அம்மம்மா.. கேளடி தோழி...! -42

42 உனக்கு நான் புரியாத புதிரா.. ? இந்த உலகத்தில் நீயெனக்கு எதிரா.. ? கதவை மூடிவிட்டு அவளை நோக்கி வந்த பாலமுரளியின் விழிகளில் கோபம...


42
உனக்கு நான் புரியாத புதிரா..?
இந்த உலகத்தில் நீயெனக்கு எதிரா..?

கதவை மூடிவிட்டு அவளை நோக்கி வந்த பாலமுரளியின் விழிகளில் கோபமும்.. தாபமும் நிறைந்த கலவை தெரிந்தது... அவன் விழிகளில் பிரதிபலித்த தாகத்தை ராதிகா உணர்ந்து கொண்டாள்...
'இவனுக்கு இது ஒரு சாக்கு...'
அவன் பார்வை ஒர்விதமான வேட்கையுடன் அவள்மீது படிய.. முகத்தில் கடினத்தன்மையுடன் ராதிகா பின் வாங்கினாள்...
"நீ ஏண்டி நான் நினைக்கிறதுக்கு மாறாகவே இருக்கே.." பாலமுரளி கசப்புடன் கேட்டான்...
"உங்க நினைவைப் பத்தி எனக்கென்ன தெரியும்..?" ராதிகா புண்ணான மனத்தோடு கேட்டாள்...
'என் நினைவைப் பற்றி உனக்குத் தெரியுமா..?'
அவள் மனம் கேட்ட இந்தக் கேள்வி அவன் காதுகளில் விழவில்லை...
"தெரியாதா..? என் நினைப்பைப் பத்தி உனக்குத் தெரியாதா..?" அவன் கண்களில் தீப்பொறி பறந்தது...
"தெரியாது..."
அவளுக்கும்.. அவனுக்குமான இடைவெளியை கவனமாக கண்காணித்தபடி சொன்னாள் ராதிகா.. அதை அவனும் கவனித்து விட்டான்.. அவன் கண்கள் இடுங்கின.. அவன் முகம் பாறையானது...
"என்னடி... பாதுகாப்பாய் பதுங்கற..? இனி.. எதைக் காப்பாத்திக்க போகிற...? காப்பாத்திக்க எதுவும் மிச்சம் மீதி இருக்கா..?"
வேட்டையாடி விட்ட குரூரத்தோடு அவன் கேட்ட விதத்தில் அவளது உள்ளம் சல்லடையானது...
'ராதிகா... சோர்ந்து விடாதே.. நிமிர்ந்து நில்.. இது போர்க்களம்... நீ போராளி...' அவள் மனம் அதட்டியது...
அவள் கணப்பொழுதில் சரியாகி நிமிர்ந்து நின்றதை அவன் விழிகள் கண்டு கொண்டன.. அவன் நெற்றியில் சிந்தனையின் ரேகை படிந்தது...
"என்ன விசயம்..? ரொம்ப தெனாவெட்டா இருக்கிறபோல..?" அவன் புருவங்களை உயர்த்தி மிதப்பாக விசாரித்தான்...
"ஏன்.. நான் அப்படி இருக்கக் கூடாதா..?"
சென்னையில் பிறந்து வளர்ந்த ராதிகாவுக்கு தெனாவெட்டைப் பற்றித் தெரியவில்லை.. அதனால்... அவன் பாணியிலேயே அவள் பதிலைச் சொன்னாள்...
"இதைப் பாருடா.. நேத்து என்கூட முதலிரவு கொண்டாடிட்டு வீட்டுக்குப் போனவ... விடிய.. விடிய அந்த சங்கர்கூடப் பேசியிருக்கா... இன்னைக்கு அவன்கூட கொண்டாட மகாபலிபுரத்துக்கு கிளம்பிப் போய்கிட்டு இருக்கா... இதை உன்கிட்டயிருந்து நான் எதிர்பார்க்கலை ராதிகா..."
அவன் வார்த்தைகளில் கசப்புத் தெரிந்தது...
"வேற எதை எதிர்பார்த்தீங்க முரளி.. காலமெல்லாம் நான் கண்ணீர்விட்டபடி மூலையில் முடங்கிப் போவேன்னா..? அதுக்கு வேற ஆளைப் பாருங்க..."
"வேற... வேற ஆளுகளைப் பார்க்கிறது உன் பழக்கம்டி... எனக்கு ஒன்னை நினைச்சா.. அதிலேயே நின்னுதான் பழக்கம்..."
அவளைக் குத்திக் கிழித்த வார்த்தைகளிலும்.. அவனது ஏகபத்தினித்தனத்தை உணர்த்தி.. தேன் தடவி பிரயோகித்தான் பாலமுரளி...
அந்த வேதனை கலந்த சந்தோசம் ராதிகாவின் உயிரை நிறைத்தது...
"ஸ்டாப் இட் முரளி.. இந்த நிலைமையில் என்னைக் கொண்டு வந்து விட்டது யார்..? நீங்கதானே..? உங்களுக்கு என்னைக்குற்றம் சொல்லும் தகுதியும்.. உரிமையும் இல்லை..."
இதைக் கேட்ட பாலமுரளிக்கு உன்மத்தம் பிடித்து விட்டது... அவன் கண்கள் தீப்பிழம்பாய் ஜொலித்தன...
"என்னடி சொன்ன..? உன்னை நினைச்ச மனசில இன்னொருத்தியை நினைக்காதவன் நான்... எனக்குத் தகுதியில்லையா...? உன்னைத் தொட்டு.. உன்கூட குடும்பம் நடத்தியவன் நான்.. எனக்கு உன் மேல் உரிமையில்லையா...?"
"இல்லை.. இல்லை.. இல்லை... என்னை நினைச்ச மனசில இன்னொருத்தியை நினைக்காதவர் காலமெல்லாம் கல்யாணம் பண்ணிக்காம என் நினைப்பிலேயே இருந்து விடுவீங்களா..? உங்க வீட்டில்தான் அதுக்கு விட்டு விடுவாங்களா..?"
அவன் கண்களையே ஊடுறிவிப் பார்த்தவளுக்கு அதில் தெரிந்த யோசனையை கண்டு கொள்ள முடிந்தது.. நீயே பேசு என்பதைப் போல அவளைப் பேசவிட்டு அவன் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்...
"அப்படி இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டினா.. அவகூட நீங்க குடும்பம் நடத்தித்தானே ஆகனும்...?"
"இப்ப நீ என்ன சொல்ல வர்ற..?" அவன் நிதானமாக கேட்டான்...
"உங்க வழியில நீங்க போங்க.. என் வழியிலே நான் போறேன்..."
ராதிகா சொல்லி விட்டாள்.. இதைச் சொன்னால் என்ன ஆகும் என்பதை தெளிவாக உணர்ந்தவளாகவே அந்த வார்த்தைகளைப் பிரயோகித்தாள்... அவனைக் கோபப் படுத்தும் அம்புகளை அவன்மீது எய்து விட்டாள்...
அவன் காட்டிய கோபம் கட்டுக்கடங்காததாய் இருந்தது...
"என்னடி சொன்ன..? உன் வழியில நீ போயிடுவியா..? எது உன் வழி...?" அவன் ஆத்திரத்துடன் கேட்டான்...
"சங்கர்..." அவள் நிறுத்தி நிதானமாக.. தெளிவாக அந்தப் பெயரை உச்சரித்தாள்...
"ஏய்ய்..."
அவன் வேகத்துடன் அவளை நெருங்கி வந்தபோது..
"கிட்ட வராதீங்க..." என்று சுட்டு விரலை உயர்த்தி எச்சரித்தாள் ராதிகா...
"ஹ.. என்னையே மிரட்டறியா..?"
"ஆமாம்.. இது மிரட்டல்தான்..."
"என்னை உன்னாலே என்னடி செய்ய முடியும்..?"
"உங்களை எதுவும் செய்ய முடியாது.. என்னை அழிச்சுக்க முடியும்..."
ராதிகா தன் கையிலிருந்த அந்தப் பொருளைக் காண்பித்தாள்.. அதைப் பார்த்த முரளி அசையாமல் நின்று விட்டான்.. ராதிகாவின் கையில் சிறிய பட்டன் கத்தி இருந்தது.. அதன் கூர்மையான முனையை தன் மணிக்கட்டில் அழுத்தியிருந்தாள்.. எந்த வினாடியும் அது கையின் மீது ஆழப் பதிந்து விடும் அபாயத்தை உணர்ந்த பாலமுரளி பின் வாங்கினான்...
"கிட்ட வராதீங்க முரளி.. தள்ளியே நில்லுங்க.. எல்லா நாளும் ஒன்று போலவே இருக்காது... நேற்று நீங்க ஜெயிச்சதாலே முழுசாய் என்னை நீங்க ஜெயிச்சுட்டதாய் அர்த்தமில்ல.. ஒருஅடி நீங்க முன்னால் எடுத்து வச்சாக்கூட நான் என் கையைக் கிழிச்சுக்கிட்டு செத்துப்போயிருவேன்..."
பாலமுரளி வேக மூச்செடுத்து தன்னைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்று கொண்டிருந்ததை சலனமில்லாத முகத்துடன் தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா...
அவன் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டபின் அவளை நிமிர்ந்து பார்த்தான்... அவனது கூர்மையான பார்வை அவளைத் துளைத்தது...
"ஆக.. உன் வழி சங்கர்ன்னு முடிவு பண்ணிட்ட..?"
"ஆமாம்..."
"நேத்து நடந்ததுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிற...?"
"யாருக்கு நான் பதிலைச் சொல்லனும்..?"
"எனக்குச் சொல்லனும்..."
"குட்ஜோக்..." அவள் கிண்டலாகச் சொன்னாள்...
அவளுக்கு அநியாயம் இழைத்தவன் அவளுக்கு பதிலைச் சொல்ல வேண்டாமாம்.. அந்தப் பொறுப்பு அவனுக்கு இல்லையாம்.. அவனால் அநியாயம் இழைக்கப்பட்டவள் அவனுக்குப் பதில் சொல்ல வேண்டுமாம்...
இப்படியொரு நியாயத்தை ராதிகா... எங்கேயும் கேட்டதில்லை... அதைவிட.. அவன் வாயால் இதைக் கேட்க நேரிடும் என்று அவள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்ததில்லை...
அவளது கிண்டலைப் புரிந்து கொண்டவனின் புருவங்கள் முடிச்சிட்டன.. அவனது சிந்தனையின் திசை வேறாக இருந்ததை அவனது முகம் காட்டிக் கொடுத்தது..
"உனக்கு இது சாதாரணமாகத்தான் இருக்கும்ன்னு எனக்குத் தெரியாமப் போச்சே... நான் இதை வேற மாதிரி நினைச்சிட்டேன்..."
"என்ன மாதிரி நினைச்சீங்க மிஸ்டர் முரளி..?"
"உன் வாழ்க்கைன்னு நினைச்சேன்..."
"ஓ.. அப்படி நினைச்சிருந்தும்.. அதை நீங்க செய்யத்துணிஞ்சீங்கன்னா.. அருமையான மனிதர்தான் நீங்க.. உங்க அம்மா உங்களை நல்லபடியாகத்தான் வளர்த்திருக்காங்க..."
இதை வெகுகிண்டலாக அவள் சொல்லிய விதத்தில் வெகுவாக மனதில் அடிவாங்கினான் பாலமுரளி...
"ஏய்ய்.. என் அம்மாவைப் பத்திப் பேசாதே.." ஒற்றைவிரலை உயர்த்தி எச்சரித்தான்..
"ஓ..." அவள் வாயைக் குவித்து.. முகத்தில் வியப்பைக் காட்டினாள்..
"உங்க அம்மாவைப் பத்திப் பேசக் கூடாதா..? ஆமாமில்ல.. உங்க அம்மாவும்.. அக்காவும் உங்க வீட்டுப் பெண்கள்.. அவங்க உங்களுக்கு உயர்த்தி.. உங்க அம்மாவை வீட்டுக்குள் உட்கார வைச்சு பூஜை பண்ணுவீங்க.. உங்க அக்காவை கௌரவமா.. மதிப்பா.. கல்யாணம் செய்து வைத்து அனுப்பி வைப்பீங்க.. நானும் பெண்தான்.. ஆனாப் பாருங்க.. நான் உங்க வீட்டுப் பெண்ணில்லை.. ஊரான் வீட்டுப் பெண்... என்னை நீங்க அழிக்கப் பார்ப்பீங்க.. என்னே உங்க நியாயம்..! த்சு.. த்சு.. புல்லரிக்குது போங்க... உங்க ஊரில நீங்கதான் பெரிய மனுசனாம்.. சின்னக் கவுண்டராம்.. நாட்டாண்மையாம்.. இன்னும் என்னென்னவோ சொல்லிக்கிட்டாங்களே.. அதெல்லாம் உண்மைதானுங்களா..? இந்த லட்சணத்தில் தான் ஐயா நியாயம் பிளப்பீங்களா..?"
ராதிகா கேட்கக் கேட்க.. முரளிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.. அவளது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் செய்வதறியாத கோபத்துடன் அவளை முறைத்தான்...
"என்ன சார்.. பதிலைச் சொல்லாம கண்ணகி மதுரையைப் பார்க்கிற பார்வையை என்னைப் பார்த்து வைக்கறீங்க.. இந்தப் பார்வையை நான் பார்க்கனும்..."
ராதிகா எகத்தாளமாக பேச... வழி கிடைத்து விட்டவனாக பாலமுரளி கண்கள் மின்ன அவளை ஊடுறிவிப் பார்த்தான்...
'என்ன இப்படிப் பார்க்கிறான்..?' ராதிகா உஷாரானாள்...
எதையோ வில்லங்கமாகப் பேசிவைக்கப் போகிறான் என்று அவள் அனுமானித்ததுதான் நடந்தது...
"கண்ணகியின் பார்வையை நீ பார்க்கிறதா..? உனக்கு அந்த தகுதியிருக்கிறதா..? கண்ணகியைப் பத்தியெல்லாம் நீ பேசக்கூடாது..."
இப்போது எகத்தாளம் பேசுவது அவன் முறையாகி விட.. ஓ.. நீ அப்படி வருகிறயா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் ராதிகா...
'வாடா மச்சான்.. நீ எப்படி வந்தாலும்.. அப்படியே நானும் வருவேன்.. நீ நேத்துப் பார்த்த ராதிகா வேற... இப்பப் பார்க்கிற ராதிகா வேற...'
"அப்படிங்களா..? கண்ணகியைப் பத்தி நான் பேசக்கூடாதா..? அது ஏனுங்க சார்..? நீங்க கோவலனைப் போல இருக்கிற ஆளுங்கிறதுக்காகவா..?"
"ஏய்ய்.. நான் கோவலனா..?"
"பின்னே.. நீங்க என்ன காவலனா..?"
"நீயேண்டி கண்ணகியைப் பத்திப் பேசின..? அதுக்கு முதல்ல பதிலைச் சொல்லு..."
"இதென்ன சார் வம்பாப் போச்சு.. நானும் வந்ததிலிருந்தே பார்க்கிறேன்... இதுக்கு பதிலைச் சொல்லு.. அதுக்கு பதிலைச் சொல்லுன்னு.. கேள்விமேல கேள்வியா.. கேட்டுத் தள்ளதீங்க.. இது என்ன எக்ஸாம் ஹாலா...? நீங்க டீச்சரா..? நான் ஸ்டூடண்டா..."
"அப்படித்தான் வைச்சுக்கயேன்... நேத்து இதே ரூமில உனக்கு நான் பாடம் நடத்தலையா..? அதுக்குள்ள அது உனக்கு மறந்து போயிருச்சா..?"
'நீ அதிலேயே நில்லு...' பல்லைக் கடித்தாள் ராதிகா...
"மறந்துதான் போயிருச்சு.. அதுக்கு இப்ப என்னங்கறிங்க...?"
"முடிவா நீ என்னதாண்டி சொல்ற..?"
"எதைப் பத்திக் கேட்கறிங்க...?"
"நீ எதுக்காக சங்கரைப் பார்க்கப் போகிற...?"
"என்னசார் கேள்வி இது...? அவர் என் வுட்பி... வுட்பின்னா அர்த்தம் தெரியுமா..? என்னதான் படிச்சிருந்தாலும் நீங்க சங்கரைப் போல பாரினில் போய் படிச்சவரில்லையே... தேனூத்துதானே...? அதான் கேட்டேன்..."
பாலமுரளியின் முகம் பயங்கரமாய் மாறியது.. கையில் கத்தியோடு மணிக்கட்டை அறுத்துக் கொள்ளத் தயாராக நின்றிருந்தவளை எதுவும் செய்ய முடியாமல் அவன் பல்லைக்கடித்தான்...
'கடிடா மச்சான்... என்னைப் பல்லைக் கடிக்க வைச்சியில்ல... இப்ப உன் முறை...' ராதிகா மனதுக்குள் குதூகலித்தாள்...
"கொழுப்பாடி..?"
"ஆமாம் சார்.. நீங்க போட்டுத் தந்த சாதத்தைச் சாப்பிட்டு வளர்ந்தேனில்ல.. அந்தக் கொழுப்பு..."
"திமிர் பிடிச்ச கழுதை.. அந்த சங்கர் உனக்கு வருங்காலக் கணவனா..?"
"ஆஹா.. உங்களுக்கு கூட இதுக்கு அர்த்தம் தெரிஞ்சிருக்கே..."
"நீ அடி வாங்கியே சாகப்போகிற..."
"சாகத் துணிஞ்சுதான் என் கையில கத்தியை வைச்சுக்கிட்டு நிக்கிறேன்.. அதை எப்படிச் செத்தால் என்ன..? நீங்களே அந்தப் புண்ணியத்தையும் சேர்த்துக் கட்டிக்கங்க..."
கத்தியின்றி.. ரத்தமின்றி காயப்படுத்த உன்னால் மட்டும்தான் முடியுமா..? கத்தியின்றி ரத்தமின்றி.. யுத்தம் புரிய என்னாலும் முடியும் என்று பாலமுரளிக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள் ராதிகா..








Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -42
அம்மம்மா.. கேளடி தோழி...! -42
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-42.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-42.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy