அம்மம்மா.. கேளடி தோழி...! -38

38 சொன்னமொழி தவறு என்பதையே... சொன்னவன் என்றுதான் அறிவானோ.. ? ஊரே உறங்கிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவு வேளையில்.. உறங்காமல் கண்மூடிப...


38
சொன்னமொழி தவறு என்பதையே...
சொன்னவன் என்றுதான் அறிவானோ..?

ஊரே உறங்கிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவு வேளையில்.. உறங்காமல் கண்மூடிப் படுத்திருந்தாள் ராதிகா... அவளது மைவிழிகள் சிந்திய கண்ணீரை மையிருட்டு மறைத்தது... தலையணை நனைய.. அதில் முகம் புதைத்து.. மற்றவர்கள் அறியாமல் சப்தமின்றி விம்மியவளின் நெஞ்சம் சுக்கு நூறாக நொறுங்கியிருந்தது...
'இனி என்ன செய்வேன்...?'
நடந்து முடிந்து விட்ட நிகழ்வில் மனம் அதிர.. அவள் முன் வாழ்வே சூன்யமாக நின்றது...
எதற்கும் அழுகாத ராதிகாவை காதலினால் அழுக வைத்தவன்... அன்று கறைபடிந்தவளாக்கி அழுக வைத்துவிட்டான்...
யாதுமாக அவள் நினைத்திருந்தவனே.. அவளை சூறையாடிவிட்ட கொடுமையினை நினைத்து நினைத்து மனம் துடிக்க அழுதாள் ராதிகா...
'எல்லாம் முடிந்து விட்டது...'
அவள் மனம் வெறுமையாக வெம்பியது... தன் மனதில் சக்தியற்று போய் விட்டதை உணர்ந்தாள் அவள்..
'இனியும் நான் உயிரோடுதான் இருக்கனுமா..?'
நடந்ததை அவளது குடும்பம் அறிந்துவிட்டால் என்னவெல்லாம் நடக்கக் கூடும் என்ற நினைவில் நடுங்கினாள் ராதிகா...
'அப்பா உயிரையே விட்டு விடுவார்...'
நினைக்கும் போதே அவளது நெஞ்சம் பதறியது...
'அம்மா என்னோடு சேர்த்து.. எல்லாத்துக்கும் விஷத்தைக் கொடுத்துட்டு.. தானும் சாப்பிட்டு விடுவாங்க...'
லேடி ஹிட்லர் அந்த ஒன்றில் மகா உறுதியாக இருப்பாள் என்பதை அறிந்து வைத்திருந்த ராதிகாவுக்கு உலகமே இருட்டானதைப் போல தோன்றி உள்ளே குளிரெடுத்தது...
'என்னாலே... என் குடும்பமே தலை குனியனுமா..? அழியனுமா...?'
இந்தக் கேள்வியில் அவளுக்குள் இருந்த பழைய ராதிகா உயிர் பெற்று எழுந்தாள்... கண்ணீரும்.. கம்பலையுமாக இருந்தவளை அதட்டினாள்...
'ஏண்டி அழுகறே...? இப்ப என்ன நடந்திருச்சு...?'
ராதிகா திகைத்து விட்டாள்... அவள் மனதிலிருந்த பழைய ராதிகாவிடம் தீனமான குரலில் கேட்டாள்..
'என்னடி இப்படிக் கேட்கிற...? என் வாழ்க்கையே அழிஞ்சுருச்சே...'
இதைக் கேட்ட பழைய ராதிகா அவளை முறைத்தாள்... அங்கே இழப்பை உணர்ந்து பரிதவித்த ராதிகாவிற்கும்.. இயல்பான போராட்ட குணமுள்ள ராதிகாவிற்கும் இடையே வழக்காடு மன்றம் ஆரம்பமானது...
'அழிஞ்சுட்டதா ஏன் நினைக்கறே..? வாழ்ந்துட்டதாய் நினை...'
'அடிப்பாவி... இதுதான் நான் வாழ்ந்த லட்சணமா..?'
'உனக்கு அவனைப் பிடிக்கும்தானே...?'
'பிடிக்கும்...'
'அவனை மட்டும்தானே பிடிக்கும்..?'
'ஆமாண்டி... ஆமாம்... அவனைமட்டும்தான் பிடித்து தொலைச்சிருக்கு...'
'அவனைத்தவிர வேறு ஒருத்தனால் உன்னை இவ்வளவு எளிதாக தொட்டிருக்க முடியுமா..?'
அவளது அந்தரங்க மனதிலிருந்த ராதிகா கேட்ட கேள்வியில் அவள் அதிர்ந்தாள்.. அது உண்மைதானே... வேறு ஒருவனின் விரல் நகம்கூட அவள் மீது பட்டிருக்க முடியாது தானே...
'என்னடி பேச்சைக் காணோம்..? அவன் உன்னைத் தொட்டான் தான்... நீ முழுமனசாய் அவன்கிட்டயிருந்து விடுபடனும்னு போராடினாயா..?'
'அவனிடம் கெஞ்சினேன்டி... கதறினேன்டி...'
'நீ போராடினாயா..? இதுதான் என் கேள்வி...'
'அவன் காலில் விழுந்தேண்டி...'
'அதுக்குப் பதிலாய் அவன் தலையில் எதையாவது எடுத்து அடித்து அந்த இடத்திலேயே அவனைக் கொன்றிருக்கலாமே.. ஏண்டி நீ அதைச் செய்யலை...?'
'கொல்கிறதா..? அவனையா..? என்னப் பேச்சு பேசறடி.. என்னால் அவனை மெல்ல அடிக்கக்கூட முடியாதுடி...'
'ஏன்..? அதுதான் ஏன்..? அவன் உன் உயிரை விட மேலான கற்பை சூறையாடிக்கிட்டு இருக்கான்.. நீ அவன் காலில் விழுந்து கெஞ்சினேன்னு சொல்ற.. இதைச் சொல்ல உனக்கே அபத்தமாய் தோணலியா..?'
'நான் என்னடி செய்வேன்..?'
'எதை வேணும்னாலும் செய்திருக்கலாமே.. உன் கைவிரல் நகங்களும்.. பற்களும் கூட அந்த மாதிரியான சூழ்நிலையில் ஓர் ஆயுதம்தானே... நீ அவைகளைப் பயன்படுத்தினாயா..?'
இந்தக் கேள்வியில் தலை குனிந்தாள் ராதிகா...
'என்னடி பேச்சைக் காணோம்... ஏன் நீ அதைச் செய்யவில்லை...? அவன் உடம்பில் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் அவன் நினைத்ததை சாதித்து விட்டுப் போயிருக்கிறானே... அது எப்படி...?'
எப்படியென்று சொல்வாள் ராதிகா...? அவன் தொட்டவுடன் பாகாய் குழைந்த உடலையும்.. மனதையும் வைத்துக்கொண்டு.. பிரியமானவனுடன் போராட முடியாமல் போய் விட்டதன் இயலாமையை எப்படி அவளால் சொல்ல முடியும்..?
'ஊமையாகி விட்டாயே ராதிகா.. இதுதான் நீ...! அவன் உன்னை தொட்டு விட்டதற்காக நீ துடிக்கவில்லை.. தொட்டவன் உன்னை விட்டுவிட்டுப் போய் விட்டானே.. அதனால்தான் நீ துடிக்கிறாய்...'
அவளது மனநிலையை பழைய தெளிவான ராதிகா பிட்டுப்பிட்டு வைக்க..
'என்னது..?' என்று அதிர்ந்தாள் ராதிகா...
'என்னடி... உண்மையைச் சொன்னால் அதை ஒப்புக் கொள்ள உனக்கு மனமில்லையா..? எங்கே.. நான் சொன்னதை இல்லையென்று முழுமனதாய் சொல்லு பார்ப்போம்...'
பழைய ராதிகா சவால்விட.. பதில் சொல்ல முடியாமல் திருதிருத்தாள் ராதிகா...
'உன்னுடன் அவன் கழித்த அந்த மணித்துளிகளை மரணப்படுக்கையிலும் நீ மறக்காமல் நினைவில் வைத்திருப்பாய்... இதுதான் நிதரிசனமான உண்மை..! உன் அந்தரங்கத்தில் அந்த வினாடிகள் தேன்துளிகளாக புதைந்திருக்கும்... எவரும் அறியாமல் அதை நினைத்து... நினைத்து.. நீ மனம் சுகிப்பாய்...'
மனம் மயக்கும் அந்த வினாடிகளில் தன் மனம் புதைந்திருந்ததை அந்த நொடியில் உணர்ந்தாள் ராதிகா.. அவன் தொட்ட மணித்துளிகள் அந்தரங்கத்தின் பெட்டகத்தில் தேன் துளிகளாக சேர்ந்து விட்டதையும் அவள் மனம் உணரத்தான் செய்தது...
'இருந்தாலும்...' ராதிகா மனம் தவித்தாள்...
'இனியும் என்னடி..?' பழையவள். அதட்டினாள்...
'அம்மா.. அப்பா... கீதா... சுந்தர்...'
'இவங்களுக்கு என்ன..?'
'இதைத் தெரிந்தால் குடும்பத்தின் நிலைமை என்ன ஆகும்? அதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு...'
'ஒரு மண்ணும் ஆகாது.. இப்ப என்ன ஆகிருச்சுன்னு இப்படி பயப்படுகிற ராதிகா.. நீ உன்னுடையவனுடன் வாழ்ந்திருக்கிறாய்...'
'அதை ஊரறிய சொல்ல முடியுமா...?'
'ஏன் முடியாது..? ஊரும்.. உலகமும் அறிய அவன் உன் கழுத்தில் தாலிகட்டினால் சொல்ல முடியும்...'
'அவன்தான் எனக்கு இது தண்டனைன்னு சொல்லிட்டுப் போய் விட்டானே...'
'அவன் போனால்.. நீ அப்படியே விட்டு விடுவியா..?'
'வேறென்ன செய்வது..?'
'ச்சீ.. இப்படிக் கேட்க உனக்கு வெட்கமாயில்லை..? அவன் ட்டையைப் பிடித்து நாலு கேள்வி கேட்டு.. உன் கழுத்தில் தாலியைக் கட்டவை.. அதை விட்டு விட்டு புலம்பாதே.. குழம்பாதே...'
'விருப்பமில்லாதவனை.. என்னை வெறுக்கிறவனை.. தேடிப்பிடித்து அவன் காலில் விழுந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி... கெஞ்சச் சொல்கிறயா..?'
'உன்னை யாருடி அவனிடம் போய் கெஞ்சச் சொன்னது..? அவனைத்தேடி நீயேன் போகனும்..? அவனை உன்னைத் தேடி வர வை ராதிகா... உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அவன் வாயால் சொல்ல வை...'
'த்சு.. நடக்காததைப் பேசாதே.. அவன் என்னை வெறுத்துட்டான்.. அந்த ஷோபா வெறுக்க வைச்சுட்டா..'
'ஊஹீம்..? அப்படியா..? உன்னை வெறுத்தவன் எதுக்காக உன்னை அவன் தொட்ட பண்ணை வீட்டை விலைக்கு வாங்கறான்..? அது எதற்கான நினைவுச் சின்னம்...?'
பழைய ராதிகா கண்சிமிட்ட...
'ஏய்ய்..' என்று முகம் சிவந்தாள் ராதிகா...
'உன்னை அவனுடன் அந்த வீட்டில் இருந்து விடும்படி அவன் சொன்னானா.. இல்லையா..? வெறுக்கிறவன் அப்படிச் சொல்வானா..?'
'அந்தக் கொடுமையை நினைவு படுத்தாதே.. அவன் என்னை அவன் மனைவியாக இருக்கச் சொல்லவில்லை.. ஆசைநாயகியாக இருக்கச் சொன்னான்...'
அவமானத்தில் முகம் கன்றிவிட்டது ராதிகாவிற்கு..
'அவன் சொன்னால்.. நீ அப்படி இருந்து விடுவியா..? எப்ப அவன் உன்னைத் தொட்டு.. உன்னுடன் கலந்து விட்டானோ.. அப்போதே அவன்தான் உன் கணவன்.. நீதான் அவன் மனைவின்னு ஆகிவிட்டது... அதுக்கு மேலேயும் அவன் சொன்னதை நினைத்து நீ மனம் துன்பப்படனுமா..?'
'அவன் அப்படிச் சொல்லலாமா..?'
'நீ சங்கரைப் பற்றிப் பேசின பேச்சுக்களை கேட்ட பின்னாலே அவன் வேற எப்படிச் சொல்லுவான்..? வெறி பிடித்துப் போனவன் எதை வேண்டும்னாலும் செய்வான்.. எதையும் பேசுவான்..'
'என் மனதில் அவன் மட்டும்தானே...'
'உன் அந்தரங்கத்தை அவன் அறிவானா ராதிகா..?'
அந்தக் கேள்வியில் ராதிகா யோசிக்க ஆரம்பித்தாள்.. அவளின் பழைய தெம்பு மீண்டு வந்து கொண்டிருந்தது...
'யோசி ராதிகா... இதை சரிபண்ண என்ன வழின்னு யோசி.. நேற்று வரைக்கும் அவன் உன் காதலன்.. இன்றைக்கோ உனக்குத் தாலிகட்டாமல் தொட்டு விட்ட உன் கணவன்.. இந்த உறவை ஊரறிய உண்மையாக்க என்ன வழின்னு யோசி.. உன் குடும்பம் தலை நிமிர்ந்து வாழனும்னா.. அவன் உன்னைத் தேடி வரனும்.. உன்னைப் பெண் கேட்கனும்.. உலகறிய உன் கழுத்தில் தாலி கட்டனும்.. அதற்கு என்ன வழின்னு யோசி... உன்னைத் தொட்டவன் உன்னை விட்டுவிட்டுப் போனால் நீ சும்மாயிருந்து விடுவதா..? அவன் பதறிக் கொண்டு உன்னிடம் ஓடி வரனும்.. அதுக்கு என்ன வழின்னு யோசி.. அதை விட்டுவிட்டு தேவையில்லாததை யோசிக்காதே.. அழுது புலம்பாதே.. அது உன் சக்தியை குறைக்கும்..'
காண்டிபனுக்கு பாதை காட்டி அந்தக் கண்ணன் உபதேசித்ததைப் போல... அவளின் மனதிலிருந்த அவள்.. அவளுக்கு உபதேசித்தாள்.. வாழ்க்கையென்னும் குருஷேத்திரத்தில்... எதிர்பட்டிருக்கும்.. சக்கரவியூகத்தை உடைக்கும் வழியைச் சொல்லிக் கொடுத்தாள்... உள்ளே போனவள்.. வெளியே வர வழி கண்டுபிடித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு.. அவளுக்குள் கரைந்து போனாள்..
மகளே இனி உன் சமத்து.. என்று அவளின் மனச்சாட்சி சொல்லி விட்ட பின்பு ராதிகா சமர்த்தாகி விட்டாள்.. அவளது கண்ணீர் உலர்ந்து.. நின்று விட்டது.. விடிவதற்குள் இனிச்செய்ய வேண்டியது என்ன என்ற முடிவை அவள் எடுத்து விட்டாள்.. தெளிவான தீர்மானத்தோடு... உறங்கிப் போனாள்...
அவள் முகத்தில் மழைச்சாரலின் நீர்திவலைகள் நனைக்க...
"கீதா.. ஜன்னலை மூடுடி.. மழை பெய்யுது.." என்றபடி புரண்டு படுத்தாள்...
"மழையா..? இது ஒரு தம்ளர் தண்ணீர்டி..." கீதாவின் குரல் சிரிக்க.. கண் விழித்தாள் ராதிகா...
அவள் முகமெங்கும் நீர் திவலைகள் படிந்திருந்தது.. ஒரு கையில் பேஸ்டும்.. பிரஷ்ஷீம்.. மறுகையில் காலிதம்ளருமாக நின்றிருந்த கீதாவைக் கண்டதும் அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது...
"ஏண்டி பிசாசே... என் முகத்தில் தண்ணிய ஊத்தின..?" என்று பாய்ந்தாள்...
கீதா அதற்கெல்லாம் அயர்ந்து போகிற பெண்ணில்லை.. அவள் அலட்சியமாக பல்லைத் துலக்கியபடி...
"ஊம்.. அப்படியொரு நேர்த்திக்கடன்டி எனக்கு.. உன்கோபத்தை என்கிட்டக் காட்டாதே.. இதைச் செய்யச் சொன்ன லேடி ஹிட்லர்கிட்டக் காட்டு..." என்றாள்...
"அம்மாதான் தண்ணிய ஊத்தச் சொன்னாங்களா..?" அடங்கிப் போனவளாக எழுந்தாள் ராதிகா...
"இப்ப மூச்சே விட மாட்டியே.. லேடி ஹிட்லர்கிட்ட இருக்கிற பயம்.. அவங்களோட இரண்டாவது மககிட்ட உனக்கு இல்லாமப் போயிருச்சில்ல..?" கீதா கேட்டாள்..
ராதிகா அவளை முறைத்த முறைப்பில் ஓடி விட்டாள்..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -38
அம்மம்மா.. கேளடி தோழி...! -38
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-38.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-38.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy