அம்மம்மா.. கேளடி தோழி...! -39

39 யாரென்று எனை நினைத்தாய்.. ? லேசாக எடை போட்டாய்... முகமெங்கும் மத்தாப்பூ போல ஒளிர்வுடன்... ஸ்கூட்டியில் வந்து இறங்கிய ராதிகா......


39
யாரென்று எனை நினைத்தாய்..?
லேசாக எடை போட்டாய்...

முகமெங்கும் மத்தாப்பூ போல ஒளிர்வுடன்... ஸ்கூட்டியில் வந்து இறங்கிய ராதிகா...
"ஹாய்.. ஹாய்..." என்று கையை ஆட்டியபடி தோழிகளை நோக்கி வந்த உற்சாகத்தைக் கண்டு ஷோபா யோசனையானாள்...
'இவ இன்னுமா அடங்கலை...?'
சங்கரைப் பற்றி ராதிகா அள்ளி விட்ட மறு நொடியே.. அவள் விரைவாக தன் வேலைகளை ஆரம்பித்து விட்டிருந்தாள்...
முதலில் ராதிகா சொன்ன செய்திகள் உண்மையானது தானா என்று உறுதிப் படுத்திக் கொண்டாள்....
"என்ன சொல்ற ஷோபா.."
மகள் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போன பரந்தாமன் அவள் முன்னாலேயே ராமாமிர்தத்திற்கு போன் செய்தார்...
"ராம்.. ஒரு நியூஸ் கேள்விப் பட்டேன்..."
"....."
"என்னடா இப்படிச் சொல்ற..? நீ எப்படி அந்தப் பெண்ணின் வீடு தேடி குடும்பத்துடன் போய் பெண் கேட்கலாம்...?"
"....."
"சங்கர் விரும்பினா.. நீ ஊம்ன்னு தலையை ஆட்டலாமா..? நம்ம ஸ்டேட்டஸைப் பத்தி யோசிக்க வேண்டாமா..?"
"....."
"ஷோபாவுக்கு நான் என்ன பதிலைச் சொல்வேன்..?"
"....."
"இல்லைதான்.. சங்கருக்கு ஷோபாவின் மேல் இன்ட்ரெஸ்ட் இல்லைதான்.. அதை உண்டாக்கத்தான் நீயும்.. நானும்.. பாடாய் பட்டுக் கொண்டிருக்கிறோமே.. அதுக்குள்ளே நீ என் தலையில் இடியைத் தூக்கிப் போடலாமா..?"
"....."
மறுமுனையில் ராமாமிர்தம் நீண்ட விளக்கத்தைக் கொடுக்க.. சுரத்தில்லாமல் அவற்றை 'ஊம்' போட்டுக் கேட்டு விட்டு போனை அணைத்தார் பரந்தாமன்...
மகளை நிமிர்ந்து பார்த்த அவர் கண்களில் தெரிந்த வேதனை ராதிகா சொன்ன செய்திகள் உண்மைதானென்று ஊர்ஜிதம் செய்ய.. அந்தத் தோல்வியின் பாரம் தாங்காமல் விழி மூடிக்கொண்டாள் ஷோபா...
'கடைசியில் என் வாழ்க்கையிலயும் என்னை தோற்கடித்து விட்டயேடி...' அவள் மனம் பதறியது...
இப்படி நிகழுமென்று முன்கூட்டியே தெரிந்திருந்தால்... அன்றைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ராதிகாவை அவள் அழைத்திருக்கவே மாட்டாளே..
அவள் எதையோ நினைத்து செய்யப்போக.. அது அவள் வாழ்வின் அஸ்திவாரத்தையே ஆட்டி வைப்பதில் வந்து முடிந்து விட்டதே...
"உன்னால்தான் ஷோபா..." பரந்தாமன் குற்றம் சாட்டினார்...
"நீதான் அவளை உன் பர்த்டே பார்ட்டிக்கு இன்வைட் பண்ணினாய்..."
"டாட்.. இதை நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை... அவளெல்லாம் எனக்கு ஈக்குவலா டாட்..?"
"அப்படி யாரையும் ஈஸியா எடைபோட்டு விடக் கூடாது ஷோபா.. உனக்கு சங்கரின் டேஸ்டைப் பத்தித் தெரியும்.. அவன் நேச்சரை லைக் பண்ணுகிறவன்.. அவன் கண் முன்னாலே.. அவன் விரும்புகிறதைப் போல ஒரு பெண்ணைக் கொண்டு வந்து நிப்பாட்டித் தொலைச் சிருக்கயே.. உன்னை என்ன பண்ணினால் தேவலாம்..?"
"டாடி.. ப்ளீஸ்... நானே நொந்து போயிருக்கேன்.. போயும் போயும்... அந்த ராதிகாவிடம் தான் நான் தோற்கனுமா..?"
"இது நீயாய் தேடிக்கிட்ட தோல்வி ஷோபா.. அவளைத் தான் மேரேஜ் பண்ணிக்குவேன்னு.. சங்கர் அடித்துச் சொல்லி விட்டானாம்... ராமுக்கும்.. அவன் வொய்புக்கும் இதில் கொஞ்சம்கூட விருப்பம் இல்லையாம்.. இருந்தாலும்.. ஒரே மகன்.. அவன் மனதுக்கு மாறாய் எதையும் அவங்களாலே செய்ய முடியாதில்லையா..? அதுக்காக பெண் கேட்டுப் போயிட்டாங்க.. அனேகமா.. அடுத்த மாதமே மேரேஜ் நடந்தாலும்.. நடந்து விடலாமாம்..."
இதைக் காது கொடுத்து கேட்பதற்காகவா.. அன்று வரமாட்டேன் என்று மறுத்த ராதிகாவை வருந்தி.. வருந்தி.. வற்புறுத்தி தன் வீட்டு விருந்துக்கு வரவைத்தாள் ஷோபா..?
"உன்னைப் புத்திசாலின்னு நினைத்தேன்..."
பெருமூச்சுடன் அவளைத் தனியாக விட்டு விட்டு நகர்ந்து விட்டார் பரந்தாமன்....
அவளை புத்திசாலியென்று நினைத்த தன் நினைவு தவறானது என்பதை அந்தப் பெருமூச்சின் மூலம் அவர் உணர்த்தி விட்டுப் போக.. காலேஜில் ஷோபாவை மக்காக்கியது போதாது என்று.. அவளின் வீட்டுக்குள்ளேயும் 'மக்கு..' என்ற பெயரை வாங்கிக் கொடுத்து விட்ட ராதிகாவின் மீது ஷோபாவின் மனதிற்குள் வன்மம் பெருகியது...
"ஷோபா..." சுசிலா உள்ளே வந்தாள்...
என்னவென்று கேட்காமல் கண் மூடிப் படுத்திருந்த மகளின் முகத்தைப் பார்த்தே அவளின் மனநிலையை எடைபோட்டு விட்ட சுசிலா... மகளின் அருகே அமர்ந்து.. ஆதரவாக அவளின் நெற்றியை வருடிக் கொடுத்தாள்...
"அம்மா..."
அந்தப் பரிவில் ஷோபாவின் மனத்துயரம் கண்ணீர் கோடாக வெளிவந்து.. கன்னத்தில் இறங்கியது...
"அடச்சீ.. அழுகாதே.. நீ எதுக்காக அழுகனும்..? இந்த உலகத்திலேயே.. அந்த சங்கர் ஒருத்தன்தான் மாப்பிள்ளையா..? அவனை விடப் பணக்காரனாய்.. என் அக்கா மருமகளின் தம்பி.. பாலமுரளி இருக்கிறான்.. இந்த சங்கரைப் பற்றிச் சொன்னா.. இந்தச் சென்னைக்குள்ளே எத்தனை பேருக்குத் தெரியும்..? அதுவே பாலமுரளியைப் பற்றிச் சொன்னா.. தென்காசிப் பட்டினம் முழுவதும் தெரியும்.. இன்னாருக்கு பெண்டாட்டி.. இன்னார் வீட்டு மருமகள்ன்னு.. நீ அந்த சங்கரின் முன்னாலே விரலைச் சொடுக்கி நிற்கலாம் ஷோபா.. இதுக்குப் போயா இப்படி அழுது வைக்கிற..?" சுசிலா மகளை அதட்டினாள்...
ஷோபா.. யோசனையுடன் தாயைப் பார்த்தாள்.. அவளது யோசனை எதற்காகவென்று புரியாதவளாய் மகளைத் தேற்றிக் கொண்டிருந்தாள் சுசிலா...
"உன் அப்பா பிரண்டுன்னார்.. அவனும் சென்னைக்காரனா இருந்தான்.. ஆளும் அழகாய்.. உனக்குப் பிடித்த மாதிரி.. வெள்ளை வெளேருன்னு இருந்து வைச்சான்.. வெளிநாட்டு படிப்பு வேற..
சரி.. அமைஞ்சா உனக்கும் சந்தோசம்தானேன்னு நினைச்சேன்.. இது அமையல.. விட்டுத் தள்ளிட்டு அடுத்த இடத்தைப் பார்ப்பியா.. அதை விட்டுட்டு கண்ணைக் கசக்கிக் கிட்டு இருக்க.."
"இல்லேம்மா.. இனிக் கண்ணைக் கசக்க மாட்டேன்..."
ஷோபாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியாதவளாய் அவளது வார்த்தைகளில் சுசிலா மனநிம்மதியடைந்தாள்...
"அஃது.. இதுதான் என் மகள் ஷோபா...! இப்படித்தான் தைரியமா இருக்கனும்.. இப்ப எதையும் யோசிக்காம படுத்துத் தூங்கு.. நாளைக்கு இதைப் பத்தி நினைச்சுப் பார்த்தின்னா.. இதுக்கா நாம கண்ணைக் கசக்கினோம்ன்னு உனக்கே தோணும்..."
அறைக்கதவை மெதுவாக.. சத்தமில்லாமல் மூடிவிட்டு.. சுசிலாசென்று விட.. ஷோபா அவளுடைய செல் போனை எடுத்து நம்பர்களை அழுத்தினாள்...
"ஹலோ..." மறுமுனையில் பாலமுரளியின் குரல் ஒலித்தது..
"நான் ஷோபா.." என்றவளின் குரலைக் கேட்டதும்..
"என்ன விசயம்..?" என்று ஒட்டாத குரலில் பட்டுக் கத்தரித்தான் பாலமுரளி...
'உனக்கும்.. அவளைத்தானே பிடிக்கும்...' ஷோபா மனம் பொறுமினாள்...
"நிறைய விசயம் இருக்கு... உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..."
"எனக்கு அர்ஜண்ட் வொர்க் இருக்கு ஷோபா.. எதைச் சொன்னாலும் ஒரே நிமிசத்தில சொல்லி முடிங்க.."
இப்படிச் சொன்ன பாலமுரளி...
"ராதிகாவுக்கும்.. சங்கருக்கும் மேரேஜ் நடக்கப் போகுது...", என்று ஷோபா சொன்னவுடன்...
"விவரமாகச் சொல்லுங்க..." என்று சொன்னான்...
'நீ கில்லாடிடா...' பல்லைக்கடித்தாள் ஷோபா...
அவள் பேசினால் அவனுக்கு அதி முக்கியமான வேலைகள் இருக்கிறதாம்.. அதுவே ராதிகாவைப் பற்றிய பேச்சாக இருந்தால் அதை அவள் விவரமாகச் சொல்ல வேண்டுமாம்.. அதை கேட்பதை விட முக்கியமாய் அவனுக்கு எந்த வேலையும் இல்லையாம்...
'அவகிட்ட அப்படி என்னதான் இருக்கு..?'
ஷோபாவும் யோசித்துப் பார்த்து விட்டாள்.. என்னதான் யோசித்தாலும்.. ஷோபாவை விட அழகிலோ.. பணத்திலோ.. ராதிகா உயர்ந்தவளில்லையென்ற முடிவுதான் அவளுக்கு கிடைத்தது...
அறிவைப் பற்றி யோசிக்காமல் கெட்டிக்காரத்-தனமாய் அதை மட்டும் விட்டுவிட்டாள் ஷோபா...
"உங்களுக்கு அர்ஜண்ட் வொர்க் இருக்குன்னு சொன்னீங்களே... நாம வேண்டும்ன்னா.. இதைப் பற்றி இன்னொரு நாள் பேசலாமா..? அநேகமா... அப்ப.. ராதிகாவுக்கு சங்கர்கூட மேரேஜ் நடந்து முடிந்தாலும்.. முடிந்திருக்கும்..."
வேண்டுமென்றே பேசிய ஷோபாவின் குரலில் இருந்த எள்ளலை பாலமுரளி புரிந்து கொள்ளாமல் இருந்திருக்க முடியாது.. மறுமுனை ஒரு வினாடி மௌனம் சாதிக்க.. அவன் புரிந்து கொண்டதை ஷோபா தெரிந்து கொண்டாள்...
"ஸாரி ஷோபா.. வேலை அதிகமா இருந்த டென்சனில் அப்படிச் சொல்லிட்டேன்.. நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்க..." அவன் குரல் தணிந்திருந்தது...
'அப்படி வா வழிக்க... யாருகிட்ட உன் வேலையைக் காட்டற...' ஷோபா கெத்தாக நிமிர்ந்து அமர்ந்தாள்...
"முரளி... ஆச்சுவலாய் அந்த ராதிகா எனக்கு பிரண்டில்லை..." என்று அவள் ஆரம்பிக்க..
"அதுதான் எனக்குத் தெரியுமே..." என்று எரிச்சலுடன் சொன்னான் பாலமுரளி...
இதைச்சொல்லவா வேலை மெனக்கெட்டு போன்பண்ணி.. அவன் வேலையைக் கெடுத்துக் கொண்டிருக்கிறாள் என்ற கோபம் அவனுக்கு...
"வெயிட்.. வெயிட்.. நான் எல்லாத்தையும் சொல்லியாகனும்னா.. நீங்க அவசரப்படக்கூடாது முரளி.."
"ஓகே.. சொல்லுங்க..."
"அவ என்னோட பிரண்டிடம் அளந்து விட்டுக்கிட்டு இருந்தா..."
"எதைப்பத்தி...?"
"சங்கரைப் பற்றி.. அவனுடைய அழகைப் பற்றி.. அவனுடைய பணத்தைப் பற்றி.. அவனுடைய வெளிநாட்டுப் படிப்பைப் பற்றி.. அவனோட தொழில் திறமையைப் பற்றி.. அவளை அவன் வெளிநாட்டு
டூருக்கு கூப்பிட்டுக்கிட்டு போகப் போகிறதைப் பற்றி... அவளுக்கும்.. அவனுக்கும் இடையில் இருக்கிற காதலைப் பற்றி... அடுத்த முகூர்த்தத்தில் அவங்க இரண்டு பேருக்கும் நடக்க இருக்கும் மேரேஜைப் பற்றி..."
ஷோபா அடுக்கிக் கொண்டே போக.. குறுக்கே பேசாமல் பொறுமையாக கேட்டான் பாலமுரளி...
"சங்கர் மன்மதனாம்.. ராதிகா சொன்னாள்.. அவ பேசினதை என் செல் போனில் ரெகார்டு பண்ணியிருக்கேன்.. உங்களுக்கு அதை அனுப்பவா..?"
அவன் என்ன பதிலைச் சொல்வான் என்றுதான் ஷோபாவுக்கு உள்ளங்கையின் நெல்லிக் கனியைப் போலத் தெள்ளத் தெளிவாக தெரியுமே...
ஊஹீஹீம்.. வேண்டாம்.. அடுத்தவர்கள் பேச்சு எனக்கு எதற்கு என்றா சொல்லப் போகிறான்...?
அவள் எதிர்பார்த்ததைப் போலவே...
"உடனே அனுப்புங்க ப்ளீஸ்..", என்றான் பாலமுரளி..
யாருக்கும் வணங்காதவன் போட்ட ப்ளீஸைக் கேட்டதும்.. ராதிகாவின் சக்தியை உணர்ந்தவளாக அவள் மேல் பொறாமைப் பட்டாள் ஷோபா...
பாலமுரளி ஷோபாவை மதித்து ஒருவார்த்தை கூட நின்று பேசியதில்லை.. கெத்தாக ஒரு தலையசைவுடன் போய் விடுவான்.. அவன் இன்று அவளிடம் 'ப்ளீஸ்..' போடுகிறான்... எதற்காக..? ராதிகாவிற்காக...
சங்கர் அவளை மறுத்ததை விட.. இது மிகப்பெரிய தோல்வியாக ஷோபாவுக்குத் தோன்றியது..
இந்த மன ரணங்கள் என்று ஆறும் என்ற வேதனையுடன் ஒரு நொடி தடுமாறினாள் ஷோபா.. மறு நொடியே.. ராதிகாவை அழித்து விட வேண்டும் என்ற வன்மம் மனதில் பொங்கியெழ.. தோல்விகளின் கனத்திலிருந்து விடுபட்டு.. ராதிகாவின் பதிவு பண்ணிய பேச்சை பாலமுரளிக்கு அனுப்பி வைத்தாள்...
அவளுக்கு ராதிகாவின் அந்தரங்க மனதில் பாலமுரளியின் மேல் பொதிந்திருக்கும் காதலைப் பற்றித் தெரியாது...
ராதிகாவின் அந்தரங்கமான காதலுக்கு உரியவனே.. அவளது அந்தரங்கத்தை அறியாமல் இருந்தபோது.. ஷோபா மட்டும் எப்படி அதை அறிவாள்..?
அவள் ராதிகா சங்கரின் மேல்தான் ஆசைப்படுகிறாள் என்று நினைத்து விட்டாள்.. அதே சமயத்தில்.. பாலமுரளியின் மனதில் ராதிகாவின் மீது ஒர்விதமான ஈர்ப்பு இருப்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது...
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..!
இதுதான் ஷோபாவின் திட்டம்..
ராதிகா சங்கரைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.. அதேசமயம்.. பாலமுரளியின் காதலையும் அவள் தெரிந்து கொள்ளக் கூடாது.. சங்கருடனான அவளது திருமணமும் நிற்க வேண்டும்... அதே நேரத்தில்... பாலமுரளியின் மாறாத வெறுப்பிற்கும் அவள் ஆளாக வேண்டும்..
ஷோபா திட்டமிட்டு.. மிகத் தெளிவாக காய்களை நகர்த்த ஆரம்பித்தாள்...





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -39
அம்மம்மா.. கேளடி தோழி...! -39
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-39.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-39.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy