அம்மம்மா.. கேளடி தோழி...! -33

33 நானாக நானில்லை... நீயேன் அதை அறியவில்லை.. ? ராதிகாவின் முகம் வாடியிருந்தது.. வகுப்பறையில் கவனமாக குறிப்பெடுப்பவள்... இப்போதெல்...


33
நானாக நானில்லை...
நீயேன் அதை அறியவில்லை..?

ராதிகாவின் முகம் வாடியிருந்தது.. வகுப்பறையில் கவனமாக குறிப்பெடுப்பவள்... இப்போதெல்லாம் அதைச் செய்யாமல் ஏதோ ஒரு ஆழ்ந்த யோசனையில் இருப்பதை ஷோபா கவனித்தாள்... அது என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவள் மனதில் குறுகுறுத்தது...
அதை அறிய வேண்டுமானால் அவள் ராதிகாவிடம் பேசவேண்டும்.. இப்போதெல்லாம் ஷோபா ராதிகாவிடம் பேச்சை வைத்துக் கொள்வதில்லை...
எந்த நோக்கத்திற்காக அவள் ராதிகாவை.. பிறந்தநாள் விழாவிற்கு அழைத்தாளோ... அந்த நோக்கம் தகர்ந்து போனதுமில்லாமல்.. சங்கரின் பார்வையில் ராதிகா பட்டு விட்ட கொடுமையை எண்ணியெண்ணி அவள் மனம் வெந்து போயிருந்தாள்...
அதனால்... ராதிகா எதிரே வந்தால்.. இவள் அந்தத் திசையிலேயே போகாமல்... பக்கவாட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்...
"பரவாயில்லையே.. ஓரேயொரு நாள் அவ வீட்டு பர்த்டே பார்ட்டிக்கு போய்... அவளை உன்னைக் கண்டாலே ஓடுகிற அளவுக்கு ஆக்கி வைச்சிட்டயே.. கொட்டிக்காரிதான்..."
ஹேமா கூட ராதிகாவைப் பாராட்டும் அளவிற்கு.. ஷோபா.. ராதிகாவைக் கண்டால்... காத தூரம் விலகி நடந்தாள்..
அப்படியிருக்கையில்.. ராதிகாவின் முகவாட்டத்-திற்கான காரணத்தை எப்படி கண்டு பிடிப்பது..?
ஷோபா... பக்கத்திலிருந்த காயத்ரியைப் பார்த்தாள்..
"என்னடி..?" அவள் புருவம் உயர்த்தினாள்...
"அவ ஏண்டி முகத்தை ஒரு முழ நீளத்துக்கு தொங்கப்போட்டுக்கிட்டே அலையறா..?" ஷேபா கேட்டாள்..
'எவ..?' என்று பதிலுக்கு காயத்ரி கேட்கவில்லை...
ஷோபா குறிப்பிடும் அந்த 'அவ...' எவள் என்று அவளுக்குத் தெளிவாகத் தெரியும்..
"அதைத் தெரிஞ்சுக்கிட்டு நீயென்னடி பண்ணப் போற..?"
"பலமான அடியை அவ வாங்கியிருந்தான்னா.. உனக்கு ட்ரிட் வைக்கலாம்கிற எண்ணம்தான்..."
"அடிப்பாவி..." என்று சொன்னாலும்... காயத்ரி ராதிகாவின் பக்கத்தில் போகத்தான் செய்தாள்...
அவள் வந்ததைக் கூட உணராமல் கன்னத்தில் கையை வைத்து.. ஏதோ ஒரு கவலையுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்து...
"ராதிகா..." என்று அன்பொழுக அழைத்தாள் காயத்ரி...
"ம்ம்ம்" மௌனம் கலைத்து விழியுயர்த்தினாள் ராதிகா...
"ஏன்.. என்னவோ போல இருக்கே..?"
"இல்லையே... நான் நல்லாத்தான் இருக்கேன்.."
"பொய்.. நீ சரியாய் இல்லைன்னு ஷோபாவே கண்டு பிடிச்சிட்டா.. நீயானா சமாளிக்கப் பார்க்கிற..."
இதைக் கேட்ட ராதிகா சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.. அது நேரம்வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஷோபா... அவசரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்... அப்பொழுதுதான் ராதிகாவின் மூளையில் மின்னல் அடித்தது... அந்த அற்புதமான யோசனையும் வந்தது...
'இவளை மறந்துட்டேனே..'
சிக்கலைத் தீர்க்கும் நூல் முனையைக் கண்டுபிடித்து விட்டதும்.. அவளுக்கே இயல்பான அந்த சுறுசுறுப்பும்.. துறுதுறுப்பும் கணப்பொழுதில் அவளிடம் திரும்பி வந்து விட்டன...
"அப்படியா.. அவளுக்கு என்மேல் அவ்வளவு அக்கறையா...?"
"ஆமாம்கிறேன்.."
"நம்ப முடியலையே..."
"நீ.. நம்பித்தான் ஆகனும்... என்னிடம் அவளே சொன்னா..."
"என்ன சொன்னா..? நான் கவலையாய் இருக்கிறதை கன்பர்ம் பண்ணிட்டு வந்தா.. உனக்கு ட்ரீட் கொடுக்கிறேன்னு சொன்னாளா...?"
ராதிகா சிரிக்காமல் கேட்க.. காயத்ரியும் யோசிக்காமல்...
"அட.. எப்படிக் கண்டு பிடிச்ச..?" என்று சொல்லி விட்டாள்...
"அதானே பார்த்தேன்..." என்று ராதிகா சொன்னதுமே.. காயத்ரியின் முகத்தில்.. குடம்.. குடமாய் அசடு வழிந்தது...
"ஏண்டி... அவ என்ன சொல்லி விட்டிருப்பான்னு எனக்குத் தெரியாதா...? இதைக் கண்டு பிடிக்க.. வெத்தலையில் மை தடவி... ஜோஸியமா பார்க்கனும்..? அவபுத்தி இப்படித்தானே போகும்...?"
"விடு ராதிகா... அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்..."
"ஊஹீம்... அவளுக்குத் தெரியாதது நிறைய இருக்கு..."
"என்ன.. என்ன..?"
"மெதுவா.. மெதுவா.. எதுக்குடி அவளுக்கு தகவல் சொல்ல இவ்வளவு வேகம் காட்டறே..? என்னவோ கொள்கை பரப்பு செயலாளர்ன்னு சொல்லுவாங்களே... அதைப்போல.. நீ அவளுக்கு தகவல் அறிந்து சொல்லும் செயலாளரா...?"
"ஏண்டி... என்னைப் போட்டு இந்தத் தாக்கு தாக்கற..?"
"அதானே... நீ வெறும் அம்புதானே... உன்னைத் தாக்கக் கூடாது... உன்னை அனுப்பியவளைத் தாக்கனும்.. ஆனா பாருடி... அதைவிட முக்கியமாய் எனக்கு ஆயிரம் வேலையிருக்கு.. அதனால.. போனாப் போகுதுன்னு விட்டு வைக்கிறேன்..."
அவர்கள் பேசிக் கொள்வதை தெளிவாக கேட்டுக் கொள்ளும் தூரத்தில்தான் ஷோபா அமர்ந்திருந்தாள்.. ராதிகா ரகசியம் பேசினாலே அவளுக்கு கேட்டிருக்கும்.. அப்படியிருக்க... ராதிகா.. வேண்டுமென்றே குரலை உயர்த்திப் பேசினால்.. அவளுக்கு கேட்காமல் போகுமா..?
அவளுக்கு ராதிகா பேசிய ஒவ்வொரு வார்த்தையும்.. அட்சரசுத்தமாக கேட்டு வைத்தது...
'இவ என்னைப் போனாப் போகுதுன்னு விட்டு வைக்கிறாளா...?'
ராதிகாவின் திமிரை எண்ணி அவள் கொதித்துப் போய் விட்டாள்... அவளது திமிரை அடக்கும் வழி தெரியாமல் அவள் தலையைப் பிடிக்க ஆரம்பிக்க...
"பாவம்டி.. இந்த ஒரு மாதமா... உன் வழிக்கே வராம ஒதுங்கியிருந்தா.. தலைவலியும் அவளை விட்டு ஒதுங்கியிருந்தது.. இன்னைக்கு பழைய வேலையை ஆரம்பிக்க நினைச்சா.. நீ தலைவலியை அவளுக்கு அனுப்பிட்டே..." என்று பரிதாபப் பட்டாள் காயத்ரி...
"இதுக்கே தலையைப் பிடிச்சா எப்படி..? இன்னும் நிறைய இருக்கே.. அதைக் கேட்டா.. அவ தலை சுக்கு நூறாய் வெடிச்சுச் சிதறினாலும் சிதறிடும் காயத்ரி..."
"என்னடி ராதிகா.. மந்திரவாதியைப் போல சாபம் கொடுக்கிற.. போனாப் போகிறா.. பிழைச்சுப் போகட்டும் டி..."
"அப்படிங்கிற..? அப்ப நான் சொல்ல வந்ததை சொல்லவா.. வேணாமா...?"
"சொல்லு... சொல்லு..."
"அதைக் கேட்டா.. அவ தாங்குவாளா..?"
"நான் தாங்குவேண்டி..."
"ஆஹா... உன்னை மாதிரியான பிரண்டுதாண்டி அவளுக்கு வாய்க்கும்..."
"அதைப்பத்தி உனக்கென்ன.. நீ விசயத்தைச் சொல்லு..."
"சொல்லிட்டா போச்சு... இதைக் கேட்டவளுக்கு மண்டை வெடிக்குதோ.. இல்லையோ.. இதைச் சொல்லலைன்னா... எனக்கு மண்டை வெடிச்சு விடும்..."
ராதிகா போட்ட பீடிகையில்.. அப்படிப்பட்ட விவரம் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆர்வம் காய்தரிக்கு அதிகமானது...
"ஏய்ய்.. சஸ்பென்ஸ் தாங்கலைடி.. இப்போ விசயம் என்னன்னு நீ சொல்லலைன்னு வை.. என் மண்டையே வெடித்து விடும்..."
"ஐயோ பாவம்.. அந்தப் பாவம் எனக்கெதுக்குடி.. விசயத்தைக் கேளு..."
"அதைக் கேட்கத்தானே அப்போதிருந்து காதைத் தீட்டிக்கிட்டு காத்துக்கிட்டு இருக்கேன்..."
"ஒரு ஊரில் ஒரு பெரிய மன்மத ராஜா இருந்தானாம்..."
"என்னடி இது.. ஒரு ஊரில ஒரு ராஜா இருந்தானாம்ன்னு கதை சொல்ல ஆரம்பிக்கிற..."
"கதைதான்... இது பெரிய கதை... என்னாலேயே என் லக்கை இன்னும் நம்ப முடியல.. நீ எப்படி நம்பப் போறியோ.. போ..."
"என்னவோ.. போ.. ராதிகா.. இன்னைக்கு சரியான கதைசொல்லியா நீ ஆகிட்டே..."
"எதில் விட்டேன்..?"
"மன்மத ராஜாவில் விட்ட..."
"அந்த மன்மத ராஜாவின் பெயர் என்ன தெரியுமா..?"
"நீ சொன்னாத்தாண்டி தெரியும்.."
"சங்கர்...!..."
இதைச் சொல்லியவாறு ஷோபாவின் முகத்தை ஜாடையாகக் கவனித்தாள் ராதிகா.. ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தாக்கியதைப் போல அவள் முகத்தில் அதிர்ச்சியின் அலைகள் தெரிவதை திருப்தியுடன் கவனித்தபடி காயத்ரிக்கு கதை சொல்வதைத் தொடர்ந்தாள்...
"சங்கரா..? எங்கேயோ கேள்விப் பட்ட பெயராய் இருக்கே..."
காயத்ரி நெற்றியில் ஒற்றைவிரலால் தட்ட ஆரம்பிக்க.. தன் எதிர்காலக் கணவனான சங்கரின் பெயரையும்.. அவனது பெருமைகளையும் அவளிடம் சொல்லியிருந்த ஷோபா முகம் வெளுத்துப் போனாள்...
"எங்கேயோ கேட்ட குரலா..? அதை விடு.. இதைக் கேளு.. அந்த சங்கர் பெரிய பிஸினெஸ் மேக்னெட்.. பாரினில் படிச்சவர்.. கோடிஸ்வரர்..."
"இதையும் நான் யாரோ சொல்லக் கேட்டிருக்கேண்டி..."
"அதை அப்புறமாய் யோசி.. இப்ப.. இந்த விசயத்தைக் கேளு... அந்த சங்கர் போனவாரம் அவரோட பேரண்ட்ஸோட என்னைப் பெண் கேட்டு வந்தார்.. அவருக்கு என்னை அவ்வளவு பிடிச்சிருக்காம்.. இது எப்படியிருக்கு..?"
ஷோபாவிற்கு அது கொஞ்சம்கூட நன்றாகவே இல்லை...
ராதிகா சொல்லிவிட்டாள்.. சங்கர் எப்படியெல்லாம் அவள் பின்னால் சுற்றினான் என்பதை ஷோபாவின் காதுபட விவரித்தாள்.. இது கொஞ்சம் கூட நன்றாக இல்லை என்று ராதிகா கடிந்து கொண்டவுடனேயே.. பெற்றோரைக் கூப்பிட்டுக்கொண்டு பெண் கேட்டு வந்து விட்டான் என்று பெருமை பொங்க கூறினாள்... அவனுடைய பெற்றோர் திருமண நாளைக் குறிக்கக் கிளம்பி விட்டார்கள் என்று வெட்கம் படர்ந்த முகத்துடன் கண்சிமிட்டினாள்...
இதையெல்லாம் '' என்று வாய் பிளக்க கேட்டுக் கொண்டிருந்த காயத்ரிக்கு... ராதிகாவின் அதிர்ஷ்டத்தின் மீது பொறாமை வந்தது...
"இதுக்கேண்டி உம்முன்னு இருந்த..?" ஆற்ற மாட்டாமல் அவள் கேட்டு வைத்தாள்..
"வேற என்னடி செய்கிறது..? உனக்கே தெரியும்.. எனக்கு படிப்புன்னா உயிர்.. நான் படிப்பை முடிச்சுக்கறேன்னு கெஞ்சறேன்.. அவர் அதுவரைக்கும் பொறுக்க மாட்டேன்னு கெஞ்சறார்... உடனே அவருக்கு மேரேஜ் நடந்தாகனுமாம்... அதனால்தான் உம்முன்னு இருந்தேன்..."
"ஏண்டி.. இது ஒரு பிரச்னையா..? மேரேஜ் பண்ணிட்டு படிப்பை கன்டினியூ பண்ண வேண்டியது தானே..."
"உனக்கு அவரைப் பத்தித் தெரியாது காயூ... உடனே வெர்ல்டு டூர் போகனும்னு பிளான் போட்டிருக்கார்.."
"கொடுத்து வைச்சவடி நீ..."
"அவர்தான் கொடுத்து வைத்தவராம்.. அவரே சொன்னார்.."
"அட.. இது வேற நடக்குதா...?"
"பின்னே.. தினமும் போனில் மணிக் கணக்கா பேசியில்ல தள்ளராரு.. என் தூக்கமும் கெடுது.. படிப்பும் கெடுது.. இதை யார்கிட்டச் சொல்றது காயூ..."
"எதுக்குடி.. கேட்கிறவ வயிறு எரியவா..?"
"இதைக் கேட்டு யாராவது வயிறெரிஙகளாடி.. இப்ப நீ கேட்டுக்கிட்டு இருக்கிற.. உனக்கு வயித்தெரிச்சலாவா இருக்கு...?"
'அதை உன்கிட்டயா சொல்ல முடியும்..?' காயத்ரி பொறாமையில் வெந்து தணிந்தாள்...
"என்னைப் போலவே எல்லாரும் இருப்பாங்களா ராதிகா...?"
"அதைச் சொல்லு.. ஒரு சிலதுக.. கேட்டவுடனே வெந்து போயிருவாங்கள்ல..."
ராதிகா சொன்னதற்கு தலையைத் தலையை ஆட்டிவிட்டு...
"அவள் உன்னைத்தான் சொன்னாள் ஷோபா..." என்று பற்ற வைத்தாள் காயத்ரி...
அவளை என்ன செய்கிறேன் பார் என்று சூளுரைக்காமல் ஷோபா புயல் வேகத்தில் காரில் ஏறி காலேஜை விட்டுப் பறக்க...
'இவ எதுக்காக இப்படி ஓடுகிறா..?' என்று குழம்பிப் போனாள் காயத்ரி...
ஷோபாவின் வேகம் எதற்காக என்று ராதிகாவுக்குத்தானே தெரியும்..? இனி திருமணத்தைக் கலைக்கும் வேலையை அவள் பார்த்துக் கொள்வாள் என்ற நிம்மதியுடன்...
'அப்பாடா...' என்று ஆசுவாசப் பெருமூச்சை விட்டாள் ராதிகா...
இத்தனை நாளாய் இது தோன்றாமல் போனதே என்று மானசீகமாக தன் தலையில் தானே குட்டியும் கொண்டாள்...
இப்படி ஒரு செமத்தியான வழி இருக்கையில்.. மூலையில் அமர்ந்து கொண்டு கண்ணீர் விட்ட தன் முட்டாள் தனத்தை மனதிற்குள் கடிந்தும் கொண்டாள்..
அவளுக்கு ஷோபாவைப் பற்றி மிக நன்றாகவே தெரியும்.. சங்கர் ராதிகாவை திருமணம் செய்து கொள்வதை அவள் ஒருபோது பொறுத்துக் கொள்ள மாட்டாள்.. எப்பாடு பட்டாவது அந்த திருமணத்தை நடக்க விடாமல் நிறுத்தி விடுவாள்...
அந்த அளவிற்கு ஷோபா.. சங்கரின் மீது கண் வைத்திருந்ததை ராதிகா அறிவாள்..
அவளாவது.. சங்கரை.. ராதிகாவின் கழுத்தில் தாலியைக் கட்ட விட்டு விடுவதாவது.. அப்புறம்.. அவளது பணக்காரப் பெருமை என்ன ஆவது..? ராதிகாவிடம் தோற்றுப் போக ஷோபா விரும்புவாளா என்ன..?
மனதிற்குள் தன் திட்டத்தை மெச்சியபடி ராதிகா நிம்மதியாக நாள்களைக் கடத்தினாள்...
"என்னாச்சுக்கா.. கல்யாணத்துக்கு தயாராகிட்ட போல... முகமெல்லாம் மலர்ந்து.. இப்பவே உன் முகத்தில் கல்யாணக்களை வந்திருச்சு..."
கீதா ஆச்சரியத்துடன் கேட்டபோது... இல்லையென்று மறுக்காமல் அவள் கண் சிமிட்டியதில் ராஜேஸ்வரி ஆனந்தத்தின் உச்சிக்கே போய்விட்டாள்..
சங்கருக்கு தகவல் போனது.. அவன் வழக்கம் போல.. கோவிலில் ராதிகாவை வழி மறித்து நன்றி சொன்னான்... அதை மறுத்துப் பேசாமல் ராதிகா கோவிலை விட்டு வெளியே வந்தாள்..
"இன்னும் கொஞ்ச நாள்தான்... அதுக்குப் பின்னாலே.. நீயும்... நானும் சேர்ந்தே கோவிலுக்கு வந்து போகலாம்..."
சங்கர் புன்னகையுடன் காரில் ஏறி கையசைத்து விட்டுச் சென்றான்... இன்னுமா ஷோபா தன் சதி வேலைகளை ஆரம்பிக்கவில்லை என்று யோசித்தபடி அருகில் நின்று கொண்டிருந்த காரைக் கடந்த ராதிகா கணப்பொழுதில் காருக்கு உள்ளே இழுக்கப் பட்டாள்... அவள் முகத்தில் ஒரு கைக்குட்டை அழுத்தப்பட்டது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -33
அம்மம்மா.. கேளடி தோழி...! -33
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-33.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-33.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy