அம்மம்மா.. கேளடி தோழி...! -37

37 உன் நிழலைத்தானே கேட்டேன்... நெருப்பாக ஏன் சுட்டாய் "இதோ ராதுவே வந்திட்டாளே..." கீதாவின் உற்சாகக் குரலில் திரும்பிப...


37
உன் நிழலைத்தானே கேட்டேன்...
நெருப்பாக ஏன் சுட்டாய்

"இதோ ராதுவே வந்திட்டாளே..."
கீதாவின் உற்சாகக் குரலில் திரும்பிப் பார்த்த கிருஷ்ணமூர்த்தியின் புருவங்கள் மேலேறின....
"என்னம்மா..? ஏன்.. என்னவோ போல இருக்க..?"
பெற்றவருக்கு பிள்ளையின் முகத்தைப் பார்த்தவுடனேயே அந்தப் பிள்ளையின் மனம் பாதிப்பு தெரிந்து விடுவதற்கான மர்மம் எதுவென்று ராதிகாவிற்கு தெரியவில்லை...
ஆனாலும்.. தகப்பனாரின் கரிசனத்தில் கண் கலங்கி விட்டாள் ராதிகா...
"ஒன்னுமில்லேப்பா..."
"ஒன்னுமில்லாததுக்கு ஏன் கண் கலங்கற...?" கிருஷ்ணமூர்த்தி விடவில்லை...
"நீங்க வேறப்பா..." கீதா இடைமறித்தாள்...
"என்ன சொல்ற...?"
"இவ இப்பல்லாம் சுத்த அழு மூஞ்சியா ஆகிட்டாப்பா... நேத்து டிவியில செம காமெடி படம் ஓடுதுப்பா... எனக்கும்.. சுந்தருக்கும் சிரிச்சுச்சிரிச்சு... வயித்து வலியே உண்டாகிருச்சு... இவளை யதேச்சையாய் பார்த்தோம்... எங்க ரெண்டு பேருக்கமே... தூக்கிவாரிப் போட்டிருச்சு..."
"எதுக்கும்மா..?" கிருஷ்ணமூர்த்திக்குப் புரியவில்லை...
"காமெடி படத்தைப் பார்த்து இவ அழுது வைச்சாப்பா..."
"என்னது..?!" மகளை விசித்திரமாகப் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி... அவரறிந்த ராதிகா... சும்மாவே விழுந்து.. விழுந்து சிரிப்பாள்... இதில் காமெடி படமென்றால் கேட்கவே வேண்டாம்..
அந்த ராதிகா... நகைச்சுவைப் படத்தைப் பார்த்து கண்ணில் தண்ணீரை விட்டாளா...?
'என்னடா இது...?' கிருஷ்ணமூர்த்திக்கு.. உலகின் விசித்திரங்களைக் குறித்து கவலை வந்து விட்டது...
"அதனாலேதான் சொல்றேன்... இவ மூஞ்சி எப்படியோ இருக்கேன்னு காரணம் கேட்காதீங்க... அது அப்படித்தான் இருக்கும்..." கீதா விளக்கம் சொன்னாள்...
"கோவிலுக்கு போயிட்டு வந்தவ... என்னவோ.. நடிகர் திலகத்தோட படத்துக்கு போயிட்டு வந்த மாதிரி அழுமூஞ்சியா வந்து நிற்கறியேடி... என்ன ஆச்சு...?"
அதுவரை நடந்ததை அறியாதவளாக... அப்போதுதான் சமையலறையை விட்டு வெளியே
வந்த ராஜேஸ்வரி மகளை அதட்டினாள் அதைக்கேட்ட கீதா வாய் பொத்தி சிரித்தாள்...
ராஜேஸ்வரி அப்படித்தான் பேசி வைப்பாள்... அவள் கருப்பு வெள்ளைப் படங்களின் தீவிர
ரசிகை... மக்கள் திலகத்தின் படங்களென்றால் அவளுக்குப் பிடிக்கும்.. திருமணத்திற்குப் பின்னால்..
ஒரு நாளில் கிருஷ்ணமூர்த்தி அவளிடம் மிக யதார்த்தமாக ஒரு விசயத்தைச் சொன்னார்...
"எனக்கு நடிகர் திலகம் படம்ன்னா அவ்வளவு இஷ்டம் ராஜி.. படம்ன்னா அவரோட படம்தான்.. படம்..."
அதுவரை மக்கள் திலகத்தின் படத்தைச் சாதாரணமாக பாராட்டி வந்த ராஜேஸ்வரி... அதற்குப் பின்னால் மக்கள் திலகத்தின் தீவிர அபிமானியாக மாறிவிட்டாள்.. அதில் கிருஷ்ணமூர்த்திக்கு வருத்தம்....
'ம்ஹீம்... நானா வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனே...'
அது எப்படித்தான்.. கிருஷ்ணமூர்த்தியைச் சார்ந்த அத்தனை விவரங்களுக்கும் ராஜேஸ்வரி எதிர்மறையான கருத்துக்களை வைத்திருக்கிறாளோ என்றிருந்தது அவருக்கு....
அவரைக் கடுப்படிக்க.. ராஜேஸ்வரி... அவருக்கு பிடித்தவற்றை விமரிசித்து வைப்பாள்...
"கேட்டுக்கடி கீதா... மக்கள் திலகம் படத்துக்குப் போனா... கலகலன்னு சிரிச்சுக்கிட்டு.. சிரிச்ச முகமா வெளியே வரலாம்... அதுவே நடிகர் திலகத்தோட படத்துக்கு போனோம்ன்னு வைய்யி... கர்சீப்பை பிழிஞ்சுக்கிட்டு வர வேண்டியதுதான்..."
"அது எதுக்கும்மா...?"
"அழுதழுது கர்சீப் நனைஞ்சு போனா.. பிழியாம என்னடி செய்றது...?"
இப்படிப்பட்ட ராஜேஸ்வரியிடம் நடிகர் திலகம் நடித்த நகைச்சுவை படங்களைப் பற்றி நினைவு படுத்த விருப்பப் படுவார் கிருஷ்ணமூர்த்தி... ஆனால்... அதைச் செய்ய ஆரம்பித்தால் விவாதம் முற்றுப்பெறாமல் சிந்துபாத்தின் கன்னித்தீவைப் போல நீண்டு கொண்டே சென்று விடும் அபாயம் இருந்ததால் வாயை இறுகி மூடிக் கொண்டு அமைதி காத்து விடுவார்...
அன்றும்... அது போல அமைதிக்கு அவர் தாவிவிட... ராதிகா அவளுடைய அறைக்குள் போகாமல்.. மொட்டை மாடிக்குப் போனாள்...
அதைக் கவனிக்காமல் ராஜேஸ்வரி அதிசயமாக கையில் கிடைத்த டிவியின் ரிமோட்டை கைப்பற்றிக் கொண்டு தொலைக்காட்சி தொடரில் ஆழ்ந்துவிட.. அதை எப்படி திரும்பவும் கைப்பற்றுவது என்ற சிந்தனையில் கிருஷ்ணமூர்த்தி ஆழ்ந்துவிட்டார்...
மொட்டைமாடியின் தனிமையில் சரிந்த ராதிகா ஓய்ந்து போயிருந்தாள்... கண்ணுக்கு முன்னால் சூன்யவெளி நிலைத்திருக்க.. அவள் மனம் சல்லடை.. சல்லடையாக சிதறியிருந்தது...
முழங்கால்களைக் கட்டி அதில் முகம் புதைத்துக் கொண்டவளின் காதுகளில் அந்தப் பாடல் நுழைந்தது...
"தூது சொல்ல
             ஒரு தோழி இல்லையென்று
    துயர் கொண்டாயோ தலைவி...?"
தெருவில் சோன்பப்டி விற்றுக் கொண்டு சென்றவனின் கைவண்டியிலிருந்து எப்.எம்மின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது...
அதைக் கேட்டதும் ராதிகாவின் கண்ணீர் அதிகமானது...
இதைப் போல பலமுறை அவள் நினைத்திருக்- கிறாள்... சங்க காலத்தில் மேகம் விடு தூது.. அன்னம் விடு தூது என்று இருந்ததைப் போல... இந்தக் காலத்தில் எந்தத் தூதும் அகப்படவில்லையே என்று ஏங்கியிருக்கிறாள்...
அவளுடைய டைரியில் அவளுடைய காதல் உணர்வுகளை கவிதையாகத் தீட்டியிருக்கிறாள்...
'அம்மம்மா.. கேளடி.. தோழி..!' என்று ஆரம்பித்த அந்தக் கவிதைகளின் அருகே அன்னப் பறவையின் படம் இருக்கும்...
"அசத்தலா இருக்குடி ராதிகா..."
அவள் டைரியைப் படித்துப் பார்த்த கீதா ஒருநாள் ஆச்சரியத்துடன் பாராட்டினாள்...
"அன்னப் பறவையின் படத்தைச் சொல்றியா...?" என்று கேட்டாள் ராதிகா...
"ஊஹீம்.. இந்தக் காதல் கவிதைகளைச் சொல்றேன்... என்னடி ஆச்சு..? யாரையும் காதலிச்சு.. கீதலிச்சு வைச்சிருக்கியா..?" சந்தேகத்துடன் பார்த்தாள் கீதா...
"தூ.. உன் புத்தி இப்படித்தானே போகும்... கொடுடி டைரியை..." கோபப் படுவதைப் போல நடித்தாள் ராதிகா...
இதற்காகத்தானே.. அவள் டைரியில் அவளுடைய மனதின் உணர்வுகளை சாதாரணமாக எழுதாமல்.. கவிதைகளாக வடித்தாள்... அந்தரங்கமானது என்றெல்லாம் அடுத்தவரின் டைரியை படிக்காமல் விட்டு விடும் ரகமா கீதா..? அவள் பாடத்தை படிக்கிறாளோ இல்லையோ... அந்த வீட்டிலிருப்பவர்களின் டைரிகளை மட்டும் தேடியெடுத்துப் படித்து விடுவாள்...
என்ன ஒன்று.. அவற்றில் அவள் தேடும் சுவராஸ்யமான அனுபவங்கள் எதுவும் இருக்கவே இருக்காது..
கிருஷ்ணமூர்த்தி.. அவர் வாங்கி வைத்திருக்கும் லோன்களின் புள்ளி விவரங்களை அவருடைய டைரியில் பிட்டுப்பிட்டு வைத்திருப்பார்..
ராஜேஸ்வரியோ.. வீட்டின் பால் கணக்கு... மளிகை கணக்கு... சலவைக் கணக்கு.. மாதாந்திர வீட்டுச் செலவின் கணக்கு என்று.. கணக்குப் புத்தகமாக.. டைரியை மாற்றி வைத்திருப்பாள்...
சுந்தர் மட்டும் உருப்படியாய் தினப்படி அலுவல்களை டைரியில் எழுதிவைத்திருப்பான்... அவற்றில் பெரும்பான்மையானவை.. கீதாவைத் திட்டுவனவாகவே அமைந்திருப்பதால் கீதா அதை விரல் தொட்டுப் படிக்க மாட்டாள்...
ராதிகா எதிலும் முன்யோசனையுடன் செயல்படுபவள்.. அசைவப் பட்சிணியான தங்கையைக் கொண்டிருப்பதால்.. சைவச் சமாச்சாரங்களையே டைரியில் எழுதி வைப்பாள்... அதில் பெரும்பாலானவை பக்திப் பரவசத்துடன் இருந்து வைப்பதில் கீதா கொலை வெறிக்கு ஆளாவாள்...
"காலேஜ் படிக்கிறவ எழுதற டைரி மாதிரியாடி இது இருக்கு..?"
அப்படிப்பட்ட ராதிகாவின் டைரியில்.. 'அம்மம்மா... கேளடி.. தோழி..!' யென்று அன்னப் பறவையிடம் சேதி சொல்வதைப் போல அனேக காதல் கவிதைகளைக் கண்டதில் கீதா கள்வெறி கொண்டாள்...
"இதையெல்லாம் நான் நோட்ஸ் எடுத்துக்கறேண்டி..."
"இதென்ன பாடமா..? நீ நோட்ஸ் எடுத்துக்கறதுக்கு..."
ராதிகா மறுத்த போதும்.. அவளுக்குத் தெரியாமல் அதை எழுதிவைத்துக் கொண்டாள் கீதா...
அந்த நினைவில் ராதிகாவின் கன்னத்தை சூடான கண்ணீர் நனைத்தது...
'கேட்டாயா.. என் உள்ளம் கவர்ந்தவன்.... என் உடலையும் கவர்ந்து விட்டான்...' விம்மினாள் ராதிகா...
'அவனைத் தொட வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.. ஆனால்.. இப்படித் தொட வேண்டுமென்று ஒரு நாளும் ஆசைப் பட்டதில்லையே...' மனம் வெதும்பினாள்...
'அந்தக் காலப் பெண்களுக்கு தூது சொல்ல ஆயிரம் வழிகள் இருந்தன... எனக்கு ஏன்.. அதில் ஒரு வழிகூட கிடைக்கவில்லை...? உன்னிடம் சேதி சொன்னேனே.. உணக்கையாய் கேட்டுக் கொண்டாயே.. அவனிடம் போய் சொல்ல உனக்கு ஏன் மனமில்லை...'
காகிதத்தில் வரைந்த அன்னப் பறவையிடம் கேள்வி கேட்டாள் ராதிகா... அது சித்திரமாய் உறைந்து நின்றது..
'என மனதிலிருந்ததையெல்லாம் கொட்டித் தீர்த்தேனே.. அதில் ஒன்றைக்கூட அவனிடம் கொண்டு சேர்க்க உனக்கு துப்பில்லாமல் போய்விட்டதே...'
அவள் முன்னால் விரிந்து கிடந்த டைரியிலிருந்த அன்னப்பறவையின் விழிகளில் கண்ணீர் கசிவதைப் போல ராதிகாவிற்கு பிரமை ஏற்பட்டது...
'நீயென்ன செய்வாய்..? பாவம்..! நீயும் என்னைப் போல ஊமையாகி விட்டாய்.. வாயிருந்தும் பேச முடியாமல் நானே ஊமையாகிப் போகும் போது... சித்திரமாய் இருக்கும் நீ என்ன பேச முடியும்..?'
ராதிகாவின் கண்ணீர் துளிபட்டு.. அன்னப் பறவையின் கண்ணீரில் நீர் வழிந்தது...
'நீயேன் அழுகிறாய்..? அழ வேண்டியது நான்.. இது எனக்கான தண்டனையாம்.. நான் உயிராய் நினைப்பவன் சொல்லி விட்டுப் போயிருக்கிறான்.. நான் என்ன செய்யட்டும்..? தண்டனையை அனுபவிக்கவா..?'
அன்னப்பறவையிடம் கேள்வி கேட்டாள்.. அது பதில் சொல்லாமல் தோழியின் நிலைமையைக் கண்டு உறைந்து போயிருந்தது.. ராதிகா.. அன்னப் பறவையின் சித்திரத்தின் மீது முகம் புதைத்து... மௌனமாக கண்ணீர் சிந்திக் கொண்டேயிருந்தாள்...

- முதல் பாகம் முடிந்தது -




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -37
அம்மம்மா.. கேளடி தோழி...! -37
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-37.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-37.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy