அம்மம்மா.. கேளடி தோழி...! -40

40 நீயெங்கே போனாலும்.. நிழலாக நான் தொடர்வேன்... யார் மனதில் என்ன இருக்கிறதென்று யாருக்கு எப்படித் தெரியும்.. ? மனமென்னும் மாயக் க...


40
நீயெங்கே போனாலும்..
நிழலாக நான் தொடர்வேன்...

யார் மனதில் என்ன இருக்கிறதென்று யாருக்கு எப்படித் தெரியும்..? மனமென்னும் மாயக் கண்ணாடி பிரதிபலிக்கும் பிம்பங்களின் உண்மையை உணர்ந்தவர்கள் யார்..? ஒருவரின் அந்தரங்க மனதில் ஆழப்பதிந்திருக்கும் ரகசியச் சுரங்கத்தில் யாரால் பிரவேசிக்க இயலும்..?
ராதிகா சிரிக்கும் அருவி.. அவள் மனதில் சுழல் போன்றதொரு அந்தரங்கக் காதல் இருந்ததை அறிந்தவர் எவருமில்லை...
அவளைப் பெற்ற தந்தையான கிருஷ்ணமூர்த்தியின் பார்வையில் அவள் புத்திசாலி மகள்.. அவளால் 'லேடி ஹிட்லர்' என்று அன்பாக விளிக்கப்படும் அவளுடைய அன்னை ராஜேஸ்வரிக்கு அவள் அழகான.. ஒழுக்கமான மகள்.. ஒரு தோழியைப் போலப் பழகும் அவள் கூடப் பிறந்த தங்கையான கீதாவுக்கோ அவள் கையில் பிரம்பில்லாத ஆசிரியை.. சதா சண்டைக்கு இழுத்துக் கொண்டிருக்கும் நுனி மூக்கில் கோபம் கொண்ட அவளின் தம்பி சுந்தருக்கோ அவள் பகைமையான சிநேகிதி... இருபத்தி நான்கு மணி நேரமும்.. ராதிகாவைப் பற்றிய நினைவிலேயே உழலும் ஷோபாவிற்கு ராதிகா ஒரு பெரிய தலைவலி.. அவள் தோழிகளுக்கோ.. ராதிகா மிகப் பிரியமான சிநேகிதி.. 
அவளையே சுற்றிச்சுற்றி வரும் சங்கருக்கு ராதிகா ஒரு தென்றல்காற்று..
அதைக் கண்டு பொங்கியெழுந்த பாலமுரளிக்கு ராதிகா ஒரு சூறாவளிக்காற்று...
இவர்கள் யாருக்குமே ராதிகாவின் அந்தரங்க மனதில் பாலமுரளியின் மீதிருந்த ஆழ்ந்த காதலைப் பற்றித் தெரியாது... அதை வெளியே சொல்ல முடியாமல் ராதிகா தவித்துக் கொண்டிருந்ததை யாரும் அறியவுமில்லை...
காதலைப் பற்றி வெளியே சொல்ல வேண்டுமானால்.. முதலில் அந்தக் காதலுக்கு உரியவனிடம் அதைச் சொல்லி.. அவனது பதில் காதலைப் பெற வேண்டும்...
இதற்குத்தான் ராதிகாவுக்கு வழியே கிடைக்காமல் போய்விட்டதே...
அவளுக்கும்.. அவனுக்கும் இடையில் சங்கர் வந்தான்.. ராதிகாவின் மனதில் பாலமுரளி இருப்பதை அறியாதவனாக காதல் சொன்னான்.. அதைக் கண்ணாரக் கண்டு.. காதார கேட்டுவிட்ட பாலமுரளி சங்கரை ராதிகா மோகித்து விட்டதாக குற்றம் சாட்டினான்.. என்ன ஒன்று.. அவன் குற்றம் சாட்டிய அந்த நொடியிலேயே.. அவன் மனதில் ராதிகாவின் மீது இருந்த வெறித்தனமான காதலையும் கொட்டிவிட்டான்...
அப்போதே ராதிகா அவள் மனதிலிருந்த அந்தரங்கத்தை அவனிடம் சொல்லியிருக்க வேண்டும்.. அவள் வாய் திறக்கு முன்னாலேயே புயலாய் அவன் அவளை ஆக்ரமித்து முத்தமிட்டு விட்டான்...
முதல் முத்தத்தில் மனம் நடுங்கி.. உடல் பதற.. விலகி ஓடிவிட்டாள் ராதிகா.. மறுநாளிலிருந்து அவனைத் தேட ஆரம்பித்தாள்.. விதி..! அவன்.. அவனுடைய அம்மாவின் உடல்நிலை சரியில்லையென்று அவனது ஊரைப் பார்த்து ஓடி விட்டான்..
பாலமுரளி அவளைத் தொடுவதில் கோபம் காட்டி வேகம் காட்டினால்.. சங்கர் அவளைத் தொடாமல் சாந்தம் காட்டி.. திருமணத்தை பேசி முடிவு பண்ணுவதில் வேகம் காட்டிவிட்டான்...
பாலமுரளி தென்காசிப் பட்டினத்தில் மையம் கொண்டிருக்க... சங்கரோ உள்ளூரில் வாசம் செய்தான்.. அது சங்கருக்கு மிகவும் வசதியாக மாறி விட்டிருந்தது...
கோடிஸ்வரரின் வீட்டிலிருந்து மகளைப் பெண் கேட்டு வந்து விட்டதில் ராஜேஸ்வரி மகிழ்ந்து போக.. ராதிகாவின் வீட்டில் திருமணப்பேச்சு ஆரம்பித்து விட்டது..
அதை முறியடிக்கும் வகை தெரியாமல் தவித்தாள் ராதிகா...
பாலமுரளியின் மீதிருந்த காதலை அவள் எந்த நம்பிக்கையில் வெளியில் சொல்லுவாள்..? அவன் மீதான ராதிகாவின் அந்தரங்கக் காதலை அவன் அறியவில்லை.. அவளைத் தொட்டுத் தழுவி முத்தம் கொடுத்தவன்... மறுநாளே மாயமாய் மறைந்து விட்டான்.. அவனின் முகவரியும்.. அலைபேசி எண்ணும் அறியாத நிலைமையிலே அவன்தான் என் காதலனென்று ராதிகாவால் அவள் வீட்டில் வாய் திறந்து சொல்ல முடியவில்லை... பாலமுரளியைப் பற்றி அவள் அறிந்த ஒரே விவரம்..  அவன் ஷோபாவின் உறவினன்.. அவனது ஊர் தென்காசியின் அருகிலிருக்கும் 'தேனூத்து...' என்ற கிராமம் என்பது மட்டும்தான்...
அதைமட்டும் வைத்துக் கொண்டு.. அவன் பெயரை வீட்டில் சொல்லி.. திருமணத்தை நிறுத்தச் சொன்னால்.. அந்த வீட்டில் பிரளயமே வந்து விடும்...
எல்லாபக்கமும் கதவு அடைபட்டிருக்க.. திருமணத்தை நிறுத்தும் முயற்சியில் ராதிகா.. ஷோபாவின் பொறாமையை தூண்டிவிட.. அவள் மனம் விரும்பாத பேச்சுக்களைப் பேச வேண்டி வந்துவிட்டது...
அதைக் கேட்ட ஷோபா கொதித்துப் போவாள்... அவளுக்குத்தான் சங்கர் என்று ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டிருப்பவள் எப்பாடு பட்டாவது ராதிகாவை சங்கர் திருமணம் செய்து கொள்ளாமல் தடுத்து விடுவாள் என்பதே ராதிகா போட்ட கணக்காக இருந்தது...
ஆனால்.. ஷோபாவைக் கிளப்பி விடவென்று ராதிகா பேசிய பேச்சுக்களை ஷோபா தன் அலைபேசியில் பதிவு பண்ணிக்கொள்வாள் என்றோ.. அதை அப்படியே பாலமுரளிக்கு அனுப்பிவைப்பாள் என்றோ.. அவன் மூலமாக ராதிகாவின் திருமணத்தை நிறுத்தப் பார்ப்பாள் என்றோ ராதிகா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை...
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.. வாழ்க்கைக்கு என்ன அதிகாரம் இருக்கப் போகிறது...?
நினைக்காததை நடத்திக் காட்டுவதுதானே வாழ்க்கை..!
ராதிகாவை பாலமுரளி மிரட்டி வைப்பான்.. சங்கருடன் நடக்கவிருக்கும் அவளின் திருமணத்தை நிறுத்திவைப்பான்.. கூடவே.. ராதிகாவை வெறுத்து ஒதுக்கியும் வைப்பான்..
இதுதான் ஷோபா போட்ட திட்டமாக இருந்தது..
பாலமுரளியின் மனதில் ராதிகாவின் மீது இருந்த மயக்கத்தின் பேரளவை ஷோபா அறிந்து கொள்ளாமல் போய் விட்டாள்..
பாலமுரளி ராதிகாவைக் கடத்திக் கொண்டு போய் விடுவான் என்றோ.. அவளைக் கசக்கி முகர்ந்து விடுவான் என்றோ.. அவள் நினைத்துக்கூட பார்க்கவில்லை...
ராதிகா நினைத்ததே நடக்காத போது.. ஷோபா நினைத்தது மட்டும் நடந்து விடுமா என்ன..?
எது.. எப்படியிருந்தாலும்.. ராதிகாவின் திருமண ஏற்பாடு ஆட்டம் கண்டு போயிருக்கும்.. அவளும் அடங்கிப் போயிருப்பாள்.. இந்த எண்ணத்துடன்தான் ஷோபா.. கல்லூரியின் வாசலை மிதித்தாள்.. ராதிகாவும் வந்தாள்.. அடங்கிப் போனவளாக வரவில்லை.. மாறாக ஆர்ப்பரிக்கும் அருவியாக வந்தாள்...
என்றுமில்லாமல் அன்று அவளின் ஆர்ப்பரிப்பின் வேகம் அதிகமாக இருந்ததைக் கண்ட ஷோபாவிற்கு... இரண்டு நாள்களாக காணாமல் போயிருந்த தலைவலி.. திரும்பிவர ஆரம்பித்தது...
அவளுக்குத் தெரியாது.. பாலமுரளியை அடைவதற்காக.. இனி இந்த வழியைத்தான் ராதிகா உபயோகிக்கப் போகிறாள் என்பது...
'தானாவே தூது போகிற வேலையில வந்து மாட்டிக்கிட்டா... இவ இருக்கிறப்போ முரளியை கன்வே பண்ண என்ன வழின்னு நான் ஏன் மண்டையைப் போட்டு உடைச்சிக்கனும்..? நான் சொன்னா.. இவ அதை ஒன்னுக்குப் பத்தா முரளியிடம் போய் சொல்லப் போகிறா.. அவன் கத்தியில்லாமல் என் கழுத்தை அறுக்க என்னைத் தேடி வரப் போகிறான்...'
ராதிகாவின் இந்த எண்ண வோட்டத்தை அறியாத ஷோபா.. தலைவலியின் ஆரம்ப அறிகுறிகளை பொருட்படுத்தாமல் ராதிகாவின் பேச்சை.. கவனத்துடன் செவி மடுத்தாள்...
"ஹாய்.. ஷீல்.. என்னடி பண்ணிக்கிட்டு இருக்க..?"
"பார்த்தாத் தெரியலை..? படிச்சுக்கிட்டிருக்கேன்.."
"அதையேண்டி.. தேவையில்லாம பண்ணிக்கிட்டு இருக்க..? நீ இப்படியெல்லாம் உன் டயத்தை வேஸ்ட் பண்ண மாட்டியே..."
"ஆரம்பிச்சுட்டியா.. இன்னைக்கு கிளாஸ் டெஸ்ட் இருக்கு.. நினைப்பிருக்கா..?"
"இருக்கு.. இருக்கு..."
"அதான்.. வீட்டில் படிக்க முடியலை... டெஸ்டுக்கு முன்னாலே புரட்டியாவது வைக்கலாமுன்னு புத்தகத்தை கையிலெடுத்தேன்.. நீயும் வந்திட்ட..."
"புரட்டிப் பார்த்தா டெஸ்ட் எழுத முடிஞ்சிருமா...?"
"எங்கேயோ பார்த்த ஞாபகமாவது கொஸ்டினைப் பார்த்தா நமக்கு வருமில்லையா...? அதுவுமில்லாம போனா.. கொஸ்டினுக்கும்.. நமக்கும் என்ன சம்பந்தமுன்னு குழம்பிப் போயிர மாட்டோமா..?"
"அதைச் சொல்லு.. என்னடா.. என்னைக்கும் இல்லாத திருநாளாய் நம்ம ஷீலா புத்தகத்தையெடுத்து புரட்டிப் பார்க்கிறாளேன்னு பார்த்தேன்.. இதுதான் மேட்டரா."
"என் மேட்டரை விடு... உன் மேட்டருக்கு வா... எந்த அளவில் இருக்கு... உன் மேரேஜ் ஏற்பாடு...?"
"அடுத்த முகூர்த்தத்தில் மேரேஜ்... அந்த அளவில் இருக்கு..."
ஓரக் கண்ணில் ஷோபாவைப் பார்த்தபடி ராதிகா சொல்லி வைக்க... ஷோபாவிற்கு 'திக்'கென்று ஆகிவிட்டது...
தலைவலியோடு... நெஞ்சு வலியும் சேர்ந்து கொள்வதற்கான அறிகுறிகள் ஆரம்பிக்க... அவள் மூச்சுத்தினறலோடு ராதிகாவை பார்த்தாள்...
 "ஈஸிட்..? அவ்வளவு பாஸ்டான ஆளா உன் ஆளு..?"
சங்கரை ராதிகாவின் ஆள் என்று சொன்னதற்காகவே... அதுநாள்வரை ஷோபாவுக்கு தோழியாக இருந்த ஷீலா... அந்த நொடியிலிருந்து அவளுக்கு எதிரியாகிப் போனாள்...
'எதை வைச்சு... சங்கரை இவ ஆளுன்னு... இந்த ஷீலா சொல்கிறா...'
கொலைவெறியோடு பற்களை நறநறத்தாள் ஷோபா..
"அவர் பாஸ்டை இந்த உலகமே அறியுமே.. நீ இவ்வளவு லேட்டாய் கொஸ்டின் பண்றயே ஷீல்..."
"அட... உன் ஹப்பிமேலே இப்படியொரு ஹீரோ வொர்ஷிப்பா...? அசத்தறே ராதிகா...."
"அவர் அதுக்குத் தகுதியானவர் ஷீலா... ஹி இஸ் வெரி ஹேண்ட்சம் மேன்...."
"ஐ நோ இட் ... யு ஆர் எ லக்கி பெர்சன் ராதிகா..."
"ஷ்யூர்... ஷ்யூர்..."
"எனிவே... அட்வான்ஸ் கங்கிராஜீலேசன்ஸ்..."
"தேங்க்யூ..."
"டெஸ்டுக்கு படிச்சிட்டயா..? நீ படிச்சிருப்பே... என்னைப்பாரு... எந்த லெசனில் டெஸ்டுன்னு அடையாளம் பார்க்க... புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருக்கேன்..."
"இல்லை ஷீலா... நானும் படிக்கலை..."
"இதை நம்ப நானொன்னும் பப்பா இல்லை... நீயாவது... டெஸ்டுக்கு படிக்காம வருகிறதாவது..."
"நிஜம்தான் ஷீலா... நான் படிக்கலை... படிக்க நேரமே கிடைக்கறதில்லை..."
"ஏண்டி...?"
"தினமும் சங்கருடன் அவுட்டிங் போகவே எனக்கு நேரம் சரியாய் இருக்கு... இதில படிக்க நேரத்துக்கு நானெங்கே போகிறது..."
"ஓ... கதை அப்படிப் போகுதா.ட..? இன்ட்ரெஸ்டிங்.."
"நேத்து அவர் வரச்சொன்ன இடத்துக்குப் போனேன்... சரியாய் பேச முடியலை... அந்தக் கோபத்தில் மிட்நைட்டில் போன் பண்ணி காச்.. மூச்சுன்னு கத்தறார் ஷீலா..."
"மிட்நைட் மசாலாவா...? சொல்லு.. சொல்லு..."
"என்னத்தைச் சொல்ல..? விடிய.. விடிய.. பேசிக்கிட்டு இருந்தேன்.. அப்புறம்தான் ஒருவழியாய் சமாதானமானார்... இன்னைக்கு மகாபலிபுரம் போவோம்ன்னார்.. ஓகேன்னு சொல்லியிருக்கேன்.. ஈவினிங் கிளாஸை கட் அடிச்சுட்டு.. ஓடியே போயிருவேன்..."
"கொடுத்து வைச்சவடி நீ... அசத்து..."
"தேங்க்ஸ்..."
"மேரேஜீக்கு அப்புறம் டிஸ் கண்டினியூ பண்ணுவதானே..."
"தெரியலைடா... அவர் என்ன சொல்கிறாரோ.. அதைத்தானே நான் செய்யனும்..?"
"இதைப் பற்றி நீங்க டிஸ்கஸ் பண்ணியிருப்பீங்க தானே..."
"பண்ணினோம்... பண்ணினோம்.. அவருக்கு நிறைய பிஸினெஸ் இருக்கு ஷீல்.. ஏதாவது ஒரு கம்பெனியில் என்னை எம்.டியாய் உட்கார வைச்சுடனும்கிறது அவரோட பிளான்..."
"அதுக்கு நீ படிப்பை கம்ப்ளீட் பண்ணியாகனும் தானே..."
"யெஸ்.. யெஸ்.. பட்.. மேரேஜ் முடிந்தவுடன் நாங்க வெர்ல்டு டூர் போக வேண்டியிருக்கும்.. அதனாலே லாங்லீவ் எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம்..."
"ஜமாய்..."
ராதிகா... ஷீலாவின் அருகிலிருந்த மற்றொருத்தியிடம் பெருமை பேச ஆரம்பித்தாள்... ஷீலா.. புத்தகத்தில் அன்றைய தேர்விற்கான பாடம் எதுவாக இருக்கக் கூடும்... என்ற தனது தேடுதலைத் தொடர்ந்தாள்.. கட்டுமீறிய தலைவலியைக் கட்டுப் படுத்த முடியாமல் ஷோபா தலையைப் பிடித்தபடி காரை நோக்கி விரைந்தாள்... எது நடந்ததோ.. அது நன்றாகவே நடந்தது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -40
அம்மம்மா.. கேளடி தோழி...! -40
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-40.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-40.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy