அம்மம்மா.. கேளடி தோழி...! -47

47 உனை கைபிடிக்கும் நாளையெண்ணி... காத்திருக்கும் எந்தன் மனம்... பெரிய அளவில் மாற்றம் வராவிட்டாலும்.. பாலமுரளியின் மனதில் லேசான மா...


47
உனை கைபிடிக்கும் நாளையெண்ணி...
காத்திருக்கும் எந்தன் மனம்...

பெரிய அளவில் மாற்றம் வராவிட்டாலும்.. பாலமுரளியின் மனதில் லேசான மாற்றம் ஏற்பட்டிருந்தது..
ராதிகாவின் அப்பாவுக்கு சங்கரின் பெற்றோரைப் பிடிக்காது.. சங்கர்தான் ராதிகாவைக் காதலித்திருக்-கிறான்... ராதிகாவிற்கு அவன்மேல் நல்ல அபிப்ராயம்தான்... காதலில்லை...
இவை இரண்டும் அவனது உலர்ந்த மனநிலையில் சிறு மழைத்தூறல்களாக விழுந்தன...
ராதிகாவின் வீடு இருந்த தெருமுனையில் அவனது கார்திரும்பியது.. ராதிகா லேசான பதட்டம் கொண்டாள்.. அவளது நடுங்கிய விரல்கள் அவனது மனநிலையைக் காட்டிக் கொடுத்தன...
பாலமுரளியின் இடது கரம்.. அவளது நடுக்கம் கொண்ட வலதுகரத்தின் மீது படிந்தது.. ராதிகா கலக்கம் கொண்டே விழிகளுடன் அவனை ஏறிட்டாள்..
"பயப்படாதே..." என்றான் அவன்..
"அவங்களுக்கு எதுவும் தெரிந்து விடக்கூடாது..." கம்மிய குரலில் கோரிக்கை வைத்தாள் ராதிகா...
"தெரிய விடமாட்டேன்..." அவன் வாக்குக் கொடுத்தான்...
"அவங்களுக்கு மட்டுமில்லை.. வேற யாருக்குமே தெரியக் கூடாது..." ராதிகாவின் விழிகளில் இருந்த இரு நீர் மொட்டுக்கள் உதிர்ந்தன...
"சங்கரிடம் இதைச் சொல்லப் போனவ.. இந்த பயம் பயப்படறதை நினைச்சாத்தான் ஆச்சரியமாயிருக்கு.." குற்றம் சாட்டும் பாவனையுடன் சொன்னான் பாலமுரளி...
"அதுவேற.. அதோடு.. அதுதான் நடக்காம போயிருச்சே..."
"அதில உனக்கு வருத்தம் போல..."
"இல்லைன்னு ஏற்கனெவே சொல்லிட்டேன்..."
"இந்த அளவுக்கு நீ பயப்படத் தேவையில்லை.. நடந்தது உனக்கும்.. எனக்கும் மத்தியில் நடந்த ரகசிய நிகழ்வு.. அது நமக்கு மட்டும்தான் சொந்தம்.. அதை நான் வெளியில் சொல்வேன்னு எப்படி நினைச்ச..?"
"என் வீட்டுக்குத் தெரிஞ்சு அவங்க தாங்க மாட்டாங்க.."
"தெரிய விடமாட்டேண்டி.. அதுக்கு மேலே ஏன் பேசற..? வா... நடக்கிறதைப் பார்ப்போம்..."
"எனக்கென்னவோ.. திக்குதிக்குன்னு இருக்கு..."
"நானிருக்கேன்.. பயப்படாதே..."
பாலமுரளியின் கரம்.. அவள் கரத்தை இறுக்கிப் பிடித்து அழுத்தியது... இருந்தும் அவளது நடுக்கம் குறையவில்லை... வீடு வந்து விட்டது.. காரை விட்டு இறங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தாள் ராதிகா...
'இனி தப்பிக்க முடியாது...'
எது வந்தாலும் எதிர்கொள்ள வேண்டிய சூழலை மனதில் கொண்டவளாய் வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன் காரைவிட்டு இறங்கினாள் ராதிகா...
"வா..." பாலமுரளி அவளை அழைக்க.. தயக்கத்துடன் வாசல் கேட்டைத் திறந்து உள்ளே பிரவேசித்தாள்...
"என்னராது.. காலையிலே ஸ்கூட்டியில் போன.. சாயங்காலம் காரில வந்து இறங்குற..? யார் இவர்..? ஓ.. அன்னைக்கு நைட் உன்னை டிராப் பண்ண வந்து லேடி ஹிட்லர்கிட்ட மாட்டிக்கிட்ட ஜென்டில் மேன்தானே... இவரை எங்கே பிடிச்ச...?"
வாசலில் நின்று கொண்டிருந்த கீதா.. புருவங்களை உயர்த்தி கேள்விக் கணைகளை தொடுக்க.. பாலமுரளி ராதிகாவை அர்த்தத்துடன் பார்த்துப் புன்னகைத்தான்...
'இவ சொன்னது சரிதான்... மைத்துனி செம விவரம்தான்...'
"ஹலோ.. என்னவோ கடலில் போய் மீனைப் பிடிச்சு கொண்டு வந்ததைப் போல.. உங்க அக்காகிட்ட எங்கே பிடிச்சன்னு விசாரிக்கறிங்களே.. என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தோணுது...?"
இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு ராதிகாவின் பலத்த கண்டனப் பார்வைக்கு ஆளானான் பாலமுரளி...
'ஏன் இப்படி பொசுக்குற மாதிரி பார்த்து வைக்கிறா..'
ஏன் அவள் அப்படிப்பட்ட பார்வையை பார்த்தாள் என்பது கீதாவின் அளவெடுக்கும் பார்வையை பார்த்த பின்தான் அவனுக்குப் புரிந்தது...
தள்ளி நின்று அவனை மேழும் கீழுமாகப் பார்த்த கீதாவின் கண்களில் சுவராஸ்யம் வந்திருந்தது..
அதைத் தாள முடியாமல் பல்லைக் கடித்தாள் ராதிகா.. தங்கையின் மனதில் ஓடும் எண்ணவோட்டத்தை அவளால் அனுமானிக்க முடிந்தது.. அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பது அவளுக்கு தெளிவாகத் தெரிந்தது...
அவள் நினைத்ததைப் போலவே வாய்திறந்து.. உதடுகளைக் குவித்து.. கண்களை அகல விரித்து...
"வாவ்.." என்றாள் கீதா...
ராதிகாவின் பார்வை பாலமுரளியைச் சுட்டது.. அது போதாது என்று...
"போதுமா..?" என்று வேறு கேட்டுவைத்தாள் அவள்..
அவள் எதைப் போதுமா என்று கேட்கிறாள் என்று தெரியாமல் அவன் குழம்பிப் போனான்.. அவளிடம் சந்தேகமும் கேட்டான்...
"இதுக்குத்தானே ஆசைப்பட்டிங்க..." என்றாள் அவள்..
"எதுக்கு ஆசைப்பட்டேன்..?" பாலமுரளிக்கு இன்னமும் விளங்கவில்லை...
"வரும்போதே படித்துப் படித்துச் சொன்னேனா இல்லையா...?"
"எதைப்பத்தி...?"
"இவ வாயைப் பத்தி.. தெரிஞ்சிருந்தும் வாயைக் குடுக்கறிங்களே..."
அவர்கள் வழக்கடித்துக் கொண்டிருக்கையில் கீதா குலுக்கிட்டாள்...
"ராது இது அநியாயம்.. அவர் வாயை எங்கே கொடுத்தார்..?"
"அது வேற உனக்கு குறையா..?"
"என்மேல ஏண்டி பாயற..?"
"அவரைப் பார்த்து எதுக்குடி 'வாவ்'ன்னு வாளைப் பிளக்கிற.."
"அவர்தானே அவரைப் பார்த்தா எப்படித் தோணுதுன்னு கேட்டார்... வாட் எ ஹேண்ட்சம் மேன்னு தோணுது ராதிகா.. அதைச் சொன்னால் தப்பா..?"
அவள் ராதிகாவிடம் நியாயம் கேட்க...
"தப்பேயில்லை..." என்று ஊடே வந்து நியாயம் வழங்கினான் பாலமுரளி...
"உங்களை..." ராதிகா பல்லைக் கடித்தாள்...
"அதுசரி ராதிகா.. இவர் காரில நீ எப்படி வந்த..?" விட்ட விசாரனையை மீண்டும் ஆரம்பித்தாள் கீதா...
"இங்கேயென்ன மாநாடு நடக்குது..?" என்று கேட்டபடி அங்கே வந்த சுந்தர்... பாலமுரளியைப் பார்த்தான்.. காரைப் பார்த்தான்.. பின் ராதிகாவைப் பார்த்தான்...
'பார்வையெல்லாம் பலமாயிருக்கு... பொடிப்பயலா இருந்தாலும் மச்சினன் சரியான வெடிப்பயலா இருக்கானே.. நம்ம ஆளு இவனையும் சரியாத்தான் கணிச்சு வச்சிருக்கா...'
"என்னக்கா.. காரிலயா நீ வந்த..?" எடுத்த எடுப்பில் கேட்டான் சுந்தர்...
கீதாவைப் போல சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கேட்ட அவனின் தைரியமும்.. புத்திசாலித்தனமும் பாலமுரளியை வசீகரித்தன...
"ஆமாம்டா..." ராதிகா தயக்கத்துடன் சொன்னாள்...
"சார் அன்னைக்கு உன்னை வீட்டில் டிராப் பண்ணினவர் தானே..." அடுத்த கேள்வி அவனிடமிருந்து புறப்பட்டது..
"ம்ம்ம்..."
"அன்னைக்குத்தான் இருட்டிருச்சு.. உனக்கு ஆட்டோ கிடைக்கலை... நீ ஸ்கூட்டியையும் எடுத்துட்டுப் போகலை.. இன்னைக்கு என்ன ஆச்சு..? வெளிச்சம் இன்னும் இருக்கு.. காலையில நீ ஸ்கூட்டியிலதான் காலேஜிக்குப் போன.. அப்புறம் எதுக்காக இந்த கார் சவாரி..?"
என்னவோ பெரிய மனிதனைப் போல தோரணையுடன் அவன் கேட்க... விளக்கம் சொல்ல முடியாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருந்த ராதிகாவைப் பார்க்க பாலமுரளிக்கு வேடிக்கையாக இருந்தது...
"அடேங்கப்பா.. விசாரணைக் கமிசனெல்லாம் பலமாயிருக்கு..." என்றான்...
"உங்களுக்கென்ன சார்.. நீங்க பாட்டுக்கு டிராப் பண்ணிட்டுப் போயிடுவீங்க... அக்கம் பக்கத்தில் என்னைத்தானே கூப்பிட்டு விசாரிப்பாங்க.. இரண்டு அக்காக்கள் கூடப் பிறந்தவனுக்கு ஆயிரம் கவலைகள்.. அதைப்பத்தி உங்களுக்கென்ன தெரியும்..?"
"கொஞ்சம்.. கொஞ்சம் தெரியும்.. ஏன்னா... நானும் ஒரு அக்காவுக்கு தம்பிதான்..."
"அப்ப.. என் கவலை உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்..."
"நல்லாவே புரியுது...."
"அதனாலதான் சொல்றேன்.. இந்த டிராப் பண்ற வேலையை நீங்க விட்டுவிட்டா நல்லது..."
"யாருக்கு..?"
"எங்களுக்குத்தான்.. பின்னே உங்களுக்குன்னா சொல்லுவேன்..?"
"அதானே பார்த்தேன்..."
பாலமுரளி இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தபோது யதேச்சையாக அந்தப் பக்கம் வந்த ராஜேஸ்வரி அவனைப் பார்த்தாள்.. புருவங்களை உயர்த்தினாள்...
பிள்ளைகள் வீட்டுக்குள் இல்லாத சூழலில் மனைவியை தைரியமாக ரசித்துக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி அவளது புருவங்கள் உயர்ந்ததில் வெகுவாக கவலைப்பட்டுப் போனார்...
அந்த வீட்டின் அதிகார மையமான ராஜேஸ்வரியின் புருவ உயர்வு சாதாரணமான ஒன்றல்ல என்று அனுபவசாலியான அவருக்கு மிக நன்றாகவே தெரியும்...
"என்னடி ராஜி...?" அவர் மனைவியை விசாரித்தார்...
"அன்னைக்கொருநாள் நம்ம ராதிகா அவ பிரண்டோட பர்த்டே பார்ட்டிக்கு போகிறேன்னு சொல்லிட்டுப் போனாள்ல..?"
"அதுக்கென்ன இப்ப..?"
"அன்னைக்கு அவளை வீட்டில விட ஒருத்தர் வந்திருந்தாரில்ல...?"
"ஆமாம்... அவருக்கென்ன..?"
"அவர் வந்திருக்கார்... கூடவே ராதிகாவும் வந்திருக்கா..."
"இவ காலேஜீக்குத்தானே போனா..?"
"அதுவும்... ஸ்கூட்டியில போனா.. இப்ப ஸ்கூட்டியில வராம அவர்கூட காரில் வந்து இறங்கியிருக்கா... என்னன்னு தெரியலை..."
அதற்கு மேலும் பொறுமையாக அங்கே அமரமுடியாமல் கிருஷ்ணமூர்த்தி எழுந்து வாசல்பக்கம் போனார்...
சுந்தரின் தீவிரமான விசாரணைக்கு ஆளாகியிருந்த பாலமுரளி... அவரைக் கண்டதும் தப்பிக்கும் மார்க்கம் கண்டவனாக முகம் மலர்ந்தான்...
"வணக்கம் சார்..." அவன் கரம் குவிக்க...
"வணக்கம்... வாங்க..." என்று வரவேற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் கிருஷ்ணமூர்த்தி...
பாலமுரளி வீட்டுக்குள் நுழைந்து.. கிருஷ்ணமூர்த்தி காட்டிய சோபாவில் அமர்ந்தான்... அவனுக்கு எதிரே அமர்ந்த கிருஷ்ணமூர்த்தி ராதிகாவின் முகத்தையே கூர்ந்து பார்த்தார்... அதில் தெரிந்த சஞ்சலம்.. அவர் மனதை சலனப்படுத்தியது... பாலமுரளியின் வரவில் ஏதோ உள் நோக்கம் இருப்பதாக அவரது ஆழ் மனதிற்கு தோன்றியது...
ராஜேஸ்வரி காபியுடன் வந்தாள்...
"வாங்க தம்பி..." என்றபடி அவனிடம் காபியை நீட்டினாள்...
"தேங்க்ஸ்..." அவன் காபியை உறிஞ்ச ஆரம்பித்தான்...
அவனுக்குத்தெரியும்.. அடுத்த விசாரணையை ராஜேஸ்வரி ஆரம்பிப்பாள் என்று.. அவளும்
"அப்புறம் தம்பி..." என்று ஆரம்பித்தாள்...
"சொல்லுங்க..."
"ராதிகாவை நீங்க எங்கே பார்த்தீங்க...? அவ ஸ்கூட்டி என்ன ஆச்சு...? ரிப்பேரா..? வழியில் நீங்க பார்த்து உதவிக்கு வந்திங்களா..? அவ ஸ்கூட்டியை மெக்கானிக் ஷாப்பில விட்டிருக்கிங்களா..?"
மற்றவர்கள் அடுத்தடுத்து தொடுத்த கேள்விகளை... ஓரே வீச்சில் கேட்கும் ராஜேஸ்வரியின் சாமர்த்தியம் அன்றுபோல இன்றும் பாலமுரளியைக் கவர்ந்தது...
'சும்மாவா என் ஆளு லேடி ஹிட்லருன்னு பெயர் வைச்சிருக்கா....'
அவன் காலிக்காபிக் கோப்பையை எதிரிலிருந்த டீப்பாயில் வைத்து விட்டு நிமிர்ந்து அமர்ந்தான்.. ராஜேஸ்வரியின் முகத்தை நேர்கொண்ட பார்வை பார்த்தபடி நிதானமாக பேச ஆரம்பித்தான்...
"ராதிகாவை நான் வழியில் பார்க்கலை.. இன்னைக்கு நாங்க இரண்டுபேரும் சேர்ந்து உங்க வீட்டுக்கு வருகிறதா இருந்தது... அதனால என்காரில் ஏறி அவ வந்திட்டா..."
ராதிகாவை வெகு உரிமையுடன் இயல்பாக 'அவள்.. இவள்...' என்று அவன் குறிப்பிட்டதில் ராஜேஸ்வரி திடுக்கிட்டுப் போனாள்...
'இதென்ன.. கிணறு வெட்டாமலே பூதம் கிளம்புது...'
சங்கரைப் போன்ற கோடிஸ்வரன் வீடு தேடிவந்து பெண் கேட்டுவிட்டுப் போயிருக்கும் இந்த வேளையில் பாலமுரளியின் வரவையும்.. பேச்சையும் அவள் அவ்வளவாக ரசிக்கவில்லை... அவள் மனதில் கலவரம் சூழ்ந்தது...
"உங்களை எங்களுக்கு அவ்வளவாத் தெரியாது தம்பி..."
"ராதிகாவுக்கு என்னை நல்லாவே தெரியும்..."
"அவ வீட்டில் சொல்லலை..."
"அதைச் சொல்லத்தான் நாங்க சேர்ந்து வந்திருக்கோம்..."
என்ன சொல்லப் போகிறீர்கள் என்ற கேள்வியை ராஜேஸ்வரி கேட்கவில்லை... அங்கே எள் விழுந்தால் கூடக் கேட்கும் அளவில் அமைதி வந்திருந்தது... கிருஷ்ணமூர்த்தியின் முகத்தில் சிந்தனை படிந்திருந்தது.. கீதாவின் கண்களில் எதையோ அறிந்து கொண்ட தெளிவு தெரிந்தது.. சுந்தர் கைகட்டி இமைக்காமல் பாலமுரளியையே பார்த்துக் கொண்டிருந்தான்...
அனைவரும் அவன் பேச்சை மட்டுமே செவிமடுத்துக் கொண்டிருக்க.. பாலமுரளி... அந்த நிசப்தத்தைக் கிழித்தான்...
"நானும் ராதிகாவும் ஒருத்தரையொருத்தர் உயிருக்குயிராய் காதலிக்கிறோம்... எனக்கு அப்பா இல்லை... அம்மா மட்டும்தான்.. ஒரே அக்காவை திருநெல்வேலியில் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்-கோம்... குடும்பத்தோடு பெண் கேட்டு வருவதா இருந்தேன்.. அம்மாவுக்கு திடிர்ன்னு உடம்பு சரியில்லாம போச்சு... அவங்களைக் கவனிச்சுக்கிட்டு இருந்தப்போ இங்கே சங்கர் பெண் கேட்டு வந்திட்டார்... ராதிகா உடனே எனக்குப் போனில் தகவல் சொன்னா... அம்மா ஹாஸ்பிடலில் இருந்த அந்த நிலைமையிலே என்னாலே எதுவும் செய்ய முடியல.. இப்ப அம்மாவை வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்திட்டோம்.. நிலைமை சரியானதினால நான் முதல்ல உங்ககிட்ட பேசிட்டு அப்புறமாய் குடும்பத்தோட வந்து பெண் கேட்கலாமுன்னு கிளம்பி வந்தேன்..."
பாலமுரளி பேசப்பேச.. கிருஷ்ணமூர்த்தி மகளின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தார்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,9,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,40,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,3,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -47
அம்மம்மா.. கேளடி தோழி...! -47
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-47.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-47.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy