அம்மம்மா.. கேளடி தோழி...! -43

43 வாளேந்தி போர் செய்ய காதல் போர்க்களத்தில் முடியுமா.. ? அவள் வார்த்தை வாளேந்தி போராளியாக அவன் முன்னால் நின்றாள்.. அவளை நிராயுதபா...


43
வாளேந்தி போர் செய்ய
காதல் போர்க்களத்தில் முடியுமா..?

அவள் வார்த்தை வாளேந்தி போராளியாக அவன் முன்னால் நின்றாள்.. அவளை நிராயுதபாணியாக்க அவன் முயன்ற போதெல்லாம் மிக எளிதாக வார்த்தைகேடயத்தின் உதவி கொண்டு அவற்றை முறியடித்தாள்.. அவன் யோசிக்க நேரமே கொடுக்காமல் வார்த்தை அம்புகளை எய்தாள்.. அவள் வீசிய அஸ்திரங்களை எதிர்கொள்ள அவன் பிரம்ம பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது..
இந்த யுத்த யுக்தி அவன் அறியாதது...
இது இந்தியப் பெண்கள் கையாளும் போர்முறை.. காலம்காலமாய் ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் முடக்கப்பட்ட பெண்... இந்த அஸ்திரங்களையும் போர் முறைகளையும் கையாண்டே தன் அடையாளம் அழிந்து விடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறாள்...
ராதிகாவின் தாய் ராஜேஸ்வரியும் இதே யுக்தியை தினம் தினம் கையாள்பவள்தான்.. அதைப் பார்த்து வளர்ந்த ராதிகாவிற்கு அதைப் பின்பற்றி போர் புரிய முடியாதா... என்ன..?
அவள் புத்தியைதீட்டி... அதன் கூர்மையின் துணை கொண்டு அவனை எதிர்த்து நின்றாள்.. அவளது இந்த எதிர்ப்பை எதிர்பார்க்காதவன் அது எதனால் வந்தது என்று அறிந்து கொள்ள முடியாமல் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருந்தான்...
சங்கருடனான அவளது திருமணத்தைப் பற்றிய பேச்சே இனிஇல்லை என்ற நிலைமையில்.. அவள் அவனது பேச்சை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்கியது அவனுக்குள் ஆவேசத்தை ஊட்டியது...
"நல்ல குடும்பத்துப் பொம்பளை பேசற பேச்சாடி இது..?"
"இதை நீங்க.. உங்க திருவாயால் சொல்லக்- கூடாது... என்குடும்பம் நல்ல குடும்பம்ன்னா.. உங்க குடும்பம் என்ன மாதிரியான குடும்பம்..?"
"ஏய்ய்ய்..."
"ரோசப்பட்டு ஒரு பிரயோஜனமுமில்லை.. நல்ல குடும்பத்தில் பிறந்த ஆம்பளை... உங்களை மாதிரி ஒரு காரியத்தைச் செய்யத் துணிவானா...?"
இந்தக் கேள்விக்கு பாலமுரளி.. என்ன பதிலைச் சொல்லுவான்..? அவன் பதில் சொல்ல முடியாமல் திணருவதை ஒர்விதமான மனத்திருப்தியோடு பார்த்தாள் ராதிகா...
புண்பட்டிருந்த அவளது நெஞ்சம் கொதித்தது.. அவனை நறுக்கென்று நான்கு கேள்விகள் கேட்காமல் விட்டுவிட அவள் தயாராக இல்லை...
"என்ன..? பதிலைக் காணோம்..."
"பேசுடி.. பேசு.. என்கூட குடும்பம் நடத்திட்டு.. அந்த சங்கரைத் தேடிப் போய்கிட்டு இருந்தவதானே நீ..? இதையும் நீ பேசுவ இன்னமும் பேசுவ..."
"நிச்சயமாய் பேசுவேன்.. நீங்க என்ன தாலிகட்டியா என்கூடக் குடும்பம் நடத்தினீங்க..? கோவிலுக்கு போய் விட்டு வீட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தவளை கடத்திக்கிட்டு வந்து பலவந்தம் பண்ணினீங்க.. இதை நான் கோர்ட்டுக்கு கொண்டு போனால் என்ன ஆகும் தெரியுமா..?"
"போக வேண்டியதுதானே..? அங்கே போகாமல்.. ஏன் அவனைத் தேடிக்கிட்டுப் போகிற...?"
"என் குடும்ப கௌரவம்ன்னு ஒன்னு இருக்கே.. அதுக்காக பார்க்கிறேன்.. இல்லைன்னா நடக்கிறதே வேற..."
"குடும்ப கௌரவம் பார்க்கிறயா..? நீயா..? உன்னைத் தொட்டவனை விட்டுவிட்டு.. வேற ஒருத்தனைத் தேடிப் போகிறயே.. இதுதான் உன் குடும்ப கௌரவமா..?"
"நம்ம நாட்டில் டைவர்ஸ்ன்னு ஒன்னு நடக்கிறதே இல்லையா..?"
ராதிகா நிதானமாகக் கேட்டாள்.. அவன் முகத்திலிருந்த எள்ளல் மறைந்தது ஒர்விதமான தீவிரம் குடிவந்தது..
"கல்யாணம் பண்ணிக்காமலே டைவர்ஸா...?"
"கல்யாணம் பண்ணிக்காமலே குடும்பம் நடத்தியவர் இந்தக் கேள்வியைக் கேட்கிறதை நினைச்சா ஆச்சரியமாயிருக்கு.. எது எப்படியோ இந்தப் பிரச்சனைக்கான தீர்வைத் தேடித்தான்.. சங்கரைத் தேடி நான் போனேன்.."
"போனா..? அவன் என்னத்தை கிழிச்சுருவான்..."
"என் கழுத்தில் தாலியைக் கட்டுவார்..."
ராதிகா உறுதியாகச் சொல்ல.. பாலமுரளியின் முகத்தில் வெறி வந்தது..
"ஏய்ய்..."
அவள் மீது பாயப் போனவன்.. அவள் கத்தியை அழுத்துவதில் வேகம் காட்டவும் நிதானித்துப் பின் வாங்கினான்...
"இந்தக் கோபத்துக்ல்லாம் நான் பயப்பட மாட்டேன் மிஸ்டர்... உங்க பூச்சாண்டி வேலையை வேற எங்கேயாவது போய் காட்டுங்க... நான் சங்கரிடம் பேசத்தான் போகிறேன்... எனக்கு நடந்ததைச் சொல்லத்தான் போகிறேன்... அவர் அதையும் மீறி என் கழுத்தில் தாலி கட்டத்தான் போகிறார்..."
"அடுத்தவன் தொட்ட பெண்ணின் கழுத்தில் அவன் தாலி கட்டுவானாடி...?"
"கட்டாயம் கட்டுவார்... அவருக்கு என் மேலிருக்கிற காதல் அப்படிப்பட்டது.. உங்களை மாதிரி உடம்பை நேசிக்கிற காதலில்லை... அவருடைய காதல்..! மனதை நேசிக்கிற காதல்தான் அவருடைய காதல்..!"
ராதிகா சரியான இடத்தில் தாக்கிவிட்டாள்...
"என்னடி சொன்ன..? நான் உடம்பை நேசிக்கிறவனா...?" பாலமுரளி கொதித்தான்...
"பின்னே... இல்லையா...? நேற்று நடந்ததிற்குப் பெயர் என்ன...?"
"அது உனக்குக் கொடுத்த தண்டனை..."
"தோடா.. இதை நான் நம்பனுமாக்கும்..."
ராதிகாவின் குரலில் இருந்த கேலியில் முரளியின் முகம் கன்றிவிட்டது...
"உன்னை அவன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னா... அதுதான் வழின்னு நினைச்சேன்... அதுக்குப் பின்னாலே நீ யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நினைச்சேன்.."
"ஓஹோ... யாரையும் கல்யாணம் பண்ணிக்காம காலம் பூராவும் நான் தனிமையில் இருக்கனும்... அதுதான் எனக்கு நீங்க கொடுத்த தண்டனை... எல்லாம் சரிதான்... என்வீட்டில் அப்படித் தனிமையில் நானிருக்க விட்டு விடுவாங்களா...?"
'இதை யோசிக்காம போயிட்டேனே...' பாலமுரளி விழித்தான்...
"சொல்லுங்க சார்... வாயில என்ன வைச்சிருக்கீங்க... கமர்கட்டா..? ஏன் வாயடைச்சுப் போச்சு...? என் குடும்பத்துக்கு நான் மூத்தவள்.. எனக்கு கல்யாணம் ஆனபின்னாலேதான் கீதாவுக்கும்.. சுந்தருக்கும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க... மூத்தவ கல்யாணமாகாம வீட்டில இருந்தா... அடுத்துப் பிறந்த பிள்ளைகளுக்கு பெண் கொடுக்கவும்... மாப்பிள்ளை கொடுக்கவும்.. யோசிக்க மாட்டாங்களா...?"
'ஆமாமில்ல...' பாலமுரளி யோசித்தான்...
"அதனால... நான் கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கிட்டுத்தான் ஆகனும்.. பட்.. நேத்து நடந்ததை மறைத்து ஒருத்தருக்கு கழுத்தை நீட்ட எனக்கு விருப்பமில்லை... அப்படி நான் செய்தா வாழ்நாள் பூராவும்..  என் மனச்சாட்சியே என்னைக் கொன்று விடும்... இந்த உண்மையைத் தெரிந்தவங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க யோசிக்க மாட்டாங்களா..?"
"அதையேண்டி நீ யோசிக்க மாட்டேன்கிற..."
"யோசிக்காம இருப்பேனா..? விடிய.. விடிய யோசிச்சேன்..."
"இல்லையே.. நீ விடிய.. விடிய.. அவன்கூட போனில் கொஞ்சிக்கிட்டில்ல இருந்திருக்கே..."
"அடேங்கப்பா... இன்வெஸ்டிகேசனெல்லாம் பலமாய்த்தான் இருக்கு... விடிய விடிய அவர்கூடப் பேசினா.. யோசிக்காமல் இருந்திருப்பேன்னு அர்த்தமா..?"
"பேசினா எப்படிடீ யோசிக்க முடியும்..?"
"நான் பேசிக்கிட்டே யோசிச்சேன்..."
"நீதானே.. நீ எதை வேண்டும்னாலும் செய்வேடி.. பேசிக்கிட்டே யோசிக்க மாட்டியா...? என்னத்தை யோசிச்ச...?"
"இந்த உண்மை தெரிஞ்ச பின்னாலும் என்னை ஏத்துக்க சங்கர் ஒருத்தரால்தான் முடியும்ங்கிறதை யோசிச்சுப் பார்த்தேன்.. அவர் இன்னைக்கு மகாபலிபுரம் போகலாம்ன்னு சொன்னார்.. எனக்கும் அவரிடம் மனம் விட்டுப் பேச.. அந்த இடம்தான் தோதுன்னு தோணுச்சு.. ஓகேன்னு சொல்லிட்டேன்.."
தாடையைத் தடவியவாறு ராதிகாவையே யோசனையுடன் பார்த்தான் பாலமுரளி... இந்தத் திருப்பத்தை அவன் எதிர் பார்க்கவில்லை என்பதை அவனது முகமே சொல்லியது...
அசையாமல் நின்ற ராதிகா... அவனை அசைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்... வார்த்தை வெடி குண்டுகளை எடுத்து வீசிக் கொண்டிருந்தவள் அடுத்த வெடிகுண்டை கையில் எடுத்தாள்...
"நேத்து வரைக்கும் கல்யாணத்திற்கு அவர்தான் அவசரப்பட்டார்... நான் எக்ஸாம் முடியட்டும்ன்னு நினைச்சேன்.. இன்னைக்குத்தான் கதையே மாறிப் போச்சே... காலாகாலத்தில கல்யாணம் நடப்பதுதான் எனக்குப் பாதுகாப்புன்னு தோணுது... ஒரு வேளை.. நேற்று நடந்ததில்... குழந்தை... கிழந்தைன்னு உண்டாகிட்டா.. அதுக்கு தகப்பன் வேண்டாமா...?"
அதுவரை பொறுமை காத்தவனுக்கு.. அணை உடைத்த வெள்ளமாக பொறுமை உடைந்து விட்டது... அவள் கையிலிருந்த கத்தியை மறந்து ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான்...
"யாரு பிள்ளைக்கு.. யாரு அப்பனாகிறது..? எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே இதைச் சொல்லுவா..?"
கன்னத்தில் விழுந்த அறை ராதிகாவிற்கு வலியை உண்டாக்காமல் அவள் மனதில் இனிப்பை உண்டாக்கியது.. அவனது ஆண்மையின் ஆளுமையில் அவள் மனம் குளிர்ந்தாள்.. அவள் நினைத்தது நடக்கப் போகிறதென்று... அவள் மனதில் ஒரு பட்ஷி கூவியது...
"இதுக்கு எதுக்கு தைரியம் வேணும்..? இதையெல்லாம் யோசிக்காமலா என்னைத் தொட்டிங்க...?"
"அடித்துப் பல்லைக் கழட்டி விடுவேன் ராஸ்கல்... தொட்டா.. அதுக்கான நியாயத்தைக் கேளு.. அதை விட்டுட்டு அடுத்தவனுக்கு பெண்டாட்டியாகப் பார்க்கிற..? இதில.. என் பிள்ளைக்கு அவன் அப்பனாம்.. உன்னை கொன்று இங்கேயே புதைத்து விடுவேண்டி..."
அவனையறியாமல் ராதிகா அவனிடம் நியாயம் கேட்டு வருவாள் என்ற அவனது எதிர்பார்ப்பை அவன் உணர்த்திவிட.. அவள் மனம் படபடத்தது...
அப்படியொன்றும் அவன் அவளைக் கை கழுவிவிட நினைக்கவில்லை.. அவன் முன்னால் அவள் மண்டியிட வேண்டுமென்றே நினைத்திருக்கிறான் என்ற நினைவில் அவள் மன ரணம் கொஞ்சமாக ஆறியது...
"ஓ...! நான் உங்ககிட்ட நியாயம் கேட்டு வரனுமா..? வந்து..? என்ன செய்யனும்..? உங்க காலைப் பிடிச்சு... எனக்கு வாழ்க்கைப் பிச்சை போடுங்கன்னு கெஞ்சனுமா..?"
"அதைச் செய்திருந்தா நீ பொம்பள..."
"நான் ஏன் அதைச் செய்யனும்..? ஊருக்கெல்லாம் நியாயம் பிளக்கிற உங்களுக்கு அந்த நியாயம் தெரியாதா...? நீங்க தொட்டவளை வேறொருத்தன் தொடவிடக் கூடாதுன்னு நினைச்சிருந்தா நீங்க ஆம்பளை.. அதை விட்டுட்டு.. என் காலைப் பிடிச்சு பிச்சை கேட்டா உனக்கு வாழ்க்கைப் பிச்சை கொடுக்கிறேன்னு சொன்னா.. நீங்க என்ன ஆம்பளை...?"
ராதிகா பதிலுக்குப் பதில் கேட்டாள்...
"ஏய்ய்.."
பாலமுரளி முகத்தில் ரத்தம் பாய்ந்தவனாக.. செக்க செவேலென்று ஜிவுஜிவுத்த முகத்துடன் ராதிகாவின் கழுத்தில் தன் விரல்களைப் பதித்து நெரிக்க ஆரம்பித்து விட்டான்...
ராதிகா திமிறவில்லை.. விடுபட முயலவில்லை.. மூச்சுத்திணறினாலும்... அசையாமல் தன் கழுத்தை அவன் கரங்களுக்கு கொடுத்து நின்றிருந்தாள்...
"ச்சீ.."
அவளைக் கொல்ல முடியாத இயலாமையுடன் அவளைப் பிடித்துத் தள்ளி விட்டான் பாலமுரளி.. அவன் தள்ளிய வேகத்தில் கட்டிலில் போய் விழுந்தாள் ராதிகா..
"இப்படி யாரும் என்கிட்டப் பேசினதில்லைடி..."
"என்கிட்டயும் இப்படி யாரும் நடந்துக்கிட்டது இல்லையே..."
"நீ என்னைத் தேடி வந்திருக்கனும்..."
"நீங்க வான்னா வருகிறதுக்கும்.. போன்னா போகிறதுக்கும் நான் என்ன உங்க தோட்டத்தில் விளைஞ்சிருக்கிற கிள்ளுக்கீரையா...?"
"நீ பாதிக்கப் பட்டவள்..."
"யார் பாதிச்சது..? நீங்கதானே..? அதைச் சரி செய்கிற பொறுப்பு யாருக்கு இருக்கு..? உங்களுக்குத் தானே...?"
"நீ அதை என்கிட்டக் கேட்டிருக்கனும்.."
"நான் கேட்டுத்தான் அதை நீங்க செய்யனுமா..? அது உங்க கடமையில்லையா...?"
"அதுக்காக இன்னொருத்தனுக்கு நீ பெண்டாட்டியாகிடுவியா..?"
"உங்க பெண்டாட்டின்னு நீங்க நினைக்கலியே.. நான் வேறென்னதான் செய்கிறது..? நான் தனி மனுஷியில்லையே... எனக்குப் பின்னால் என் குடும்பம் இருக்கு.. எனக்கு எது நடந்தாலும் அது அவங்களைத்தான் முதலில் பாதிக்கும்..."
"இப்போ நீ என்னதான் சொல்கிற..?"
"நான் சொல்கிறதுக்கு என்ன இருக்கு...? நீங்கதான் சொல்லனும்..."
"இதைச் சொல்ல உனக்கு இம்புட்டு நேரமாச்சா..?"
"இதைக் கேட்கவும் உங்களுக்கு இவ்வளவு நேரமாகியிருக்கே..."
"பதிலுக்குப் பதிலா..?"
"ஏன் சொல்லக்கூடாதா..?"
அவர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் வாதாடினார்கள்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -43
அம்மம்மா.. கேளடி தோழி...! -43
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-43.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-43.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy