அம்மம்மா.. கேளடி தோழி...! -29

29 காத்திருந்த   காலங்களை... காதலனே! நீ அறிவாயா... ? ஷோபா கதை பிணைவதில் கெட்டிக்காரி.. அவள் சிறந்த கதைசொல்லி...! அதை உணராத பாலசரஸ...


29
காத்திருந்த  காலங்களை...
காதலனே! நீ அறிவாயா...?

ஷோபா கதை பிணைவதில் கெட்டிக்காரி.. அவள் சிறந்த கதைசொல்லி...! அதை உணராத பாலசரஸ்வதி.. குறுக்கிடாமல் அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்... தம்பியின் எதிர்காலம் குறித்த கவலை அவள் மனதில் எழுந்தது...
ஷோபா கூறிய நடுத்தர குடும்பம் என்ற விவரம் அவள் மனதில் பதியவில்லை... ஷோபா விருந்திற்கு அழைக்காத போது... என்னையும் அழைக்க மாட்டாயா என்று கேட்ட பெண் எப்படிப்பட்டவளாக இருப்பாள் என்ற சிந்தனைதான் அவள் மனதில் ஓடியது...
அப்படி பெரிய இடத்து தொடர்புகளை தானாக தேடிப் போகிறபெண் குடும்பத்திற்கு உசிதமானவளாக இருக்க மாட்டாள் என்பது அவளது எண்ணமாக இருந்தது...
வந்தவள் தானாகத் திரும்பிப் போகாமல்.. விருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறவர்களை தொந்தரவு செய்திருக்கிறாள்.. அதிலிருந்து அவள் ஓசி கார் பயணத்திற்கு ஆசைப்படுகிறவள் என்றல்லவா ஆகிறது..? அப்படிப்பட்டவளை தம்பி தன்காரில் ஏற்றிக் கொண்டானா...?
"நான் என்ன செய்ய முடியும் அண்ணி...? உங்க தம்பி சொல்லும் போது.. வேணாம்.. வேணாம்.. எங்க வீட்டுக் காரில் அவளை அனுப்பி வைக்கிறேன்னா சொல்ல முடியும்...? அப்படிச் சொன்னா.. உங்க தம்பி என்னைப்பற்றி என்ன நினைச்சுக்குவார்..?"
ஷோபாவின் குரலில் ஓடிய அதீத கவலையில் நெக்குருகிப் போய்விட்டாள் பாலசரஸ்வதி..
"அதெல்லாம் அவன் ஒன்னும் நினைச்சுக்க மாட்டான்.. நானிருக்கேன்.. கவலைப்படாதே..."
"எனக்கும் அதுதான் அண்ணி... உங்க தம்பிக்காக பார்க்கலைன்னாலும்.. உங்களுக்காக நான் பார்க்கனுமா.. வேணாமா..?"
"கட்டாயம் பார்க்கனும் தான்..."
"அதனாலதான்.. அவர் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசலை..."
இப்படிப்பட்ட பெண் தம்பியின் மனைவியாக வந்தால்... பிறந்த வீட்டில் தன் உரிமை குறையவே குறையாதே... என்று மகிழ்ந்து போனாள் பாலசரஸ்வதி...
ஷோபாவின் எண்ணமே வேறு.. பாலமுரளியின் பார்வையில் ராதிகாவைக் கண்டதும் தோன்றும் மின்னலில் அவளுக்கு சற்றும் உடன்பாடிலில்லை... அவள் சங்கரைத்தான் தன் தேர்வாக வைத்திருக்கிறாள் என்பதும்.. வாய்ப்புக் கிடைத்தால் சங்கருக்கு மனைவியாகி விடுவாள் என்பதும் வேறு...
அவளது கனவு நிறைவேறி சங்கருக்கு அவள் மனைவியாகி விட்டாலும்... பாலமுரளிக்கு ராதிகா மனைவியாகி விடலாமா..? அதற்கு அவள் விடலாமா..?
பாலமுரளி கிராமத்துக்காரன்தான் என்றாலும்.. சங்கருக்கு இணையான... ஏன் சங்கரைவிட அதிகமான பணக்காரன்.. வசதியானவன்... ஷோபாவின் தாய்வழி சொந்தக்காரன்.. பெயர் சொன்னாலே தெரிந்து விடும் அளவிற்கு.. அந்த மாவட்டத்திலேயே பெயர் பெற்றவன்...
அவனுக்கு ராதிகா மனைவியாவதா..? அதை ஷோபா அனுமதிப்பதா..? ஒருநாளும் அதற்கு அவள் விடமாட்டாள்..
சங்கரை ஷோபா.. திருமணம் செய்து கொண்டாலும்... ராதிகாவை பாலமுரளி திருமணம் செய்து கொள்ள விட மாட்டாள் எனும்போது... சங்கருடன் அவளுக்கு திருமணம் நடக்குமா.. நடக்காதா என்ற நிலையில்.. அவள் எப்படி பாலமுரளியின் பார்வையை ராதிகாவின் மீது படிய அனுமதிப்பாள்..?
சங்கர் இல்லாவிட்டாள்.. அவள் பாலமுரளியைத்-தானே தேர்வு செய்தாக வேண்டும்..?
கையிருப்பில் இருக்கும் மாப்பிள்ளையான பாலமுரளியை பத்திரப் படுத்திக் கொள்ள.. அவனது அக்காவும்.. அவளது ஒன்று விட்ட அண்ணனின் மனைவியுமான பாலசரஸ்வதியிடம் அவள் போட்டுக் கொடுத்து விட்டாள்... பாலசரஸ்வதியும் யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்... எப்போதும் ஒருநாளுக்கு மேல் வெளியூர்களில் தங்காத பாலமுரளி அந்த முறை பதினைந்து தினங்களுக்கு மேல் சென்னையிலேயே தங்கியிருந்தது.. அவளது சந்தேகத்தை அதிகப்படுத்தி விட்டது...
அதனால்தான்... அவள் கேள்வி மேல் கேள்வி கேட்டு.. தம்பியை துளைத்தெடுத்தாள்... அவனோ ஒரே ஒரு கேள்வியில் அவள் வாயை அடைத்து விட்டான்.. அதற்குமேலும்... அப்பனுக்கே பாடம் சொல்லும் அந்த சுப்பிரமணியைப் போன்ற தம்பியிடம் அவள் வாய் கொடுப்பாளா என்ன...?
மேகலாவின் உடல் தேறியதும் அவளை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள்... லேசான நெஞ்சுவலிதான் என்றாலும்... ஜாக்கிரதையாக அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் சொல்லியிருந்தார்...
"இப்போது வந்தது மைல்ட் அட்டாக்தான் முரளி... ஆனாலும்.. இனிமேல் இதைப்போல வராம நீங்க பார்த்துக்கனும்..."
"சரிங்க சார்.."
"அதிகமான மன உளைச்சல்... அதிர்ச்சி... இது இரண்டையும் அவங்க ஃபேஸ் பண்ணாம பார்த்துக்கங்க... இதுதான் அட்டாக்கை வரவழைக்கிற விசயங்கள்.. முக்கயிமாக அவங்களை தனிமையில் விடாதீங்க.. அவங்க தனியா இருந்தா... எதையாவது யோசித்து மனதைப் போட்டு உழப்பிக்குவாங்க..."
அதுதான் காரணமா..? தொடர்ந்து பதினைந்து தினங்களாக மேகலாவை அவன் தனிமையில்
விட்டது தான் காரணமா..? அதனால்தான் அவள் எதையெதையோ நினைத்து மனதிற்குள் களைத்துப் போனாளா..?
குற்ற உணர்வில் பாலமுரளி குறுகிப் போனபோது... அதைத் தன் தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டாள் பாலசரஸ்வதி...
"நான் சுயநலமாகிட்டேண்டா.. கல்யாணம் பண்ணிக்கிட்டு போனா.. சீர்வாங்க மட்டும்தான் பிறந்த வீடுன்னு எனக்கு எண்ணம் வந்திருச்சுடா.. நீ ஒத்தை ஆளாய் தொழிலையும் பார்த்து.. குடும்பத்தையும் கவனிச்சுக்கிட்ட... நீ வேலை வெட்டின்னு வெளியூருக்கு போகிற சமயத்திலேயாவது நான் அம்மாவைப் பார்த்துக்கனுமா... இல்லையா...?"
"நீயென்ன பக்கத்திலேயா இருக்கிற..?"
"லண்டனிலயும் இல்லையே..."
"நீ என்னதான் சொல்ல வர்ற..?"
"நான் பொறுப்பாய் இருந்திருக்கனும்டா.. நீ பக்கத்தில் இல்லாத சமயங்களிலேயாவது அம்மாவை நான் பார்த்துக்க வந்திருக்கனும்..."
"விடுக்கா.. இப்படி ஆகுமுன்னு யார் நினைச்சது..?"
பாலமுரளி.. மனச்சங்கடத்துடன் கூறி விட்டபின்பும்... பாலசரஸ்வதி அதையே சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாள்...
மேகலா வீட்டுக்கு வந்தபின்னால் ஒருவாரம் அவள் பிறந்த வீட்டில் இருந்தாள்.. அதற்கு மேல் அவளால் இருக்க முடியவில்லை.. ராஜராஜன் போன்மேல் போனாக போட்டு விட்டான்...
"சரஸ்.. பிள்ளைகள் உன்னைத் தேடறாங்க..."
"ம்ம்ம்..."
"பிள்ளைகள் மட்டுமில்லைடி.. நானும் உன்னைத் தேடறேன்.. நீ பக்கத்தில் இல்லாத இந்த ஒருவாரமும் எனக்கு வீடு.. வீடாவே தோணலை சரஸ்..."
ராஜராஜனின் குரலில் பிரிவுத்துயர் அப்பட்டமாக வழிந்தோட... பாலசரஸ்வதி தவித்தாள்... தன் வீட்டை நோக்கிப் பறந்து விடத்துடித்தாள்... ஆனால்.. பிறந்த வீட்டை மறந்துவிட்டதாக வருத்தப்பட்டு பேசிய வார்த்தைகள் எல்லாம் அவ்வளவுதானா என்று தம்பி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று விழித்தாள்...
'அவ்வளவு உணக்கையாக நான் டயலாக் பேசியிருக்க வேணாம்...'
அவள் தன்னையே நொந்து கொண்டபோது... பாலமுரளி அவளை அழைத்தான்...
"என்னடா.."
"எனக்கு கரும்பு மில்லில் அர்ஜண்டாய் ஒரு வேளையிருக்கு..."
"உனக்கு வேலையில்லாம இருந்தாத்தான் அது அதிசயம.. இதை எதுக்கு என்கிட்டச் சொல்கிற... உன் வேலையைப் பார்க்கப் போ..."
"போயிட்டு உடனடியா திரும்பி வந்துருவேன்..."
"வா.. அதையும்தான் ஏன் சொல்ற...?"
"நீ கிளம்பி ரெடியாய் இருக்கனுமில்ல.. அதுக்காக சொல்கிறேன்..."
"டேய்.. முரளி..."
பாலசரஸ்வதி இமைகொட்டி தம்பியைப் பார்க்க.. அவன் அலட்டிக்கொள்ளாமல் சிரித்தான்...
"பிள்ளைகளை விட்டுட்டு வந்து எத்தனை நாளைக்குத்தான் இங்கேயே டேராபோடுவ.. உன் வீட்டைப் பார்க்க கிளம்பு..."
"அம்மா...?"
"நான் பார்த்துக்கிறேன்... இனி அம்மாவை தனியாய் விட்டுட்டு வெளியூர் போக மாட்டேன்.. போதுமா...?"
"உனக்கும் வேலை இருக்குமேடா..."
அப்போதும் பாலசரஸ்வதி தயங்கினாள்... ஆனால் பாலமுரளி பிடிவாதமாக அவளைக் கிளம்பச் சொல்லி விட்டான்...
"திடீர்ன்னு கிளம்பச் சொல்றியேடா..."
எப்படிக் கிளம்புவதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த பாலசரஸ்வதி... மனதுக்குள் நிம்மதியுடன் சொன்னாள்.. அவளுக்குத் தெரியாது... அவளை கிளப்பி விட முடியாத ராஜராஜன் பாலமுரளியிடம் போனில் பேசி விட்டான் என்பது...
தாயைக் கவனித்துக் கொள்ள அக்கா இருக்கிறாள் என்ற தெம்புடன் கரும்பு மில்லில் அமர்ந்திருந்தவனுக்கு போன் வந்தது... எடுத்துப் பேசினான்...
"மாமா...!"
"அத்தை எப்படியிருக்காங்க முரளி... இப்போத் தேவலையா...?"
"தேவலை மாமா..."
"நார்மலா ஆகிட்டாங்கள்ல...?"
"ஆகிட்டாங்க மாமா..."
"அதுவந்து முரளி... அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னதும் உங்க அக்கா அப்ஸெட் ஆகிட்டா.. அதனாலதான்.. அத்தைக்கு பக்கத்திலே அவ ரெண்டு நாள் இருந்துட்டு வரட்டுமுன்னு விட்டுட்டு வந்தேன்..."
மறைமுகமாக ராஜராஜன் என்ன சொல்ல வருகிறான் என்று பாலமுரளிக்கு புரிந்து போனது.. அவன் ஒருவாரம் பாலசரஸ்வதியை தேனூத்தில் இருக்க அனுமதித்ததே அதிகம்.. திருமணமான நாளில் இருந்து.. பாலசரஸ்வதி அதிமுக்கியமான விசேங்களுக்கு மட்டும் கணவனுடன் சேர்ந்து வருவாள்.. ஒரே ஒருநாள் தான் அவர்கள் தங்குவார்கள்... அதற்கு மேல் தங்க.. ராஜராஜனின் வேலை அவனைவிடாது.. அவன் பாலசரஸ்வதியை விட மாட்டான்... கையோடு திருநெல்வேலிக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவான்..
அப்படிப்பட்டவன் இப்போதும் பாலசரஸ்வதியை இருக்க விடாமல் அழைத்துக் கொண்டு போகத்தான் முயன்றான்.. இந்தமுறை பாலசரஸ்வதி அசைந்து கொடுக்கவில்லை... தாயின் திடீர் நோய் படுக்கை அவளை அதிகமாக பாதித்துவிட்டது...
"வந்தவுடன் கிளம்பிப் போனா எப்படிங்க...?"
தாயின் சோர்ந்த முகத்தைப் பார்த்தபடி பாலசரஸ்வதி கேட்டபோது... அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
"குழந்தைக படிப்பு கெட்டிரும்டி..."
பிள்ளைகளை முன் வைத்தான் அவன்.. அந்தச் சாக்கை வைத்து அவளைக் கிளப்பிக் கொண்டு போய்விட அவன் முயன்றபோது.. அவள் அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை...
"அவங்களை வேணும்னா கூப்பிட்டுக்கிட்டு போயிடுங்களேன்..."
அவன் பல்லைக்கடித்தபடி பிள்ளைகளோடு கிளம்பிப் போய் விட்டான்... தினமும் போனில் பாலசரஸ்வதியை கரைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தவன்.. இனிமேல் இது வேலைக்கு ஆகாது என்ற முடிவுடன் மனைவியை விட்டுவிட்டு.. மைத்துனனுடன் போனில் பேசிவிட்டான்...
"பிள்ளைக அவங்களோட அம்மாவைத் தேடுறாங்க முரளி.. உங்க அக்காவை அனுப்பி வைச்சிருங்க..."
"ஆகட்டும் மாமா..."
"நான் வந்து கூப்பிட்டுட்டு வரலாம்.. ஆனா.. அங்கே.. அத்தையின் முன்னாலே... இன்னும் ரெண்டுநாள் இருந்துட்டு வர்றேன்னு உங்க அக்கா கேட்டு வைப்பா.. முடியாதுன்னு சொல்ல என்னால முடியாது..."
"புரியுது மாமா..."
"உடனே அனுப்பி வைக்கனும்னு இல்லை முரளி.. சாவகாசமாக.. நாளைக்குக்கூட அவளை
அனுப்பி வைக்கலாம்.. இங்கே நான் பிள்ளைகளைப் பார்த்துக்கிறேன்.."
ராஜராஜன் மகா பெருந்தன்மையுடன் இதைக் கூறியபோது... இரவு மணி எட்டு..! அந்த நேரத்திற்கு மேல் கூடப்பிறந்தவளை பாலமுரளி அனுப்பி வைத்து விடுவானா என்ன..?
விடியும் வரைக் காத்திருப்பதை... காலவரையற்ற காத்திருப்பாக அவன் குறிப்பிட்ட பெருந்தன்மையில் மெய்சிலிர்த்து விட்டான் பாலமுரளி...
"ரொம்ப தேங்க்ஸ் மாமா..."
அவனது காத்திருப்பிற்கான நன்றியைச் சொல்லிவிட்டு.. மறுநாள் காலையிலேயே.. தமக்கையை கிளம்பச் சொல்லிவிட்டான் பாலமுரளி...
தளர்வாக படுக்கையில் படுத்திருந்த போதும்.. மகள் புகுந்த வீட்டிற்கு கிளம்புவதை அறிந்த மேகலா.. பலவீனமான குரலில் பாலமுரளியை அழைத்தாள்...
"முரளி..."
அந்த ஒற்றைக் குரலுக்குத்தான் எத்தனை சக்தி..!
பாலமுரளி அவசரமாக தாயின் அருகே வந்து அமர்ந்தான்...
"என்னம்மா..."
"அக்காவுக்கு நம்ம ஜவுளிக்கடையில இரந்து விலை உசத்தியா ஒருபட்டுச்சேலையை கொண்டு வரச் சொல்லுப்பா..."
"ஆகட்டும்மா..."
"போகிற வழியில பழக்கடையில ஆப்பிள் ஒரு கூடை.. ஆரஞ்சு ஒருகூடைன்னு வாங்கி வைச்சிரு... நம்ம வாழைத் தோப்பில இருந்து ஒருதார் வாழைப்பழத்தை வெட்டிக் கொண்டு வரச் சொல்லு..."
"சொல்லிர்ரேன்ம்மா..."
"கோசலைகிட்டச் சொல்லி.. பலகாரம் பண்ணி சில்வர் டப்பாவுல அடைச்சுக் கொடுக்கச் சொல்லு..."
"சொல்லிட்டாப் போச்சு..."
"நகைக்கடையில சொல்லி... அக்காவுக்கு புதுசா ஏதாவது டிசைன் வந்திருந்தா எடுத்துட்டு வரச் சொல்லு.."
"அதுக்கென்னம்மா.. வாங்கிக் கொடுக்கிறேன்.."
"நம்ம தோட்டத்திலே விளைஞ்சிருக்கிற காய்கறியில இளசா பறிக்கச்சொல்லி... கூடையில போட்டு கார் டிக்கியில் வைக்கச் சொல்லு..."
"ஏம்மா... இதையெல்லாம் நீங்க மூச்சு வாங்கச் சொல்லனுமா...?"
"இல்லைடா முரளி... அப்பா இல்லாத வீட்டிலே பெண்ணெடுத்தோம்.. சீர்செய்ய ஆளில்லன்னு.. உன் அக்காவோட புருசன் வீட்டில யாரும் நாக்கு மேல பல்லைப்போட்டு ஒருவார்த்தை பேசிரக்கூடாது... கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனப்ப அவ கூடப்போன சீரைப் போல... அவ பிறந்த வீட்டுக்கு வந்துட்டுப் போற ஒவ்வொரு தடவயும் சீரோடுதான் போகனும்... அதுதான் அவ புருசன் வீட்டிலே அவளுக்கு மரியாதையை வாங்கித் தரும்டா முரளி... ஆயிரம்தான் அவ வீட்டுல பாலும்... தேனும் ஆறாய் ஓடினாலும்... தாய்வீட்டுச் சீதனத்துக்கு ஈடில்லைடா மகனே..."
அதைக் கேட்டுக் கொண்டிருந்த பாலசரஸ்வதிக்கு ஏனோ... கண்ணில் நீர் பெருகியது.. பாலமுரளி தயாளன்தான்.. தமக்கைக்கு சீர்செய்ய கணக்குப் பார்க்காதவன்தான்.... ஆனாலும்... அதை எடுத்துச் சொல்ல தாய் வேண்டியிருக்கிறதே...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -29
அம்மம்மா.. கேளடி தோழி...! -29
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-29.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-29.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy