேட்க முடியாமல் காதுகளைப் பொத்திக் கொண்டாள் ராதிகா...
'பேசாதே...' அவள் உடல் நடுங்கியது...
அந்த நடுக்கத்தை பார்த்தவனின் மனம்.. அவளைத் தொட்ட போது அவன் உணர்ந்த நடுக்கத்தில் நிலை கொண்டது...
ஒரு நொடி அவன் மனம் மென்மையானது...
'நான் தொட்ட போது வந்த நடுக்கம்... அவன் தொடும் போதும் வருமா...?'
அந்த நினைவில் மென்மை மறைந்து மாயமாக.. அவன் மனம் கடினமானது...
அவன் அவளையே பார்த்த வண்ணம் நிதானமாக முன்னேறினான்..
"வேண்டாம்..."
அதுவரை பேச்சிழந்து நின்றிருந்த ராதிகா அச்சத்துடன் பதறினாள்...
"அட... என்கிட்டக் கூட நீ பேசுவியா..? வழக்கமா அவன்கூட மட்டும் தானே நீ பேசுவ.. என்கிட்டப் பேச உனக்குப் பிடிக்காதே..."
அவளுக்கு பிடித்தவன் இதைக் கூறிக் கொண்டே.. பயங்கரமான வில்லன் சிரிப்பொன்றை சிரித்து வைத்தான்...
அவளுடைய அந்தரங்க மனதின் கதாநாயகன்.. வில்லனாகிக் கொண்டிருக்கும் கொடுமையைத் தாங்காமல் ராதிகா மனம் குமுறினாள்...
"இது பாவம்... கிட்ட வராதீங்க..."
"இது பாவ.. புண்ணியம் பார்க்கும் நேரமில்லைடி.."
"நீங்க இதைச் செய்யக்கூடாது..."
"வேற யார் உன்னைத் தொடனும்..? அவனா..?"
அந்தக் கேள்வியில் அதிர்ந்து போனவள்.. அசையாமல் நின்றுவிட... அவன் அவளது தோளைத் தொட்டு... அவளைக் கைப்பற்றி விட்டான்...
அவளைத் தொட்டவுடன் அடங்கிக் கிடந்த அவனின் உணர்வுகள் ஆர்ப்பரித்து எழுந்து கொள்ள.. அடுத்த நொடியில்.. அவனது முரட்டுப் பிடியில் சிக்கிவிட்டாள் ராதிகா...
இறுக அணைத்து.. அவளது முகமெங்கும் அவன் முத்தங்களைப் பதிக்க ஆரம்பித்தபோது... மூச்சுத்திணற.. தந்நிலைமையை அவள் உணர்ந்தாள்.. அவளது வீடு.. அவள் கண் முன் சுழல.. அவள் போராட ஆரம்பித்தாள்...
"விடுங்க... என்னை விட்டு விடுங்க.."
அவள் கதறியதை அவன் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை... விடுபட அவள் நடத்திய போராட்டங்களை மிக எளிதாக அவன் முறியடித்து முன்னேறினான்...
கால் தடுக்கி.. கட்டிலில் சரிந்தவளின் மீது அவன் சரிய... அவளுக்குள் துக்கம் பொங்கியது...
யாரை அவளது உயிருக்குயிராய் நினைத்து அவள் ஆராதித்துக் கொண்டிருக்கிறாளோ... அவனே... அவளது கற்பை சூறையாட நினைத்ததைத் தாங்க முடியாமல் அவள் மனம் துடித்தாள்...
"சொன்னாக் கேளுங்க.. ப்ளீஸ்..."
அவளது கெஞ்சல்கள் அவன் காதில் விழவில்லை...
"உங்க காலில் விழுகறேன்.. இது வேண்டாம்..."
அவள் கை கூப்பியும்.. அவன் அவளை விடவில்லை....
அவன் கல்லாக மாறியிருந்தான்... அவளது கதறலையும்.. கண்ணீரையும்... துடிப்பையும்.. அலட்சியம் செய்தான்.. அவளது மறுப்புக்களை பொருட்படுத்த மறுத்தான்... அணை உடைந்த வெள்ளமாக அவளை ஆக்ரமித்து பரவிப் படர்ந்தான்...
ஒரு எல்லைக்கு மேல் போராட முடியாமல் தொய்ந்து சரிந்தாள் ராதிகா.. வலுவிழந்தவளின் மீது.. வலிமையான அவனின் கரங்கள் பரவிப் படர்ந்து அவளை அவனுக்கு சொந்தமாக்கிக் கொண்டன...
கடைசியில் அவன் நினைத்ததை நடத்தியே முடித்து விட்டான்...
கலைந்து கிடந்தவளின் முடி கோதி.. அவள் நெற்றியில் முத்தமிட்டவன்.. விலகிச் சென்று விட்டான்... கண்ணீர் பெருக.. ராதிகா அப்படியே கட்டிலில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள்...
நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருந்தன... அவளது கண்ணீர்.. வற்றாத ஆறாக... அவளது கன்னத்தில் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது...
அறைக்கதவு திறக்கப்பட்டு.. கையில் காபிக் கோப்பையுடன் அவன் உள்ளே வந்தான்.. ராதிகா நிமிரவில்லை...
"காபியைக் குடி..."
எதுவுமே நடக்காததைப் போல அவன் காபிக் கோப்பையை நீட்ட.. நிமிர்ந்து பார்த்தவளுக்கு..
ஆத்திரம் பெருகியது...
"நீங்கள்ளாம் ஒரு மனுசனா...?"
"நான் ராட்சஸனாகவே இருந்துட்டுப் போறேன்.. அதில எனக்கொரு குறையுமில்ல.. நீ இப்ப காபியைக் குடி..."
"உங்களைப் போய் நல்லவன்னு நினைச்சேனே..."
"அந்த சங்கரை என்னன்னு நினைச்சே..? உன் அகராதியில் நல்லவன்னா... இளிச்சவாயன்னு அர்த்தமா...?"
"என் வாழ்க்கையையே பாழாக்கிட்டிங்களே..."
ராதிகா குமுற... பாலமுரளியின் முகம் இறுகியது...
"அவன்கூட வாழ விடாம பண்ணிடேன்னு உனக்கு ஆங்காரமாய் இருக்கா...?"
'நான் என்ன சொல்கிறேன்.. இவன் என்ன சொல்லி வைக்கிறான்...'
இவன் இப்படித்தான் பேசி வைப்பானா என்று அவளுக்கு ஆயாசமாக இருந்தது.. இது போன்றதொரு நிகழ்வை அவன்... அவளுக்கு பரிசளிக்கக் கூடும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை...
அவளுடைய ராத்திரி கனவுகளின் நாயகன் அவன்.. அவனோடு கூடி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும்.. ஏக்கமும்... அவளது அந்தரங்க மனதில் அடி ஆழத்தில் இருந்ததென்னவோ உண்மைதான்...
ஆனால்.. அதை.. இதைப்போல அவள் நினைத்துப் பார்க்கவில்லையே.. ஊரும்.. உறவும் அறிய... அவள் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு.. முதல் இரவில் அவளோடு அவன் முறையாக கலக்க வேண்டும் என்று தானே நினைத்தாள்..?
அவளை முத்தமிட்டு அவன் சென்ற மறுநாளிலிருந்தே.. அவளது பார்வை அவனைத் தேடித் துழாவவில்லையா..? அப்போதே.. அவள் முன்னால் அவன் வந்திருந்தால் தனது அந்தரங்க மனதை.. அவன் அறிய.. அவள் சொல்லியிருக்க மாட்டாளா...?
அவளது முகவரியை அறிந்தவன்.. அவளது அலைபேசியின் எண்ணையும் அறிந்திருக்க வேண்டாமா..? அவளைத் தொட்டுத் தழுவ தைரியமிருந்தவனுக்கு அவளை அலைபேசியில் அழைக்கும் எண்ணமிருக்க வேண்டாமா..? அப்படி அவன் அலைபேசியில் அழைத்திருந்தால்... அவன் முகம் பார்த்து தடுமாறும் நிலை இல்லாமல்.. தன் அந்தரங்கத்தில் அமிழ்ந்திருக்கும் காதலை.. அவன் முன் அவள் கொட்டியிருக்க மாட்டாளா..?
இதை எதையும் செய்யாமல்.. அவளைக் கடத்தி வந்து.. தாலி கட்டாமலே அவளைத் தொட்டு.. குடும்பம் நடத்தி விட்டானே.. இதை அவன் செய்யலாமா...?
இப்போதும் கூட.. அவள் சங்கருடனான திருமணத்தை நிறுத்துகிற முயற்சியில்தானே முனைப்பாக இருந்தாள்..? இந்தச் சிக்கல் தீர்ந்தவுடன்... அவனைத் தேடிச் செல்லும் உத்தேசத்துடன் தானே இருந்தாள்..?
அதை உணராமல் அவன் அவசரப்பட்டு விட்டானே...
"எந்தக் குடியும் முழுகவில்லை... காபியைக் குடித்துவிட்டு கிளம்பு..." என்றான் அந்த கல்நெஞ்சக்காரன்..
அவனை உயிரற்ற பார்வையுடன் வெறித்தாள் ராதிகா...
"எங்கே கிளம்பச் சொல்கிறிங்க...?"
"உன் வீட்டுக்குத்தான்.. வேற எங்கேன்னு நினைச்சே...?"
அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனையே குற்றம் சாட்டும் பார்வையைப் பார்த்தபடி அசையாமல் அவள் அமர்ந்திருந்தாள்...
"என்ன..? உன் வீட்டுக்குப் போகிற உத்தேசமில்லையா..? இங்கேயே இருந்து விடுகிறாயா..?"
அவளது பார்வைக்கு அயராமல் அவன் நிதானமாக கேட்டு வைத்தான்...
"இது என் நண்பனின் ஃபார்ம் ஹவுஸ்.. நாளையிலிருந்து என்னுடையதாகி விடும்.. எப்படின்னு கேட்கிறயா..? உன் கூட குடும்பம் நடத்தின இந்த இடம்.. இனி எனக்குத்தான் சொந்தமாக இருக்கனும்... அதனால இதை வாங்க முடிவு பண்ணிட்டேன்.. அவனும் விற்க ஒப்புக்கிட்டான்.. சொல்லு.. இங்கேயே இருந்துருறியா..?"
'அதுக்கு வேற ஆளைப் பார்...' அவள் எழுந்து விட்டாள்...
என்ன மாதிரியான கேள்வியைக் கேட்டுவிட்டான் என்ற நினைவில் அவள் மனம் பொறுமியது....
என்ன மாதிரியான காரியத்தை செய்து விட்டான் என்பதை அவளது அறிவு அவளுக்கு நினைவுறுத்தியது...
இப்படிப்பட்ட காரியத்தைச் செய்யத் துணிந்தவன்.. இப்படிப் பட்ட கேள்வியைக் கேட்கத் துணிய மாட்டானா..?
மனம் கசந்தவளாக அவள் எழுந்தாள்.. நிற்க முடியாமல் அவள் தள்ளாடிய போது.. தாங்கிப் பிடிக்க அவன் முயன்றான்.. சீற்றத்துடன் அவன் கைகளை தட்டி  விட்டவள்... குளியலறைக்குள் புகுந்தாள்..
அவனருகே.. காரில் அமர்ந்திருந்தவளின் ஒய்ந்த தோற்றத்தைக் கண்டவனுக்கு என்ன தோன்றியதோ...
"இத்தனையும்.. உன்னால்தானேடி..." என்று பொருமினான்...
நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்... நான் அதற்கு விளக்கம் சொல்லப் போவதில்லை.. என்பதைப் போல.. அவள் முன்னால் தெரிந்த சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்...
"உன்னைக் காதலிச்சேண்டி.. அதை உன்னிடம் சொல்ல வந்தேன்.. நீ அவன் பின்னால் சுற்றின.. பார்க்கில் அதைப்பத்தி கோபப்பட்டவன்.. அப்படியே போகத்தான் நினைச்சேன்.. ஏதோ ஒரு வேகத்துல.. உனக்கு முத்தம் கொடுத்துட்டேன்.. அதை நீ ஏத்துக்கிட்டயேடி.. அதனாலே தானே... உன்னை விட்டுவிட முடியாம எனக்கு கிறுக்கு பிடிச்சுப் போச்சு..?"
உயிரற்ற பொம்மையாய் அமர்ந்திருந்தவளிடமிருந்து பதில் வராமல் போக.. அவனது பொருமல் அதிகமானது...
"எனக்கு மட்டும் இப்படி.. அத்துவானக் காட்டுக்குள்ள... ஒரு பண்ணை வீட்டுக்குள்ள வைச்சு... உன்னை சூறையாடனும்னு ஆசையாடி..? இந்த மாதிரி உன்னைத் தொடறதைப் பத்தி என்மனசில எவ்வளவு கற்பனைகளை வளர்த்து வச்சிருந்தேன் தெரியுமா..? அது அத்தனையையும் சுக்கு நூறாக்கி.. குழி தோண்டி புதைக்க வைச்சிட்டயேடி..."
அதற்கும் அவளிடம் அசைவில்லை...
"அந்த ஷோபா போன் பண்ணிச் சொன்னாடி.. நீயும்.. அவனும்.. தினமும் ஒரு இடம்ன்னு ஊரைச் சுற்றிக்கிட்டு அலையறதைச் சொன்னா.. அவனுக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு நீ உன் காலேஜ் பூராவும் பீற்றிக்கிட்டு அலையறதைச் சொன்னா... நீ பேசின பேச்சை அவ போனிலே ரிகார்டு பண்ணியிருக்காடி.. அதை எனக்கு அனுப்பிவைச்சா பாரு.. அதைக் கேட்ட பின்னாலே எனக்கு வெறி கிளம்பாம எப்படிடீ இருக்கும்..?"
இது என்ன புதுக்கதை என்ற முகச்சுளிப்பு ராதிகாவிடமிருந்து வெளிப்பட அதைவிட அதிகமான முகச் சுளிப்புடன் பாலமுரளி..  தன் போனை ஒலிக்க விட்டான்... அதில்.. ராதிகா.. ஷோபாவை கிளப்பி விட வேண்டுமென்ற நோக்கத்துடன் காயத்ரியிடம் பேசிய பேச்சு பதிவாகி இருந்தது...
"கேட்டியா.. அவனை என்னன்னு சொன்ன..? மன்மத ராஜாவா..? உன் கண்ணுக்கு அவன் மன்மதனாய் தெரிஞ்சிருக்கான்.. நான் யாராய் தெரிஞ்சேண்டி..? நான் உனக்கு முத்தம் கொடுத்து காதல் சொன்னப்ப.. நீ முகம் விலக்காம நின்னுட்டு.. அதுக்குப் பின்னாலேயும்.. அவனைப் பார்த்து மன்மத ராஜான்னு சொல்றேன்னா..  உன்னை என்ன பண்ணினாலும் தப்பில்லைடி..."
'இதுதானா..?' ராதிகாவிற்கு நெஞ்சை அடைத்தது..
சங்கருடனான திருமணத்தை நிறுத்த.. ஷோபாவைத் தூண்டி விட.. அவள் பேசிய பேச்சு.. அவளுக்கு எதிராக திரும்பி விட்டிருக்கிறதே.. இதை இல்லையென்று அவள் எப்படி நிரூபிப்பாள்...?
"எப்படி.. எப்படி..? அவன் பெரிய பிஸினெஸ் மேக்னெட்டா..? நான் என்ன மாடு மேய்க்கிறவனா..? அவன் பாரினில் படிச்சவனா..? இந்தியாவில் படிச்சவனெல்லாம் உன் அகராதியில் கை நாட்டுக்கேஸா..? அவன் கோடிஸ்வரனா..? நான் என்ன பிச்சைக்காரனா..?"
உஷ்ணமாக அவன் பேசப்பேச... ராதிகாவிற்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது...
"உன் படிப்பு முடிகிற வரைக்கும் அவனால் பொறுக்க முடியாதாமா..? எனக்கு மட்டும் பொறுக்க முடியுமா..? தினமும் மணிக்கணக்காய் போனில் பேசறானா..? அதில உனக்குத் தூக்கம் கெடுதா..? போ.. இதுக்கு பின்னாலே நீ நிம்மதியாய் தூங்கிடுவியா..? வெர்ல்டு டூர் போறிகளோ.. வெர்ல்டு டூர்...? இப்பப் போடி.. போய்ப் பாரு..."
அவளது வீடு இருக்கும் தெரு முனையில் இருளுக்குள் மறைவாக கார் நின்றது.. பாலமுரளி அவளை இரக்கமற்ற பார்வை பார்த்தான்...
"இறங்கு... இனிமே உன்னாலே அவன்கூட மணிக்கணக்கில் போன்பேச முடியாது... அவன்கூட ஜோடி போட்டுக்கிட்டு ஊரைச் சுற்ற முடியாது... அவன் கட்டற தாலியை வாங்கிக்கிட்டு வெர்ல்டு டூர் போக முடியாது.. இதுதாண்டி நான் உனக்குக் கொடுக்கிற தண்டனை.. அவனை மட்டுமில்ல... இனி வேற எவனையும் உன்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது.. காலம் பூராவும்.. இன்னைக்கு நடந்ததை நினைச்சு.. நினைச்சு.. புழுவாய் நீ துடிச்சுக்கிட்டு கிடக்கனும்.. அதை கண்குளிர நான் பார்க்கனும்..."
அதற்கு மேலும்.. அவன் பேசுவதைக் கேட்க முடியாமல்... ராதிகா கார் கதவைத்திறந்து.. கீழே இறங்கி விட்டாள்... அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் நடந்து.. அவள் வீட்டுப் படியேறியவளைப் பார்த்தவனுக்கு.. வெற்றியின் மகிழ்வு இல்லை... ஒரு பெரு மூச்சுடன் காரைக் கிளப்பி.. சாலைப் போக்குவரத்தில் கலந்த போது நெஞ்சுக்குள் பாறாங்கல் ஏறி உட்கார்ந்து விட்டதை உணர்ந்தான் பாலமுரளி...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -34
அம்மம்மா.. கேளடி தோழி...! -34
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi34.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi34.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy