அம்மம்மா.. கேளடி தோழி...! -44

44 நீ தொட்டவுடன் விட்டுச்செல்ல.. நானொன்றும் கிள்ளுக்கீரையல்ல... கட்டிலின் மீது முழங்கால்களை மடித்துக் கட்டியபடி அமர்ந்திருந்த ராத...


44
நீ தொட்டவுடன் விட்டுச்செல்ல..
நானொன்றும் கிள்ளுக்கீரையல்ல...

கட்டிலின் மீது முழங்கால்களை மடித்துக் கட்டியபடி அமர்ந்திருந்த ராதிகா... கத்தியை விடாமல் இறுக்கிப் பிடித்திருந்தாள்...
அவள் முன்னால் கிடந்த சோபாவில் கால்மேல்.. கால் போட்டு அமர்ந்த பாலமுரளி...
"இன்னும் எதுக்காக அந்தக் கத்தியைக் கட்டிக்கிட்டு அழுகிற..?" என்று எரிந்து விழுந்தான்..
"உங்களைக் கட்டிக்கிட்டு அழ முடியலையே.. அதனால்தான் இந்தக் கத்தியையாவது கட்டிக்கிட்டு அழலாமுன்னு வைச்சிருக்கேன்..." அவள் விடாமல் பதில் கொடுத்தாள்...
"பேச்சுக்கு எதிர் பேச்சு பேசலைன்னா உனக்கு சாப்பாடே உள்ளே இறங்காதா..?"
"அப்படித்தான் வைச்சுக்கங்களேன்..."
அவள் வெடுக்கென்று பதில் சொன்னாள்... அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு.. அவளின் களைத்த.. கலைந்த தோற்றம்.. ஒர்விதமான மனக் கிளர்ச்சியை உண்டு பண்ணியது.. முதல்நாள் அவளைத் தொட்ட நினைவில் அவன் உடலில் சூடேற.. அவளது உடம்பின் மீதுதான் காதல் என்ற அவளின் குற்றச்சாட்டு நினைவுக்கு வந்து வேகம் குறைந்தது...
இருந்தாலும்.. அவளுடன் வாயாட அவன் ஆசைப்பட்டான்...
"வைச்சுக்கவா..? அதுக்குத்தான் நான் நேத்தே சரின்னு சொல்லிட்டேனே.. இந்த வீட்டிலேயே உன்னை இருக்கச் சொன்னேன்.. நீ தானே மாட்டேன்னு அடம்பிடிச்சு ஓடின..."
'கொழுப்பு...!' அவள் முறைத்தாள்...
"மெல்ல... பார்வையிலேயே பொசுக்காதே..."
"அதுக்கு வேற ஆளைப் பாருங்க..."
"அதெல்லாம் என் பரம்பரையிலேயே கிடையாதுடி.. கட்டிக்கிறதா இருந்தாலும்.. வைச்சுக்கிறதா இருந்தாலும்.. நீ ஒருத்திதான்.. வேற ஆளைப் பார்க்க என்னாலே முடியாது..."
அவன் இதையும் யதார்த்தமாகத்தான் சொன்னான்.. அவளது நைந்த உள்ளத்தில் புது ரத்தம் பாய்ந்தது...
"இந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம்..."
"கதையா..?"
"கதைதான்.. வேற என்ன..? நீங்க உங்க வீட்டுக்கு ஒரே மகன்.. காலம் பூராவும் கல்யாணம் பண்ணிக்காமலே நீங்க இருக்க முடியுமா..? உங்க வீட்டிலேதான் அதுக்கு விட்டு விடுவாங்களா..?"
"நீ பொம்பள... உன்னால் அது முடியாது.. நான் ஒப்புக்கிறேன்... நான் ஆம்பள.. என்னால் அது முடியும்.. அதோட.. எனக்குத்தான் நீ இருக்கயே..."
"நான்தான் சங்கரைக் கல்யாணம் பண்ணிக்கனும்கிற திட்டத்தோட இருக்கேனே.."
"திரும்பவும் கொலைவெறியைக் கிளப்பாதேடி.. சொல்லிட்டேன்.. மனுசனா இருக்க விடு..."
"நேத்தில இருந்து நீங்கதான் மனுசனா இல்லியே..."
ராதிகா மனம் தாளாமல் குமுறி விட்டாள்.. பாலமுரளி உதட்டைக் கடித்துக் கொண்டு அவளைப் பார்த்தான்...
"அதுக்குக் காரணம் யாரு..? நீ தானே..."
"போதும்... இதையே திருப்பித் திருப்பிச் சொல்லாதீங்க... எனக்கு அலுத்துப் போச்சு..."
"எது அலுத்துப் போச்சு.. நானா..?"
ராதிகா அவனை இமைக்காமல் பார்க்க... பாலமுரளி கொஞ்சம் அடங்கினான்...
"ஓகே.... ஓகே... நான் இன்னைக்கே உன் வீட்டுக்கு வர்றேன்..."
"எதுக்கு...?"
"ம்ம்ம்.. உன் அம்மா போடற காபி நல்லாயிருக்குமில்ல... அதைக் குடிச்சிட்டு வரலாமுன்னுதான்.. வேற எதுக்கு..? எரிச்சலைக் கிளப்பாதேடி.. நான் சொல்கிறதைக் கேளு..."
"சொல்லுங்க..."
"நீயும்.. நானும் காதலர்கள்ன்னு பொய் சொல்லப் போறேன்..."
'அட மாக்கானே...! அது தாண்டா உண்மை...'
"நீ என்னைத்தவிர வேற ஒருத்தனை மனசாலேயும் நினைக்க மாட்டேன்னு அடுத்த பொய்யைச் சொல்லப் போறேன்..."
'அதுவும் உண்மைதாண்டா..'
"அதனால.. சங்கரைக் கல்யாணம் பண்ணிக்க நீ மனசார சம்மதிக்க மாட்டேன்னு கப்ஸா விடப் போறேன்.."
'நான் எங்கேடா அவனைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்..? உன்னைக் கண்டு பிடிக்கவும் வழி தெரியாம.. கல்யாணத்தை நிறுத்தவும் வழி தெரியாம.. போராடிக்கிட்டு இருந்தப்ப.. ஷோபாவைத் தூண்டிவிட்டு கல்யாணத்தை நிறுத்த நான் கண்டுபிடிச்ச வழிடா அது...'
"இதையெல்லாம் உன் வீட்டில் நம்பனும்.. அதுதான் என் கவலை..."
'நம்பாம என்ன செய்யப் போகிறாங்க...'
ராதிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை.. இவன் எதற்காக புதிதாக இந்தக் கவலையைச் சொல்கிறான் என்று பிடிபடாதவளாய் அவன் முகத்தைப் பார்த்தாள்...
"இல்லை.. நீ சங்கர்கூட காதல்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கவளாச்சே.. அதைத்தான் எப்படி உடைக்கிறதுன்னு தெரியலை..."
'நீ ரொம்ப கண்ட...'
"எது எப்படியிருந்தாலும் இப்ப நான் வந்து உன்னைப் பெண் கேட்டுத்தானே ஆகனும்..?"
பாலமுரளி சொன்ன விதத்தில் ராதிகா புருவங்களை உயர்த்தினாள்...
"அடேங்கப்பா.. ரொம்பத்தான் சலித்துக்கிறதைப் போல இருக்கு.. இவ்வளவு சலிப்பா நீங்க ஒன்னும் எனக்கு வாழ்க்கைப் பிச்சை கொடுக்க வேணாம்... இஷ்டமிருந்தா என்னைப் பெண் கேட்டு வாங்க..."
"இல்லைன்னா...?"
"விட்டு விடுங்க..."
"நீ உடனே அந்த சங்கரைத் தேடி ஓட தோதாயிருக்கும்... அதுதானே.. என்னதான் சொல்லு..நீ அந்த சங்கரைத் தேடி ஓட காரணம் தேடிக்கிட்டே அலைகிறடி.. லேசாய் ஒரு சந்து கிடைச்சாக்கூட கெட்டியாய் பிடிச்சுக்கிற... நான் எதைச் சொன்னாலும்.. அதில ஏதாவது ஓட்டை.. உடைசல் இருக்கான்னு கண்ணில விளக்கெண்ணையை விட்டுக்கிட்டு தேடிக் கண்டுபிடிக்கிற பாரு.. கெட்டிக்காரிதாண்டி நீ..."
பாலமுரளி அவளை வெகுவாக சிலாசிக்க ராதிகாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது...
"ஹலோ.. என்ன..? உங்களுக்குத்தான் பேசத் தெரியும்ன்னு மூச்சுவிடாம பேசிக்கிட்டே போறீங்க..? உங்களுக்குத்தான் பேசத் தெரியுமா..?"
"உனக்கும் பேசத் தெரியுமா..?"
"நானென்ன ஊமையா...?"
"அப்படி சின்னப் பப்பா கூடச் சொல்லாது.. நீ வாயைத்திறந்தா எங்க தென்காசிப் பட்டினமே கிடுகிடுன்னு ஆடிருமே.. யாரு நீ..?"
"நான் யாருன்னு தெரியாமலா என்னை உட்கார வைச்சு இவ்வளவு நேரமும் உணக்கையா பேசிக்கிட்டு இருந்தீங்க..?"
"நேத்துக் கதையை விட்டுட்டியே.." பாலமுரளி கண் சிமிட்டினான்...
'நீ அதிலேயே இரு...' ராதிகா முகத்தை திருப்பிக் கொண்டாள்...
"என்னடி பேச்சைக் காணோம்..? என்னமோ பட்டிமன்றப் பேச்சாளரைப் போல.. எனக்கும் பேசத் தெரியும்ன்னு வீராவேசமாய் வாயைத் திறந்த..? இப்ப வாயை மூடிக்கிட்டு.. முகத்தைத் திருப்பிக்கிட்ட..? என்ன ஆச்சு..? பேச்சு வரலையா..? நீ ஊமையா..?"
அவளது முகச்சிகப்பை பார்த்து விடும் துடிப்புடன் பாலமுரளி வம்பிழுக்க.. ராதிகா எரிதணலாய் அவனைப் பார்த்தாள்...
"நான் பேசினா.. நீங்க தாங்க மாட்டிங்க..."
"இது எதையும் தாங்கும் இதயம்டி.. நேத்து இந்நேரம் என்கூட குடும்பம் நடத்திட்டு.. இன்னைக்கு இந்நேரம் வேற ஒருத்தனைத் தேடி நீ ஓடிக்கிட்டு இருக்கிறதையே தாங்கிக்கிட்டு உன்கூட பேசிக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்.. மத்ததையா தாங்கமாட்டேன்..? நீ பேசு.. பேசு...."
பாலமுரளியின் எகத்தாளமான வார்த்தைகள் ராதிகாவின் இதயத்தை குத்தூட்டியைப் போலக் கிழித்தன...
எதையும் தாங்கும் இதயம் இருப்பது இவனுக்கா.. இல்லை தனக்கா என்ற கேள்வியை தனக்குள் அவள் புதைத்துக் கொண்டாள்...
"குடும்பம் நடத்தியவர் எதுக்காக அப்படியே ஓடினீங்க...?"
"உன்னை என்கூட இருக்கச் சொன்னேனா இல்லையா...?"
பாலமுரளி நியாயம் பேசிய லட்சணத்தைக் கேட்டவளுக்கு கொலைவெறி கிளம்பியது..
"நீங்க இருக்கச் சொன்னவுடனேயே நான் இங்கேயே இருந்துவிட முடியுமா..?"
"ஏன் முடியாது..? சங்கரைத் தேடி மகாபலிபுரம் போகமட்டும் முடியும்.. இது உனக்கு முடியாதா..?"
சுற்றிச்சுற்றி இவன் அந்த ஒன்றில் மட்டும்தான் வந்து நிற்பான் என்ற நினைவில் ஆயாசமடைந்தாள் ராதிகா...
இப்போது மட்டுமல்ல.. வாழ்நாள் பூராவும் இந்தப் பேச்சு தன்னைத் தொடரப் போகிறது என்பதை அறிந்திருந்தும் அதைத் தடுக்கும் வகையறியாதவளாக மௌனியானாள் ராதிகா...
அவளது அந்தரங்கத்தில் இருந்தவனே.. அவளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்திக் கொண்டிருந்தான்.. தான் குற்றமற்றவள் என்பதை அவள் நிருபிக்கும் வாய்ப்பையே அவளுக்கு அளிக்காமல் தண்டனையைக் கொடுத்து விட்டான்... அந்தத் தண்டனை அவளுக்கு மட்டுமானது என்றால் சந்தோசமாக அவள் அதைத் தாங்கிக் கொண்டிருப்பாள்.. அப்படியில்லாமல்.. அவளையும் தாண்டி அவளது குடும்பத்தையும் நிம்மதியிழக்க வைக்கும் தண்டனை என்பதால்தான் அவள் தொடர்ந்து பாலமுரளியின் குற்றச்சாட்டு உண்மை என்ற விதத்திலேயே அவனிடம் நடிக்க வேண்டி வந்து விட்டது..
அவளது அந்தரங்க மனதை அறிந்தவர் யார்..?
'கடவுளுக்குத் தெரியாதா..? அவர் அறிய மாட்டாரா..?' அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்..
இதுதான் உன் வழி என்று கடவுள் அவளுக்கு விதித்து விட்டார்... அவர் காட்டிய பாதையில் அவள் நடக்க ஆரம்பித்திருக்கிறாள்.. இனி வருவதும்.. வாழ்வதும்.. தெய்வத்தின் அருளில்தான் அடங்கியிருக்கிறது...
என்றாவது ஒருநாள் அவளது அந்தரங்க மனதில் அவன் மட்டுமே உறைந்திருப்பதை அவன் அறிந்து கொள்ளலாம்...
இல்லை... அப்படி ஒரு நாள் அவள் வாழ்வில் வராமலே போனாலும் போய் விடலாம்...
எது எப்படியிருந்தாலும்.. அவள் வாழ்க்கை அவனுடன்தான் என்று ஆகிவிட்டது.. அது ஒன்றே அவளுக்குப் போதுமானது...
வாழ்நாள் முழுவதும் வார்த்தை சாட்டைகளை அவள்மீது அவன் வீசிக் கொண்டேயிருக்கலாம்.. அதன் அடி அவளை வேதனைப் படுத்தாது..
முள்ளாக அவள் மனதை அவன் குத்திக் கிழித்துக் கொண்டேயிருக்கலாம்... அந்தக் கீறலில் ரத்தக்கசிவு ஏற்படாது...
கண்முன்னே நிற்கும் காதலியை துரோகியென்று நினைத்துக்கொண்டே அவன் கூடலாம்.. அந்தக் கூடலில் அவள் சுகத்தைத்தான் காண்பாள்.. துன்பத்தைக் காண மாட்டாள்...
அவன் கைபிடித்து அவனுக்குரியவளாக.. அவனை கணப்பொழுதும் பிரியாதவளாக.. வாழ்க்கைப் பாதையில் அவனைப் பின்பற்றி அவள் நடந்து விட்டால்.. அது ஒன்றே அவளுக்குப் போதும்.. வேறு எதுவும் அவளைப் பாதிக்காது...
"இது ஒன்னைக் கண்டு பிடிச்சு வைச்சிருக்கடி நீ.. வில்லங்கமான எந்தக் கேள்விக்கும் பதிலைச் சொல்ல மாட்ட.. ஊமையாகிவிடுவ.. மத்த நேரத்தில மனுசனைக் குத்தம் சொல்லி.. வாய் கிழிய பேசுவ..."
"நான்தான் சொல்லிட்டேனே.. நான் பேசினா நீங்க தாங்க மாட்டிங்கன்னு..."
"எதையும் தாங்கும் இதயம் எனக்கிருக்குன்னு நானும் சொல்லிட்டேனே.. அதுக்கான உதாரணத்தையும் அள்ளி விட்டேனே.. மறந்தா போச்சு...? வேணும்ன்னா திரும்பவும் அதை நினைவு படுத்தவா..?"
"வேண்டாம் வேண்டாம்..."
"எதுக்கு அலறுகிறவ..? நான் இல்லாததையா சொல்லிட்டேன்..."
"நான் யாரோ ஒருத்தரைப் பார்க்கப் போகலை..."
ராதிகா வெடுக்கென்று பேசிவிட.. பாலமுரளி முகம் கருத்தான்...
"ஓ.. அவன் உனக்கு யாரோன்னு இல்லைல்ல..? நான்தானே உனக்கு 'யாரோ..'? அவன் உனக்கு யாதுமானவன்.. நான்தான் வழியில் போன வழிப்போக்கன்.. இது தெரியாம பேசிட்டேனே..."
அவன் விட்ட சொல்லம்புகளில் இதயம் கிழிந்தாலும்.. அதைமூடி மறைத்து.. முகத்தில் எந்தவிதச் சலனத்தையும் காட்டாமல் மனதைக் கல்லாக்கிக் கொண்டாள் ராதிகா...
இது போர்க்களம்.. அவள் போராளி.. அவனது வார்த்தை அம்புகளுக்குப் பயந்து பின்வாங்கக் கூடாது.. பின் வாங்கவும் முடியாது...
"நிச்சயமாய்.. நீங்க சொன்னதுதான் உண்மை.. அது உங்களுக்கே தெரியும்.. அவர் என்னைப் பெண் கேட்டு பெத்தவங்களோடு என் வீடுதேடி வந்து என்னைப் பெத்தவங்ககிட்ட என்னைப் பெண் கேட்டவர்.. கல்யாணம் பேசி முடிச்சு கல்யாண நாளை உறுதி பண்ணி விட்டுப் போனவர்.. இது எல்லாத்தையும் விட எனக்கு எது நடந்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாம என்னை ஏத்துக்கும் மனப்பக்குவமும்.. காதலும் உள்ளவர்.. இது எதையாவது நீங்க செய்தீங்களா..? இதில் ஒன்னாவது உங்ககிட்ட இருக்கா..?"
ராதிகா பதில் கணைகளைத் தொடுத்து விட்டாள்...
ஒரு நொடியில் அவளைத் தொட்டுத் தழுவி குடும்பம் நடத்தியவனை யாரோவாக்கி அவள் நிறுத்தி விட்டதைக் கேட்டவனின் ரத்தம் கொதித்தது...
அவனது வழக்கமான கோபம் பொங்கியெழ அவன் உன்மத்தம் பிடித்தவனானான்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -44
அம்மம்மா.. கேளடி தோழி...! -44
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-44.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-44.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy