அம்மம்மா.. கேளடி தோழி...! -25

25 அந்தரங்கம்   அறிந்திருந்தால்.. புன்னகையை சிந்தியிருப்பாய்... அவள் தேடிய தனிமை கிடைத்தவுடன்.. அதில் தன்னைப் புதைத்துக் கொண்டு த...


25
அந்தரங்கம்  அறிந்திருந்தால்..
புன்னகையை சிந்தியிருப்பாய்...

அவள் தேடிய தனிமை கிடைத்தவுடன்.. அதில் தன்னைப் புதைத்துக் கொண்டு தனிமையில் அமர்ந்து விட்டாள் ராதிகா...
அவள் முன்னாலிருந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்த முதியவர்கள் அவள்
பார்வையில் பதியவில்லை... சற்றுத்தள்ளி அமர்ந்திருந்த இளஞ்ஜோடிகளின் சரஸ நடவடிக்கைகள்
அவள் கவனத்தை ஈர்க்கவில்லை.. ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளால் கூட அவளின் தனிமைக்குள் நுழைய முடியவில்லை...
 கலைக்க முடியாத.. அவள் கலைக்க விரும்பாத... தனிமைக்குள் அவள் நுழைந்திருந்த போது... அதைக் கலைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டதைப் போல... அவளருகே வந்து அமர்ந்தான் சங்கர்...
"ஹாய்..."
அவள் தனிமைத்தவம் கலைந்தவளாய் நெற்றிக் கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தாள்.. அவன் அயரவில்லை... மாறாத புன்சிரிப்புடன் அவளது கோபாக்னி ஸ்பரிசிக்காதவனாக அவளைப் பார்த்தான்...
"குட் ஈவினிங்..."
அவள் பதில் சொல்லவில்லை... உனக்கெல்லாம் ஒரு கணக்கா... என்பதைப் போல... அலட்சியமாக முகத்தை திருப்பிக்கொண்டு.. இயல்பாக அமர்ந்தாள்...
"குட்மார்னிங் சொன்னா... பதிலுக்கு குட்மார்னிங் சொல்லனும்..."
'உனக்கெல்லாம் அதைச் சொல்ல முடியாது...'
"நான் ஒன்றும் வில்லனில்லை ராதிகா..."
'நீ என் ஹீரோவுமில்லை...'
"நான் என்ன சொல்லிட்டேன்..?"
'காதலைச் சொல்லித் தொலைத்து விட்டாய்...'
"ஐ லவ் யுன்னு சொன்னேன்... அது ஒரு தப்பா..?"
'பின்னே.. இல்லையா..?'
"ராதிகா.. எனக்கு உங்களைப் பிடிக்கும்..."
'எனக்கு உன்னைப் பிடிக்க வேணாமா...?'
"என்மேல் உங்களுக்கு வெறுப்பில்லை... எனக்கு அது நிச்சயமாய் தெரியும்..."
'விருப்பமும் இல்லை... அது உனக்குத் தெரியுமா..?'
"எனக்கென்ன குறை ராதிகா..?"
'இதை நீ வந்து என்னிடம் கேட்கிறாயே... அதுதான் குறை...'
"உங்கப்போல பெண் வேண்டும்ன்னு ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் தெரியுமா..."
'நான் உன்னை தேடவில்லை...'
ராதிகாவிற்கு அழ வேண்டும் போல இருந்தது... சங்கர் நல்லவன்... கண்ணியமானவன்... அவனே சொல்வதைப் போல... குறைகள் இல்லாதவன்... நிறைகளை மட்டுமே உடையவன்...
அவளுக்கு அவன் எட்டாக்கனி...! ஷோபாவைப் போன்ற ஒரு பரம்பரைப் பணக்காரியை புறக்கணித்து... அவளது காதலை வேண்டி நிற்பவன்... அதற்காக... அவனது உயரத்தை மறந்து.. ஏதோ கல்லூரி மாணவனைப் போல... அவள் போகுமிடமெல்லாம் நிழல் போலத் தொடர்ந்து... பின்னால் சுற்றிக் கொண்டிருப்பவன்...
அவள் மட்டும் சரியென்று ஒரு வார்த்தை சொல்லி விட்டால் போதும்... அவன் நிச்சயமாய் அவனது பெற்றோருடன் வந்து அவளது பெற்றோரிடம் அவளைப் பெண் கேட்பான்...
அவளால் ஏன் அதைச் சொல்ல முடியவில்லை..? எது அவளைத் தடுத்துக் கொண்டிருக்கிறது..?
அந்த 'எது...' எதுவென்று அவளது அந்தரங்க மனம் அறியும்... எந்தவித ஆதாரமும் இல்லாத
போதும்... அவனது பார்வைகள் சிந்திய தருணங்களை அவள் பத்திரமாக... பொக்கிசம் போல... அதில் சேகரித்திருந்தாள்...
எந்தவித அடிப்படையும் இல்லாத போதும்... ஏதோ.. ஒன்று.. அவன் மீதான அவளது உணர்வுகளை உறுதி செய்ய... அவளது அந்தரங்க மனதில் அழுது கொண்டிருந்தாள்...
ராதிகா பெருமூச்சுடன் சங்கரை நிமிர்ந்து பார்த்தாள்...
"நீங்க ஜென்டில் மேன் சங்கர்..."
காதலிக்கும் பெண்ணின் வாயிலிருந்து... 'கண்ணியவான்' பட்டத்தை வாங்க எந்தக் காதலனும் விரும்புவதில்லை...
அவன் நெற்றியில் சிந்தனை கோடுகளை வரைந்தது...
"நான் உங்களைக் காதலிக்கிறவன் ராதிகா..."
"என்னை உங்களுக்கு எத்தனை நாள்களாய் தெரியும் சங்கர்..? இந்த பதினைந்து நாள்களுக்குள்.. காதல் தோன்றி வளர்ந்து மரமாகி விடுமா..?"
"உண்மையான காதலுக்கு ஒரு நொடி போதும் ராதிகா..."
அவள் மனதிலிருப்பதை அறிந்தவனைப் போல அவன் சொல்லிவைக்க... பாலமுரளியின் மீது எந்த நொடியில் அவள் மனதில் காதல் துளிர்த்தது என்று அறியாதவளாய் தவித்துக் கொண்டிருந்த அவள் அதிர்ந்து போனாள்...
அந்த ஒரு நொடிப் பொழுதில் உருமாறிப் போனவள் எப்படி அவனிடம் அதை உணர்த்தப் போகிறாள்..?
தன்னில் மூழ்கி... அவள் தவித்துக் கொண்டிருந்த போது... சங்கரின் குரல் ஆதரவாய் அவள் காதுகளில் ஒலித்தது...
"எதற்காக இந்த தவிப்பு ராதிகா..?"
அவள் கண்களில் நீர் மலக அவனை நிமிர்ந்து பார்த்தாள்... அவள் பார்வையில் எதையோ சொல்லத் துடிக்கும்.. துடிப்பு... அலை பாய்ந்தது...
'சொல்லி விடலாமா..? இவனிடம் சொல்லி விடலாமா..?'
என்னவென்று சொல்லுவாள்..? உன்னைப் பார்த்த அதே பொழுதில் அவனையும் நான் பார்த்தேன்.. உன்னால் ஈர்க்க முடியாத என் மனதை அவன் ஈர்த்து விட்டான்... என்று அவளால் சொல்ல முடியுமா..?
'எப்படிச் சொல்வேனடி..?'
அவள் காதுகளில் கண்ணதாசனின் பாடல் ஒலித்தது....
அவள் பெண்மையின் இயலாமையோடு மௌனமாக பார்வையை விலக்கிக் கொண்டாள்... தரையில் பார்வையை பதித்து அமர்ந்திருந்தவளின் பெருமூச்சைக் கண்டு... சங்கரின் புருவங்கள் முடிச்சிட்டன...
"என் காதலில் சந்தேகமா ராதிகா..."
"த்ச்சு..."
அவளது அதிருப்தியான ஒற்றைச் சொல்லில் அவன் முகம் மலர்ந்தது...
"அப்புறம் என்ன..?"
"வேண்டாம் சங்கர்... எனக்கு உங்கள் மேல் காதலில்லை..."
ராதிகாவின் வார்த்தைகளைக் கேட்ட அவன் முகம் சுருங்கினான்... ஆனாலும் சமாளித்துக் கொண்டவனாக தோள் குலுக்கினான்...
"வெறுப்பும் இல்லையே ராதிகா..."
"சங்கர்..."
"நான் வெயிட் பண்றேன்.. உங்க காதலுக்காக..."
"அதுதான் ஏன்...? உங்க டயத்தை நீங்க வேஸ்ட் பண்ணாதீங்க... எனக்குப் படிக்கனும்..."
"படிங்க..."
"வேலைக்குப் போகனும்..."
"என் கம்பெனியிலேயே ஆயிரம் வேலை உங்களுக்காக காத்திருக்குது.. என்ன வேலை
வேணும்..? என் கம்பெனிகளில் ஒன்றுக்கு உங்களை 'எம்டி'யாக்காவா..?"
அவனது பிடிவாதத்தில்.. அவளுக்கு இயல்பான கோபம் துளிர்த்தது...
"என்ன சார்.. உங்க பணப்பெருமையை என்கிட்டக் காட்டறிங்களா..?"
"இல்லவே இல்லை..."
"எனக்கு விலை வைக்கறிங்களா..?"
"சீச்சி... என்ன பேச்சு இது ராதிகா..."
சங்கரின் கை முஷ்டிகள் இறுகுவதைப் பார்த்த ராதிகா உதட்டைக் கடித்துக் கொண்டாள்...
'அதிகமாய் பேசிட்டேனோ...'
அவன் பார்த்த கோபப் பார்வை 'ஆமாம்' என்றது..
"உங்களை என் மனசில் உயர்த்தியான இடத்தில் வைத்திருக்கேன் ராதிகா... உங்க வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வரலாமா..?"
"ஐ ஆம் ஸாரி..."
குற்ற உணர்வுடன் உதட்டைக்  கடித்துக் கொண்டாள் ராதிகா...
"உங்க மனதில் பயம் இருக்குன்னு நினைக்கிறேன்.. என்னடா... இவன் நம்மளை விட பெரிய பணக்காரனாய் இருக்கிறானே.. நம்ம கிட்ட காதலைச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறானோன்னு நீங்க நினைக்கறிங்க... அது இல்லைன்னு புரூவ் பண்றேன்..."
'இவன் வேற... நான் இருக்கிற மனநிலையை புரிஞ்சுக்காம ஏதோதோ பேசி வைப்பான்...'
"எதுக்குங்க உங்ககிட்ட காதலைச் சொல்லி.. உங்களை கலவரப் படுத்தனும்...?"
'அப்பாடா.. இப்பவாவது இதை நீ புரிஞ்சுக்கிட்டயே.. நீ எங்கிருந்தாலும்.. வாழ்க நண்பா...'
அவள் நிம்மதியாக... கற்பனையில்... மணவறையில் அமர்ந்து முகம் தெரியாத யாரோ ஒரு பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சுக்களைப் போட்டுக் கொண்டிருந்த சங்கரின் மீது.. மானசீகமாக மலர்களைத் தூவி மனதுக்குள் வாழ்த்திக் கொண்டிருந்த போது...
"உங்க பேரண்ட்ஸ்கிட்ட இதைச் சொல்லிடறேன்.." என்று அணு குண்டைத் தூக்கிப் போட்டான் அவன்...
'அடப்பாவி...' ராதிகா மனதுக்குள் அலறியே விட்டாள்...
"என் பேரண்ட்ஸ் கிட்ட என்னத்தை சொல்லப் போறிங்க...?"
அவள் இப்போதுதான் கலவரமாக ஆனாள்... அதை உணராதவனாக அவன் தீர்க்கமாக பேசிக் கொண்டே போனான்...
"உங்கமேல எனக்கிருக்கிற காதலைச் சொல்லப் போகிறேன்... உங்களைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன்னு சொல்லப் போகிறேன்..."
"கடவுளே..! ஏன்சார் இப்படிப் பேசறிங்க..."
"தேவைதாங்க எனக்கு... ஒருத்தியை காதலிச்சு... அவகிட்ட காதல் சொன்னா அதுக்கும் அலருகிறீங்க... சரி.. நேரடியாக அவளைப் பெத்தவங்ககிட்டேயே கல்யாணத்தை பேசிடறேன்னு சொன்னா... அதுவும் தப்புங்கறீங்க.. விளையாடறிங்களா..?"
"நான்.. உங்ககிட்ட விளையாடறேனா..? ஏன் சார் சொல்ல மாட்டிங்க... நீங்கதான் என் வாழ்க்கையில விளையாடிக்கிட்டு இருக்கீங்க..."
"நான் ப்ளேபாய் இல்லைங்க... அதை உங்களுக்கு புரூவ் பண்ணாம நான் விடமாட்டேன்..."
அவன் போய்விட்டான்... இவன் என்னத்தை செய்து தொலைக்கப் போகிறானோ.. என்று தலைமேல் கைவைத்து இடிந்து போய் அமர்ந்து விட்டாள் ராதிகா...
அவள் எதிரில் யாரோ நிற்பதைப்போல உள்ளுணர்வு அறிவுறுத்த பார்வையை உயர்த்தியவளின் உடலில் மின்சாரம் பாய்ந்தது...
அவளை உறுத்துப் பார்த்தபடி.. பாலமுரளி நின்றிருந்தான்...
"நீங்களா..?" விழிகள் பளபளக்க ராதிகா எழுந்து நின்றாள்...
"ஏன் எழுந்திருக்கிறீங்க...? அவன் பக்கத்திலேதான் உட்காருவீங்களா..? என் பக்கத்தில் உட்கார மாட்டிங்களா..."
அவன் குத்தலாக வினவியபடி சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தான்.. அவள் மனதில் அதிர்வை வாங்கினாள்..
'நீயா இப்படிப் பேசுகிறது...?'
நம்ப முடியாமல் பார்த்தபடி அவனருகே அமர்ந்தவளை சொந்தமற்ற பார்வை பார்த்தான் முரளி...
"ரொம்ப நேரமாக பேசிக்கிட்டு இருந்தீங்களே.. என்ன..? காதலா..?"
ராதிகாவின் விழிகள் கூர்மையாகின.. அவள் உடலில் விறைப்பு வந்தது... அவளது நிமிர்வு அவளிடம் திரும்பி விட...
"அது உங்களுக்குத் தேவையில்லாத விசயம் சார்..." என்றாள்...
அவன் முகம் பயங்கரமாக மாறியது.. கண்கள் சிவக்க.. அவளை முறைத்தவன்.. நொடிப் பொழுதில் முகபாவனையை மாற்றிக் கொண்டு சத்தமாக சிரித்தான்..
"ஆமாமாம்.. அது எனக்குத் தேவையில்லாதது தான்.. அதிலெல்லாம் சென்னைப் பொண்ணுக கெட்டிக்காரங்களாச்சே... உங்களுக்கு வெளிநாட்டில் படிச்சு... கோட்டும்.. சூட்டுமாய்.. வெள்ளைக்காரனைப் போல இருக்கிறவனைத்தானே பிடிக்கும்.. என்னைப் போல பட்டிக்காட்டு இளிச்சவாயனை எப்படிப் பிடிக்கும்..?"
'இவன் என்ன சொல்கிறான்..?'
ராதிகாவிற்கு ஏதோ புரிவதைப்போல இருந்தது... அதுவரை சொந்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்த பாலமுரளி.. கோபத்தில்... அவன் மனதை சொல்லி விட்டதை புரிந்து கொண்டவளுக்கு இதயம் படபடத்தது..
'உன்னையா எனக்குப் பிடிக்காது..? உன்னைத் தவிர வேறு யாரையும் எனக்குப் பிடிக்காது... இதை நீயேன் உணராமல் போனாய்...?'
இமைக்காமல் அவனையே நோக்கியவளின் பார்வையில் என்ன கண்டானோ.. அவன் மரியாதையை காற்றில் பறக்க விட்டான்...
"என்னடி பார்க்கிற..? இப்படி பார்த்துப் பார்த்துத்தானே என்னை கிறுக்குப் பிடிக்க வைச்ச..? ஊருக்குப் போகாமல் உன் பின்னாலேயே சுற்றினேண்டி.. இந்த பதினைஞ்சு நாளும்.. பொழுதுவிடிஞ்சு பொழுது போகிற வரைக்கும்... நீயிருக்கிற இடத்துப் பக்கம்தானே வட்டம் அடிச்சேன்..? கடைசியில் அவன் பின்னாலே போயிட்டயேடி..."
அவன் பேசிய பேச்சில் ராதிகாவிற்கு மூச்சே அடைத்துவிட்டது...







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -25
அம்மம்மா.. கேளடி தோழி...! -25
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-25.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-25.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy