அம்மம்மா.. கேளடி தோழி...! -46

46 உன் கையால் என்னைக் கொன்றுவிடு சந்தோசமாக நான் சாகிறேன்... அவனது கோபமுகத்தையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளுக்குள்...


46
உன் கையால் என்னைக் கொன்றுவிடு
சந்தோசமாக நான் சாகிறேன்...

அவனது கோபமுகத்தையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான் பாலமுரளி...
'என்ன... இப்படிப் பார்த்து வைக்கிறா..' அவனுக்குள் ஆசை பொங்கியது...
"என்னடி ஆச்சு..?" அவளிடமே அவன் காரணம் கேட்க...
"என்ன.. என்னடி ஆச்சு..?" என்று எரிந்து விழுந்தாள் ராதிகா...
"என்னவோ காலம் காலமா என்னை உருகி உருகி காதலிக்கிறவளைப் போல இப்படிப் பார்த்து வைக்கறியே.. என்ன விசயம்..?"
"ஐயா சாமி.. உங்களைப் பார்க்காம ரோட்டைப் பார்த்தாலும் குதிச்சுஓடப் போறியான்னு கேட்கறிங்க.. உங்களைப் பார்த்தாலும் என்னடி இதுங்கறிங்க.. உங்களை நம்பி ஒருத்தி காரில் ஏறிக் கூடவந்தா இப்படித்தான் இம்சை பண்ணுவீங்களா..?" சண்டைக் கோழியாய் சிலிர்த்தாள் ராதிகா...
"என்னை நம்பி காரிலேயே கூட வர முடியாதவ.. வாழ்க்கை முழுவதும் எப்படிக் கூட வரப்போகிற..?" அவன் கித்தாய்ப்பாக புருவங்களை உயர்த்தினான்..
"வேணாம்.. விட்டுவிடுங்க.. இப்படியே காரை நிறுத்துங்க.. நான் இறங்கி என் வீட்டைப் பார்த்துப் போய் சேருகிறேன்.." ராதிகா கார் கதவில் கைவைத்தாள்...
"இதை விடவே மாட்டியா..? விட்டால் நீ வீட்டுக்கா போய் சேருவ..? அவனைப் பார்க்க மகாபலிபுரத்துக்குப் போய் சேருவ.. எனக்கு உன்னைத் தெரியாதா..? எதுடா சாக்குன்னு துடிக்கிறவளாச்சே நீ..." அவன் முகம் இறுகினான்...
"இந்த மூஞ்சியோட வந்து பெண் கேட்டா என் வீட்டில் யோசிப்பாங்க..."
முன் பக்க கண்ணாடி வழியாக சாலையை வெறித்தபடி சொன்னாள் ராதிகா...
ஜன்னல் பக்கமாகத் திரும்பினால் குதித்து ஓடப் போகிறாயா என்று கேட்டு வைக்கிறான்.. சரி.. அவன் முகத்தையாவது பார்த்து வைக்கலாம் என்றால் அவனிடம் மயங்கிப் போய் கிடப்பவளுக்கு அவன் மேல் ஆசை.. ஆசையாக வந்து தொலைக்கிறது.. அதை அவளது பார்வை காட்டிக் கொடுத்து விடுகிறது.. அதை அவன் கண்டு கண்டுபிடித்துத் தொலைத்தும் விடுகிறான்.. அதற்கும் ஒரு வியாக்கினத்தை பிட்டுப் பிட்டு வைக்கிறான்...
அவள்தான் என்ன செய்வாள்..? எதற்கு வம்பு என்று ஜன்னல் பக்கமும் திரும்பாமல்.. ஜாக்கிரதையாக அவன் முகத்தையும் பார்க்காமல் சாலையில் பார்வையைப் பதித்தாள்...
"இருக்கிற மூஞ்சியோடதான் வந்து பெண் கேட்க முடியும்... ஏன் இந்த மூஞ்சிக்கென்ன..உனக்குப் பிடிக்கலையா..?" அவன் புருவங்கள் மீண்டும் உயர்ந்தன...
'எனக்குப் பிடிச்சுத் தொலைச்சிருக்குடா.. உனக்குத்தான் அது புரிஞ்சு தொலைக்கலை...'
"உடனே வாயடைச்சுப் போயிருமே.. அது என்னடி உனக்கு வெள்ளைத் தோலின் மேலே அப்படியொரு மயக்கம்..?"
'உன் கலர்தான் எனக்குப் பிடிச்ச கலருடாமச்சான்.. இதை உன்கிட்ட யாரு சொல்றது..உன்மேல எதுக்காக இப்படியொரு மயக்கம் வந்து தொலைச்சிருக்குன்னு நான் தவியாய் தவித்துக்கிட்டு இருக்கேன்.. உனக்கு கிண்டலும்.. கேலியுமா இருக்கா..?'
"இதைப் பாருடி.. உனக்காக என் மூஞ்சியை மாத்திக்க என்னால முடியாது.. உன் மன்மத ராஜா சங்கரைப் போல ஆகனுமுன்னா அதுக்கு நான் பிளாஸ்டிக் சர்ஜரியைத்தான் பண்ணியாகனும்.. அப்படியெல்லாம் அடுத்தவன் மூஞ்சியைப் போல என் மூஞ்சியை ஆக்கிக்கிட்டு அழகுரதி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்கிற கட்டாயம் எனக்கில்லை.. நான் நானாத்தான் இருக்க முடியும்.. என்ன சொல்ற.. பொண்ணு கேட்டு வரவா.. இல்லை.. இப்படியே திரும்பிப் போகவா..?"
"அதானே பார்த்தேன்.." ஒரு மார்க்கமாக அவனைப் பார்த்தபடி சொன்னாள் ராதிகா...
"எதைப் பார்த்தே..? அப்போ பிடிச்சு ரோட்டைப் பார்த்துக்கிட்டுத்தான வர்ற.. என் மூஞ்சியையா பார்த்த..?"
'இதுதான் விசயமா..?'
"ஹலோ.. என்னைச் சொல்லிக்கிட்டு.. எதுடா சாக்குன்னு நீங்க அலைகிறீங்களா..? தான்திருடன் பிறரை நம்ப மாட்டான்னு சும்மாவா சொன்னாங்க..."
"அது தான் திருடியைப் பத்திச் சொன்னது.. திருடனைப் பத்தி யாரும் சொல்லலை... நீ பழமொழியை மாத்தாதே.."
"ஏன் மாத்தக் கூடாது...? எழுதி வைச்ச ஆண்குலத் திலகமெல்லாம் பெண்களுக்கு ஆயிரம் அடைமொழிகளையும்... பழமொழிகளையும் எழுதிவைச்சுட்டுப் போவீங்க.. அதை அப்படியே நாங்க ஏத்துக்கனுமா..?"
"ஏத்துக்காதே.. தூக்கி தூரப் போட்டுரு.. நீ யாரு..? தொட்டவனை விட்டுட்டு.. வேற ஒருத்தனைக் கட்டிக்க நினைச்சவளாச்சே..."
"நீங்க மட்டும் என்னவாம்... தொட்டவளைக் கட்டிக்கிற கடமையிலிருந்து தப்பிச்சு ஓட நினைக்கிற ஆளாச்சே..."
"அடிச்சுப் பல்லைக் கழட்டி விடுவேன்.. நான் அப்படி ஆளுன்னு நீ கண்டயா..? இப்போ எதுக்காக உன் வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கேன்..?"
"நான் அடுத்தவனைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுங்கிறதுக்காக வந்துக்கிட்டு இருக்கீங்க.. எனக்காக வரலை..."
ராதிகாவின் வார்த்தைகளில் பொதிந்திருந்த துக்கத்தில் ஒர் கணம் பாலமுரளி மௌனித்தான்... பின் மௌனம் கலைத்துப் பேசினான்...
"கண்ணைச் சுற்றி கருப்புத்துணியைக் கட்டிக்கிட்டு கழட்ட மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்காதே ராதிகா.. நான் இந்த அளவுக்கு கீழே இறங்கிப் போனது உனக்காகத்தான்.. அதை முதலில் புரிஞ்சுக்க..."
"நான் புரிஞ்சுக்கிறது இருக்கட்டும்.. முதலில் சிரிச்ச முகமாய் என் வீட்டுக்கு நீங்க வரனும்ங்கிறதை நீங்க புரிஞ்சுக்கங்க.. அதை விட்டுவிட்டு.. என் மூஞ்சி இப்படித்தான் இருக்கும்ன்னு வியாக்கினம் பேசி என்னை நோகடிக்க வேணாம்..."
"சிரிப்பு வந்தாத்தானே சிரிக்க முடியும்...?"
"இப்ப என்ன.. துயரமா வந்திருக்கு..? இதுக்குத்தான் நான் சொன்னேன்.. இஷ்டமில்லாம என்னைப் பெண் கேட்டு வர வேணாம்ன்னு... அதைச் சொன்னாலும் குத்தமுன்னு என்மேல பாயறிங்க..."
"இஷ்டமில்லாமலா உன்னைத் தொட்டேன்..?"
"அப்புறமும் எதுக்காக உம்முன்னு முகத்தை வைச்சுக்கனும்..?"
"நீ உம்முன்னு ரோட்டைப் பார்த்துக்கிட்டு.. இவன் கிட்டே தாலி வாங்கிக்க வேண்டிய விதி வந்திருச்சேன்னு நொந்துக்கிட்டே வந்தா என்மூஞ்சி.. சிரிச்ச மூஞ்சியாவா இருக்கும்..?"
'இவன் இப்படி நினைக்கிறானா..?'
ராதிகா சட்டென்று திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள்... அதே நொடியில் அவனும் அவளைப் பார்த்தான்.. பார்வைகள் பின்னிப் பிணைந்தன.. அவள் பார்வை காதலைச் சொல்லியது.. அவன் பார்வை அதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவியாய் தவித்தது...
"ராதிகா..?" அவன் கேள்வியாக அழைத்தான்...
"உங்க முகத்தைப் பார்க்காம இனி யார் முகத்தை நான் பார்ப்பேன்..?"
"ஏய்ய்..."
"என்னை நீங்க தொட்டுட்டிங்க... உங்க கூட நான் வாழ்ந்தால்தான் அது வாழ்க்கையா இருக்கும்.. சங்கர் கூட வாழ்ந்தா.. அது அவர் போட்ட பிச்சையாக இருக்கும்.. வாழ்நாள் பூராவும் ஒரு பிச்சைக்காரியாய் வாழ நான் ஆசைப்படுவேனா..?"
"என் பெண்டாட்டியை நான் விட்டுக் கொடுப்பேனா..?"
"எனக்கு இது போதும்..."
"எனக்கும் இது போதும்..."
பாலமுரளியின் முகத்தில் கடினம் மறைந்து.. ஒர்விதமான தெளிவுடன் கூடிய மென்மை வந்திருந்தது...
"ஆனாலும் நீ அவனைத் தேடிக் கிளம்பினயேடி..."
"வேற வழி...? என் நிலைமையை உங்ககிட்டச் சொல்லிட்டேன்... ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு நகரம் அழியலாம்... ஒரு நகரைக் காப்பாற்ற ஒரு கிராமம் அழியலாம்... ஒரு கிராமத்தைக் காப்பாற்ற ஒரு குடும்பம் அழியலாம்.. ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு நபர் அழியலாம்.. இது உங்களுக்கும் தெரியும் தானே.. என் குடும்பத்தைக் காப்பாற்ற நான் அழியத் துணிஞ்சேன்.." ராதிகா வாய்க்கு வந்ததை சொல்லி வைத்தாள்...
சங்கருடனான திருமணத்தை தன் அழிவென்று ராதிகா சொல்லி விட்டதில் பாலமுரளிக்கு பெருத்த மனநிறைவு ஏற்பட்டது...
"அது உனக்கு அழிவாடி..?"
"பின்னே.. வேறென்ன..? நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்.. இதுக்கப்புறம் உங்க இஷ்டம் தான்..."
"என் இஷ்டம் நீதான்..."
"அதை இந்த சிரிச்ச முகத்தோடயே வந்து என் வீட்டார் முன்னாலே சொல்லுங்க..."
"உன் வீட்டாளுக என்ன பெரிய இவங்களா..? இப்படி பயமுறுத்தற...?"
"உங்களுக்குத் தெரியாது.. கீதா இருக்கிறாளே.. அவ செம விவரம்.. ஒரே பார்வையிலேயே உங்க மனசை படம் பிடிச்சுருவா..."
"அதுதான் எனக்குத் தெரியுமே.. அன்னைக்கு நான் பார்த்தேனே... ஆனாலும் அழகான மைத்துனியைப் பத்தி எப்போற்பட்ட டிப்ஸை அள்ளி வீசுற... ஆனாலும் உனக்கு பரந்த மனசுடி ராதிகா.. நீதாண்டி என் தர்ம பத்தினி..."
"கொலையும் செய்வாள் பத்தினின்னு கேள்விப் பட்டிருக்கீங்களா..."
"ஊஹீம்.. கணவனே கண்கண்ட தெய்வம்ன்னு என் அம்மா சொல்கிறதைத்தான் கேள்விப்பட்டிருக்கேன்.."
"இப்ப காலம் மாறிப் போச்சு.. நான் சொன்ன ரகமாய்த்தான் நானிருப்பேன்.. அதனால..."
"அதனால..?"
"நீங்க பத்திரமா இருந்துக்கங்க..."
"எதுக்குடி வம்பு..? உன் தங்கச்சிகிட்ட இருந்து இரண்டடி தள்ளியே நிக்கிறேன்.. போதுமா..?"
"போதாது.. இருநூறு அடி தள்ளி நிக்கனும்..."
"பார்க்கலாம்.. உன் தம்பி படுஸ்மார்ட்டாச்சே..."
"அவன் கீதாவைவிட படுவிவரம்.. லேசர் பார்வை அவனுக்கு..."
"மைத்துனியை கரெக்ட் பண்ணினாத்தான் தப்பு... மச்சினனை கரெக்ட் பண்ணினா தப்பே இல்லைடி... நான் பார்த்துக்கறேன்..."
"அப்புறம் அம்மா..."
"அவங்க தங்கமாச்சே.. அறிவுன்னா அறிவு.. அப்படியொரு அறிவு..."
"அது உங்களுக்கு... வீட்டிலே அவங்க லேடி ஹிட்லர்.."
"அதானே.. பார்த்தேன்.. அவங்களுக்கும் பட்டப் பெயரா..? வீட்டில்கூட அராஜகம் பண்ணுவியாடி..."
"அதில உங்களுக்கு எதுக்கு இத்தனை வருத்தம்..?"
"எனக்கும் அம்மா இருக்காங்க.. அக்கா.. அக்கா குடும்பம்ன்னு இருக்கு.. உன் பட்டப் பெயரில இருந்து அவங்க தப்பிக்க வேணாமா..?"
"வருமுன் காக்கறிங்க.. பிரமாதம் போங்க..."
"உன் அப்பா அன்னைக்கே என்கிட்ட முறைப்பாய்த்தான் பேசினார்..."
"அவர் கண்டிப்பானவர்.. எதையும் யோசிச்சுத்தான் முடிவு சொல்லனும்பார்..."
"சங்கரைப் பத்தி மட்டும் யோசிக்காம முடிவு சொல்லிட்டாரா..?"
"ஒரு டிப்ஸ் சொல்லவா..?"
"சொல்லுடி.. நான் யாரு.. உன் புருசன்.. எனக்கு நீ டிப்ஸ் தராம வேற யாரு தருவா..."
"ஐஸ் வைக்க வேணாம்.. அப்பாவுக்கு சங்கரோட பேரண்ட்ஸை பிடிக்காது..."
இந்தத் தகவலில் பாலமுரளியின் கண்கள் ஒளிர்ந்தன...
"அட.. அருமையான மாமனாரா இருக்காரே... அப்புறமும் எப்படி சங்கருக்கு பொண்ணு கொடுக்கச் சம்மதிச்சார்..?"
"அம்மாவுக்கு நல்ல இடம்ங்கிற எண்ணம்..."
"நானும் நல்ல இடம்தாண்டி..."
"யாரு இல்லேன்னு சொன்னது..?"
"கூடுதலா நீயும்.. நானும் காதலிக்கிறோம்கிற பொய் வேற இருக்கு..."
பாலமுரளி குத்தலை ஆரம்பிக்க.. அதற்கும் ஒரு பதிலை வைத்திருந்தாள் ராதிகா...
"நான் உங்களைக் காதலிக்கிறது உண்மையோ.. பொய்யோ... சங்கரைக் காதலிக்கலை.. அது உண்மை.."
"இதை என்னை நம்பச் சொல்கிறியா..? சங்கரைப் பத்தி நீ பேசின பேச்சு.. என் செல் போனில் இருக்கு..."
"என்ன பேசினேன்..? அவரைக் காதலிக்கிறேன்னு ஒரு வார்த்தை பேசியிருக்கேனா..? கல்யாணம் பண்ணிக்கப் போகிறவரின் பெருமைகளைப் பத்திப் பேசினேன்.. அதை எல்லாப் பொண்ணுகளும்தான் பேசுவாங்க..."
"அவன் உன்னைக் காதலிக்கிறதாய் சொன்னயே.."
"அதை இல்லைன்னு யாரு சொன்னது..? நான் அவரைக் காதலிக்கிறேன்னு சொல்லலையே..."
"என்னதாண்டி சொல்ல வர்ற..?"
"எனக்கு சங்கர் மேல காதல் இல்லை.. அவர் மேல மரியாதை இருக்கு.. நல்ல அபிப்ராயம் இருக்கு..."
"அது போதாதா..?"
"எங்க வீட்டிலே அவருக்குத்தான் என்னைக் கொடுக்கனும்னு முடிவு பண்ணிட்டாங்க.. அவர் நல்லவராய் இருக்கிறார்... என்னைக் காதலிக்கிறவராய் இருக்கிறார்.. நானும் இப்படி இடத்திலே கல்யாணம் பண்ணிக்கப் போகிற பொண்ணுக எப்படிப் பேசுவாங்களோ... அதையே பேசினேன்.. இதில் ஒன்னும் தப்பு இருக்கிறதா எனக்குத் தெரியலை..."
"உனக்கு எதுவுமே தப்பாத் தெரியாது..."
குற்றச்சாட்டை.. கோபமே இல்லாத குரலில் சொன்னான் பாலமுரளி...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -46
அம்மம்மா.. கேளடி தோழி...! -46
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-46.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-46.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy