அம்மம்மா.. கேளடி தோழி...! -36

36 தண்டனை கொடுத்தவனே.. தண்டனைக்கு ஆளானேன்... ராதிகாவின் பார்வையில் தெரிந்த அழைப்பில் பாலமுரளியின் மனம் பித்தானது... அவளது கண்களின...


36
தண்டனை கொடுத்தவனே..
தண்டனைக்கு ஆளானேன்...

ராதிகாவின் பார்வையில் தெரிந்த அழைப்பில் பாலமுரளியின் மனம் பித்தானது... அவளது கண்களின் வசீகரத்தில் அவன் நிலைகுலைந்தான்...
'பார்க்காதே ராதிகா...' புலம்பினான்...
'இப்படிப் பார்த்துப் பார்த்துத்தானே என்னை இந்த கதிக்கு ஆளாக்கியிருக்கிற... பார்த்தே மயக்கினேயேடி... நான் மயங்கிப் போனேனே.. உன் பின்னாலே அலைஞ்சேனே... தேனூத்து பெரிய மனுசன் முரளின்னு சொன்னா.. தென்காசிப் பட்டினமே கைகட்டி மரியாதையாய் பார்க்கும்.. அப்படிப்பட்டவனை என்ன காரியம் செய்ய வைச்சிட்ட.. எத்தனை பஞ்சாயத்தில நான் நீதிபதியா நின்னு தீர்ப்புச் சொல்லியிருக்கேன் தெரியுமா..? என்னை குற்றவாளியா நிற்க வைச்சிட்டியேடி...'
அவன் புலம்பலைக் கேட்ட ராதிகா வரிசைப் பற்கள் தெரிய வசீகரமாய் சிரித்தபடி மறைந்து போனாள்...
அவள் எங்கே போனாள் என்று தேடுவதைப் போல முரளி எழுந்து அமர்ந்து பார்வையைச் சூழல விட்டான்... சற்றுத் தொலைவில் ரோந்து வந்து கொண்டிருந்த போலிஸ்காரர்கள் அவனருகே வந்ததும்...
"யார் சார் நீங்க..?" என்றனர்...
"ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்ண வந்தேன்..." பாலமுரளி அவனுடைய விசிட்டிங் கார்டை நீட்டினான்...
கையிலிருந்த டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் அதைப் பார்த்தவர்களின் பார்வையில் மரியாதை
வந்தது...
"சும்மா ஒரு வெரிபிகேசனுக்குத்தான் கேட்டோம் சார்..." அவர்கள் விலகி நடந்தார்கள்...
அதற்கு மேலும் அங்கிருப்பது உசிதமில்லை என்று தோன்றிவிட முரளி காரை நோக்கி நடந்தான்...
பண்ணை வீட்டின் முன்னால் காரை நிறுத்தி விட்டு.. வீட்டக்கதவை திறந்தவனின் பார்வையில் படியில் கிடந்த மலர்சரம் பட்டது... குனிந்து கையில் எடுத்துப் பார்த்தான்.. அது ராதிகாவின் தலையிலிருந்த பூச்சரம்... அதை கீழே போட மனமில்லாமல் பத்திரப் படுத்தியவனாக கதவைப் பூட்டிவிட்டு மாடிப்படிகளில் ஏறியவனின் மனம் கனத்தது...
படுக்கையறைக் கதவைத் திறந்தான்... அறையில் சிதறிக் கிடந்த பொருள்கள்.. ராதிகாவின் போராட்டத்தை எடுத்துக் கூறின... போர்க்களமாக இருந்த அறையை பெருமூச்சுடன் பார்த்தான்.. உருண்டு கிடந்த வெண்கலச் சிலை அவன் கண்ணில் பட்டது.. எடுத்துப் பார்த்தான்...
'இதை ஓங்கினவ... என்னைப் பார்த்ததும் கீழே நழுவ விட்டுட்டா...'
அவனைத் தவிர வேறு ஒருவனாக இருந்திருந்தால் நிச்சயமாக அந்தச் சிலையினால் அடிபட்டிருப்பான் என்பதை பாலமுரளி தெளிவாக உணர்ந்து வைத்திருந்தான்...
'ஏன் அவ இதாலே என் மண்டையைப் பிளக்கல..?'
அவனுக்குள் கேள்வி எழுந்தது.. சிந்தனையுடன் அந்தச் சிலையை அதற்கான இடத்தில் வைத்து விட்டு சிதறிக்கிடந்த பொருள்களை சேகரித்து அறையை ஒழுங்கு படுத்த முயன்றான்... சிதறிக்கிடந்த பொருள்களைத் தொடும் போது.. அதை பிரயோகித்த ராதிகாவின் நினைவு வந்து அவன் மனதை அசைத்தது...
'இதை விட்டெறிஞ்சா...'
'இதை இழுத்துக் கீழே போட்டா...'
'இது அவ கைபட்டு விழுந்துச்சு...'
ஒவ்வொரு பொருளும்.. ஒவ்வொரு நிகழ்வை உணர்த்த அறையை ஒழுங்கு பண்ணும் முயற்சியில் தோற்றுப் போனவனாக... அதை அப்படியே விட்டு விட்டு.. கட்டிலை அடைந்தான் பாலமுரளி...
கசங்கிக் கிடந்த மெத்தைவிரிப்பும் சிதறிக்கிடந்த தலையனைகளும் அவன் மனதை மேலும் கசக்கிச் சிதறவைத்தன...
அவளைத் தொட்டு விட்ட இன்பம் துளிக்கூட அவன் மனதில் இல்லை... கட்டிலில் சரிந்தவனின் மனதில்...
'தண்டனை கிடைச்சிருக்கிறது.. அவளுக்கா..? இல்லை எனக்கா..?' என்ற கேள்வி எழுந்தது...
தலையணைகளை ஒழுங்கு படுத்தி.. அதில் தலையை வைத்துப் படுத்தவனின் மனதில்..
'இனி அவ என்ன செய்வா..?' என்ற நினைவு எழுந்தது...
'நிச்சயமாக வாழ்க்கைப் பிச்சைகேட்டு.. என்னைத் தேடி வருவா...'
இந்த நினைவில் அவன் மனதின் வலி மறைவதை வியப்புடன் உணர்ந்தான் பாலமுரளி...
'நிச்சயம் வருவா...'
அவளின் வருகை மீதான உறுதிப் பாட்டுடன் அவன் கண்களை மூடி உறங்க முயன்றான்.. உறக்கம் வரவில்லை...
ராதிகாவின் சில தன்மைகளை பாலமுரளி அறிந்து வைத்திருந்தான்.. அந்த ஒரு காரணத்தினாலேதான்.. அவளைப் பூங்காவில் கட்டி முத்தமிட்டவன்.. உடனே ஊருக்குப் போக நேர்ந்ததும்.. நம்பிக்கையோடு அங்கேயே தங்கி விட்டான்...
'அவளாவது... அந்த முத்தத்துக்குப் பின்னாலேயும் சங்கரைப் பத்தி நினைக்கிறதாவது...'
அவனுடைய முத்தத்தில் மயங்கிப் போனவள் விலகாமல் நின்றதில் அவனது நம்பிக்கை அதிகரித்தது...
'அவ மனசில நான் இருக்கிறேனோ...'
மழைத்துளியைப் போல... அவன் மனதில் ஓரமாக நம்பிக்கைத்துளி தோன்றியிருந்தது... அதை அடியோடு துடைத்து எறிந்தது செல் போனில் ஷோபா அனுப்பி வைத்த ராதிகாவின் பேச்சு...
வெறி கொண்டவனின் மனதில் இருந்த தர்ம நியாயங்கள் சொல்லாமல்.. கொள்ளாமல் ஓடிவிட.. ராதிகாவைக் கவர்ந்து சென்று சூறையாடி விட்டான் பாலமுரளி...
'இத்தனைக்குப் பின்னாலே.. அவளுக்கு என்னை விட்டா வேறு கதி கிடையாது...'
இந்த நினைப்பே அவன் மனதில் நிம்மதியை உண்டாக்கியது... ராதிகாவின் குடும்பத்தைப் பற்றி நன்கு அறிந்தவன் பாலமுரளி...
'குடும்பத்தை நினைச்சுப் பார்ப்பா... நிச்சயமாய் என்னைத் தேடி வந்து காலில் விழுந்து கல்யாணம் பண்ணிக்கன்னு கெஞ்சுவா... கதறுவா...'
பாலமுரளியின் மன வலி கொஞ்சம்... கொஞ்சமாக குறைந்தது... ராதிகாவிற்கு இழைத்து விட்ட அநியாயத்திற்கான பரிகாரம் அவள் கழுத்தில் தாலியைக் கட்டுவதுதான் என்று நினைத்துக் கொண்டான் பாலமுரளி...
'ஆனா... அதைச் செய்துதான் ஆகனுமா..?' அவன் மனம் கேட்டது...
'நிர்பந்தத்தில என்னைத் தேடிவந்தா அவளை நான் ஏத்துக்கனுமா..? அவ செஞ்ச அநியாயத்துக்கு அதுதான் தண்டனையா..? கூடாது.. நடந்ததை நினைச்சு.. நினைச்சு அவ புலம்பனும்.. வாழ்நாள் பூராவும் இன்னைக்கு நடந்ததை நினைச்சு.. நினைச்சு அவ கதறனும்...'
அவன் மனம் இறுகியது.. ஒன்றில் மட்டும் அவன் நிச்சயமாக இருந்தான்...
அது.. இதற்குப் பின்னால்.. ராதிகா சங்கரை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டாள் என்பது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -36
அம்மம்மா.. கேளடி தோழி...! -36
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-36.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-36.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy