அம்மம்மா.. கேளடி தோழி...! -41

41 சிந்துகின்ற கண்ணீர்துளிகளில்.. சிதறுகிறது என் காதல்... மாலை நேர வகுப்பைப் புறக்கணித்து.. காலேஜை விட்டு வெளியே வந்த ராதிகாவிற்க...


41
சிந்துகின்ற கண்ணீர்துளிகளில்..
சிதறுகிறது என் காதல்...

மாலை நேர வகுப்பைப் புறக்கணித்து.. காலேஜை விட்டு வெளியே வந்த ராதிகாவிற்கு அது நன்றாகவே தெரியும்.. எப்படியும் அவளை வழியிலேயே பாலமுரளி மடக்கிப் போட்டு விடுவான் என்பது...
அதனால்தான் அவள் தன் ஸ்கூட்டியின் சாவியை ஹேமாவிடம் கொடுத்திருந்தாள்.. ஹேமாகூட அதற்கான தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள்...
"என்னடி இது...! என் கண்ணையே என்னாலே நம்ப முடியலையே..."
"அப்படியென்ன பெரிய அதிசயத்தை கண்டு விட்டன்னு இந்தளவுக்கு வாயைப் பிளக்கிற...? பார்.. ஒரு ஈ. எவ்வளவு கம்பர்டபிளா உன் வாய்க்குள்ளே வந்து போகுதுன்னு..."
ஹேமா சட்டென்று தன் வாயை இறுக மூடிக் கொண்டு.. மெதுவாக இதழ் பிரித்து கேள்வி கேட்டாள்...
"உன் ஓட்டை ஸ்கூட்டியை ஓட்டிப் பார்க்கனுமுன்னு எத்தனை நாளாய் கேட்டிருப்பேன்..? அப்போல்லாம் மாட்டேன்னு சொல்லிட்டு... இப்பப் பெரிய மனசோட உன் ஸ்கூட்டி சாவியை என்கிட்ட நீட்டறயே என்ன விசயம்..?"
"என் ஸ்கூட்டியை ஓட்டை ஸ்கூட்டின்னு இன்னொரு தரம் நீ சொன்னா... உன் பல்லை உடைச்சிருவேன்..."
"ஆஹா.. உன்னைப் பக்கத்தில வைச்சுக்கிட்டு காயத்ரி என் பல்வரிசையைப் பாராட்டியப்பவே நினைச்சேண்டி.... எப்படியும் நீ என் பல்மேல குறிவைப்பேன்னு..."
"அந்த பயம் இருக்கில்ல..?"
"இருக்காதா பின்னே..? எனக்கும் கல்யாண வயசு வந்துருச்சுடி.. இத்தனை நாளா காப்பாத்திக்கிட்டு வந்த பல்வரிசையை பலி கொடுக்க நானென்ன முட்டாளா..?"
"அப்ப அடங்கு... எனக்கு தலைசுத்தி மயக்கம்.. மயக்கமா வருது..."
"இதெல்லாம் உன்னைப் பார்த்தா... ஷோபாவுக்குத்தானே வரும்..?"
"ஊஹீம்.. உனக்கு உன் பல்வரிசையைப் பத்திய அக்கறையே இல்லை ஹேமா..."
"அடடா... உனக்குத் தலைவலியா..? மயக்கம் வேற வருதா..? பார்த்துப் பத்திரமா ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போய்ச் சேரு ராதிகா... என் பல்வரிசை எங்கே போகப் போகுது..? அது பத்திரமாய் என்கிட்டயே இருந்துட்டுப் போகட்டும்..."
"இதை அப்பவே சொல்றதுக்கு என்ன...?"
"புத்தருக்கே போதி மரத்தடியில் உட்கார்ந்த பின்னாலேதான் ஞானம் வந்தது... எனக்கு மட்டும் அவ்வளவு சீக்கிரத்தில் வந்து தொலைக்குமா...?"
"இப்ப வந்திருச்சா.. இல்லையா...?"
"வராதா.. பின்னே.. புத்தருக்கு போதிமரம்...! எனக்கு பல்வரிசை..! இப்ப என்ன..? உனக்குத் தலைவலியும் மயக்கமும் சேர்ந்து வந்திருக்கு... அதனாலே... உன்னாலே ஸ்கூட்டியை ஓட்டிக்கிட்டுப் போக முடியாது... இதை நான் ஓட்டிக்கிட்டுப் போயிட்டு நாளைக்கு காலையிலே கரெக்டா இதை கொண்டு வந்து சேர்த்து விடனும்.. இதைத்தானே நீ சொல்ல வந்த...?"
"புல்லரிக்குதுடி ஹேமா.. என் மனசை படம் பிடிச்சதைப் போல எப்படித்தான் அட்சர சுத்தமாய் அத்தனையையும் பிட்டுப்பிட்டு வைச்சயோ தெரியலை.. எங்கியோ போயிட்டடி நீ..."
"நான் போகிறது இருக்கட்டும்... இப்ப நீ எங்கே போகிற...?"
'கண்டு பிடிச்சிட்டாளே...'
ராதிகா எதைச் சொல்லி சமாளிப்பது என்ற யோசனையுடன்  வரவழைத்துக் கொண்ட முறைப்புடன் ஹேமாவை பார்த்தாள்...
அவள் அதற்கெல்லாம் அசைவேனா.. என்று புருவங்களை உயர்த்தி.. விழிகளால் வினவினாள்...
"வேறெங்கே போவேன்...? ஹாஸ்பிடல் போவேன்.."
"நீ தனியாய் ஹாஸ்பிடல் போக மாட்டயே..."
"வீட்டுக்குப் போயிட்டு.. கீதாவை துணைக்கு கூப்பிட்டுக்கிட்டு ஹாஸ்பிடல் போவேன்..."
"அதுக்கு எதுக்கு கீதாவைத் தேடிப் போகனும்..? நான் எதுக்கு இருக்கிறேன்..?"
"ஊம்..? என் கழுத்தை அறுக்க இருக்கிற..."
ராதிகா அகப்பட்டுக் கொண்டவளாக எரிந்து விழுந்தாள்.. அப்படிவா வழிக்கு என்ற பாவனையுடன் ஹேமா புன்னகைத்தாள்...
"எதுக்கு இப்படி கோபப்படுகிற..? உன்னால் ஸ்கூட்டியை ஓட்ட முடியலைன்னா.. நான் ஓட்டறேன்.. நீ பின்னாலே உட்காரு... டாக்டரைப் பார்த்துட்டு உன்னைப் பத்திரமாய் வீட்டில் கொண்டு போய் சேர்த்துட்டு.. அங்கேயிருந்து நான் ஆட்டோ பிடிச்சு என் வீட்டுக்குப் போயிக்கறேன்..."
"உனக்கெதுக்கு வீண் சிரமம்..?"
"அடேங்கப்பா.. இதுக்கு முன்னாலே நீ எனக்கு சிரமம் கொடுக்காத ஆள்தான்.. இதே ஷோபாவோட பர்த்டே பங்சனுக்குப்போக.. உன் வீட்டுக்கு... என்னை வரவைச்சவதானேடி நீ... இப்ப மட்டும் என்ன புதுசா என்மேல கரிசனம் பொங்கி வழியுது...?"
"ஹேமா.. அர்கியுமென்டை அவாய்ட் பண்ணு... எனக்கு உடம்பு சரியில்லை..."
"யாருகிட்ட புரூடா விடறே..? தலைவலி வந்தவ இவ்வளவு தெளிவா பல்லை உடைக்கிறேன்னு கிளம்புவாளா..? மயக்கம் வந்தவ... கண்ணை மூடிக்கிட்டு தரையில் உட்காராம.. நிலத்தில காலைப் பதிச்சு உணக்கையா நிற்பாளா...?"
ஹேமா.. அழகாகாய்.. அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்க... ராதிகா தீர்க்கமான பார்வையொன்றை அவள்மீது வீசினாள்..
அந்தப் பார்வையில் பொதிந்திருந்த தீவிரத்தில் ஹேமாவின் புருவங்கள் முடிச்சிட்டன...
இப்படியொரு தீவிரமான முகபாவனையுடன் ராதிகாவை இதற்கு முன்னால் அவள் பார்த்ததே இல்லை...
இந்த ராதிகா அவள் பார்வைக்கு புதியவளாக இருந்தாள்...
"வாட்ஹேப்பன் ராதிகா...?"
"நத்திங்ன்னு சொல்ல மாட்டேன்.. ஐ ஹேவ் சம் பிராப்ளம்... அதைக் கிளியர் பண்ணப் போராடிக்கிட்டு இருக்கேன்..."
"ராதிகா..."
"ஏன்னு என்னைக் கேள்வி கேட்காதே ஹேமா.. இதுவரை நான் பொய் சொன்னதில்லை..."
"ராது..."
"இப்போ நான் வெளியே போயாகனும் ஹேமா... எங்கேன்னு கேட்காதே.. இப்போ எனக்கு ஸ்கூட்டி ஒரு சுமை.. அதைச் சொன்னால் உனக்குப் புரியாது.. ஸ்கூட்டியை நீ கொண்டு போயிட்டு காலையில் கொண்டுவா..."
"ம்ம்ம்..."
அதற்கு மேல் தோழியிடம் நின்று பேசினால்... எங்கே தனது நிலைமை என்னவென்பதை உளறி விடுவோமோ என்ற பயத்தில் ராதிகா... அவசரமாக அங்கிருந்து அகன்று விட்டாள்...
வேக நடையுடன் விலகிச் செல்லும் தோழியின் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஹேமாவிற்கு அவளின் மர்ம நடவடிக்கைக்களுக்கான காரணம் என்னவென்று பிடிபடவில்லை...
அது எதுவாக இருந்தாலும்.. ராதிகாவிற்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது...
கல்லூரியை விட்டு வெளியே வந்த ராதிகா.. மெதுவாக பிளாட்பாரத்தில் நடைபயின்றாள்... எந்த நேரமும் பாலமுரளி வரக்கூடும் என்ற நினைவுடன்.. அடுத்து செய்ய வேண்டியவைகளை மனதுக்குள் வரிசைப் படுத்திக் கொண்டாள்.. பேச வேண்டிய வார்த்தைகளை யோசித்து சேகரித்து.. மனதுக்குள் கோர்வையாக கோர்த்துக் கொண்டாள்...
அவளை அதிக நேரம் காக்க வைக்க வில்லை பாலமுரளி... அவளை உரசிக் கொண்டு வந்து நின்றது அவனுடைய கார்.. என்னவோ.. எதிர்பாராத நிகழ்வைப் போல.. விழி விரித்து கண்களில் அதிர்ச்சியைக் காட்டினாள் ராதிகா.. அவள் பக்கமாக கார் கதவைத் திறந்து விட்டவன்.. கடினமான முகத்துடன்...
"ஏறு..." என்றான்...
"இல்லை.. நான் வேற ஒருத்தரை மீட் பண்ணப் போய்க்கிட்டு இருக்கேன் என்னை தொந்தரவு பண்ணாதீங்க..."
"கொலைவெறியை கிளப்பாதேடி.. மரியாதையாய் காரில் ஏறிவிடு.. இல்லைன்னா நடக்கிறதே வேற...."
அப்போதும் ராதிகா காரில் ஏறவில்லை... அவளைக் காப்பாற்ற வேறு யாரோ வந்து விடுவார்கள் என்பதைப் போன்ற பாவனையுடன் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டாள்...
பாலமுரளி பொறுமையை இழந்தவனாக.. காரை விட்டு இறங்கி விட்டான்... அந்தப் பிற்பகல் வேளையில் பிளாட்பாரம் வெறிச்சோடிக் கிடந்தது... அவர்களை யாரும் அவ்வளவாகக் கவனிக்கவில்லை.. அவன் அருகில் வந்தவுடன் பயத்தில் வெலவெலத்தவளைப் போல கண்களில் மிரட்சியுடன் பின் வாங்கிய ராதிகா.. அவசரமாக செல்போனை எடுக்கப் போனாள்...
"யாருக்குடி போன் பண்ணப் போற..?" பாலமுரளியின் கண்களில் தீப்பொறி பறந்தது...
"அது உங்களுக்குத் தேவையில்லாதது..." ராதிகா அவசரமாகச் செய்வதைப் போல.. சங்கரின் பெயரை தன் போனில் கொண்டு வந்தாள்...
"கொடுடி இங்கே..." போனைப் பறித்த பாலமுரளி... அதில் அழைக்கப் படுவதற்கு தயாராக காத்திருந்த சங்கரின் பெயரைப் பார்த்து விட்டான்...
ஆவேசத்துடன் அவளை காருக்குள் தள்ளினான்...
முதல் நாளாவது.. யாரென்று தெரியாமலே.. கடத்தப் படப் போவதை அறியாமலே.. பாலமுரளியின் காருக்குள் விழுந்தாள் ராதிகா... அப்போதும் அவள் எளிதாக தப்பித்து இறங்கியிருப்பாள்.. அதற்குள் பாலமுரளியின் மயக்க மருந்து தடவப்பட்ட கைக்குட்டை அவள் முகத்தில் பொதிந்து விட்டது...
இப்போது அப்படியில்லை.. பாலமுரளி வருவான் என்பது அவளுக்கு மிக நன்றாகவே தெரியும்.. அன்ன நடைபோட்டு அவன் வருவதற்காகவே காத்திருந்து நடந்தவள்... நினைத்திருந்தால்.. அவன் கார் அருகேவந்து நிற்கும் போதே.. சிட்டாகப் பறந்திருக்கலாம்.. ஏற்கனெவே அவன் கைப்பிடியில் பூங்காவில் இருந்தபோதே.. விலகிப் பறந்தவள்தானே.. அவள் அதைச் செய்யவில்லை...
அவன் காரை விட்டு இறங்கி அவளருகில் சுற்றி வருவதற்குள் ஓடிப் போயிருக்கலாம்.. ஆனாலும்.. பயந்து மிரண்டவளைப் போல பாவனை செய்துகொண்டு.. ஆணியடித்ததைப் போல அங்கேதான் நின்றாள்.. விலகி ஓடவில்லை...
அவன் அவள் கைபிடித்து காருக்குள் தள்ளிய போதுகூட விலகித் தப்பித்திருக்கலாம்.. அவள் அதையும் செய்யவில்லை.. கத்தி உதவிக்கு யாரையேனும் அழைத்திருக்கலாம்... அவள் வாயைத் திறக்கவே இல்லை...
இத்தனையையும் செய்யாமல்... அவன் தள்ளி விட்ட மறுநொடியில்.. சமர்த்தாக காரில் போய் வாகாய் விழுந்தாள்... அவன் காரைக் கிளப்பி வேகமெடுத்து ஓட்ட ஆரம்பித்த பின்னால்...
"நிறுத்துங்க..." என்று அவனிடம் சத்தமாகச் சொன்னாள்...
"எதுக்கு நிறுத்தனும்..?" அவன் புருவச் சுளிப்புடன் கேட்டான்...
"நான் போகனும்..." அவள் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாய் ஒப்பித்தாள்...
"எங்கேடி போகப் போகிற...? மகாபலிபுரத்துக்கா..?" அவன் கேள்வியில் தீப்பொறி பறந்தது...
"உங்களுக்கு எப்படித் தெரியும்...?"
என்னவோ.. அவளுக்கு இது தெரியாததைப் போல அவள் கண்களை அகலமாக விரித்தாள்..
அவன் பதில் சொல்லாமல்.. முதல்நாள் அவளைக் கொண்டுவந்த பண்ணை வீட்டின் காம்பவுண்டிற்குள் காரைத் திருப்பினான்...
சுற்றிலும் மரங்கள் அடர்ந்திருக்க... அதன் நடுவே பசுமையான அழகின் பிண்ணணியுடன் நின்றிருந்த அந்த வீட்டை பாசத்துடன் பார்த்தாள் ராதிகா...
முதல் நாளின் நினைவில் அவள் மனம் பொங்கியது..
'இது என் வீடு...'
இனம் புரியாத ஓர் உரிமையுணர்வு.. அந்த வீட்டின் மீது அவளுக்கு எழுந்தது...
"என்னடி இப்படிப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கிற..? இந்த வீட்டை உனக்கு அடையாளம் தெரியலையா...?" பாலமுரளியின் குரலில் எக்களிப்பு இருந்தது...
'இதை நீ செய்யக்கூடாது...' அவள் மனதில் வேதனை படர்ந்தது...
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் முறைத்தாள்...
"இங்கே எதுக்காக என்னை கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கீங்க...?"
"எதுக்காகன்னு உனக்குத் தெரியாதா..?" அவன் கண்சிமிட்டினான்...
"நான் போகனும்.. காரைத் திருப்புங்க..." அவள் கடினமான குரலில் சொன்னாள்...
"நீ சொன்னவுடன் செய்கிறதுக்கு நானென்ன உன் வீட்டு  காரின் டிரைவரா.. இறங்குடி.. இந்த இடமும் கடலோரமாத்தான் இருக்கு... மகாபலிபுரம் மட்டும் அழகில்லை.. இந்தப் பண்ணை வீடும் அழகுதான்..."
"நான் வரமாட்டேன்..."
"நேத்து மட்டும் நீயா இறங்கி நடந்து வந்த..? இப்படித்தானே நான் தூக்கிட்டுப் போனேன்...?"
அவளது எதிர்ப்பை சட்டை செய்யாமல் அவள் இடுப்பில் கைகொடுத்து அலேக்காக அவளைத் தூக்கிக் கொண்டு.. பண்ணை வீட்டின் படியேறினான் பாலமுரளி..
மாடியிலிருந்த அறைக்கதவை காலால் உதைத்து திறந்து அவளை உள்ளே இறக்கி விட்டவன்.. கதவின் அருகே போன போதே .. தன் கைக்கடிகாரத்தின் மறைவில் வைத்திருந்த அந்தப் பொருளை கையில் எடுத்துக் கொண்டாள் ராதிகா...
அவள் முகத்தில் ஒரு போராளியின் தீவிரம் வந்திருந்தது...








Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -41
அம்மம்மா.. கேளடி தோழி...! -41
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-41.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-41.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy